புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:52 pm

பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! 27
-
செல்லப்பிராணிகள் என்றதும் நம்முடைய மனத்திரையில்
நாய், பூனை, ஆடு, மாடு, கோழி தான் நினைவுக்கு வரும்.

இவற்றைத் தான் நாம் பெரும்பாலும் வீட்டில் செல்லப்
பிராணிகளாக வளர்த்து வந்தோம். ஆனால் இப்போது
இக்வானா, ஹாம்ஸ்டர், மக்காவ்/ சன் கொன்னூர்
காக்கட்டூ கிளி வகைகள், பர்மீஸ் பைத்தான்
(மலைப்பாம்பு வகை), ரங்கூன்ஸ், ஹெட்ஜ்ஹாக்ஸ்...
போன்ற கவர்ச்சிகரமான மிருகங்கள் மற்றும் பறவைகளை
செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இது போன்ற கவர்ச்சிகரமான செல்லப் பிராணிகளை
வளர்க்க என்ன காரணம்?

தனிப்பட்ட விருப்பம் என்று சொல்லலாம். இது போன்ற
அயல்நாட்டு செல்லப்பிராணிகளை நாம் வரவேற்கும்
போது, அதனால் ஏற்படக்கூடிய அனைத்து விஷயங்களையும்
சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட இந்த செல்லப்பிராணிகளுக்காக
பல மணி நேரம் அவசியம் செலவு செய்ய வேண்டும்.
பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடைசியாக அந்த செல்லப்பிராணிகளுக்கு செய்ய
வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி ஒவ்வொரு
உரிமையாளரும் கண்டிப்பாக தெரிந்து கொண்டு இருப்பது
அவசியம் என்கிறார் கால்நடை மருத்துவர் மற்றும்
‘சாராஸ் எக்சாடிக் பறவைகள் சரணாலய மையத்தின்’
நிர்வாகியான டாக்டர் ராணி மரியா தாமஸ்.

‘‘என் அப்பா செல்லப்பிராணி பிரியர். அவர் வீட்டில் நாய்,
புறா, கிளி எல்லாம் வளர்த்து வந்தார். பதினைந்து
வருடங்களுக்கு முன் எங்க வீட்டில் நிறைய பச்சைக் கிளிகள்
இருந்தன.

நான் அதனுடன் தான் வளர்ந்தேன்னு சொல்லலாம்.
என்னுடன் பிறந்தவர்கள் போல தான் அதனுடன் நான் பழகி
வந்தேன். ஆனால் இப்போது பச்சைக் கிளிகளை வீட்டில்
வளர்க்கக்கூடாது என்று தடை உள்ளது.
-
------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:53 pm



அதே சமயம் இது போன்ற கவர்ச்சிகரமான அயல்நாட்டு
கிளிகள் மற்றும் மிருகங்களை வளர்க்க தடை இல்லை
என்றாலும், அதனை பராமரிக்க முறையான உரிமம்
பெற்று இருக்க வேண்டும். மேலும் அதை வளர்க்க கூடிய
வகையில் நாம் அதற்கு தேவையான வசதிகளை செய்து
தர வேண்டும்.

எல்லாவற்றையும் விட நான் கால்நடை மருத்துவம் படித்து
இருப்பதால், என்னால் அவற்றின் உடல் நலத்தின் மேலும்
கவனம் செலுத்த முடியும்’’ என்ற ராணி இவைகளை
பார்த்துக் கொள்ளவே கால்நடை மருத்துவம் படித்துள்ளார்.

‘‘நான் இந்த வீட்டில் பிறக்காமல் இருந்து இருந்தால்,
கண்டிப்பா கால்நடை மருத்துவம் படித்து இருக்க மாட்டேன்.
சின்ன வயசில் இருந்தே இதனுடன் பழகி வந்ததால், எனக்கு
கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்
ஏற்பட்டது.

அதன் பிறகு, பறவைகள் குறித்த சிறப்பு பட்டப்படிப்பு
படிச்சேன். இதன் மூலம் ஒவ்வொரு பறவைகள் மற்றும்
அதன் குணாதிசயங்கள் பற்றி ஆய்வும் செய்தேன்.

நான் சின்ன பொண்ணாக இருக்கும் போதே எங்க வீட்டில்
நிறைய கிளிகள் இருக்கும். கைட் என்று அழைக்கப்படும்
கழுகு வகை பறவை மற்றும் புறாக்கள் எங்க வீட்டில்
இருந்தது.

இதனுடன் நாரையும் வளர்த்து வந்தோம். வீட்டிலுள்ள
தோட்டத்தில் இவை எல்லாம் சுதந்திரமாக சுற்றி வலம்
வரும். நாங்க இதனை கூண்டில் அடைக்க மாட்டோம்.

எங்க தோட்டத்தில் அவை சுதந்திரமாக சுற்றி வரும்.
வனவிலங்கு சட்டத்தில், வீட்டில் பச்சைக் கிளிகள்,
புறாக்கள் மற்றும் பிற பறவைகளை வளர்க்கக் கூடாது
என்று சட்டம் அமைத்து வளர்ப்பதற்கு தடை விதிக்கப்
பட்டது. அதன் பிறகு தான் அப்பா கவர்ச்சிகரமான
விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார்.

முதலில் ஒரு ஜோடி அயல்நாட்டு கிளியான பிரிஞ்சர்ஸ்
வகை கிளியை வாங்கினார். அது நாளடைவில் பெருகியது.
இப்போது எங்களிடம் 100 வகையான கிளிகள், பிரேசில்
குரங்குகள், இக்வானா, மீன்கள் மற்றும் நாய்களும்
உள்ளன’’ என்றவர் மிருகங்கள் பராமரிப்பு குறித்தும்
பயிற்சி அளித்து வருகிறார்.
--
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:53 pm

பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! 27a
-


‘‘என்னோட சொந்த ஊர் ஆலப்புழா. நான் இப்போது
மருத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு வயநாட்டில்
படித்துக் கொண்டு இருக்கிறேன். விடுமுறையில் ஊருக்கு
வரும் போது எல்லாம், அங்கு செல்லப்பிராணிகள்
வைத்திருக்கும் விவசாயிகளின் வீடு அல்லது தோட்டத்திற்கு
சென்று அவற்றை பராமரிப்பது வழக்கம்.

கேரளா பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல
வேண்டியதில்லை. இங்குள்ள சின்ன கிராமம் ஒரு மினி
காடு போலத்தான் இயற்கையுடன் ஒன்றி இருக்கும்.

அதனால் எல்லாரும் ஏதாவது ஒரு விவசாயத்தில் ஈடுபட்டு
இருப்பாங்க. அல்லது பெரிய அளவில் தோட்டம் வைத்து
இருப்பாங்க. அங்கு இது போன்ற கவர்ச்சிகரமான
மிருகங்கள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

நான் ஊருக்கு வந்தால், எல்லாவற்றையும் ஒரு ரவுண்ட் போய்
பார்த்து விடுவேன். நான் பட்டப்படிப்பு படிச்சாலும்,
அவ்வப்போது ஆன்லைனில் பறவைகள் மருத்துவம் சார்ந்த
டிப்ளமா படிப்பும் படிப்பேன். அதில் பறவைகளின்
ஆரோக்கியம் மற்றும் தெரபெடிக் குறித்து படிச்சிருக்கேன்.

இதனால் இங்குள்ள விவசாயிகளுக்கு இது போன்ற
வித்தியாசமான மிருகங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள
வேண்டும் என்று பயிற்சி அளிப்பது மற்றும் அவைகளுக்கு
உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவ உதவியும்
செய்கிறேன்.

இது போன்ற ஏக்சாடிக் மிருகங்களை வளர்ப்பது இந்தியாவில்
மட்டும் இல்லை உலகளவில் ஃபேஷனாகி வருகிறது.
பலர் அதை விரும்பி வளர்க்கிறார்கள்,’’ என்ற ராணி
ஃபேஷனுக்காக இல்லாமல் அன்போடு வளர்க்க வேண்டும்
என்றார்.

‘‘பொதுவாக பச்சைக் கிளிகள் நாம் சொல்வதை அப்படியே
திரும்பி சொல்லக்கூடியவை. அதிலும் அயல்நாட்டு கிளிகள்
நாம் சொல்வதை அப்படியே திரும்பி சொல்லும். பறவைகளுக்கு
ஆங்கிலம், தமிழ், ஹிந்தின்னு மொழிகளை பிரித்துப் பார்த்து,
வித்தியாசப்படத் தெரியாது.

அவைகளுக்கு நாம் பேசுவது ஒரு வகையான சத்தம்.
அதனால் தான் நாம் எந்த மொழியில் பேசினாலும் அவை
திரும்பி அப்படியே உச்சரிக்கிறது.
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:54 pm


அதிலும் பச்சைக் கிளிகளை விட இந்த அயல்நாட்டு கிளிகள்
உடனே நாம் பேசுவதை கூர்ந்து கவனித்து நாம் சொல்வதை
அப்படியே திரும்ப சொல்லும். மக்காவ், அமேசான் மற்றும்
கிரே கிளிகள் நன்றாகவே பேசக்கூடியவை.

எங்க வீட்டில் இருக்கும் கிரே கிளி எல்லாரையும் பெயர்
சொல்லித்தான் கூப்பிடும். வீட்டில் இருக்கும் மக்காவ் கிளியின்
பெயர் காஃபி, நாயின் பெயர் ஜிஞ்சர்...

இவற்றை இது பெயர் சொல்லித்தான் அழைக்கும். என்னை,
அம்மாவை, அப்பாவைக்கூட பெயர் சொல்லித்தான் கூப்பிடும்.
இசையை கேட்டால் நன்றாக நடனமாடும். சேட்டையும் செய்யும்’’
என்றவர் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை ‘சாராஸ்’ என்ற
பெயரில் பறவைகளின் சரணாலயமாக மாற்றி அமைத்துள்ளார்.

‘‘எங்களிடம் 100க்கும் மேற்பட்ட கிளிகள் உள்ளன.
அதனால் இதனை அப்படியே பறக்க விட முடியாது. காரணம்
என்னதான் வீட்டில் பெரிய அளவில் தோட்டம் இருந்தாலும்,
அது அவர்களின் இருப்பிடமான காட்டுக்கு ஈடாகாது.

இவை அயல்நாட்டு கிளிகள் என்பதால், நம் ஊரின்
சீதோஷ்ணநிலை இவைகளுக்கு பொருந்தும் என்று சொல்ல
முடியாது.

ஆனால் அதற்கான வசதிகளை நாம் இவற்றுக்கு செய்து
தரமுடியும். மேலும் வெளியே அப்படியே பறக்கவிட்டால், மற்ற
விலங்குகளுக்கு இரையாகும் வாய்ப்பும் அதிகம்.

இந்த பறவைகளை அதன் வசதிக்கு ஏற்ப ஒரு பெரிய
கூண்டில் வைத்து தான் பராமரித்து வருகிறோம்.
அது மட்டும் இல்லை சாராஸ் சரணாலயத்தை யார்
வேண்டும் என்றாலும் வந்து பார்வையிடலாம்.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். இவர்கள்
ஒவ்வொரு கிளிகள் மற்றும் அதன் குணாதிசயங்கள் பற்றி
தெரிந்துகொள்வது அவசியம். அது தான் எங்களின்
விருப்பமும் கூட’’ என்றவர்

இந்த பறவைகளை வளர்ப்பவர்கள் அதன் குணாதிசயங்கள்
பற்றி தெரிந்துகொள்வது அவசியம். ‘‘நாங்க பெரும்பாலும்
கொஞ்சம் வளர்ந்த ஜோடிப் பறவைகளை தான்
வாங்குவோம்.

------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:55 pm



அதன் பிறகு அது குஞ்சு பொரித்து அதை பராமரித்து
வருவோம். சிலர் விருப்பப்பட்டு எங்களிடம் இருந்து வளர்க்க
வாங்கி செல்வது வழக்கம்.

பறவைகளை குறிப்பாக இது போன்ற அயல்நாட்டு பறவைகளை
வாங்கி செல்வது பெரிய விஷயமில்லை. ஆனால் முறையாக
பராமரிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் அதன்
குணாதிசயங்களை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சில பறவைகள் கோபம் வந்தா, கத்தி கூச்சல்
போடும். அந்த சமயத்தில் அதை கட்டுப்படுத்த மற்றும்
சமாதானப்படுத்த தெரிந்து இருக்கணும். காசு இருக்குன்னு
இந்த பறவைகளை வாங்கிடலாம். அதற்காக இதை வளர்க்க
கூடிய தகுதி உங்களுக்கு இருக்குன்னு சொல்லிட முடியாது.

இதன் வாழ்விடம் மற்றும் உணவு எப்படி இருக்க
வேண்டும்ன்னு முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இதன்
ஆயுட்காலத்தை ஒவ்வொருவரும் கருத்தில் வைப்பது
அவசியம்.

இதற்கு தேவையான அனைத்து சிறப்பு வசதிகளும்
உங்களால் கொடுக்க முடியுமான்னு முதலில் பாருங்க.
அதன் பிறகு இந்த பறவையினை வாங்குங்க.

எந்த வகை செல்லப்பிராணிகளாக இருந்தாலும் அதற்குரிய
மரியாதை மற்றும் முறையான பராமரிப்பு அவசியம்.
அதை மனதில் கொண்டு பிறகு உங்க வீட்டின் செல்லப்
பிராணிகளை தேர்வு செய்யுங்க.

இதன் நடத்தையில் சிறிது மாற்றம் தென்பட்டாலும்
உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.
காரணம் இந்த பறவைகள் காட்டில் வாழ்வதால்,
உடல் நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை வெளியே
காண்பித்துக் கொள்ளாது.

அது அதன் எதிராளிகளுக்கு சாதகமாக அமையும்.
அதனால் எக்சாடிக் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள்
எப்போதும் கால்நடை மருத்துவர்களுடன் நல்ல உறவு
வைத்துக் கொள்வது அவசியம்.

இதன் மூலம் அவர்கள் உங்களின் செல்லப்பிராணிகளுக்கு
உள்ள பிரச்னையை கண்டறிந்து உடனடித் தீர்வு கொடுக்க
முடியும்’’ என்றார்
பறவையின் காதலியான டாக்டர் ராணி மரியா தாமஸ்.
-
-----------------------------
நன்றி- குங்குமம் தோழி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக