உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Today at 5:22 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 5:16 pm

» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Today at 5:02 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:52 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 4:41 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by ayyasamy ram Today at 4:24 pm

» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Today at 4:16 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» என் காதலி - கவிதை
by ayyasamy ram Today at 4:06 pm

» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:59 pm

» ராபின் சர்மா
by kuloththungan Today at 12:45 pm

» புத்தகங்கள் தேவை !
by prajai Today at 11:39 am

» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Today at 10:34 am

» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Today at 9:57 am

» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Today at 4:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 4:37 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Yesterday at 5:26 pm

» mr novels
by kanu Yesterday at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Yesterday at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Yesterday at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Yesterday at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Yesterday at 1:29 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Yesterday at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Yesterday at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Yesterday at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Yesterday at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Sat Feb 16, 2019 8:52 pm

» வெற்றி என்பது...!!
by ayyasamy ram Sat Feb 16, 2019 8:30 pm

Admins Online

மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:38 am

காலம் காலமாக வசித்து வந்த இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றன யானைகள்... இயற்கைக்கு எதிராக மனிதர்கள் காட்டை ஆக்கிரமிப்பது சரியானதுதானா ?
[You must be registered and logged in to see this image.]


மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
ஒரு ராஜாவை சில அடிமைகள் சேர்ந்து அதன் அரண்மனையில் இருந்து அப்புறப்படுத்தும் காட்சியை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? தன்னுடைய இடத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் போது அந்த ராஜாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் அந்த ராஜா யாரையெல்லாம் எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள் என நம்பினாரோ அவர்கள் சூழ்ச்சி செய்து எதிர்கொள்ளும் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அது நிச்சயம் அவருக்குச் செய்யும் துரோகம் என்றுதானே நினைக்க முடியும். நேற்றைக்குக் கோவையில் சின்னத்தம்பி என்ற யானையை லாரியில் ஏற்றும் அந்தக் காட்சியைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக கூறி அதன் இருப்பிடத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற காட்டு ராஜாவை வெளியேற்றியிருக்கிறார்கள் வனத்துறையினர்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:39 am

[You must be registered and logged in to see this image.]


கோவை தடாகம் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தி விடுவதாக ஒரு தரப்பினரிடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்தே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு யானை அதன் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விநாயகன் என்ற யானையும் அதே இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சரி இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறியும் அளவுக்கு அந்த யானைகள் என்ன குற்றம் செய்தன?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:42 am

யானைகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையா?

[You must be registered and logged in to see this image.]

விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன என்பதுதான் சின்னத்தம்பி மீதும், முன்னர் பிடிபட்ட விநாயகன் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு தரப்பு இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாலும் பலர் இதை மறுக்கவே செய்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு முயற்சியில் வனத்துறை ஈடுபடலாம் என முயற்சி செய்தபோது ஊர் மக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்த யானைக்கு சின்னத்தம்பி எனச் செல்லமாக பெயரிட்டு அழைத்தவர்களும் அவர்கள்தான். சின்னத்தம்பி இதுவரை மனிதர்களைத் தாக்கியதே இல்லை என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:45 am

அப்படி இருக்கும் போது எதற்காக இப்படி ஒரு திடீர் நடவடிக்கை, யாரைச் சமாதானப் படுத்துவதற்காக யானைகள் அங்கே இருந்து துரத்தப்படுகின்றன... என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஆனால் அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்ததா என்ன என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.


பல நூற்றாண்டு காலப் புரிதல் அது


[You must be registered and logged in to see this image.]
யானைகள்

உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜாக்கள் யாரென்று பார்த்தால் அவை யானைகள்தான். மனிதர்களுக்கு அங்கே குடியேறுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவை அங்கே வசித்து வருகின்றன. முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களுக்கு காட்டைப் பாதுகாக்கும் தெய்வமாகத்தான் யானைகளைப் பார்த்தார்கள், இயற்கையை நேசித்தார்கள். இங்கேதான் என்றில்லை உலகம் முழுவதுமே வாழும் பழங்குடிகள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:47 am

விளை நிலங்களில் இருக்கும் பயிர்களை வந்து சாப்பிட்டால் கூட ஒரு போதும் அவர்கள் யானைகளைத் துன்புறுத்தியது கிடையாது. 'இயற்கை எடுத்தது போக மீதம் இருப்பது கிடைத்தால் போதும்' என்பதுதான் அவர்களது வேண்டுதலாக இருக்கும். காலம் காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த புரிதல் அப்படித்தான் இருந்தது.

[You must be registered and logged in to see this image.]

ஆனால் இன்றைக்கோ மனிதர்களின் குணம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. இயற்கையை நேசித்தவர்கள் இன்றைக்கு அதன் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலால் வந்த தலைக்கனம்தான் இப்பொழுது யானைகளின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று நான்கு கான்க்ரீட் சுவர்களே மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் யானைகளால் காடுகளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிவதில்லை. மேலும் அவை மனிதர்களைப் போல வேலி போட்டுக் கொண்டு வாழ்பவை அல்ல. அவற்றுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துப்படி என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வலசைச் சென்று திரிபவை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:49 am

ஆனால் மனிதர்கள் அவை காடுகளில் சுதந்திரமாக வலம் வருவதைக்கூட தடை செய்கிறார்கள். யானைகளின் வலசைப் பாதைகளை கட்டடங்களும், மின் வேலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இத்தனை வருடம் காடுகளில் வாழ்ந்த யானைகளுக்கு மின் வேலிகள் முற்றிலும் புதியவை. பாவம் மின் வேலிகளில் எழுதப்பட்டிருக்கும்
[You must be registered and logged in to see this image.]
'அபாயம்' என்ற வார்த்தைகளைக் கூட படிக்க முடியாத அறிவில்லாத மிருகங்களாகத்தான் யானைகள் இன்றைக்குக் காடுகளில் திரிகின்றன. தண்டவாளங்களையும் அவற்றில் அதிவேகத்தில் வரும் ரயில்களையும் யானைகளால் எதிர்கொள்ளவே முடிவதில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:50 am

இப்படி முன்னே செல்லும் வழிகள் தடைப்பட்டதால் அவை திசை மாறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படி வந்தாலும் அவற்றிற்குத் தேவைப்படுவது உணவும், நீரும்தான். கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் யானைகள் ஒரு நாளும் ஊர்ப் பக்கம் ஒதுங்குவது கிடையாது. ஊருக்குள் வரும் யானைகளை வம்புக்கு இழுப்பது மனிதர்கள்தான். அவற்றின் மீது சுடச் சுட தாரை எறிவது தொடங்கி துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்து விதமான மிருகத்தனத்தையும் யானைகள் மீது காட்டுவார்கள். ஆனால் இறுதியாக யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாக வனத்துறையிடம் புகார் அளிப்பார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:55 am

அடிமைகளாக மாறும் ராஜாக்கள்

[You must be registered and logged in to see this image.]

யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து விடுவதை மட்டும் முதல் ஆளாக அறிந்து கொள்ளும் வனத்துறை அவை எதற்காக ஊருக்குள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தாலும் அமைதியாகவே இருந்து விடுகிறது. அப்படியே கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிப்பார்கள் அல்லது கட்டடங்களை சீல் வைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மட்டுமல்ல அதற்கு மேலே என்ன நடந்தாலும் யானைகளுக்கு அதன் பழைய வனம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஊருக்குள் வரும் யானைகளைச் சமாளிக்க வனத்துறையிடம் சில திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. ஒன்று யானையை மீண்டும் காட்டிற்குள்ளே துரத்தி விடுவது, இரண்டாவது அதை அப்படியே அப்புறப்படுத்தி வேறொரு காட்டுப் பகுதியில் விட்டு விடுவது.

யானைகள் ஒன்றும் தனித்து வாழ்பவை அல்ல. அவை கூட்டமாக வாழும் பண்புடையவை என்பதால் கூட்டத்திலிருந்து ஒரு யானையைப் பிரிக்கும் போது அதனால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:58 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:57 am

[You must be registered and logged in to see this image.]

மூன்றாவது திட்டம் அதைக் கும்கியாக மாற்றி விடுவது. காட்டுக்குள் ராஜாகவாக இருந்த யானை மனிதர்கள் அளிக்கும் ஒரு வேளை உணவுக்காக அடிமையாக வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படும். நேற்றைக்கு சின்னதம்பியைப் பிடிப்பது வனத்துறையினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மணி நேர

போராட்டத்திற்குப் பிறகு சில கும்கி யானைகள் மூலமாக அதை அடக்க முடிந்தது. அதன் பிறகும் லாரியில் ஏற முரண்டு பிடித்திருக்கிறது சின்னத்தம்பி. பின்னர் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்கையில் அதன் அழகான இரண்டு தந்தங்களும் உடைந்திருக்கின்றன.
மேலும் அதன் உடலில் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. யானையை வெளியேற்றி விட்டதாக இன்றைக்கு சில மனிதர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் நாளைக்கு இதே அதிகாரம் யானைகளைப் போல மனிதர்களையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றலாம். அன்றைக்குத்தான் அவர்களுக்குப் புரியும் சின்னத் தம்பியின் வேதனையும்,கோபமும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை