உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Today at 7:48 am

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by ayyasamy ram Today at 7:37 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Today at 7:30 am

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Today at 7:24 am

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Today at 7:21 am

» நான் ரெடி நீங்க ரெடியா?
by சக்தி18 Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Yesterday at 9:00 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 7:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Yesterday at 5:55 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Yesterday at 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Yesterday at 4:56 pm

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Yesterday at 3:52 pm

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Yesterday at 2:11 pm

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:44 pm

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 10:37 am

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Yesterday at 7:58 am

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Yesterday at 7:34 am

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Yesterday at 6:58 am

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Yesterday at 6:45 am

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:10 pm

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Sun Jul 21, 2019 6:32 pm

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Sun Jul 21, 2019 3:55 pm

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Sun Jul 21, 2019 2:42 pm

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:31 am

» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:28 am

» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:22 am

» கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:20 am

» பணபிரச்சினையால் சிக்கல்அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:19 am

» அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:13 am

Admins Online

ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடினவங்க நிலைமை...!!

  ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடினவங்க நிலைமை...!! Empty ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடினவங்க நிலைமை...!!

Post by ayyasamy ram on Sun Jan 13, 2019 11:27 am

சரவணன், சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன்.
தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு
வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று தன்
தந்தையிடம்கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத்
திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கி விடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில் தான் அடைக்க ஆரம்பித்து இருக்கின்றோம். திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்று விட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதம் உள்ள பணத்தில்
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன்.

”5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக்கடனை மாதத் தவணை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.

வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு. சகல வசதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான் அவன். அவர் முகம் மாறியது.

ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள் என்றான்.

அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த
ஆசையோடு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார். உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப்பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்.

”இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். என்னோட லைப் சென்னையில் தான். இனிமேல்
நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வரப்போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க! வந்தது அசதியா இருக்கும்” என்றான்.

மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.
கீழே இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளையாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார். அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப்பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.

பக்கத்தில் வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார் அப்பாவா?” என்றான். ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டீ சாப்பிடலாம்” என்றான்.
சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில வீடுகளின் கதவு அடைத்திருக்கு?”

அது எல்லாம் அப்படித்தான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கத்துல இருக்கற
ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல்ல வராங்களோ அவுங்க கூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப்போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில,
பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா? அதனால ஒண்ணு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், “
இதோ போறாரே சேகர் சார், அவர் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான்
கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார் பெரியவர்.

தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.
”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே?
இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்..
எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”

”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம்
முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா?”
.
”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு மூன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம்
ஏதாவது ஹோட்டலுக்குப் போய்
சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படணும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்”

அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்.

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும்
அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.

அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.

”என்ன அப்பா இவ்வளவு அவசரம்?
என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:

”ஒண்ணும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான்
படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன் வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!.

இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும்.

கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன்
காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன்.

விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன் வாங்கவில்லை.

இனிமே உன் வாழ்கைக்கையில்
நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு!

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிக்கையுடன் கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது.
எக்ஸிட் கிடையாதுஎன்று!

குறிப்பு:

இது சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல,
சொந்த ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின்
எங்கெங்கோ மாட்டிக்கொண்ட அனைவருக்கும்
பொருந்தும்
.
படிக்க_மட்டுமல்ல
சிந்திக்கவும்_அவசியம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை