உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
by T.N.Balasubramanian Today at 5:02 pm

» ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை
by கண்ணன் Today at 4:51 pm

» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Today at 4:50 pm

» மதுவோடை – கவிதை
by ayyasamy ram Today at 4:40 pm

» நிலவு இன்று பூமியில்…!- கவிதை
by ayyasamy ram Today at 4:39 pm

» மடலேறுதல் - கவிதை
by ayyasamy ram Today at 4:38 pm

» லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 4:35 pm

» கண்பார்வை குறைபாடு நீங்க...
by ஜாஹீதாபானு Today at 4:18 pm

» நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
by M.Jagadeesan Today at 11:35 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 7:58 am

» இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி
by ayyasamy ram Today at 7:33 am

» மக்களே இன்று இரவு சென்னையில் மழை கொட்டப் போகிறது...தமிழ்நாடு வெதர்மேன்!!
by ayyasamy ram Today at 7:29 am

» சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
by ayyasamy ram Today at 7:19 am

» ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி
by ayyasamy ram Today at 7:13 am

» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
by ayyasamy ram Today at 7:09 am

» ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவதா?: பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!
by ayyasamy ram Today at 7:02 am

» ஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டமில்லை: யுஜிசி
by ayyasamy ram Today at 7:00 am

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு
by ayyasamy ram Today at 6:55 am

» கம்பராமாயணம் - சுகிசிவம்
by s_babu1 Yesterday at 11:07 pm

» கம்பராமாயணம் - சுகிசிவம் - தொகுப்பு 2
by s_babu1 Yesterday at 11:06 pm

» வாழ்வென்பது பெருங்கனவு!
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» இன்று போய் நாளை வா
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 6:32 pm

» வங்க கடலில் புயல் சின்னம்?
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» அழகான பொண்ணுங்களை எப்படி நினைக்கணும்?
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by sukumaran Yesterday at 5:07 pm

» சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:03 am

» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» 2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:38 am

» உப பாண்டவம் - எஸ் ராமகிருஷ்ணன்
by புத்தகப்பிாியன் Yesterday at 7:51 am

» செம்பியர் திலகம் பாகம் 1
by i6appar Yesterday at 6:36 am

» சினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு“மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்”
by ayyasamy ram Yesterday at 6:21 am

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by ayyasamy ram Yesterday at 5:42 am

» 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி
by ayyasamy ram Yesterday at 5:32 am

» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி
by T.N.Balasubramanian Tue Jun 25, 2019 5:35 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by ஜாஹீதாபானு Tue Jun 25, 2019 5:34 pm

» ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!!
by T.N.Balasubramanian Tue Jun 25, 2019 5:31 pm

» நந்தி பற்றிய அரிய தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:20 pm

» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:10 pm

» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:01 pm

» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்
by ayyasamy ram Tue Jun 25, 2019 3:55 pm

» சினிமா செய்திகள் - தினத்தந்தி
by ayyasamy ram Tue Jun 25, 2019 7:17 am

» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
by ayyasamy ram Tue Jun 25, 2019 6:37 am

» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Tue Jun 25, 2019 6:34 am

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Mon Jun 24, 2019 10:48 pm

» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
by ayyasamy ram Mon Jun 24, 2019 9:17 pm

Admins Online

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

விஸ்வாசம் - சினிமா விமர்சனம் Empty விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram on Fri Jan 11, 2019 12:12 pm

விஸ்வாசம் - சினிமா விமர்சனம் 105132680ajith1jpg

திரைப்படம் --விஸ்வாசம்

நடிகர்கள்
அஜீத்குமார், நயன்தாரா, குழந்தை அனிகா,
ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு,
தம்பி ராமைய்யா, ஜெகபதிபாபு
-
இசை--டி. இமான்
இயக்கம்--சிவா.
-
சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம்
படங்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் நான்காவது
படம் இது. விவேகம் படத்தைப் பார்த்து ஏமாற்றத்தில்
ஆழ்ந்திருந்த அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில்
குஷிப்படுத்த முயன்றிருக்கிறார் சிவா.

தேனி மாவட்டத்தில் வசிக்கும் தூக்குதுரை (அஜீத்) ஒரு தடாலடிப் பேர்வழி. எதிர்ப்பவர்களை நொறுக்கி அள்ளும் ரகம். ஆனால், அவருக்கு ஒரு சோகமான முன்கதை இருக்கிறது. அதாவது, தூக்குதுரையின் மனைவியான நிரஞ்சனா (நயன்தாரா), அவரது முரட்டுத்தனத்தால் அவரை விட்டுப் பிரிந்துசென்று மும்பையில் வசிக்கிறார்.

குழந்தையையும் (அனிகா) பார்க்கவிடுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் மனைவியைச் சந்திக்கச் செல்லும் தூக்குதுரைக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது குழந்தையை ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் (ஜெகபதிபாபு) கொல்ல முயற்சிக்கிறார்.

தொழிலதிபர் ஏன் குழந்தையைக் கொல்ல முயற்சிக்கிறார், தூக்குதுரை குழந்தையை காப்பாற்றி மனைவியுடன் இணைந்தாரா என்பது மீதக் கதை.

முந்தைய படத்தில் ஏமாற்றமளித்ததால் இந்தப் படத்தில் அஜீத்தின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியிருக்கிறார் சிவா. அஜீத் நடப்பதை, வேஷ்டியை ஏற்றிக் கட்டுவதை, கைகளை க்ளோசப்பில் காட்டும் காட்சிகளை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார்.

கலகலப்பான கிராமத்துவாசி, யாரையும் அடிக்கும் முரட்டுத்தனம், குடும்பத்திற்காக ஏங்கும் கணவன், குழந்தைக்காக ஏங்கும் தந்தை என இந்தப் படத்தில் சிக்ஸ் அடிக்க முயன்றிருக்கிறார் அஜீத். ஆனால், கலகலப்பு - நகைச்சுவை ஆகிய இரண்டும் பல இடங்களில் அஜீத்திற்குப் பொருந்தவில்லை.

மற்ற ஏரியாக்களில் அனாயாசமாக ஸ்கோர் செய்கிறார் அஜீத். சிவா மீது அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த கோபம் இந்தப் படத்திற்குப் பிறகு கொஞ்சமாவது தணிந்திருக்கும்.

இளம் மருத்துவர், மனைவி, பெரிய மருந்து நிறுவனத்தின் தலைவர், பாசமான அம்மா என பலவித பாத்திரங்களில் வரும் நயன்தாரா, ஒவ்வொரு இடைவெளியிலும் கோல் அடிக்கிறார். குழந்தையாக வரும் அனிகாவுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படம்.

முற்பாதியில் யோகி பாபுவும் பிற்பாதியில் விவேக்கும் சிரிக்கவக்க முயற்சிக்கிறார்கள். அதில் யோகிபாபுவைவிட விவேக்கிற்கு கூடுதல் வெற்றிகிடைக்கிறது. ஒருவகையில் நகைச்சுவை நடிகராக விவேக்கிற்கு இது ஒரு 'கம்-பேக்' திரைப்படம் என்றுகூடச் சொல்லலாம்.

ரோபோ ஷங்கர் - தம்பி ராமைய்யா கூட்டணியும் நகைச்சுவைக்கு முயற்சிக்கிறது. ஆனால், ஏதும் நடப்பதில்லை. படம் நெடுக தம்பி ராமைய்யா மட்டும் 'தூக்குதுரை' என்ற பெயர் போட்ட பனியனை அணிந்துவருகிறார். அது ஏதும் குறியீடா?

சிவா - அஜீத் ஜோடியின் முந்தைய படத்தோடு ஒப்பிட்டால் நிச்சயம் மேம்பட்ட படம்தான். ஆனால், பல பலவீனமான அம்சங்கள் இந்தப் படத்திலும் உண்டு. படத்தின் துவக்க காட்சிகளில் தூக்குத்துரையின் பாத்திரம் குறித்து கொடுக்கப்படும் 'பில்ட் - அப்'கள் ஒரு கட்டத்தில் பெரும் அலுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன.

மேலும் கதை மும்பைக்கு நகர்ந்த பிறகு, ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே செல்ல ஆரம்பிக்கிறது. முடிவில் வில்லனும் திருந்தி, அஜீத் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்கிறார்.

திரைக்கதையிலும் புதுமையான திருப்பங்களோ, எதிர்பாராத தருணங்களோ கிடையாது. அதனால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.

படத்தின் சில பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக 'கண்ணான கண்ணே' பாடல். ஆனால் பின்னணி இசைக்குப் பதிலாக பல இடங்களில் அந்தப் பாடலையே பயன்படுத்திருப்பது சற்று ஓவர்.

பாடல்களின் எண்ணிக்கையும் படத்தில் சற்று அதிகம்தான். அஜீத் எப்போதாவது வேஷ்டியைத் தூக்கினாலே, குதித்துக்கொண்டு பாடப்போகிறாரோ என்ற பயம் வருகிறது. ஆனால், அந்தப் பயம் வீணாவதில்லை. வேஷ்டியை ஏற்றிக்கட்டினால் இரண்டு பாட்டு லட்சியம்; ஒரு பாட்டு நிச்சயம்.

படத்தில் பல இடங்களில் 'தான் தேனிகாரர்' என்கிறார் அஜீத். ஆனால், படம் சோழவந்தானில் நடப்பதாகக் காட்டுகிறார்கள். பாடல் காட்சிகளில் 'நான் மதுரைக்காரன்' என்கிறார். படம் உண்மையில் எந்த ஊரில் நடக்கிறது, அஜீத் எந்த ஊர்க்காரர்?

பளீரென தென்படும் வெற்றியின் ஒளிப்பதிவு படத்தின் மிக முக்கியமான பலம். பல க்ளோஸ் - அப் காட்சிகளை வடிவமைத்த விதமும் பார்வையை நிலைக்க வைக்கின்றன.

அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் திருப்திப்படுத்தியிருக்கிறார் சிவா. ஆனால், சாதாரண சினிமா ரசிகர்கள் ஏமாற்றமடையக்கூடும்.
--
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45833
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12186

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஸ்வாசம் - சினிமா விமர்சனம் Empty Re: விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 11, 2019 12:39 pm

உண்மை இது ஒரு வெற்றி படம் தான்.
ஏனென்றால் நான் மதுரை மற்றும் தேனிக்கு
சொந்தகாரன்........
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12532
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை