உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 4:01 pm

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் QsS9drtYROC2QmFE88na+collagejpg(1).jpg2
-
2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் E7CTCPqPSsimL4OYSgex+collagejpg(2)-
-
2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் 656SXAH0QkehHAc5xWUe+collagejpg(3)

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் RIrgYo8SwO4YvgZL41Ej+collagejpg.jpg1
-
2019-ம் ஆண்டு தொடங்கிவிட்டது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கடந்த வருடத்தின்
இரண்டாம் பாதியில்தான் நல்ல நல்ல படங்கள் ரிலீஸாகின.

இந்த வருடத்தை (2019) ரஜினியின் ‘பேட்ட’ படமும்,
அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் பிள்ளையார் சுழி போட்டுத்
தொடங்கிவைக்கப் போகின்றன.

இந்த வருடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்
குறித்து இங்கு பார்க்கலாம்.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 4:04 pm

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Pettajpgjpg

ரஜினியின் ‘பேட்ட’


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில்
உருவாகியிருக்கும் படம் ‘பேட்ட’. படத்தின் டீஸர்,
ட்ரெய்லரைப் பார்க்கும்போது, முழுக்க முழுக்க ரஜினி
ரசிகனாக உருமாறி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்
கார்த்திக் சுப்பராஜ் என்பது தெரிகிறது.

கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு காளி என்ற
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினி, 1980-ம் ஆண்டு
ரிலீஸான ‘காளி’ படத்தில் நடித்தது போலவே இந்தப்
படத்திலும் ஸ்டைலாக கேட்டைத் திறக்கும் காட்சியில்
நடித்துள்ளார்.

அத்துடன் இளமையும் ரொமான்ஸும் ரஜினி நடிப்பில்
பொங்கி வழிகிளது.

‘பார்க்குறதுக்கு சின்னப்பையன் மாதிரி இருக்கீங்க’
என்று மேகா ஆகாஷ் சொல்லும்போது, தனது ட்ரேட்மார்க்
சிரிப்பை உதிர்க்கும் ரஜினி, ‘நேச்சுரலி...’ என்று சொல்லும்
இடத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார்.

ரஜினி ரசிகர்களுக்கு மெகா விருந்தாக இந்தப் படம் அமையும்
என்ற நம்பிக்கை ட்ரெய்லரிலேயே தெரிகிறது. ரஜினியுடன்
சேர்ந்து சிம்ரன், த்ரிஷா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இந்த இருவருமே இதுவரை ரஜினியுடன் சேர்ந்து நடித்ததில்லை
என்பதும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

ரஜினி - த்ரிஷா புகைப்படங்களும், ரஜினி - சிம்ரன் ட்ரெய்லர்
காட்சிகளும் படத்தின் ரொமான்ஸ் காட்சிகளுக்குக் கட்டியம்
கூறுகின்றன.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 4:05 pm

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Trisha-rajinijpgjpgjpg
-


விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சசிகுமார்,
பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், ராமச்சந்திரன்,
‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்
இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் ‘மரணம் மாஸு மரணம்’ உள்ளிட்ட
பாடல்கள் ஹிட்டான நிலையில், வருகிற 10-தேதி ரிலீஸாக
உள்ள ‘பேட்ட’ படத்துக்காகக் காத்திருக்கிறார்கள் ரஜினி
ரசிகர்கள்.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 4:07 pm

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Dfe6c844P1724426mrjpgjpg
-

அஜித்தின் ‘விஸ்வாசம்’


தொடர்ந்து சிவா இயக்கத்தில் நான்காவது படமா?
என்று எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் இருந்த
அஜித் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது
‘விஸ்வாசம்’ ட்ரெய்லர்.

அதுவும் ரஜினியின் ‘பேட்ட’ ட்ரெய்லருக்குப் பதிலடி
தரும் வகையில் அமைந்திருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு
குஷியோ குஷி.

எனவே, ‘பேட்ட’யுடன் ரிலீஸானாலும், போட்டி போட்டு
ஜெயிக்கும் என்ற நம்பிக்கை அஜித் ரசிகர்களுக்குப்
பக்காவாக இருக்கிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்
வெள்ளை வேட்டி - சட்டை கெட்டப், மழையில் சண்டை
என சற்றே ‘வீரம்’ படத்தை நினைவுபடுத்தினாலும்,
‘விஸ்வாசம்’ படம் மாஸாக இருக்கும் என நம்புகிறார்கள்
அஜித் ரசிகர்கள்.


அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, முக்கியக்
கதாபாத்திரங்களில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர்,
யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். ‘விவேகம்’
தோல்வியை ஈடுகட்ட இந்தப் படத்தை சத்யஜோதி
ஃபிலிம்ஸுக்குக் கொடுத்துள்ளார் அஜித்.

டி.இமான் இசையமைப்பில், வெற்றி ஒளிப்பதிவில் வருகிற
10-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது ‘விஸ்வாசம்’.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 4:10 pm

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Ngkjpgjpg
-


சூர்யாவின் ‘என்.ஜி.கே’ மற்றும் ‘காப்பான்’

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும்
படம் ‘என்.ஜி.கே.’. சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும்
சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு,
எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்க, ரிலையன்ஸ்
என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.


கடந்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என
அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுவரை படப்பிடிப்பு
முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது.

“நாங்கள் எல்லாருமே கடுமையாக உழைக்கிறோம். ஆனால்,
சில விஷயங்கள் எங்கள் கைமீறிப் போய்விட்டது” என
சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் செல்வராகவன்.

இந்தப் படத்துக்காகத் தான் போட்ட ட்யூன்களை அழித்து
விட்டு மறுபடியும் புதிதாக ட்யூன்கள் போடுவதாக அறிவித்தார்
யுவன் சங்கர் ராஜா.
---
2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Kappaanjpgjpg
----
‘என்.ஜி.கே.’ படத்துக்காக ஒதுக்கிய தேதிகள் முடிவடைந்த
நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார்
சூர்யா. லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, இந்தியாவின்
பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு
‘காப்பான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்க, மோகன்லால், ஆர்யா,
பொமன் இரானி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில்
நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.


இந்த இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தில் இருப்பதால்,
இரண்டுமே இந்த வருடம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ ரிலீஸாகி ஒரு வருடம் நிறைவடைய
இருப்பதால், சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் இரு படங்களுக்காகவும்
காத்திருக்கின்றனர்.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 4:11 pm

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Kamaljpgjpgjpg
-

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’


1996-ம் ஆண்டு ரிலீஸான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக
உருவாக இருக்கிறது ‘இந்தியன் 2’. ஷங்கர் இயக்கத்தில்
கமல்ஹாசன் நடிக்க, அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால்
நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நெடுமுடி வேணு
நடிக்கிறார்.

‘இந்தியன்’ படத்தில் இந்தியன் தாத்தா கமல் வர்மக்கலை
தெரிந்தவராக நடித்தார். ஆனால், இந்தப் படத்தின் கதைப்படி
காஜலுக்கும் வர்மக்கலை தெரியவேண்டும் என்பதால்,
அவர் தற்போது வர்மக்கலை கற்று வருகிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத்
இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வருகிற 18-ம் தேதி
படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 4:12 pm

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Simbujpgjpg
-



சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’


சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம்
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பவன் கல்யாண் நடிப்பில்
வெளியான ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின்
ரீமேக் இது.

சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா என
இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். முக்கியக்
கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்தப் படம்,
வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என முதலில்
அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு
முடியாததால், குறித்த நேரத்தில் திரைக்கு வர முடியவில்லை.

எனவே, புதிய ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கின்றனர்
சிம்பு ரசிகர்கள்.
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jan 04, 2019 10:18 pm

செல்வராகவன் பல வருடம் எடுத்தாலும் படம் வித்தியாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .. காத்திருத்தல் தவறில்லை ...

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுத்தால் சிறப்பாக இருக்கும் ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 8:24 am

@ரா.ரமேஷ்குமார் wrote:செல்வராகவன் பல வருடம் எடுத்தாலும் படம் வித்தியாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .. காத்திருத்தல் தவறில்லை ...

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுத்தால் சிறப்பாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1290617
--
இடையில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தாண்டி
இன்னும் பல நல்ல சினிமாக்களை செல்வா தருவார்
எனக் காத்திருப்போம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் Empty Re: 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை