உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொதுவான செய்திகள்.
by சிவனாசான் Today at 5:51 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Today at 5:26 pm

» mr novels
by kanu Today at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Today at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Today at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Today at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Today at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Today at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Today at 2:18 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 1:36 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Today at 1:29 pm

» புத்தகங்கள் தேவை !
by kanu Today at 1:27 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Today at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Today at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Today at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Today at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Today at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Today at 8:04 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 10:49 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by பா. சதீஷ் குமார் Yesterday at 9:10 pm

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Yesterday at 8:52 pm

» வெற்றி என்பது...!!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை - ஜெயலலிதாவின் டைரி
by பா. சதீஷ் குமார் Yesterday at 8:23 pm

» உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» குளிகை பிறந்த கதை
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» தண்டவாளங்கள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» அஜீரணம் நீக்கும் வேப்பம்பூ
by ஜாஹீதாபானு Yesterday at 6:29 pm

» முகம் சுத்தமாக இருக்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:28 pm

» பிரபஞ்சம்-சில தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:05 pm

» தண்ணீரும் நஞ்சாகலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:04 pm

» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:56 pm

» பப்ஜி கேமினால் விபரீதம் -செல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் கத்தியால் குத்திய இளைஞர்
by T.N.Balasubramanian Yesterday at 5:56 pm

» சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:53 pm

» நோயாளிக்கு பொருத்த ரெயிலில் சென்ற கல்லீரல்- 38 நிமிடத்தில் பொருத்தப்பட்டது
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» உங்களால் முடியும் - வாழ்க்கை தத்துவம் {இணையத்தில் ரசித்தவை}
by சக்தி18 Yesterday at 3:53 pm

Admins Online

மாடு வாங்கியதற்கு ரசீது கேட்ட அமைச்சர்! - கக்கன் நினைவுதின பகிர்வு! 3

மாடு வாங்கியதற்கு ரசீது கேட்ட அமைச்சர்! - கக்கன் நினைவுதின பகிர்வு! 3

Post by ayyasamy ram on Sun Dec 23, 2018 12:20 pm


-

காமராஜர் அமைச்சரவையில் நேர்மையாகவும்,
சிக்கனமாகவும், கடமைதவறாதவராகவும் விளங்கிய
அமைச்சர் வேறு யாருமல்ல, மாமனிதர் கக்கன்தான்.
இன்று, அவருடைய நினைவுதினம்.

மலையைக்கூட ஆக்கிரமித்து தன் மனையோடு இணைத்துக்
கொண்டு வாழும் அமைச்சர்கள் மிகுந்த இந்த நாட்டில்,
அரசுப் பணியாளரை மண்ணெண்ணெய் வாங்கிவரச்
சொன்னதற்காகத் தன் மனைவியையே திட்டியவர் அவர்.

அப்படிப்பட்ட அமைச்சர், தனக்குப் பரிசாகக் கிடைத்த
மணியளவு பொருள்களைக்கூட இந்த நாட்டுக்காக விட்டுச்
சென்றவர். மேலும், பெருந்தலைவர் காமராஜர்
அமைச்சரவையில், பெரிதும் மதிக்கப்பட்டவராகவும் அவர்
இருந்தவர். அதற்குக் காரணம், அவருடைய எளிமைதான்.

கக்கன்

ஒருநாள் அவரைச் சந்திப்பதற்காக அதே காலகட்டத்தில்
சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.பி.ஏழுமலை அவரது
இல்லத்துக்குச் சென்றார். நண்பரை வரவேற்ற அமைச்சர்,
பின்னர் தன் மனைவியை அழைத்து, "நண்பருக்கு டீ
அல்லது காபி கொண்டுவா" என்று சொன்னார்.

அமைச்சரின் மனைவியோ, "வீட்டில் சுத்தமாகப் பால்
இல்லை" எனக் கணவரிடம் மிகவும் தயங்கியபடியே
கூறினார். அதைக் கேட்டு அதிர்ந்துபோன டி.பி.ஏழுமலை,

"என்னது, அமைச்சர் வீட்டில் பால் இல்லையா?
ஆச்சர்யமாக இருக்கிறதே? அப்படியானால், பசு மாடு
ஒன்றை வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே" என்று
ஆலோசனை கூறினார். அதைக் கேட்டுப் புன்னகைத்ததுடன்,
நண்பரையும் அனுப்பிவிட்டார். நாட்கள் கடந்தன.

அமைச்சர் வீட்டில் பசு மாடு வாங்குவதற்கு மனைவியிடம்
கலந்து ஆலோசித்துத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, நண்பர் டி.பி.ஏழுமலை சென்னை திருவொற்றியூர்
பகுதியிலிருந்து பசு மாடு ஒன்றை 150 ரூபாய் விலைக்கு
வாங்கி, அமைச்சரின் வீட்டுக்கு அழைத்துவந்தார்.

பசு மாடு வந்த செய்தி தெரிந்ததும் நண்பரை அழைத்தார்,
அமைச்சர். அவரிடம், "நீங்கள் பசு மாடு வாங்கிக்கொண்டு
வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஆனால், அதற்கான ஒப்புகைச்
சீட்டு (ரசீது) எங்கே?" என்று கேட்டுள்ளார்.

புரியாமல் விழித்த நண்பர், "எதற்கு ஒப்புகைச் சீட்டு,
சந்தையில் மாடு விற்பவர் ஒப்புகைச் சீட்டு எப்படிக்
கொடுப்பார்?" என்று அமைச்சரிடம் பதிலளித்துள்ளார்.

அதற்கு அவர், "அமைச்சராக இருக்கும் நான், எந்தப்
பொருள் வாங்கினாலும் அதற்கு ஒப்புகைச் சீட்டு வைக்க
வேண்டும். எம்.எல்.ஏ-வாக இருக்கும் உங்களுக்கு இது
தெரிய வேண்டாமா!" என்று கேட்டு நண்பரைச் சற்றே
கடிந்ததோடு,

"போய் உடனே அவரைத் தேடி கண்டுபிடித்து ஒப்புகைச்
சீட்டு ஒன்றை வாங்கிவாருங்கள்" என்று விரட்டியிருக்கிறார்.
"சந்தையில் மாடு விற்றவர் யார், அவரை எங்கே தேடுவது"
என்று அமைச்சரிடம் நண்பர் புலம்பியிருக்கிறார்.
-
----------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42967
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: மாடு வாங்கியதற்கு ரசீது கேட்ட அமைச்சர்! - கக்கன் நினைவுதின பகிர்வு! 3

Post by ayyasamy ram on Sun Dec 23, 2018 12:21 pm


-

-
அதற்கு அமைச்சர், "ஒப்புகைச்சீட்டு உங்களால் வாங்கிக்
கொண்டு தர முடியவில்லை என்றால், மாட்டைத் திரும்ப
ஓட்டிச் சென்றுவிடுங்கள்" என்றார், சற்றே சீற்றமாய்.

அதற்குப் பிறகு அவரிடம் பேசினால் எந்த மாற்றமும்
நிகழாது என்று எண்ணியபடியே, "சரி, நான் முயன்று
பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்,
நண்பர்.

அமைச்சரின் வாக்கை நிறைவேற்றுவதற்காக மாடு
வாங்கிய சந்தைக்குச் சென்றார், நண்பர். அங்கு, மாடு
வாங்கியவரிடம் நடந்த விபரத்தைக் கூறினார். அவரோ,
"மாட்டை விற்றதற்கு ஒப்புகைச்சீட்டு கேட்ட முதல் ஆள்
நீங்கள்தான்" என்று நக்கலாய்ச் சிரிக்க,

அதற்கு நண்பர், "நீங்கள் ஒப்புகைச்சீட்டு கொடுக்கா
விட்டால், அமைச்சர் மாட்டை நிச்சயம் திரும்பக்
கொடுத்துவிடுவார்" என்றார். அதன்படி, அவரும் மாடு
விற்றதற்கான ஓர் ஒப்புகைச்சீட்டைக் கொடுத்தனுப்பினார்.

அதைப் பெற்ற சந்தோஷத்தில் அமைச்சரின் வீட்டுக்கு
விரைந்தார், நண்பர். அதை வாங்கிப் பார்த்த அமைச்சர்,
"இது, என்ன ஒப்புகைச்சீட்டு? இதில், வருவாய்
முத்திரைத்தலை (Revenue Stamp) ஒட்டி,
கையொப்பமிட வேண்டாவா? இப்படிக் காட்டினால்,
யார் நம்புவார்கள்" எனக் கேள்வியெழுப்பியதும்
நண்பருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என்ன சொன்னாலும் அமைச்சர் நம் பேச்சைக்
கேட்கமாட்டார் என்று எண்ணியபடியே, மீண்டும் அந்த
மாட்டுத் தரகரை நோக்கி நடந்தார், நண்பர். அமைச்சர்
கேட்டுக்கொண்டதன்படி, வருவாய் முத்திரைத்தலை
ஒட்டிய கையொப்பத்துடன் மீண்டும் ஓர் ஒப்புகைச்
சீட்டைக் கொண்டுவந்து கொடுத்தார்.

அப்போதுதான், நிம்மதிப் பெருமூச்சுவிட்டாராம்,
அமைச்சர். அப்படி நேர்மையாகவும், சிக்கனமாகவும்,
கடமைதவறாதவராகவும் விளங்கிய அமைச்சர் வேறு
யாருமல்ல... மாமனிதர் கக்கன்தான். இன்று, அவருடைய
நினைவுதினம்
-
-------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42967
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை