உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Today at 7:48 am

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by ayyasamy ram Today at 7:37 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Today at 7:30 am

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Today at 7:24 am

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Today at 7:21 am

» நான் ரெடி நீங்க ரெடியா?
by சக்தி18 Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Yesterday at 9:00 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 7:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Yesterday at 5:55 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Yesterday at 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Yesterday at 4:56 pm

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Yesterday at 3:52 pm

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Yesterday at 2:11 pm

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:44 pm

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 10:37 am

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Yesterday at 7:58 am

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Yesterday at 7:34 am

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Yesterday at 6:58 am

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Yesterday at 6:45 am

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:10 pm

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Sun Jul 21, 2019 6:32 pm

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Sun Jul 21, 2019 3:55 pm

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Sun Jul 21, 2019 2:42 pm

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:31 am

» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:28 am

» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:22 am

» கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:20 am

» பணபிரச்சினையால் சிக்கல்அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:19 am

» அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:13 am

Admins Online

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் Empty எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:39 am

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் UCJPrrfgRmm8d8hHpfCx+j

அடுத்த உலகப் போர் தண்ணீரால்தான் மூளும் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்கள். அது கூடவே மற்றொரு போரும் வந்துவிடக் கூடும். எரிபொருள் ஆதாரங்களான பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவை சீக்கிரத்தில் தீர்ந்துபோவதுதான் அந்தப் போர்.

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மின்சாரம், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை மையமிட்டே நகர்கிறது. ஒரு நிமிடம் கரண்ட் கட்டானாலும் வீட்டுக்குள் இருக்க முடிவதில்லை, இதைப் போல வீட்டுச் சமையல், போக்குவரத்து என நமது வாழ்க்கையோடு எரிசக்தியும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் Empty Re: எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:53 am

வரவும் செலவும்

உலக எரிசக்தி ஆதாரங்களில் 1% மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. ஆனால், உலக மக்கள்தொகையில் 16% பேர் இந்தியாவில் உள்ளனர்.

நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 75% இறக்குமதி மூலமே கிடைக்கிறது. இதற்கான செலவு மட்டும் வருடத்துக்கு ரூ. 1,50,000 கோடி.

நாம் பயன்படுத்தும் எரிசக்தி ஆதாரங்களில் பெரும்பாலானவை, மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாகவோ புதுப்பிக்கக் கூடியதாகவோ இல்லை. மீண்டும் புதுப்பிக்கப்பட முடியாத எரிசக்திதான் 80% எரிபொருளாகப் பயன்படுகிறது. நம்மிடம் உள்ள எரிசக்தி ஆதாரங்கள் இன்றும் 40 வருடங்கள் வரையில்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதை 'பீ ஆயில்' என்ற கொள்கை விளக்குகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் Empty Re: எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:54 am

குறைப்போம், சேமிப்போம்

எரிசக்தி உற்பத்தி முறைகளும் பயன்பாடும் காற்று மாசுபடுவதற்கும் மிகப் பெரிய காரணங்களாக உள்ளன. அதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவும், எரிசக்தியைச் சேமிக்க வேண்டும்.

எரிபொருளைச் சேமிப்பதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்க முடியும். சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரு வாரம் கூடுதலாகப் பயன்பட்டாலோ, மின்சாரக் கட்டணம் குறைந்தாலோ, எந்த அளவுக்குப் பணத்தைச் சேமிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்

அதேபோலச் சேமிக்கப்பட்ட எரிசக்தி, புதிய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம். ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால், அது 2 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம்.

அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு நாள் டிசம்பர் 14-ம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14-ல் தொடங்கி டிசம்பர் 21-ம் தேதிவரையும் அனுசரிக்கப்படுகின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் Empty Re: எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:55 am

அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு நாள் டிசம்பர் 14-ம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14-ல் தொடங்கி டிசம்பர் 21-ம் தேதிவரையும் அனுசரிக்கப்படுகின்றன.

எரிசக்தியைச் சேமிக்க எளிய வழிகள்:

வீடுகளில் மின்சாரச் சேமிப்பு

தேவையில்லாத நேரத்தில் விளக்குகளை அணைத்துவிடுங்கள்

முடிந்தவரை எல்.இ.டி. விளக்குகள் அல்லது சி.எஃப்.எல். விளக்குகளைப் பயன்படுத்த முயலுயுங்கள். இந்த வகை விளக்குகள் நீண்ட காலம் உழைப்பதால், பணம் சேமிக்கப்படும்.

வெளிச்சத்தை மறைக்காத வகையில் பல்புகளைப் பொருத்துங்கள், அடிக்கடி துடையுங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் Empty Re: எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:56 am

எல்.இ.டி - சி.எஃப்.எல். என்ன பயன்?

இந்த வகை விளக்குகளின் விலை அதிகம் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த வகை விளக்குகள் நமக்குத் தரும் லாபம் அதிகம்.

இவை அளவில் சிறியவை. சிக்கனமானவை, அதிக வெளிச்சம் தருபவை.

குண்டு பல்பைவிடக் குறுங்குழல் விளக்குகள் (காம்பேக்ட் புளூரசண்ட் - சி.எஃப்.எல்.), மூன்றில் ஒரு பங்கு மின்சக்தியையே பயன்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, 23 வாட் சக்தியுள்ள சி.எஃப்.எல். பல்பை 90 அல்லது 100 வாட் சக்தியுள்ள குண்டு பல்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

சமையலறை சேமிப்பு

எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் அடுப்புகளைப் பயன்படுத்துங்கள், முடிந்தவரை சிம்மில் வைத்தே சமையுங்கள்.

சமைக்கும்போது, பாத்திரங்களை மூடிவைப்பதால் சமைக்கும் நேரமும் எரிசக்தி பயன்பாடும் குறையும்.

சமைப்பதற்கு முன்னால் உணவுப் பொருட்களை ஊறவையுங்கள். இவற்றின் மூலம் எரிசக்தித் தேவை குறையும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் Empty Re: எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:57 am

உங்கள்வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணக்கிடவும், அதை எப்படிக் குறைக்கலாம் என்பது பற்றியும் யோசனையாக இருக்கிறதா? பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தின் அளவை கணக்கிடக் கீழ்க்கண்ட இணையதளம் உதவும்: http://www.keralaenergy.gov.in/emc-energy-calc-en.html
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம் Empty Re: எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை