உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
by ayyasamy ram Today at 8:29 am

» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Today at 7:48 am

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by ayyasamy ram Today at 7:37 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Today at 7:30 am

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Today at 7:24 am

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Today at 7:21 am

» நான் ரெடி நீங்க ரெடியா?
by சக்தி18 Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Yesterday at 9:00 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 7:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Yesterday at 5:55 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Yesterday at 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Yesterday at 4:56 pm

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Yesterday at 3:52 pm

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Yesterday at 2:11 pm

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:44 pm

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 10:37 am

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Yesterday at 7:58 am

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Yesterday at 7:34 am

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Yesterday at 6:58 am

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Yesterday at 6:45 am

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:10 pm

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Sun Jul 21, 2019 6:32 pm

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Sun Jul 21, 2019 3:55 pm

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Sun Jul 21, 2019 2:42 pm

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:31 am

» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:28 am

» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:22 am

» கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:20 am

» பணபிரச்சினையால் சிக்கல்அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:19 am

Admins Online

அருமையான எருமை மாடுகள்

அருமையான எருமை மாடுகள் Empty அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:28 am

அருமையான எருமை மாடுகள் Qy5ZbG8TS4i5xGn80XXC+erumaijpg


விவசாயிகள் வேளாண்மையை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பையும் சார்புத் தொழிலாக மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நாட்டு மாடுகள், எருமை மாடுகள் வளர்ப்பு, விவசாயத்தின் அங்கமாகவே இருந்து வந்தன. வறட்சியைத் தாங்கி வளரும் உடல் அமைப்பு, கடின உடல் உழைப்பு போன்ற அம்சங்களால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழிலை விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர்.


இவற்றில் எருமை மாட்டுப் பால், நாட்டுப் பசுவின் பாலைக் காட்டிலும், திடமும் கொழுப்புச் சத்தும் கொண்டது. அதனால் எருமைப் பாலில் ஊட்டச்சத்து அதிகம். தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப்போகாத தன்மையும் எருமைப் பாலுக்கு உண்டு. இது பால் சார்ந்த இனிப்புப் பொருட்கள் தயாரிப்புக்கு உகந்தது.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:29 am

வெண்மைப் புரட்சி

ஆனால், அதிக பால் உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு, `வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் கால்நடை வளர்ப்பில் பல மாற்றங்கள் உருவாயின. இதனால், நமது மண்ணுக்குத் தொடர்பில்லாத, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழில் அரிதானது.

பெரும்பாலான மாடுகள் கொத்துக் கொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இறைச்சிக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிமாடுகளாக அனுப்பிவைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு மாட்டு வகையையே விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.

எனினும், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த நாட்டு மாடுகளைத் தற்போது பலரும் விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டு மாட்டின் பால் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு, அழிந்துவரும் எருமை மாட்டினங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:30 am

பிற மாட்டு இனங்களைப் போல எருமை வளர்ப்புக்குத் தனிப்பட்ட கவனிப்போ செலவோ தேவையில்லை. நீண்ட கொம்புகளுடன், கரிய நிறத்தில் பெரிதாக வளரும் இவற்றுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு ஆற்றல் அதிகம். எனவே, நோய் தாக்கினாலும், அவை எளிதில் மரணமடையாது. தனிப்பட்ட தீவனங்களும் தேவையில்லை. அவிழ்த்துவிட்டால் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, சாதுவாக வீடு திரும்பிவந்து, பால் கறக்கும் தன்மை கொண்டவை.

“நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்கூட, எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாட்டு மாடுகளுடன் சேர்த்து, எருமை மாடுகளை வளர்க்க ஆசைப்பட்டாலும், அவை கிடைப்பதும் அரிதாக உள்ளது” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த து.ரவி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:31 am

மேலும், எருமைகளைப் பிற மாடுகளைப் போல் கட்டிவைத்து வளர்ப்பது சரியானதல்ல. அவற்றை அடைத்து வைத்து, எவ்வளவு சத்தான தீவனத்தை அளித்தாலும், குறைவாகவே பால் கறக்கும். மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றால் மட்டுமே, எதிர்பார்க்கும் அளவுக்குப் பால் கிடைக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும் எனச் சொல்கிறார் அவர்.

ஆனால், தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருளவு அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாவிட்டதால், இவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்புக்காக மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதுபெற்ற, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீரஜ் ராம்கிருஷ்ணா கூறுகையில், “எருமைகளை வளர்க்க நினைத்தாலும், அவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு நல்ல எருமை மாடு ரூ. 80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே, எருமை மாடு வளர்ப்பு அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாக இருக்கிறது” என்றார்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 10:33 am

சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.

விலை அதிகம்

மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by SALINI on Thu Dec 13, 2018 4:30 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.

விலை அதிகம்

மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1288292
அருமையான எருமை மாடுகள் 1f600 அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில் அருமையான எருமை மாடுகள் 1f600
SALINI
SALINI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by SK on Thu Dec 13, 2018 7:10 pm

எறுமையான பதிவு


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 7:58 pm

@SK wrote:எறுமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1288354

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24728
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8921

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 8:37 pm

@SALINI wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.

விலை அதிகம்

மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1288292
அருமையான எருமை மாடுகள் 1f600 அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில் அருமையான எருமை மாடுகள் 1f600
மேற்கோள் செய்த பதிவு: 1288342
நன்றி சாலினி.
நீங்கள் கூறுவது உண்மை கிராமங்களில்
இன்றும் பலரின் வாழ்வாதாரமே இந்த மாடு
வளர்ப்பே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 8:39 pm

@SK wrote:எறுமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1288354

இந்த எருமை பலருக்கும் ஏறு-மையமாக
உள்ளது நண்பா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 8:40 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:எறுமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1288354

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288362
தங்கள் சிரிப்புக்கு நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by ayyasamy ram on Tue Dec 18, 2018 12:23 pm

அருமையான எருமை மாடுகள் 103459460 அருமையான எருமை மாடுகள் 3838410834
-
அருமையான எருமை மாடுகள் 7f89f36c301467c1e70722346bb8d75f
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46483
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 18, 2018 12:38 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by ஜாஹீதாபானு on Tue Dec 18, 2018 3:31 pm

அருமையான எருமை மாடுகள் 103459460 அருமையான எருமை மாடுகள் 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30763
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7246

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Dec 18, 2018 5:15 pm

எருமை மேய்க்க தான் ஆவான் என்று யாரையும் சொல்ல முடியாது... எருமையும் ஏகப்பட்ட விலை வாங்குவது கடினம் .. சிரி

விவசாயத்தில் ஒரு அங்கம் கால்நடை வளர்ப்பு .. அதில் ஒன்று எருமை வளர்ப்பு ... இப்பொழுது ஆடும் இல்லை மாடும் இல்லை கோழியும் இல்லை ... எல்லாம் பண்ணை வளர்ப்பு தான் ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை