உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:31 pm

» காஞ்சனா 3 - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:24 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by ayyasamy ram Today at 5:15 pm

» பீதாம்பர ஐயர் ஜாலம் மின் நூல் கிடைக்குமா நண்பர்களே?
by ப்ரியா Today at 3:59 pm

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ராஜா Today at 3:35 pm

» 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:25 pm

» உன் புருஷனை ஏன் மொத்துனே?
by ayyasamy ram Today at 12:07 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:52 am

» கண்ணன் ஒரு கைக்குழந்தை…(திரைப்பட பாடல் வரிகள்)
by ayyasamy ram Today at 11:27 am

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by ayyasamy ram Today at 10:21 am

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Today at 10:09 am

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Today at 10:03 am

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Today at 10:00 am

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Today at 9:59 am

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Today at 9:57 am

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Today at 9:37 am

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Today at 9:33 am

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 9:25 am

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Today at 9:14 am

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Today at 9:11 am

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 9:05 am

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Today at 9:03 am

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Today at 9:00 am

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Today at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Today at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Today at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Yesterday at 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Yesterday at 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Yesterday at 6:01 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Yesterday at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:10 am

Admins Online

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Empty “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!

Post by ayyasamy ram on Sun Dec 02, 2018 10:51 pm

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! 143619_thumb
-
2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த
பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார்.
ஆனால், ரியல் பக்ஷி ராஜான சலீம் அலி, தன்னுடைய
10-ம் வகுப்பில் இருந்தே பறவைகளை நேசிக்க ஆரம்பித்து
விட்டார்.

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும்.
ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ
முடியாது"

இந்தியாவின் பறவைகள் மனிதர் என்றழைக்கப்படும்
சலீம் அலி அடிக்கடி சொல்லும் கருத்து இது.
பறவைகளுக்காகவே தன் வாழ்நாளில் பெரும்பாலான
நாள்களைக் கழித்தவர் சலீம் அலி.

அவரைப் பிரதிபலிக்கும் விதமாகவே, 2.0 படத்தில்
அக்ஷய் குமாரின் பக்ஷிராஜ் கதாப்பாத்திரம் உருவாக்கப்
பட்டுள்ளது. 2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள்
அதிகரித்த பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார்.

ஆனால், சலீம் அலி, தன்னுடைய 10-ம் வகுப்பில் இருந்தே
பறவைகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டார்.

1896-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சலீம் மொய்சுதீன்
அலி. இவரின் உறவினர்கள் அவ்வப்போது பறவை
வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். ஒருமுறை, சலீம் அலியும்
வீட்டில் இருந்தபோது ஒரு குருவியை சுட்டுள்ளார்.

அப்போது துடிதுடித்து கீழே விழுந்த அந்த குருவியின்
தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்ததைக் கண்ட
சலீம் அலி, அதுகுறித்து தெரிந்துகொள்வதற்காக பம்பாய்
இயற்கை வரலாற்று கழகத்திற்கு சென்றார்.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Empty Re: “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!

Post by ayyasamy ram on Sun Dec 02, 2018 10:52 pm


ஆனால், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், பொதுவாகப்
பறவைகளை கண்டறிவது எப்படி, அவற்றைப் பாதுகாப்பது
எப்படி என்று பல தகவல்களை அங்கே கற்றுக்கொண்டார்.

அப்போதுதான், சலீம் அலிக்குப் பறவைகள் குறித்து
ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பறவைகள் குறித்து தொடர்ந்து
ஆய்வில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

இந்தியப் பறவைகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான்
பறவைகள் பற்றிய கையேடு போன்ற புத்தகங்களின்
மூலம் இந்தியப் பறவைகளை உலகறியச் செய்தவர்.

இந்தியாவின் பறவை மனிதர் என்று அனைவராலும்
அழைக்கப்பட்டார். பம்பாய் இயற்கை வரலாற்று
கழகத்துடன் (Bombay Natural history society)
நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

இதன் மூலம், தமிழகத்தில் உள்ள கோடியக்கரை
பறவைகள் சரணாலயத்துக்கும் அடிக்கடி வந்திருக்கிறார்.

அவரது பெயரில் கோவையில் ஒரு பறவைகள் ஆராய்ச்சி
மையத்தைத் திறக்க ஆலோசனைகள் நடந்து வந்தது.
ஆனால், 1987-ம் ஆண்டு சலீம் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, 1990-ம் ஆண்டு கோவை ஆனைகட்டியில்,
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று
மையம் தொடங்கப்பட்டது. தற்போதும், பல்வேறு
மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்குப் பயின்று
வருகின்றனர்.

அவரின் மாணவர்கள் சிலர், ஆரம்பக்கட்டத்தில் இந்த
மையத்தில் விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர்.
இப்போதும் இருக்கின்றனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Empty Re: “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!

Post by ayyasamy ram on Sun Dec 02, 2018 10:52 pm"இந்தியாவில் ஒருவர் பறவைகள் குறித்து ஆராய்ச்சி
மேற்கொள்ள வேண்டுமென்றால், அவர் சலீம் அலியின்
புத்தகங்களை படிக்காமல் இருக்க முடியாது.

கிட்டத்தட்ட 1,300 பறவை வகைகளை ஆவணப்படுத்தி
தெளிவாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார். மேற்கு
தொடர்ச்சி மலையடிவாரத்தில் அவரது காலடித் தடம்
படாத இடங்களே கிடையாது.

பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அனைவருக்கும்
சலீம் அலிதான் குரு. பறவைகள் குறித்து அவரைப் போல
யாரும் குறிப்பு(Notes) எடுக்க முடியாது.

எந்த குறிப்பையும் தவற விட மாட்டார். அவ்வளவு
தெளிவாக இருக்கும். அதை வைத்தே புத்தகம் எழுதலாம்"
என்று அவர் குறித்து கேட்டவுடன் விஞ்ஞானிகள்
சிலாகிக்கின்றனர்.

பாலசந்திரன்பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின்
துணை இயக்குநராக இருக்கும் பாலசந்திரன்,
சலீம் அலியுடன் பழகியிருக்கிறார். பாலசந்திரனிடம்
பேசினோம்,
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Empty Re: “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!

Post by ayyasamy ram on Sun Dec 02, 2018 10:52 pm"மிகவும் அமைதியானர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.
பைக் பிரியர். சிறிய வயதில் யூ.கே வரை பைக்கில்
சென்றிருக்கிறார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். நான்
அவருக்கு மிகவும் ஜூனியர்.

ஆனால், ஏதாவது பறவை பறந்து போகும்போது,
அது குறித்து என்னிடம் கேட்பார். ஒருமுறை அவர்
கோடியக்கரை வந்தபோது, ஒரு ஆற்றைக் கடக்க
வேண்டிய நிலை.

அவரை ஒரு சிறிய போட்டில் வைத்து, கயிற்றைக்
கட்டி நான் இழுத்துச் சென்றிருக்கிறேன்.

வயதானவர் என்பதால் அவரது தோல்கள்
சுருங்கியிருக்கும். இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு
அவர் கொடைக்கானல் வந்திருந்தார்.

அப்போது, ஒரு பறவை அவரது கையில் அமர்ந்து
கொண்டு, அவரது கை தோலைக் கடித்து இழுத்துக்
கொண்டிருந்தது. அப்போதும் கூட,

'ஏய் எதற்காக ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?'
என்று சிரித்துக் கொண்டே பறவையிடம் கொஞ்சிக்
கொண்டிருந்தார். அந்த அளவுக்குப் பறவைகள் மீது
அன்பு கொண்டிருந்தார்.

குறிப்பாக, காட்டு பறவைகள் மீது அதிக ஆர்வம்
கொண்டவர்" என்றார்.

மொரர்ஜி தேசாய், இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி
என்று பல தலைவர்களிடம் எளிதில் பேசக் கூடியவராக
இருந்தார் சலீம் அலி.

அப்போதும், பறவைகள் குறித்தே பேசியிருக்கிறார்.
அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது,
"எத்தனையோ லட்ச மக்கள் பசியில் இருக்கிறார்கள்.
நீ பறவைகள் குறித்து கவலை பட்டுக் கொண்டிருக்கிறாயா?"
என்று இவரிடம் மொரர்ஜி தேசாய் கேட்டாராம்.

புகழ் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே, இவர் குறித்து
இந்திரா காந்திக்கு புகார்கள் சென்றன. பம்பாய் இயற்கை
வரலாற்று கழகத்தை மூடவும் சிலர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதே ஆண்டில் இவருக்கு பத்ம விருதளித்து,
எதிர்ப்பாளர்களின் வாயைப் பூட்டினார் இந்திரா காந்தி.

"2.0 படம் சொல்வதைப் போல, செல்போன் டவரால்தான்
பறவைகள் இனம் அழிகின்றன என்பது குறித்து
சலீம் அலி ஏதும் சொல்லவில்லை. அவர் இருந்த கால
கட்டத்தில் இந்த அளவுக்கு செல்போன்கள் பயன்பாட்டிலும்
இல்லை. பறவைகள் அழிவுக்கு நகரமயமாக்கல் தொடங்கி
பல்வேறு காரணங்களும் உள்ளன. எனவே, படத்தை
படமாக மட்டும் பாருங்கள்" என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சலீம் அலி கோடியக்கரை வந்திருந்தபோது அவரிடம்
ஒரு அரசியல்வாதி, "பறவைகளால் அப்படி என்னதான்
ஆகிவிடப்போகிறது? எதற்காக, பறவைகள், பறவைகள்
என்று சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?" என்று

கேட்டுள்ளார். அதற்கு அவர் மிகவும் அமைதியான குரலில்,
"பறவைகள் இனம் அழியத் தொடங்கும்போது,
மனிதர்கள் இனத்துக்கும் அழிவு தொடங்கும். அது நமக்குக்
கொடுக்கப்படும் எச்சரிக்கை" என்று கூறியுள்ளார்.

அவர் சொன்ன ஒரு கருத்து இன்றும் நமக்கு தேவைப்படும்
ஒன்று. "மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால்
வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில்
மனிதர்களால் வாழ முடியாது".
-
-------------------------------------
இரா.குருபிரசாத்
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Empty Re: “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை