உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Today at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Today at 2:13 pm

» மோக முள்
by Monumonu Today at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Today at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm

Admins Online

கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் !

கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் !

Post by krishnaamma on Thu Nov 15, 2018 9:09 am

First topic message reminder :

கூட்டு வகைகள் !

நம் தென்னிந்திய  சமையலில் கூட்டும்  ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை  


Last edited by krishnaamma on Tue Nov 20, 2018 12:54 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down


கீரை கூட்டு !

Post by krishnaamma on Thu Nov 15, 2018 11:01 am

கீரை கூட்டு ! 

கீரை கூட்டுசெய்ய  எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.

அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை  என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம். 

கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.

இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .

குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன் புன்னகை 


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:03 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானது இது :)

Post by krishnaamma on Thu Nov 15, 2018 11:24 am

பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானது இது புன்னகை 

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு 
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரைக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.

கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் மேலே சொன்ன கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி. 

ரசத்துடன் அல்லது துவையலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு:இது பிள்ளை பெற்றவர்களுக்கான குறிப்பு...இதில் தேங்காய் பால் சேர்க்கலாம், அது  வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம் 


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:04 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

மிளகு கூட்டு !

Post by krishnaamma on Thu Nov 15, 2018 11:30 am

அடுத்தது மிளகு  கூட்டு !


இதற்கு பீன்ஸ் மற்றும் புடலங்காய் ஏற்றது. 

தேவையானவை :

250 கிராம்  பின்ஸ் 
2 sp புளி பேஸ்ட் 
உப்பு
கொஞ்சம் எண்ணை
தாளிக்க கொஞ்சம் கடுகு + உளுத்தம் பருப்பு.
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி

மசாலாவுக்கு:
1 -2 ஸ்பூன் மிளகு
வாசனைக்கு 1 மிளகாய் வற்றல்
1 ஸ்பூன் தேங்காய் எண்ணை
2 ஸ்பூன் தனியா
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
கொஞ்சம் கறிவேப்பிலை 


செய்முறை:

எடுத்துக்கொண்ட காயை அலம்பி நறுக்கி குக்கரில் வேக வைக்கவும்.
வாணலி இல் துளி எண்ணை விட்டு மசாலக்கு கொடுத்துள்ளதை போட்டு வறுக்கவும்.
பிறகு புளி பேஸ்ட் போட்டு அரைத்து  வைத்துக்கொள்ளவும்.
மீண்டும் வாணலி இல் இன்னும் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த காய் மற்றும் பருப்பை அதில் கொட்டவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி போடவும்.
அது கொஞ்ச நேரம் கொதிக்கட்டும்.
நன்கு கிளறி, அது கொஞ்சம் கெட்டியானதும், தேங்காய் எண்ணை விட்டு கலக்கி இறக்கிவிடவும்.
கறிவேப்பிலை போடவும்.
அவ்வளவு தான் சுவையான மிளகு கூட்டு தயார்.
நிறைய நெய் விட்டு ,  சாதத்தில் போட்டு சாப்பிடவேண்டியது தான்

குறிப்பு: இதற்கு தொட்டுக்கொள்ள தயிர், அல்லது ஏதாவது தயிர் பச்சடி செய்யலாம். இல்லாவிட்டால் 'தளிர் வடாம்' கூட போறும். 


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:04 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Nov 15, 2018 11:43 am

கச்சல் வாழைக்காய் கூட்டு !

தேவையானவை:

கச்சல் வாழைக்காய் நான்கு 
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் மூன்று அல்லது நான்கு 
பெருங்காய பொடி கால் டீஸ்பூன் 
மஞ்சள் பொடி  கால் டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 


செய்முறை :


வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, பிஞ்சு வாழைக்காய் துண்டுகளை போடவும்.

அதில் மஞ்சள் பொடி போடவும்.

கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

மற்றும் ஒரு வாணலி இல், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் எண்ணெய் இல் வறுத்து , மட்டாக தண்ணீர் விட்டு அரைக்கவும்.

அரைத்த விழுதை, வாழைக்காய் இல் கொட்டவும்.

உப்பு போட்டு நன்கு கிளறவும்.

எல்லாமாக நன்கு சேர்ந்து வந்ததும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கவும். 

அருமையாக இருக்கும், வாழைக்காய்  கச்சல் , அதாவது பிஞ்சு என்பதால் வாயு தொல்லை இருக்காது...இதையும் பிரசவித்த தாய்மார்களுக்கு செய்து தரலாம் புன்னகை 


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:04 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

மலபார் அவியல் ! - தயிர் இல்லாத அவியல் !

Post by krishnaamma on Thu Nov 15, 2018 12:03 pm

மலபார் அவியல் !  - தயிர் இல்லாத அவியல் புன்னகை

தேவையானவை:

உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2 
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன் 
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது. 
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்தது ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும். 
'அவியல்' ரெடி.


குறிப்பு: பொதுவாக தனக்கு என்று தனி வாசனை இல்லாத காய்களை இதில் போடலாம்   சிலர்  கொத்தவரை கூட போடுவார்கள் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 15, 2018 12:28 pm

@krishnaamma wrote:கீரை கூட்டு ! 

கீரை கூட்டுசெய்ய  எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.

அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை  என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம். 

கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.

இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .

குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன் புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1285869
விருதுநகர், சாத்தூர், சிவகாசி பக்கம் இதே கீரை கூட்டை
அகத்தி கீரையில் செய்வார்கள். சிறிது கசப்பு சுவையுடன் இருப்பினும்
சுடு சோற்றில் சிறிது நெய் விட்டு பிசைந்து திண்ண ருசியாக இருக்கும்.
நான் அங்கு தான் என் பள்ளி பருவத்தை கழித்தேன்.
அப்போது வாரம் இருமுறை இதை செய்வார்கள். ரொம்பவும் சுலபம்.
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11672
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் !

Post by krishnaamma on Thu Nov 15, 2018 1:31 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:கீரை கூட்டு ! 

கீரை கூட்டுசெய்ய  எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.

அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை  என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம். 

கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.

இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .

குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன் புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1285869
விருதுநகர், சாத்தூர், சிவகாசி பக்கம் இதே கீரை கூட்டை
அகத்தி கீரையில் செய்வார்கள். சிறிது கசப்பு சுவையுடன் இருப்பினும்
சுடு சோற்றில் சிறிது நெய் விட்டு பிசைந்து திண்ண ருசியாக இருக்கும்.
நான் அங்கு தான் என் பள்ளி பருவத்தை கழித்தேன்.
அப்போது வாரம் இருமுறை இதை செய்வார்கள். ரொம்பவும் சுலபம்.
நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1285887


அகத்திக் கீரையை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிடலாம் ஐயா......அதனால் தான் இதை துவாதசிக் கீரை என்று சொல்வார்கள்.... எங்கள் வீடுகளில் துவாதசி அன்று அகத்திக் கீரை கறியமுதும், (பொரியலும் ) நெல்லிக்காய் பச்சடியும் செய்வார்கள். புன்னகை .........கண்டிப்பாக  அது உடலுக்கு மிகவும் நல்லது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை ஐயா... ஆனால் அடிக்கடி சாப்பிடக் கூடாது....புன்னகை 

இந்த லிங்க் ஐ பாருங்கள் புன்னகை

துவாதசிக் கீரை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

மோர் கூட்டு !

Post by krishnaamma on Thu Nov 15, 2018 1:54 pm

மோர் கூட்டு

இதுவும் கிட்ட தட்ட அவியல் போலவே இருக்கும். ஆனால் இதை ஒரே காய் போட்டுத்தான் செய்யவேண்டும். இதற்கு வாழைத்தண்டு, பூசணிக்காய் மிகவும் பொருத்தமாய் இருக்கும். சிலர் சௌ சௌ, சுரைக்காய்  மற்றும் முட்டை கோஸிலும் செய்வார்கள். 

தேவையானவை:


பூசணிக்காய் கால் கிலோ 
தயிர் – அரை லிட்டர் 
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி ஒரு சின்ன துண்டு 
உப்பு – 1 ஸ்பூன் 

தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு  ஒரு டீஸ்பூன் 
மஞ்சள் பொடி சிறிது 

செய்முறை:


பூசணிக்காயை தோல் சீவி, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது. 
தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, உப்பு போடவும்.
தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும். 
'மோர் கூட்டு ' ரெடி.
சூடு சாதத்தில் நெய் விட்டு இதைப்போட்டு சாப்பிடவும்.
பொரித்த அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஒருவேளை கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், அரிசி மாவு கொஞ்சம் எடுத்து கரைத்து கூட்டில் விடவும்.
கைவிடாமல் கலக்கவும், இல்லாவிட்டால் கூட்டு அடிபிடித்துவிடும்.
ஆனால், இதுபோல் செய்யாமல் இருப்பது நன்று. 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை