புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
10 Posts - 24%
Ammu Swarnalatha
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
1 Post - 2%
M. Priya
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
4 Posts - 4%
Rutu
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
3 Posts - 3%
Jenila
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
2 Posts - 2%
prajai
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
2 Posts - 2%
viyasan
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_m10  உலகின் பிரம்மாண்ட ஏரி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பிரம்மாண்ட ஏரி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 16, 2018 1:23 pm

  உலகின் பிரம்மாண்ட ஏரி! FREE_700
-


உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?,
உலகிலேயே மிகப் பழைய ஏரி எது?,
உலகிலேயே அதிக அளவு நன்னீர் கொண்ட ஏரி எது?

இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான். அது, ரஷ்யாவில்
உள்ள பைக்கால் ஏரி. நிலப்பரப்பில் உள்ள நன்னீரில்
20 சதவீதம் பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது!

ரஷ்யாவின் நல்ல தண்ணீரில் 90 சதவீதம் இந்த ஏரியிலிருந்தே
கிடைக்கிறது. ‘சைபீரியாவின் முத்து’ என்றும்
‘ஏரிகளின் அக்கா’ என்றும் இதை அழைக்கிறார்கள்.

பிறைபோல வளைந்திருக்கும் பைக்கால் ஏரியின் நீளம்
636 கி.மீ. அகலமோ 80 கி.மீ., ஆழமோ 1,620 மீட்டர். சுமார்
300 ஆறுகளிலிருந்து இந்த ஏரிக்குத் தண்ணீர் வந்து சேர்கிறது.
ஏரியில் 22 தீவுகளும் இருக்கின்றன.

2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பைக்கால் ஏரி உருவாகி
விட்டது. பழங்கால ஏரி என்பதால் இங்கே வசிக்கும்
உயிரினங்களுக்கும் குறைவில்லை. 1,085 நீர்வாழ் செடிகள்
இந்த ஏரியில் காணப்படுகின்றன.

1,550 நீர்வாழ் உயிரினங்கள் இங்கே வசிக்கின்றன.
முட்டையிடாமல், குட்டி போடும் 5 வகை மீன்கள்
இருக்கின்றன.

இங்கேயே உருவான 27 வகை கோபி மீன்களும் காணப்
படுகின்றன. ‘நெர்பா’ எனப்படும் நன்னீர் வாழ் சீல்,
பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது.

300 வகை பறவை இனங்கள் உள்ளன. பைக்காலில் வசிக்கும்
பாதி உயிரினங்கள் இங்கே மட்டும் வாழ்கின்றன.

ஏரியைச் சுற்றி மலைகளும் காடுகளும் இருப்பதால்,
ஏரிக்கு அருகில் இருக்கும் நிலத்திலும் ஏராளமான
உயிரினங்கள் வாழ்கின்றன. கரடிகள், மான்கள், பெரிய
கடமான்கள், காட்டு மான்கள் எனச் சொல்லிக்கொண்டே
போகலாம்.

ஒவ்வோர் ஏரியும் மேல் பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி
என்று மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். பைக்கால்
ஏரியின் அடிப்பகுதியில் வெப்ப நீரூற்றுகள் இருக்கின்றன.

இவை ஏரியின் நீரில் ஆக்ஸினை பரவச் செய்கின்றன.
அதனால் உயிரினங்கள் வாழ நல்ல சூழல் நிலவுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 16, 2018 1:24 pm


சைபீரியாவின் தென்பகுதியில் இருக்கும் பைக்கால் ஏரிப்
பகுதி, ஓராண்டில் 5 மாதங்கள் பனிக்கட்டியாகிவிடும்.

ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கே வெப்பநிலை 0 டிகிரி
செல்சியஸுக்கும் கீழே சென்றுவிடும். 1 மீட்டர் முதல்
2 மீட்டர் ஆழம்வரை உறைந்திருக்கும் இந்தப் பனிக்கட்டி
மீது கார், லாரிகூடப் போக முடியும்.

பகல் நேரத்தில் பனிக்கட்டி சூடாகும். இரவில் திரும்பவும்
உறைந்துவிடும். மோசமான வானிலை நிலவும்போது
பனிக்கட்டி விரிசல் விடும்.

காற்று அதிகம் வீசும்போது பனிக்கட்டிகள் உடைந்து
10, 12 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கும். உடைந்த
பனிக்கட்டிகள் மீது சூரிய வெளிச்சம் படும்போது மரகதக்
கற்களைப்போல ஜொலிக்கும்!

ஏரியின் கரைகளில் மைக்கா, மார்பிள் போன்ற கனிமங்களும்
அதிகம் கிடைக்கின்றன. அதனால் சுரங்கம், காகிதத்
தொழிற்சாலை, கப்பல் கட்டுமானம், மீன் தொழிற்சாலைகள்,
மரத் தொழிற்சாலைகள் போன்றவை இயங்கி வருகின்றன.

காகிதத் தொழிற்சாலையின் கழிவுகள் ஏரியில் கலந்து,
மாசுபடுத்தியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
தெரிவித்தார்கள். ஏரியைக் காப்பதற்காக 1971-ம் ஆண்டு
ஆலை மூடப்பட்டது.

தற்போது மீண்டும் தொழிற்சாலைகளும் அணு ஆலைகளும்
அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மிகப் பழங்காலத்துக்கு ஏரி என்பதால், உயிரினங்களின்
ஆராய்ச்சிக்குரிய இடமாக இருந்து வருகிறது பைக்கால்.
பளிங்கு போன்று சுத்தமான நீரைக் கொண்டுள்ள இந்த
ஏரியைப்போல ஓர் ஏரியை மனிதர்களால் உருவாக்கவே
முடியாது.

இயற்கை கொடுத்த இந்த அற்புதமான ஏரியைக் காப்பது
ஒன்றே மனிதர்கள் அந்த ஏரிக்குச் செய்யும் பேருதவி.
-
---------------------------------------------
எஸ்.சுஜாதா
தி இந்து - 14 Jun 2017

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 5:00 pm

Code:

தற்போது மீண்டும் தொழிற்சாலைகளும் அணு ஆலைகளும்
அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மிகப் பழங்காலத்துக்கு ஏரி என்பதால், உயிரினங்களின்
ஆராய்ச்சிக்குரிய இடமாக இருந்து வருகிறது பைக்கால்.
பளிங்கு போன்று சுத்தமான நீரைக் கொண்டுள்ள இந்த
ஏரியைப்போல ஓர் ஏரியை மனிதர்களால் உருவாக்கவே
முடியாது.

இயற்கை கொடுத்த இந்த அற்புதமான ஏரியைக் காப்பது
ஒன்றே மனிதர்கள் அந்த ஏரிக்குச் செய்யும் பேருதவி.
-

நிச்சமாக இந்த ஏரி காக்கப்பட வேண்டும். இதை மாசு படுத்த அனுமதிக்கக் கூடாது.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக