உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Mon Nov 12, 2018 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Mon Nov 12, 2018 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Mon Nov 12, 2018 10:30 pm

Admins Online

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 11:15 am

நாம் ஏற்கெனவே நன்கறிந்த ஒன்றை ‘நானும்’ இயக்கம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது: ‘அவதூறு என்பது அதிகாரம் மிக்கவர்களின் முதல் புகலிடம்’. பிரியா ரமணியின் மீது எம்.ஜே.அக்பர் கொடுத்திருக்கும் குற்றவியல் புகாரோ அல்லது விந்தா நந்தாவின் மீது அலக் நாத் கொடுத்திருக்கும் உரிமையியல் மற்றும் குற்றவியல் புகாரோ, பாலியல் தொல்லை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினைகள் என்னவாக இருக்கும் என்பதை அனுமானித்துவிட முடியும்: யார் குற்றம்சாட்டுகிறாரோ அவர் மீதே திருப்பிக் குற்றம்சாட்டும் வழிமுறைதான் குற்றவியல் அவதூறுச் சட்டம்.

கருத்துச் சுதந்திரத்துக்கும் நற்பெயருக்குக்கான உரிமைக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும் என்று சொல்வது வழக்கமானதுதான். தவறாகவும் அவதூறாகவும் அமைந்த வார்த்தைகளைப் பொதுவில் பேசுவதற்கு எந்தவொரு சட்ட அமைப்பும் அனுமதிக்காது. தண்டனைகளிலிருந்து விலக்கும் அளிக்காது. அவதூறுச் சட்டம் என்பது இரு தரப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் நடுநிலையாக நின்று தீர்வு சொல்வதற்கான ஒரு கருவி.

நன்றி
இந்து தமிழ்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 11:18 am

ஆனால், அவதூறுச் சட்டத்தின் அமைப்பும் வடிவமும் தரப்புக்கேற்றபடி சமநிலை தவறிவிடுகிறதா அல்லது நற்பெயரைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்தை மட்டும் காட்டுகிறதா, பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறதா என்பதையும் அடிக்கடி தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

காலனிய அடக்குமுறையின் எச்சம்

இந்தியாவின் குற்றவியல் அவதூறுச் சட்டம் சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான். காலனியத்தின் எச்சமாக இன்னும் தொடரும் அச்சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசியல் விமர்சனங்களை அடக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தங்கள் மீதான கடும் விமர்சனங்களையும் அவர்கள் விருப்பத்துக்கு மாறான கருத்துகளையும் அடக்குவதற்கான ஆயுதத்தை அளித்திருக்கிறது.

முதலாவதாக, மற்ற நாடுகளைப் போல இல்லாமல் இந்தியாவில் அவதூறு என்பது ஒரு குற்றச் செயல் (அது வெறும் உரிமைத் தீங்கு மட்டுமல்ல). அதற்கு அளிக்கப்படும் தண்டனை சமூகக் களங்கத்தோடு சிறைத் தண்டனையையும் உள்ளடக்கியது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 11:19 am

இரண்டாவதாக, அவதூறு வழக்கில் புகார் அளிப்பவர் தனது நற்பெயர் பாதிக்கப்படுகிறது என்று கூறுவதே சட்டபூர்வமான நடவடிக்கையைத் தொடங்க போதுமானது. எதிர்வாதங்களை விசாரணை தொடங்கிய பிறகுதான் முன்வைக்க முடியும். இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கும்? குற்றம்சாட்டப்பட்டவர் பல தடவை நீதிமன்றத்துக்கு இழுத்தடிக்கப்பட்டிருப்பார். நீதிமன்ற நடைமுறைகளே தண்டனையாக அமைந்துவிடும். மூன்றாவதாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கான எதிர்வாதங்களும்கூட அவரது கருத்துரிமைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கவில்லை. ஒரு உரிமையியல் அவதூறு வழக்கில் குற்றப் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கு எதிர்வாதி தன்னுடைய கருத்து உண்மையானது என்று நிரூபித்தாலே போதுமானது.

குற்றவியல் அவதூறு வழக்கிலோ, குற்றம்சாட்டப்பட்டவர் தனது கருத்து உண்மையானது என்பதோடு பொதுநல நோக்கத்தில் அது கூறப்பட்டது என்பதையும் நிரூபிக்க வேண்டும். நமது சட்ட அமைப்பில் உரிமையியல் அவதூறு நடைமுறைகளின் முடிவுகளைப் பொறுத்தவரையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அதிக அனுகூலங்கள் இருக்கும் நிலையிலும், கடுமையான குற்றவியல் நடைமுறைகள் முரண்பாடான சூழலுக்கே இட்டுச்செல்கிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 11:20 am

விசாரணையே தண்டனை

குற்றவியல் அவதூறுக் குற்றச்சாட்டுகள் அரசியல் சாசனத்தின்படி செல்லும் தன்மை கொண்டதா என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு 2016-ல் நடந்த வழக்கில் இந்த வாதங்களோடு மேலும் சில வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக, அப்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா அந்த வாதங்களைப் பெரிதும் பொருட்படுத்தாமல், “பிரிவு 499 அரசியல் சட்டத்தின்படி செல்லுபடியாகும், அந்த சட்டப் பிரிவு தனிநபர்களின் நற்பெயரைப் பாதுகாக்கிறது” என்று எளிதாக முடிவுசெய்துவிட்டார்.

ஒரு உரிமையியல் தீங்கைக் குற்றம் என்று தீர்மானிப்பதில் உள்ள இந்தச் சமநிலையற்ற தன்மையும் இந்தியக் குற்றவியல் அவதூறுச் சட்டத்தின் தெளிவில்லாத பல்வேறு நடைமுறைகளும் கருத்துரிமையை எப்படி வாட்டி வதைக்கின்றன என்பதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 11:21 am

கொந்தளிப்பின் தருணம்

அதிகாரத்தில் இருப்பவர்களாலும் பிரபலமானவர்களாலும் அடிக்கடி தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பெண்கள் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பாலியல் வேட்டையாகவும் தவறான நடத்தையாகவும் இருந்தபோதிலும் அதைச் சில நேரங்களில் ஒரு சட்டபூர்வமான குற்றமாக வரையறுக்க முடியாதவாறு, திட்டமிட்டவகையில் ஆண்கள் நடந்துகொள்வதை நாம் அனைவரும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்த இயக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.

பணியிடங்களில் உள்ள அதிகாரப் படிநிலைகள், வயது மற்றும் செல்வாக்கு நிலையில் உள்ள வேறுபாடுகள், தங்களது தொழில்களில் மிக உயர்ந்த இடங்களை வகிக்கும் ஆண்களால் கையாளப்படும் அதிகாரம், அந்த செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் - இத்தகைய பிரச்சினைகள் நீண்ட காலமாக அடக்கிவைக்கப்பட்டவை, அவற்றைப் பற்றி எளிதில் வாய் திறக்க முடியாது - கடைசியில்தான் பொதுவிவாதத்துக்கு வந்திருக்கின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 11:23 am

இது கொந்தளிப்பின் தருணம். மதிப்புக்குரியவர்கள் அறநெறிகளிலும் தார்மீக நெறிகளிலும் எப்படி வறண்டு கிடக்கிறார்கள் என்பது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. ‘நானும்’ இயக்கம் அமிழ்ந்து கிடந்த அனுபவங்களை மேலெழச் செய்திருக்கிறது, நடந்ததை எளிதில் வெளியே சொல்ல முடியாது என்று இவ்வளவு காலமாக எண்ணியிருந்தவர்களுக்கு அதைச் சொல்வதற்கான ஒரு புதிய வார்த்தையைத் தந்திருக்கிறது.

அவதூறுச் சட்டம் எனும் ஆயுதம்

குற்றவியல் அவதூறு வழக்கு தொடுப்பதற்கான நோக்கம், வெளிப்படையானது. கருத்துரிமையின் புதிய வடிவமான ‘நானும்’ இயக்கத்தை மௌனமாக்குவதற்காக அதிகாரத்தில் உள்ளவர்கள் அவதூறுச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதிக்கலாமா? அதிகாரத்தில் இருப்போருக்கு குற்றவியல் அவதூறுச் சட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாமா?

மிக அவசியமான ஒரு மக்கள் இயக்கம் அவதூறுச் சட்டத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. நமது நீதிமன்றங்களுக்கு அரியதொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. குற்றவியல் அவதூறுகள் அரசியல் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்பதை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றாலும்கூட, தனக்கு விருப்பமில்லாத கருத்துகளை அச்சுறுத்தி, தொல்லைப்படுத்தி, மௌனமாக்குவதற்கு அதிகாரத்தின் கருவியாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தும்வகையில் சட்டப் பிரிவு 499-க்கான நீதிமுறை பொருள்விளக்கங்களை அளிப்பதற்கான வழிகள் நிறையவே இருக்கின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை