உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
by T.N.Balasubramanian Today at 10:09 pm

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» புத்தாண்டு உறுதிமொழி
by ayyasamy ram Today at 6:49 pm

» புத்தகம் தேவை
by Saravana2945 Today at 6:47 pm

» சுற்றுலா பயணியருக்குத் தடை
by ayyasamy ram Today at 6:44 pm

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by ayyasamy ram Today at 6:17 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Today at 5:03 pm

» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
by ayyasamy ram Today at 2:45 pm

» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,
by ayyasamy ram Today at 9:06 am

» மனமே தினமும் உன் சிந்தனைக்கு
by ayyasamy ram Today at 8:59 am

» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am

» சினிமாவுக்கு முழுக்கு ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am

» ஒரு புத்தகத்தில் படித்தது...
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am

» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am

» ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am

» யார் வரப் போகிறீர்கள்! – கவிதை
by ayyasamy ram Today at 6:10 am

» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,
by ayyasamy ram Today at 6:08 am

» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்
by சக்தி18 Yesterday at 8:18 pm

» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்
by ManiThani Yesterday at 7:52 pm

» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm

» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm

» சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm

» கொத்தனார் சூடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm

» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Yesterday at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Yesterday at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Yesterday at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Yesterday at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Yesterday at 6:15 am

Admins Online

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:39 am

எனது வடநாட்டு  நண்பர் ஒருவரிடம், ஒரு விசித்திரமான பழக்கம். யாரைப் பார்த்தாலும் தனது கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார். தான் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பேச மாட்டார்.

மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா?  எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள்,டெல்லியில்  ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.

நன்றி
இந்து தமிழ்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:44 am

நாங்கள் கேட்காமலேயே, அன்று மாலை தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார் குமார். வீட்டை விட்டுக் கிளம்ப நேரமாகி விட்டதாம். மனைவி சேலை கட்ட தாமதமானது தான் காரணமாம். காரில் இவருடன் முன்பக்கம் அமர்ந்திருந்த அவர் மனைவி வழியெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தாராம். கரோல் பாக்கில் சிக்னலில் கார் காத்திருந்த பொழுது, இவர்கள் சண்டையைத் திறந்திருந்த காரின்  ஜன்னல் வழியே ஒரு  மோட்டார் சைக்கிள்காரர் முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து,  ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில்  கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:49 am

அப்பொழுது தான் அவர் கன்னத்தைக் கவனித்தோம். சிவந்து இருந்தது. அவர் மனைவி இது நடந்த பின்னும் இவர் மேல் பச்சாதாபப்படவில்லையாம். ‘நீங்கள் செய்யும் அட்டகாசங்களை அடக்க எங்க அண்ணன் இங்கு இல்லையே என்று நினைத்தேன். நியாயத்தைக் கேட்கக் கடவுளாகப் பார்த்து அந்த நல்லவரை அனுப்பி விட்டார்' என்றாராம்! எங்களுக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் இணக்கமான தம்பதிகள் தான். அன்பான இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. அன்று ஏதோ இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அவ்வளவு தான். ஆனால் வேறு யாரும் பார்க்காத, வேறும் யாருக்கும் தெரியாத அந்த விஷயத்தைப் பல பேர் முன்னிலையில் சொல்லித் தன்னைத் தானே கேலிப் பொருள் ஆக்கிக் கொண்டு விட்டார் அந்த இந்திக்கார குமார்.

சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:53 am

நடந்ததெல்லாம் நினைப்பது துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று... குமாரிடம் இருந்த கெட்ட பழக்கம் இது. தன் வியாபாரத்தில் இறக்கம் ஏற்பட்டாலும், பணம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டாலும் பார்த்தவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லிக் கொண்டு திரிவார்! அவர் இப்படிப் பினாத்துவது அவரது நலம் விரும்பும் நண்பர்களிடமோ, உதவ நினைக்கும் உறவினர்களிடமோ எனும் நிலையில் இருந்திருந்தாலாவது ஏதோ பலன் கிடைத்திருக்கும்.

ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால் அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.

சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும் 877வது குறளில் இதையே தான் சொல்கிறார்!
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 11:04 am

இது பற்றி சாணக்கியர் சொல்வதைப் பாருங்கள். ‘நாம் இழந்த செல்வம், நமது சொந்த வாழ்வு சோகங்கள், மனைவி நடத்தையில் சந்தேகம், நமக்கு நடந்த இழிவான செயல் ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ' என்பது அவர் அறிவுரை!

உண்மை தானே? உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதால் மனப்பளு குறையலாம். ஆனால் அதை ஆள் பார்த்து அல்லவா சொல்லணும். அத்துடன் சிலவற்றை யாரிடமும் சொல்லவே கூடாதல்லவா?

என் சொந்த பதிவு

நிச்சயமாக நம்முடைய குடும்ப
பிரச்சினையை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நம் தலை மறைந்த உடன் கிண்டல் பண்ணி
கேலி பேசுவார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by ஞானமுருகன் on Wed Nov 07, 2018 7:18 pm

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 250
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 7:39 pm


-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்

ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42387
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 8:28 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 8:29 pm

@ayyasamy ram wrote:
-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்

ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்
மேற்கோள் செய்த பதிவு: 1284774
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை