உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Today at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:54 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by சக்தி18 Today at 4:51 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Today at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Today at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Today at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Today at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Today at 6:15 am

» “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 5:49 am

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by ayyasamy ram Today at 5:45 am

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:42 am

» சொல்லிவிடு வெள்ளி நிலவே
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» ஏழு கழுதை வயசு ஆகுது… இன்னும் ! - வாட்ஸ் அப் பகிர்வு
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
by ராஜா Yesterday at 5:25 pm

» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:45 am

» பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 7:07 am

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:59 pm

» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:51 pm

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:44 pm

» பொங்கல் சிந்தனை
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:36 pm

» ஆபாசமான கிண்டலுக்குப் பதிலடி: சர்ச்சைக்கு ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:28 pm

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:25 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்
by ayyasamy ram Thu Jan 17, 2019 2:11 pm

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by ayyasamy ram Thu Jan 17, 2019 2:08 pm

» 'வாழ்க்கையை வீணாக்காதீர்கள். ..''
by ayyasamy ram Thu Jan 17, 2019 1:46 pm

Admins Online

கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:11 am



உலகம் பொருளாதாரத்தால் கட்டுண்டு இருக்கிறது. இதில் எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது. அப்படி தனித்து நிற்க ஆரம்பித்தால் அது அழிவை தானே தேடிக்கொள்கிறது என்றுதான் அர்த்தம். அப்படியொரு நிலையை நோக்கி அமெரிக்கா போகிறதோ என்ற சந்தேகம் அமெரிக்கர்களுக்கே எழத்தொடங்கியுள்ளது.

அமெரிக்கா சீனா மீதும், சீனா அமெரிக்கா மீதும் மாறி மாறி நடத்திக்கொண்டிருக்கும் வர்த்தகப் போர் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.
வர்த்தகப் போருக்கு என்ன காரணம் இதன் விளைவுகள் என்ன, இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன் இருநாடுகளின் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் வர்த்தகப் போர் ட்ரம்ப் வந்த பிறகு ஆரம்பித்தது அல்ல. கிளிண்டன் காலத்திலிருந்தே இருக்கிறது

நன்றி
இந்து தமிழ்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:13 am

அமெரிக்கா உலகின் தரமான பொருள்கள், தொழில்நுட்பங்களின் மையமாக இருப்பதால் சக்திவாய்ந்த நாடாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் இடத்தை சீனா விரைவில் பிடித்துவிடும் அளவுக்கு அசுர வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. சீனா இத்தகைய வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்த போதுதான் உலகமயமாக்கல் விஸ்வரூபம் எடுத்தது.

அப்போது சீனாவின் மிகப்பெரிய சந்தை உலக நாடுகளுக்குத் தேவையாக இருந்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது சீனா. அனைத்து நாடுகளுடனும் இணைந்து வர்த்தகம் செய்தது. ஆனால், சீனா சந்தையின் கட்டுப்பாட்டை பிறநாடுகளிடம் விட்டுவிடாமல் தன்பிடியில் வைத்திருந்தது. உலகின் மொத்த ஜிடிபியில் சீனா மட்டுமே 32 சதவீதம் பங்கு வகிக்கிறது.

இதற்கு சீனா செய்ததெல்லாம் ஒன்றுதான் உலகின் மிகத்தரமான பொருள்களையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டு அவற்றை தானே உற்பத்தி செய்து சந்தையில் இறக்கியது. அமெரிக்காதான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது. அமெரிக்க பொருள்கள் விலை உயர்ந்ததாக இருந்த நிலையில் சீனாவின் அச்சு மாறாத தயாரிப்புகள் விலை குறைவாக கிடைத்ததால் அமெரிக்க மக்களே சீனாவின் பொருள்களை வாங்கும் நிலை உருவானது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:14 am

அமெரிக்காவின் சாப்ட்வேர்கள் மட்டுமல்ல, ரோலக்ஸ் வாட்சிலிருந்து, நைக்கி ஷு, லூயிஸ் வுட்டன் பேக், ஆப்பிள் ஐபோன் வரை என அனைத்தும். இதனால் அமெரிக்காவுக்கு ஒவ்வொரு வருடமும் பல நூறு பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

இன்றும் உலகம் முழுவதும் அன்றாட பயன்பாடுகளில் உள்ள பொருள்களிலெல்லாம் சீனாவின் பெயர்தான். பொருளாதாரத்தில் எல்லா மட்டத்திலிருப்பவர்களுக்குமான பொருள்களை உற்பத்தி செய்ததால் எந்தவொரு நாடும் நிராகரிக்க முடியாத சந்தையாக சீனா மாறியது. உற்பத்தியில் மட்டுமல்ல சேவைத்துறையிலும் அமெரிக்காவுக்கு நிகராக சீனா மாறிவருகிறது.

சீனாவின் ஜிடிபி கடந்த பதினெட்டாண்டுகளில் பத்துமடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் அமெரிக்கா இதே காலகட்டத்தில் இரண்டு மடங்கு மட்டுமே வளர்ச்சிகண்டுள்ளது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை சந்தையை, வேலைவாய்ப்புகளை, லாபத்தை என அனைத்தையும் சீனா கபளீகரம் செய்துகொண்டது. இதுதான் அமெரிக்கா சீனா மீது வர்த்தகப் போர் தொடுக்க மூலகாரணம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:16 am

2000ல் கிளிண்டன் அதிபராக இருந்தபோதே சீனா அமெரிக்காவின் தயாரிப்புகளை, தொழில்நுட்பங்களைத் திருடுவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது சீனா சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்களித்தது. ஆனால், எதையும் செய்யவில்லை. கிளிண்டனும் அப்போது சீனப் பொருள்களின் மீது இறக்குமதி வரிகளை உயர்த்தினார்.

ஆனால் சீனாவை கிளிண்டனும், அதற்குப் பிறகு வந்தவர்களும் பெரிய அளவில் எதிர்க்கவில்லை. காரணம், சீனாவால் அமெரிக்க நிறுவனங்கள், தொழிலதிபர்கள், மக்கள் உட்பட அனைவரும் லாபமடைந்தனர். அதுவே அமெரிக்காவுக்குப் பெரிய பிரச்சினையாக மாறும் என்பதை அமெரிக்கா நினைத்து பார்க்கவில்லை.

ஆனால், சீனாவின் வளர்ச்சியை முன்வைத்து பல்வேறு அறிஞர்கள் ஆய்வின் மூலமும் புத்தகங்கள் மூலமும் பல்வேறு காலகட்டங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:18 am

2016 தேர்தலின்போது ட்ரம்புக்கு முன்னால் அமெரிக்கர்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கை சீனாவை குறித்ததாகவே இருந்தன. ட்ரம்ப் சீனாவிடம் இழந்ததையெல்லாம் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டுவர உறுதியளித்தார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்று முழங்கினார். எல்லா வகையிலும் சீனாவை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய நிலை ட்ரம்புக்கு ஏற்பட்டது.

விசா விவகாரத்தை கையில் எடுத்தார். ஆனால் அதிலும் பாதிப்பு அமெரிக்காவுக்குதான் இருந்தது. பின்னர், இறக்குமதிகளுக்கு வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும் வரி விதித்தது. இப்போதும் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான்.

அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் அதிகம் இறக்குமதி செய்கிறது. இதனால் பாதிப்பு சீனாவுக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டது அமெரிக்கர்கள். அமெரிக்காவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கவே முடியவில்லை. அப்படி குறைத்ததால் விலை உயர்வும், செலவும் அதிகமானது. சீனாவின் இறக்குமதி வரிகளால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 10:21 am

இந்த நிலையில்தான் சீனாவிடம் இல்லாத பெட்ரோலிய பொருள்கள் மீதான நெருக்கடியை உருவாக்க ட்ரம்ப் முடிவு செய்தார். சீனா அமெரிக்காவிடம்தான் கச்சா எண்ணெயை வாங்க வேண்டும் என்று கூறினார். ஆனால், சீனா மறுத்தது.

அமெரிக்கா அதன்பிறகுதான் ஈரான் மீது பொருளாதார தடையை அறிவித்தது. ஈரானிடம் யாரும் வர்த்தகம் செய்யக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் இதை இந்தியா உட்பட எந்த நாடும் கேட்பதாக இல்லை. சீனா உட்பட பல நாடுகள் ஈரானுடன் அமெரிக்க டாலருக்குப் பதிலாக அந்தந்த நாட்டின் செலாவணிகளிலேயே வர்த்தகம் செய்து கொள்ள தயாராகிவிட்டன.

இதுவரை அமெரிக்காவை எதிர்க்காத நாடுகள் எல்லாம் இப்போது ஏதோ ஒருவகையில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. கிளிண்டன் போல் சீனாவிடமிருந்து வாக்குறுதியை வாங்கிக்கொண்டு இந்த விவகாரத்தை விட்டுவிடக்கூடிய தலைவர் அல்ல, ட்ரம்ப். அவருக்கு அமெரிக்காவின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் முழு ஆர்வம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மேலடுக்கில் உள்ளவர்கள் அனைவரும் குறிப்பிடுவது போல் ‘அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து எதுவும் அவர் அறிந்திருக்கவில்லை’ என்பதுதான் உண்மை.

ட்ரம்பின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றவர்களும் இதற்கு ஒரு காரணம். அவர்களில் சிலர் உலகமயமாக்கலுக்கு ஆதரவானவர்கள், சிலர் சீனாவுக்கு எதிரானவர்கள். இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் ட்ரம்ப் முரண்பாடான முடிவுகளையே எடுக்க வேண்டியிருக்கிறது. ட்ரம்ப்பின் ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவை பாதிப்பதாகத்தான் மாறிக் கொண்டிருக்கின்றன. சீனா நாளுக்கு நாள் அசைக்க முடியாத சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 7:37 pm

வல்லவனுக்கு வல்லவன் ....
-
சீனா நாளுக்கு நாள் அசைக்க முடியாத சக்தியாக
மாறிக்கொண்டிருக்கிறது.
-
சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42357
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by சிவா on Wed Nov 07, 2018 7:48 pm

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா உலகின் வல்லரசாக மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை! காரணம் அங்கு நிலையான ஆட்சி.

இந்தியர்களைப் போல் அனைத்து திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடும் மக்கள் சீனாவில் இல்லை, அவ்வாறு யாராவது நினைத்தாலும் அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றி அடுத்து எதிர்க்க நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக சின அரசாங்கம் திகழ்கிறது.



அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 8:33 pm

@ayyasamy ram wrote:வல்லவனுக்கு வல்லவன் ....
-
சீனா நாளுக்கு நாள் அசைக்க முடியாத சக்தியாக
மாறிக்கொண்டிருக்கிறது.
-
சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1284773
சீனா அமெரிக்காவுக்கு சிம்மசொப்பமாகி விட்டது உண்மை
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 8:35 pm

@சிவா wrote:அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா உலகின் வல்லரசாக மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை! காரணம் அங்கு நிலையான ஆட்சி.

இந்தியர்களைப் போல் அனைத்து திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடும் மக்கள் சீனாவில் இல்லை, அவ்வாறு யாராவது நினைத்தாலும் அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றி அடுத்து எதிர்க்க நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக சின அரசாங்கம் திகழ்கிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1284776
நூறு சதவீதம் உண்மை தலைவா
சீனா அடுத்த வல்லரசாகி அமெரிக்காக்கு தலைவலி கொடுக்கும்.

நன்றி சிவா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11317
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2450

View user profile

Back to top Go down

Re: கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை