உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 5:18 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Today at 5:13 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Today at 5:05 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Today at 4:22 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 4:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:02 pm

» செய்திகள்
by சிவனாசான் Today at 3:21 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Today at 3:10 pm

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by சிவனாசான் Today at 2:59 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Today at 2:21 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Today at 2:18 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Today at 1:43 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 1:41 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by kuloththungan Today at 1:38 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Today at 9:46 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Today at 2:14 am

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by krishnaamma Yesterday at 11:39 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:17 pm

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Yesterday at 11:15 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by krishnaamma Yesterday at 11:13 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Yesterday at 11:01 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Yesterday at 10:51 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Yesterday at 10:47 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Yesterday at 10:43 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Yesterday at 10:43 pm

» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை
by krishnaamma Yesterday at 10:42 pm

» வாக்களித்த பிரபலங்கள்
by krishnaamma Yesterday at 10:41 pm

» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்
by krishnaamma Yesterday at 10:39 pm

» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி?
by krishnaamma Yesterday at 10:37 pm

» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!
by krishnaamma Yesterday at 10:35 pm

» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் !
by krishnaamma Yesterday at 10:32 pm

» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சினிமா சித்தர் மாயவநாதன்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தொப்பையை குறைக்க என்ன வழி?!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» கையில் கடிகாரம் எதற்கு?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» How to Get Rich and Retire Early - ஆங்கில புத்தகம் வேண்டும்..
by ManiThani Wed Apr 17, 2019 9:33 pm

» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:30 pm

» இசைக்குயிலுக்கு பாராட்டுவிழா!
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:24 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by கண்ணன் Wed Apr 17, 2019 5:23 pm

» மகாவீரர் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Apr 17, 2019 1:34 pm

» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Apr 17, 2019 12:39 pm

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Wed Apr 17, 2019 12:26 pm

» கோடையைச் சமாளிக்க..
by ayyasamy ram Wed Apr 17, 2019 9:38 am

» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி
by ayyasamy ram Wed Apr 17, 2019 9:34 am

» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Wed Apr 17, 2019 9:31 am

Admins Online

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Sat Nov 03, 2018 10:35 pm

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை; சிறிது நேரம் ஒதுக்கி அவசியம் படிக்க வேண்டும். 

காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள்.

' என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.

" உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க..."

" சரி. அதுக்கென்ன இப்போ ?"

" அவங்க தங்க ரூம் வேண்டாமா..அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க ! இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க ."

வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.

சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது.

நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன்.

எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.

இன்றுவரை தன்ரூம் என்ற உரிமையுடன்
இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்...

அதுவும் உறவினர் , நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடிதான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா ? தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள் ! நினைக் கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.

" என்ன பதில் இல்ல...உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப் பேசறேன்."

' ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா ' என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது.

" சரி வைதேகி ! நீயே கேட்டுடு " என்றேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

" அத்தை !" குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

நாளைக் காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா.. நீங்க காலிபண்ணிக் கொடுத்தால்தானே அவங்க இங்க தங்க முடியும் ! தயவு செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப் பாருங்க " என்று கூறி விட்டுத் திரும்பினாள்.

அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன் .

அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது!
பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள் ! இதுவரை ஸ்வாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.

அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன்.

என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டாள். அவள் கைகள் நடுங்கின.

" உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா ! இங்கேயே இருந்துக்கோ. " மேலுக்குச் சொல்லி பெருமூச்
சொன்றை விட்டேன்.

" அது கூடாதுடா ராகவா ! சின்னஞ்சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்கமுடியாது...
எனக்கென்ன..நான் ஒண்டிக்கட்டை !
ஹாலுக்குத்தானே போகப்போறேன்.
வீட்டைவிட்டு இல்லையே !"

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Sat Nov 03, 2018 10:36 pm

அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.

" ராகவா ! நீ குழந்தையா இருந்தபோது
இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்துகொண்டுவந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார்... எத்தனை தடவைகள்....அதெல்லாம் மறக்க முடியுமா....கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

சட்டென என்னை நோக்கித் திரும்பிய அம்மா , " டேய் ராகவா ! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.
நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் " என் கையைப் பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு.

" சரிம்மா ! நீ படுத்துத் தூங்கு !" இன்னும்கொஞ்சநேரம் அங்கு தங்கினால் நான்
ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து, என் அறைக்குத் திரும்பினேன்.

என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவமுடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து
நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறிவிடுவோம்.

அடிக்கடி பாத்ரூம் போக எழுந்துகொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக்கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பர். இது
அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே !

நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித் தின்றது.

''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள்; ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.

ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.

அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.
வைதேகி என்னருகில் வந்து நின்றாள்.

" என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?"

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

" பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்...ம்..என்ன செய்றது ! " என்றவள் , " ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா ?"

' என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன்.

தொடரும் ....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Sat Nov 03, 2018 10:37 pm

" கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது ! "

சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகி.

அம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக் கேட்டாளா?

அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா?  அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா ''நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக்  கூட காப்பாத்த முடியலையோ? 

அவளை அழைத்து ''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை; 

இது என்னுடைய கையாலாகதத் தனமோ? நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா?தற்போது சற்று சிந்திப்போம்????

பெற்றோரை பேணுவதை பற்றி இந்த மகாளய பட்சத்தில் புண்ணியம் வேண்டி மூதாதையரை  நினைவு கூரும் நாம் சிறிது சிந்திக்க வேண்டும்.

மற்றவர்கள் எல்லோரும் பெற்றவர்களுக்கு நிகராக முடியாது. பெற்றவர்கள் மட்டும் தான் இறைவனுக்கு அடுத்து என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையக்கூடிய எல்லா பதவிகளையும் விட மகிழ்ச்சியும், பெருமையும் வாய்ந்தது பெற்றோர் என்ற பதவியே. பிள்ளையைக் கருவுற்ற காலத்திலிருந்து கடைசிக் காலம் வரைக் காப்பாற்றும் பெற்றோர்களை இந்தியாவில் எங்கும் காண முடியும்.

இன்று நமக்கு காதலர் தினம் நினைவிருக்கிறது. அன்னையர் தினம் மறந்து விடுகிறது. வாழ்க்கையில் திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன் கடந்த காலத்தை மறக்கிறோம்; பெற்றவர்களை புறக்கணிக்கிறோம். எதற்காக வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி தெரியாமல் இயந்திரங்களுடன் இயந்திரத்தனமாய் வாழ்கிறோம். காலத்தின் கட்டாயத்தால் பெற்றவர்களை பிரிய வேண்டி சூழ்நிலையோ அல்லது ஒதுக்க வேண்டி நிலையோ உருவாகும் போது அவர்கள் உணர்வுகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதில் நமக்கு அக்கறையும் இல்லை.

பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.
ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா? இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ????நன்றி whatsup !

Last edited by krishnaamma on Sat Nov 03, 2018 10:50 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Sat Nov 03, 2018 10:46 pm

இதை படித்ததும் எனக்கு மிகவும் கோபம்தான் வந்தது...... கோபம் கோபம் கோபம்....எதற்கு என்று விளக்குகிறேன்....
.
.
.
முதலில் ஒரு கல்யாணம் என்றால் அதை பேச ஆரம்பிக்கும்போதே கல்யாணம் ஆனதும் அவர்கள் எங்கே இருக்க வேண்டும் என்று பேச மாட்டார்களா? அல்லது மகன் இத்தனை பெரியவனாகும் வரை எங்கு தங்கி இருந்தான்??? அம்மா அப்பாவுடன் தானா?...அப்போ இதை ப்பற்றித்தானே  கல்யாணத்திற்கு முன்னமேயே பேசி இருக்க வேண்டும்?????
.
.
.
சரி, அவர்களுக்கு தான் அறிவில்லை என்றால்,பெண்ணை பெற்றவர்கள் இந்தக்காலத்தில் எத்தனை எத்தனை கேள்விகள் கேட்கிறார்கள்.... அவங்க கேட்டிருக்க மாட்டார்களா???? தேனிலவுக்கு போய் வரும் வரை பேசாமல் இருப்பார்களா என்ன?????
.
.
.
சரி எல்லாவற்றுக்கும் மேலே ஒரு கேள்வி.... " அது என்ன ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல , எப்பவும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகவேண்டியது வீட்டுப்பெரியவர்கள் தானா?????" 
.
.
.
நான் இந்த கதைக்கு ஒரு முடிவு நினைத்து வைத்துள்ளேன்...அதை தனியாக போடுகிறேன் ...படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே! புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Sat Nov 03, 2018 11:00 pm

தன் அம்மாவிடம் ஹாலை உபயோகித்துக்கொள்ள சொல்கிறான் மகன்...

அதற்குப் பிறகு தான் என் கதை துவங்குகிறது......புன்னகை
அந்த பேச்சைக் கேட்டதும் முகம் கோணியது அம்மாவுக்கு...கண்கள் கலங்கின, ஏதும் பேசத்தோன்றாமல் தவித்தாள்...அடிபட்டது போல உணர்ந்தாள் ... பிள்ளையை ஏறிட்டுப் பார்க்கவும் கூசினாள்.

பிறகு சற்று சுதாதரித்துக் கொண்டு, சட்டென மகனை  நோக்கித் திரும்பிய அம்மா , " டேய் ராகவா ! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா....நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் " என்று  கையைப் பிடித்து கெஞ்சினாள். 

மறுநாள் காலையிலேயே வந்திருக்க வேண்டிய புது மணத்தம்பதிகள் மணி பத்தாகியும் வரக்காணும்....இங்கு, மகன்  ராகவனுக்கும்  அவன் மனைவிக்கும் என்ன எது என்று புரியவில்லை....ஆனால் அம்மா திடமாகத்தான் இருந்தாள்...தன் அறையிலேயே உட்கார்ந்திருந்தாள் ..அவளும் புதுமண தம்பதியரின் வரவுக்காக காத்திருந்தாள்.

காலை முதலே மாமியார் வெளியே வரவில்லை என்கிற எரிச்சல் ஒருபக்கம், மகனையும் மருமகளையும் காணவில்லை என்கிற எரிச்சல் மறுபக்கம் என்று ஒரு நிலையில் இல்லாமல் இருந்தாள் வைதேகி.

அவர்கள் இருவரின் செல்போனும் switched  off  என்று வந்தது வேறு கவலை அளித்தது. ராகவனுக்கு கவலைதான் என்றாலும் அம்மா மட்டும் எப்பொழுதும் போல் இருந்தாள். இப்படியாக மணி பதினொன்றைத்தொடும்போது வாசலில் கார் சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்தாள் வைதேகி.

மகன் மருமகள் மட்டும் இல்லாமல் சம்பந்திகளும் வந்திருந்ததர்கள். ஒன்றும் புரியாமல் எல்லோரையும் வரவேற்றாள், புது மணத் தம்பதிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.

உள்ளே வந்ததும் வராததுமாக அவர்கள் அம்மாவை அவளின் அறைக்கு சென்று சந்தித்து ஆசி பெற்றனர். சம்பந்திகளும்  அன்பாக அவளின் கால் தொட்டு வணங்கி எழுந்தனர். மாப்பிள்ளையைப் பற்றி மிக பெருமையாக பேசினார் அவன் மாமனார். இதை எல்லாம் பார்த்த வைதேகிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

பிள்ளையைத் தனியே அழைத்து ,அவனிடம் கடு கடுத்தாள்...." என்னடா இது வந்தததும் வராததுமாக அங்க பாட்டி இடம் போவானேன்... போய் பெருமாளிடம் விளக்கேற்ற சொல்லு உன் பெண்டாட்டியை... வாழப்போகும் இடம் நல்லா இருக்கணும்" என்று...சொல்லிக் கொண்டே இருக்கும்போது மருமகள் உமா அவர்களை நோக்கி வந்தாள்.

முகத்தை சகஜமாக்கிக் கொண்டு அவளிடம், " உமா பயணம் எல்லாம் நல்லா இருந்ததா?...நீ வாழப்போகும் இடம், முதலில் ஸ்வாமிக்கு விளக்கு ஏத்து...எல்லோரும் சாப்பிடவேண்டும்.... என்ன இத்தனை நேரம் செய்துவிட்டிர்கள்????... வண்டி லேட்டா?"...என்று கேட்டாள்.

உமா சிரித்துக்கொண்டே, " வண்டி லேட் எல்லாம் இல்ல...சரியான நேரத்துக்கு வந்துவிட்டோம், நேரே அம்மாவீட்டுக்கு போய்விட்டோம், நல்ல நேரம் முடியும் முன் நாங்க வாழப்போகும் வீட்டில் விளக்கு ஏத்தணும் என்று அம்மா சொன்னா, அது தான் அங்கே போய் விளக்கு ஏத்திவிட்டு , பிறகு இங்கு வந்தோம்" என்றாள். 

தலை இல் இடி விழுந்தது போல் இருந்தது வைதேகிக்கு... பத்ரகாளி போல் ஆனாள்...."என்னடி சொல்கிறாய்????..வருவதற்குள் என் மகனை கை இல் போட்டுக்கொண்டாயா?...ரகு, என்னடா சொல்கிறாள் இவள்?." என்று கத்தினாள் .

அவள் கத்தலைக் கேட்டு ஹாலில் இருந்த அனைவரும் ஓடி வந்தனர்... "என்ன ஆச்சுனு?...ஏன் இப்படி கத்துகிறாய் வைதேகி?...அதுவும் புதுப்பெண்ணைப் பார்த்து? " என்று கேட்டான் ராகவன். 

"இவள் சொல்வதை கேளுங்கள், அப்புறம் நீங்களும் இப்படித்தான் சத்தம் போடுவீர்கள்" என்று கொஞ்சமும் கோபம் குறையாமல் சொன்னாள்.

ராகவன் உடனே, " என்ன நடக்கிறது இங்கு என்று எனக்கு யாராவது சொல்லுங்கள்" என்று அவர்களை பார்த்தான். சம்பந்திகள் விழித்தார்கள், ஏதோ சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களை சைகை  மூலமே பேசாமல் இருக்கும்படி சொன்ன ரகு, 

இந்த சல சலப்புக்கெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாதது போல பேச ஆரம்பித்தான்.

" அம்மா, டோன்ட் கிரியேட் ஸீன்...சரியா, ஏதோ இவ தான் புருஷனை கை இல் போட்டுக்கொண்டது போல பேசற????...நீ என்ன செய்யற அப்பாவை???? உன்மாமியாரை, அதுதான் என் பாட்டியை என்ன மதிக்கிறாய் நீ?....நாங்க தங்குவதற்காக, பாவம் பாட்டியை வெளியே இருக்க சொல்கிறாய் நீ... என்றாவது மதித்து இருக்கிறாயா நீ அவங்களை?... பாவம் பாட்டி, வாயில்லா    பூச்சி..... நீ பாட்டிக்கு செய்த அநியாயங்களை  பார்த்து பார்த்து வளர்ந்தவன் நான்...  அதனால் தான் மனசு கொதித்துப் போய் என் கல்யாணத்துக்கு பிறகாவது உனக்கு புத்தி சொல்லணும் என்று நினைத்திருந்தேன்.... 

சரியான வாய்ப்பு கிடைத்தது எனக்கு, ஆமாம் உமா ஒரே பெண் என்றதும் நீ ரொம்ப சந்தோஷப்  பட்டாய்....எனக்கும் ஒரு விதத்தில் சந்தோஷமாய் இருந்தது, அவளிடம் பேசிப்பார்த்தபொழுது, அவள் தான் கல்யாணம் ஆகி வந்துவிட்டால் தன் அப்பா அம்மாவை தனியே விடவேண்டும் என்று மிகவும் வருத்தப் பட்டாள்...

எப்படி ஒரு சிந்தனை?....கல்யாணம் ஆகி வந்தாலும் அம்மா அப்பாவைப் பேணவேண்டும் என் நினைக்கும் இவள் எங்கே, நாங்கள் வருவதற்குள்ளேயே பாட்டியை வெளியே துரத்தும் நீ எங்கே???? யோசித்தேன், கல்யாண பேச்செடுத்ததுமே நீ இப்படித்தான் செய்வாய், அப்பா எப்பொழுதும் போல உன்முடிவையே கொஞ்சமும் மனதில் ஈரம் இல்லாமல் செயல்படுத்துவார் என்று எனக்குத் தெரியும், அதனால் தான் நாங்கள் நாலுபேரும் இருக்கும் படி பெரிய வீடுஒன்றை பார்த்து பிக்ஸ் செய்துவிட்டேன்... மாமனார் மாமியார் இதுபற்றி உங்களிடம் பேசினால், நான் இந்த கல்யாணம் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்றும் சொன்னேன்...அவர்கள் வாயே திறக்கவில்லை....பாட்டி தான் பாவம், அக்யானம், "ராகவன் அப்படியெல்லாம் என்னை விட்டு விடமாட்டன்டா " என்று சொன்னா.... நாங்கள் பாட்டியையும் கூட்டிப்போவதாக சொன்னோம், குறைந்த பக்ஷம் தன் கடைசி காலத்திலாவது அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று...ஆனால் பாட்டி ஒத்துக்கவில்லை, "எங்காத்துக்காரர் கட்டின வீட்டிலேயே தான் நான் சாகும் வரை இருப்பேன்" என்று சொல்லிவிட்டா....அதனால் தான் நாங்க மட்டும் போகிறோம்...

இங்கு வந்ததே என்னுடைய சாமான்களை எடுத்துக் போகத்தான் ....உங்களுக்கு எங்களை பார்க்கவேண்டுமானால் அங்கு வாருங்கள், நாங்களும் வந்து போவோம்" என்று சொல்லி தன் பேச்சை நிறுத்தினான்...

வைதேகி மற்றும் ராகவனுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.... ராகவனுக்கு அம்மா நேற்று இரவு ஏன் முகத்தை சுருக்கினாள் என்று இப்போது புரிந்தது...

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by ஞானமுருகன் on Sun Nov 04, 2018 12:06 am

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... 3838410834
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Sun Nov 04, 2018 12:12 am

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1284213

கூடாது   கூடாது கூடாது எது அருமை என்று சரியா சொல்லணும் புன்னகை.......@ஞானமுருகன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by ஞானமுருகன் on Sun Nov 04, 2018 1:18 am

New post by ஞானமுருகன் Today at 6:12 pm
உண்மையில் உங்கள் முடிவு கதைக்கு உயிர் கிடைத்தது. ஆனால்
எனது கருத்து இரண்டும் முடிவுவும் ஏற்று கொள்ள மறுக்கிறது.
அறை இல் லை என்பதற்காக பெற்றவர்களை விட்டு வெளியேறி விடுவது எந்த விதத்தில் நியாயம். இவர்களுக்கு பிறப்பவர்கள் எப்படி பட்டவர் களாக இருப்பார்கள்.
எதுவும் சில காலமே என்று அடுத்த தலைமுறை க்கு வழியிட்டு பாட்டி பெறுமித்த்துடன் வெளியேறக் இருக்க வேண்டும்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Mon Nov 05, 2018 9:49 am

@ஞானமுருகன் wrote:New post by ஞானமுருகன் Today at 6:12 pm
உண்மையில் உங்கள் முடிவு கதைக்கு உயிர் கிடைத்தது. ஆனால்
எனது கருத்து இரண்டும் முடிவுவும் ஏற்று கொள்ள மறுக்கிறது.
அறை இல் லை என்பதற்காக பெற்றவர்களை விட்டு வெளியேறி விடுவது எந்த விதத்தில் நியாயம். இவர்களுக்கு பிறப்பவர்கள் எப்படி பட்டவர் களாக இருப்பார்கள்.
எதுவும் சில காலமே என்று அடுத்த தலைமுறை க்கு வழியிட்டு பாட்டி பெறுமித்த்துடன் வெளியேறக் இருக்க வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1284251

@ஞானமுருகன்
இல்லை இல்லை முருகன்......அறை இல்லை என்பதற்காக அவன் வெளியேறவில்லை, பாட்டியை காப்பதற்காக வெளியேறினான்........வயதானவர்கள் சிரமப்படக்கூடாது என்று நினைத்தான்....நீங்கள் சொல்வது போல வயதான பாட்டி வெளியேறி எங்கு இருப்பாள்??? .....இதில் பெருமிதம் என்ன வேண்டி இருக்கிறது?????.....சொல்லுங்கள்....???? பெரியவர்களை பாதுகாக்காத அடுத்த தலைமுறை இருந்தென்ன இல்லாமல் போனால்தான் என்ன???

அவன் தன் தாயின் மோசமான சுயநலத்தையும், தந்தை இந்த கையாலாகாத தனத்தையும் சுட்டிக்காட்ட விரும்பினான்....ரகுமட்டும் பெற்றவர்களை காக்கவேண்டும் ராகவனுக்கு அந்த ரூல் கிடையாதா??? என்ன அநியாயம்   இது?......நீங்களே சொல்லுங்கள் ?????புன்னகை

தன் பிள்ளையின் குணம் தெரிந்த தாத்தா, தன் மனைவி பெயரில் வீட்டை எழுதி வைத்துவிட்டு போனார்...இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது போல இரக்கமற்று அந்த வைதேகியும் பாட்டியை ரூம் ஐவிட்டு   இல்ல .....வீட்டைவிட்டே  துரத்தி இருப்பாள்.... ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by ஞானமுருகன் on Mon Nov 05, 2018 4:55 pm

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... 1f603

பேரன் வெளியேறியதால் பாட்டி சந்தோச பட்டு இருந்தால் அவர்கள் இழந்தது எல்லாமே. தந்தையும் அம்மாவும் பேசி கொள்ளும் அலைவரிசை பாட்டியும் பேரனும் பேசி கொள்வது போல வராது. பிள்ளைகள் அவர்களுக்காக வாழுமாட்டார்கள் என்று எல்லா தாய்க்கும் தெரிந்து இருக்கும். பிள்ளைகள் அம்மாவையும் கவனிக்க வேண்டும் அவர்கள் பெற்ற பிள்ளைகளையும் கவனிக்க வேண்டும். தனக்கென சுயநலமாக சிந்திக்க சூழ்நிலையில் எவரும் இருந்திருக்க முடியாது. அந்த காலகட்டத்தை கடந்தவர் அனைவர்க்கும் இது தெரிந்து இருக்க வாய்ப்புகள் அதிகம்.

மேலும் புதிதாக திருமணம் ஆனா பேரனும் அவன் பெற்ற பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி கொடுக்க வேண்டிய கடமை மற்றும் அவனை பெற்றவர்கள் கவனித்து கொள்ளும் கடமையும் உள்ளது. இதை உணராமல் யாருக்கு பாடம் புகட்டி என்ன பயன்?

நீங்கள் எல்லோரும் கூட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இருக்காது. நாங்கள் சூழ்நிலை காரணமாக பிரிந்து உள்ளோம். எங்களுக்கு அதனுடைய வேதனை நன்றாக தெரியும்.

என் பெற்றோர் எங்களை நன்றாக வளர்த்தார்கள், நங்கள் எங்களுக்கு பிறந்தவர்களை நன்றாக வளர்க்க வேண்டும். எங்களை பெற்றவர்கள் எங்களிடம் எதையும் எதிர் பார்க்க முடியாது. நங்கள் எங்களுக்கு பிறந்தவர்களிடம் இருந்து எதையும் எதிர் பார்க்க கூடாது. இது உலக நியதி. இது ஒரு சக்கரம் நான் என் பெற்றோருக்கு செய்தவை அனைத்தும் என் பிள்ளைகள் எனக்கு செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அது நல்லவையாக இருந்தாலும் கெட்டவையாக இருந்தாலும். நமக்கு பிடிப்பது எல்லாமே நல்லவை.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by ஞானமுருகன் on Mon Nov 05, 2018 5:06 pm

பேரன் கூடவே இருந்து இருந்தால் பாட்டியின் அநீதியதி தட்டி கேட்டு இருப்பான். இப்பொழுது கேட்க கூட ஆள் இருக்க மாட்டார்கள். மகன் பிரிந்த கவலையில் பாட்டிக்கு சாப்பாடாவது நேரத்துக்கு கிடைத்து இருக்குமா ?
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by krishnaamma on Tue Nov 06, 2018 12:41 am

@ஞானமுருகன் wrote: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... 1f603

பேரன் வெளியேறியதால் பாட்டி சந்தோச பட்டு இருந்தால் அவர்கள் இழந்தது எல்லாமே. தந்தையும் அம்மாவும் பேசி கொள்ளும் அலைவரிசை பாட்டியும் பேரனும் பேசி கொள்வது போல வராது. பிள்ளைகள் அவர்களுக்காக வாழுமாட்டார்கள்  என்று எல்லா தாய்க்கும் தெரிந்து இருக்கும். பிள்ளைகள் அம்மாவையும் கவனிக்க வேண்டும் அவர்கள் பெற்ற பிள்ளைகளையும் கவனிக்க வேண்டும். தனக்கென சுயநலமாக சிந்திக்க சூழ்நிலையில் எவரும் இருந்திருக்க முடியாது. அந்த காலகட்டத்தை கடந்தவர் அனைவர்க்கும் இது தெரிந்து இருக்க வாய்ப்புகள் அதிகம்.

மேலும் புதிதாக திருமணம் ஆனா பேரனும் அவன் பெற்ற பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி கொடுக்க வேண்டிய கடமை மற்றும் அவனை பெற்றவர்கள் கவனித்து கொள்ளும் கடமையும் உள்ளது. இதை உணராமல் யாருக்கு பாடம் புகட்டி என்ன பயன்?

நீங்கள் எல்லோரும் கூட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இருக்காது. நாங்கள் சூழ்நிலை காரணமாக பிரிந்து உள்ளோம். எங்களுக்கு அதனுடைய வேதனை நன்றாக தெரியும்.

என் பெற்றோர் எங்களை நன்றாக வளர்த்தார்கள், நங்கள் எங்களுக்கு பிறந்தவர்களை நன்றாக வளர்க்க வேண்டும். எங்களை பெற்றவர்கள் எங்களிடம் எதையும் எதிர் பார்க்க முடியாது. நங்கள் எங்களுக்கு பிறந்தவர்களிடம் இருந்து எதையும் எதிர் பார்க்க கூடாது. இது உலக நியதி. இது ஒரு சக்கரம் நான் என் பெற்றோருக்கு செய்தவை அனைத்தும் என் பிள்ளைகள் எனக்கு செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அது நல்லவையாக இருந்தாலும் கெட்டவையாக இருந்தாலும். நமக்கு பிடிப்பது எல்லாமே நல்லவை.
மேற்கோள் செய்த பதிவு: 1284484

நல்ல பதில் புன்னகை.... நான் கொஞ்சம் யோசித்து பதில் போடுகிறேன் முருகன்.... சரியா?.....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 06, 2018 2:15 pm

@krishnaamma wrote:"

தற்போது சற்று சிந்திப்போம்????

பெற்றோரை பேணுவதை பற்றி இந்த மகாளய பட்சத்தில் புண்ணியம் வேண்டி மூதாதையரை  நினைவு கூரும் நாம் சிறிது சிந்திக்க வேண்டும்.

மற்றவர்கள் எல்லோரும் பெற்றவர்களுக்கு நிகராக முடியாது. பெற்றவர்கள் மட்டும் தான் இறைவனுக்கு அடுத்து என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையக்கூடிய எல்லா பதவிகளையும் விட மகிழ்ச்சியும், பெருமையும் வாய்ந்தது பெற்றோர் என்ற பதவியே. பிள்ளையைக் கருவுற்ற காலத்திலிருந்து கடைசிக் காலம் வரைக் காப்பாற்றும் பெற்றோர்களை இந்தியாவில் எங்கும் காண முடியும்.

இன்று நமக்கு காதலர் தினம் நினைவிருக்கிறது. அன்னையர் தினம் மறந்து விடுகிறது. வாழ்க்கையில் திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன் கடந்த காலத்தை மறக்கிறோம்; பெற்றவர்களை புறக்கணிக்கிறோம். எதற்காக வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி தெரியாமல் இயந்திரங்களுடன் இயந்திரத்தனமாய் வாழ்கிறோம். காலத்தின் கட்டாயத்தால் பெற்றவர்களை பிரிய வேண்டி சூழ்நிலையோ அல்லது ஒதுக்க வேண்டி நிலையோ உருவாகும் போது அவர்கள் உணர்வுகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதில் நமக்கு அக்கறையும் இல்லை.

பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.
ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா? இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ????நன்றி whatsup !
மேற்கோள் செய்த பதிவு: 1284190
அப்பா மற்றும் அம்மா இவர்கள் இன்றி நாமில்லை. இதை நிச்சயம் ஒவ்வொரு
நபரும் உணர வேண்டும்.
அவர்களின் கடைசி காலத்தில் தான் நாம்
நிச்சயம் நிறைய சிரத்தையுடன்
கவனித்து கொள்ள வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by ayyasamy ram on Thu Nov 08, 2018 10:55 am

அன்புத் தங்கை கிருஷ்ணம்மா....
-
உங்கள் கதை திருத்தம் படித்தபோது-

அந்த காலத்தில் அநுத்தமா மற்றும் லட்சுமி
சிறுகதைகளை படித்த உணர்வு ஏற்பட்டது
-
ஆனால் யதார்த்தம் என்பது வேறு!
-
முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன்
அவர்கள் தனது தமக்கையை ஹோமில்தான்

Paid Home
சேர்த்தார்....இத்தனைக்கும் அந்த தமக்கையின்
வாரிசுகள் நல்ல நிலையில் வெளிநாட்டில்
வசித்தனர்...!!
-
லண்டனில் வசிக்கும் டாக்டரின் தந்தை
இங்கு கிராமத்தில் தனிமரமாக வசித்து வந்தார்.
கிராமத்தில் நாலைந்து வீடுகள் மற்றும்
நிலபுலங்கள் இருந்தன....
-
அந்த சொத்துக்கள் தனக்கு தேவை இல்லை
என்றும் தன்னால் அவரை அடிக்கடி பார்க்க
வர இயலாது என்றும் மகன் கூறிவிட்டான்!
-
அவர் இப்போது மனம் வெறுத்து முதியோர்
இல்லத்தில் வசிக்கிறார்...
Paid Home
-
இதுவும் யதார்த்தமே...!!
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்கள் மற்றும்
கடைசியாக ஒரு மகன்....
-
பெண்களை நன்கு படிக்க வைத்தார்...திருமணம்
செய்து கொடுத்தார்...
-
அவருக்கு இப்போது 83 வயது
ஒரே வீட்டில் கீழ்தளத்தில் அவரும் அவரது மனைவியும்
வசிக்கின்றனர்
-
மாடியில் மகனும்.மருமளும் வசிக்கின்றனர்
-
தனித்தனி சமையல்...!!

இதுவும் யதார்த்ததம்தான்!!
-
----------------------------------

காலத்திற்கேற்ற படி மாறிக்கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம்...!!
-
மேலும் இப்போதைய ஜோசியர்களே ‘சேர்ந்து
வாழாதீர்கள்...அதனால் ஜாதகப்படி சிக்கல்கள்
வரலாம்” என்றும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து
விட்டார்கள்...!!!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 44246
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது.... Empty Re: உணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை