உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

யானையோ யான - by என். சொக்கன்

யானையோ யான - by என். சொக்கன் Empty யானையோ யான - by என். சொக்கன்

Post by ayyasamy ram on Mon Oct 29, 2018 1:49 pm



’இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா?’ என்றாள் பாணி,
’வம்பதாம் களபம்’ என்றேன், ‘பூசும்’ என்றாள்.
‘மாதங்கம்’ என்றேன், ‘யாம் வாழ்ந்தேம்’ என்றாள்.

’பம்பு சீர் வேழம்’ என்றேன். ‘தின்னும்’ என்றாள்.
‘பகடு’ என்றேன், ‘உழும்’ என்றாள், பழனம் தன்னை
‘கம்ப மா’ என்றேன், ‘நல் களியாம்’ என்றாள்.
‘கைம்மா’ என்றேன், சும்மா கலங்கினாளே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: வீரராகவ முதலியார்
-
-----------------------------------------

முன்கதை

ஒரு பாணன். அவனுடைய குடும்பம் வறுமையில்
வாடுகிறது.

அந்த ஊரில் இராமன் என்ற பணக்காரன் இருந்தான்.
அவனைச் சந்தித்துப் பாடிப் பரிசு பெற்று வரலாம்
என்று இந்தப் பாணனுக்கு ஆசை.

பாணனின் பாட்டு இராமனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
மகிழ்ச்சியாக அவனுக்கு ஒரு யானையைப் பரிசளித்தான்.

அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம்,
யானையை வைத்துக்கொண்டு என்ன செய்யும்?
தலையைச் சொறிந்தபடி வீடு திரும்புகிறான் பாணன்.
அங்கே…

உரை

மனைவி (பாணி):
‘இராமன் என்கிற வள்ளலின் புகழ் பூமியெங்கும்
வானமெங்கும் பரந்திருப்பதாகச் சொல்வார்கள்,
அப்படிப்பட்ட இராமனைச் சந்தித்துப் பாடச் சென்றாயே,
அங்கே என்ன நடந்தது? என்ன பரிசு பெற்றுவந்தாய்?
எங்களூக்கு என்ன கொண்டுவந்தாய்?

பாணன்: வம்பதாம் களபம் (கயிறு அணிந்த யானை)

பாணி: ஓ, வாசனை உடைய சந்தனத்தைப் பெற்றுக்
கொண்டுவந்தாயா? நல்லது, அதை நீயே பூசிக்கொள்!

பாணன்: சந்தனம் இல்லை, மாதங்கம் (யானை)

பாணி: ஓ, மா தங்கம், உயர்ந்த தங்கத்தைப் பரிசாகப்
பெற்றுவந்தாயா? இனி நம் துன்பம் தீர்ந்தது, நாம்
மகிழ்ச்சியாக வாழலாம்

பாணன்: தங்கம் இல்லை, பம்பு சீர் வேழம்
(நிறையப் புகழ் உடைய யானை)

பாணி: ஓ, செழிப்பான கரும்புதான் பரிசாகக் கிடைத்ததா?
சரி, அதைக் கொண்டு வா, முறித்துச் சாப்பிடலாம்

பாணன்: கரும்பு இல்லை, பகடு (யானை)

பாணி: ஓ, வள்ளல் உனக்கு எருமைக்கடாவைக்
கொடுத்தாரோ? பரவாயில்லை, நம் வயலை உழுவதற்கு
அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

பாணன்: எருமை இல்லை, கம்ப மா (அசைகின்ற யானை)

பாணி: ஓ, கம்ப மா, கம்பினால் செய்யப்பட்ட மாவு
பரிசாகக் கிடைத்ததோ? கொண்டு வா, அதை வைத்து
நல்ல களி கிண்டித் தின்னலாம்

பாணன்: கம்பு மாவு இல்லை, கைம்மா
(கையை உடைய விலங்கு)

பாணி: அடடா, யானையா? அதை வைத்துக்கொண்டு
நாம் என்ன செய்வது? (கலங்கி நிற்கிறாள்)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யானையோ யான - by என். சொக்கன் Empty Re: யானையோ யான - by என். சொக்கன்

Post by ayyasamy ram on Mon Oct 29, 2018 1:51 pm



துக்கடா

அத்தனை அவலத்திலும் கணவனும் மனைவியும்
சிலேடையாக வார்த்தை விளையாட்டு நடத்துகிறார்கள்.

கணவன் மாறி மாறி யானைக்கான வெவ்வேறு சொற்களை
அடுக்குகிறான், மனைவி அதை நம்ப விரும்பவில்லை,
வேண்டுமென்றே அதே வார்த்தைகளுக்கான வேறு
பொருள்களைச் சொல்லிச் சமாளிக்கிறாள்,

கடைசியில் உண்மை நிலை அறிந்து இருவரும் வேதனையில்
மூழ்குகிறார்கள்

அடுத்து என்ன நடந்திருக்கும்?
பாணனின் யானையை யாராவது விலைக்கு வாங்கிக்
கொண்டிருப்பார்களோ?

குறைந்தபட்சம், இந்த அருமையான பாட்டுக்காகவாவது
இன்னொரு வள்ளல் அவனுக்கு ஓர் உருப்படியான பரிசு
கொடுத்து ஆதரித்திருக்கவேண்டும்!

இந்தப் பாடலைப் பாடிய கவிஞர் கண் பார்வை இல்லாதவர்,
’அந்தகக்கவி’ என்று அழைக்கப்படுகிறவர்

-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை