புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10 
30 Posts - 50%
heezulia
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10 
72 Posts - 57%
heezulia
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 05, 2012 11:23 pm

(RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு ஆசிரியர் அளித்த பேட்டி)

பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா!

தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது 200 அல்லது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக்க பிரபலம் அடைந்திருப்பது உண்மைதான்.

கேள்வி: இது பற்றிக் கூறும்போது இது நரகாசுரனைக் கிருஷ்னண் கொன்ற நாள் என்றும் அதையே மக்களும் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்களே! இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

கேள்வி: ஆனால் புராணம் இப்படித்தான் சொல்கிறது என்கிறார்களே?

பதில்: விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுவது உண்மைதான். ஆனால் அங்கே கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய (விஷ்ணுபுராணம் லிப்கோ பதிப்பு: பக்கம் 401) அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது என்கிற குறிப்பும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர். அவருக்கு பிறந்தவன் எப்படி அசுரனாவான்? அகலிகையை தொட்டுக் கெட்ட இந்திரனைப் போல இவனும் ஒரு கெட்ட தேவனாகலாமே ஒழிய இவன் அசுரன் ஆவது எப்படி? புராணக் கூற்றில் இதுவே முரண்பாடு.

அதற்கப்புறம் மகனைத் தந்தை கொன்றதும் அவ்வளவு சரியானதாகக் கூற முடியாது. அப்படியே கெட்டதொரு மகனைத் தம் கையாலேயே கொன்ற நீதிமிக்கத் தந்தைதான் திருமால் என்றாலும் கொல்லலாம்! ஆனால் இதைப் பூமியில் உள்ளவர்கள் கொண்டாடுங்கள் என்றா ஒரு தந்தைக் கூறுவார்? கொல்வது வேறு; அதைக் கொண்டாடுவது வேறல்லவா?

எனவே நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணுபுராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாமல் யாரோ வடநாட்டினர் கட்டிவிட்ட புரளி என்பதே உண்மை.

ஏனென்றால் வடஇந்தியாவில்தான் இன்று கூட இராவணலீலா என்று இராவணனை எரித்து அவன் மரணம் கொண்டாடப்படுகிறது. இது முற்றிலும் வட இந்திய வழக்கம். தமிழரிடம் இந்த அநாகரிகம் எப்போதுமே படிந்ததில்லை.

(தொடரும்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Fri Jul 06, 2012 10:20 am

நல்ல விளக்கம் ... தொடருங்கள் சாமி !!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 07, 2012 8:41 pm

கேள்வி: ஐயா! விஷ்ணு புராணத்தில் உள்ளதாகத் தாங்கள் கூறியவை உண்மைதான். வானொலியில் கூட ஒரு புராண நாடகம் ஒலிபரப்பினோம். அதில் நரகாசுரனின் தாயான பூமித்தாய் தனக்கும் திருமாலுக்கும் பிறந்த மகனின் சாவுக்கு திருமாலே காரணமாகிவிட்டது பற்றிப் புலம்புதாகவும், தன் மகனின் குறைகளைப் பொறுத்து மன்னிக்க வேண்டும் என்றும், அவன் சாவை யாரும் கொண்டாடுவது கூடாது என்றும் புலம்பி வேண்டிக் கொண்டதாக வரும். ஆக ஐயா சொன்னது சரிதான்! அப்படியானால் தீபாவளிப் பண்டிகையின் பொருள்தான் என்ன?

பதில்: தீபாவளி என்ற சொல் வடசொல். ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று. இதை அடிக்கடி வாரியார் சுவாமிகள் கூட கூறுவார். தீபாவளியின் பொருட்டு எடுத்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூட அவர் இப்படித்தான் கூறினார் என்பது நோக்கத்தக்கது. அவர் தீபாவளி என்றால் அது நரகாசுரனின் சாவைக் கொண்டாடுவது என்று ஒரு முறைகூட தப்பித்தவறிக்கூட அவர் சொல்லிக் கேட்டதில்லை. சமய உலகில் வாரியார் வாக்கிற்கு தனி ஒரு மதிப்பு உண்டல்லவா? ஆக தீபாவளி என்பது நரகாசுரன் வதத்துடன் தொடர்புடையது அல்ல என்று ஆதாரத்துடன் ஆன்றோர் வாக்குடனும் காணத் தெளிவாகியது.

கேள்வி: அப்படியானால் இந்தப் பண்டிகையின் பொருள்தான் என்ன? விஷ்ணுபுராணம் இதைக் கூறவில்லை என்றால் சிவபுராணங்கள் இதைப்பற்றி ஏதாவது கூறுகின்றனவா?

பதில்: சரியாகக் கேட்டீர்கள்! இது முழுக்க முழுக்க கௌரி நோன்போடு தொடர்புடையது. கௌரி நோன்பு நவராத்திரியோடு தொடர்புடையது. நவராத்திரி புரட்டாசி அமாவாசையிலிருந்து தொடங்கும். அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி கொலு கொண்டாடப்படும்.

கொலுவில் பலவிதமான பொம்மைகள் வைத்துக் கொண்டாடுவார்கள். அது எதைக் குறித்தது என்றால் அம்பிகையாகிய சிற்சக்தி சிவப்பரம்பொருளிலிருந்து பிரிந்து வந்து இந்த உலகில் பல்வேறு வடிவங்களில் உயிரினங்களைப் படைப்பதைக் குறித்தது. அந்தப் படைப்பை ஒன்பது சக்திகளாக அதாவது
மனோன்மணி,
சர்வ பூதமணி,
பலப்ரதமணி,
பலவிரகரணி,
கலவிகரணி,
காளி,
ரௌத்திரி,
சேட்டை,
வாமை

என்கிற ஒன்பது சக்திகளாகப் பிரிந்து ஐம்பெரும்பூதங்களையும், சூரியனையும், சந்திரனையும், உயிர்களின் உடல்களையும் படைக்கிறாள், அதனால்தான் இதை ஒன்பது ராத்திரிகளில் வைத்துக் கொண்டாடினார்கள்.

இதன்பின் அம்பிகை சிவப்பரம்பொருளிடம் இருந்து பிரிந்த நிலை மாறி சிவப்பரம்பொருளிடம் சென்று சேருகிறாள். அதாவது மீண்டும் சிவபரம்பொருளை அடைய நவராத்திரி ஒன்பதாம் நாள் தொட்டு 21 நாட்கள் தவமிருந்து நோற்று மெல்ல மெல்ல சிவபரம்பொருளை அடைகிறாள். இதையே கேதார கௌரி விரதம் என்றார்கள். ஆகவேதான் வருடாவருடம் நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆகிய ஆயுத பூசை நாளிலிருந்து 21 ஆம் நாளில் கேதார கௌரி நோன்பும் அதையொட்டி தீபாவளியும் வரும்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 16, 2012 3:53 pm

சிவயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் சி என்கிற எழுத்து சிவபெருமானைக் குறித்த எழுத்து. என்கிற எழுத்து அம்பிகையாகிய சத்தியைக் குறித்த எழுத்து. உயிர்கள் உள்பட உலகம் அனைத்தும் பிரளய காலத்தில் சிவனிடம் அடங்கி நிற்கும். அந்த நிலையைக் காட்டும் ஐந்தெழுத்தில் சி என்பது மட்டும் ஏனைய எல்லா எழுத்துக்களையும் உள்ளடக்கி தனியே நிற்கும். இதை நாயோட்டும் மந்திரம் என்பார் திருமூலர். அதாவது நாய் அருகே வந்தால் நாம் சீ! என்று துரத்துகிறோம் அல்லவா? அப்படி ஒரு குறியீடு செய்து அதை நாயோட்டும் மந்திரம் என்பார் திருமூலர். அது ஏனையவற்றை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்பதால் அதனை எழுத்தை அழுத்தும் எழுத்து என்றும் கூறுவர்.

பிரளய காலத்தில் ஏற்படும் லய நிலையில் அதாவது முற்றொடுக்க நிலையில் என்ற எழுத்தாகிய சத்தி எழுத்தும் சி என்ற எழுத்தில் அடங்குவதை அம்பிகை இடப்பாகம் பெற்றாள் என்று சங்கேத மொழியில் கூறினர் ஆன்றோர்.

இறைவன் இந்த உலகை விரிக்க முதலில் சத்தியை தன்னிலிருந்து பிரித்து வெளியாக்குகின்றான். அந்த சத்தி ஒன்பது சத்தியாய் பிரிந்து இந்த உலகைப் படைக்கிறாள். படைப்பின் நோக்கம் முடிந்ததும் சத்தி மீண்டும் சிவத்தில் ஒடுங்கி விடுகிறாள். அதாவது உலக உற்பத்தியில் சிவ என்று ஆகும் ஐந்தெழுத்து உலக ஒடுக்கத்தில் சி என்று ஒடுங்கி விடுகிறது.

இந்த உண்மையைப் புறநானூறு கூட கூறுகிறது. பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பது புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து வரிகள். அதில் பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று என்பது சிவ என்னும் ஐந்தெழுத்தைக் கூறுவது. அவ்வுரு தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும் என்பது சி என்னும் ஐந்தேழுத்தைக் குறித்தது.

ஆக உலகமெல்லாம் ஒடுங்கும் லய நிலையில் பிரளயத்தில் என்ன ஆகிறது தெரியுமா?அரைப்பக்குவத்தில் அல்லது முக்கால் பக்குவத்தில் உள்ள உயிர்களை இறைவன் தூசுத் தட்டி அப்படியே தன் திருவடியில் சேர்த்து முடிந்த முத்தியைக் கொடுத்து விடுவான். அவர்களுக்குத்தான் பிரளயாகலர் என்று பெயர். பிரளய காலத்தில் இரு மலங்களின் கட்டுக்களில் இருந்து நீக்கப்படுபவர்கள் என்பது அதன் பொருள். அவர்கள் ஏற்கனவே மாயா மலக்கட்டுகளிலிருந்து நீங்கியவர்களாக பக்குவம் ஏறி இருப்பார்கள்.

ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று.

இறந்த முன்னோர்களில் பலர் இறை ஒளியில் கூடுவதைக் கொண்டாடுவது சிறப்புதானே! இதுதான் தீபாவளிக் கொண்டாட்டம் ஆயிற்று. அதனால்தான் கேதார கௌரி விரதத்தின் மறுநாள் அல்லது சில வருடத்தில் அதே நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதாவது உலகை விரித்த சத்தி முற்றிலுமாக சிவத்தில் ஒடுங்கிய பின் தீபம் ஏற்றி முன்னோர்கள் பெற்றிருக்கக்கூடிய முத்தி கொண்டாடப்படுகிறது.

கேள்வி: ஐயா! இது வரை யாரும் தெரிவிக்காத புதிய செய்தி மிக்க மகிழ்ச்சி ஐயா! அப்படியானால் பட்டாசு வெடிப்பது எதைக் குறிக்கிறது?
(தொடரும்)


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 16, 2012 4:24 pm

விஷ்ணு புராணத்திலும் , தேவி பாகவதத்திலும் சொல்லியது தவறு. தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல இந்த தெய்வமுரசு ஆசிரியருக்கு எப்படி தெரிந்தது. அநியாயம்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Jul 16, 2012 7:13 pm

எங்கள் வீட்டில் கௌரி நோன்பு கொண்டாடுவோம்! கொலு வைப்போம்!!
ஆனால் இப்போதுதான் பொருள் புரிந்து கொண்டேன்!!!
நன்றி நன்றி சாமி !!! நன்றி

தொடர்ந்து எழுதுங்கள் !!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 27, 2012 7:53 am

கேள்வி: ஐயா! இது வரை யாரும் தெரிவிக்காத புதிய செய்தி மிக்க மகிழ்ச்சி ஐயா! அப்படியானால் பட்டாசு வெடிப்பது எதைக் குறிக்கிறது?

பதில்: உயிர்களை கடும் பற்றாகப்பற்றிய ஆணவம் சிதைந்து உயிர் முத்தியொளி பெற்றதைக் குறிக்கவே பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.

கேள்வி: நல்ல கருத்து ஐயா! புத்தாடை புனைவதன் கருத்து என்ன?

பதில்: சத்தி இடப்பாகம் பெற்று சிவத்தில் ஒடுங்கியது சத்தியும் சிவமும் இரண்டறக் கலந்ததைக் குறிக்கும். இதை சிவ-சத்தி திருமணம் என்பர். திருமணம் என்றால் புத்தாடை புனைவது இயல்புதானே?
(தொடரும்)


ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 6:57 pm

முற்றிலும் எதிர்பார்க்காத புராணக்கதை... ராசா சார் கேட்பதுப்போல் இதற்க்கு தகுந்த ஆதாரம் இல்லையோ?

எது எப்போடியோ பட்டாசு வெடிப்பதால் கொசுத் தொல்லை கொஞ்சம் தீருது, இத காரணமா வைச்சு பட்டாடையும் பட்சணமும் கிடைக்குதே புன்னகை

இங்க ஹைதராபாதில் தமிழர்களை விட ஒரு சில ஜெய்பூர் காரர்கள் தீவாளி ஒரே அலப்பறைதான் புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 27, 2012 8:45 pm

ஞானமூர்த்தி wrote:முற்றிலும் எதிர்பார்க்காத புராணக்கதை... ராசா சார் கேட்பதுப்போல் இதற்க்கு தகுந்த ஆதாரம் இல்லையோ?

வணக்கம் நண்பா!
முற்றிலும் எதிர்பார்க்காத புராணக்கதை...என்று சொல்லியிருப்பது எதை?
சற்று விளக்கவும்.
நன்றி !

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 12, 2012 10:50 pm

கேள்வி: இதையொட்டி கங்கா ஸ்நானம் என்கிறார்களே அது பற்றியும் தங்கள் கருத்து என்ன?
பதில்: கங்கையில் மூழ்குவது பிதிர்கள் ஆகிய முன்னோர்க்கு செய்யும் கடன் என்பது இன்றும் கண்கூடு. என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி கங்கா ஸ்நானம் என்றார்கள். அது மட்டுமல்ல இதற்கு அடிப்படையாக ஆரம்பிக்கும் புரட்டாசி அமாவாசையை மகா பிரளய அமாவாசை என்று மேற்கூறிய பின்னணியில் சொன்னார்கள். அது மருவி மாளய அமாவாசை என்று ஆயிற்று. இவை எல்லாம் நமது முன்னோர்களுடன் தீபாவளிக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும். இதுவன்றி நரகாசுரன் வதத்தைக் கொண்டாடுவது என்பது எள்ளளவும் பொருத்தம் இல்லாதது. நம் முன்னோர்கள் முத்தி பெற்றார்கள் என்பதையே தீபாவளியில் இனிப்புகள் உண்டு கொண்டாடுகிறோம்.

கேள்வி: மிக அற்புதமான கருத்துக்களைச் சொன்னீர்கள் ஐயா! இது எங்கள் மலேசியத் தமிழ்ச் சமுதாயம் அனைத்திற்குமே லமிக்க பயனாய் இருக்கும். இன்னும் இது பற்றி எனக்கு வேறு கேள்விகள் இல்லை. ஆனால் இது பற்றி மேலும் விளக்கங்கள் இருக்குமானால் அதைக் கூறலாம்.
பதில்: இந்த தீபாவளிப் பண்டிகை தமிழர்களால் முதலில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்டது. அதுவே கார்த்திகை தீபம் என்று இன்றும் நின்று நிலவுகிறது. பின்னர் அது ஐப்பசி மாதத்திற்கு முன் தள்ளப்பட்டது. காரணம் முன்னொரு காலத்தில் தமிழ் வருடம் என்பது சித்திரையில் தொடங்காமல் ஆவணியில் தொடங்குவதாக வைத்துக் கொண்டிருந்தனர் தமிழர். அதாவது சூரியனின் ஆட்சி இடமான சிம்ம ராசியில் சூரியன் புகும் மாதமான ஆவணியிலிருந்து முன்பு வருடம் தொடங்குவதாக அமைத்துக் கொண்டனர் தமிழர். பின்னர் வானியல் அறிவு வளர வளர சூரியன் உச்சம் பெரும் மேச ராசியில் சூரியன் புகும் சித்திரை மாதத்திலிருந்து வருடம் தொடங்குவதாக மாற்றிக் கொண்டார்கள். முதலில் ஆவணியில் வருடம் தொடங்கிய போது அதற்கேற்ப தீபாவளியைக் கார்த்திகை மாதத்தில் அமைத்து கார்த்திகை தீபம் என்று கொண்டாடினர். ஆனால் ஆவணி மாதத்திலிருந்து சித்திரை மாதத்திற்கு வருடத்தொடக்கம் முன் தள்ளப்பட்ட காரணத்தால் ஒரு மாதம் முன்னதாக தீபாவளியை ஐப்பசி மாதத்தில் வைத்தனர் தமிழர்.

ஆனால் அந்த பழைய வழக்கமான கார்த்திகை தீபத்தையும் விட மனது வராத காரணத்தாலும் அது அண்ணாமலையில் இறைவன் அருட்பெருஞ்சோதியாக வானளாவ எழுந்து நின்ற பொருத்தம் கருதியும் அந்த தீப வரிசையும் தொடர்ந்தது.

ஊர் இரண்டுபட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல இரண்டு தீப வரிசைகள் வழக்கில் வந்தவுடன் வட இந்தியர்கள் இதில் புகுந்து கொண்டார்கள். கார்த்திகை தீபத்தில் தெற்கே வீடுகளிலெல்லாம் வரிசை வரிசையாக தீபம் ஏற்றிக் கொண்டாடுப்படுவது கண்ணுக்கும் கருத்திற்கும் இனிமையான காட்சியாக இருப்பதால் அதைத் தழுவிக் கொண்டு தங்களுக்கு கார்த்திகை வேண்டாம்; அதை தமிழருக்கு விட்டுவிடுவோம்; அதேபோல் ஐப்பசியில் தாம் வைத்துக்கொள்வோம் என்று தழுவிக் கொண்டனர். அதற்கு என்ன காரணம் என்று காட்ட இயலாதவர்கள் நரகாசுர வதம் என்ற தம் அநாகரிகக் கற்பனையை அதில் புகுத்திக் கூறினார்கள். அதுமட்டுமல்ல; தமிழ் நெறியில் தமிழ் அகத்துறையில் திருமணம் பெண் வீட்டில் நடப்பதுதான் மரபு. இங்கே கேதார கௌரி விரதம் என்பது சிவ-சத்தி திருமணம் என்று முன்னர் காரண காரியத்துடன் விளக்கிச் சொன்னோம் இல்லையா? எனவே இத்திருமண நாளன்று மாப்பிள்ளை பெண் வீட்டில் வருகை புரிவதும் வழக்காகி தீபாவளியன்று மாப்பிள்ளைக்கு மவுசு உண்டாயிற்று.

பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: அட தீபாவளியில் மாப்பிள்ளைக்கு மவுசு உண்டான வரலாற்றுக்கு காரணம் இதுதானா? நல்ல பல கருத்துக்களை நாங்கள் இதுவரை கேளாமல் இருந்த செய்திகளை பொருந்தியவாறு எடுத்துக் கூறியதற்கு என்றென்றும் ஐயாவிற்கு நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக