புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
57 Posts - 45%
heezulia
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
5 Posts - 4%
prajai
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
2 Posts - 2%
jairam
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
2 Posts - 2%
kargan86
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
97 Posts - 52%
ayyasamy ram
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
57 Posts - 31%
mohamed nizamudeen
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
9 Posts - 5%
prajai
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
7 Posts - 4%
Jenila
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
4 Posts - 2%
Baarushree
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
3 Posts - 2%
Rutu
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
3 Posts - 2%
jairam
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இசையில் இறைவன்! Poll_c10இசையில் இறைவன்! Poll_m10இசையில் இறைவன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையில் இறைவன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 26 Oct 2018 - 20:40

இசையில் இறைவன்! Tamil_News_large_1581564
-
இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த மானிடர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் கூட இசைக்கு பணிவதை காண்கிறோம். வேய்ங்குழல் இசைக்கு பசுக்கூட்டமும், மகுடியின் இசைக்கு நாகமும் மயங்குவதை பார்க்கிறோம்.

சர்க்கஸ் கூடாரங்களில் தாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு யானை, குதிரை, குரங்கு போன்ற விலங்குகளும் ஆடுவதை பார்க்கிறோம். எனவே இசை என்பது அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து இழுக்கக்கூடிய காந்த சக்தியாக திகழ்கிறது.
பாரம்பரிய இசை :

நமது நாட்டில் மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரங்களுக்கு ஏற்றவாறு இசைக் கருவிகளை இசைத்துப்பாடுகிறார்கள். ஆனால் இந்த இசைகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருப்பது நமது நாட்டின் பாரம்பரிய இசையான கர்நாடக சங்கீதம்.

எந்த பாடலைப் பாடினாலும் அதற்கு மூல காரணமாக விளங்குகிறது. ராகம், தாளம், சுருதி, குரல்வளம், இவை நான்கும் சரிவர அமையாமல் இசைக்கப்படும் பாடலை எவருமே ரசிக்க முடியாது. இசையை ரசிப்பதற்கு இசை ஞானம் தேவையில்லை. நல்ல பாடலைக் கேட்கும் போது இசை ஞானமே இல்லாத பாமர மனிதன் கூடத் தலையை ஆட்டித் தாளம் போட்டு ரசிப்பதை காண்கிறோம்.

ஆனால் இவருடைய ரசிப்பு ஆழமற்ற, தற்காலிக ரசிப்பாகும். ஒருவர் ஒரு பாடலை ஆழ்ந்து ஞானத்துடன் ரசிப்பதற்கும் பயணம் செய்கின்ற போது, பேருந்தில் ஒலிக்கின்ற பாடலை கேட்டு விட்டும் படியிறங்கிச் செல்வதற்கும் வேறுபாடு உண்டல்லவா.
இசையில் தகவல்கள் :

இப்படிப்பட்ட இசையானது மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் பங்கு பெறுகிறது. அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட இசையை ரசிக்கிறது. குழந்தையை தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் போது தாய் தாலாட்டுப் பாடல் பாடுகிறார்.

அந்தப் பாடலைக் கேட்டு குழந்தை அழுவதை நிறுத்தி விட்டு அயர்ந்து உறங்குகிறது. அந்த தாய் கர்நாடக இசையை முறைப்படி பயின்று வந்தா பாடுகிறாள்? அவள் பாடிய அந்த தாலாட்டுப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது என்பது கூடத் தெரியாது. இந்த இடத்திலிருந்து தான் மானிடப் பிறவிக்கும் இசைக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

தொட்டில் குழந்தையை தாலாட்டும் போது பாடுவது நீலாம்பரி என்னும் ராகத்திலிருந்து தொடங்குகிறது. ஒருவன் வளர்ந்து வாலிப வயதை அடைந்து, திருமணநாளில் மங்கல வாழ்த்து என்பது ஆனந்த பைரவி என்னும் ராகத்தில் பாடப்படுகிறது. முந்தைய அரசர்கள், போர்க்காலங்களில் போர்க்களத்திற்கு செல்லும் போது, கம்பீர நாட்டை என்னும் ராகம் இசைக்கப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 26 Oct 2018 - 20:41

மனித வாழ்வின் இறுதிநாளில் அவலச்சுவையாக முகாரி என்னும் ராகத்தில் ஒப்பாரிப்பாடல் இடம்பெறுகிறது. இவ்வாறு பாடப்பெறும் பாடல்களுக்கான அடிப்படை கர்நாடக இசைதான். இந்த இசை அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து மயங்கச் செய்வதால் தான், நமது பாரம்பரியமான இசை வெளிநாடுகளிலும் பெயர் பெறுகிறது.

அதனால் தான் இசையால் மயங்காத இதயம் எது? என்றும் கல்லும் இசையால் கனியாகும், முள்ளும் இசையால் மலராகும் என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்.
இசை ஞானிகள் : கர்நாடக இசைக்கு உயிரூட்டி வளர்த்த சங்கீத மும்மூர்த்திகள், தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகள். இந்த இசை ஞானிகள், மூன்று மேதைகளும் தோன்றியிராவிட்டால் நமது பாரம்பரிய இசையான கர்நாடக இசையும் இராது.

எந்தெந்த கடவுள்களை என்னென்ன ராகங்களில் பாடித்துதிக்க வேண்டும் என்பது சங்கீத மும்மூர்த்திகளால் வகுக்கப்பட்ட முறை. முதற்பொருள் என்றும் மூலப்பொருள் என்றும் நாம் அனைவரும் போற்றி வணங்குகின்ற விநாயகரை, நாட்டைக்குறிஞ்சி என்னும் ராகத்தில் பாடித் துதிக்க வேண்டும்.

கர்நாடக சங்கீத மேடைகளில் சங்கீத வித்வான்கள் முதலில் இந்த நாட்டை என்னும் ராகத்தைபாடிய பின் தான், இசைக் கச்சேரியை தொடங்குவார்கள்.அடுத்தாக தமிழ்கடவுள் முருகபெருமானுக்கு உகந்த ஷண்முகப்பிரியா ராகம். முருகனாகிய சண்முகனுக்கு பிரியமான ராகம் என்பதால் சண்முக பிரியா என்ற பெயரானது.

முத்தொழில்களுக்கும் முதல்வனான சிவபெருமானை துதித்து வணங்க ஏற்ற ராகம் காம்போதி என்னும் ராகம். இலங்கை வேந்தன் ராவணேஸ்வரன் சிறந்த சிவபக்தன். அது மட்டுமல்லாது வீணை மீட்டுவதில் அவனுக்கு நிகரானவர் எவரும் இல்லை. வீணை இசையின் வல்லமையை எடுத்துக்காட்டும் விதமாக, தனது நாட்டுக் கொடியில் வீணையின் சின்னத்தை பொறித்தான்.

இவன் தனது வீணையின் இசையில் காம்போதி ராகத்தை இசைத்ததால், சிவபெருமான் இவனுடைய இசையின் லயிப்பில் இவனுக்கு காட்சி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இசையும் பக்தியும் : ஒரு முறை ராவணன் சிவபெருமானை நேரில் வரவழைக்க, தனது வீணையில் காம்போதி ராகத்தை இசைக்கத் துவங்கினான். இவனது இசையை கேட்டு ஈஸ்வரனும் உமையவளும் மெய்மறந்து அமர்ந்து விட்டார்கள். வெகுநேரமாகியும் இறைவன் காட்சி கொடுக்காதததால் இலங்கேஸ்வரனும் வீணை இசைப்பதை நிறுத்தவில்லை.

காலையில் வீணை இசைக்கத் தொடங்கியது மாலை வரையிலும் தொடர்கிறது. ராவணனுடைய விழிகளிலும், விரல்களிலும் குருதி கொப்பளிக்கிறது. எனினும் இசையை நிறுத்தவில்லை. வீணையில் உள்ள கம்பிகள் அறுந்து ஒவ்வொன்றாக சுருள்கின்றன. கடைசிக் கம்பியும் அறுந்துவிட்டது.

அனைத்து கம்பிகளும் அறுந்து சுருண்ட போதிலும், ஆன்மிக உள்ளம் கொண்ட வேந்தன், சிவனை கண்ணால் கண்டு தரிசிக்காமல் விடமாட்டேன் என்ற வைராக்கியத்தினால், தனது வயிற்றை கிழித்து குடலை வெளியே இழுத்து, தனது இடதுகை விரல்களால் வரிசையாக கோர்த்து இழுத்துப்பிடித்து அதில் தொடர்ந்து காம்போதி ராகத்தை இசைத்தான்.

அவனுடைய தீவிரமான பக்தியை கண்டு சிவபெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 26 Oct 2018 - 20:41

பாட்டும் ராகமும் :

ஈஸ்வரனைப்பாடித் துதிக்க காம்போதி ராகம் மட்டுமல்லாது, கரகரப்பிரியா, சங்கராபரணம், சகானா ஆகிய ராகங்களில் பாடலாம்.

உமா மகேஸ்வரியாக பார்வதி தேவிக்கு உகந்த ராகம், பைரவி, ஆனந்த பைரவி, சிந்துபைரவி, அடானா, கல்யாணி ஆகிய ராகங்களில் பாடலாம்.

ஸ்ரீமந்நாரணனை பூபாள ராகத்தில் பாடித் துதி செய்து மத்தியமாவதி ராகத்தில் நிறைவு செய்ய வேண்டும். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை தோடி, தன்யாசி, ரஞ்சனி ஆகிய ராகங்களில் பாடி துதி செய்ய வேண்டும்.
தெய்வீக இசை :

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விழாக்களில் கிராமியக் கலையாகிய இசை நாடகங்கள் நடத்தப்படுகின்றன. வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா போன்ற நாடகங்கள் முக்கியமானவை.

இந்த இசை நாடகங்களில் எந்தெந்த காட்சிகளில் என்னென்ன ராகங்களில் பாட வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. வள்ளி திருமணம் நாடகத்தில் வேலன் தோன்றுகின்ற கழுகாசலக் காட்சியில் ஆரபி அல்லது தேவகாந்தாரி ராகத்தில் பாடலைப் பாட வேண்டும்.

நாடகத்தின் இறுதிக் காட்சியில் வள்ளி நாயகியிடம் மானின் அடையாளம் கூறுகின்ற போது பைரவி ராகத்தில் பாடலை தொடங்கி காப்பி ராகத்தில் நிறைவு செய்ய வேண்டும்.

இதே போன்று அரிச்சந்திரா நாடகத்தில் மயான காண்டம் மட்டுமே நடத்தப்படுமானால் அரிச்சந்திரன் முகாரி ராகத்தில் பாடி வரவேண்டும்.இசைக்கும் இறைவனுக்குமான தொடர்பை தெய்வங்களின் கைகளில் உள்ள இசைக்கருவிகளை கொண்டு அறியலாம்.

சிவபெருமான் கையில் உடுக்கையும், கண்ணனின் கையில் புல்லாங்குழலும், சரஸ்வதியின் கையில் வீணையும், நாரதரின் கையில் தம்புராவும், சிவகணங்களின் கைகளில் சங்கும் இருப்பதை காண்கிறோம்.

இப்படிப்பட்ட இசை கருவிகளை கொண்டே இறைவனும் இசையும் பிரிக்க முடியாத ஒன்று என்பதை அறியலாம்.

– தி.அனந்தராமன்
இசைநாடக ஆசிரியர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 27 Oct 2018 - 1:14

இசையில் இறைவன்! 103459460 இசையில் இறைவன்! 3838410834



இசையில் இறைவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக