உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by சிவனாசான் Today at 9:43 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 1:23 pm

ஜனனி... ஜனனி... ஜெகம் நீ... அகம் நீ...' பாடலை தனது பிரத்தியேகக் குரலில் பாடி விழாவைத் தொடங்கினார், இளையராஜா. பாடலைப் பாடி முடித்தவுடன், ``எக்ஸாமுக்கு வர்ற ஸ்டூடன்ட் மாதிரிதான் நான் இங்கே வந்தேன். ஏன்னா, என்ன பேசுறதுனு எனக்குத் தெரியலை. இங்கே வந்து பார்த்தா, ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல ஆர்ட்ஸ் மட்டும்தான் இருக்கு!' எனச் சொல்லிவிட்டு சிரித்தவுடன் எதிரே கைதட்டல்களும், விசில் சத்தங்களும் தெறித்தது. `ஹார்ட்ல, ஆர்ட்டே இல்லேன்னா, அது பிரோயஜனமே இல்ல' என்ற இளையராஜா, தனது அனுபவங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இளையராஜா
``இதுவரைக்கும் 1300 படங்கள்கிட்ட இசையமைச்சுட்டேன். ஆனா, மூணு நிமிடத்துக்குமேல ஒரு பாட்டை கம்போஸ் பண்ணினதே கிடையாது. கே.சங்கர், எம்.ஜி.ஆருக்கு ரொம்ப க்ளோஸ். இந்த விழா நடக்கிற இதே ஆடிட்டோடிரியம்லதான், எம்.ஜி.ஆர் படங்களுடைய பல ஷூட்டிங் நடந்தது. அவர் நடித்துக்கொண்டிருந்த நேரத்துல என்னால ஷூட்டிங் போக முடியலை. அவர் நடிச்ச `உன்னை விடமாட்டேன்' படத்துக்குத்தான் நான் கடைசியா மியூசிக் போட்டேன். அதுல டி.எம்.எஸ் பாடிய ஒரு பாட்டைக் கேட்டுட்டு, `வேற ஆளைப் பாட வை'னு எம்.ஜி.ஆர் சொன்னார். `அவர் பெரிய ஆள், அவர் பாடினதை எடுத்துட்டு, வேற ஆளைப் பாட வெச்சா தப்பா இருக்கும் அண்ணா'னு சொன்னேன். `நான் சொல்றதைக் கேள், வேற ஆளைப் பாட வை'னு சொன்னார். சரினு மலேசியா வாசுதேவனைப் பாட வெச்சேன். அதையும் கேட்டுட்டு, வேற ஆளைப் பாட வைக்கச் சொன்னார். `இதுக்குமேல நான் என்ன பண்றதுண்ணா'னு கேட்டேன். `நீயே பாடு. நீ பாடுன மாதிரி அவங்கெல்லாம் பாடுனாங்களா'னு கேட்டார். `இல்ல, என் குரல் சின்னப் பையன் மாதிரி இருக்கும். அதுவும் இல்லாம நான் கிராமத்துல இருந்து வந்த ஆளு, என்னுடைய குரல் உங்களுக்குச் சேருமோ, சேராதோ'னு சொன்னேன். `அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ பாடு'னு பாட வைத்தார்." என்று நெகிழ்ந்தார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by ayyasamy ram on Sun Oct 21, 2018 1:53 pm

`ஹார்ட்ல, ஆர்ட்டே இல்லேன்னா,
அது பிரோயஜனமே இல்ல' - இளையராஜா,
-
ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 103459460 ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 3838410834
-
ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 2_14471
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 4:01 pm

தொடர்ந்து ஒரு பாடல் உருவான கதையைச் சொல்ல ஆரம்பித்தார். `` `மூகாம்பிகை'யில கொள்ளூர் மகரிஷி இருக்கிற இடத்துக்கு ஆதி சங்கரன் வருகிறார். தியானத்துக்கு வந்த அவருக்கு, மூன்று தேவிகள் ஐக்கியமாகிற காட்சி தெரிகிறது. அந்த நேரத்துல இந்தப் பாடலைப் பாடுகிறார்' என்று இயக்குநர் கே.ஷங்கர் பாடலின் சூழலைச் சொன்னார். நான் முதல்ல ஒரு டியூன் கம்போஸ் பண்ணிட்டேன். அப்போ கம்போஸிங் எப்படி நடக்கும்னு உங்களுக்குத் தெரியாது. ஆர்மோனியத்தோடு சேர்த்து என்னுடைய பக்க வாத்தியங்கள் வாசிக்கிற ரிதம் பிளேயர்ஸ் இருப்பாங்க. உதவி இயக்குநர்கள் நாலு பேர், இயக்குநர், பாடலாசிரியர், என்னுடைய மியூசிக் அசிஸ்டென்ட்ஸ்னு இத்தனை பேரும் இருப்பாங்க. இயக்குநர் கே.ஷங்கர் சூழலைச் சொல்லி முடித்ததும், நான் டியூன் போட்டேன். அப்போவே ஓகே பண்ணிட்டார். `இருங்க சார் நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன்'னு சொன்னேன். போற வழியில பூஜை ரூம்ல ஆதி சங்கரருடைய படம் இருந்தது. நான் ரொம்ப மனம் உருகி வேண்டுற ஆளெல்லாம் கிடையாது. இருந்தாலும், ஆதி சங்கரரைப் பார்த்து, `குருவே நீங்க என்னுடைய டியூன்ல வர்றீங்க'னு சொல்லிட்டு வந்தேன். வந்துட்டு, டியூனை மாத்தி வேற ஒண்ணு போட்டேன். `சார் இது முன்னாடி போட்டது மாதிரி இல்லையே!'னு சொன்னார். `இது நல்லா இருக்கா'னு கேட்டேன். `ரொம்ப நல்லா இருக்கு சார்'னு சொன்னார். இதுக்கு நடுவுல வாலி சார், `யோவ் ஜனனி... ஜனனி... ஜெகம் நீ... அகம் நீனு பாட்டுப் பாடி பாருய்யா'னு சொன்னார். பாட்டைப் பாடி முடிச்சதும் இயக்குநர் அழ ஆரம்பிச்சுட்டார். டியூனைப் போட்டுட்டு யாரைப் பாட வைக்கிறதுனு யோசிச்சுக்கிட்டு இருந்தோம். ஜேசுதாஸைப் பாட வைக்கலாம்னு முடிவு பண்ணி, அவரைத் தேடும்போது, அவர் ஊர்ல இல்லை. அப்போல்லாம் டிராக் எடுத்துப் பாடுற பழக்கம் கிடையாது. `சார் இப்போ நான் டிராக் போட்டுப் பாடுறேன். ஜேசுதாஸ் வந்த உடனே அவரைப் பாட வெச்சு மிக்ஸ் பண்ணிக்கலாம்'னு சொன்னேன். பாடி முடிச்சதும், வாத்தியம் வாசிச்சவங்க, பார்த்தவங்க, ரெக்காடிஸ்ட் ராமநாதன்னு எல்லோருமே அழறாங்க. அப்படி ஒரு சரித்திரம்தான் இந்தப் பாட்டுக்குப் பின்னால இருக்கு." என்று `ஜனனி...' பாடலுக்குப் பின்னால் இருந்த நிஜக் கதையைச் சொல்லி முடித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 4:03 pm

எனக்குப் பாடல் வருவதெல்லாம் ஒரு நொடியில் வந்துவிடும். என்னுடைய குழுவோட பெங்களூருக்கு ஒரு கன்னடப் பட ரெக்கார்டிங்காக சாமுண்டேஷ்வரி ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். என் கிட்டாரிஸ்ட் பெயர், சதானந்தம். அங்கே ஒரு டியூனை தப்பா வாசிச்சார். நான் டாக்பேக்ல என்னாச்சுனு கேட்டேன். `மிஸ் ஆகிடுச்சு ராஜா, ஒன்மோர் போகலாம்'னு சொன்னார். இப்படியே ஒரு ரெண்டு மூணு தடவை டியூன் தப்பாகிடுச்சு. அந்த இடத்துல, `சதா... சதா'னு அவரைக் கூப்பிட்டு அது டியூன் ஆகி, `உன்னை... நினைத்து நினைத்து உன்னில்... கலந்திடவே... அருள்வாய்... ரமணா... சதா'னு அப்படியே பாட்டா வந்துருச்சு" எனச் சொல்லி நடந்த சூழலலையும் காட்சிகளையும் கட்டமைத்துப் பாடிய அப்பாடலை அந்த அரங்கில் மீண்டும் பாடிக் காட்டி, அந்தக் கதையைப் பாட்டாகவே பாடினார். மீண்டும் அந்தக் கன்னடப் பட ரெக்கார்டிங் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ``கன்னடத்துல `சிவசேனா'னு ஒரு படம். அந்தப் படத்துல மாணவர்களைக் கைது பண்ணி ஜெயில்ல போடுறாங்க. சிறைக்குள்ள இருக்கிற மாணவர்களெல்லாம் ஜெயில் வார்டனைக் கிண்டல் பண்ணி ஒரு பாட்டுப் பாடணும்னு சொன்னார், இயக்குநர். என்னைச் சுற்றி நாலு கன்னடப் பாடலாசிரியர்களும், என் டியூனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருந்தாங்க. டியூனைப் போட்டுக் காட்டினதும், நாலு கவிஞர்கள்ல யாருக்கும் என்ன வரிகள் எழுதுறதுனு தெரியலை. எடுத்துக் கொடுக்கலாம்னு, முழுப் பாடலையும் நானே பாடி முடிச்சுட்டேன்" எனக் கன்னடப் படத்தின் பாடல் கதையை முடித்தவர், மலையாளத்தில் ஒரு படத்துக்கு டியூன் போட்டதைச் சொல்ல ஆரம்பித்தார். அதில் போட்ட டியூனையும், `ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலையும் கலவையாக்கிப் போட்ட டியூனுக்குப் பின்னால் இருந்த கதையைச் சொல்லி முடித்தவுடன் அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 4:04 pm

சார் உங்க மியூசிக் நல்லா இருக்கு'னு என்கிட்ட யாராவது சொன்னாங்கனா, ரொம்ப நல்லா மூச்சு இழுக்குறீங்க சார்னு சொல்ற மாதிரி இருக்கும். ஏன்னா, அது சுவாசம் மாதிரி, அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கு. எனக்கு என்ன கஷ்டமா இருக்குன்னா, என்னைப் பத்தி நானே உங்ககிட்டச் சொல்லணும். இல்லேன்னா உங்களுக்குத் தெரியாது. கடவுள் தன்னைப் பற்றித் தன்னுடைய அடியார்களுக்கு உணர்த்தவில்லை என்றால், அடியார்களுக்குக் கடவுளைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா... முடியாது. தாமே தமக்குச் சுற்றமும், தாமே நமக்கு விதி வகையும்னு மாணிக்க வாசகர் எழுதினார்" எனச் சொல்லி முடித்த பின், அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

``உங்களுடைய 75-வது பிறந்தநாளைக்கு எங்களுக்கு என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?"

``இப்போதான் நான் சொன்னேன். தாமே தமக்குச் சுற்றமும்னு! உங்களுடைய விதி வகையை நீங்களே விதித்துக்கொள்ள வேண்டும். என்னைப் பார்த்து உங்களுக்கு உற்சாகமாகி, சார் மாதிரி உழைத்து முன்னேறி வரவேண்டுமென்றால், என்னை மாதிரி உழைக்கிற அத்தனை பேரும் முன்னேறி வருவதில்லை. இந்த ஆர்மோனியப் பெட்டியை எடுத்துட்டு 1968-ல் சென்னைக்கு வந்தேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 4:05 pm

ஏவி.எம் ஸ்டுடியோஸ், ரஜினி, கமல்... யாரையும் நான் நம்பலை. நானும் யார்கிட்டேயும் போகலை. எல்லோரும்தான் என்கிட்ட வந்தாங்க. இதை தற்பெருமையாகச் சொல்லலை. உண்மையாக சத்தியமாகச் சொல்கிறேன். ஆர்மோனியம் மட்டும்தான் என்னுடைய நண்பன். ஆனா, முன்னாடி இதுமேல கையை வெச்சா அம்மா பெரம்பால அடிப்பாங்க. அப்புறம் ஒரு சூழல்ல வாசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. தப்பு தப்பாதான் வாசித்தேன். மக்களெல்லாம் பயங்கரமா உற்சாகப்படுத்தினாங்க. தப்பா வாசித்தாலே கைதட்டல் வருதே, கரெக்டா வாசித்தா எவ்வளவு கைதட்டல் வரும்னு அன்னைக்கு முடிவு பண்ணி, 24 மணி நேரமும் வாசிச்சுப் பயிற்சி எடுத்தேன். இந்த மாதிரி கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்தேன். எனக்கு இசையைத் தவிர எதுவும் தெரியாது. இதுல இருந்து என்னை வெளியில எடுத்துட்டா, தண்ணில இருக்கிற மீனை வெளில தூக்கிப் போடுற மாதிரி. இசை இருக்கிறவரை நான் இருப்பேன். எல்லா இசையிலும் நான்தான் இருப்பேன்."
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 4:06 pm

நீங்க பலருக்கு ரோல் மாடலா இருந்திருக்கீங்க. உங்களுடைய ரோல் மாடல் யார்?"

``எனக்கு முன் மாதிரியும் கிடையாது, பின் மாதிரியும் கிடையாது."

``உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகளில் கிடைத்த சிறந்த பாராட்டாக நீங்கள் கருதுவது?"

``திரையுலகிற்கு முதன்முதலாக நீங்க பாடிய அனுபவம் எப்படி இருந்தது. அந்தப் பாட்டுல இருந்து இரண்டு வரிகள் எங்களுக்காக பாடுங்களேன்...?"

- இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு, இளையராஜாவின் பதில்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 4:06 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 4:07 pm

@ayyasamy ram wrote:`ஹார்ட்ல, ஆர்ட்டே இல்லேன்னா,
அது பிரோயஜனமே இல்ல' - இளையராஜா,
-
ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 103459460 ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 3838410834
-
ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா 2_14471
மேற்கோள் செய்த பதிவு: 1282298
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by சிவா on Sun Oct 21, 2018 5:22 pm

இளையராஜா ஒரு இசை சகாப்தம். தமிழ் மொழியும், தமிழ் மக்களும் இருக்கும் வரை இவரது பெயர் நிலைத்திருக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 5:51 pm

@சிவா wrote: இளையராஜா ஒரு இசை சகாப்தம். தமிழ் மொழியும், தமிழ் மக்களும் இருக்கும் வரை இவரது பெயர் நிலைத்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1282330
உண்மை தான் சிவா, இசையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by ராஜா on Mon Oct 22, 2018 11:54 am

திறமையானவர் , தமிழ் திரையிசையின் சகாப்தம்..

ஆனாலும் , தான் என்ற எண்ணம் தான் சில நேரங்களில் இவரின் பேட்டிகளில் தெரிகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31225
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Oct 22, 2018 12:07 pm

நேரத்திற்கு யுவன் சங்கர் ராஜா போன்றோரின் பாடல்கள்... காலத்திற்கும் இளையராஜாவின் பாடல்கள் ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 22, 2018 12:58 pm

@ராஜா wrote:திறமையானவர் , தமிழ் திரையிசையின் சகாப்தம்..

ஆனாலும் , தான் என்ற எண்ணம் தான் சில நேரங்களில் இவரின் பேட்டிகளில் தெரிகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1282400
திறமை இருக்கும் இடத்தில் திமிரும் இருக்கும் என்ன செய்ய ராஜா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 22, 2018 12:58 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:நேரத்திற்கு யுவன் சங்கர் ராஜா போன்றோரின் பாடல்கள்... காலத்திற்கும் இளையராஜாவின் பாடல்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1282403
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா Empty Re: ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை