உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by ayyasamy ram Today at 9:26 am

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by ayyasamy ram Today at 9:20 am

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Today at 9:15 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by ayyasamy ram Today at 8:39 am

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by ayyasamy ram Today at 8:34 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Today at 8:30 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by jemsith Today at 7:50 am

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Yesterday at 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:05 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Yesterday at 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Yesterday at 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Yesterday at 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Yesterday at 2:24 pm

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by ஞானமுருகன் Yesterday at 2:22 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Yesterday at 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Yesterday at 11:06 am

» பொழுது போக்கு - சினிமா
by ayyasamy ram Yesterday at 11:01 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:46 am

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by ayyasamy ram Yesterday at 10:44 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:07 am

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Yesterday at 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:03 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:02 pm

» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:48 am

» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:41 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 07, 2018 11:24 pm

» மனதைப் புரிந்து கொள்,...!!
by ayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by ayyasamy ram Fri Dec 07, 2018 9:15 pm

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by ayyasamy ram Fri Dec 07, 2018 9:13 pm

Admins Online

இணக்கமாய் ஓர் வணக்கம் !

இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by தூயவள் on Wed Oct 17, 2018 5:53 am

பெயர்:  தூயவள்-  வடமொழியில் அமைந்த என் இயற்பெயரின் தமிழாக்கம்
சொந்த ஊர்:  யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்:  ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்:  இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு:  இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும்  குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !

வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர்  அறிமுகம்.  

இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்  
குலத்திற்கு முதல் வணக்கம்.

பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.

அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.

தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.

பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.

தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.

வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.

ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.

நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட  
நாடிப் பெறுவேன் பயன்.

ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.

கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்  
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.

இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு  சேர்த்திடும்.

உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.

இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !

பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.

திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.

விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.

அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.

புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்  
பதியுங்க ளுங்க ளெண்ணம்.

நன்றி, வணக்கம்!
avatar
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by kuloththungan on Wed Oct 17, 2018 12:40 pm

பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!

வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்


avatar
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 24/01/2017
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by T.N.Balasubramanian on Wed Oct 17, 2018 1:56 pm

அறியாமுகம் தந்த மனம் கவர் அறிமுகம்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.

கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.

ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!:நல்வரவு: :வணக்கம்:

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by சிவா on Wed Oct 17, 2018 2:04 pm

தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதுவரை ஈகரையில் இணைந்தவர்களில் இவ்வாறு அறிமுகம் செய்து கொண்டவர்கள் யாருமிலர்.

பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.

முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.

இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.

மிக்க மகிழ்ச்சி!

தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Oct 17, 2018 4:03 pm

கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் ... :வணக்கம்:
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4477
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1034

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by ஞானமுருகன் on Wed Oct 17, 2018 4:09 pm

சூப்பருங்க :நல்வரவு:

ஞானமுருகன்
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by ayyasamy ram on Wed Oct 17, 2018 5:54 pm

:நல்வரவு: :நல்வரவு:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by தூயவள் on Wed Oct 17, 2018 8:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
அன்புடன்
குலோத்துங்கன்
[You must be registered and logged in to see this link.]
ஐயா - ஈகரையில் எனக்கு முதன்முதலில் வரவேற்பளித்தமைக்கு மிக்க நன்றி ! என் கருத்தைப் பாராட்டியும், ஆதரித்தும் கூறிய சொற்களுக்கும், என்னை மனமார வாழ்த்தியமைக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியை நவில்கிறேன். தங்களிடம் ஓர் விண்ணப்பம், அறிவிலும், வயதிலும் இளையவள் ஆகையால், எனக்கு 'ஆர்' விகுதி சேர்க்க வேண்டாம்.

[You must be registered and logged in to see this link.] wrote:
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐயா- மகிழ்ச்சியூட்டும் உம்மைப் போன்ற பெரியோர் வாய்ச்சொற்கள் தாம் எனக்கு ஊக்கமருந்து. இவ்வலைத்தளத்தில் இணைந்த எனக்கு வரவேற்பளித்தமைக்கு நன்றி ! முகவுரையில் உரைத்தது போல் , அறிஞர் தரும் தமிழமிழ்தைப் பருகும் எண்ணமே எனக்கு மிகவாயுள்ளது. சிறுகிள்ளை போல் நான் மிழற்றுவதையும் பொறுமையாய்ப் படிக்கும் பெரியோர் இங்குள்ளனர் என்பதையறிவதில் பேருவகை உண்டாகின்றது. தாங்கள் உடல் மனநலத்தோடு வாழ வேண்டுமென இறைவனை வேண்டி நாளைப் பிறந்த நாள் காணப்போகும் உங்களை வணங்குகிறேன்! (செய்தி உதவி- முகப்புப் பக்கம் )

[You must be registered and logged in to see this link.] wrote:தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
[You must be registered and logged in to see this link.]
ஐயா- உங்களது பதிவு கண்டு களிப்படைந்தேன். இதுவரை வேறொரு பொது வலைத்தளத்தில் தமிழ்ப்பதிவுகளிட்டேன். அங்கே பகிர்ந்தவற்றில் சிலவற்றை அவ்வப்போது இங்கே மீள்பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வமான வரவேற்பிற்கு நன்றி ! இவ்வலைத்தளத்தின் நிறுவனர் தாங்களென்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைக்க இணையத்தின் உதவியோடு வலைத்தளம் தொடங்கி அதை மிகச் சிறப்பாக இயக்கிவருதற்கு என்னுடைய நன்றி !
[You must be registered and logged in to see this link.] wrote:கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்
[You must be registered and logged in to see this link.]
ஐயா- உங்கள் வரவேற்பை இருகரம் கூப்பியேற்கிறேன் , நன்றி!
[You must be registered and logged in to see this link.] wrote: சூப்பருங்க :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] wrote::நல்வரவு: :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]

avatar
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by T.N.Balasubramanian on Wed Oct 17, 2018 8:44 pm

அறிமுகத்தை மிஞ்சுகிறது உங்கள் மறுமொழி.
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by SK on Wed Oct 17, 2018 11:20 pm

அருமையான அறிமுகம்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்


[You must be registered and logged in to see this link.]
avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7895
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by தூயவள் on Fri Oct 19, 2018 11:14 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான அறிமுகம்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்
[You must be registered and logged in to see this link.]
வரவேற்பிற்கு மிக்க நன்றி !
avatar
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by krishnaamma on Wed Oct 31, 2018 11:34 am

இன்று தான் இந்த திரியை பார்த்தேன்.... எத்தனை அருமையான அறிமுகம் ...எத்தனை அருமையான மறுமொழிகள்.....நான் எந்த வார்த்தைகளால் உங்களை வரவேற்பது என்று தெரியாமல் விழிக்கிறேன்.....புன்னகை........
.
.
.
.
அன்பு வரவேற்புகள் சகோதரி....புன்னகை........ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by தூயவள் on Fri Nov 30, 2018 7:20 am

[You must be registered and logged in to see this link.] wrote:இன்று தான் இந்த திரியை பார்த்தேன்.... எத்தனை அருமையான அறிமுகம் ...எத்தனை அருமையான மறுமொழிகள்.....நான் எந்த வார்த்தைகளால் உங்களை வரவேற்பது என்று தெரியாமல் விழிக்கிறேன்.....புன்னகை........
.
.
.
.
அன்பு வரவேற்புகள் சகோதரி....புன்னகை........ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், நானும் இன்று தான் தங்கள் வரவேற்பைப் பார்த்தேன், அதற்கு எனது நன்றி !
avatar
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: இணக்கமாய் ஓர் வணக்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை