உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

பகுத்துண்ணல் அறம் :

பகுத்துண்ணல் அறம் : Empty பகுத்துண்ணல் அறம் :

Post by M.Jagadeesan on Tue Oct 16, 2018 8:57 pm

பகுத்துண்ணல் அறம் :
======================
" Charity begins at home " என்பது ஆங்கிலப் பழமொழி .

அறச்செயல்கள் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன என்பது இதன் பொருள் . குழந்தைகளைச் சிறுவயது முதற்கொண்டே அறம் செய்யப் பழக்கவேண்டும் . பக்கத்து வீட்டுக் குழந்தைப் பார்த்திருக்க , நம்வீட்டுக் குழந்தைத் தனித்துத் தின்பண்டங்களை உண்ண நாம் அனுமதிக்கக் கூடாது . " அந்தக் குழந்தைக்கும் கொஞ்சம் கொடு ; நீ மட்டும் தனித்து உண்டால் உன் வயிறு வலிக்கும் " என்று பொய் சொல்லியாவது , பகுத்துண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளின் உள்ளத்தில் வளர்க்கவேண்டும் .

குழந்தைகளால் தனித்து அறம் செய்ய இயலாது . அதற்குத் தேவையான பொருள் வசதியும் அவர்களிடம் இருக்காது . ஆகவேதான் குழைந்தைகளைப் பார்த்து

" அறம் செய்ய விரும்பு " என்றால் ஒளவைப் பாட்டி . சிறுவயதில் அந்தப் பிஞ்சு நெஞ்சில் தூவப்படும் இந்த விருப்ப விதைதான் , வருங்காலத்தில் ஈதல் அறமாகவும் , ஒப்புரவு அறமாகவும் ஓங்கி வளர உதவி செய்யும் .

பகுத்துண்ணல் அறம் பற்றி நூல் நெடுகிலும் ஐயன் வள்ளுவர் பேசுவார் . பகுத்து உண்ணலைப் " பாத்தூண் " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் . காமத்துப் பாலிலும் பகுத்துண்ணல் அறம் பேசுவார் .

தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து , தன் உழைப்பால் வந்த உணவுப் பொருளைத் தன் சுற்றத்தாரோடு பகிர்ந்துண்ணும் இன்பமே அலாதிதான் . அந்த இன்பம் எப்படிப்பட்ட இன்பம் தெரியுமா ? தன் காதலியை இறுகத் தழுவித் துய்க்கும் இன்பத்திற்கு நிகரானது என்று சொல்கிறார் .

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு . ( 1107 )

கொல்லாமை அதிகாரத்தில் ஒன்பது குறட்பாக்களும் கொல்லாமை அறம் பேச , ஒரேயொரு குறள்மட்டும் பகுத்துண்ணலைப் பற்றிப் பேசுகிறது .

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை . ( 322 )

இதிலிருந்து நாம் அறிவது என்ன ? பகுத்துண்ணாமை கொலைக்கு நிகரானது என்ற வள்ளுவனின் நெஞ்சத்தை அறிகிறோம் . பல்லுயிர் என்றதனால் , பகுத்துண்ணல் , மனிதர்களோடு மட்டுமன்றி , நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களோடும் , பறவைகளோடும் , இன்னபிற உயிரினங்களோடும் இருக்கவேண்டும் என்பது பொருளாகும் .

சங்கப் பாடல்களிலேயே பகுத்துண்ணல் அறம் பேசப்படுகிறது .

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே !

என்று ஒளவையார் அதியமானின் பகுத்துண்ணும் பண்பைப் பாராட்டுகிறார் .

கொஞ்சம் கள் கிடைத்தால் , அதை ஒளவைக்குக் கொடுத்துவிடுவானாம் . நிறைய கள் கிடைத்தால் , ஒளவையுடன் தானும் பகிர்ந்து உண்ணுவானாம் .

பகுத்துண்ணலின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் விளங்குகிறது . " விருந்து " என்னும் சொல்லுக்குப் புதிது , புதியவர் என்று பொருள் . தற்காலத்தில் இச்சொல் , தன் உண்மைப் பொருளை இழந்து உணவைக் குறித்து நின்றது .

விருந்தினர் புறத்தே இருக்க , அதாவது வீட்டின் திண்ணையிலே இருக்கத் தான்மட்டும் , வீட்டின் உள்ளே உணவருந்துதல் பகுத்துண்ணல் ஆகாது . அவரைப் பக்கலில் அமர்த்தி , அவரோடு சேர்ந்து உண்ணுதலே பகுத்துண்ணல் அறமாகும் . பகுத்துண்ணலின் மற்றோர் பகுதி சுற்றம் பேணல் ஆகும் . காக்கையைப் போல , சுற்றத்தாரோடு கூடி உண்ணும் பழக்கம் கொண்டவனுக்கே செல்வம் உண்டாகும் என்று கூறுகிறார் .

சிலருக்கு மலைபோல செல்வம் இருந்தாலும் , உற்றார் , உறவினர்களை அண்ட விடார் .
அவனுக்கு உறவில்லாத எவனோ ஒருவன் , அவனிடம் ஒட்டிக்கொண்டு , அந்த செல்வத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பான் . அத்தகைய பகுத்துண்ணல் பண்பு இல்லாதவனைப் " பேதை " என்று வள்ளுவர் அழைப்பார் .

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைப்
பெருஞ்செல்வம் உற்றக் கடை .

என்பது குறள் . அதாவது பேதையிடம் செல்வம் சேர்ந்தால் , இரத்த சொந்தங்கள் பசித்திருக்க , அயலான் உண்டு பசியாறுவான் என்பது இக்குறளின் கருத்து .

பகுத்துண்ணலின் அடுத்த பகுதி குடும்பம் ஆகும் . கணவன் , மனைவி , குழந்தைகள் , உடன் பிறந்தோர் , பெற்றோர் என்று அனைவரும் கூடி உண்ணுதலாகும் . தாய் ஓரிடத்தும் , தந்தை ஓரிடத்தும் , குழந்தைகள் ஓரிடத்தும் இருக்கின்ற இந்நாளில் , பகுத்துண்ணல் இன்பத்தைப் பெறுதல் அரிது .

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை .

நாம் ஈட்டும் செல்வத்தில் இறந்த நம் முன்னோர்களுக்கும் , தெய்வத்திற்கும் கொஞ்சம் செலவு செய்யவேண்டும் என்பது இக்குறளின் கருத்தாகும் .


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

பகுத்துண்ணல் அறம் : Empty Re: பகுத்துண்ணல் அறம் :

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Oct 16, 2018 9:01 pm

அருமை அருமை அண்ணா ... பகுத்துண்ணல் அறம் : 3838410834
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை