உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

Admins Online

கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 5:30 am

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Nandita-Das-
-

'நான் கல்லூரியில் படிக்கும்போதே, எழுத்தாளராக
மட்டுமின்றி சமூக ஆர்வலராக செயல்பட்ட
சாதத் ஹாசன் மான்ட்டோ பற்றி படித்துள்ளேன்.

அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல், மக்களைப்
பற்றி எழுதியிருந்தவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது.
விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதியிருந்தது
ஆபாசமாக இருந்தது என்று பிரிட்டிஷ் அரசாங்கம்
மூன்று முறையும், பாகிஸ்தான் அரசு மூன்று முறையும்
அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

ஆனால், அவர் தன்னுடைய எழுத்துகள் இலக்கியதரமானவை
என்பதை நிரூபிக்க போராட வேண்டியதாயிற்று. அவரது
வாழ்க்கையை இன்றைய முகநூல் தலைமுறையினருக்கு
அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் 'மான்ட்டோ'
என்ற பெயரில் அவரது வரலாற்றை திரைப்படமாக
இயக்கியுள்ளேன்' என்று கூறும் நந்திதா தாஸ்,
இதுவரை 12-க்கும் மேற்பட்ட பிறமொழி படங்கள் உள்பட
40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பதோடு முதன்முதலாக 'பைராக்' (2008) என்ற படத்தை
இயக்கிய நந்திதா தாஸ், தற்போது திரைக்கு வந்துள்ள
'மான்ட்டோ'வை இயக்கியுள்ளார்.

இதில் மான்ட்டோவாக நவாசுதீன் சித்திக் என்பவரும்,
மான்ட்டோவின் மனைவி சபியாவாக ரசிகா தூகலும்
நடித்துள்ளனர்.

நடிகை, இயக்குநர், சமூக ஆர்வலர் என்று அனைத்து
துறையிலும் ஈடுபாடு காட்டி வரும் இவர், அண்மையில்
உடலுறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு
பிரசாரத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது இவர் சார்ந்துள்ள கவிதா சாமுவேல்
தலைமையிலான 'டார்க் இஸ் பியூட்டிபுல்' என்ற
அமைப்பைப் பற்றி என்ன சொல்கிறார்:
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 53042
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 5:31 am

'டார்க் இஸ் பியூட்டி புல்' என்ற அமைப்பை நான்
தொடங்கியிருப்பதாக தவறான தகவல்கள் பரவியுள்ளது.
இந்த அமைப்புக்கு ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக
உள்ளது.

சாதி, மதம், பாலினம் உள்பட கறுப்பு என்றால் பாரபட்சம்
காட்டுவது குறித்து நான் பல கருத்தரங்களில் எதிர்த்து
பேசியுள்ளேன். பேசி வருகிறேன். இது குறித்து மக்கள்
மனதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை வெயிலில் அலையாதே, கறுத்து விடுவாய்
என்று அச்சுறுத்துவதுண்டு. அழகு சாதன பொருள்கள்
விற்பனை மையத்திற்குள் நுழைந்தால் சிவப்பழகை
தரும் கிரீம்களை வாங்குங்கள் என்று விற்பனையாளர்
கூறுவதுண்டு.

சாதாரண தோற்றமுள்ள பெண்ணை அழகுள்ளவராக
மாற்றும் ஒப்பனை கலைஞரிடம் கூட நான் கூறுவதுண்டு.
என்னுடைய நிறத்தை மாற்ற வேண்டாம். நான் எப்படி
இருக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன்.

ஒப்பனை வேண்டாம் என்று கூறுவேன். என்னுடைய நிறம்
என்னவென்று மக்களுக்கேத் தெரியும்.

என்னைப் பொருத்தவரை என் தோலின் நிறம் கறுப்பாக
இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. வசதியாகவும்
இருக்கிறது. என்னைப் பற்றி எழுதும் போது கறுப்பு மற்றும்
அரையிருட்டு என்று எழுதுவார்கள்.

நான் அதை பொருட்படுத்துவதில்லை. என்னிடம் உள்ள
திறமைகளைப் பாராட்டாமல் என் நிறத்தை மட்டும் ஏன்
குறிப்பிட்டு எழுதுகிறார்கள் என்று நினைப்பதுண்டு.

நடிகை என்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது
அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதற்காக கறுப்பாக
இருப்பவர்கள் மீது வெறுப்பை காட்டுவது அழகல்ல.

நீங்கள் அழகாக இல்லாவிட்டாலும் கறுப்பு நிறமாக
இருந்தால் உங்களை நீங்களே தாழ்வாக நினைக்காதீர்கள்
என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்
'டார்க் இஸ் பியூட்டிபுல்' அமைப்பின் நோக்கமாகும்.

கறுப்பு நிறமுடைய இளம் பெண்கள் தங்கள் நிறத்தை
கொண்டாட வேண்டும். அழகு என்பது தோலின் நிறத்தில்
இல்லை.

அகத்தின் அழகுதான் முக்கியம். மின்னும் கண்களும்,
ஒளிரும் கபடமற்ற சிரிப்பும்தான் உண்மையான அழகு
என்பேன்.

உங்கள் நிறத்தை பற்றி யாராவது விமர்சனம்
செய்தால் கவலைப் படாதீர்கள்.

உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள்
நன்னடத்தையும், செயலும்தான் முக்கியம். இயற்கையாக
இருங்கள். அதுவே அழகாகும்' என்கிறார் நந்திதா தாஸ்
-
-----------------------------
- பூர்ணிமா
நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 53042
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by SK on Fri Oct 05, 2018 9:40 am

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! 3838410834  கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! 3838410834  கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! 3838410834  கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! 3838410834

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by சிவா on Fri Oct 05, 2018 4:49 pm

மோனலிசாவே கருப்புத்தானே, நாங்கள் எதற்கு கருப்பாக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். கருப்புதான் உண்மையான பேரழகு!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by ஜாஹீதாபானு on Fri Oct 05, 2018 5:41 pm

@சிவா wrote:மோனலிசாவே கருப்புத்தானே, நாங்கள் எதற்கு கருப்பாக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். கருப்புதான் உண்மையான பேரழகு!
மேற்கோள் செய்த பதிவு: 1280581

அதானே சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30933
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7360

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by T.N.Balasubramanian on Fri Oct 05, 2018 9:14 pm

கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு  சொலவடை தமிழில் உண்டு.  

ஆமாம் அதென்ன தலைப்பு  "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?  
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது  கறுப்பாக மாறுகிறது.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 9:40 pm

இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று
எழுதுகிறார்கள்.

கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும்.

இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.

நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு
நிறத்தைக் குறிக்கின்ற பண்புப் பெயராகும்.

காரிருள் என்பது கறுத்த இரவைக் குறிக்கிறதே,
அப்படியானால் கருப்பு, கருமை என்பது சரிதானே
என்பர் சிலர்.

கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது.
எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த
வேண்டும்.
-
மகுடேஸ்வரன்
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 53042
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by சிவா on Fri Oct 05, 2018 9:44 pm

@T.N.Balasubramanian wrote:கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு  சொலவடை தமிழில் உண்டு.  

ஆமாம் அதென்ன தலைப்பு  "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?  
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது  கறுப்பாக மாறுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1280601

நல்லவேளை, எனது மறுமொழியில் சரியாக “கருப்பு” என்றே எழுதியுள்ளேன்! குதூகலம்

இல்லையென்றால் என் மீதும் கறுப்பாகியிருப்பீர்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by T.N.Balasubramanian on Fri Oct 05, 2018 10:16 pm

@சிவா wrote:
@T.N.Balasubramanian wrote:கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு  சொலவடை தமிழில் உண்டு.  

ஆமாம் அதென்ன தலைப்பு  "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?  
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது  கறுப்பாக மாறுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1280601

நல்லவேளை, எனது மறுமொழியில் சரியாக “கருப்பு” என்றே எழுதியுள்ளேன்! குதூகலம்

இல்லையென்றால் என் மீதும் கறுப்பாகியிருப்பீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1280611

ஹா ஹா ஹா புன்னகை புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by T.N.Balasubramanian on Fri Oct 05, 2018 10:26 pm

@ayyasamy ram wrote:
இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று
எழுதுகிறார்கள்.

கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும்.

இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.

நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு
நிறத்தைக் குறிக்கின்ற பண்புப் பெயராகும்.

காரிருள் என்பது கறுத்த இரவைக் குறிக்கிறதே,
அப்படியானால் கருப்பு, கருமை என்பது சரிதானே
என்பர் சிலர்.

கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது.
எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த
வேண்டும்.
-
மகுடேஸ்வரன்
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1280608

மகுடேஸ்வரன் தினமலரில் பதிவிட்ட செய்தி கண்டேன்.
கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும்.  ஏதாவது ஆதாரம் காட்டி இருக்கலாம் .

நான் கூறிய அர்த்தங்கள் தமிழ் விக்கிஷனரி மூலம் எடுக்கப்பட்டது.
அவர்கள் கருப்புக்கு பஞ்சம் என்றோ வறுமையான காலம் என்ற குறிப்பிடவில்லை.
தமிழ் lexicon பார்த்தால் விளக்கம் கிடைக்கும் என எண்ணுகிறேன்.
நம்முடைய Jagadeesan அய்யா அவர்களும் விளக்கம் தந்தால்
நன்றாக இருக்கும் .நன்றி ayyasami ram .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

 கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி! Empty Re: கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை