உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Today at 11:02 am

» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

Admins Online

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by சிவா on Tue Sep 25, 2018 6:07 am

  ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  

அமெரிக்காவில் அன்றைய அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய ஒபாமா கேர் என்று பரவலாக அறியப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல இப்போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் என்கிற மோடி கேர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் அவரால் அறிவிக்கப்பட்ட இந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் செலவுகளை 60% மத்திய அரசும், 40% மாநில அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது.பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா - ஆயுஷ்மான் பாரத் என்கிற இந்தத் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 25 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் கைகோக்கின்றன. 

ஏறத்தாழ 10 கோடி குடும்பத்தைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் குறிக்கோள். இதற்காக நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லாமல் 9,000க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பல தனியார் மருத்துவமனைகள் விரைவில் இணைக்கப்பட இருக்கின்றன. இதய நோய்கள், சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள், மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட ஏறத்தாழ 1,350 வகையான உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தத் திட்டத்தில் வழிகோலப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 2,500 அதிநவீன மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு கோடிக்கும் அதிகமானோர் மருத்துவச் செலவுகளால் வறுமையை எதிர்கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாகவே மத்திய-மாநில அரசுகள் 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் மருத்துவ சேவையை ஈடுகட்ட முயற்சிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 

மக்களின் மருத்துவத் தேவையை எதிர்கொள்ள உலகில் இரண்டு முன்மாதிரிகள் உள்ளன. இங்கிலாந்தில் அரசின் நேரடிக் கண்காணிப்பிலுள்ள பொது மருத்துவமனைகளின் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளின் மூலம் மக்களின் மருத்துவத் தேவைக்கு அரசு உதவுகிறது. நரேந்திர மோடி அரசு மேலே குறிப்பிட்ட இரண்டு முன்மாதிரிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. 

நரேந்திர மோடி அரசு அறிவித்திருக்கும் ஆயுஷ்மான் பார்த் என்கிற தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியாவில் இப்போதிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதா என்கிற ஐயப்பாடு எழுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கு லாபம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்கிற அச்சமும் ஏற்படாமல் இல்லை.

இதுபோன்ற திட்டங்கள் மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படுபவை. ஒருமுறை தொடங்கிவிட்டால், சரிவர இயங்காவிட்டாலும், மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அதை நிறுத்த முடியாமல் அரசு அதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. ஆனால், அவர்களது காப்பீட்டின் அளவு, மருத்துவமனைக்குத் தரும் கட்டணம் உள்ளிட்டவை மாறுபடுகின்றன, அவ்வளவே. 

இந்தத் திட்டங்கள் எல்லாமே குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குவதைக் கட்டாயப்படுத்துவதால், சிகிச்சையின் தரத்திற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு சிகிச்சை அளிப்பது இயலாது என்று ஏற்கெனவே இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தேவையில்லாமல் இடைத்தரகர்களும், மருத்துவமனைகளும் சம்பாதிப்பதற்கு இந்தத் திட்டம் வழிகோலுமே அல்லாமல், நோயாளிகளுக்குப் பயன்படாது என்கிற பரவலான கருத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. 

இந்தியாவில் 1,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவர்தான் காணப்படுகிறார். 90,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனைதான் இருக்கிறது. இன்னும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் தேவையை விட 22% குறைவாகக் காணப்படுவதாக மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. தனியார் மருத்துவமனைகளும் கிராமப் பகுதிகளில் போதுமான மருத்துவ வசதிகளுடன் இல்லாமல் இருக்கும் சூழலில் இவ்வளவு பெரிய திட்டத்தை அரசு எப்படி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது புரியவில்லை.

நல்லெண்ணத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம்தான் என்றாலும், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதையும் அதில் தவறுகள் நேர்ந்துவிடாமல் கண்காணிப்பதையும் உறுதிப்படுத்தாமல் போனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் நலன்தான் பேணப்படுமே ஒழிய, மக்கள் பயனடைய மாட்டார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

  தினமணி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by krishnaamma on Tue Sep 25, 2018 8:30 am

நல்ல திட்டம் ...நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் புன்னகை............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by ayyasamy ram on Wed Sep 26, 2018 7:52 am

நல்ல திட்டம், வரவேற்போம்!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by கார்த்திக் செயராம் on Wed Sep 26, 2018 8:05 am

திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.

மருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்


அந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .

முதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

View user profile

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by krishnaamma on Wed Sep 26, 2018 9:28 am

@கார்த்திக் செயராம் wrote:திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.

மருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்


அந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .

முதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1279211


நீங்கள் சொல்வதும் உண்மை கார்த்தி, எப்போது மருத்துவமும் கல்வியும் வியாபாரம் என்று ஆகிவிட்டதோ அப்போது இவை எல்லாம் அத்தனை சுலபமாக வெற்றி பெறமுடியாது தான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by SK on Wed Sep 26, 2018 6:07 pm

நல்ல திட்டம் ரபேல் போல ஊழல் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by T.N.Balasubramanian on Wed Sep 26, 2018 6:38 pm

எந்த ஒரு நல்ல /நல திட்டத்திலும் கருப்பாடுகள் புகுந்தால்
அந்த திட்டம் முழுமையாக சென்றடைய வேண்டியவரை சேராது.
போக போகத்தான் தெரியும்.
வெற்றி பெற்றால் சந்தோஷம்.
வீட்டில் 3 பேர் இருந்தால் 3 x 5 =15 லக்ஷம், மோடி ஒவ்வொருவர் கணக்கிலும்
போடுவதாக சொன்ன பணம் இதுதானோ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24333
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by anikuttan on Thu Sep 27, 2018 6:19 am

அய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by சிவா on Thu Sep 27, 2018 6:28 am

@anikuttan wrote:அய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .
மேற்கோள் செய்த பதிவு: 1279334

ஆமாம் நண்பரே, டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, காரணம் அங்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன.

விரைவில் அங்கும் பாஜக ஆட்சி அமைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவோம்! சிரி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Empty Re: ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை