உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

பெண்பாவம் பொல்லாதது

பெண்பாவம் பொல்லாதது Empty பெண்பாவம் பொல்லாதது

Post by ayyasamy ram on Mon Sep 24, 2018 7:58 am

[You must be registered and logged in to see this image.]
-
தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல்
இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே
பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன்.

இதனையறிந்த தோழி, தலைவிக்கு மணவாழ்க்கை
நிகழவேண்டுமென எண்ணினாள். தலைவனிடம்
இதைப் பற்றி எப்படிப் பேசுவது எனச் சிந்தித்தாள்.

ஒருநாள் இரவு நேரத்தில், தலைவியின் வீட்டுக்குப்
பின்புறம் உள்ள வேலியோரத்தில் பிறர் அறியாதவாறு
தலைவியைச் சந்திக்க தலைவன் வந்ததைத் தோழி
அறிந்தாள்.

அந்நேரத்தில் அங்கு நின்றிருந்த தலைவன்
கேட்கும்படியாகத் தலைவியிடம் தோழி பேசுகிறாள்.

"ஒருநாள் நம் இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.
தலைவனும் அவர்களுடன் வந்தான். அவனைக் கண்டு
ஐயம் கொண்ட அன்னை, அன்றுமுதல் பகைவரது
போர்க்களத்தின் பக்கத்திலுள்ள ஊரினர் எவ்வாறு
தூங்காமல் இருப்பரோ, அவர்கள் போன்று இரவில்
தூங்காமல் இருக்கிறாள்.

நீராடச்சென்ற ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்
ஒருத்தி, நன்னன் என்னும் மன்னன் தோட்டத்தில் இருந்த
மாமரத்திலிருந்து விழுந்து, ஆற்றுநீரில் அடித்து வந்த
மாங்காயைத் தின்றுவிட்டாள்.

இதனால் உண்டாகிய குற்றத்திற்காக அப்பெண்ணின்
தந்தை, எண்பத்தொரு களிற்று யானைகளையும்,
அப்பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான
பாவையையும் கொடுத்தான்.

அதனை ஏற்காத மன்னன் அப்பெண்ணைக் கொலை
செய்தான். அதனால், நன்னன் மீண்டுவர முடியாத
கொடிய நரகத்திற்குச் சென்றான். அத்தகைய
நரகத்திற்கு நம் அன்னையும் போவாளாக' என்றாள்.
-
-------
"மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றென்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே' (குறுந்- 292)
-
--------
தலைவனைச் சந்திக்க முடியாத வகையில் தலைவிக்குப்
பாதுகாப்பு மிகுந்திருக்கிறது என்பதை அன்னையின்
செயல் மூலம் தலைவனுக்கு உணர்த்தினாள்.

இதன் மூலம் இரவில் இனியும் தலைவியைச் சந்திக்க
முடியாது என்பதைத் தலைவன் கேட்கும்படித் தெளிவுபட
தோழி கூறிவிட்டாள். மேலும், தலைவனைச் சந்திக்க
விடாமல் தடுக்கும் அன்னை, பெண்ணைக் கொலை
செய்த நன்னன் அடைந்த நரகத்தை அடைவாள் எனவும்
கூறப்பட்டுள்ளது.

இரவில் தலைவன் வரவை ஊரினர் அறிந்தால்
"அலர்' ஏற்பட்டு தலைவிக்கு அவப்பெயர் உண்டாகும்.
மேலும், தலைவன் திருமணத்தை நீட்டித்துக்கொண்டே
சென்றால், தலைவி துயரப்பட்டு இறக்கவும் நேரிடலாம்.

அதனால், தலைவனுக்குப் பாவம் ஏற்படலாம் எனக்
கூறுவதாகவும் அமைகிறது. இக்கூற்றைக் கேட்ட
தலைவன் உன்னை விரைவில் மணம்செய்து கொள்வான்
எனக்கருதவும் இடமுண்டு.

இன்றைக்கும் ஆண்களில் சிலர் பெண்களிடம்
"திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறி, காலம்
நீட்டித்து ஏமாற்றுவதைக் காணமுடிகிறது.

இதனால், பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்
குறியாகி விடுகிறது. இத்தகைய பெண்பாவம்
பொல்லாதது என்கிற செய்தியைத்தான் புலவர்கள்
அன்றே நம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
-
---------------------------

- முனைவர் கி. இராம்கணேஷ்
நன்றி- தமிழ்மணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52327
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை