உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Today at 11:02 am

» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

Admins Online

தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்

தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும் Empty தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:53 pm

மனிதர்களின் மூளையும், மனதும் அமைதியாய் இருக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் போதுதான். தூங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினை என்றால் அது குறட்டை விடுவதுதான். கிட்டதட்ட அனைவருமே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது மட்டுமின்றி அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அதுதான் தூக்கத்தில் பேசுவது.

குறட்டை விடுவது அளவிற்கு இது பொதுவான பிரச்சனையாக இல்லையென்றாலும் இப்பொழுது இளைஞர்களிடையே இது அதிகம் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக பணிச்சுமை மற்றும் அளவில்லாத இன்டர்நெட் உபயோகமும்தான். இந்த பதிவில் தூக்கத்தில் பேச காரணம் என்ன என்பதையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.

தூக்கத்தில் பேசுதல்

தூக்கத்தில் பேசுவது என்பது சம்மிலாக் என அழைக்கப்படும் பராசோமனியாவின் ஒருவகையாகும். தூக்கத்தில் செய்யும் அசாதரண செயல் என்பது இதன் பொருள். மனஅழுத்தம், சோர்வு, மதுப்பழக்கம், தூக்கமின்மை என இது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இது மட்டுமின்றி மரபணு மூலமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம். மருத்துவரீதியாக இதில் எந்த பாதிப்பும் இல்லை.

தெரிந்து கொள்ளவேண்டியது

தூக்கத்தில் பேசுபவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் அல்லது பேசுகிறார்களா என்பது 90 சதவீதம் தெரிய வாய்ப்பில்லை. காலையில் எழுந்து நடந்ததை கூறினால் இல்லவேயில்லை என்று வாதிடுவார்கள். பகல் நேரங்களில் பேசுவதற்கும், தூக்கத்தில் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இந்த பேச்சு அன்று நடந்த சம்பவங்கள் பற்றியோ அல்லது தூக்கத்தில் வரும் கனவுகள் பற்றியோ இருக்கலாம்.

யாரெல்லாம் தூக்கத்தில் பேசுவார்கள்?

தூக்கத்தில் பேசுவது என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். ஆனால் புள்ளி விவரங்களின் படி பெண்களை விட ஆண்களும், குழந்தைகளும் தூக்கத்தில் அதிகம் பேசுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் தூக்கத்தில் அதிகம் பேசுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தூக்கத்தில் ரகசியங்களை உளறிவிடுவார்களா?

இந்த பயம் பெரும்பாலும் ஆண்களுக்கே இருக்கும். ஆனால் இதில் ஆறுதலான செய்தி யாதெனில் தூக்கத்தில் நீங்கள் ரகசியங்களை ஒருபோதும் பேசமாட்டிர்கள். சொல்லப்போனால் நீங்கள் பேசுவது பெரும்பாலும் யாருக்கும் புரியாது. உங்கள் துணையோ அல்லது பெற்றோரோ நீங்கள் பேசுவது என்ன என்பதை கண்டறிய முயற்சித்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சிலசமயம் நீங்கள் பேசுவது முழுமையாக கற்பனையாக கூட இருக்கலாம். எனவே நீங்கள் பேசியதை கண்டுபிடித்து விட்டேன் உன்மையை கூறு என்று உங்கள் மனைவி கேட்டால் நீங்களாக உளறி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

வெளிப்புற காரணங்கள்

தூக்கத்தில் பேச பல வெளிப்புற காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு அதிக மனஅழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, பாதி தூக்கம் போன்றவை காரணமாக இருக்கலாம். குறிப்பாக மது அருந்திவிட்டு தூங்கும்போது இந்த பிரச்சினை அதிகம் ஏற்படலாம். மேலும் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புள்ளது.

மரபணு

ஒருவேளை உங்கள் பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது தாத்தாவுக்கோ இந்த பிரச்சினை இருந்தால் உங்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தந்தைக்கு இந்த பிரச்சினை இருந்தால் குழந்தைக்கு இந்த பிரச்சினை ஏற்பட 90 சதவீத வாய்ப்புள்ளது.

தூக்க வியாதிகள்

தூக்கம் தொடர்பான வியாதிகளான அப்னியா, குழப்பநிலை, REM தூக்க நிலை போன்ற வியாதிகள் இதனை ஏற்படுத்தலாம். இதில் முக்கியமான ஒன்று கெட்ட கனவுகள், நீங்கள் தூக்கத்தில் பேசுவது பெரும்பாலும் உங்கள் கனவின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.

பயம்

எந்த வயதினரையும் தூக்கத்தில் பேச வைக்க கூடிய ஒரு உணர்வு பயம் ஆகும். பேய் படம் பார்த்தாலோ அல்லது பயமுறுத்தும் ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்தாலோ அது அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக தூக்கத்தில் பேச தொடங்குவார்கள்.

மனநலம்

இளைஞர்கள் தூக்கத்தில் பேசுவது என்பது அவர்கள் மனநலம் தொடர்பான ஒன்றாக கருதப்படுகிறது. இது அவர்களின் மனதை வெகுவாக பாதிக்கக்கூடும். இதை சாதாரணமான ஒன்றாக நினைக்க கூடாது.

மருந்துகள்

நீங்கள் சாப்பிடும் சில மருந்துகள் கூட உங்களை தூக்கத்தில் பேச தூண்டலாம். குறிப்பாக மாண்டேலுக்காஸ்ட் என்னும் ஆஸ்த்மாவுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து பார்சோம்னியாவை உண்டாக்கக்கூடும். இதன் விளைவாக தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

ஆபத்தானதா?

மருத்துவரீதியாக பார்க்கும்போது இது ஆபத்தானதல்ல. ஆனால் இது உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது அருகில் தூங்குபவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

தடுக்கும் முறைகள்

இதனை தடுப்பது என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. முதலில் நீங்கள் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்தவும், மது அருந்தும் பழக்கத்தை குறைத்து கொள்ளுங்கள், மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வையுங்கள், இது எதுவுமே பயன் தரவில்லை எனில் மருத்துவரை நாடுங்கள், மருந்துகளின் மூலமும் இதனை சரி செய்யலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை