உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by T.N.Balasubramanian Today at 8:38 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by T.N.Balasubramanian Today at 8:24 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Today at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Mon Sep 03, 2018 11:09 pm

First topic message reminder :


ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

ஜோதிடம் என்பது கலை. அந்தக் கலையைப் பயில்வது சுலபம். சுவாரஸ்யம். ஜோதிடம் என்பது கணக்கு. அந்தக் கணக்கை நாமே போட்டு, விடை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையை, நம் வாழ்க்கையை நாம் வாழாமல் எப்படி? ஆகவே ஜோதிடம் குறித்து உங்களுடன் பேசுவதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷமே!

இந்தத் தொடரில், ஜோதிடத்தைப் பற்றியும் ஜோதிடத்தில் உள்ள சில தோஷங்கள் பற்றியும் பேசுவோம்.

ஜோதிட ரீதியாக உள்ள சில தோஷங்கள் பற்றி சிலர் அறியாமையால் குழப்பங்களை ஏற்படுத்தி வீண்பயத்தை பரப்புகிறார்கள்.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரிவான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும், உங்கள் முன் வைக்கப் போகிறேன்.

இந்தத் தொடர் மூலமாக, உங்கள் குழப்பங்களுக்கு விடை காணவும் தேவையற்ற பயங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜோதிடம் என்பது எத்தனை எளிமையானது, எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்களே உணருவீர்கள். உங்கள் ஜாதகத்தை உங்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்று முழுமையாகப் பேசுவோம்!

குரு வாழ்க! குருவே சகலமும்! குருவே துணை!

முதலில் எல்லோருக்கும் உள்ள ஆரம்பக் கேள்வி... ஜோதிடம் என்றால் என்ன? ஒருவகையில்... இதுதான் ஆரம்பக் கல்வி!

வாழ்க்கை என்னும் இருள் சூழ்ந்த பாதைக்கு வழிகாட்டுவது ஜோதி என்னும் ஜோதிடம்! ஜோதி என்றாலே நெருப்பு. இந்த பிரபஞ்சம் இயங்குவது, கிரகங்கள் இயங்குவது, என அனைத்துமே சூரியன் எனும் ஜோதியால்தான்.

ஒருவருக்கு ஜாதகத்தைக் கணிக்கும்போது, லக்னம் என்னும் புள்ளியிலிருந்தே ஜாதகம் இயங்கும்.

இந்த லக்னம் என்பது சூரியனின் ஒளிப்புள்ளி. எனவே லக்னம் என்பதை உயிர் என்னும் ஆத்மா என்று சொல்வதே பொருந்தும். அதனால்தான் சூரியனுக்கு ஆத்மகாரகன் என்றே பெயர்.

இப்படி நம் உயிர் தொடங்கி உலகின் அனைத்து இயக்கங்களும், கிரகங்களும், அந்த கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களும், சூரியனின் தலைமையைக் கொண்டே இயங்குகின்றன.

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள 12 ராசிகள், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் அமைவைப் வைத்தே ஒரு ஜாதகம் கணிக்கப்படுகிறது.

இப்படிக் கணிக்கப்படும் ஜாதகங்களில் நம்முடைய எதிர்காலம் முதலான அனைத்து விஷயங்களும் உள்ளன. எந்த நேரத்தில் எந்த பலனைத் தரவேண்டும் என்பதை தசாபுத்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எப்படித் தரவேண்டும் என்பதை கோச்சார கிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

விதி, மதி, கதி என்ற மூன்று அம்சங்களே ஜோதிடத்தில் பிரதானமானது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்த வல்லுநர்கள்.

1. விதி என்பது நமக்கு என்ன விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுவது.

2. மதி என்பது இப்படி விதிக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்பதைக் காட்டுவது.

3. கதி என்பது மாற்றியமைக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவது என்பதைக் குறிக்கிறது.

இப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களில் தோஷங்கள் என சில அமைப்புகளை ஜோதிடர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

என்னென்ன தோஷங்கள்?

· செவ்வாய் தோஷம்.

· ராகு-கேது தோஷம்.

· சனி தோஷம்.

· ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

நாம் இப்போது பார்க்கப்போவது இந்த தோஷங்கள் என்ன செய்யும்? இந்த தோஷங்கள் உண்மையிலேயே பார்க்கப்படவேண்டியதா? தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? கவலைப்பட தேவையில்லையா? தோஷத்தை மீறினால் ஏதாவது பாதிப்பு வருமா? பாதிப்பு வரும் என்றால் அதற்குப் பரிகாரம் உண்டா? என பலவிதமாக ஆராய்ந்து எளிமையாகவும், உங்களுக்கு புரியும்படியாகவும் விளக்கிச் சொல்லப்போகிறேன்.

முதலில் செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது தான்.

அப்படி இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?

உண்மையில்... செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.

தோஷம் என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது. சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.

ஒருவர் ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம் உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.

உண்மையில், முன்காலத்தில் சுக்கிரனுக்கும், செவ்வாய் தோஷம் பார்க்கப்பட்டு வந்தது. அப்படி சுக்கிரனுக்கும் சேர்த்து பார்க்கப்படும் பட்சத்தில் இங்கு ஒருவருடைய ஜாதகம் கூட, செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கவே முடியாது.

காலப்போக்கில் சுக்கிரனுக்கு... செவ்வாய் தோஷம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது லக்னம் மற்றும் ராசிக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.

சாபம் என்றால் சாப விமோசனம் இருப்பது போல், தோஷம் என்றால் தோஷ நிவர்த்தி அல்லது விமோசனம் கண்டிப்பாக உண்டு.

நாம் ஏற்கனவே கூறியபடி லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாக” சொல்லிவிட முடியாது.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மிதுனம், கன்னி லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள் உண்டு.

இன்னும் தோஷநிவர்த்திகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:55 am

தமிழகத்தில் குலதெய்வமாக வழிபடும் சாமிகளின் எண்ணிக்கை 1100 க்கும் மேல் உள்ளது என்பதாக அறிகிறேன். இது நான் தெரிந்துகொண்டது. இன்னும் கூட இருக்கலாம்!

முதலில் குலதெய்வம் என்பவர் யார்? அவர் ஆகாயத்தில் இருந்து வரவில்லை.

அவர் உங்கள் குலம் காக்க உயிர்த் தியாகம் செய்த உங்கள் குடும்பத்தின் முன்னோர் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

அல்லது உங்கள் குலம் தழைக்க அல்லது ஊரைக் காக்க தன் உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஆவார்.

என்ன இருந்தாலும் இறந்தவர் ஆவியானது ஊருக்குள் வரக்கூடாது என்ற கோட்பாட்டின் படி, எல்லையில் தங்கி உங்கள் ஊரை அல்லது உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்.

சரி எப்போதெல்லாம் குலதெய்வத்தை வணங்க வேண்டும்?

‘அதான் வருடத்துக்கு ஒருமுறை திருவிழாவின் போது நாங்கள் முறையாக வழிபாடு செய்கிறோமே... அப்புறம் என்ன?’ என்பவர்களுக்கு...

உங்கள் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியும் உங்கள் குலதெய்வத்தின் ஆசியுடன்தான் நடைபெற வேண்டும்.

உங்கள் குழந்தை அல்லது பேரன் பேத்திகளுக்கு முதல் மொட்டை, காதுகுத்து உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் தான் நடக்கவேண்டும்.

நீங்கள் வீடு கட்டியவுடன் அல்லது வாங்கியவுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடம் உங்கள் குலதெய்வக் கோயில்.

உங்கள் பிள்ளைகள் உயர்கல்வி கற்கச் செல்கிறார்களா? குலதெய்வ வழிபாடு செய்த பிறகு துவக்குங்கள்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்துள்ளதா. அட... வரவே இல்லை என அலுத்துக் கொள்கிறார்களா? உடனே உங்கள் தெய்வத்தைப் பார்த்து வாருங்கள்.

புதிய தொழில் தொடங்க இருக்கிறீர்களா? அனுமதியை உங்கள் குலதெய்வத்திடம் பெறுங்கள்.

பெண் பிள்ளை பூப்பெய்து விட்டாளா? நல்ல வாழ்வு அமைய வேண்டும் என உங்கள் சாமியிடம் வேண்டுங்கள்.

இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் குலதெய்வத் தொடர்பை உறுதிபடுத்திக்கொண்டே இருங்கள். எல்லா நலமும், வளமும், அருளிக்கொண்டே இருப்பார் அந்தக் கண்கண்ட தெய்வம்.

ஒருசிலர் எங்கள் குலதெய்வம் திருப்பதி, ஶ்ரீரங்கம் எனச் சொல்கிறார்கள். அது இஷ்ட தெய்வம். இருந்தாலும் குலதெய்வம் தெரியாதவர்கள் இப்படி இஷ்ட தெய்வ வழிபாடு செய்து இந்த “வணக்கத்தை என் குலசாமியிடம் சேர்த்துவிடு” என வேண்டிக் கொள்ளலாம். அந்த வழிபாடு அனைத்தும் உங்கள் குலதெய்வத்தைச் சென்றடையும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே நம்பிக்கையோடு செய்யப்படும் எந்தச் செயலும் எந்த வகையிலும் நமக்கு நன்மையே தரும்.

உங்கள் குலம் தழைக்கச் செய்யும் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்துகொண்டே இருங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 1:00 am

தாரை... அள்ளிக்கொடுக்கும்!

நாம் இதுவரை செவ்வாய்தோஷம், ராகுகேது தோஷம், குலதெய்வம் அறிதல் என்று பலவிதமான ஜோதிடத் தகவல்களைப் பார்த்தோம்.

எனக்கு ஒரு மனநிறைவை தந்த விஷயம் என்னவென்றால், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் இவற்றைக் கண்டு பயந்திருத்தோம், இதற்கு இனி முக்கியத்துவம் தரப்போவதில்லை.

இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தத்தான் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது, அது வெற்றி அடைந்ததாகவே நம்புகிறேன்.

இனி நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இரண்டு பதிவுகளுக்கு முன் நட்சத்திரம் பற்றி ஆரம்பித்தோம்.

அதில் 27 நட்சத்திரங்களை அறிமுகம் செய்தோம். 28 வது நட்சத்திரம் ஒன்று உள்ளது என்ற தகவலையும் தந்திருந்தேன்.

அப்போது 27 நட்சத்திரங்களையும் வரிசையாகத் தந்திருந்தேன், இப்போது 27 நட்சத்திரங்களையும் ஜோதிட ரீதியிலான தொகுப்பாக பிரித்துத் தருகிறேன்.

அப்போதுதான் உங்களுக்கு புரியும், புரிந்ததை நீங்களே பயன்படுத்தவும் முடியும்.

1) அஸ்வினி-மகம்- மூலம்-கேதுவின் நட்சத்திரங்கள்

2) பரணி-பூரம்-பூராடம்- சுக்கிரன்

3) கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்—சூரியன்

4)ரோகிணி-அஸ்தம்-திருவோணம்- சந்திரன்

5) மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம்- செவ்வாய்

6)திருவாதிரை-சுவாதி-சதயம்— ராகு

7)புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி— குரு

8) பூசம்-அனுசம்-உத்திரட்டாதி- சனி

9) ஆயில்யம்-கேட்டை-ரேவதி— புதன்


இப்போது உங்கள் நட்சத்திரமும் அதன் அதிபதி கிரகம் யார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

இதுவரை உங்கள் நட்சத்திரத்தை கோயிலில் அர்ச்சனைக்கும், திருமணப் பொருத்தத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள்.

இப்போது முற்றிலும் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் விதமான தகவல்களை அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

இங்கே தாரை என்னும் விஷயத்தையும், உங்களுக்கு அனுசரணையான, ஆதரவான நட்சத்திரங்கள் எதுவென்றும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

தாரை என்றால் என்ன? தாரை என்றால் கொடுப்பது என்று பொருள்.

தாரைவார்த்து கொடுப்பது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது தம்மிடம் இருப்பதை அப்படியே அள்ளிக்கொடுப்பது என்று பொருள்.

அது நன்மையோ அல்லது தீமையோ தயவுதாட்சண்யம் பார்க்காது அப்படியே வாரிக் கொடுத்துவிடும்.

என்னென்ன தாரைகள் உள்ளது என பார்ப்போம்,

1 வது தாரை - ஜென்ம தாரை (உங்கள் ஜென்ம நட்சத்திரம்)

2 வது தாரை - சம்பத்து தாரை ( உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம்)

3 வது தாரை - விபத்து தாரை —- மூன்றாவது நட்சத்திரம்

4 வது தாரை- ஷேம தாரை — நான்காவது நட்சத்திரம்

5 வது தாரை- பிரத்தியக்கு தாரை - 5 வது நட்சத்திரம்

6 வது தாரை - சாதக தாரை - 6 வது நட்சத்திரம்

7 வது தாரை- வதை தாரை -7 வது நட்சத்திரம்

8 வது தாரை- மைத்ர தாரை - 8 வது நட்சத்திரம்

9 வது தாரை- அதி மைத்ர தாரை - 9 வது நட்சத்திரம்.


உங்கள் நட்சத்திரம் எதுவோ அதன் இணை நட்சத்திரங்களையும் உங்கள் நட்சத்திரமாக கருதவேண்டும்.

உதாரணம்:- உங்கள் நட்சத்திரம் அசுவினி என்றால் மகம், மூலம் இவையும் உங்கள் நட்சத்திரமாகச் செயல்படும்.

அதாவது அசுவினி - ஜென்ம நட்சத்திரம்

மகம்- அனு ஜென்ம நட்சத்திரம்

மூலம்- திரி ஜென்ம நட்சத்திரம்

இப்படி உங்கள் நட்சத்திரமும் இணை நட்சத்திரங்களும் உங்களுக்கு செயல்படும்.

உங்கள் ஜென்ம, அனுஜென்ம,திரிஜென்ம நட்சத்திரங்களில் சந்திரன் பயணிக்கும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களை இதுவரை உணர்ந்திருக்க மாட்டீர்கள்.

அதை ஏதோ அன்றாட நிகழ்வு போல் கடந்திருப்பீர்கள்.

இனி கவனியுங்கள்..,

அந்த நாட்களில் படபடப்பு, பதட்டம், சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், சுள்ளென்ற கோபம் உருவாகுதல், எரிந்து விழுதல், அலைச்சல் அதிகரித்தல், தாகம்அதிகமாகுதல், அதிக சிறுநீர் வெளிப்பாடு, மாலை நேரத்தில் அமைதி திரும்புதல்., மகிழ்ச்சி வெளிப்படுதல். இது போன்றவை அன்றைய தினம் உண்டாகும்.

இது ஒரு அறிமுகம்தான், இன்னும் ஏராளமாய் அறிவோம்.

ஒரு வேண்டுகோள் நான் மேலே கொடுத்த நட்சத்திர அட்டவணையையும், தாரை விபரங்களையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் அடுத்தடுத்த பதிவுகள் உங்களுக்குத் தெளிவாகும்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 1:08 am


27 நட்சத்திரக்காரர்களும்... அவர்களின் வெற்றிநாட்களும்!உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.  

புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை.  வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம்

பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம் மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி,சதயம்

திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்  புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூசம், அனுசம்,உத்திரட்டாதி

பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ஆயில்யம்,கேட்டை,ரேவதி

ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் மகம், மூலம்,அசுவினி

மகம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூரம்,பூராடம்,பரணி

பூரம் :-  இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சுவாதி,சதயம்,திருவாதிரை

சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் கேட்டை,ரேவதி,ஆயில்யம்

கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் மூலம், அசுவினி,மகம்

மூலம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூராடம்,பரணி,பூரம்

பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் திருவோணம், ரோகிணி,அஸ்தம்

திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் சதயம்,திருவாதிரை,சுவாதி

சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்

பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, பூசம், அனுசம்

உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ரேவதி,ஆயில்யம்,கேட்டை

ரேவதி :-    இதன் சம்பத்து நட்சத்திரங்கள் அசுவினி,மகம்,மூலம்இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ... அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.

இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.

நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்த நட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!

உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.

சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன் இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும் சிறப்புமாக்குவோம்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 1:18 am

நீங்கள் வணங்கவேண்டிய அதிதேவதை இவர்கள்தான்!


செல்வம் வளம் கொழிக்க, எடுத்த காரியங்களில் வெற்றிபெற, உங்கள் கனவுகள் நனவாக, எப்போதும் மகிழ்ச்சி பொங்க, குடும்பத்தில் அமைதியும் வளமும் நிறைவாக இருக்க, மொத்தத்தில் எல்லாமும் பெற்று நிறைவாய் வாழ இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

ஆக, எப்படி இறை அருளை பெறுவது?

இதோ... பார்ப்போம்.

உங்களில் ஒரு சிலருக்கு நிச்சயம் ஒரு விஷயம் தெரியும் ...

உங்கள் நண்பரோ அல்லது உங்கள் அருகில் உள்ள வீட்டினரோ புதியதாக ஒரு கோயிலுக்குச் சென்று வந்ததும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த துயரங்கள் நீங்கி வளமான வாழ்வு அமைந்திருக்கும். நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

இது எதனால் ஏற்பட்டது?

ஒன்று அவரின் நட்சத்திரத்தின் அதிதேவதை தொடர்பான அல்லது அவரின் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான சம்பத்துதாரை நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வந்திருப்பார்,

அதன் காரணமாக அவரின் வாழ்வு உயரவும், மேம்படவும் செய்திருக்கும்.

இப்படி உங்கள் நட்சத்திரத் தொடர்பான தெய்வம் எது என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்கள் நட்சத்திரம் தொடர்பான தெய்வத்தை அறிந்து கொண்டு, அந்தத் தெய்வத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

அதேபோல், சம்பத்துதாரை நட்சத்திரத்தின் தெய்வ வழிபாடு உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் வாழ்வை வளமாக்கும் என்பது உண்மை.

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான அதிதேவதை யார் என்று பார்க்கலாமா?

நட்சத்திரம் அதிதேவதை


அசுவினி சரஸ்வதி


பரணி துர்கை


கார்த்திகை அக்னி


ரோகிணி பிரம்மா


மிருகசீரிடம் சந்திரன்


திருவாதிரை நடராஜர்


புனர்பூசம் அதிதி


பூசம் பிரகஸ்பதி (குரு)


ஆயில்யம் ஆதிசேஷன்


மகம் பித்ருக்கள்,சுக்கிரன்


பூரம் பார்வதி


உத்திரம் சூரியன்


அஸ்தம் சாஸ்தா


சித்திரை விஷ்வகர்மா


சுவாதி வாயு


விசாகம் முருகன்


அனுசம் ஶ்ரீலஷ்மி


கேட்டை இந்திரன்


மூலம் நிருதி


பூராடம் வருணன்


உத்திராடம் கணபதி


திருவோணம் விஷ்ணு


அவிட்டம் வசுக்கள்


சதயம் எமன்


பூரட்டாதி குபேரன்


உத்திரட்டாதி காமதேனு


ரேவதி சனிபகவான்


இப்போது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அறிந்துகொண்டீர்கள். இனியென்ன... அந்தத் தெய்வத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நினைக்க மறக்காதீர்கள். வழிபட மறக்காதீர்கள்.

அதேபோல உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர தேவதை தொடர்பான ஆலயங்களுக்கு சென்று வர 100 சதவிகித வெற்றியை அடைவீர்கள் என்பதும் சத்தியம்.

பூசம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை குரு பகவான். இவரையும் வணங்கி , இவருக்கு சம்பத்து நட்சத்திரமான ஆயில்யத்தின் தேவதையான “ஆதிசேஷனையும்” வணங்கி வந்தால், எல்லாம் நன்மையாகும். எல்லாக் காரியமும் ஜெயமாகும்.

ஆனால் ஆதிசேஷனுக்கு எங்கு போவது? எங்கும் போக வேண்டாம் நம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆதிசேஷனின் மேல் சயனித்து அருள் பாலித்து வருகிறார் அல்லவா. அவரை தரிசிக்கும் போது ஆதிசேஷனையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். அவரிடமும் நம் கோரிக்கையையும் கண்ணீரையும் வைப்போம். கை மேல் பலன் தருவார் ஆதிசேஷன்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குபேரனையும் வணங்கி, உத்திரட்டாதியின் காமதேனுவையும் வணங்க வேண்டும்.

இப்படி தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வணங்கி வாருங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் நிம்மதியும் நிறைவுமாக வாழ்வீர்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 1:22 am

எடுத்த காரியம் ஜெயிக்கணுமா? ‘அபிஜித்’ நேரத்தை பயன்படுத்துங்க!


தாரபலம் என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள்.

இந்த தாரபலத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி என அமைத்துக்கொள்ள எல்லாம் நன்மையாகும். எல்லாம் நன்மைக்கே!

நான் 28 வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா! அதன் பெயர் என்ன? அது எந்த ராசியில் இருக்கிறது? என பார்ப்போம்.

அந்த நட்சத்திரத்தின் பெயர் “அபிஜித்” நட்சத்திரம்.

இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.


இல்லையே ... மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள்,திருவோணம் 1,2,3,4 ஆகிய பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் மட்டுமே இருக்கிறது என்கிறீர்கள்தானே...

இந்த அபிஜித் நட்சத்திரம் சூட்சும நட்சத்திரம் ஆகும்.

இது மகர ராசியில் உத்திராடம் 4 ஆம் பாதம், திருவோணம் 1 ம் பாதத்தில் உள்ளது,

எனவே உங்களில் யார் உத்திராடம் 4, திருவோணம் 1 என்ற நட்சத்திரப் பாதங்களில் பிறந்திருக்கிறீர்களோ அவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள் ஆவார்கள்.


சரி என்ன செய்யும் இந்த அபிஜித்?

வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்காதவர்கள் என எவருமே இல்லை. இதில் துயரங்களைக் கண்டு துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர்.

துன்பமோ , துயரமோ எது வந்தாலும் அதன் பாதிப்பை சிறிதும் உணராதவர்கள், இந்த அபிஜித் நட்சத்திரக்காரர்கள்.

ஆக, துன்பத்தை மனம் உணராவிட்டாலே நோய் முதற்கொண்டு எந்த பாதிப்பும் நம்மை அணுகாது.

இந்த உத்திராடம், திருவோணத்தில் பிறந்த தெய்வங்களைப் பாருங்களேன்.

உத்திராடத்தில் கணபதி...

இவரை மஞ்சளிலும் பிடித்து வணங்கலாம், மண்ணிலும் பிடித்து வணங்கலாம், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.

திருவோணத்தில் பிறந்தவர் மகாவிஷ்ணு. இவரையும் நீங்கள் அறிவீர்கள்.

சதா சயனத்தில் இருப்பவர், எதைப்பற்றியும் கவலைப்படாத தோற்றம், ஆனால் உள்ளுக்குள் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்.

ஆக... இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடத்தேவையில்லை,

இவர்களுக்கு அனைத்தும் தேடாமலே கிடைக்கும்.

எனவே எல்லாம் இறைவன் செயல் என்று இருந்தாலே சகல காரியங்களும் நன்மையாகவே நடந்தேறும்.

இந்த அபிஜித்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.

ஏதோ ஒரு சூழ்நிலை, திடீர்த் திருமணம், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

அந்த நாள், தோஷமுள்ள நாளாக இருந்தாலும் இந்த அபிஜித் நட்சத்திரநாள் அந்த தோஷங்களைக் களைந்துவிடும்.

ஆனால் இது மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அதுவரை காத்திருக்க வேண்டுமா?

இல்லை... ஒவ்வொரு நாளும் அபிஜித் நேரம் என்ற ஒரு சுப நேரம் உண்டு.

அது எந்த நேரம் என்றால் .. மதியம் 12 மணி முதல்12-30 மணிவரை உள்ள நேரமே அபிஜித் நேரம் ஆகும்.

இந்த அபிஜித் நேரத்திற்கு எந்த தோஷமும் இல்லை. எந்த தோசமும் இந்த நேரத்தை கட்டுப்படுத்தாது,

ராகுகாலம், எமகண்டம்,கரிநாள், பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை,சனிக்கிழமை என எதுவும் இந்த அபிஜித்தை கட்டுப்படுத்தாது.

எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த அபிஜித் நேரத்தையும், அபிஜித் நட்சத்திர நாளையும் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். எடுத்த செயல்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 1:42 am

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்களேன்..!

நாம் சென்ற பதிவில் அபிஜித் நேரத்தை பற்றிப் பார்த்தோம், இந்த நேரத்தைப் பயன்படுத்தி அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம் என்றும் அறிந்துகொண்டோம்.

இதுபோன்று வேறு ஏதும் சுப நேரம் உண்டா?

ஆம் இருக்கிறது.

ஒருநாளில், இரண்டுமுறை இந்த முகூர்த்த நேரம் வரும்.

அது என்ன முகூர்த்தம்? அதன் பெயர் “கோதூளி லக்னம்.”

காலையில் 24 நிமிடமும், மாலையில் 24 நிமிடமும்

இந்த முகூர்த்தம் ஒவ்வொரு நாளும் வரும்.

சூரியன் உதித்த முதல் 24 நிமிடமும், சூரியன் அஸ்தமித்த பின் உள்ள 24 நிமிடமும் கோதூளி லக்ன நேரம் எனப்படும்.

அது என்ன கோதூளி லக்னம்?

கோ என்றால் பசு; தூளி என்றால் தூசு,


பசுக்கள் காலையில் கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் போது உண்டாகும் தூசி படலம் சூரியனின் வெளிச்சத்தையே மறைத்துவிடுமாம்.

இப்படி ஏற்படும் தூசி படலத்தால், கிரகங்கள் தரும் எந்த பாதிப்பையும்(நன்மை,தீமை) இந்தப் படலம் தடுத்துவிடும் ஆற்றல் உள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே, இந்த நேரத்தில் செய்யப்படும் எந்த சுபகாரியங்களும் எந்தப் பழுதும் இல்லாமல் முழுமையடையும் என்பது நம்பிக்கை.

இது மாலை நேரத்திற்கும் பொருந்தும்( மாலையில் மேய்ச்சலில் இருந்து பட்டிக்குத் திரும்பும் போதும் இது நிகழும்).

இந்த முகூர்த்தத்தை அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். திருமணம், கிரஹப்பிரவேசம், ஆன்மிகப் பயணம் என சகலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு, நல்ல நல்ல பலன்களைப் பெறலாம்.

மிக முக்கியமாக கல்வி பயல, மந்திரங்கள் ஜபிக்க, பூஜாபலன்கள் நம்மை முழுமையாக வந்தடைய, இறைவனைத் தரிசிக்க, நேர்த்திக்கடன் செலுத்த, பரிகாரங்கள் செய்ய, பரிகாரங்கள் தொடர, இந்த நேரத்தை பயன்படுத்துங்கள், அனைத்தும் வெற்றியாகவே நடந்தேறும்.

இதை தவிர “பிரம்ம முகூர்த்தமும்” மிக முக்கியமானதே என்பதை அறிவீர்கள்தானே.

பிரம்ம முகூர்த்தம் என்பதைப் பலரும் காலை 4-30 முதல் 6 மணி வரை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அது தவறு, பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 மணிமுதல் 4-30 வரையிலான நேரம் என்பதே சரி. இதுவும் பிழையில்லாத முகூர்த்தமே. இதில் அனைத்து சுப காரியங்களும் செய்யலாம், (பரிகார ஹோமங்கள் தவிர).

இந்த பிரம்ம நேரத்தில்தான் அனைவரும் தூக்கம் கலைந்து எழ வேண்டும். பிரம்ம நேரத்தில் எழுபவர்களுக்கு வாழ்நாளில் கஷ்டம் என்பது வராது. வந்தாலும் பாதிப்பைத் தராமல் எளிதாக கடந்து சென்றுவிடும்.

தடைகளே வாழ்க்கையாக உள்ளதா?


திருமணத்தடை, கல்வித்தடை, வேலையில் தடை, தொழில் நிலையில்லாமை, புத்திரபாக்கியமின்மை, வியாபாரத்தில் வளர்ச்சியின்மை, பணத்தட்டுப்பாடு, கடன் தீராமல் இருப்பது, கொடுத்த கடன் வராமல் இருப்பது... என்று வாழ்க்கை முழுவதும் தடையாகவே இருக்கிறதா?

இப்படிப் பலவித தடைகளையும் நீக்கி, வாழ்வில் சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான்.

அதிகாலையில் “பிரம்ம முகூர்த்தத்தில்” எழுந்துவிடுங்கள்.

சரி...எழுந்து என்ன செய்வது?

இந்த நேரத்தில் எழ ஆரம்பித்துவிட்டாலே நான் ஏதும் சொல்லாமலே உங்கள் மனமானது எண்ணங்களை ஒருமுகப்படுத்தும். அன்றைய வேலைகளைப் பற்றி மனம் தானாகத் திட்டமிடும்.

அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். இந்த சிந்தனைதான் உங்கள் வளர்ச்சி. இது யாரும் சொல்லி வரவேண்டியதில்லை, உங்களுக்குள் இருக்கும் உங்கள் சக்தியை உணரவைக்கும் நேரம்இது. அற்புதமான தருணம் இது!

(தூக்கத்தில் இருந்து) எழுந்துதான் பாருங்களேன். வாழ்க்கை முழுவதும் எழுச்சிதான். விடியல்தான். சூர்யோதயம்தான். சுபிட்சம்தான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 1:47 am

உங்கள் நட்சத்திரம் என்ன? உங்கள் குணம் இதுதான்!உண்மையில் நட்சத்திரங்கள் என்பது உங்களை யாரெனக் காட்டக்கூடியவை. உங்கள் குணாதிசியங்களை அப்படியே உள்ளது உள்ளபடி, கண்ணாடியெனக் காட்டக் கூடியவை. உங்கள் உடல் மொழியைச் சொல்லிவிடும். உங்கள் குணத்தையேக் காட்டிவிடும்.

முதலில் இந்தப் பத்துப் பொருத்தங்கள் என்ன? அது தனிமனித வாழ்வில் என்ன செய்யும் என்பதைப் பார்க்கலாம்.

தசவித பொருத்தம் என்பது பத்துப் பொருத்தம். தசம் என்றால் பத்து. உண்மையில் இது 20 ஆக இருந்தது, தற்போது இது 10 ஆக குறைந்திருக்கிறது. இன்னும் சில காலங்களில் இது 5 ஆக மாறும் ( இப்போதே நான் உட்பட சில ஜோதிடர்கள் 3 பொருத்தம் மட்டுமே பார்க்கிறோம்)

1) தினப்பொருத்தம், 2)கணப்பொருத்தம், 3) மகேந்திர பொருத்தம், 4)ஸ்தரீ தீர்க்கம், 5)ராசி பொருத்தம், 6)ராசி அதிபதி பொருத்தம், 7) யோனி பொருத்தம், 8) ரஜ்ஜு பொருத்தம், 9) வசிய பொருத்தம் 10) வேதை பொருத்தம்.


மற்றும் நாடி, மரம் என்றெல்லாம் உண்டு.

இப்போது திருமணப் பொருத்தப் பாடம் நடத்தமாட்டேன். இதில் இருக்கும் சூட்சும ரகசியங்களை பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

தினம்:- இது நாம் ஏற்கெனவே பார்த்த தாரா பலம் பற்றியது. போதுமான வரை பார்த்துவிட்டோம். எனவே அடுத்து பார்க்கலாம்.

கணம்:- ஒருவருடைய தாங்கும் சக்தி அல்லது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் (மனதளவில்) பற்றி அறிந்து கொள்வது ஆகும்.

இதை பற்றி அறிவதற்கு முன்,

நீங்கள் என்ன கணம் என தெரிந்து கொள்ளுங்கள்.

கணம் மூன்று வகையாக உள்ளது.

1) தேவ கணம், 2) மனுஷ கணம், 3) ராஜச கணம்.

1) தேவ கணம்:- அசுவினி,மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம், அஸ்தம்,சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

இந்த 9 நட்சத்திரங்களும் தேவ கணத்தைச் சேர்ந்தது.

2) மனுஷ கணம்:- பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி. இந்த 9 நட்சத்திரங்களும் மனஷ கண நட்சத்திரங்களாகும்.

3) ராஜச கணம்:- கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை,விசாகம்,கேட்டை, மூலம், அவிட்டம், சதயம். இந்த 9 நட்சத்திரங்களும் ராஜச கணம் ஆகும்.

இப்போது நீங்கள் எந்த கணம் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

இந்த கணம் என்ன செய்யும்?

தேவகணம்:- மிக மென்மையானவர். அதிர்ந்து பேசாதவர். இரக்ககுணம் உடையவர். பிரதிபலன் எதிர்பாராமல் உதவுபவர். அதிர்ச்சிகளைத் தாங்காதவர். பய உணர்வு உள்ளவர். கடின உழைப்பு செய்யாதவர். ( ஆசிரியர். வங்கி பணி, அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர், மூளை உழைப்பு) மருத்துவரிடம் ஊசி போடும்போது தன்னை அறியாமல் அலறுபவர். போதைப் பழக்கம் பழகாதவர். ஆனால் போதைப் பழக்கம் பழகினால் மீள முடியாதவர். அந்த பழக்கத்தினால் தன் ஆயுளைத் தானே குறைத்துக்கொள்பவர். மிக மென்மையான தோல் உடையவர். தலைமுடி மிக மென்மையாக இருக்கும்.

மனுச கணம்:- ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுபவர். உதவும் மனப்பான்மை இருக்கும். இருந்தாலும் தயக்கப்படுபவர். சக மனித நட்பு உடையவர். மிதமான உழைப்பை உடையவர்.

அலைச்சல் மிகுந்த தொழில் , பயணத்தொழில், உணவகத்தொழில், தோல் சற்று கடின அமைப்பை உடையவர். எனவே ஊசி போடும் போது மெலிதாக சத்தம் போடுபவர். தலைமுடி பலமுறை வாரியபின் அடங்கும். போதை பழக்கம் “இருக்கும் ஆனால் இருக்காது “ தேவை என்றால் மட்டும் அல்லது அடுத்தவர் பணத்தில் என்றால் மட்டும் இந்தப் பழக்கம் இருக்கும். மனது வைத்தால் திருந்தலாம்.

ராஜச கணம்:- ஒற்றை வரியில் சொல்வதென்றால் இவருக்கு எதுவும் பிரச்சினையில்லை, அதாவது தான் செய்வதுதான் சரி என்ற மனப்பான்மையும், பிடிவாதமும் உண்டு. கடின உழைப்பாளி. வெயில், மழை, குளிர் என எதுவும் பாதிக்காது. பாதித்தாலும் விரைவில் மீண்டுவிடுவார். கட்டிடத் தொழில், உயரமான இடங்களில் வேலை, அரசியல், காவல், ராணுவம், மன தைரியம் மிக்க வேலைகளைப் பார்ப்பவர். மருத்துவரிடம் ஊசி போட்டால் ஊசி போட்டாச்சா என கேட்பவர் ( உறைக்காது). தோல் கடினமாக இருக்கும். தலைமுடி வாரவே தேவையில்லை. கோரைப்புல் போல, கம்பி போல “ரப்” பாக இருக்கும்.

போதை பழக்க வழக்கம் இவரை பாதிக்காது (அதற்காக போதைப் பழக்கத்தை பழக வேண்டாம், இது மானுட உடல் அமைப்புக்கான உதாரணம்) போதைப் பழக்கம் பழக மீளவும் மாட்டார். அதற்கான முயற்சியும் எடுக்க மாட்டார்.

இதில் நீங்கள் யார் என அறிந்து கொண்டீர்களா?

இதை நீங்களே உங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்னும் பார்க்கலாம் பல தகவல்களை...

தேவகணத்தைச் சேர்ந்தவர் மெல்லிய மனம், குணம் உடையவராகவும், பலம் குறைந்தவராகவும் இருப்பவருக்கு ராஜச கணம் உள்ளவரை இணைத்தால் என்னாகும்?

அது ஆணோ பெண்ணோ, ராஜசத்தின் பலத்தை தேவகணம் தாங்குமா? எந்த விதத்திலும் ஒன்றுக்கொன்று சேராது. சேர்ந்தாலும் மனதளவில் பாதிப்பு ஏற்படும். ( ராஜசம் முரட்டுத்தனமாக இயங்கும், தேவகணம் மெல்லியதாக(soft) இயங்கும்)

எனவே இது எதிரெதிர் துருவங்கள்.

ஆக தேவகணத்தை தேவகணத்தோடுதான் இணைக்கவேண்டும்.

மாற்று ஏற்பாடாக மனுச கணத்தை இணைக்கலாம்.

மனுச கணம் சற்று விட்டுக்கொடுத்துப் போகும். தேவகணத்தின் எண்ணத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

இந்த மானுசகணம் ராஜசத்தையும் அனுசரித்துப் போகும். எனவே ....

ராஜசம்= ராஜசம்+மானுசம்

தேவம்= தேவம்+ மானுசம்

மானுச கணம்= தேவம்+ ராஜசம்


இப்படி இணைந்த வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வராது. வந்தாலும் அனுசரித்துப் போகும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:04 am

'யோனிப்பொருத்தம்’ அவசியம்! ஏன்?

நாம் “கணம்” பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இப்போது யோனி பற்றி பார்க்கலாம்.

முதலில் யோனி என்றால் என்ன? உடற்கூறு, தாம்பத்யம் பற்றி முழுமையாக நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். புதிய தலைமுறை உருவாக இந்த யோனி மிகவும் முக்கியம்.

பெண்ணின் அந்தரங்கமே “யோனி”. இதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்பதே ஜோதிட விதி. ஜோதிட சாஸ்திரம்.

ஏன் இதை ஆணுக்குப் பார்க்கக்கூடாது? என்ன செய்ய! ஜோதிடம் கூறும் விதிமுறை அப்படி.

பெண்ணுக்குத்தான் ஆணின் ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படவேண்டும்.

ஆம், பெண்ணுக்குதான் ஆணின் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.

ஆணுக்கு பெண்ணின் ஜாதகம் பார்க்கக் கூடாது.

இதுல என்னங்க இருக்கு ரெண்டும் ஒண்ணுதானே...என்பவர்களுக்கு,

பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் 2 என வைத்துக்கொள்வோம். ஆனால் ஆணின் நட்சத்திரத்திற்கு அது 27 வது நட்சத்திரமாக வரும். இப்போது வித்தியாசம் புரிகிறது அல்லவா!

சரி, இப்போது யோனி பொருத்தம் ஏன் பார்க்கப்பட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

“பசி வர பத்தும் பறந்து போகும்” - இது பழமொழி. நாம் நினைப்பதுபோல் இது வெறும் வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடற்பசிக்கும் சேர்த்துத்தான் இது சொல்லப்பட்டிருக்கிறது.

ஆமாம்... நிறையாத வயிறு, நிறைவில்லாத மனம், திரும்பக் கேட்காத கடன், இறைக்காத கிணறு, சுரக்காத மடி, களை எடுக்காத வயல், கவனிக்கப்படாத பிள்ளை இவை அனைத்தும் பாழாகும் என்பது முன்னோர் வாக்கு.

சந்ததியை உருவாக்க முடியாதவர்கள், வாழ்க்கையானது விவாகரத்தில்தான் வந்து நிற்கும்.

சரி என்னதான் தீர்வு?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.

அஸ்வினி:- ஆண் குதிரை

பரணி:- ஆண் யானை

கார்த்திகை:- பெண் ஆடு

ரோகிணி:- ஆண் நாகம்

மிருகசீரிடம்:- பெண் சாரை

திருவாதிரை:- ஆண் நாய்

புனர்பூசம்:- பெண் பூனை

பூசம்:- ஆண் ஆடு

ஆயில்யம்:- ஆண் பூனை

மகம்:- ஆண் எலி

பூரம்:- பெண் எலி

உத்திரம்:- பெண் எருது

அஸ்தம்:- பெண் எருமை

சித்திரை:- பெண் புலி

சுவாதி:- ஆண் எருமை

விசாகம்:- ஆண் புலி

கேட்டை :- ஆண் மான்

மூலம்:- பெண் நாய்

பூராடம்:- ஆண் குரங்கு

உத்ராடம்:- கீரி,மலட்டு பசு

திருவோணம்:- பெண் குரங்கு

அவிட்டம்:-பெண் சிங்கம்

சதயம்:- பெண் குதிரை

பூரட்டாதி:- ஆண் சிங்கம்

உத்ரட்டாதி:- பெண் பசு

ரேவதி:- பெண் யானை


இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள்.

இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன்.

தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம்,
மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம்.
அதேசமயம் ,
நாய்க்கு பூனை பகை,
சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை,
பாம்புக்கு எலி பகை,
எலிக்கு, கீரி பகை,
குரங்குக்கு, ஆடு பகை.


சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்

அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம்.

சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்?

சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.

தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும்.

இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.

ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் ... மிக அற்புதம்

பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.

இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்

இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்


எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:11 am

நட்சத்திரப் பொருத்தம்

நம்மில் பலருக்கும் ஒரேஒரு சந்தேகம் உள்ளது. அது... “என் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் எது” என்பதுதான்.

என்னிடம் திருமண சம்பந்தமாக வருபவர்களின் கேள்வியும் இதுதான், எனவே இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.

செவ்வாயின் நட்சத்திரங்களான :- மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது. அதாவது ஆண்,பெண் இருவருக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருப்பின் சேர்க்கக்கூடாது.

எளிமையாக புரியும்படி:-


பெண் ————————-ஆண்

மிருகசீரிடம் —— சித்திரை, அவிட்டம்

சித்திரை————— மிருகசீரிடம், அவிட்டம்

அவிட்டம்——— சித்திரை, மிருகசீரிடம்

இவை ஒன்றுக்கொன்று இணையக்கூடாது.

சூரியனின் நட்சத்திரங்களான :- கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

குருவின் நட்சத்திரங்களான:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்கூடாது.

சந்திரனின் நட்சத்திரங்களான:- ரோகிணி,அஸ்தம்,திருவோணம்,

ராகுவின் நட்சத்திரங்களான:- திருவாதிரை, சுவாதி, சதயம்.

இந்த ஆறு நட்சத்திரங்களையும் இணைக்கக்கூடாது.

சுக்ரனின் நட்சத்திரங்களான:- பரணி, பூரம், பூராடம்,

சனியின் நட்சத்திரங்களான:- பூசம், அனுசம், உத்திரட்டாதி,

இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது.

புதனின் நட்சத்திரங்களான:- ஆயில்யம், கேட்டை, ரேவதி.

கேதுவின் நட்சத்திரங்களான:- அசுவினி, மகம்,மூலம்.

இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக் கூடாது.

இதுதான் “கழுத்து பொருத்தம் என்னும் ரஜ்ஜு பொருத்தம்” ஆகும்.


சரி , நாங்கள் இதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டோம். இதனால் ஏதாவது உயிருக்கு ஆபத்து வருமா? என்ற பயம் இயல்பானதே.

செவ்வாயின் நட்சத்திரங்களின் மணம் முடித்தவர்களுக்கும், சந்திரன் மற்றும் ராகு நட்சத்திரங்களில் மணம் முடித்தவர்கள் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்து, உணவு விசம் ஆகுதல்(food poison), கீழேவிழுதல், திடீரென உண்டாகும் தலைவலி, ரத்தகொதிப்பு, மயக்கம், இன்னும் சில.. இது போன்ற பாதிப்புகளை தரும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:12 am

செவ்வாய் -     தலை ரஜ்ஜு


சந்திரன்,ராகு- கழுத்து ரஜ்ஜு

அடுத்து சூரியனின் நட்சத்திரங்கள், குருவின் நட்சத்திரங்கள் இணைய என்ன பாதிப்பு?

இது வயிறு ரஜ்ஜு— புத்திர தோஷம், புத்திரசோகம், வயிறு, இதயம் சம்பந்தமான நோய் பாதிப்பு உண்டாக்கும்.

சுக்ரனின் நட்சத்திரங்கள், சனியின் நட்சத்திரங்கள் இணைய என்ன செய்யும்?

இது தொடை ரஜ்ஜு ஆகும்.  கடலளவு சொத்துக்கள் இருந்தாலும் அவை காணாமல் போகும். அல்லது மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உங்களுக்கு உதவாமல் போகும், அல்லது வழக்குகள் உண்டாகி அனுபவிக்க இயலாமல் போகும்.

புதன் மற்றும் கேதுவின் நட்சத்திரங்களில் மணம் புரிந்தால்?

இது பாத ரஜ்ஜு ஆகும், இது என்ன செய்யும்?

ஒவ்வொரு பயணமும் ஒரு “அட்வென்சர்” தான் அதாவது எப்போது வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் ஒவ்வொரு பயணத்திலும் புதுப்புது அனுபவம்( பாதிப்பு) தரும், மேலும் நடந்து சென்றால் கூட எதிலாவது இடித்துக் கொள்வது, நகச்சுத்தி, நரம்பு பாதிப்பு, வெரிகோசிஸ் என்னும் பாதிப்பு உண்டாகுதல். என பாதிப்புகளை உண்டாக்கும்.

இப்போது பொருந்தும் நட்சத்திரங்கள் எவை என பார்க்கலாம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பார்க்கவேண்டுமானால் இந்த ஒரு பதிவு போதாது., எனவே எளிமையாக ஒரு உபாயம்...

உங்கள் நட்சத்திரத்திலிருந்து 2,4,6,8,9,11,13,15,18,20,24 வது நட்சத்திரங்கள் பொருந்தும் நட்சத்திரங்கள்.

22 வது நட்சத்திரம் “ வைநாசிக” நட்சத்திரம் ஆகும், இது முற்றிலும் ஒதுக்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.

இந்த வைநாசிக நட்சத்திரம் என்ன செய்யும்?

கணவன் மனைவி இருவரையும் பரம வைரி ஆக்கும். தினம் அடிதடி, ரத்தம், உயிர்பயம் ஏற்படும் அளவு பாதிப்பை தரும், எனவே இது விளக்கப்படவேண்டும்.

27 வது நட்சத்திரமாக வந்தால்?.. இருவரும் ஒரே ராசியாக இருந்தால் சேர்க்கலாம், மாறாக வேறுவேறு ராசியாக வந்தால் இணைக்கக்கூடாது,

உதாரணம்:- பெண்- பரணி,... ஆண் அசுவினி இந்த இரண்டும் மேஷ ராசியில் இருப்பதால் இணைக்கலாம், மாறாக பெண் அசுவினி .. ஆண் ரேவதி என வர அது 27 வது நட்சத்திரமாக இருந்தாலும் ராசி மேசம், மீனம் எனவருவதால் இணைக்கக்கூடாது, அதேபோல், 16, 17, வது நட்சத்திரங்களும் ( இது ஆண், பெண் இருவருக்கும் பார்க்கப்படவேண்டும்) இணைக்கக்கூடாது.

மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன்... வெறும் நட்சத்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில் எந்த பயனும் இல்லை, இருவரின் ஜாதகப்பொருத்தமே மிக முக்கியம், நட்சத்திர பொருத்தம் என்பது வெறும் 10 சதவிகித மதிப்பு மட்டுமே, மீதி 90 சதவிகிதம் ஜாதக பொருத்த பார்ப்பதில்தான் உள்ளது. சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையை சுகமாக்கிகொள்ளுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:15 am

உங்கள் நட்சத்திரத்துக்கான கோயில்கள்!


திருமண பொருத்தங்களில் ‘நாடி'ப் பொருத்தம் என்ற பொருத்தமும் பார்க்கப்படுகிறது.

அது என்ன நாடி? நாடி என்றால் சேர்க்கை என்று அர்த்தம். அதாவது இரு பொருள்கள் இணையும் போது ஒரு அதிர்வு உண்டாகும் அல்லவா! அந்த அதிர்வுதான் நாடி என்பதாகும்.

இது வாதம், பித்தம், கபம் என்னும் மூவகை நாடியும் ஜோதிடத்தில் பார்ச்சுவ நாடி, மத்ய நாடி,சமான நாடி என்ற பெயரில் உள்ளன.

இது திருமணப் பொருத்தத்தில் என்ன செய்யும்?

அதற்கு முன்பாக உங்கள் நட்சத்திரம் என்ன நாடி என்று பார்ப்போம்.

வாதம்(பார்ச்சுவநாடி) :- அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம்,கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

பித்தம்( மத்யநாடி) பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

கபம்(சமான நாடி) கார்த்திகை, ரோகினி, ஆயில்யம்,மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி.


ஆண் பெண் இருவரின் தேகம் எந்த வகை என்பதைக் காட்டுவது நாடி.

இருவரும் பித்த நாடி ஆயின் இருவருக்கும் தேகமானது அதீத உஷ்ணமாக இருக்கும். அப்படி இருக்க ஆணின் விந்துவானது பலமிழந்து நீர்த்துப் போகும். இதனால் புத்திரபாக்யம் தாமதமாகும்.

மேலும் உடல் எரிச்சலைத் தரும். விரைவில் தாம்பத்திய நாட்டத்தைக் குறைக்கும்.

இருவரும் வாத நாடி ஆயின் ஓரளவு நன்மை உண்டாகும். இருவரும் வாயுத் தன்மை ஆதலால் பெரிய பாதிப்பு தராது. ஆனால் இருவரின் உடல்கூறும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காமல் தாம்பத்ய பிடிமானம் இல்லாமல் போகும்.

இருவரும் கபநாடி ஆயின் மிக நன்மை. எந்தப் பாதிப்பும் தராது, உன்னதமான தாம்பத்யம் உண்டுபண்ணும்.

ஆகவே, வாதம்( பார்ச்சுவ) நாடிக்கு :- பித்தம்( மத்ய) கபம்(சமான) இணைக்கலாம்.

பித்தநாடிக்கு(மத்தியநாடி) வாதம் கபம் இந்த இரண்டும் இணையலாம்.

கபம் (சமான) நாடிக்கு எந்த நாடியையும் இணைக்கலாம். தடையேதும் இல்லை.

எனவே நாடியும் திருமணப் பொருத்தத்தில் ஒரு முக்கிய பங்கு என்பதை அறிந்து கொள்ளலாம்.

நட்சத்திர ஆலயம் எது:-

அசுவினி:- சரஸ்வதி -கூத்தனூர்

பரணி :- துர்கை- பட்டீஸ்வரம்

கார்த்திகை:- அக்னி -திருவண்ணாமலை

ரோகிணி:- பிரம்மா- திருப்பட்டூர்

மிருகசீரிடம்:- சந்திரன்- திங்களூர், திருப்பதி

திருவாதிரை:- நடராஜர் - சிதம்பரம்

புனர்பூசம்:- அதிதி- வாணியம்பாடி அதிதீஸ்வர்ர்

பூசம்:- குரு- திருசெந்தூர் , குருவாயூர்

ஆயில்யம்:- ஆதிசேஷன் ஶ்ரீரங்கம்

மகம்:- பித்ருக்கள்(முன்னோர் வழிபாடு) சுக்கிரன்- கஞ்சனூர்

பூரம்:- பார்வதி- சிவாலயம்- ஶ்ரீவில்லிபுத்தூர்

உத்திரம்:- சூரியன்:- சூரியனார் கோவில்

அஸ்தம்:- சாஸ்தா - ஐயப்பன், ஐயனார்

சித்திரை:- விஸ்வகர்மா-தேவதச்சன்(படம் கிடைக்கும்)

சுவாதி:- வாயு பகவான்- குருவாயூர்

விசாகம்:- முருகன்

அனுசம்:- ஶ்ரீலக்ஷ்மி அலமேலுமங்காபுரம்

கேட்டை:- இந்திரன் - பெளர்ணமி பூஜை

மூலம்:- நிருதி— குபேரன் வழிபாடு, அனுமன் வழிபாடு

பூராடம்:- வருணன்

உத்திராடம்:- கணபதி

திருவோணம் :- திருமலை திருப்பதி

அவிட்டம்:- வசுக்கள்- பைரவ வழிபாடு

சதயம்:- யமன்- திருபைஞ்ஞீலி ( எமனுக்கு உயிர் மீண்ட தலம்)

பூரட்டாதி:- குபேரன்( தீபாவளி இரவு பூஜை செய்ய நன்மை)

உத்திரட்டாதி:- காமதேனு:- கோ பூஜை, பசு வழிபாடு

ரேவதி:- சனிபகவான்


உங்கள் நட்சத்திர ஆலயங்களுக்குச் சென்று உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நட்சத்திர நாளில் சென்று வணங்குவது கூடுதல் சிறப்பு. விசேஷம். விசேஷ பலன்களைத் தந்தருளும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:29 am

கஜகேசரி, குரு மங்கல யோகம் 

நாம் இப்போது சில யோகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு மனிதன் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எளிதாகவும் அந்த துன்பத்தின் சாயலைக்கூட உணராமலும் கடந்து சென்றால் அவர் ஜாதகத்தில் “ கஜகேசரி” யோகம் இருக்கிறது என்று அர்த்தம்.

அது என்ன “கஜகேசரி” யோகம்?

சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் அது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.

கஜம் என்றால் யானை; கேசரி என்றால் சிங்கம். மலை போன்ற யானையை சிங்கமானது தனது தைரியம் மற்றும் நம்பிக்கை இதை ஆதாரமாக வைத்து யானையை எதிர்த்து வீழ்த்துவதைப் போல், இந்த கஜகேசரி யோகமானது எந்த எதிர்ப்பையும் தாங்கும். தோல்வியின் விளிம்பிலும் மனதைத் தளரவிடாத மன தைரியத்தைத் தரும்.

இதை எப்படி உங்கள் ஜாதகத்தில் அறிவது?

மிக மிக எளிமையானதுதான். இதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளலாம்!

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஒன்று என எண்ண ஆரம்பியுங்கள். அதிலிருந்து 4 ம் இடம், 7 ம் இடம், 10ம் இடம் இந்த ஏதாவதொரு இடத்தில் குரு பகவான் இருக்க அது “கஜகேசரி” யோகம் ஆகும்.

இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் உங்களுக்கு நீங்களே யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் நீங்கள் துவளாமல் அந்த பிரச்சினையை மிக எளிதாகக் கையாண்டிருப்பீர்கள். என்ன சரிதானே?

ஆனால் எனக்கு இப்படி இல்லையே. அப்படியானால் நான் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குபவனா? என கேட்பவர்களுக்கு...

உங்கள் ஜாதகத்தில், சந்திரனுக்கு குரு பகவான் 5ம் இடம், 9 ம் இடம் ஆகிய இடங்களில் இருக்க அது “குரு சந்திர யோகம்” ஆகும். இதுவும் நல்ல யோகமே!

பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குகிறீர்களோ இல்லை எதிர்கொள்கிறீர்களோ அதுவல்ல விளக்கம்.

எந்த ஒன்றும், எதிர்பார்த்த எதுவும், நீங்கள் எதிர்பார்க்காமலேயே எந்த ரூபத்திலும் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

இது போதாதா... உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதற்கு!

இன்னும் ஒரு யோகத்தைப் பார்க்கலாம்!

அது “குரு மங்கல” யோகம்.

செவ்வாய்க்கு மங்கலகாரகன் என்ற பெயர் உண்டு.

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமையை விலக்கி வைத்திருக்கிறோம். ஆந்திராவில் செவ்வாய்க்கிழமையில் திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. காரணம் செவ்வாய் மங்கலகாரகன்.

இப்படியான செவ்வாயும் குருபகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் பார்த்தாலும் இந்த யோகம் ஏற்படும்.

சேரந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்! ஆனால் பார்ப்பதை எப்படி அறிவது? செவ்வாய் இருக்கும் இடத்தை ஒன்று என எண்ண ஆரம்பித்து 7ம் இடம் வரை எண்ணுங்கள். அங்கே குரு இருந்தால் இந்த “குருமங்கல” யோகம் உண்டு.

என்ன செய்யும் இந்த குருமங்கல யோகம்?

இயல்பாய் வீடு, மனை, வாகன யோகத்தைத் தரும்.

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், உங்கள் பெற்றோரைக் கேளுங்கள்.... நீங்கள் பிறந்தபின் கண்டிப்பாக உங்கள் தந்தை வீடு அல்லது நிலம் வாங்கியிருப்பார்.

அதேபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு, மனை அல்லது வாகன யோகம் இருக்கும்.

அதுமட்டுமல்ல... எந்தத் துறையில் நீங்கள் இருந்தாலும் யாருக்கும் அச்சப்படாமல் தைரியமாக உங்கள் முடிவுகளை தெரிவிப்பீர்கள். யாருக்கும் தலை வணங்கமாட்டீர்கள். இதுவே உங்களுக்கு “தலைக்கனம் பிடித்தவன்” என்ற பெயரையும் பெற்றுத்தந்திருக்கும்.

பரவாயில்லை, நீங்கள் நேர்மையானவர் என்பது உங்களுக்கும் உங்கள் உற்றாருக்கும் தெரியும், ஆகவே கவலை தேவையில்லை.

இந்த யோகம் உள்ளவர்கள் பொருளாதாரத்தைப் பற்றிய கவலையே படத்தேவையில்லை. கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும். அதாவது உலகின் நல்லன எல்லாமும் உங்களைத் தேடி வரும்!

இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதே!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:33 am

ஏழாம் பொருத்தம்

ஏழாம் பொருத்தம், ஏழாம் பொருத்தம் என்று அடிக்கடி யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

அதாவது, கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள், நண்பர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதங்கள் என எங்கெல்லாம் பிரச்சனைகள் உண்டாகிறதோ, அங்கெல்லாம் இந்த வார்த்தையைக் கேட்டிருக்கலாம்.

அது என்ன “ஏழாம் பொருத்தம்?”

அதாவது ஒருவரின் குணத்திற்கு நேரெதிரான குணாதிசயம் உடையவர்கள் இந்த ஏழாம் பொருத்தத்திற்கு சரியான உதாரணம்.

இதில் நட்பு விஷயத்தில் சொல்வதைவிட, தம்பதிகளுக்கு பார்க்கப்படுவதே அதிகம்.

சரி, இந்த ஏழாம் பொருத்தம் யார்யாருக்கெல்லாம் இருக்கும்? அல்லது ஏற்படும்?

ஆச்சர்யமான உண்மை... நம்மில் அத்தனை பேருக்கும் இந்த பொருத்தம் உண்டு!

அதாவது, மணமானவர்கள் அனைவருமே ஏழாம் பொருத்தக்காரர்களே!

எப்படி?

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் அல்லது மனைவி சற்று வெள்ளந்தியாக, அப்பிராணியாக இருந்தால் அவரின் கணவர் அல்லது மனைவி எச்சரிக்கை உணர்வுள்ளவராகவும் சாதுர்யமானவராகவும், புத்திசாலியாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

உதாரணமாக கணவர் யாரையும் நம்பும் மனிதராக இருப்பவராக இருந்தால், அவரின் மனைவி ஒருவரைப் பார்த்தவுடன் “எடை” போட்டுவிடுவார், அவர் நல்லவரா கெட்டவரா என்று!

இதுதான் ஏழாம் பொருத்தம்!

இப்போது ஜாதக ரீதியாகப் பார்ப்போம்..!

ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு குணாதிசயத்தைக் காட்டும். அதுமட்டுமல்ல... ஒவ்வொரு கட்டத்திற்கும் அதன் ஏழாமிடம் எதிர் குணாதியசத்தைக் காட்டும்.உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் உச்சம். அதற்கு நேரெதிர் ஏழாமிடமான துலாராசியில் நீசம்.

(உச்சம்=இருமடங்கு பலம். நீசம்= முற்றிலும் பலம் இழத்தல்)

குரு பகவான் கடக ராசியில் உச்சம்.

அதற்கு நேரெதிர் ஏழாம்ராசியான மகரத்தில் நீசம்.

இப்படி ஒவ்வொரு ராசிக்கட்டமும் தன் வீட்டிற்கு ஏழாம் இடம் எதிர்வினை செய்யும். அதாவது எதிரெதிரான செயல்களைச் செய்யும்.

ஒரு வீடு நன்மை என்றால் ஏழாமிடம் தீமை.

ஒருவீடு மந்தபுத்தி என்றால் ஏழாமிடம் புத்திசாலி.

வீரம் என்றால் எதிர்வீடு கோழை.

இப்படிப் பலன்கள் எதிரெதிராகவே இருக்கும்.ஆக, கணவன் மனைவி ராசி, ஏழுக்கு ஏழாக இல்லாவிட்டாலும் (உதாரணமாக பக்கத்து ராசியாக இருந்தாலும்) ஆண்பால் பெண்பால் என்னும் எதிரெதிர் பால் , எதிரெதிர் ராசி போல் கருத வேண்டும்.

ஆக இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குணாதிசயமாக சகோதர சகோதரிகளும் இருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இந்த ஏழாம் பொருத்தம் என்பதை, நாம் கணவன் மனைவிக்கு மட்டுமே பார்த்துப் பழகியதால் நம் குடும்பத்தில் இருப்பவர்களோடு நாம் பொருத்தி பார்க்காமலேயே இருந்து விட்டோம்.

இது நண்பர்களுக்கும் மிக முக்கியமாக “கூட்டுத்தொழில்” செய்பவர்களுக்கும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனென்றால் கூட்டுத்தொழிலில் ஒருவர் சற்று இரக்ககுணம் உடையவராக இருக்க மற்றொருவர் இரக்கமே இல்லாதவராக இருப்பதே கூட்டுத்தொழிலுக்கு நல்லது.

நான் கூறுவது மேலெழுந்தவாரியாக படிக்கும் போது சரியில்லாதது போல தோன்றினாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என்பதை நிதானமாக யோசித்தால் புரியவரும்.

ஒரு முதலாளி இரக்கமானவராகவும், மற்றவர் கடுமையான குணம் உள்ளவராகவும் இருக்கும் தொழில் நிறுவனம் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

இது என் அனுபவத்தில் பார்த்தது.

சரி கணவன் மனைவிக்கு வருவோம்.

இப்படி ஏழாம் பொருத்தமாக (கன கச்சிதமாக) இருக்கும் தம்பதி, நல்ல செல்வவளத்துடன், சௌகரியமான வாழ்வு, நீண்ட ஆயுளோடு இருப்பதைப் பார்க்கலாம்.

இங்கு ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் திருமணம் செய்த ஓரிரு மாதங்களிலேயே ஒருவரின் பலம் பலவீனம் அறிந்து கொண்டால் இருவருக்குமான வாழ்க்கைத் தராசு, தானாகவே சமனாகிவிடும்.

இந்த இடத்தில்தான் முக்கியமான விஷயம் உள்ளது. ஒருவரின் பலவீனத்தை அறிந்ததும்(கணவன் அல்லது மனைவியின்) அந்த பலவீனத்தையே பகடையாக பயன்படுத்தும் போது தான் ஈகோ வெளிப்பட ஆரம்பிக்கிறது.

இதை முழுநேரமும் ஆதிக்கமாக செயல்படுத்தும் போதுதான் பிரிவினை ஆரம்பிக்கிறது, அது முடிவில் நீதிமன்றத்தை நோக்கிப் போகிறது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

ஒருசில வீடுகளில் பார்த்திருப்பீர்கள். மனைவியானவர் ஏதாவதொரு முக்கியமான விஷயத்தில் கணவர் ஈடுபாட்டோடு இருக்கும்போது “இந்தா பாருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் சொல்றத செய்யுங்கள்” என்பார்,

அவர் கூறும் முடிவும் சுபமாகவே இருக்கும். மிகச்சரியாகவே இருக்கும். இதை அந்தக் கணவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்வார். அந்தக் குடும்பம் எந்த விதத்திலும் தோற்றுப்போகாது.

இதுதான் ஏழாம் பொருத்தம்.இது நன்மை தரக்கூடியதே. நல்லவிதமாக பயன்படுத்தினால்... எல்லாம் நன்மையே!

அப்படியானால் சண்டை சச்சரவு?

அது வெளித் தோற்றத்திற்கு அப்படித் தெரியும். உண்மையில் இது இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் உள்ள நல்ல “அண்டர்ஸ்டாண்டிங்” என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சரி ஒரு ரகசியம் சொல்கிறேன் பெண்களுக்கு!

தலையணை மந்திரம் என்கிறார்களே... அதை எப்படி செயல்படுத்துவது? அது உண்மையா?

உண்மைதான்! உங்கள் கணவரின் இடது காதில் சொல்லப்படும் எதுவும் மந்திரமாக மாறி நிறைவேறும். வலது காதில் சொல்லப்படும் எதுவும் நிராகரிக்கப்படும். செயல்படுத்திப் பாருங்கள்..

குரு மந்திரம் வலது காதில் வழங்கப்படவேண்டும்.

அது நிலைத்து பலன் வழங்கும் என்பதை அறிவீர்கள்தானே.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:37 am

பிரம்மஹத்தி தோஷம், மாந்தி தோஷம்!

நன்மை தரும் யோகங்களும் உண்டு, பாதிப்புகளைத் தரும் யோகம்களும் உண்டு. நாம் இப்போது பாதிப்புகளை உண்டுபண்ணும் சில யோகங்களைப் பார்ப்போம்.


பிரம்மஹத்தி தோஷம்:-

உங்களின் முன் ஜென்மத்திலோ, அல்லது உங்கள் முன்னோர்களோ அடுத்தவர் உயிர் பறித்த பாவம் பிரம்மஹத்தி தோஷமாக மாறி, நிம்மதி இல்லாத வாழ்வைத் தரும். எந்தச் செயலும் தடையாகவே இருக்கும். தாமதமாகவே நடக்கும்.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரியான மனநிலை ஏற்படும். குடும்பத்தில் எந்த ஒருவருக்கும் நிம்மதி அற்ற சூழ்நிலையே காணப்படும். மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சனை தொடர்ந்து இம்சை பண்ணிக்கொண்டே இருக்கும்.

புத்திரபாக்கியத்தில் தாமதம் அல்லது குறையுடைய குழந்தை பிறந்து ஒட்டுமொத்த வீட்டின் மனநிம்மதியையே குலைக்கும். இவையெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தின் பாதிப்புகள்.

’அய்யோடா... கடவுளே... இதற்கு என்ன தீர்வு?’

“திருவிடைமருதூர்” செல்லுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அசாதரணமான சூழ்நிலை தெரியாமலும் புரியாமலும் கலங்கித் தவிப்பவர்கள், “திருவிடைமருதூர்” சென்று வாருங்கள். உங்கள் முன் “ஜென்ம வினை”, உங்கள் முன்னோர்களால் உண்டான “வினை” அனைத்தும் தீரும், உங்கள். வாழ்வும் சுபிட்சமாகும். கும்பகோணம் அருகில் உள்ளது திருவிடைமருதூர். இங்கே இறைவனின் திருநாமம் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

அடுத்து நாம் பார்க்கப்போவது “மாந்தி” தோஷம்;

உங்கள் ஜாதகத்தில் “மாந்தி”யானவர் 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால், இந்தப் பதிவு உங்களுக்கானதல்ல. காரணம்... மேற்கண்ட இடங்களில் மாந்தி அமர்ந்தால் தோஷமாக வேலை செய்யாது, மாறாக நன்மையையே தருவார் மாந்தி. காரணம் இது “ உபஜெயஸ்தானம்” ஆகும்.

இந்த உபஜெயஸ்தானத்தில் மாந்தி, சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இருந்தால் நன்மையை மட்டுமே தருவார்கள்.

சரி யார் இந்த “மாந்தி” ? இவர் சாதாரணமானவர் அல்ல. சனீஸ்வர பகவானின் மகன்.

இவர் பிறந்ததே ஒருவரின் உயிரை எடுக்கத்தான் என்றால் ஆச்சரியம்தானே.

லங்கேஷ்வரன் ராவணன் ஏழு உலகையும் வென்று தேவர்கள் முதலானோரை தன் அடிமையாக வைத்திருந்தான். அவர்களில் நவக்கிரகங்களும் அடக்கம்.

தனக்கு ஒரு வாரிசு (இந்திரஜித்) போகிறது என தெரிந்தவுடன் இந்த நவகிரகங்களையும் எங்கெங்கு இருந்தால் மரணமே இருக்காதோ அந்த வரிசையில் நிற்க வைத்தான். குழந்தை பிறக்கும் நேரம்... இந்த சனிபகவான் மெலிந்த உடல்வாகு, கூன்முதுகு, சூம்பிப்போன கால்கள்.

இந்த பலவீனமான கால்களால் நிற்க முடியாமல் தான் நின்ற ராசி கட்டத்திற்கு அடுத்த கட்டத்தில் தடுமாறி கால் வைக்கப் போகிறார், இதைக் கண்ட ராவணன் தன் வாளால் சனிபகவானின் காலை வெட்டிவிடுகிறார். அந்தக் கால் சென்று விழுந்த இடம் 7 ஆம் இடம்.

ஆம் ! மரணத்தைக் காட்டும் இடமான 7ம் இடம்தான் அந்தக் கால் விழுந்தது. அதுதான் “மாந்தி” எனும் சனியின் பிள்ளை.

இந்த மாந்தியின் காரணமாகவே இந்திரஜித் மரணத்தை எதிர்கொண்டான்.

சரி ஜோதிடத்திற்கு வருவோம். 3,6,10,11 ஆகிய இடங்களில் தோஷத்தைத் தரமாட்டார்.

அப்படியானால் எங்கு கடுமையான தோஷத்தைத் தருவார்? எங்கு ஓரளவு தோஷத்தைத் தருவார்?

லக்னத்தில் அமர்ந்த மாந்தி கடுமையான தோஷத்தைத் தருவார். மற்றும் 2, 5, 7, 8, 9, ஆகிய இடங்களில் கடுமையான தோஷத்தைத் தருவார். அடுத்து 4, 12, ஆகிய இடங்களில் ஓரளவு தோஷத்தைத் தருவார்.

உங்கள் ஜாதகத்தில் மேற்கண்ட இடங்களில் மாந்தி இருந்தால் தோஷம் என்பதை உணரலாம்.

இதில் ஒரேஒரு விலக்கு உண்டு “சிம்மத்தில்” அமர்ந்த மாந்தி தோஷத்தைத் தருவதில்லை.

காரணம் இந்த மாந்தி சூரியனுக்குப் பேரன். எனவே தோஷத்தைத் தருவதில்லை.

மற்றபடி லக்னம், 2,5,7,8,9 ஆகிய இடங்களில் இருக்கும் மாந்தி தோஷத்தைத் தருவார்.

லக்னம்:- லக்னத்தில் இருந்தால் வளர்ச்சி தடைப்படும். எதையோ இழந்ததுபோல் இருப்பார்கள். பலவீனமான உடல்வாகு, தவறாக முடிவெடுத்தல், முன்ஜென்ம வினை அதிகம் கொண்டவராக இருப்பார்கள்.

2 ம் இடம்:- குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருப்பர். பணம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆரம்பக் கல்வி தடைப்படும். வாக்குறுதி தந்து வாக்கு தவறி பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.

5ம் இடம்:- புத்திரபாக்கியத்தில் தடை, அல்லது சமூகத்தில் குடும்ப நற்பெயரை கெடுக்கும் பிள்ளை, அல்லது பயனில்லாத குழந்தை என்று குடும்பத்தில் சந்தோஷமற்ற நிலை ஏற்படும்.

7ம் இடம்:- திருமணத்தடை, தன் எதிர்பார்ப்பை முற்றிலும் முறியடிக்கக்கூடிய ஏமாற்றம் தரும் துணை அமைதல், நோய் பாதிப்புள்ள துணை அமையும்.

8ம் இடம்:- அடிக்கடி விபத்துகள் நடக்கும். அதிக அறுவைசிகைச்சை ஏற்படும். மொத்தத்தில் “நித்ய கண்டம், பூரண ஆயுசு” என்பதாகவே அமையும்.

9ம் இடம்:- தந்தையால் பயன் இருக்காது. அல்லது தந்தையின் அரவணைப்பு இல்லாமல் போகும் (தந்தை இல்லாத நிலை) அல்லது கடும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். பூர்வீகச் சொத்து அழியும் அல்லது பயனில்லாமல் போகும்.

4 ம் இடம் : சொந்த வீடு இருந்தாலும் அனுபவிக்க முடியாது. வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். அல்லது அடிக்கடி விபத்து ஏற்படுதல், பயணங்களில் எப்போதும் அசௌகரியம் உண்டாகுதல், ஏன் எதற்கு என்றே தெரியாமல் பணம் செலவாகுதல் எனும் நிலை ஏற்படும்.

12 ம் இடம்:- நிம்மதி அற்ற நிலை, இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தல், அடிக்கடி மருத்துவச் செலவு, ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டே இருத்தல், அல்லது யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்தல் எனும் துர்பாக்கிய நிலை உண்டாகும். இப்படி பலவிதமான தோஷங்களைத் தரும்.

இதற்கு எப்படித் தீர்வு காணமுடியும் அல்லது பரிகாரம் என்ன?

ரத்னசபை என போற்றப்படும் திருவாலங்காட்டில் மாந்தி வழிபட்ட சிவலிங்கம் உண்டு. அந்த லிங்கத்தை வழிபட மாந்தி தோஷம் நீங்கும்.

திருநறையூர் தெரியுமா. கோயில் நகரம் கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கே, சனி பகவான் தன் குடும்பத்தோடு காட்சி தருகிறார். மனைவி நீலாதேவி, மகன்கள் மாந்தி, மற்றும் குளிகன் என காட்சி தரும் இவர்களை வணங்க மாந்தி தோஷம் நீங்கும்.

அதுமட்டுமா? பட்டுக்கோட்டை அருகே விளங்குளம் எனும் ஊர் உள்ளது. இங்கே உள்ள சிவாலயத்தில், சனிபகவான் தம்பதி சமேதராக, குடும்ப சகிதமாக அருட்காட்சி தருகிறார். இங்கே சென்றும் தரிசியுங்கள்.

அனைத்திற்கும் மேலாக இறந்தவர்கள் உடல் அடக்கத்திற்கு உங்களால் ஆன உதவி எதுவானலும் செய்யுங்கள். மாந்தி தோஷம் இல்லாமல் செய்துவிடும். குறிப்பாக அனாதை சவ அடக்கத்திற்கு செய்யும் உதவி உங்களின் தலைமுறைகளை கடந்து காபந்து செய்யும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 2:41 am


கன்னம் புஷ்டியா இருக்கா? சகல செல்வமும் நிச்சயம்!
நாம் இப்போது, தத்து கொடுத்தல், தத்து எடுத்தல், ஆயுள் அரிஷ்டம், பாலாரிஷ்டம் முதலான விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.

தத்து கொடுத்தல்:- ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம்.

சில ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து “இந்த குழந்தையை கோயிலுக்கு தத்துக் கொடுத்து மீண்டும் தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என பரிந்துரைத்திருப்பார். அது ஏன்?

யாருடைய ஜாதகத்திலும் “சனி+கேது” இருவரும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தத்து கொடுக்கப்பட வேண்டியவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஏன்? ஆயுள் காரகன் சனி. இந்த ஆயுளை அரித்து விரைவில் இறைவனடியை சேர்க்க கேது பகவான் துணை நிற்பார்,

அதற்கான பரிகாரம்தான் “தத்துக் கொடுத்தல்.” இப்படி ஆலயத்திற்கு அதாவது தெய்வத்திற்கு தத்துக் கொடுக்க அது தெய்வத்தின் குழந்தையாகிவிடும். ஆக தெய்வத்தின் குழந்தைக்கு ஆயுளைக் குறைக்கும் அதிகாரம் கிரகங்களுக்கு இல்லை. அவ்வளவு ஏன்... அந்த சக்தியும் கிடையாது.

எனவே அந்தக் குழந்தை, தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

இப்போது சிலர் “எனக்கு இந்த அமைப்பு உள்ளது. ஆனால் நான் தத்து கொடுக்கவோ, தத்து எடுக்கவோ படவில்லை” என்போருக்கு ...

நிச்சயமாக உங்கள் குழந்தைப் பருவத்தில் தொலைந்துபோய் கண்டு பிடிக்கப்பட்டிருப்பீர்கள். அல்லது தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்டிருப்பீர்கள். அல்லது பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரி காலம் வரை விடுதியில்(ஹாஸ்டல்) தங்கிப் படித்திருப்பீர்கள்.

சனி கேது இணைவு மட்டுமல்ல, லக்னத்திற்கு 8 ம் இடத்தில் கேது இருந்தாலும் ஆயுள் அரிஷ்டம் ஏற்படும்.

8ல் ராகு இருந்தாலும் ஆயுள் பாதிப்பை உண்டாக்கும்.

இதற்கான ஜாதக நிவர்த்தி ”குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லாமல் போகும்.”

குரு பார்வை இல்லாவிட்டால், ஆலய பரிகாரமே சிறந்தது,

அதிலும் முக்கியமாக... மகான்கள், சித்தர்கள் ஜீவசமாதி, வெள்ளெருக்கு விநாயகர், இவர்களை வணங்கிவந்தால் ஆயுள் அரிஷ்டத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

மேலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருக்கடையூரில் மார்கண்டேயன் பொருட்டு ஈசனால் வதம் செய்யப்பட்ட எமதர்மன் தொடர்பு கொண்ட திருத்தலம் என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே. திருச்சி மண்ணச்சநல்லூரில், திருப்பைஞ்சீலியில் ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் உயிர் பெற்றார். இப்படி எமனுக்கே உயிர் மீண்ட ஆலயம் இந்த திருப்பைஞ்சீலி.

இந்த ஆலயத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சிவ பெருமானையும், எமதர்மராஜனையும் வணங்கினால் உங்கள் ஆயுள் அரிஷ்டம் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

இன்னும் சில அரிஷ்டங்கள்:- 


நீங்கள் பிறந்த கிழமையும், இந்த நட்சத்திரங்களும் ஒன்றானால் நீங்கள் பிறந்தது “பாலாரிஷ்டத்தில்” என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஞாயிறு. - பரணி

திங்கள். - சித்திரை

செவ்வாய் - உத்ராடம்

புதன் - அவிட்டம்

வியாழன் - கேட்டை

வெள்ளி - பூராடம்

சனி - ரேவதிஇந்த பாலாரிஷ்டம் 12 வயதுவரை உடல்நலத்தை பலமாக பாதிக்க வைக்கும். ஒவ்வொரு இரவும் பகலும் உடலைப் படுத்தி எடுக்கும், ஆயுளைக் கெடுக்காது. ஆனால் ஆயுள் முடிந்துவிடுமோ என பதைக்க வைக்கும். 12 வயதுக்கு மேல் இந்த தோஷம் தானாகவே நீங்கிவிடும்.

பரிகாரம்:- பைரவர் வழிபாடு, மற்றும் சனி ப்ரீதி மட்டுமே போதும். மற்றும் தத்துக் கொடுக்கும் பரிகாரமும் உதவும்.

மேலும் ஆண்களின் ஜாதகத்தில் குருவோடு கேது இணைந்திருந்தாலும், பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனோடு கேது இணைந்தாலும் இந்த பாலாரிஷ்டம் என்னும் தோஷம் உண்டு. இவை அனைத்திற்க்கும் மேற்கண்ட பரிகாரங்கள் செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.

தத்து எடுத்தல் என்பது ஜாதக பலாபலன்களை அறிந்தால்தான் விவரிக்க முடியும்.

நாம் பார்த்திருப்பது பொதுவான தகவல்களே! சுய ஜாதகத்தில் 8 ம் அதிபதி , சனி, ராகு கேது, செவ்வாய் நிலை அறிந்தால் மட்டுமே இந்த அரிஷ்டம் என்னும் தோஷத்தை விரிவாகப் பார்க்க இயலும்,

எனவே அடிக்கடி நோய் வயப்பட்டால் ஜாதகத்தில் கிரக நிலை, திசா புத்தி விபரம் அறிந்து அதற்கேற்ப தெய்வங்களை வணங்கிவர நலமான வாழ்வு அமையும் என்பது உறுதி.சில குறிப்புகள் :-

கன்னம் புஷ்டியாக இருந்தால் செல்வவளம் குன்றாமல் இருக்கும்.

பெண்களின் முதுகு ஆமை முதுகு போல் இருந்தால் அளவற்ற செல்வம் சேரும்.

ஆண்களின் தொடை பருத்திருந்தால் செல்வ வளம் உண்டு.

உள்ளங்கை குழி போன்ற அமைப்பு இருந்தால் செல்வம் தங்கும்.


மூக்கு நுனி கூர்மையாக இருந்தால் குரு கடாட்சம் உடையவர். அதே சமயம் அதில் மச்சம் (மூக்கு நுனியில்) இருந்தால் யாரையும் மதிக்காத அலட்சியப் போக்கை உடையவர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 4 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை