உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Today at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Yesterday at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Yesterday at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Yesterday at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

Admins Online

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Mon Sep 03, 2018 11:09 pm

First topic message reminder :


ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

ஜோதிடம் என்பது கலை. அந்தக் கலையைப் பயில்வது சுலபம். சுவாரஸ்யம். ஜோதிடம் என்பது கணக்கு. அந்தக் கணக்கை நாமே போட்டு, விடை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையை, நம் வாழ்க்கையை நாம் வாழாமல் எப்படி? ஆகவே ஜோதிடம் குறித்து உங்களுடன் பேசுவதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷமே!

இந்தத் தொடரில், ஜோதிடத்தைப் பற்றியும் ஜோதிடத்தில் உள்ள சில தோஷங்கள் பற்றியும் பேசுவோம்.

ஜோதிட ரீதியாக உள்ள சில தோஷங்கள் பற்றி சிலர் அறியாமையால் குழப்பங்களை ஏற்படுத்தி வீண்பயத்தை பரப்புகிறார்கள்.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரிவான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும், உங்கள் முன் வைக்கப் போகிறேன்.

இந்தத் தொடர் மூலமாக, உங்கள் குழப்பங்களுக்கு விடை காணவும் தேவையற்ற பயங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜோதிடம் என்பது எத்தனை எளிமையானது, எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்களே உணருவீர்கள். உங்கள் ஜாதகத்தை உங்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்று முழுமையாகப் பேசுவோம்!

குரு வாழ்க! குருவே சகலமும்! குருவே துணை!

முதலில் எல்லோருக்கும் உள்ள ஆரம்பக் கேள்வி... ஜோதிடம் என்றால் என்ன? ஒருவகையில்... இதுதான் ஆரம்பக் கல்வி!

வாழ்க்கை என்னும் இருள் சூழ்ந்த பாதைக்கு வழிகாட்டுவது ஜோதி என்னும் ஜோதிடம்! ஜோதி என்றாலே நெருப்பு. இந்த பிரபஞ்சம் இயங்குவது, கிரகங்கள் இயங்குவது, என அனைத்துமே சூரியன் எனும் ஜோதியால்தான்.

ஒருவருக்கு ஜாதகத்தைக் கணிக்கும்போது, லக்னம் என்னும் புள்ளியிலிருந்தே ஜாதகம் இயங்கும்.

இந்த லக்னம் என்பது சூரியனின் ஒளிப்புள்ளி. எனவே லக்னம் என்பதை உயிர் என்னும் ஆத்மா என்று சொல்வதே பொருந்தும். அதனால்தான் சூரியனுக்கு ஆத்மகாரகன் என்றே பெயர்.

இப்படி நம் உயிர் தொடங்கி உலகின் அனைத்து இயக்கங்களும், கிரகங்களும், அந்த கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களும், சூரியனின் தலைமையைக் கொண்டே இயங்குகின்றன.

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள 12 ராசிகள், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் அமைவைப் வைத்தே ஒரு ஜாதகம் கணிக்கப்படுகிறது.

இப்படிக் கணிக்கப்படும் ஜாதகங்களில் நம்முடைய எதிர்காலம் முதலான அனைத்து விஷயங்களும் உள்ளன. எந்த நேரத்தில் எந்த பலனைத் தரவேண்டும் என்பதை தசாபுத்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எப்படித் தரவேண்டும் என்பதை கோச்சார கிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

விதி, மதி, கதி என்ற மூன்று அம்சங்களே ஜோதிடத்தில் பிரதானமானது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்த வல்லுநர்கள்.

1. விதி என்பது நமக்கு என்ன விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுவது.

2. மதி என்பது இப்படி விதிக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்பதைக் காட்டுவது.

3. கதி என்பது மாற்றியமைக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவது என்பதைக் குறிக்கிறது.

இப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களில் தோஷங்கள் என சில அமைப்புகளை ஜோதிடர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

என்னென்ன தோஷங்கள்?

· செவ்வாய் தோஷம்.

· ராகு-கேது தோஷம்.

· சனி தோஷம்.

· ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

நாம் இப்போது பார்க்கப்போவது இந்த தோஷங்கள் என்ன செய்யும்? இந்த தோஷங்கள் உண்மையிலேயே பார்க்கப்படவேண்டியதா? தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? கவலைப்பட தேவையில்லையா? தோஷத்தை மீறினால் ஏதாவது பாதிப்பு வருமா? பாதிப்பு வரும் என்றால் அதற்குப் பரிகாரம் உண்டா? என பலவிதமாக ஆராய்ந்து எளிமையாகவும், உங்களுக்கு புரியும்படியாகவும் விளக்கிச் சொல்லப்போகிறேன்.

முதலில் செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது தான்.

அப்படி இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?

உண்மையில்... செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.

தோஷம் என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது. சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.

ஒருவர் ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம் உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.

உண்மையில், முன்காலத்தில் சுக்கிரனுக்கும், செவ்வாய் தோஷம் பார்க்கப்பட்டு வந்தது. அப்படி சுக்கிரனுக்கும் சேர்த்து பார்க்கப்படும் பட்சத்தில் இங்கு ஒருவருடைய ஜாதகம் கூட, செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கவே முடியாது.

காலப்போக்கில் சுக்கிரனுக்கு... செவ்வாய் தோஷம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது லக்னம் மற்றும் ராசிக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.

சாபம் என்றால் சாப விமோசனம் இருப்பது போல், தோஷம் என்றால் தோஷ நிவர்த்தி அல்லது விமோசனம் கண்டிப்பாக உண்டு.

நாம் ஏற்கனவே கூறியபடி லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாக” சொல்லிவிட முடியாது.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மிதுனம், கன்னி லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள் உண்டு.

இன்னும் தோஷநிவர்த்திகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:00 am

ராகு இருந்தால் ஆண் குழந்தை; கேது இருந்தால் பெண் குழந்தை!


புத்திரதோஷம் பற்றிய விபரத்திற்குப் போவதற்கு முன்னே, முதலில் நம் உடல் சார்ந்த நிலை பற்றிய சில விஷயங்களைப் பார்த்தே ஆக வேண்டும்,

நான் ஏற்கெனவே கூறியபடி, மருத்துவரே ஜோதிடர், ஜோதிடரே மருத்துவர் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சில விஷயங்களை ஆராய்வோம்,

30 வருடங்களுக்கு முன், பெண்கள் பூப்பெய்வது என்பது 15,16,17 வயதில் தான் நடந்தது. ஆனால் தற்போது 9, 10, 11 என்ற வயதிலேயே பூப்பெய்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்தான் உள்ளன.

ஏன்? என்ன காரணம்?

நிச்சயம் நம் உணவுமுறைதான் காரணம்.

ஐயா, அம்மாக்களே. தயவுசெய்து நம் குழந்தைகளுக்கு குளிர்பானம் மற்றும் அடைக்கப்பட்ட உணவுகளை( junk food) தவிர்த்துவிடுங்கள், அவை ரசாயன உணவு. எனவேதான் உடற்கூறில் நிறைய மாற்றங்களை உண்டு பண்ணுகிறது.

நம்முடைய அன்றாட உணவும் ரசாயன மயம்தான் எனவே உணவில் கவனம் கொள்ளுங்கள்.

சரி இதற்கும் குழந்தைப் பிறப்புக்கும் என்ன சம்பந்தம்?

நிச்சயம் உண்டு. உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். அதுவே பாதி பிரச்சினைகளைத் தீர்த்துவிடும். அல்லது பாதிப் பிரச்சினைகளை வராமலே செய்துவிடும்.

சரி... நாம் ஜோதிட விபரங்களைப் பார்ப்போம்.

21ம் அத்தியாயத்தில், 9 விதமான குறிப்புகளைத் தந்திருந்தேன். அந்த வரிசையில் இப்போது பார்ப்போம்.

ஆண் ஜாதகத்தில் 5 ஆம் பாவகம் அதாவது 5ம் இடம். இதை எப்படி அறிவது என்பவர்களுக்காக, உங்கள் ஜாதகத்தில் லக்னம் என்பதை சுருக்கமாக “ல” என எழுதியிருக்கும். அது முதல் பாவகம். அதிலிருந்து வரும் 5ம் இடமே 5ம் பாவகம்.

இதேபோல பெண் ஜாதகத்தில் 9ம் இடம் பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் சூரியன் இருக்க, ஆண் குழந்தை உண்டு. ஆனால் ஒரு குழந்தை மட்டுமே இருக்கும். உங்களில் யாராவது “இல்லையே எனக்கு 2 குழந்தை இருக்கே “ என்பவர்களுக்கு, சூரியன் மட்டும் தனித்து இருந்தால் தான் மேற்கூறிய பலன்.

மாறாக சூரியனோடு இன்னொரு கிரகம் இருந்தால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தை உண்டு.

இங்கு விவரிக்கும் தகவல்கள், தனித்த கிரகங்கள் இருக்கும் பலன்களே.

இனி அடுத்து.. சந்திரன் இருக்க பெண் குழந்தை உண்டு.

செவ்வாய் இருக்க ஆண் குழந்தை, புதன் இருக்க பெண் குழந்தை, சுக்கிரன் இருக்க பெண் குழந்தை, சனி இருக்க தாமதமாக குழந்தை பாக்கியம். ஆனால் இரவில் குழந்தை பிறக்கும்.

ராகு இருக்க பல குழந்தைகள். அதிலும் ஆண் குழந்தைகளே அதிகம்.

கேது இருக்க பல பெண் குழந்தைகள் உண்டு.

இதுவரை புத்திரபாக்கியம் தரும் விபரங்களை சிறிய அளவில் பார்த்தோம். ஆனால் நாம் பார்ப்பது புத்திரதோஷத்தைப் பற்றி. எனவே அதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

ராகு கேது இருந்தால் புத்திர தோஷம் என்பார்கள்,

நிச்சயம் அப்படி இல்லை.

ராகு இருக்க பல ஆண் குழந்தை என்று சொன்னேன் அல்லவா. அப்படியானால் இதில் புத்திர தோஷம் எப்படி வரும்?

வரும். அதாவது இத்தனை ஆண் குழந்தை இருந்தும் கடைசிக் காலத்தில், மாதம் ஒரு பிள்ளையின் வீட்டில் வாசம் செய்ய வேண்டிவரும். இது தோஷம்தானே!

கேது இருக்க பெண் குழந்தைகள் மட்டுமே உண்டு எனப் பார்த்தோம், ஆம்... இதுவும் ஒருவகையில் தோஷமே. எப்படி?

ஏற்கெனவே கேதுவைப் பற்றி விளக்கம் தந்திருக்கிறேன். கேதுவானவர் ஒன்றைத் தந்து அதை அனுபவிக்க அனுமதிக்கமாட்டார். ஏங்கச் செய்வார்.

பெண் குழந்தை என்பதே திருமணத்திற்குப் பின் கணவர் வீட்டில் வாழ்வதுதான் மரியாதை,சிறப்பு.

இப்போது புரிகிறதா.. கேது குழந்தையைத் தந்து சந்தோஷத்தைக் கொடுத்து பிறகு திருமணத்திற்குப் பின் பிரிவு என்ற தோஷத்தைத் தருவார்.

இங்கு இன்னும் குருபகவானைப் பற்றி விளக்கவில்லை,

காரணம்? புத்திர பாக்கியத்தை அருளுபவர் குருபகவானே. ஆனால் அவர் மேலே குறிப்பிட்ட பாவகங்களில் இருந்தால், அவரே புத்திரதோஷத்தையும் தருவார்.

அதற்கு பெயர் “காரகோபாவக நாஸ்தி.”

இதன் விளக்கம் என்னவென்றால் 5ம் இடம் என்பது பாவகம், குருவானவர் புத்திர காரகன், இந்த இரண்டும் இணையும்போது “ ’’காரகோபாவக நாஸ்தி” என்னும் தோஷம் உண்டாகிறது.

இங்கு ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்த ஸ்தானங்களில் மற்றொரு கிரகம் இருந்தாலும், அல்லது பார்த்தாலும் தோஷம் கிடையாது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:02 am

வீட்டில் குழந்தை கண்ணன் படம் இருக்கா? குழந்தை பாக்கியம் நிச்சயம்!


புத்திரதோஷத்தைப் பற்றி மட்டும் எழுத ஆரம்பித்தால் ஒரு பெரிய புத்தகமே போடலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன. நீங்கள் பொறுமையாக மொத்த பதிவுகளையும் தொடர்ந்து வாசித்து வந்தால்தான், இந்தத் தொடரின் நோக்கம் புரியும். இது ஒரு விழிப்பு உணர்வு தொடர். பரிகாரம் என்று நீங்கள் ஏமாறாமல் இருக்கவும, உண்மையான பரிகாரம் எது என்பதை உணர்த்தவும் இந்த தொடர் உங்களுக்கு உதவும்.

மற்ற எந்த தோஷத்தைவிடவும் இந்த புத்திர தோஷத்திற்காக பரிகாரம் என்ற பெயரில் பணத்தையும் மனநிம்மதியையும் தொலைப்பவர்கள்தான் அதிகம். எனவே பொறுமையாகவும், கவனமாகவும் படியுங்கள். எளிய பரிகாரம் மூலம் இறைவனின் அருளோடு எல்லா நன்மையும் உண்டாகும். அழகன் முருகன் அருள்புரிவான்.

ராகு,கேது, குரு இவர்கள் தரும் புத்திர தோஷத்தைப் பார்த்தோம், இனி மற்ற கிரகங்கள் தரும் புத்திர தோஷத்தைப் பார்க்கலாம்,

அதற்கு முன்னர் குரு பகவான் எப்படி எல்லாம் தோஷத்தைத் தருகிறார் என்று பார்க்கலாம்.

அஸ்தமனம் என்னும் ஒரு நிலை மற்றும் வக்கிரம் என்னும் ஒரு நிலை மற்றும் கிரகயுத்தம் என்னும் நிலை என வரிசையாகப் பார்க்கலாம்.

குரு பகவான் அஸ்தங்கம் என்னும் அஸ்தமனம் அடைந்தால் புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்படும்.

வக்கிரம் என்னும் நிலை அடைந்தாலும் தாமதம் ஏற்படும்.

குரு பகவான் கிரக யுத்தத்தில் தோற்றாலும் தாமதம் என்ற நிலை ஏற்படும்.

’’இதை நாங்கள் எப்படி அறிவது? “ என்கிறீர்களா?

நீங்கள் எளிமையாக அறியம்படி கூறுகிறேன்.

உங்கள் ஜாதக ராசி மற்றும் அம்சம் கட்டம் அருகருகே இருக்கும்.

அதில் ராசிக் கட்டத்தில் குரு பகவானும் சூரிய பகவானும் ஒரே கட்டத்தில் இருந்து, அம்ச கட்டத்திலும் ஒரே ராசியில் இருந்தால் குரு அஸ்தமனம் அடைந்துள்ளார் என அறியலாம். மேலும் அம்ச கட்டத்தில் சூரியன் இருக்கும் கட்டத்திற்கு முன், பின் கட்டங்களில் இருந்தாலும் அஸ்தமனமே.

வக்கிரம் அறிவது எப்படி?

ராசிக் கட்டத்தில் குரு இருக்கும் கட்டத்தில் இருந்து சூரியன் 5, 6, 7, 8, 9 ஆக இருந்தால் குரு வக்கிரம் என்னும் நிலையை அடைவார். ( இதில் 5 மற்றும் 9 கட்டங்களில் பாதியில் இருந்து கணக்கிட வேண்டும் இதை ஜோதிடர்கள் மட்டுமே அறிய முடியும்).

கிரக யுத்தம்? குரு பகவான் இருக்கும் கட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்க அங்கே “கிரகங்களுக்குள் யுத்தம் ஏற்படும்.” அதில் வெற்றி பெற்றவர் மற்ற கிரகங்கள் தரவேண்டிய பலன்களை தானே ஏற்றுக்கொண்டு பலன் தருவார்,

இந்த யுத்தத்தில் குரு தோற்றாலும் புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்படும்,அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:02 am

அப்படியானால்... இதற்கு என்ன பரிகாரம் உள்ளது?

எளிமையான பரிகாரங்களே போதும்,

குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழன் தோறும் கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள்.

அரசமர விநாயகரை அதிகாலை 5 மணிக்கு 48 முறை வலம் வாருங்கள்.

குருவாயூர் கண்ணனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். உடனே புத்திரபாக்கியம் உண்டாகும்.

திருச்செந்தூர் சென்று முருகனை வேண்டுங்கள். புத்திரத்திற்கு உத்திரவாதம் உண்டு.

வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகளை வரவழைத்து, லட்டு மற்றும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பாயசம் உண்ணக்கொடுங்கள். அவர்களோடு நேரத்தைச் செலவழியுங்கள். அந்த மழலைகளின் சப்தமானது, சிறந்த அதிர்வலைகளை உண்டு பண்ணும்.

யானைக்கு உணவு வழங்குங்கள் (வாழைப்பழம், கரும்பு, தென்னை ஓலை). நிச்சயம் உண்டு குழந்தை.

கருமாரி அம்மனை மனதார வணங்குங்கள். கரு உண்டாகும். அதிசயம் உணர்வீர்கள்,

குழந்தை கண்ணனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். குழந்தை பாக்கியம் சர்வ நிச்சயம்.

மிக முக்கியமாக “ குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள்” குலதெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டு தானம் செய்யுங்கள்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவசக்தி சொரூபத்தை வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.

ஶ்ரீஅனுமன், நித்ய பிரம்மச்சாரிதான். ஆனாலும் கேட்ட வரத்தை கேட்ட படி வழங்குவார் ஆஞ்சநேயர். எனவே ஸ்ரீராமஜெயம் எழுதி வணங்குங்கள். நல்ல வழி கிடைக்கும்.

அபிராமி அந்தாதி படித்து வாருங்கள். அழகான குழந்தை கிடைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வறியோர்க்கு உதவுங்கள். சந்தான பாக்கியம் முதலான சகல நல்லதுகளும் நடக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:05 am

வஸ்திர தானம் செய்தால் குழந்தை பாக்கியம்!


இனி, சூரியன் முதற்கொண்டு வரிசையாக கிரகங்கள் ஏற்படுத்தும் புத்திரத் தடையையும், அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

சூரியன்:- இவர்தான் ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிர் என்னும் ஜீவனையேத் தருபவர்,

ஜாதகத்தில் லக்னம் என்பது குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியனின் ஒளிப்புள்ளி நின்ற ராசியே லக்னம் என்னும் உயிர் ஜனித்த புள்ளி.

ஆக இவர்தான் ஒரு உயிர் உருவாக முக்கியக் காரணம். விந்துவில் உள்ள உயிரணுக்களில் உள்ள ஜீவ சக்தி சூரியன் அம்சம்.

கருமுட்டை சந்திர அம்சம் ஆகும். இதை பிறகு விரிவாக பார்ப்போம்.

சூரியன்-சிவம்

சந்திரன்- சக்தி


இந்த இரு சக்தியும் இணையும் போது சிவசக்தி என்னும் உயிர் உருவாகிறது.

அதனால்தான் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் தன்மை உண்டு.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் குணம் உண்டு.

சரி... இப்போது சூரியன் எப்படி புத்திர பாக்கியத்தில் தடை அல்லது தாமதத்தை தருகிறார் என்பதைப் பார்க்கலாம்.

உயிர் அணுக்கள் சுக்கிர அம்சம்( அணுவில் உள்ள ஜீவ சக்தி சூரியன்) ஜாதகத்தில் சுக்கிரன், சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் அடைந்தால், இந்த உயிரணுக்கள் பிரச்சினை ஏற்படும், அதாவது பலம் இழந்து போகும்.

இது மருத்துவ பரிசோதனையில் மட்டுமே அறிந்து கொள்ளமுடியும் என நினைத்திருப்போர்க்கு ஜாதகத்தை பார்த்த உடனே கண்டுபிடிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது சூரியனின் சக்தியால் சுக்கிரனுக்கு ஏற்படும் தோஷம். எனவே இதற்கு என்ன பரிகாரம்?

சுக்கிரனின் விருட்சம் அத்தி மரம்,

சூரியனின் விருட்சம் எருக்கு.


இருந்தாலும் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவர்களின் மரங்கள்:-

கார்த்திகை - அத்திமரம்

உத்திரம் - அலரி

உத்திராடம் - பலா மரம்


இதில் ஒரு ஒற்றுமை அத்தி மட்டுமே. எனவே அத்திப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தாலே உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. மேலும் சித்தர்கள் பரிந்துரைத்ததும் அத்திப்பழத்தையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பலாப்பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

அத்திமரத்துக்கு தண்ணீர் விட்டு வந்தாலும், முடிந்தால் வளர்த்து வந்தாலும் நன்மைகள் ஏற்படும்.

கார உணவுகளைத் தவிர்ப்பது, பித்தம் தரும் உணவுகளைத் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.

சூரியன் உதிக்கும் அதிகாலையில் சூரியனைப் பார்த்து வணங்குவது நல்ல பலனை அளிக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரைத் தரிசிப்பது நற்பலன்களை வழங்கும்.

இனி, சந்திரனால் உண்டாகும் தோஷம் என்னவென்று பார்ப்போம்.


சந்திரன், சுக்கிரனோடு இணையும் போது விந்து நீர்த்துப் போகும்,

ஆணின் உயிரணுக்கள் நீர்த்துப் போவதால் உயிரணுக்களின் வேகம் குறையும். அதனால் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படும். இதற்கு என்ன பரிகாரம்?

சந்திரனின் விருட்சம் கல்யாண முருங்கை, முருங்கை,

முருங்கைக் கீரைக்கு விந்துவை கெட்டிப்படுத்தும் சக்தி உண்டு. மேலும் நாட்டு மருந்துக் கடைகளில் முருங்கை பிசின் விற்பனை செய்யப்படுகிறது. இதைச் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலனைத் தரும்.

பௌர்ணமி மற்றும் வளர்பிறை திருதியை திதி நாளன்று திருப்பதி சென்று இரவு தங்கி பெருமாளை தரிசித்துவர புத்திர பாக்கியம் உண்டாகும்.

வயதான பெண்களுக்கு உடை(வஸ்திரம்) தானம், பச்சரிசி தானம் தருவது சந்தான பாக்கியத்தை வழங்கவல்லது.

புகழ்பெற்ற, பழமையான, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அம்மன் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபடுங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:15 am

பிள்ளை வரம்... முருகனிருக்க பயமேன்!


புத்திர தோஷத்தில் கிரகங்கள் தரும் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்த்துவருகிறோம்,

இப்போது புத்திரபாக்கியத்தில் செவ்வாயின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

அஷ்டலட்சுமிகளில் தைரியலட்சுமியின் அருளாசி இருந்தாலே போதும்... மற்ற லட்சுமிகள் தானாகவே நமக்கு அருளை வாரி வழங்குவார்கள் என்பது மூத்தோர் வாக்கு.

அதற்கு என்ன காரணம்?

தைரியம் என்கிற வீரியம் இருந்தால்தான் மற்ற செல்வங்களை நாம் அடைய முடியும். என்ன சரிதானே?!

செவ்வாய் என்பவர் தைரியம், வீரியம், வேகம் இவற்றுக்கெல்லாம் அதிபதி.

ஒரு ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் செவ்வாய் பலவீனம் அடைந்துவிட்டால் புத்திரபாக்கியத்தில் தடையை ஏற்படுத்திவிடுவார்,

ஏன்? ஆணின் விந்துவில் லட்சக்கணக்கான உயிரணுக்கள் இருந்தாலும் ஒரேஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் உட்புகும். அந்த அணுதான் குழந்தையாக உருவாகிறது.

ஆணின் குறியிலிருந்து கருமுட்டை வரை உள்ள தூரம் நம்மை பொருத்தவரை சில சென்டிமீட்டர் தூரம்தான்.

ஆனால் கண்ணுக்கே புலப்படாத உயிரணுக்கு அந்த தூரம் என்பது ஒரு மாரத்தானுக்கு ஒப்பானது.

ஆக அந்தத் தூரத்தை வேகமாக ஓடி கடக்க, செவ்வாய் என்னும் வீரியம் இருந்தால் மட்டுமே முடியும்.

இப்போது புரிகிறதல்லவா! எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் செவ்வாய் என்னும் போர் வீரன் இருந்தால்தான் புத்திரபாக்கியம் உண்டாகும். ( ஏன் செவ்வாய் போர்வீரன்? கருவை நோக்கி ஓடும் ஓட்டம் மட்டும் முக்கியமல்ல, வேறுயாரும் நம்மை முந்திவிடக்கூடாது என்று மற்ற உயிரணுக்களையும் தாக்கி முந்தவிடாமல் செய்து முடிவில் வெற்றிக்கோட்டினை அடைகிறது)

நீங்கள் உயிரணுவின் (பெரிதாக்கப்பட்ட) வடிவத்தை பார்த்திருக்கிறீர்களா? இதுவரை பார்க்கவில்லை என்பவர்களுக்கு.. கூகுள் சென்று பார்க்கவேண்டும் என்று அவசியமில்லை.

நீங்கள் தினமும் வணங்கும் ஶ்ரீமுருக பெருமானின் கையில் இருக்கும் “வேலின் வடிவம்” தான் உயிரணுவின் வடிவம்.

இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன பரிகாரம் என்பது.

ஆம் முருகனை நம்பினோர் ஒருபோதும் கை விடப்படார்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:15 am

ஜாதகத்தில் செவ்வாய் பலவீனம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

செவ்வாய் கடக ராசியில் இருந்தால் நீசம் என்னும் நிலை அடைந்து தன் பலத்தை இழப்பார்.

செவ்வாய், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் அடைய, பலம் இழப்பார்,

செவ்வாய் கேதுவோடு இணைய தன் பலத்தை இழப்பார்,

(செவ்வாய் ராகுவோடு இணைய அடங்காத காமம் உடையவர்)

செவ்வாய் சந்திரனோடு ஒரே பாகையில்(டிகிரி) இணைந்தால் நீர்த்துப் போய்விடுவார்,

சனியோடு இணைய தன் சக்தியை இழப்பார்,

செவ்வாய் புதனோடு இணைய சிற்றின்பம் என்பது மேலும் சிறிய சிற்றின்பமாக முடியும், அதாவது “துரிதஸ்கலிதம்” என்னும் திருப்தியற்ற நிலையை உண்டாக்கும்,


இதற்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதைப் பார்க்கலாம்,

நாம் முருகனின் பல்வேறு கதைகள், காவியங்களைப் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.

அதில் ஒன்று பிரம்மாவிடம் இருந்த படைக்கும் தொழிலை தானே எடுத்துக்கொண்டது என்பதை அறிவோம்.

முருகனின் அவதார நோக்கமே இனவிருத்தி என்னும் மக்கள் பெருக்கமே, இவரே காதலின் அடையாளம், காமத்திற்கும் இவரே உருவம்.

இனவிருத்தி என்னும் சந்ததி விருத்திக்கும் இவரே காரணம். ஒவ்வொரு உயிரினமும் தனக்கு வீரியமுள்ள சந்ததியை உருவாக்கத்தான் முயற்சிக்கும்.

அந்த வகையில் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடைய, நல்ல அறிவாற்றல் உள்ள, எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட குழந்தை உருவாக “முருகப்பெருமானே” அருள் புரிவார்.

ஆக மேலே சொன்ன அத்தனை தோஷங்களுக்கும் ஒரே பரிகாரம் “முருகன்” மட்டுமே.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:17 am

குழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்!

நாம் சென்ற பதிவில் செவ்வாய் என்னும் வீரியகாரகனின் ஜாதகரீதியிலான பலம், பலவீனங்களைப் பார்த்தோம், மேலும் சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.

செவ்வாய் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் என்னும் அஸ்தமனம் அடைய, தன் பலத்தை இழப்பார். செவ்வாயின் வேலையை இப்போது சூரியன்தான் செய்வார்.

இப்போது உங்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும்.

என்ன தெளிவு?

சூரியன் நெருப்பு கிரகம், செவ்வாய் நெருப்பு கிரகம். ஆக இரண்டும் நெருப்பு கிரகம். இதில் ஒன்று பலமிழக்க, அந்த நெருப்பை மீண்டும் பலமாக்க வேண்டும்.

ஆக இப்போது நமக்குத் தேவை அக்னிஸ்தலம்; அது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை... பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் என்பதை அறிந்திருப்பீர்கள். அங்கே குடிகொண்டிருக்கும் தெய்வம் அண்ணாமலையாரே நமக்கு துணை செய்வார். புத்திர பாக்கியம் தந்தருள்வார்.

திருவண்ணாமலை, சிவ ஸ்தலமாக இருப்பினும் அங்கே முருகனின் அற்புத நிகழ்வுகள் ஏராளம். எனவேதான் அது முருகனுக்கும் உகந்த ஆலயம் என்று போற்றப்படுகிறது.

அந்த இறைவனின் அக்னி, உங்கள் உடலில் உள்ள குறைபாடுகளை புடம்போட்ட தங்கம் போல் சுத்தமாக்கித் தருவார், எனவே அங்கு சென்று வந்தாலே உங்கள் குறை தீரும்.

அடுத்து... வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபட நல்லதே நடக்கும்.

செவ்வாய், சந்திரனோடு இணைந்து பலவீனம் அடைய முருகனுக்கு பால் காவடி எடுத்தல், பாலபிஷேகம் செய்தல் போன்றவை நலம் தரும்.

யாத்ரீகர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு, பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கு நீர்மோர் வழங்குதல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்றவை நல்ல பலன்களை வாரி வழங்கும்.

செவ்வாய், கேதுவோடு இணைந்தால் முற்றிலும் தன் பலத்தை இழப்பார். உண்மையில் இதுதான் புத்திரபாக்கியத்தை இல்லாமலே செய்துவிடும் அமைப்பு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதற்கு என்ன பரிகாரம்? கேது என்பது தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இயல்பை உடையது.

எனவே இதற்கான பரிகாரம் என்பதும் உங்கள் உடலை வருத்தி கடுமையான முறையிலேயே இருக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:20 am

சஷ்டி விரதம்:-

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பதன் அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தால் கர்ப்பப்பை என்னும் அகப்பையில் கரு உண்டாகும் என்பதே.

எனவே சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். புத்திர பாக்கியம் நிச்சயம்!

கிருத்திகை விரதம்:

கார்த்திகேயனை நினைத்து கிருத்திகை விரதம் இருப்பதும் சிறப்பு ( கிருத்திகை நட்சத்திரத்தின் வடிவம் (சவர)கத்தி. எனவே தேவையில்லாததை நீக்கி சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும்) கருப்பையில் இருக்கும் குறைகளை நீக்கி கருவை பலப்படுத்தும்.

பழநி பாதயாத்திரையில் பங்கெடுப்பது, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் முதலானவை கேதுவின் காரகத்துவத்தை மட்டுப்படுத்தும்.

செவ்வாய், சனியோடு இணைந்து பலவீனம் அடையும்போதுஅய்யனார் அல்லது ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருவது மிகச்சிறந்த பலனை தரும். சந்தான பாக்கியத்தை வழங்கி அருளும்.

ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வந்தவர்களுக்கு “மணி” போன்ற குழந்தை பாக்கியம் இருப்பது, நாம் எல்லாரும் அறிந்த ஒன்று.

சரிங்க! இதெல்லாம் எனக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு எப்படி முடியும்? என்பவர்களுக்கு...

தாம்பத்யத்தை பரிந்துரைக்கும் முறையில் தொடர்ந்தாலே புத்திர பாக்கியம் உண்டாகும்.

இப்போது சித்தர்கள் உரைத்த பொன் மொழி ஒன்றைப் பார்க்கலாம்,


“தினம் இரண்டு”


“வாரம் இரண்டு”


“மாதம் இரண்டு”


“ வருடம் இரண்டு”


தினம் இரண்டு:- ஒருநாளைக்கு இருவேளை உணவு

வாரம் இரண்டு:- வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.( எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் விந்து மற்றும் கர்ப்பப்பை பலப்படும்)

மாதம் இரண்டு:- மாதத்தில் இரண்டு முறை மட்டுமே தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் ஏறக்குறைய அனைவரும் அதீத உடல் உறவை வைத்துக்கொள்கின்றனர், அது தவறு. விந்துவில் உயிரணுக்கள் பலவீனமாகும், இப்படி பலவீனமான உயிரணுக்களால் உண்டாகும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதே இல்லாமல் போகும்.

வருடம் இரண்டு:- ஆண்டுக்கு இருமுறை பேதிக்கு மருந்தெடுத்து வயிற்றைச் சுத்தம் செய்யவேண்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:23 am

எந்தநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?


சரித்திர காலத்தில், அதாவது அரசர்கள் காலத்தில் தர்மம், நீதி, நேர்மையுடன் ஆட்சி செய்த ஏராளமான அரசர்களை அறிந்திருப்பீர்கள்.

அவர்கள் அரண்மனையில் அந்தப்புரம் இருந்ததையும் அறிவீர்கள். தர்மப்படி ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் அந்தப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்?

அதாவது, நம் குடும்ப வாழ்வியல் படி, நினைத்தவுடன் மனைவியுடன் இருப்பதுபோல் மன்னர்கள் அரசியின் அரண்மனைக்குள் செல்ல முடியாது.

ஏன்? அரசனும் அரசியும் எப்போது சந்திக்கலாம்? எப்போது தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்பதை ராஜகுரு எனும் பல கலைகள் (ஜோதிடம் உட்பட) அறிந்த அந்த அறிஞர் அனுமதித்தால் மட்டுமே சந்திக்கமுடியும். உறவு வைத்துக் கொள்ள முடியும்.

ஏன்? எதற்காக இப்படி?

அரசை ஆளும் அடுத்த வாரிசு எல்லாவகையிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் எனவே, ராஜகுரு குறித்துக்கொடுக்கும் நேரத்தில் மட்டுமே ராணியை சந்திக்கமுடியும். அது ஒரு குறுகிய நேரமாக இருக்கும். அந்த நேரம் முடிந்த உடன் மெய்க்காவலர்களால் பிரிக்கப்படுவார்கள். அந்த நேரத்தில் உருவாகும் குழந்தை மட்டுமே ராஜ வாரிசாக முடியும்.

எனவே மன்னனின் இச்சை தீர உண்டாக்கப்பட்டதே அந்தப்புரம்!

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். எந்த நேரத்திலும் தாம்பத்யம் என்பது தவறு. ஒவ்வொரு முறைக்கும் (குழந்தை வேண்டுபவர் மட்டும்) நல்ல நேரம் பார்க்கப்படவேண்டும்.

இப்படி பெறும் குழந்தை, நல்ல ஆரோக்கியம், அறிவு, சமயோசித புத்தி, சாதிக்கும் வல்லமையோடு பிறக்கும்.

குறைந்தபட்சம் சாந்திமுகூர்த்தம் நேரம் குறித்து தாம்பத்யம் ஆரம்பித்தால் அனைத்தும் சுபமே என்கிறது சாஸ்திரம்.

ஆனால் யாரும் திருமணத்திற்கு நேரம் குறிக்கிறார்களே தவிர, இந்த நிசேகம் என்னும் சாந்தி முகூர்த்தத்திற்கு அதாவது அடுத்தடுத்து நிகழ்கிற தாம்பத்யங்களுக்கு நேரம் பார்ப்பதில்லை,

நான் கூறுவது ஒன்றேஒன்றுதான். கிரகங்கள் துணையில்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு நிகழ்வும் கிரகங்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் எல்லாம் சுபமே. எப்போதும் நலமே!

சென்ற பதிவில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் பற்றி சொல்லியிருந்தேன். நிறையபேர் அதற்கு ஏதும் நாள் கிழமை பார்க்கப்பட வேண்டுமா என கேட்டிருந்தார்கள்.

அவர்களுக்காக...பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியல் கட்டாயம் எடுக்க வேண்டும்.

ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் குளியல் எடுக்கவேண்டும்.

ஏன் பெண்கள் வெள்ளிக்கிழமை?

ஆண்கள் சனிக்கிழமை?

நல்லெண்ணெய் சனிபகவானின் அம்சம்.

வெள்ளிக்கிழமை பெண்கள் நல்லெண்ணெய்க் குளியல் எடுப்பது அவர்களுக்குள் உள்ள சோம்பல், தரித்திரம், அவநம்பிக்கை, அவச்சொல் போன்றவை நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் வலிமை உண்டாகும், உடல்வலிமை உண்டாவதால் பார்க்கும் வேலையில் சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.(கடின உழைப்பிற்கு சனிபகவானே காரகன்)

ஒரு குறிப்பு ஆண்கள் சனிக்கிழமை அன்று பிறந்திருந்தால், சனிக்கிழமையை தவிர்த்து புதன்கிழமை அன்று எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

ஜென்ம கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

இது பெண்களுக்கு பொருந்தாது.

இது போன்ற தகவல்களையும் நட்சத்திர விவரங்கள் என்ற தலைப்பில் பிறகு பார்ப்போம்.

இப்போது பரிகாரங்களைப் பார்க்கலாம்,

செவ்வாய் புதனோடு இணைய தாம்பத்ய பலவீனத்தைத் தருவார் என பார்த்தோம் அல்லவா. அதற்கான பரிகாரங்களை இப்போது பார்க்கலாம்.

உடற்பயிற்சி, யோகாசனம் உடல் வலிவைத் தரும்,

மகாவிஷ்ணுக்கு துளசிமாலை அணிவித்தல், சக்கரத்தாழ்வாருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தல் முதலான வேண்டுதல்கள் நல்ல பலனைத்தரும்.

கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல், பச்சைப்பயறு சுண்டல் செய்து தானம் செய்தல் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்!

பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு (புதன் - பதின்ம வயது பெண் குழந்தைகளை குறிப்பவர்) உதவுதல், ஆடை வழங்குதல் எல்லா நன்மைகளையும் தரும்.

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது நல்ல பலனைத்தரும்.

இங்கு நான் குறிப்பிடும் பரிகாரங்கள் எளிமையாக இருப்பதால். “இதனால் என்ன நன்மை வரப்போகிறது என்பவர்களுக்கும், இந்த பரிகாரங்கள் எப்படி இல்லற வாழ்வுக்கு துணை நிற்கும் என்பவர்களுக்கும்” ...

இந்த பரிகாரங்களைச் செய்து பாருங்கள்... கை மேல் பலன் பெறுவீர்கள் என்பது உறுதி!

மூர்த்தி சிறுசுதான்; ஆனாலும் கீர்த்தி பெருசு!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:28 am

தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம்!

எப்போது தாம்பத்யம் வைத்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

பகலில் தாம்பத்யம் கூடாது என்பது சாஸ்திர விதி.

ஏன் அப்படி? எதனால் இவ்விதம்? சாஸ்திரம் ஏன் கூடாது என்கிறது?

சாஸ்திரம் சொல்வது அனைத்தையும் அறிவியல் ரீதியாக அணுகுகிற ஆட்கள்தானே நாம்.

அறிவியல் ரீதியாக ஏன் என்பதை அறிந்துகொள்வோம்.

பகல் பொழுதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கிக்கொண்டிருக்கும், அதனால் ஏற்படும் ரத்த ஓட்டம் அதிகமாவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும்,

இப்படி உடல் சூடு அதிகமாக இருக்கும்போது, தாம்பத்யம் வைத்துக்கொள்வது உடல் பலஹீனத்தை ஏற்படுத்தும்.

அதுமட்டுமா? உயிரணுக்களில் வேகமும் இருக்காது. மேலும் தாம்பத்யத்திற்குப் பின் உடலுக்கு முழு ஓய்வு தேவைப்படும். எனவே பகலில் உடல்சேர்க்கை என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

இன்னும் சில விஷயங்களையும் பார்ப்போம்.

திருக்குறளில் “அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்” என மூன்று விதமாக பிரித்து குறள்களை தந்துள்ளார்,

குறள் நெறிப்படி வாழ்வது உன்னதமானது என்பது தெரியும். குறைந்தபட்சம் இன்பத்துப்பால் குறள்களைப் படித்து அதன்படி காமத்தை அணுகுங்கள்.

கூடுதலுக்கு முன்பு ஆண், பெண் இருவரின் மனம், உடல் எப்படி தயாராக வேண்டும் என்பதை விளக்கமாகவும் அதேசமயம் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்திருப்பார் திருவள்ளுவப் பெருந்தகை.

அதன்படி உங்கள் தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளுங்கள். இல்லறம் சிறக்கும்,

பெண்ணின் கருமுட்டையானது 28 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும்தானே.

இது , சந்திரன் 12 ராசிகளையும் கடந்து வரும் நாட்களைக் குறிக்கும். ஆம்... கரு என்பது சந்திரனின் அம்சம்.

எனவே மாதவிடாய் உண்டான 5 நாட்களுக்குப் பிறகு அடுத்த 5 நாட்கள் மட்டுமே குழந்தை உருவாகும் சாத்தியக் கூறு உண்டு, அதாவது அந்த 5 நாட்கள் மட்டுமே கருமுட்டையானது திறந்திருக்கும். அதன் பிறகு அந்த முட்டை மூடிக்கொள்ளும். அடுத்த சுற்றுக்கு தயாராகிவிடும்.

எனவே இதுவரை புத்திரபாக்யம் இல்லாதவர்கள் மாதத்தில் இந்த 5 நாட்கள் மட்டும் கூடவேண்டும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்,

மற்ற நாட்களைத் தவிர்த்துவிட்டு, சக்தியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது பல விதத்திலும் புத்திரபாக்யத்தை உண்டாக்கித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:30 am

தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நாட்களில், எந்த நேரத்தில் இணையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இங்கு தரப்படும் நேரம் இரவுப்பொழுது மட்டுமே.திங்கட்கிழமை :- இரவு 10 மணிமுதல் 11 மணிவரை

1 மணி முதல் 3 மணி வரை

செவ்வாய்கிழமை :- இரவு 10 மணிமுதல் 1 மணிவரை

புதன்கிழமை :- இரவு 8 மணிமுதல் 10 மணிவரை

11 மணிமுதல் 12 மணிவரை

வியாழக்கிழமை :- இரவு 11 மணிமுதல் 2 மணிவரை

வெள்ளிக்கிழமை :- இரவு 8 மணிமுதல் 11 மணிவரை

சனிக்கிழமை :- இரவு 9 மணிமுதல் 10 மணிவரை

12 மணிமுதல் 2 மணிவரை

ஞாயிற்றுக்கிழமை :-இரவு 9 மணிமுதல் 12 மணிவரைஇந்த நேரங்களில் தாம்பத்யம் என்பது சிறப்பென்றாலும், இதில் லக்னம் குறிப்பிடவில்லை. குறிப்பிடவும் முடியாது, எனவே அருகில் உள்ள ஜோதிடரிடம் லக்னம் குறித்துக்கொள்வது சிறப்பு.

ஏன் லக்னம் குறிப்பிட முடியாதென்றால் சூரியனை அடிப்படையாக வைத்துதான் லக்னம் கணிக்க முடியும்,

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக மாறுவார். எனவே நான் இங்கே லக்னம் தரமுடியவில்லை. எனக்கும் வருத்தம்தான்,

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்க பெறின்”


விரைவில் புத்திரபாக்கியம் உண்டாக எம்பெருமான் முருகன் எல்லோருக்கும் அருள் புரிவார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:37 am

குலதெய்வ வழிபாடு முக்கியம்!


இஷ்ட தெய்வமாக எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வழிபடுங்கள். சதாசர்வ காலமும் அந்த இஷ்டதெய்வம் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். வழிபடுங்கள். நேர்த்திக்கடன் செலுத்துங்கள். அதேசமயம், முக்கியமாக ஒரு வழிபாட்டை, ஒரு தெய்வத்தை மறக்கவே மறக்காதீர்கள்.

அதுதான் குலதெய்வம்... குலதெய்வ வழிபாடு. குலதெய்வ வழிபாடு என்பது மிக மிக முக்கியம். எந்தப் பரிகாரங்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் அனுமதி பெறவேண்டும்.

உங்கள் வழிபாட்டு முறை எப்படியோ அதன் வழிமுறையில் பூஜை செய்த பின் பரிகாரங்களைத் தொடருங்கள். வெகு சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

ஒருவர் தன் குலதெய்வத்தை 13 தலைமுறைக்கு மேல் தொடர முடியாது என்பதை அறிவீர்களா?

எவர் ஒருவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தை மட்டும் இருக்கிறதோ... அவரோடு அந்த குலதெய்வமும் குலதெய்வ வழிபாடும் முடிந்து விடுகிறது.

அல்லது வாரிசே இல்லாமல் போனாலும் குலதெய்வ வழிபாடு முடிவுக்கு வந்துவிடும்.


மேலே சொன்ன இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

குலதெய்வ வழிபாடு “முறையாக செய்யாமல் போனால்” ஆண் வாரிசு இருக்காது.

குலதெய்வத்தை “மறந்தே போனாலும், அல்லது தெரிந்தே வணங்காமல் போனாலும்” வாரிசே இல்லாமல் போகும்.


இல்லை என் தந்தைதான் மறந்துவிட்டார். நான் தேடிப்பிடித்து வணங்கிவருகிறேன் என்பவர்களுக்கு... “முன்னோர் செய்த குற்றம் வாரிசுகளை வந்து சேரும்” என்பது விதி. ஆகவே அது மாறாது, மாற்றமுடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எனவே குலதெய்வத்தை மறக்காமல் வணங்குவதே புத்திரபாக்கியத்தை உறுதி செய்யும் என்பதை உணர்ந்து, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:38 am

இனி நாம் நட்சத்திரங்களை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்,

இதுல என்ன சார் இருக்கு? என் நட்சத்திரம் எனக்குத் தெரியும், கோயிலுக்குப் போகும் போது அர்ச்சனை செய்வேன். திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும் நிகழ்வுக்கு நட்சத்திரம் உபயோகப்படும்.

அதைத் தவிர, வேறென்ன பார்க்க முடியும்? என்பவர்களுக்கு...

இந்தத் தொடரில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவில் “நட்சத்திரங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா... என மெய்ம்மறக்கப் போகிறீர்கள்!

நட்சத்திரப் பட்டியல்
1) அஸ்வினி

2) பரணி

3) கார்த்திகை

4) ரோகிணி

5) மிருகசீரிடம்

6) திருவாதிரை

7) புனர்பூசம்

8) பூசம்

9) ஆயில்யம்

10) மகம்

11) பூரம்

12) உத்திரம்

13) அஸ்தம்

14) சித்திரை

15) சுவாதி

16) விசாகம்

17) அனுசம்

18) கேட்டை

19) மூலம்

20) பூராடம்

21) உத்ராடம்

22) திருவோணம்

23) அவிட்டம்

24) சதயம்

25) பூரட்டாதி

26) உத்திரட்டாதி

27) ரேவதி


28- வதாக ஒரு நட்சத்திரம் உண்டு. தெரியுமா உங்களுக்கு? அதைப் பிறகு பார்ப்போம்.

இப்போது சிறு தகவல் அல்லது குறிப்பு:-

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதற்கு அடுத்த நட்சத்திர நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் முழு வெற்றியை தரும்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

இதை முயற்சித்துப் பாருங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:43 am

'ஜாதகத்திலேயே இருக்கு குலதெய்வ விவரம்!


ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 2 ஆண்பிள்ளை இருக்கிறார்கள். அடுத்தவருக்கு 2ம் பெண்பிள்ளைகள், மூன்றாமவருக்கு குழந்தை இல்லை.

இது ஏதும் குலதெய்வக் குறையா?


ஆண் குழந்தை இருந்தால் குலதெய்வ வழிபாடு தொடரும் என்ற கருத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு சந்தோஷம் அடைந்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அதேசமயம், பெண் குழந்தை மட்டும் பெற்றவர்கள் மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,

அதிலும் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சொல்ல முடியாத வருத்தத்துக்கு ஆளாகியிருப்பார்கள்.

இவர்களுக்கு நான் இப்போது கூறும் கருத்து, மனதை இதமாக்கும் என்பது உறுதி.

ஆண் வாரிசை உடையவர்கள் அவர்களுடைய காலத்திற்குப்பின் வருடாவருடம் திதி என்னும் தர்ப்பணம் செய்யக் கடமை உடையவர்கள்.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு அந்தக் கவலை தேவையில்லை. ஏன் தெரியுமா?

இனி அவர்களுக்கு மறு ஜென்மம் என்பதே இல்லை. இனி பிறப்பு இல்லாதவர்களுக்கு தர்ப்பணம் எதற்கு? எனவே குலதெய்வ வழிபாடு முற்றுப்பெறும் என்ற வேதனையை விட “பிறப்பில்லா பெருவாழ்வு” என்பது மிகவும் உயர்ந்தது; உன்னதமானது!

வாரிசே இல்லாதவர்க்கும் இதே பதில்தான்.

இங்கு ஒரு அறிவுரை...

தயவுசெய்து உங்கள் பிள்ளைகளுக்கு பாட்டன், முப்பாட்டன், கொள்ளுத் தாத்தா, எள்ளுத்தாத்தா என அவர்களின் பெயர்களையும் அவர்களையும் தெரிந்த அளவுக்குச் சொல்லித்தாருங்கள்.,

இப்போது தாத்தா பெயரைத் தவிர முன்னோர் பெயர்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே கற்றுக்கொடுங்கள். அது நல்லது.

ஒருசிலருக்கு “நான் பல வருசமா என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செஞ்சிட்டு வரேன். எல்லாப் பெயரையும் சரியாச் சொல்லுவேன், ஆனா இப்ப ஒரு தாத்தா பெயரை மறந்துட்டேன்” என்பவர்களுக்கு...

இது உங்கள் மறதி அல்ல, எந்தப் பாட்டன் பெயரை மறந்தீர்களோ... அவர் “சொர்க்கம் சென்று விட்டார் என அர்த்தம்.” எனவே, மறந்தவர் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என மெனக்கெடாதீர்கள்.

இன்னும் சிலர் “என் குலதெய்வத்தை எப்படித் தெரிந்து கொள்வது” என்று கேட்கிறார்கள்.

எளிமையான விளக்கத்தின் மூலமாக நான் தரும் குறிப்புகள் மூலம் உங்கள் குலசாமியை அறிந்துகொள்ளலாம்.

உங்கள் ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும்.

அதாவது லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5ம் இடம் குலதெய்வத்தைக் காட்டும்.

சரி, கட்டம் தெரிந்து கொண்டோம். தெய்வத்தை எப்படி அறிவது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

5 ல் சூரியன் இருக்க, சிவன் சம்பந்தபட்ட தெய்வம் குலதெய்வம் என்பதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சந்திரன் இருக்க சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன், குலதெய்வமாக இருக்கிறாள் என்று அர்த்தம்.

செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்திவடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வம் என்றும்,

புதன் இருக்க மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயம், குலதெய்வக் கோயில் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

குருபகவான் இருந்தால் சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள்,

சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான ஆலயங்கள்,

சனிபகவான் இருந்தால் எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், சாஸ்தா முதலான தெய்வங்கள் குலதெய்வம் என்று அறிந்து உணரலாம்.

ராகு இருக்க ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் முதலான தெய்வங்களில் ஒன்று, குலதெய்வமாக நம்மை வழிநடத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.


கேது இருக்க எல்லை பெண் தெய்வங்கள், கூரைகூட இல்லாத வெட்ட வெளியில் உள்ள தெய்வங்கள்,ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர் பீடங்கள், ஜீவசமாதி அடங்கிய ஆலயங்கள் குலதெய்வ தலம் ஆகும்.

இனி அடுத்ததடுத்த பதிவுகளில் நட்சத்திரங்களைப் பற்றி முழுமையாக அறிவோம்.

இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் குலதெயவத்தை அறிந்து கொள்ளுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by சிவா on Tue Sep 04, 2018 12:49 am

குலதெய்வம் யார்? எங்கே இருக்கிறது? எப்படி அறிவது?அறிந்துகொள்வோமா?

நட்சத்திரங்களைப் பற்றித் தொடரலாம் என நினைக்கும் போது வாசகர்கள் குலதெய்வம் பற்றி கூடுதல் தகவல்கள் கேட்கிறார்கள்,

வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே முதல் கடமை. எனவே இன்னும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

எல்லை தெய்வம் என குறிப்பிடுகிறீர்கள். அதன் பெயர் எப்படி அறிவது? என்கிறார் வாசக அன்பர் ஒருவர்.

இன்னும் பலர் என் ஜாதகத்தில் 5 ம் இடத்தில் எந்தக் கிரகமும் இல்லை. அப்படியானால் எப்படி அறிவது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

எல்லை தெய்வம் என்றால் ஐயனார், ஐயப்பன், சாஸ்தா எனத் தந்திருந்தேன். இது ஒரு உதாரணம்தான். சுடலைமாடன், முனியப்பன், முனீஸ்வரன், காத்தவராயன், மதுரைவீரன் என இன்னும் பல பெயர்களும் உண்டு. சாமிகளும் உண்டு.

பெண் தெய்வம் என்றால் காத்தாயி, வீரமாயி, வீரமாகாளி, மாரியம்மா, காளியம்மா, புடவைக்காரி, சேலையம்மா, கன்னியம்மா என இன்னும் பல தெய்வங்கள் இருக்கிறார்கள்.

எனவே உங்கள் பூர்வீகத்திலிருந்து இதை ஆராய்ந்தால் எளிதாக உங்கள் தெய்வத்தை இனம்காண முடியும்.

5ம் இடத்தில் கிரகம் இல்லாவிட்டால் அந்த வீட்டின் அதிபதி கிரகம் அமர்ந்த இடம் பார்க்கப்பட வேண்டும்.

அந்த கிரகம் யார்? அதன்படி எப்படி தெய்வத்தை அறிவது என்பதை முந்தைய பதிவில் தெரிவித்தேன்.

உங்கள் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி கிரகம் அமர்ந்த இடம்.

மேஷம் என்றால்:- வறண்ட, கரடுமுரடான பாறைகள் நிறைந்த பகுதியில் கோயில் இருக்கும்.

ரிஷபம் :- வயல் பகுதியில் இருக்கும்.

மிதுனம்:- வாரச்சந்தை அல்லது வருடச் சந்தை ஊரின் எல்லைப் பகுதி ஆகியவற்றில் இருக்கும்,

கடகம்:- கடல், ஆறு, குளக்கரை பகுதியில் இருக்கும்.

சிம்மம்:- நகரின் மையப்பகுதி, ஊரின் தலைநகர், அல்லது சிவனின் பெயரில் அமைந்த நகரம்(உதாரணம்:- திருவண்ணாமலை) அமைந்திருக்கும்.

கன்னி:- சுற்றுலாத்தலம், மக்கள் ஒன்று கூடும் இடம். உதாரணம் திருப்பதி, நாகப்பட்டினம், கன்யாகுமரி, குற்றாலம்...

துலாம்:- இதுவும் மக்கள் ஒன்று கூடும் இடம்தான், சந்தைப்பகுதி, வியாபாரநகரம், என்று இருக்கும். உதாரணம் ஈரோடு, கள்ளக்குறிச்சி ....

விருச்சிகம்:- துணி துவைக்கும் துறை, கிளை ஆறு ஓடும் இடம், சுடுகாட்டுப்பகுதி, முட்புதர் உள்ள பகுதியில் இருக்கும் ஆலயம்.

தனுசு:- அனைவராலும் வணங்கும் தெய்வம், உதாரணம் சென்னை காளிகாம்பாள்- இந்த தலம் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது ஆனாலும் அனைவராலும் வணங்கப்படும் அம்மன் இவள். பிள்ளையார்பட்டியும் இந்த வகைதான். இது போன்ற தெய்வ ஆலயங்கள், சித்தர்கள், ரிஷிகள் வாழ்கின்ற இடம்.

மகரம்:- சுடுகாட்டுப்பகுதி, வறண்ட நிலப்பகுதி, சதுப்பு நிலப்பகுதி, உபயோகமற்ற மரம், செடிகொடி உள்ள காட்டுப்பகுதி.

கும்பம்:- புகழ் பெற்ற கோயில் உள்ள நகரப்பகுதி, உதாரணம்:- காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை... இதன் சுற்றுவட்டாரப் பகுதி.

மீனம்:- கடற்கரை ஊர், நகரம் உள்ள பகுதி, ஞானிகள், மகான்கள் இருந்த பகுதி.


இந்தக் குறிப்புகளையும் சென்ற பதிவின் ( சூரியன் இருக்க, சந்திரன் இருக்க என தகவல் தந்தேன் அல்லவா! அந்த பகுதியையும்) தகவலையும் இணைத்துப் பார்த்தால் உங்கள் தெய்வத்தை நீங்களே அறிந்து கொள்ள முடியும்,


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை