உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by சிவனாசான் Today at 9:43 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram on Mon Aug 20, 2018 8:56 am

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Kolamavu344411
-
இத்திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல
வேண்டுமென்றால், ‘ஓர் அப்பாவி பூனை, புலி வாலைப்
பிடித்த கதை’.

ஆனால், புலியைப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு
பூனையை பிடித்திருக்கிறார் இயக்குநர்.
அதுவும் குருட்டுப்பூனை.

‘அவல நகைச்சுவைப்’ பாணியில் சில காட்சிகளும்
வசனங்களும் சுவாரசியமாக இருக்கிறது என்றாலும்
ஒட்டுமொத்தப் பார்வையில் இந்தத் திரைப்படம்
ரசிக்கத்தக்கதாக இல்லை.

நம்பகத்தன்மை, தர்க்கம் போன்ற அடிப்படையான
விஷயங்கள் திரைக்கதையில் பெரும்பாலும் இல்லை.
கதாபாத்திரங்களின் சிக்கலை உணர்வுபூர்வமாகப்
பார்வையாளர்களோடு இணைப்பதில்தான் ஒரு
திரைக்கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது.
அது இந்தத் திரைப்படத்தில் நிகழவில்லை.

தாயின் மருத்துவச் செலவிற்காக வேறு வழியின்றி
நாயகன் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது
என்பதெல்லாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய
சமாச்சாரம். இதில் நாயகி அதைச் செய்கிறார் என்பது
மட்டுமே வித்தியாசம்.

பெண்மையத் திரைப்படம் என்கிற வகையில் இந்தத்
திரைப்படத்தை சற்று வரவேற்கலாம். அவ்வளவே.

**
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram on Mon Aug 20, 2018 8:57 am

இத்திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல
வேண்டுமென்றால், ‘ஓர் அப்பாவி பூனை, புலி வாலைப்
பிடித்த கதை’.

ஆனால், புலியைப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு
பூனையை பிடித்திருக்கிறார் இயக்குநர்.
அதுவும் குருட்டுப்பூனை.

‘அவல நகைச்சுவைப்’ பாணியில் சில காட்சிகளும்
வசனங்களும் சுவாரசியமாக இருக்கிறது என்றாலும்
ஒட்டுமொத்தப் பார்வையில் இந்தத் திரைப்படம்
ரசிக்கத்தக்கதாக இல்லை.

நம்பகத்தன்மை, தர்க்கம் போன்ற அடிப்படையான
விஷயங்கள் திரைக்கதையில் பெரும்பாலும் இல்லை.
கதாபாத்திரங்களின் சிக்கலை உணர்வுபூர்வமாகப்
பார்வையாளர்களோடு இணைப்பதில்தான் ஒரு
திரைக்கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது.
அது இந்தத் திரைப்படத்தில் நிகழவில்லை.

தாயின் மருத்துவச் செலவிற்காக வேறு வழியின்றி
நாயகன் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது
என்பதெல்லாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய
சமாச்சாரம். இதில் நாயகி அதைச் செய்கிறார் என்பது
மட்டுமே வித்தியாசம்.

பெண்மையத் திரைப்படம் என்கிற வகையில் இந்தத்
திரைப்படத்தை சற்று வரவேற்கலாம். அவ்வளவே.

**
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram on Mon Aug 20, 2018 8:57 am


கோக்குமாக்கு கோகிலாவாக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார்
எனலாம். அப்படியொரு ரகளையான பாத்திரம். முதற்காட்சி
முதல் இறுதிக்காட்சி வரை அப்பாவித்தனமான முகத்தை
வைத்துக்கொண்டு சிக்கலான வியூகங்களுக்குள்
சாமர்த்தியமாக இவர் பயணிக்கும் விதம் அபாரம்.

நயன்தாரா என்றல்ல, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே
பிரத்யேகமான குணாதியசத்தையும் தோரணையையும்
தர இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

கழுத்து வலியால் அவதிப்படும் மெயின் வில்லன், ஆர்வக்
கோளாறில் வில்லனையே மிரட்டும் மச்சான், எப்போதும் க
ண்களில் போதை தெரியும் உலவும் அடியாள், காதலிக்காக
எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஹைபர்-டென்ஷன்
இளைஞன், சாலை வணிகர்களை உளவிற்காகப் பயன்
படுத்திக்கொள்ளும் இன்ஸ்பெக்டர் (சரவணன்),

அசந்தர்ப்பமான நேரத்திலும் எதுகை மோனையில் பேசி
இம்சைப்படுத்தும் மொட்டை ராஜேந்திரன் என்று
விதவிதமான பாத்திரங்கள். ஆனால் திறமையான
திரைக்கதையின் மூலம் இவர்களை ஒருங்கிணைத்திருந்தால்
இந்தத் திரைப்படம் குறிப்பிடத்தகுந்ததாக மாறியிருக்கும்.

நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் மளிகைக்
கடை ஆசாமியாக யோகி பாபு. சில காட்சிகளில் சிரிக்க
வைக்கிறார். அந்தக் குடும்பம் செய்வதின் பின்னணி
தெரியாமல் ஆர்வமாக உதவப் போவதும், தெரிந்ததும்
பதறிப் பின்வாங்குவதுமாக சில காட்சிகளில் புன்னகைக்க
வைத்திருக்கிறார்.

‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்று
இவருக்காகவே உருவாக்கப்பட்ட பாடல் யோகி பாபுவிற்கான
பம்பர் பரிசு.

ஒரு கையாலாகாத தந்தையின் பாத்திரத்தை
ஆர்.எஸ்.சிவாஜி இயல்பாகக் கையாண்டிருக்கிறார். இயல்பும்
நகைச்சுவையும் கலந்த பாத்திரமெல்லாம் சரண்யா
பொன்வண்ணனுக்கு கைவந்த கலை.

ஆகையால் பெரிய பிரமிப்பு ஏதுமில்லை. சீனு, அறந்தாங்கி
நிஷா போன்ற சிறிய பாத்திரங்கள் ஆங்காங்கே
வருகிறார்கள். ஜாக்குலின், வடிவேல் பாலாஜி உள்ளிட்ட
‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் நட்சத்திரங்கள்
ஆங்காங்கே வருவதால் விஜய் டிவியை பார்த்துக்
கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை ஏற்படுகிறது.

இயக்குநர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் இருந்து
உருவாகி வந்தவர் என்பதால் இது நேர்ந்திருக்கிறது போல.
யோகி பாபு நடத்தும் மளிகைக்கடையின் உதவியாளாக
வரும் சிறுவன் பேசுவதெல்லாம் அதீதமானது என்றாலும்
தன் நடிப்பால் கவர்கிறான்.

அனிருத்தின் இசையில் உருவான ‘கல்யாண வயசு’
பாடல், இந்தத் திரைப்படத்திற்கு ஒரு நல்ல விளம்பரமாக
நின்று உதவியிருக்கிறது.

ஆனால் இதர பாடல்கள் எதுவும் கவரவில்லை.
மரண அவஸ்தையில் திடீர் திடீரென்று அனிருத்தின் குரல்
உச்சஸ்தாயியில் கதறி வெறுப்பேற்றுகிறது.
காட்சிகளுக்கேற்ப ஒலிக்கும் பின்னணி இசை ஆங்காங்கே
கவர்கிறது.

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்திற்கு
மிகப் பெரிய பலம். கும்மிடிப்பூண்டி என்கிற சென்னை
புறநகரின் பின்னணியை கேமரா சிறப்பாகப் பதிவு
செய்திருக்கிறது.

நயன்தாராவின் நடுத்தர வர்க்க வீடு உள்ளிட்ட இடங்கள்
இயல்பான பின்னணியில் உள்ளன. மைலாப்பூரில் உள்ள
ஒரு பிரபலமான சிறு உணவகத்தின் மீது இயக்குநருக்கு
என்ன கோபமோ தெரியவில்லை, அதே பெயரையும்
பின்னணியையும் உபயோகித்து கடத்தல் தொழில் அங்கு
நடைபெறுவதாகச் சித்தரித்திருக்கிறார்.


ஊதிய உயர்வு வேண்டுமென்றால் ‘அந்த’
விஷயத்திற்காக ஒப்புக் கொள்ள மறைமுகமாக வலியுறுத்தும்
மேலாளரிடம், ‘அதற்கு’ தயார் என்றால் எம்டியிடமே
நேராகப் பேசி விட்டு உங்கள் இடத்தில் அமர்ந்திருப்பேனே’
என்று நயன்தாரா பதில் அளிக்கும் இடம் போன்று, வசனங்கள்
சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

தாயாரின் மருத்துச் செலவிற்காக ஒரு நடுத்தர
வர்க்கத்துப் பெண் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிற
முரணைக் கொண்ட ஒரு சுவாரசியமான பின்னணிதான்.

ஆனால் இதை நம்பகத்தன்மையோடும் தர்க்கத்தோடும்
இயக்குநர் காட்சிகளாக உருவாக்கவில்லை. பல இடங்களில்
செயற்கையான நாடகம் போலிருக்கிறது. ‘அவனையும்
சுட்டாத்தான் நான் போவேன்’ என்று நயன்தாரா
சொல்லும் காட்சிகள் எல்லாம் படுசெயற்கை.

மருத்துவச் செலவிற்காக பல இடங்களில் உதவி கேட்கும்
நாயகிக்கு, அரசு மருத்துவமனை என்று ஒன்று இருப்பதே
தெரியாமல் போனது ஆச்சரியம். சிக்கலான நோய்
என்றால் அது தனியார் மருத்துவமனையில், அதிக
செலவோடுதான் குணமாகும் என்கிற பொதுப்புத்தியை
இயக்குநரும் பிரதிபலிக்கிறார்.

‘ஆரண்ய காண்டம்’ என்கிற புலியைப் பார்த்து சூடு
போட்டுக் கொண்ட பூனை மாதிரியிருக்கிறது
‘கோலமாவு கோகிலா’. கோலம் சரியாக உருவாகததால்
அலங்கோலமாகியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

——————————-

By சுரேஷ் கண்ணன் |
நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by SK on Mon Aug 20, 2018 10:14 am

அப்போ என்னோட 640 mb வேஸ்ட்டா  சோகம் சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram on Wed Aug 29, 2018 7:49 am

இந்த படத்தில் நடித்தது குறித்து யோகிபாபு சொன்னவை:
-----------------
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Capture_10235
-
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Nayan_16002
-
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Capture_10114
-
` 'கோலமாவு கோகிலா' பாட்டு யூடியூப்ல முதல்
இடத்துல இருக்குனு எல்லோரும் சொல்றாங்க,
கேட்கவே சந்தோஷமா இருக்கு. 

இதுக்கெல்லாம் காரணம், இயக்குநர்
நெல்சன் சார்தான். அவர் சொல்லிக் கொடுத்ததை 
அப்படியே நான் செஞ்சேன்!"
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம் Empty Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை