உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Empty வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!

Post by ayyasamy ram on Tue Aug 14, 2018 5:40 am

[You must be registered and logged in to see this image.]
-
சங்க இலக்கியங்களில் மா, வேழம், கரி, சிந்தூரம்,
அத்தி, அருகு, ஆம்பல், அலுவல், இபம், இம்மடி, கைம்மா
போன்ற 50ற்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்படும்
விலங்கு யானை.

தமிழர்களில் வாழ்வியலோடு மிக நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கும் இந்த யானைகள். சங்கத்தமிழன், தான்
இயற்றிய இலக்கியத்தில் எவ்வாறெல்லாம்
குறிப்பிட்டிருக்கிறான் என்று பார்க்கலாம்.

வீரமும் வெற்றியும் யானையினுடையதே :

புதர் ஒன்றில் தனது கூட்டத்துடன் மேய்ந்துகொண்டிருந்த
ஆண் யானை, நீர்நிலை ஒன்றில் பதுங்கியிருந்து
தன்னைத் தாக்க வந்த புலியை தனது கூரிய தந்தத்தால்
குத்தி கொன்று, தந்தத்தில் வழியும் குருதியை கொட்டும்
மழை நீரில் கழுவி விட்டு மலைச்சரிவில் இறங்கி தனது
கூட்டத்துடன் சேர்ந்துகொண்டது என்கிறது கபிலர் எழுதிய
அகநானூற்றுப் பாடல் ஒன்று.

புலியைக் கொல்லும் யானையை போரில் ஒருவன்
கொல்கிறான், அதுவும் ஆயிரம் யானைகளைக் கொன்று
குவிக்கிறான் என்றால் அவனைப் போற்றி பாடாமல்
இருக்க முடியுமா? அப்படி அமைந்தது தான் பரணி.

மாபெரும் போரில், ஆயிரம் யானைகளைக் கொன்ற
வீரனை வாழ்த்திப் பாடுவதாக அமைகிறது பரணி
இலக்கியம்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்களை வீழ்த்தும்
யானைப்படையானது போரின் வெற்றி தோல்விகளை
தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்.

அதனாலேயே ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைச்
சங்க இலக்கியம் போற்றிப் பாடுகிறது. இது ஒருபுறம்
என்றால், இலங்கையின் வன்னியில், மதங் கொண்ட
யானையை அடக்கிய ’அரியாத்தை’ என்ற பெண்ணின்
வரலாற்றைக் கூறும் “வேழம்படுத்த வீராங்கனை”என்னும்
நாட்டுக்கூத்தை செல்லத்துரை என்பவர் எழுதினார்.

இப்படி யானையை அடக்குவதும், வதம் செய்வதும்
வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் கருதினர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Empty Re: வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!

Post by ayyasamy ram on Tue Aug 14, 2018 5:41 am

[You must be registered and logged in to see this image.]
-

அதியமானின் யானைப்படைகளைக் கண்ட எதிரி நாட்டு
மன்னன், தனது கோட்டை கதவுகளுக்கு வலிமையான
புதிய கணையமரங்களைப் பொருத்தினர் என்று
அவ்வையார் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.

காதலும் யானையும் :

”வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”

எனத் தன்னுடைய திருமணக்கனவைப் பற்றி நாச்சியார்
திருமொழியில் கூறுகிறார் ஆண்டாள். அதாவது, திருமால்,
ஆயிரம் யானைகள் சூழ வருகிறார். அக்காட்சியைக்
காணும் மக்கள், பாதையின் இரு புறமும் பொற்குடங்களை
வைத்து, தோரங்கள் கட்டி வரவேற்பதாகக் கனவு கண்டதை
தன் தோழியிடம் ஆண்டாள் கூறுவதாக அமைகிறது
அப்பாடல்.

”நசைபெரிது உடையார் நல்கலும் நல்குவார்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே” – குறுந்தொகை.

பிரிந்து சென்ற காதலன் விரைவில் வருவான் எனத் தோழி,
தலைவியிடம் கூறுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில்,
தலைவன் சென்ற பாலை நிலத்தில், வலிமையான ஆண்
யானை, மென்மையான கிளைகளை உடைத்து பெண்
யானைக்குக் கொடுக்கும் காட்சி இருக்கும்.

அதனைப் பார்க்கும் தலைவன், விரைவில் வந்து சேர்வான்
எனக் கவலையில் இருக்கும் தலைவிக்கு தோழி கூறுகிறாள்.
காதலிலும் யானை இன்றியமையாததாக உள்ளது என்பதை
மேற்கண்ட இரு பாடல்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Empty Re: வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!

Post by ayyasamy ram on Tue Aug 14, 2018 5:44 am

[You must be registered and logged in to see this image.]
-
-

யானையை விட மனிதர்களிடம் தள்ளி நிற்க வேண்டும் :

”கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நங்குவதே நல்ல நெறி” - நீதி வெண்பா
-
---------------

இப்பாடலில், கொம்பிருக்கும் விலங்குகள் இருக்கிறது
என்றால் அது இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து முழம்
தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து
முழம் தள்ளி நிற்க வேண்டும்,

அதே யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க
வேண்டும். அதே போல், தீயோரைக் கண்டால் கண்
காணாத தூரத்திற்கு ஓடிவிடுங்கள் என்று கூறுகிறது
இப்பாடல்.

மனிதர்களையும், அவர்களின் குணங்களையும்
விளக்குவதற்காக யானையை ஒப்பிட்டு இந்த பாடலை
எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், மிகப்
பெரிய விலங்கான யானையை விட ஆபத்தானவன்
மனிதன் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
-
----------

சங்க இலக்கியங்களில் யானை குறித்த ஏறக்குறைய
அனைத்து அறிவியல் விஷயங்களும் உள்ளன.
அழிவின் விளிம்பில் யானைகள் என்று தமிழக வனத்
துறையின் 2002-03 பதிப்பில் அழகுற வெளியி டப்ட்டுள்ளது

சங்க இலக்கியங்களில் வீரத்திற்கும் காதலுக்கும்,
ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்ட
யானைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம்
இருக்கிறோம்.

எண்ணிக்கையில் மிகவும் சுருங்கிவிட்ட யானைகளில்
வாழ்வியலையும் அதன் வாழிடத்தையும் காக்கும் கடமை
நமக்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
-
-----------------------------
எம்.கணேஷ்

நன்றி- விகடன்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Empty Re: வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!

Post by SK on Tue Aug 14, 2018 10:36 am

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  3838410834 வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  3838410834


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Empty Re: வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை