உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இன்னும் மூணு நாள்ல வெங்காயம் விலை குறையுலன்னா என்னனு கேளுங்க... அமைச்சர் சவால்
by T.N.Balasubramanian Today at 5:16 pm

» சுபஸ்ரீ மரணம்
by T.N.Balasubramanian Today at 5:01 pm

» என்னாச்சு ayyasami ram
by T.N.Balasubramanian Today at 4:53 pm

» நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» பூரிக்குள்ளே சின்னதா இரண்டு முட்டை இருக்குதே...!!
by T.N.Balasubramanian Today at 4:36 pm

» டீச்சர் அம்மா - கவிதை
by ayyasamy ram Today at 2:05 pm

» இது ரொம்ப ஆழமான ஏரி சார்...!!
by ayyasamy ram Today at 2:00 pm

» சுயநல உலகம் நம்மை பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி....!!
by ayyasamy ram Today at 1:23 pm

» அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்!
by ayyasamy ram Today at 1:14 pm

» `ராமுவோடு ஜோடி சேர்ந்த ரைன்’!- வண்டலூரில் உலக காண்டாமிருக தினம் கொண்டாட்டம்
by ayyasamy ram Today at 1:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:59 pm

» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» நடிகை ராஷ்மிகா மந்தன்னா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:27 pm

» அமெரிக்கா, கடலுக்கு அடியில், காதல், சொன்னவர், நீரில் மூழ்கி பலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22 pm

» வயசென்ன வயசு… டோன்ட் கேர் ஜெனிலியா ரீஎன்ட்ரிக்கு திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:18 pm

» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14 pm

» ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» "ஊக்கம்தான் வெற்றியின் முதல் படிக்கட்டு!" - அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» Howdy Modi – மோடி நலமா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை
by சக்தி18 Today at 11:01 am

» 20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா
by ayyasamy ram Today at 6:34 am

» 'காற்றின் மொழி' புரிகிறதே...
by ayyasamy ram Today at 6:08 am

» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Today at 5:56 am

» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:51 am

» Howdy Modi
by ayyasamy ram Today at 5:49 am

» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by விமந்தனி Yesterday at 10:34 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm

» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:18 pm

» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» "கல்லி பாய்" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» வள்ளலாரின்_தனிச்சிறப்பு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» வாழ்வின் யதார்த்தம்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 'நானும் சாவித்ரி தான்'
by ayyasamy ram Yesterday at 7:00 am

» குத்துச்சண்டை பயிலும் நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...!!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» நிழலுறவுகள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

Admins Online

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 18, 2018 11:51 am

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Be08f410

ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை குறித்து மக்களிடையே ஓரளவுக்கு விழிப்புணர்வு உள்ளது.
ஆனால் நாம் இருக்கும் வீடு, தொழில்புரியும் கடை, விவசாயப் பயிர்கள், கறவை மாடுகள் உள்ளிட்டவற்றையும் காப்பீடு செய்ய முடியும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
ஆனால், வங்கிகளில் கடன் பெற்று கட்டப்படும் வீடுகள், தொழிற்கூடங்கள், கடைகள், கறவை மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு வங்கிகளே காப்பீடு செய்திருக்கும். இதுகுறித்தும் எந்தளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது தெரியவில்லை.
இதே போன்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கும் (சிலிண்டர்), எண்ணெய் நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்து நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் உள்ளனர்.
அண்மைக்காலமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் தொடர்ந்து இலவச எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருவதால், வீட்டு உபயோக எரிவாயு நுகர்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் எரிவாயு உருளைக்கான காப்பீடு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடைய வேண்டியது அவசியமாகிறது.
எரிவாயு உருளைகளுக்கு எண்ணெய் நிறுவனங்களால் "எல்பிஜி விபத்து பீமா பாலிசி' எடுக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டின் மூலம் தனிநபர் விபத்து இறப்பு, காயத்துக்கான மருத்துவச் செலவு, விபத்தால் வீட்டுச் சேதம் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
ஆனால், காப்பீடு குறித்து நுகர்வோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், விபத்து ஏற்பட்டாலும் கூட இழப்பீடு கோரப்படாமல், அந்தத் திட்டத்தால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12889
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 18, 2018 11:52 am

இதுதொடர்பாக மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் முகவர்கள் கூறியது: எரிவாயு உருளை காப்பீடுக்காக பிரீமியம் தொகை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுவது இல்லை. இந்த காப்பீடு திட்டம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஆனால் சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது என்றனர் அவர்கள்.
இழப்பீடு வழங்கும் முறை: விபத்து நடைபெற்றால் வாடிக்கையாளர்கள் நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீட்டுத் தொகை கோரிக்கையைப் பதிவு செய்ய முடியாது. எனவே, விபத்து நிகழ்ந்தால் வாடிக்கையாளர்கள் உடனடியாக விநியோகஸ்தருக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பிராந்திய அலுவலகத்துக்கும், பீமா விபத்து காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளிப்பர். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான பணிகள் தொடங்கும்.
முதற்கட்டமாக காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்வார். காப்பீட்டு நிறுவனம் சேத விவரங்களை மதிப்பிட்டு, இழப்பீட்டுத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும். சொத்து சேதம் ஏற்பட்டால் நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கட்டடத்தில் மதிப்பீட்டாளரை கொண்டு மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கப்படும்.
இழப்பீட்டுத் தொகை: விபத்தின்போது ஏற்படும் உயிரிழப்புக்கு அதிகபட்சம் ஒருவருக்கு ரூ. 6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். மருத்துவச் செலவாக ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். பாதிக்கப்படும் ஒவ்வொரு மனிதருக்கும், உடனடி நிவாரணமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். உடமை சேதாரங்களுக்கு பதிவு செய்யப்பட்ட இருப்பிடத்தில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை நிபந்தனைகளுக்கு உள்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்: விபத்தின்போது காயங்கள் ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளுக்கான அசல் கட்டண ரசீதுகள், மருத்துவரின் மருந்து பரிந்துரைச் சீட்டுகள், விடுவிப்பு அட்டை, மருத்துவமனையில் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற்றது தொடர்பான அசல் ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இறப்பு ஏற்பட்டால் உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அறிக்கை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுதவிர, விபத்தின்போது வீடு, கட்டடம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் சார்பில் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் வந்து ஆய்வு செய்து, அவரது ஆய்வறிக்கையின் அடிப்படையில், தேவையான ஆவணங்களை கொண்டு இழப்பீடு கோர முடியும்.
விழிப்புணர்வு தேவை: எரிவாயு உருளைகளுக்கு காப்பீடு உள்ளது என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் எரிவாயு நிறுவனங்களின் முகவர்கள் தெளிவுபடுத்த முடிவதில்லை. காரணம் எரிவாயு உருளை வைத்திருப்போர் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவது போல இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே, ஆயில் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கும் public liability policy குறித்து அரசுதான் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், இதுகுறித்து முகநூல், கட்செவி அஞ்சலில் வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இழப்பீடு பெற நிபந்தனைகள்...

சம்பந்தப்பட்ட நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் விபத்து நடந்திருந்தால் மட்டுமே இழப்பீடு கோர முடியும்.
வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையை வணிக ரீதியாகப் பயன்படுத்தியிருக்கக்கூடாது.
சமையல் அறை இல்லாத இடங்களில் எரிவாயு உருளையை பயன்படுத்தியிருக்கக் கூடாது.
எரிவாயு அடுப்பை எப்போதும் எரிவாயு உருளையை விட 6 இஞ்ச் அளவுக்கு உயரமாக வைத்திருக்க வேண்டும். எரிவாயு உருளையை எப்போதும் நேராகவே வைத்திருக்க வேண்டும்.
எரிவாயு அடுப்பைத் தவிர மற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை சமையல் அறையில் வைத்திருக்கக் கூடாது.
எரிவாயு உருளை பயன்படுத்தும் இடம் ஓலை கூரை வீடாக இருக்க கூடாது.
விபத்து நடக்கும் இடத்தில் உள்ள எரிவாயு உருளை, குறிப்பிட்ட முகவரியில், பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாறாக அடுத்தவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட, வேறு முகவரியில் உள்ள எரிவாயு உருளையை அவசரத்துக்கு கடன் வாங்கி பயன்படுத்தியிருக்கக் கூடாது.
அடுப்பு, லைட்டர், டியூப் போன்ற உதிரி பாகங்கள் வாங்கும்போது ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றவையாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றிருந்தாலும், 2ஆண்டுகளுக்கு ஒருமுறை விநியோகஸ்தர்களிடம் கட்டணம் செலுத்தி, அதன் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12889
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by anikuttan on Tue Jun 19, 2018 7:28 am

இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு ஒவ்வொரு சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும் ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ நடக்கிறது இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by சிவனாசான் on Tue Jun 19, 2018 5:11 pm

மிக நல்ல தகவல் அன்பருக்கு நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4295
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1190

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by ayyasamy ram on Tue Jun 19, 2018 6:23 pm

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! 103459460
-
விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது....
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 48479
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jun 21, 2018 8:15 pm

@anikuttan wrote:இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு  ஒவ்வொரு  சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
நீங்கள் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12889
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jun 21, 2018 8:15 pm

@சிவனாசான் wrote:மிக நல்ல தகவல் அன்பருக்கு நன்றி.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12889
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jun 21, 2018 8:16 pm

@ayyasamy ram wrote:4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! 103459460
-
விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது....
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12889
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Thu Jun 21, 2018 8:36 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@anikuttan wrote:இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு  ஒவ்வொரு  சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
நீங்கள் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.

anikuttan அவர்களுக்கு, உங்கள் பதிவு இருமுறை வந்துள்ளதால், பின் பதிவு ( #4 )நீக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு சிலிண்டர் மேலும்,
எது மாதிரி விவரங்கள் எழுதவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
எந்த பாஷையில் எழுதவேண்டும்.?
அங்கீகரிக்கப்பட்ட எல்லா மொழியிலுமா?
அவை எழுதுவதற்கு சிலிண்டரில் இடம் இருக்கிறதா?
தற்போது   ரசீதின் பின்பக்கம் எழுதியுள்ளதை படித்து பார்ப்பதில் கஷ்டமா?

இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
என்ற உங்கள் கூற்றை என்னால் நம்பமுடியவில்லை  
ஆனால் பழமுத்துராமலிங்கம் நம்பிவிட்டார் போலும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25233
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9099

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jun 22, 2018 11:38 am

@T.N.Balasubramanian wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@anikuttan wrote:இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு  ஒவ்வொரு  சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
நீங்கள் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.

இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
என்ற உங்கள் கூற்றை என்னால் நம்பமுடியவில்லை  
ஆனால் பழமுத்துராமலிங்கம் நம்பிவிட்டார் போலும்.

ரமணியன்
முத்துராமலிங்கம் இப்படித்தான்யா எதையும் நம்மி விடுவான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12889
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Fri Jun 22, 2018 3:08 pm

நீங்கள் சொல்லுவதை நானும் நம்பிவிட்டேன்.அய்யா! சிரி சிரி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25233
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9099

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jun 22, 2018 5:53 pm

இதற்கு சரியான கமெண்ட் கொடுக்க
SK இல்லாதது பெரிய குறை ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12889
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Fri Jun 22, 2018 8:39 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@anikuttan wrote:இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு  ஒவ்வொரு  சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
நீங்கள் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.

இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
என்ற உங்கள் கூற்றை என்னால் நம்பமுடியவில்லை  
ஆனால் பழமுத்துராமலிங்கம் நம்பிவிட்டார் போலும்.

ரமணியன்
முத்துராமலிங்கம் இப்படித்தான்யா எதையும் நம்மி விடுவான்.

நீங்கள் சொல்லுவதை நானும் நம்பிவிட்டேன்.அய்யா! சிரி சிரி

ரமணியன்
இதற்கு சரியான கமெண்ட் கொடுக்க
SK இல்லாதது பெரிய குறை ஐயா

ஆமாம் SK எங்கே காணவில்லை ? உடல் நலமில்லையா?
ரமணியன்
@SK

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25233
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9099

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by SK on Sat Jun 23, 2018 11:37 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
இதற்கு சரியான கமெண்ட் கொடுக்க
SK இல்லாதது பெரிய குறை ஐயா

நான் என்ன சொல்வது இதுபோல விபத்து நடக்காமல் தடுக்க ஒரே வழி மாமியார் இல்லாத வீட்டில் பெண் கொடுப்பதே ஆகும்

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by SK on Sat Jun 23, 2018 11:38 am

@T.N.Balasubramanian wrote:
ஆமாம் SK எங்கே காணவில்லை ? உடல் நலமில்லையா?
ரமணியன்
@SK

அலுவலக வேலை ஆதிகம் அதனால் தான் வரமுடியவில்லை

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

View user profile

Back to top Go down

4 - சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Empty Re: சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை