ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 ayyasamy ram

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 ayyasamy ram

சமையல் – டிப்ஸ்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ayyasamy ram

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 ayyasamy ram

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 ayyasamy ram

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 ayyasamy ram

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 ayyasamy ram

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sathyavlr

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 சிவனாசான்

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 சிவனாசான்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 ayyasamy ram

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 T.N.Balasubramanian

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 T.N.Balasubramanian

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

View previous topic View next topic Go down

வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jun 10, 2018 5:24 pm


சமூகவலைதளங்களில் சமீபத்திய வைரல் 'இலுமினாட்டி' புகழ் பாரிசாலன் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் தாக்கப்பட்ட விவகாரம்தான். ``சர்வீஸுக்கு ஏன் ஏழாயிரம்?'' என பாரிசாலன் கேட்க, அதற்கு பஜாஜ் சர்வீஸ் சென்டர் நிர்வாகம் - கம்பெனி பரிந்துரைக்காத வேறு இன்ஜின் ஆயிலை பயன்படுத்தியதால் வாரன்ட்டி கிடையாது என மறுக்க, அது கைகலைப்பில் முடிந்து, விவகாரம் சோஷியல் மீடியாவுக்கு வந்துவிட்டது. இதன்மூலம் உண்மையிலேயே ''பைக்ல ஆயில் மாத்திப்போட்டா வாரன்ட்டி கிடையாதா?'' என்பதுதான் எல்லோருக்குள்ளும் எழுந்திருக்கும் கேள்வி.
ஒருவர் வைத்திருக்கும் பைக்கில் எந்தெந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்கும்? எந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்காது? எதனால் வாரன்ட்டி ரத்தாகும்? இங்கே பாரி சாலனுக்குப் பிரச்னை தந்தது பஜாஜ் பைக் என்பதால், அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றான பல்ஸர் 150 (மாதத்துக்குச் சராசரியாக 50 ஆயிரம் பைக்குகள் விற்பனை) பைக்கையே இங்கே உதாரணத்துக்கு எடுத்துள்ளோம்.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jun 10, 2018 5:26 pm

பைக் நிறுவனத்தின் வாரன்ட்டி குறித்த விதிமுறைகள்:
1. ஒவ்வொரு புதிய பைக்குக்கும், 2 ஆண்டு அல்லது 30 ஆயிரம் கிமீ வரை வாரன்ட்டி கிடைக்கும். இதில் எது முதலில் வருகிறதோ, அதைப் பொருத்து வாரன்ட்டி கணக்கில் கொள்ளப்படும்.2. டயர், ட்யூப், பேட்டரி, ஸ்பார்க் ப்ளக், ஷாக் அப்சார்பர், ஸ்பீடோமீட்டர் ஆகியவை, பல்வேறு உதிரிபாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கியே பைக்கில் பொருத்தப்படுகிறது. எனவே இதற்கு பைக்கைத் தயாரித்த நிறுவனம் நேரடியாகப் பொறுப்பேற்காது என்றாலும், அந்தந்த பாகங்களைத் தயாரித்தவர்கள் வழங்கும் ஒரு வருட வாரன்ட்டி காலத்தில் ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால், அதனை டீலர்/சர்வீஸ் சென்டர் உதவியுடன் க்ளெய்ம் பெற்றுக் கொள்ளலாம்.
3. வாரன்ட்டி க்ளெய்மிற்கு, ஒரு பாகம் அனுப்பப்படுகிறது என எடுத்துக் கொள்வோம். அந்த பாகத்தைத் தயாரித்தவரிடமிருந்து மாற்று பாகம் வரவில்லையெனில், அதே பாகத்தைத் தயாரிக்கும் மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்கும் உரிமை, பைக்கைத் தயாரித்த நிறுவனத்துக்கு இருக்கிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jun 10, 2018 5:28 pm

வாடிக்கையாளருக்கு வாரன்ட்டி குறித்த விதிமுறைகள்:
1. தனது பைக்கில் ஏதெனும் பிரச்னையை உணர்ந்த உடனேயே, பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டீலர் அல்லது சர்வீஸ் சென்டருக்கு விரைந்து சென்று, தனது பைக்கில் பிரச்னைக்குரிய பாகங்களைக் குறிப்பிட்டு வாரன்ட்டி க்ளெய்மிற்கு அனுப்பச்சொல்ல வேண்டும்.
2. தனது பைக்கின் தகவல்களைச் சரிபார்க்க, உண்மையான Owners Manual-யை கேட்கும்போது சமர்பிக்க வேண்டும்.3. ஒருவர் தனது பைக்கில் வாரன்ட்டி க்ளைய்ம் பெறுவதற்கு, கீழ்கண்ட விஷயங்களைப் பின்பற்றியிருக்கவேண்டும்.
*முதல் 3 இலவச சர்வீஸை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்திருக்க வேண்டும்.
*அடுத்தபடியாக 4 Paid சர்வீஸை, 120 நாள்கள் அல்லது 5 ஆயிரம் கி.மீட்டர் காலக்கெடுவுக்குள் (எது முதலில் வருகிறதோ) சர்வீஸ் செய்திருக்க வேண்டும்.
* பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்/சர்வீஸ் சென்டர்களில்தான் பைக்கின் சர்வீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
*சர்வீஸ் குறித்த ஆவணங்களில், டீலர்/சர்வீஸ் சென்டரில் கையொப்பம் இருக்க வேண்டும்.
*பைக் நிறுவனம் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயிலை (DTS-i 10,000), குறிப்பிட்ட காலக்கெடுவில் டாப்-அப் (5,000 கிமீ) மற்றும் 10 ஆயிரம் கி.மீட்டருக்குள் மாற்றியிருக்க வேண்டும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jun 10, 2018 5:31 pm


கோப்புப் படம்

எந்தந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்காது?
1. சர்வீஸ் சென்டரில் செய்யப்படும் பிரேக் மற்றும் க்ளட்ச் அட்ஜஸ்ட்மென்ட், கார்புரேட்டர் கிளீனிங், இன்ஜின் ட்யூனிங் ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது.
2. பைக்கின் இயக்கத்தால் தனது ஆயுளை இழக்கும் க்ளட்ச் பிளேட், பிரேக் பேடு, செயின் ஸ்ப்ராக்கெட், ஃபோர்க் ஆயில் சீல், ஸ்பார்க் ப்ளக், பிரேக் - க்ளட்ச் - ஆக்ஸிலரேட்டர் - மீட்டர் கேபிள்களுக்கு வாரன்ட்டி கிடையாது.
3. எலெக்ட்ரிக் ஸ்டார்ட், பல்ப் போன்ற எலெக்ட்ரிக்கல் பாகங்கள், ரப்பர் பாகங்கள், ஃபில்டர்கள், Gaskets ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது.
4. பைக்கில் பெயின்ட் செய்யப்பட்ட பகுதிகளுக்கு வாரன்ட்டி உண்டு. ஆனால் பைக்கின் உரிமையாளர் அதில் கவர் அல்லது கோட்டிங் செய்திருந்தால் வாரன்ட்டி கிடையாது.
5. இன்ஜின் ஆயில், ஃபோர்க் ஆயில், பிரேக் ஆயில், க்ரீஸ் ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது. மேலும் முன்னே சொன்ன பொருள்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவில் மாற்றாவிட்டாலோ, பரிந்துரைக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தாவிட்டாலோ வாரன்ட்டி கிடையாது.
6. பைக்கில் க்ரோம் ப்ளேட்டிங் செய்யப்பட்ட பகுதியில் கோளாறு ஏற்பட்டால், அது வாரன்ட்டியில் சரிசெய்யப்படும். ஆனால் நிறம் மாறியிருக்கும் எக்ஸாஸ்ட் பகுதி, சரிவர பராமரிக்கப்படாத க்ரோம் பாகங்களுக்கு Warranty கிடையாது.
7. கடலோர பகுதிகளில் இருக்கும் பைக்கின் க்ராங்க் கேஸ், சிலிண்டர் ப்ளாக், சிலிண்டர் ஹெட் போன்ற பாகங்களுக்கு Warranty கிடையாது. துருப்பிடித்திருந்தாலும் Warranty கிடையாது.
8. பைக்கில் அகலமான டயர், வித்தியாசமான ஹேண்டில்பார், அதிக வெளிச்சத்தை உமிழும் லைட், அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் எக்ஸாஸ்ட், பவர்ஃபுல் ஹாரன், பர்ஃபாமென்ஸ் ஏர் ஃபில்டர் மற்றும் ஸ்பார்க் ப்ளக், ரிமோட் லாக், LED பட்டை, அலாரம் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தால் Warranty கிடையாது.
9. ரேஸ், கண்காட்சிப் போட்டி, தனிநபர் சாதனைக்காக நிகழ்த்தப்பட்ட ரைடு போன்றவற்றில் பங்கேற்ற பைக்குக்கு Warranty கிடையாது.
நானும் பஜாஜ் பைக்தான் வைத்திருக்கிறேன். ஆனால் இதை எழுதிய எனக்கே அப்பப்பா... விதிகளைப் பார்க்கும்போது தலையே சுற்றிவிட்டது. ஆக ஒருவர் தனது பைக்கை முறையாகப் பராமரித்து வந்தாலும், வாரன்ட்டி க்ளெய்ம் கிடைக்காது என்பதை பைக் நிறுவனங்கள் சொல்லாமல் சொல்கின்றவோ?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Sun Jun 10, 2018 6:12 pm

போகாத ஊருக்கு வழி சொல்லும் வித்தகர்கள்.

பேசாமல் வாரண்டியே கிடையாது என்று சொல்லிவிடலாம்.

அங்கிருக்கும் மெக்கானிக் நமக்கு தெரிந்தவர் என்றால் நன்மைகள் பல உண்டு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22449
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by ராஜா on Sun Jun 10, 2018 9:03 pm

அதிர்ச்சியான தகவல் , என்ன பண்ண ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம்.


இங்கெல்லாம் வாகன விபத்து என்றால் , போலீஸ் வரும்வரை சம்பவ இடத்திலேயே இரண்டு வாகன ஓட்டிகளும் நிற்க வேண்டும். (சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள பார்க்கிங் லாட்டில் வண்டியை நகர்த்தி நிப்பாட்டலாம்) போலீஸ் வந்து யார் மேல் தவறு என்று பார்த்து paper கொடுப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு போய் இன்சூரன்ஸ்ல கொடுத்து அதன் பிறகு தான் மெக்கானிக்கிட்டும் செல்ல வேண்டும்.

வண்டியின் அனைத்து பிரச்சினைகளும் பெரும்பாலும் இன்சூரன்ஸிலேயே கவர் ஆகிவிடும் , ரொம்ப பழைய வண்டி என்றால் நாம் ஒரு தொகை செலுத்த நேரிடும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by SK on Mon Jun 11, 2018 9:49 am

இதுக்கு தான் நான் எங்கள் பக்கத்துக்கு தெரு மெக்கானிக் செட்ல வண்டியை சர்விஸ் கொடுத்து விடுகிறேன் தேவை இல்லாத இந்த டென்ஷன் எதற்கு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 11, 2018 3:30 pm

@T.N.Balasubramanian wrote:போகாத ஊருக்கு வழி சொல்லும் வித்தகர்கள்.

பேசாமல் வாரண்டியே கிடையாது என்று சொல்லிவிடலாம்.

அங்கிருக்கும் மெக்கானிக் நமக்கு தெரிந்தவர் என்றால் நன்மைகள் பல உண்டு.

ரமணியன்
சரியாக சொன்னீர்கள்.
அந்த மெக்கானிக் வைத்து ஒப்பேத்த வேண்டியது தான்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 11, 2018 3:36 pm

@ராஜா wrote:அதிர்ச்சியான தகவல் , என்ன பண்ண ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம்.


இங்கெல்லாம் வாகன விபத்து என்றால் , போலீஸ் வரும்வரை சம்பவ இடத்திலேயே இரண்டு வாகன ஓட்டிகளும் நிற்க வேண்டும். (சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள பார்க்கிங் லாட்டில் வண்டியை நகர்த்தி நிப்பாட்டலாம்) போலீஸ் வந்து யார் மேல் தவறு என்று பார்த்து paper கொடுப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு போய் இன்சூரன்ஸ்ல கொடுத்து அதன் பிறகு தான் மெக்கானிக்கிட்டும் செல்ல வேண்டும்.

வண்டியின் அனைத்து பிரச்சினைகளும் பெரும்பாலும் இன்சூரன்ஸிலேயே கவர் ஆகிவிடும் , ரொம்ப பழைய வண்டி என்றால் நாம் ஒரு தொகை செலுத்த நேரிடும்.
இங்கு இந்த விசயம் எதுவும் நடக்காது.
நம் நடைமுறை நமக்கு சாதகமாக மில்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 11, 2018 3:38 pm

@SK wrote:இதுக்கு தான் நான் எங்கள் பக்கத்துக்கு தெரு மெக்கானிக் செட்ல வண்டியை சர்விஸ் கொடுத்து விடுகிறேன் தேவை இல்லாத இந்த டென்ஷன் எதற்கு
விவரம் தெரிந்த ஆள் நீங்கள்..
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by ஜாஹீதாபானு on Mon Jun 11, 2018 4:17 pm
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30372
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Mon Jun 11, 2018 5:26 pm

அமெரிக்காவில் வாகன விபத்து / அதிகமான வேகத்தில் வண்டி ஓட்டுதல் /சீட் பெல்ட் அணியாமை/
குழந்தைகளுக்கான இருக்கை பெட்டி வைக்காமை போன்ற குற்றங்களுக்கு அபராதம் கட்டுவதுடன்
அவர்களுடைய ஓட்டுநர் உரிமத்தில் பதிவு பெறும். அடுத்த ஆண்டு உரிமம் புதுப்பிக்கையில் அதிகம் கட்டவேண்டும்.
நம் நாட்டில் இன்சூரன்ஸ் போன்ற பகல் கொள்ளை எங்குமே கிடையாது. மெடிக்கல் இன்சூரன்ஸ் ஆகட்டும்
வாகன இன்சூரன்ஸ் ஆகட்டும் ,வெளிநாட்டு பயண மருத்துவ செலவு இன்சூரன்ஸ் ஆகட்டும்.எல்லாமே ஒரு வழி பாதை .டிக்கட்டுக்கு மேல் அதிகம் செலவு ஆவது ட்ராவல்இன்சூரன்ஸ் . எந்த ஒரு க்ளெய்மையும் நிராகரித்து விடுவார்கள்.
நல்ல செமத்தியான வருமானம் இவர்களுக்கு

வண்டி வைத்திருப்பவர்களுக்கு தெரியும்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22449
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by ayyasamy ram on Tue Jun 12, 2018 7:28 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum