உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:39 am

» பேப்பரில் பேனா... மூங்கிலில் டூத் பிரஷ் எல்லாத்துக்குமே மாற்று உண்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:33 am

» பாரதியின் வரிகளில் பிடித்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by anikuttan Today at 7:16 am

» 'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து?
by ayyasamy ram Today at 6:37 am

» பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
by ayyasamy ram Today at 6:30 am

» புதியவன் - ராஜேஷ்
by mohamed nizamudeen Yesterday at 11:40 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» நோபல் பரிசு அதிக அளவில் பெற்ற நாடு
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» தெரிஞ்சிக்கோங்க- பொது அறிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஹெல்மெட் மாட்டிய சோளக்கொல்லை பொம்மை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» மாறுகிறது, 'கிலோ கிராம்'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:59 pm

» கற்கண்டு வடை
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» அர்த்தங்கள் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி அனுபவங்களை எழுதி வைத்தவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:27 pm

» சிறுவர் பாடல் – குருவி பார்..!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» நேர்த்தி கடனை நிறைவேற்றும் வாடகை மனிதர்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:18 pm

» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm

» முதல் பார்வை: திமிரு புடிச்சவன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:09 pm

» செள செள மோர் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:32 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» மகளிர் டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதியில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» வறியநிலை வேறுண்டோ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:19 pm

» 2.0 படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய புள்ளினங்கள் பாடல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது - நீதிமன்றம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» தி.நகர் சத்யா பஜாரில் போலீஸார் திடீர் சோதனை: 700 செல்ஃபோன்கள் பறிமுதல்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: காற்றின் மொழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:57 pm

» அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am

» முருங்கைப்பூ கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:27 am

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:11 am

» பொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 am

» கற்கண்டு வடை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:01 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Yesterday at 4:47 am

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:14 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:09 pm

Admins Online

சாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?

சாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 18, 2018 10:49 am

“உங்க வயசு என்ன சார்?”..

“எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது!!”

இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர் என்பதே உண்மை. மனிதனை நீண்ட நாள்கள் வாழ வைக்கும் அந்த ‘ரகசியத்தைப்’ பற்றிய தேடல் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ் (Dr. Anatoli Brouchkov) என்பவர் அந்த ரகசியத்தின் விடை 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியாவில் இருப்பதாக நினைத்தார். அப்படி நினைத்தவர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?.. ஆம், தனது உடலில் அந்த 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியவை செலுத்திக்கொண்டார்.

சாகாவரம் பெற்ற பாக்டீரியா:

பேசில்லஸ் எஃப் (Bacillus F) என்று பெயரிடப்பட்ட இந்தப் பழங்காலத்து பாக்டீரியா 2009-ம் ஆண்டு விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ்-ஆல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சைபீரியாவின் நிரந்தரமான உறைந்த பனிக்கட்டிகள் காணப்படும் யாகூட்ஸ்க் (Yakutsk) பிரதேசத்தின் அடியாழத்தில் இந்தப் பாக்டீரியாவை அவர் கண்டறிந்தார். 3.5 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்று கணக்கிடப்பட்ட இந்த பாக்டீரியாவில் அவர் பார்த்த ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவென்றால் அவை அப்போதும் உயிருடன் காணப்பட்டதேயாகும்.

சாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?

இந்த வகை பாக்டீரியா நீண்ட நாள்கள் உயிருடன் வாழ்வது மட்டுமல்லாமல் அதைச் சுற்றி இருந்த அனைத்து உயிரிகளின் வாழ்நாள்களை நீட்டிப்பதிலும் முக்கிய பங்காற்றியது பின்பு கண்டறியப்பட்டது.

எலிகள், பழ ஈக்கள் (fruit flies) மற்றும் சில தாவர வகைகளின் மீது அந்தப் பாக்டீரியாவினைச் செலுத்தி நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகள் நம்பத்தகுந்த முடிவுகளைத் தந்தது. அதிலிருந்து இதைப்பற்றிய கவனம் அதிகரிக்கத்தொடங்கியது. இந்த ஆரம்பகட்ட ஆராய்ச்சியை மேற்கொண்ட விக்டர் செர்னியாவ்ஸ்கி (Dr.Viktor Chernyavsky) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் (epidemiologist), அந்த பாக்டீரியாவை ‘உயிரின் அமுதம்’ (elixir of life) என்று அழைத்தார்.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10030
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2240

View user profile

Back to top Go down

Re: சாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 18, 2018 10:52 am

அந்த ஆய்வுகளின்போது, எலிகள் நீண்ட நாள்கள் வாழ்ந்ததையும், அவற்றின் வயதான காலத்திலும் இனப்பெருக்கம் செய்யும் திறனுடனும் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதேபோல இந்தப் பாக்டீரியா செலுத்தப்பட்ட தாவரங்கள் மிக வேகமாக வளருவதும், வேகமாக பனியில் உறைந்து போவதைத் தடுக்கும் வகையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுவாக யகூட்யா பிரதேசத்தில் வாழும் மக்கள் மற்ற பகுதியில் வாழும் மக்களைவிட அதிகநாள்கள் வாழ்வதற்கு இந்தப் பாக்டீரியா அவர்களின் குடிநீருடன் கலந்து காணப்படுவதே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது.

மில்லியன் டாலர் கேள்வி:

இந்த பேசில்லஸ் எஃப் (Bacillus F) பாக்டீரியாவானது நீண்ட நாள்கள் வாழும் தகவமைப்பைக் கொண்டது என்று தெளிவாகப் புரிந்துகொண்டாலும் அவற்றின் உடலமைப்பில் துல்லியமாக எந்த அம்சம் இதற்குக் காரணமாக உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதுவரை டாக்டர் ப்ரௌகோவ் மற்றும் அவரது குழுவினர் அந்த பாக்டீரியாவின் டி.என்.ஏ வரிசையை (DNA Sequence) மட்டுமே கண்டறிந்துள்ளனர், ஆனால், அவற்றுள் இந்த அதிசயத்தை நிகழ்த்தும் ஜீன்கள் (genes) எவை என்பது இன்னும் கண்டறியப்படாத மில்லியன் டாலர் கேள்வி. இதைப் பற்றி டாக்டர் ப்ரௌகோவ் கூறுகையில், “கேன்சரை உருவாக்கும் ஜீன்களை துல்லியமாகக் கண்டறிவது எவ்வளவு சிக்கலான காரியமோ அதேபோலத்தான் இந்தப் பாக்டீரியாவின் அந்தக் குறிப்பிட்ட சூட்சும ஜீன்களைக் கண்டறிவதும்”, என்கிறார்.Last edited by பழ.முத்துராமலிங்கம் on Fri May 18, 2018 10:55 am; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10030
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2240

View user profile

Back to top Go down

Re: சாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 18, 2018 10:54 am

இந்தப் பாக்டீரிவை மனிதர்களில் முறையாக சோதித்துப் பார்த்தது கிடையாது, மற்றும் இது மனிதர்களில் எந்த வகையில் செயல்படும் என்பதும் யாருக்கும் தெரியாது. அந்தச் சமயத்தில்தான் டாக்டர் ப்ரௌகோவ்வின் மனதில் ஒரு விபரீத யோசனை தோன்றியது. அதுதான் அந்த பாக்டீரியாவை தனக்குள் செலுத்திப் பார்க்கும் யோசனை.

வாழ்வா..? சாவா..?

அதன்படியே அவர் தனது உடலில் அந்த பாக்டீரியாவை செலுத்திக்கொண்டு மனிதனில் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை சோதித்தார்.

முடிவு..?

அவர் என்றைக்கு இறக்கிறாரோ அன்று தானே முடிவு கிடைக்கும்.!

ஆனால், 2015-இல் அந்தப் பாக்டீரியாவை உடலில் செலுத்தியதிலிருந்து இன்றுவரை அவர் உயிரோடுதான் இருக்கிறார். அந்தப் பாக்டீரியா செலுத்தப்பட்டதன் பின்பு இரண்டு வருடங்களில் முன்பிருந்ததைவிட நன்றாக இருப்பதாக சொல்லும் அவர், தனக்கு காய்ச்சல், சளி மற்றும் இன்னபிற உபாதைகள் வரவே இல்லை என்றும் கூறுகிறார். மேலும் அவரின் மருத்துவ அறிக்கைகளும் அவர் முன்பிருந்ததைவிட நல்ல ஆற்றலோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த முடிவுகள் எதார்த்தமாகக்கூட கிடைத்திருக்கலாம் என்றும் இதை உறுதி செய்வதற்கு நீண்ட ஆய்வானது தேவை, என்றும் மற்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எது எப்படியோ நீண்ட நாள்கள் மனிதனை நோயின்றி இளமையுடன் வாழவைப்பது சாத்தியம் என்பது நிரூபிக்கப்படுமானால் அது உண்மையாகவே அறிவியலின் அளப்பரிய கண்டுபிடிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10030
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2240

View user profile

Back to top Go down

Re: சாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை