புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
18 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
5 Posts - 0%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:26 pm

பாண்டரங்கத்தின் பணி முழுமையாக முடிந்தது. மேற்கூரையில் திசைவேழர் சொன்ன குறிப்பின் அடிப்படையிலான ஓவியம் மிகச் சிறப்பாக வரையப்பட்டுவிட்டது. மரச்சாரங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டுப் பார்க்கும்போது முன்பைவிட மிகத் துல்லியமான அளவுகளில் விண்மீன் கூட்டங்கள் ஒளிவீசின. வெள்ளியின் இருப்பிடம் மட்டுமல்ல, வரையப்பட்ட வானத்தில் கோள்கள் அனைத்தின் இருப்பிடங்களும் பொருத்தமாக இருந்தன. அந்துவன், பாண்டரங்கத்தின் எல்லா திசைகளிலும் நின்று மேற்கூரையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘நாம் கவனமாக வேலைசெய்யும்போதுதான், வேலை சிறப்பாக அமையும். ஆனால், நம்மையும் மீறி அதி சிறந்த இடத்தை அடைவது எப்போதாவதுதான் நிகழும். அதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது’.

மனமும் கண்களும் சலிப்படையும்வரை பார்த்தான். `பின் கழுத்துப் பிடித்துக்கொள்ளும்’ என மற்றவர்கள் கூறியபோதும், அவன் அண்ணாந்து பார்த்து மகிழ்வதை நிறுத்தவில்லை. ஊன்றுகோலைத் தூக்கி வீசி ஆசான் ஏற்படுத்திய அவமானத்தைத் துடைக்க மனம் மேலெழுந்து கொண்டிருந்தது.

“ஆசானை அழைத்து வாருங்கள்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P88a
பணியாள்கள் விரைந்தனர். தான் செல்லாமல் பணியாள்களை அனுப்பியதிலிருந்தே ஒரு செய்தியை அவன் சொல்ல முயன்றான்.

அறிவுச்செருக்கின் செயல்பாடு இதுவென ஆசானுக்குத் தெரியும். மாணவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது இதைத்தான். ஆனால், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துவிட்டால், விளைவு அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதன் பிறகு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக அது மாறும். இதை மாணவர்கள் அறிவர். எனவே, அறிவுச்செருக்கை வெளிக்காட்டி அவரை மகிழ்விக்கும் ஆபத்தைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள். ஆனால், அந்துவன் துணிந்தான். மேற்கூரையில் பரந்துவிரிந்து கிடந்த வான்வெளி, அவனை ‘துணிந்து நில்’ எனச் சொல்லியது. ‘காலம் கைகூடும் கனவு இது!’ என அவனது மனம் துணிந்தது.
இந்தக் காலம் முழுவதும் தன்னோடு இருந்த தேவாங்குகளுக்கு நன்றி சொல்லும்வகையில் அந்தக் கூண்டுக்கு அருகில் வந்து அவற்றுக்குப் பிடித்த பல்லி முட்டையை உள்ளே உருட்டினான். வழக்கம்போல் சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு இரண்டும் அந்த முட்டையை நோக்கி வந்தன. ஒன்று, அதை எடுத்துக்கொண்டு ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்தது. இன்னொன்று, அவனைப் பாவமாகப் பார்த்தது. அடுத்த முட்டையை உருட்டிவிட்டான். இன்னொன்று அதை எடுத்துச் சென்றது. அதன் மகிழ்ச்சியைக் கவனித்தான். சற்றே மாறுபட்ட ஒன்று, அவன் கண்களில்பட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த முட்டைகளை உருட்டிவிட்டான். அவை இரண்டும் எடுத்துத் தின்றன. முன்னர் அவன் கண்களில்பட்ட அதே செயல் மீண்டும் பட்டது. இது தற்செயலாக இருக்கும் என நினைத்தான். அடுத்தும் பல்லி முட்டைகளை உருட்டிவிட்டான். மீண்டும் அதுவே நடந்தது. அவன் சற்றே அதிர்ச்சியடைந்தான்.

`அப்படியிருக்காது’ என நினைத்தவன், பல்லி முட்டைகளை உருட்டுவதை நிறுத்திவிட்டு, சிறு கம்பு ஒன்றை எடுத்தான். அவ்வளவு நேரம் முட்டையைத் தின்ற அவற்றைக் குச்சிகொண்டு விரட்டினான். அவை  அஞ்சி உள்ளொடுங்கின. அப்போதும் அவற்றின் செயல் ஒன்றுபோலவே இருந்தது. மீண்டும் அவன் குச்சியை ஓங்கினான். உள்ளே போய் ஒண்டியவை, வேறு இடம் நகராமல் அங்கேயே பதுங்கின. அவன் குச்சியால் சற்றே அடித்து அவற்றைக் கலைத்தான். அவை கத்தியபடி அந்த இடம்விட்டு நகர்ந்து, கூண்டின் இன்னொரு பக்கம் வந்தன. அவன் கண்கள், நம்ப முடியாத ஒரு வியப்பைக் கண்டு கொண்டிருந்தன. ‘நான் காண்பது உண்மைதானா?’ என அவன் தன்னை மீண்டும் மீண்டும் கேட்டபடி அந்தச் சோதனையை நடத்திக்கொண்டே இருந்தான்.

பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்களுக்கு, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. `மகிழ்ச்சியாக இருந்த இவர், திடீரென அந்த விலங்கை ஏன் இந்தப் பாடுபடுத்துகிறார்?’ எனப் புரியாமல் திகைத்தனர்.
ஆசானை அழைக்கச் சென்ற பணியாளன், `மூன்று நாழிகைக்குப் பிறகு வருவார்’ என்ற செய்தியோடு திரும்பியிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P88b
அந்துவனோ, தேவாங்கின் மீதான சோதனையைக் கைவிடுவதாக இல்லை. அடித்தும் அச்சமூட்டியும் அவற்றை ஓடவிட்டுக்கொண்டே இருந்தான்.  ஒருநிலையில் பாண்டரங்கத்தின் வெளிக் கதவையும் மேல்மாடக் கதவுகளையும் பூட்டச் சொல்லிவிட்டு, கூண்டைத் திறக்கச் சொன்னான். பணியாளர்கள், கூண்டைத் திறந்து அவற்றை வெளியே விட்டனர். ஓங்கிய அவனது கம்பைப் பார்த்து அஞ்சி, அவை அரங்கின் எல்லா திசைகளிலும் ஓடின. அவன் அவற்றை விரட்டியபடி இருந்தான். அவற்றின் செய்கை, அவன் எண்ணத்தை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. அவை கத்திக்கொண்டு தூண்களைப் பற்றி ஏற முயற்சித்தன. பிடி நழுவி விழுந்தன. சிறு சிற்பங்களின் மேல் ஏறி மறைய முயன்றன. அவன் விடுவதாக இல்லை. எல்லா திசைகளிலும் அவற்றை விரட்டினான். தன் கண் முன்னால் காண்பது உண்மை என்பதை அவன் முழுமையாக நம்பும்வரை, அவற்றை விரட்டிக் கொண்டே இருந்தான்.

பணியாளர்கள், என்ன நடக்கிறது எனப் புரியாமல் திகைத்துப்போய் நின்றனர். அவை கத்துவதும், பாவமாகப் பார்த்து அலைக்கழிவதும் அவர்களது மனதை உருக்கின. அந்துவனின் மனமோ மகிழ்வில் திளைத்தது. அவற்றின் ஒவ்வொரு துள்ளலிலும் அவன் கண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

‘இத்தனை நாள் இதை எப்படி நான் கவனிக்காமல் இருந்தேன்?’ என்று புலம்பியவாறே “இதைப் பிடித்துக் கூண்டில் அடையுங்கள். நான் போய் ஆசானை உடனடியாக அழைத்துவருகிறேன்” என்று சொல்லி வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P88cபுறப்பட்டான்.

திசைவேழரின் தென்திசை மாளிகையின் முன் வந்து இறங்கினான் அந்துவன். வேலையாள்கள், அவன் குதிரையை வாங்கிக்கொண்டனர். உள்ளே நுழைந்தான். தொலைவிலேயே அவன் வருவதைப் பார்த்துவிட்டார் திசைவேழர். ‘அறிவுச்செருக்கு சரிந்துவிட்டது’ என அவரது மனம் சொன்னது. ‘இன்னொரு முறை பாண்டரங்கத்தில் பிழை நிகழ்த்தியிருக்கிறான். நான் சொல்லி அனுப்பிய நேரத்துக்குள் பதற்றமாகி அவனே வந்துள்ளதன் காரணம், வேறு என்னவாக இருக்க முடியும்?’ என்று எண்ணியபடியே அவனை உள்ளே அழைத்தார்.

“உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்தான்.

அவர் எந்தவிதக் காரணமும் கேட்கவில்லை. சற்று நேரத்தில் புறப்பட்டார். அவர் காரணம் கேட்காதது குறித்து, அந்துவன் கவலைகொள்ளவில்லை. அவர் புறப்படும்வரை காத்திருந்து அவரை அழைத்துவந்தான்.
பாண்டரங்கத்துக்குள் இருவரும் நுழைந்தனர். வழக்கம்போல் அவர் மாளிகையின் நடுவில் நின்று, அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தார். அவர் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக அது வரையப் பட்டிருந்தது. அந்துவனைப் பாராட்டலாம் என நினைத்துத் திரும்பியபோதுதான் கவனித்தார். அவன் அருகில் இல்லை. சற்று தொலைவில் தூண்களுக்குப் பக்கத்தில் இருந்த தேவாங்குகளின் கூண்டுக்கு அருகில் நின்றிருந்தான்.

“என்ன அங்கே நிற்கிறாய்?”

“நான் உங்களைக் காண வருமாறு அழைத்தது,  இந்த விலங்கைப் பார்க்கத்தான்.”

“என்ன இது?”

`இதன் பெயர் தேவாங்கு’ எனச் சொல்ல வாயெடுத்தவன், “இயற்கையின் அதிசயம்” என்றான்.

`என்ன சொல்கிறான் இவன்?’ என்று சிந்தித்தபடியே கூண்டருகில் வந்து, உற்றுப்பார்த்தார்.  அவை உள்ளொடுங்கி நின்றன.

“இது ஒரு வானியல் விலங்கு” என்று சொல்லியபடி, கையில் இருந்த குச்சியை அவரின் கையில் கொடுத்தான்.

அவர் அதைக்கொண்டு கூண்டுக்குள் இருந்தவற்றைச் சற்றே தொந்தரவு செய்தார். அவை இங்கும் அங்குமாக நடந்து அலைமோதின. அவற்றின் கண்கள், உடல்வாகு, காது விடைக்கும் தன்மை என எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தபடியே இருந்தார். அவருக்குப் புதிதாக எந்த ஒன்றும் தெரியவில்லை.

“என்ன புதிதாய்க் கண்டாய்?”

“உங்களின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லையா?”

அவன் கேட்பது திசைவேழருக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக, மாணவர்களிடம் அவர் கைக்கொள்ளும் முறை இது. `என் சொற்கள், என்னிடமே திரும்ப வருகின்றன’ என்று சிந்தித்தபடியே அந்த விலங்கை உற்றுப்பார்த்தார். மாறுபாடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. சற்றே திரும்பி அந்துவனைப் பார்த்தார்.

அந்துவன் சொன்னான், “அவை எந்தத் திசைநோக்கி உட்காருகின்றன பாருங்கள்.”

திசைவேழர் அவற்றைக் கூர்ந்து கவனித்தார். அவை வடக்கு திசை நோக்கி உட்கார்ந்திருந்தன. தன் கையில் இருந்த குச்சியால் அவற்றைச் சீண்டினார். அவை எழுந்து இன்னொரு பக்கம் சென்று வடக்கு திசை நோக்கி உட்கார்ந்தன. மீண்டும் விரட்டினார். மீண்டும் அவை அவ்வாறே உட்கார்ந்தன. கூண்டைத் திறக்கச் சொல்லி வெளியே விரட்டினார். பாண்டரங்கம் முழுவதும் அவை சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால், எப்போதெல்லாம் தரையில் உட்கார்ந்தனவோ, அப்போ தெல்லாம் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன.

திசைவேழர் அதிர்ந்துபோனார். ``நான் காண்பது உண்மையா?” என்றார்.

``உண்மை ஆசானே! பலமுறை பரிசோதித்துவிட்டேன். இந்த விலங்கு இயற்கையின் அதிசய ஆற்றல் ஒன்றை தன்னகத்தே கொண்டுள்ளது” என்றான் அந்துவன்.

“என் கண்களை நம்ப முடியவில்லையே!’’ என்று கூறியபடி அவற்றின் பின்னால் ஓடினார். அவை இயல்பாக உட்காருவதைக் கவனித்தார். விரட்டினால் பதற்றமடைந்து உட்காருவதைக் கவனித்தார். எப்போது உட்கார்ந்தாலும் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன. அவை உட்காரும்போதெல்லாம் அவரது மனம் வியப்பிலும் மகிழ்விலும் துள்ளியது. “என் கண்கள் பொய்யேதும் சொல்லவில்லையே!” என்று அந்துவனைப் பார்த்துக் கேட்டார்.

அந்துவன் சிரித்தான்.

“நீ என் தலை மாணாக்கன் என்பதை மீண்டும் மெய்பித்துவிட்டாய்” என்று சொல்லியபடி வாரி அணைத்தார் அந்துவனை. அவரது சொல், வரையப்பட்ட வான் மண்டலம் முழுவதும் எதிரொலித்தது.
இளமருதனுக்கு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ``ஆலோசனை மாடத்துக்கு என்னை அழைத்துச்சென்று தேவாங்கைப் பற்றி இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்க வேண்டும்? நான் செய்த பிழை என்ன? பாண்டரங்கத்திலிருந்து தேவாங்கின் கூண்டை நான் வெளியே எடுத்தபோது அந்துவன்தானே `உள்ளேயே இருக்கட்டும்’ எனச் சொன்னார். இப்போது அதில் என்ன பிரச்னை?” என்று மாடத்தின் வெளியே நின்று புலம்பினான். சற்று நேரம் கழித்துத்தான் செய்தி தெரிந்தது,  `வெங்கல்நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்க்கிழாரை அழைத்துவரச் சொல்லி அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பட்டுள்ளது’ என்று. இளமருதன் இன்னும் பதறிப்போனான். தன்னைப் பெரிய இடரில் யாரோ மாட்டிவிட்டுவிட்டார்கள் என அஞ்சினான். தேவாங்கின் முகம் நினைவுக்குவந்தது. அதனுடைய பயம் தன்னிடம் ஒட்டிக்கொண்டதோ எனத் தோன்றியது.
ஆலோசனைக் கூடத்துக்குள் பேரரசர், சூல்கடல் முதுவன், திசைவேழர், இளவரசர்,  தலைமை அமைச்சன் முசுகுந்தர், அந்துவன் ஆகியோர் இருந்தனர். மனம் நம்ப மறுக்கிற ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசியும் கண்களால் பார்த்தும் நம்பத் துணிந்தனர்.

பொன்பூச்சுக்கொண்ட உள்ளரங்கில் பேரரசர் அமரும் இடம்தனில் மிதித்து, நின்று, உட்கார்ந்து கடந்தது தேவாங்கு. அதை ஓடவிட்டும் உட்காரவிட்டும் பார்த்துக்கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் முயன்றனர். அதைவிட்டு பார்வையை விலக்காமலேயே முசுகுந்தர் கேட்டார் “இந்த விலங்கு வேறு இடத்திலும் இருக்குமல்லவா?”

திசைவேழர் சொன்னார், “பொதியமலையில் உண்டு. நானே பார்த்திருக்கிறேன். ஆனால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் தன்மை அதற்கு இல்லை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P88d
“இதற்கு மட்டும் இருப்பதற்குக் காரணம்?’’

“இது ஒரு மரத்து விலங்கு. குறிப்பிட்ட மரத்தில் மட்டுமே இந்த விலங்கு கூட்டமாகத் தங்கி உயிர்வாழும். பறம்புமலையில் இந்த விலங்கு இருந்த அந்த மரத்தின் அமைப்பு இந்தப் பழக்கம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டும். பல நூறு தலைமுறைகளாக அந்த இடம் இருப்பதால், இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும்” திசைவேழரின் விவரிப்பு, மேலும் வியப்பைக் கூட்டியது.

“அந்த மரத்தில் எத்தனை தேவாங்குகள் இருக்கின்றன என்ற செய்தி ஏதேனும் உண்டா?”

“திருமணத்துக்கு வந்துள்ள பாணர்களிடம் விசாரித்ததில் பலநூறு தேவாங்குகள் அந்த மரத்தில் உண்டு” என்று அந்துவன் சொன்னான்.

தேவாங்கையும் அதன் எண்ணிக்கையைப் பற்றிய செய்தியையும் அறிந்ததிலிருந்து பொதியவெற்பனுக்கு மகிழ்வு தாங்க முடியாத அளவு இருந்தது. தன் திருமணத்தை முன்னிட்டு நடந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக இப்படி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவன் மனம் கூத்தாடியது.

சூழ்கடல் முதுவனுக்கோ அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் திக்குமுக்காடச் செய்தன. தான் காண்பது உண்மையா என்பதை நம்ப, அவர்தான் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். திசைவேழர் போன்ற பெரும்வானியல் அறிஞன் சொல்லும்போது ஐயப்படுவது அழகன்று. ஆனாலும் இப்படியொரு செயலை மனம் எளிதில் நம்பிவிடுவதில்லை.

அதன் முழு நடவடிக்கையையும் பார்த்துவிட்டு, சூழ்கடல் முதுவன் ஒற்றைவரியில் சொன்னான், “இனி, கடல் வணிகத்தை நாம் ஆளலாம்.”

இந்தச் சொல்லைச் சொன்னதும், பேரரசர் அவரைக் கட்டி அணைத்தார்.  ``முன்னர் நடந்த கூட்டங்களில் கடல் கண்டு அஞ்சிவந்த தங்களின் சொற்கள், இப்போது முற்றிலும் மாறிவிட்டன. இந்தத் திருமணம் பல புதிய வாய்ப்புகளை நமக்கு உருவாக்கும் என நான் உறுதியாக நம்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு இவ்வளவு சிறந்ததாக இருக்கப்போகிறது  என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் பேரரசர்.

சூழ்கடல் முதுவன் சொன்னான், “என் வாழ்வில் இன்று அடைந்துள்ள வியப்பும் மகிழ்வும் கலந்த ஓர் உணர்வை இதுவரை அடைந்ததில்லை. திசை அறிய முடியாமல் எவ்வளவு இழப்புகளை நாங்கள் கண்டுள்ளோம். எத்தனை மனிதர்கள், கப்பல்கள், பொருள்களை எல்லாம் கடல் கொண்டுபோனது. திசையைத் தவறவிட்டதால்தான் என் இரண்டு மகன்களையும் பறிகொடுத்தேன். கடல் பயணத்தில் திசையறிதல் என்பது, கடலை வெல்வதற்கு இணையானது. இது தேவாங்கன்று; உண்மையில் இதுதான் தேவவாக்கு விலங்கு” என்று சொல்லி, அதைத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சினார்.

இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த இளமருதனுக்கு நேரம் ஆக ஆக பதற்றம் கூடிக்கொண்டேபோனது. சிறிது நேரத்தில் செவியன் அங்கு வந்து சேர்ந்தான். காலையில் திசைவேழர் இந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, முதலில் பேரரசரிடம் சொல்லியுள்ளனர். பிறகு, இளவரசனையும் முசுகுந்தரையும் அழைத்துக் காண்பித்திருக்கின்றனர். அதன் பிறகுதான் சூழ்கடல் முதுவனுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இடைப் பட்ட நேரத்தில் இது தொடர்பானவர்களைத் தனித்தனியே அழைத்து விசாரித்துள்ளனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P88e
செவியனும் விசாரிக்கப்பட்டான். இந்த விலங்கைப் பற்றி அவனுக்குத் தெரிந்ததை யெல்லாம் அவன் சொல்லியுள்ளான். அதன் பிறகுதான் மையூர்கிழாரை அழைத்துவர ஆள் அனுப்பப்பட்டது. இவை எல்லாம் ஏன் நடக்கின்றன என்பது அவனுக்கு விளங்கவில்லை. `இளமருதனைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டுப் போகலாம்’ என்று வந்துள்ளான். இளமருதனோ பதற்றத்தில் நடுங்கிப் போயிருந்தான். “நான் அந்துவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போனதோடு சரி. அதற்குப் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை” என்றான்.

செவியனுக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது. “அரண்மனை நிர்வாகத்தை நன்கு அறிந்தவர்தானே நீங்கள். உங்களுக்கும் இதற்கான காரணம் புரியவில்லையா?” எனக் கேட்டான் இளமருதன்.
``என்னால் எதுவொன்றையும் தொடர்பு படுத்தவே முடியவில்லை. ஒரே ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கு இவ்வளவு நாள் கழித்து ஏன் விசாரிக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்றான்.

“என்ன செய்தி அது?”

``நாம் அன்று நள்ளிரவுக் கோட்டைக்குள் நுழைந்தோமல்லவா, அப்போது கதவைத் திறந்தவிட்ட யானை மதம்பிடித்து கோட்டைத் தளபதியைக் கொன்றுவிட்டது. இந்தச் செய்தி வெளியே யாருக்கும் தெரியாது. திருமணக் காலத்தில் தலைநகருக்குள் நிகழ்ந்த மரணம் என்பதால், வெளியே தெரியாமல் எல்லா வற்றையும் முடித்துவிட்டார்கள். அது தொடர்பாகக் கோட்டைவாசலில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது ஒருவன் மட்டும் சொல்லியிருக்கிறான், ‘பார்க்கவே அருவருப்பாக இருந்த ஒரு விலங்கை உள்ளே எடுத்துவந்தனர். அதைக் கண்ட பிறகுதான் அந்த யானை மிரட்சிக்குள்ளானது’ என்று.”

இளமருதன் நடுங்கிப்போனான்.

செவியன் சொன்னான், “அப்போது நடந்ததற்கு, இப்போது ஏன் விடாமல் விசாரிக்கின்றனர் என்பதுதான் புரியவில்லை.”

இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தனர். நீண்ட நேரம் கழித்து, சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் பொற்பல்லக்கு ஒன்றை, பணியாளர்கள் மாளிகைக்குள் தூக்கிச் சென்றனர். இதை ஏன் தூக்கிச் செல்கின்றனர் என்பது தெரியாமல் விழித்த செவியன், தனக்கு நன்கு தெரிந்த அரண்மனைப் பணியாளனிடம் தனியே போய் விசாரித்தான். “ஏதோ புதிய விலங்கொன்று வந்திருக்கிறதாம். அதை வைக்க” என்றான் அவன்.

அதிர்ச்சியானார்கள் இரண்டு பேரும். ``அன்று சக்கரவாகப் பறவையின் கூண்டு வைக்கப்படும் மேடையின் மீது இதை வைத்ததற்குத்தான் அந்துவன் அவ்வளவு கோபப்பட்டான். `தூக்கி வீசிவிடுங்கள்’ என்றான். இன்றோ சக்கரவாகப் பறவை கொண்டுவரப்பட்டப் பொற்பல்லக்கை இதற்குக் கொண்டுபோகின்றனர். என்ன நடக்கிறது?”

செவியன் சொன்னான், “இளமருதா, இது நீ அச்சம்கொள்ளவேண்டிய  நிகழ்வன்று. வேறு ஏதோ முக்கியமானதொரு நிகழ்வு.”

அப்போதுதான் இளமருதனுக்குத் தோன்றியது, ‘பாரிக்கு தேவவாக்குச் சொல்லும் விலங்கு. இதன் சிறப்பைச் சொல்லி நாம் அல்லவா பேரரசரிடம் பாராட்டைப்பெற வேண்டும் என்று இருந்தோம். இப்போது யாரோ உள்ளே புகுந்து நாம் அடையவேண்டிய நற்பெயரை அவர்கள் அடையப்பார்க்கின்றனர். இதை விடக் கூடாது.அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம்.’வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P88f

“இந்தத் திருமணத்துக்கு எல்லோரும் வந்திருக்கின்றனர். சேரனுக்கும் சோழனுக்கும் செய்தி சொல்லும் எண்ணற்றோர் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். அதேபோல யவனர்களின் பெரும்தளபதிகள் இங்கு வந்துள்ளனர். எனவே, இதைப் பற்றிய செய்தி எதுவும் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் முசுகுந்தர்.

“சரி, அந்த விலங்கை, பறம்பு மலையிலிருந்து கொண்டுவர வழி என்ன?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

இவ்வளவு நேரம் அளவற்ற மகிழ்சியில் நடந்துகொண்டிருந்த ஓர் உரையாடல் சற்றே இறுக்கமாக மாறத் தொடங்கியது.

``நாம் ஒரு குழுவை அனுப்பி பாரியிடம் பேசி, அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார் சூழ்கடல் முதுவன்.

“வணிகப் பேச்சுக்காகப் போன கோளூர் சாத்தனின் கதை, உங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

“கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டல்லவா? இது மிகவும் வியத்தகுத்தன்மைகொண்ட விலங்கு. கடல் பயணத்தில் இது அபாரமான ஆற்றலைத் தரவல்லது. நமது வணிக வலிமையை இது பல மடங்கு உயர்த்தக்கூடியது. இதை எடுத்துச்சொல்லி, `இதற்கு ஈடாக நல்லதொரு பரிமாற்றத்துக்கு  பாண்டியநாடு தயாராக இருக்கிறது’ எனச் சொன்னால், பாரி ஏற்பான் என்றே நினைக்கிறேன்” என்றார் சூழ்கடல் முதுவன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P88g
“பறம்புநாட்டின் மீது ஓரளவு நெருக்கமாக இருந்தவர்கள் குட நாட்டினர்தான். ஆனால், அவர்களின் அமைச்சகன் வணிகம் பேசப்போனதற்கே கைகளை வெட்டி அனுப்பி யுள்ளான். பாண்டியநாட்டுத் தூதுவர்கள் போனால் உள்ளேயே அனுமதிக்க மாட்டான். அதை மீறி உள்ளே போனால், அவர்கள் திரும்பி வர மாட்டார்கள்.”

“அப்படியென்றால் இதற்கு என்ன வழி?” எனக் கேட்டார் சூழ்கடல் முதுவன்.

“தளபதி கருங்கைவாணனை வரச்சொல்லி உத்தரவிடுங்கள்” எனப் பேரரசரை வேண்டினான் பொதியவெற்பன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்..


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:41 pm

தேவாங்கைக் கொண்டுவருதலுக்கான பேச்சுகள் அனைத்தும் பறம்பின்மீது படையெடுப்பதைப் பற்றிய பேச்சாகவே முடிகின்றன. அதுவன்றி வேறுவழிகளைப்பற்றி அக்கறையோடு விவாதித்தனர் முசுகுந்தரும், சூல்கடல் முதுவனும். அதே கருத்துதான் திசைவேழருக்கும். ஆனால், இவர்களால் மாற்றுவழியைச் சொல்ல முடியவில்லை. எனவே, எல்லா உரையாடல்களும் இயல்பாகக் கருங்கைவாணனிடம் போய் முடிந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83a
கருங்கைவாணனும் பொதியவெற்பனும் குரல் உயர்த்திப் பேசுவதற்கான வாய்ப்பை இவை வழங்கின.

“பாரி இவ்விலங்கை வைத்து என்ன செய்யப்போகிறான்? நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடையிலிருந்து பழம் பொறுக்கத்தான் பயன்படுத்துவான் என்றால், அது எவ்வளவு பெரிய அறியாமை. நாம் அவனிடம் எடுத்துச் சொல்லலாம். இவ்விலங்கின் வலிமை, கடலில்தான் இருக்கிறது. கடற்பயணத்தில் காற்றை வெல்லவும் கரையைச் சொல்லவும் ஆற்றல்கொண்ட ஒன்றை அதற்குரிய இடத்தில் பயன்படுத்துதலே முறை, இதனை உரியவர் மூலம் பாரியிடம் சொல்லவைப்போம்” என்று வாதிட்டார் முசுகுந்தர்.

“உரியவர் என்றால் யார்?”

“வழக்கம்போல அரசு அமைச்சர்களை அனுப்பாமல், பாரி பெரிதும் மதிக்கிற மனிதர்களை அனுப்பிவைப்போம்.”

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?”

“கபிலர் போன்ற பெரும்புலவர்களை அனுப்பிப் பேசச்சொல்லலாம் என்கிறேன்.”

“பெரும்புலவர் கபிலர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. திருமணத்துக்கே இன்னும் வந்து சேரவில்லையே. அவரை எங்கே போய்த்தேடுவது?”

“அது ஒன்றும் கடினமான செயல் அல்ல; நாம் நினைத்தால், அவரைக் கண்டடைந்துவிடலாம்.”

“ஆனால், அதற்கு மாதக்கணக்கில் ஆகும். அதுவரைப் பொறுத்திருக்க முடியுமா?”

பேச்சின் போக்கு பொதியவெற்பனுக்குப் பிடிக்கவில்லை.  உரையாடல்களைப் பெரும்பாலான நேரங்களில் உணர்வுகளே முடிவுசெய்கின்றன. பொதியவெற்பன் உணர்வின் கொந்தளிப்பில் இருந்தான். பொதுவாகத் திருமணக் காலங்களில் போர்தொடுத்தல் விரும்பத்தக்கதல்ல. ஆனால், இப்பொழுது உள்ள சூழல் இத்திருமணமே போரின் வாசலை வேகமாக திறந்துவிடுவதாக இருக்கிறது.

பேரரசர் குலசேகரப்பாண்டியனின் ஆற்றலே, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு வலியுறுத்திச் சொன்னாலும், அதன் உள்ளுண்மையை  மட்டுமே கண்டுணரும் அறிவுதான். அதனால், பொதியவெற்பன் எவ்வளவு குரல்கொடுத்தும் அவர் ஏற்றுக்கொள்வதற்கானச் செய்திகள் கிடைக்காமலே இருந்தன.

பொதியவெற்பன் சொன்னான், “படைகளைப் பெருக்குதல், பிறவேந்தர்களை திறைசெலுத்தச் செய்தல், பகைவரை அழித்தல், நிலப்பகுதியை மேன்மேலும் அதிகப்படுத்துதல், குடிகளை நன்கு காத்தல் இவைகளே அரச நியதி. இந்நியதியை நிலைநாட்டியே நமது முன்னோர்கள் இப்பேரரசைக் கட்டியெழுப்பினர். நாம் அவ்வழிச் செல்லுதலே முறை.”

பொதியவெற்பன் ஒருவகையில் பேரரசரை சீண்டும் வேலையைத் தொடங்குகிறான் எனத் தலைமை அமைச்சருக்குப் புரிந்தது. ஆனால், பேரரசர் எடுக்கவேண்டிய முடிவில் தெளிவாக இருப்பார் என்று யாவருக்கும் தெரியும்.

அவர் உரையாடலின் தன்மையைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். திருமணவிழாக் கொண்டாட்டம்  பெருகியபடி இருந்தது. ‘மணவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மலரணிதல் சடங்கு இன்னும் சில  நாழிகைகளில் நடக்க இருக்கிறது. நமது மனநிலையை வேறு ஒன்று ஆட்சி செய்கிறது. இதுவோர் அரிய வாய்ப்பு. கடல் வணிகத்தில் பிற பேரரசுகளை வெல்லுவது மட்டுமல்ல, யவனர்களையே நம்மைக்கண்டு மிரளச்செய்யலாம். கிழக்குக் கடலையும் மேற்குக்கடலையும் நமது கப்பல்கள் ஆளும். அது நமது அரசியல் வலிமையை மேலும் பலமடங்கு அதிகப்படுத்தும். இதனைப் பிறர் அறியாமல் செய்யும்முறையே சிறந்தது. போர்தொடுத்தல் இக்காரணத்தை வெளிப் படுத்தும். அதன் இறுதி அழிவில் அவ்விலங்கினங்களேகூட அழிந்துவிடும் ஆபத்தும் உண்டு. எனவே, சற்று நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யவேண்டும்’ என்று நினைத்தார்.

வெங்கல் நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்கிழார் வரும்வரை முடிவெடுப்பதைத் தள்ளிப்போட்டார்.

றுநாட்களுக்குப் பின் மையூர்கிழார் வந்து சேர்ந்தார். மறுநாள் காலைச்  சிற்றரங்கிற்கு அவர் அழைத்துவரப்பட்டார். கையில் காராளி செய்த காமன் விளக்கோடு வந்தார். பேரரசரைப் பார்த்ததும் அதனை அவரிடம் கொடுத்து அதன் சிறப்பைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார்.

மலரணியும் நிகழ்வுக்குப் புறப்படத் தயாராயிருந்த பேரரசருக்கு மையூர்கிழார் வந்துள்ள செய்தி சொல்லப்பட்டது. உடனே சந்திக்க ஏற்பாடானது. அவர் அளித்த காமன்விளக்கைப் பெற்றுக்கொண்டார். அதன் சிறப்பை விளக்கிச்சொல்வதற்கான சூழல் வாய்க்கவில்லை. பாண்டரங்கத்தில் வைக்கவே தனிக்கவனம் செலுத்திச் செய்தது என்று மட்டுமே சொல்லமுடிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83b
கருங்கைவாணன் நேரடியாகப் பேச்சைத் தொடங்கினான். பறம்பின் மீது போர் தொடுப்பது பற்றிய வினாக்கள் அவரின் முன் வைக்கப்பட்டன.

முற்றிலும் எதிர்பாராத கேள்வியை எதிர் கொண்டு திகைத்துப்போனார். மணவிழாவுக்குத் தான் முன்கூட்டியே அழைக்கப்பட்டுள்ளோம் என நினைத்துப் பெருமகிழ்வோடு வந்த அவருக்கு இக்கேள்வி பெருங்கலக்கத்தை உருவாக்கியது. பாண்டிய நாட்டின் கடைசி எல்லை வெங்கல் நாடு. அதனை அடுத்து பச்சைமலைத்தொடர் தொடங்குகிறது. எனவே இப்போரில் வெங்கல்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். ஆனால், இவ்வளவு அவசரமாக திருமணக்காலத்தில் போர்புரிதல் பற்றிப் பேசவேண்டிய தேவை என்ன என்பது அவருக்கு விளங்கவில்லை.

அவர் அதிர்ச்சியடைவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே, மற்றவர்கள் அவரின் அதிர்ச்சியைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பேரரசரின் முன் நடக்கும் கலந்துரையாடல்களில் வினா எழுப்புவதற்கான இடமில்லை. தன்னை நோக்கி எழுப்பப்படும் வினாவிற்கான விடையைப் பணிவோடு முன்வைக்க மட்டுமே அனுமதியுண்டு.

மையூர்கிழாருக்குச் சூழல் பிடிபடவே நேரமானது. போரின் தேவை பற்றித் தெரிந்துகொள்வது நமது வேலையல்ல, போரின் தன்மை பற்றி தனது அறிவுக்குப்பட்டதைச் சொல்லிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.
தளபதி கருங்கைவாணன் கேட்டான், “பறம்பு நாட்டில் மொத்தம் எத்தனை ஊர்கள் உள்ளன?”

“நானூறுக்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

``மலையில் அமைந்துள்ள ஊரின் பரப்பும் மக்களின் எண்ணிக்கையும் மிகக்குறுகிய அளவுதானே இருக்கும்.’’

“ஆம்” என்றார் மையூர்கிழார்.

“ஆண், பெண், குழந்தைகள் என எல்லாம் சேர்த்து பறம்புநாட்டில் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

‘இவ்வினாவிற்கு எப்படி விடை சொல்லமுடியும். பறம்பு நாட்டின் ஓர் ஊரைக்கூட நான் கண்களால் பார்த்ததில்லை. ஒருசில மனிதர்களை மட்டுமே பார்த்துள்ளேன். பின் எப்படி இதற்கு விடை சொல்வது?’ என்று தயங்கிக்கொண்டிருக்கையில் கருங்கைவாணன் சொன்னான். “பாண்டியப் பேரரசின் நிலைப்படையின் எண்ணிக்கையில் பாதிகூட பறம்புநாட்டு மக்களின் எண்ணிக்கை இருக்காது.”

தளபதி சொல்லும் கணக்கு சரியாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், பாண்டிய நாட்டு நிலைப்படையின் வலிமை அப்படி. இந்தக் கணக்குச் சொல்லப்படுவதற்கான காரணம் எல்லாரும் அறிந்ததே. ஆனால், போர் என்பது எண்ணிக்கையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதைப் பேரரசர் அறிவார். எனவேதான் தளபதியின் சொல்லைவிட மையூர்கிழாரின் சொல்லை அவர் மிகக்கூர்மையாகக் கவனித்து வந்தார்.
மிக உறுதியாக முன்வைக்கப்படும் தளபதியின் வார்த்தையை எதிர்கொள்ளமுடியாமல் அமைதிகாத்தது அவை. தலைமை அமைச்சர் முசுகுந்தர் என்ன சொல்லப்போகிறார் என்று மற்றவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்குமேல் போர் அற்ற ஒரு பேச்சுக்கான இடம் அங்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததனால் அமைதி நீடிக்கவே செய்தது.

தளபதியிடமிருந்த உறுதியும் நம்பிக்கையும் பொதியவெற்பனின் முகத்தில் மகிழ்வாய் எதிரொலித்தது. மற்றவர்களும் அதனைக் கவனித்தபடி இருந்தனர். இந்நிலையில் “நீ சொல்ல வருவதென்ன?” என்று மையூர்கிழாரைப் பார்த்து பேரரசர் கேட்டார்.

மையூர்கிழாரின் முகக்குறிப்பறிந்து பேரரசர் கேட்கிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், தலைதாழ்த்தி நின்றிருந்த மையூர்கிழாருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஆனால், தான் எதையோ சொல்லவேண்டுமென்று பேரரசர் விரும்புகிறார் என்பது மட்டும் புரிந்தது.

சின்னச் செருமலோடு பேசத்தொடங்கினார் மையூர்கிழார். ``நான் நேற்று வந்ததில் இருந்து பலவற்றையும் தெரிந்துகொண்டேன். என் மகன் இளமருதன் சற்றே பதற்றத்தில் இருந்தான். அழைத்துவந்த செவியனிடமும் விசாரித்தேன். ஆளுக்கு ஒன்றாய்ச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதற்கும் உள்ளே நடக்கும் நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதலில் தோன்றியது. இப்பொழுதோ தொடர்பு இருக்குமெனத் தோன்றுகிறது.”

மையூர்கிழார் சொல்வது சற்றே குழப்பமாய் இருந்தது.

“நீ எதைச்சொல்ல வருகிறாய்?” எனக்கேட்டார் முசுகுந்தர்.

“மதங்கொண்ட யானையை நீங்கள் கையாண்ட முறையை” என்றார் மையூர்கிழார்.

அதிர்ந்துபோனார் முசுகுந்தர். `பேரரசருக்குத் தெரியாமல் நடந்த ஒன்றை இப்படி அவையில் போட்டு உடைத்துவிட்டானே?’

“எந்த மதயானை? என்ன நடந்தது?” வியப்புற்ற குரலில் இருந்தது பேரரசரின் கேள்வி.

முசுகுந்தர் நடந்ததை விளக்கிச் சொன்னார். “திருமணக்காலத்தில் இப்படியொரு தீய நிகழ்வு தங்களுக்குத் தெரியவேண்டாம் என்பதால், இதனை சற்று மறைவாக விசாரித்து முடித்தோம்” என்றார்.

“எனக்குத் தெரியாது என்று எப்படி நீ நம்பினாய்?” எனக் கேட்டார் பேரரசர்.

“பேரரசருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், இது ஒற்றர்களின் மூலம் மெல்லிய குரலில் உங்கள் காதுகளில் பட்டும்படாமலும் விழவேண்டிய செய்தி என்று நான் நினைத்தேன். அதனால்தான் நான் உங்களிடம் தெரிவிக்கவில்லை.”

முசுகுந்தரின் விடை பேரரசருக்கும் அவருக்குமிருந்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தியது. மற்றவர்கள் வியப்படைந்தனர்.

இதனை நினைவுபடுத்தியதன் மூலம் மையூர்கிழார் சொல்லவரும் செய்தி என்ன என்பதுதான் முசுகுந்தருக்குப் பிடிபடாமல் இருந்தது.

மையூர்கிழார் கேட்டார், “எத்தனை வீரர்கள்கொண்டு அந்த மதயானையை மறிக்கச்செய்தீர்கள்?”

“வீரர்கள் எண்ணற்றோர் முன்னும் பின்னுமாக ஆயுதங்களோடு சென்றனர். ஆனால், யாராலும் நெருங்கமுடியவில்லை. அல்லங்கீரன் யானைகளின் குணங்களைக் கண்டறிவதில் தேர்ந்தவன். அவன்தான் இதற்கெனவே பயிற்சி பெற்ற நான்கு யானைகளைக்கொண்டு மோதி அதனை வீழ்த்தினான்” என்றார் முசுகுந்தர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83c
பேரரசரின் காதுகளுக்கு எது போகக்கூடாது என நினைத்தோமோ, அந்தச் செய்தியைத் தானே சொல்லவேண்டியதாகிவிட்டதே என்று மனம் கூசினார். யானையைக் குத்திக்கொல்வதென்பது கொடும்நிகழ்வு. அது மணவிழாக்காலத்தில் நடந்ததென்பது பெரும் இக்கட்டை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், முசுகுந்தர் அந்நிகழ்வை விளக்கிக்கொண்டிருந்த இந்தக் கணத்தில் எல்லோரின் எண்ணமும் இதனைவிடக் கொடும்செயல் அரங்கேறும் போரின் மீதுதான் இருந்ததே தவிர, மணவிழாவின் மீது இல்லை.

மையூர்கிழார் சொன்னார் “எங்களின் வெங்கல் நாட்டில் நடந்த நிகழ்வொன்று. அப்பொழுது நான் இளைஞனாக இருந்தேன். எனது தந்தைதான் ஆட்சி நடத்தினார். நாட்டின் தலைநகர் இப்பொழுது இருக்கும் இடத்தில் கிடையாது. பச்சைமலையின் அடிவாரத்தில் இருந்தது. ஓர் அதிகாலையில் அரண்மனையின் பக்கத்திலிருந்த சித்தூரிலிருந்து பெரும்கூச்சல்  கேட்டது. என்ன என்று பார்க்கப்போன வீரர்கள் பதறியடித்து ஓடிவந்தனர். மதயானை ஒன்று ஊருக்குள் புகுந்துவிட்டது. கட்டடங்களை முட்டிச்சாய்க்கவும் மரங்களைப் பிடுங்கி எறியவுமாக இருக்கிறது என்றனர்.

தந்தை உடனே வீரர்களை அழைத்துக்கொண்டு அவ்விடம் சென்றார். நானும் உடன் சென்றேன். என் வாழ்வில் மறக்கமுடியாத நாளது. அந்த யானையின் உயரமும் ஆவேசமும் இன்னும் என் மனக்கண்ணைவிட்டு அகலவில்லை. அவ்வளவு ஆத்திரம்கொண்ட யானையை இன்றுவரை நான் பார்த்ததில்லை. மதயானை முட்டி மரம் சாய்வதைத்தான் நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் முட்டிய வேகத்தில் பெரும்மரங்கள்கூட நொறுங்கிச் சரிந்ததை அன்றுதான் பார்த்தேன்.

துதிக்கையில் மண்ணள்ளி வீசிக்கொண்டு அது திடுதிடுவென வந்த வேகம் இன்னும் எனக்குள் பேரச்சத்தை உண்டு பண்ணுகிறது. பெரும்பெரும் ஈட்டிகளோடும் வில் அம்புகளோடும் வீரர்களைத் துணிந்து முன்னகரச் சொன்னார் தந்தை. ஓசையெழுப்பும் மத்தளங்கள் இசைக்கப்பட்டன. ஆனால், அவ்வானை  எதையும் பொருட்படுத்தவில்லை. வீரர்களின் ஆயுதங்கள் காற்றெங்கும் பறந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இனி இந்த ஊரைக் காப்பாற்றமுடியாது என்று முடிவுசெய்து எல்லோரும் அவ்விடம்விட்டு அகலுமாறு உத்தரவிட்டார். இவ்வுத்தரவுக்காகக் காத்திருந்த வீரர்கள் குதிரையைத்தாண்டி முன்னால் ஓடினர்.

எல்லோரும் அரண்மனைக்கு வந்த பின்புதான் சிந்தித்தோம். அந்த மத யானை இங்குவந்தால் என்னசெய்வது? அரண்மனைக்கோட்டை திடமானதுதான். ஆனால் யானைமுட்டலில் நொறுங்கிய மரத்தின் உறுதி இதற்கு இருக்காது. எனவே, எப்பாடுபட்டாவது அதனை நெருங்கவிடாமல் தடுக்கவேண்டும் என முடிவுசெய்து முழுவீரர்களையும் அணிவகுக்கச்செய்த ஆயத்தநிலையில் இருந்தார் தந்தை.

சித்தூரைச் சூரையாடிவிட்டு அது எங்களை நோக்கி வரத்தொடங்கியது. வீரர்களின் கால்நடுக்கத்தில் தரையே ஆடியது என்றுதான் சொல்லவேண்டும். அது மனித ஓசைகேட்டு வெறியேறியபடி எங்கள் திசைநோக்கித் திரும்பியது. 

இந்தக் காட்சியைப் பச்சைமலைக் குன்றின்மேல் இருந்த பெண்ணொருத்தி பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறாள். அவள் பறம்புநாட்டுக்காரி. சித்தூரைச் சூறையாடிய யானை அடுத்துள்ள பெரிய ஊரினை நோக்கி நடக்கத்தொடங்கியதும் அவளுக்குக் கவலை அதிகமாகியுள்ளது. ஏனென்றால், இங்கு மக்கள் கூட்டம் அதிகம். இழப்பு அதிகமாகிவிடும் என்று முடிவுசெய்து அவள் வேகவேகமாகக் குன்றினைவிட்டு கீழிறங்கியிருக்கிறாள்.

எங்களின் கண்களுக்கு எதிரே நிலம்நடுங்க பிளிறியபடி யானை வந்துகொண்டிருந்தது. நாங்கள் உருவாக்கிய தடுப்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்தன. எத்தனை வீரர்கள் தூக்கிவீசப்பட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் அதனுடைய போக்கினை மறிக்க எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.

மதயானை ஓரிடத்திலிருந்து நகரும்போது நான்கு திசையிலும் சம அளவிலான அழிவினை ஏற்படுத்தியபடியே நகரக்கூடியது. வீடுகள் இடிந்து சரிந்து நொறுங்கிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்திற்குப் பின் நாய்கள் குரைப்பொலியை முழுமுற்றாக நிறுத்தின. அதன்பின் எங்களின்  அச்சம் பலமடங்கு அதிகமானது. நாங்கள் அரண்மனைக்குள் நுழைந்து கோட்டைக்கதவினைத் தாழிட்டோம். அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வலிமை இங்குள்ள எந்தக் கட்டுமானத்துக்கும் இல்லை என்பதை எல்லோரும் உணர்ந்தோம். ஆனாலும் அரண்மனைக்குள் அண்டுவதைத்தவிர வேறுவழியில்லை. நான் கோட்டையின் மேலேறி தந்தையின் அருகில் நின்று பார்த்தேன்.

செம்மண் குலைத்துக்கட்டப்பட்ட கோட்டைச்சுவர் அதன் கண்களை உறுத்துவதாக இருந்திருக்க வேண்டும். அது வேகமாகக் கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்தது. மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கூக்குரல் வானம் தொட்டது.

அப்பொழுதுதான் இடப்புற மலையடிவாரத்திலிருந்து ஒரு பெண் கோட்டையை நோக்கி வருவதைப் பார்த்தேன். அவள் வேகவேகமாக வந்துகொண்டிருந்தாள். மதயானை ஒன்று எதிர்திசையில் வந்துகொண்டிருக்கிறது, அதனை அறியாது பெண் ஒருத்தி வந்துகொண்டிருக்கிறாளே என்று பதறினேன். அவளோ எதனையும் பொருட்படுத்தாமல் வந்துகொண்டிருந்தாள். தனது குழந்தையைப் பின்புறம் முதுகோடு சேர்த்து மேல்துணியால் கட்டியிருந்ததும் தெரிந்தது.

நெருங்கி வரவர மதயானையின் பிளிறல் பேரச்சம் தருவதாக இருந்தது. என்ன நடக்கப்போகிறதோ, என்ற அச்சத்தால் நாங்கள் உறைந்து போயிருந்தோம். ஆனால், எவ்வித அச்ச உணர்வுமின்றி அவள் எதிரில் நடந்துவந்துகொண்டிருந்தாள். முதுகுப்புறம் இருந்த குழந்தை அழுதிருக்க வேண்டும். முன்புறம் போட்டு மார்பில் பால்குடிப்பதற்கு ஏற்ப துணியைக் குழந்தையோடு இறுக்கக்கட்டினாள். ஆனாலும், அவள் நடையின் வேகம் குறைந்தபாடில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83d
அவள் கையில் ஏதோ ஒரு செடி ஒன்றை வைத்திருப்பது மட்டும் தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தது. அவள் அரண்மனை வாசல்நோக்கி உதவிகேட்டு வருகிறாள் என்றுதான் முதலில் நினைத்தேன். அவளோ இப்பக்கம் வராமல், மதயானை வந்துகொண்டிருக்கும் திசைநோக்கிப் போனாள்.

மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த எங்களால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ‘என்ன ஆனது இந்தப் பெண்ணுக்கு, தன்னந்தனியாக மதயானையை நோக்கிப் போகிறாளே!’ என்று அஞ்சினோம்.

பெரும்படையையே சிதறடித்த வெறிகொண்ட அந்த யானையை நோக்கி சிறிதும் அச்சமின்றி அவள் போய்க்கொண்டிருந்தாள். ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. நாங்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவள் கைகளில் இருந்த செடியை நீட்டியபடி மதயானையை நெருங்கிக்கொண்டிருந்தாள். அவளின் வேகம் அதிகமானபடியிருந்தது. மதயானையின் வேகம் குறைவதுபோல் இருந்தது. நாங்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் பிறகு நடந்தவைகளை எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாது. அத்தனை நூறு வீரர்களை வீசியெறிந்து, குத்தீட்டிகளையும் வேல்கம்புகளையும் சிதறடித்து, எதிரில் பட்டதையெல்லாம் முட்டித்தள்ளி மண்ணோடு மண்ணாக்கிய அந்த மதயானை, மேய்பனின் முன் பணியும் கிடை ஆடுபோல அவளின் சொல்கேட்டுப் பணிந்தது.

அந்த இலையின் வாசனையை நுகர நுகர அதன் மதம் ஒடுங்கி பின்னகரத் தொடங்கியது. அவள் தன்னந்தனியாக சிறுகுச்சியைக்கொண்டு விரட்டுவதைப்போல யானையை விரட்டிக்கொண்டு மலையிலே ஏற்றிவிட்டாள்.

எங்களின்  உயிரச்சம் கலைய நீண்ட பொழுதானது. நாங்கள் கோட்டைக்கதவைத் திறந்து அவளை நோக்கி ஓடினோம். அவள் மலைக்குள் போவதற்குள் அவளைச் சென்றடைந்தோம். பால்குடித்து முடித்த குழந்தையைப் பின்தோளிலே போட்டாள். எனது தந்தை கண்ணீர் மல்க அவளை வணங்கினார்.  “பலநூறு பேரின் உயிர்காத்த தேவி நீ” என்றார். அவள் மறுமொழியேதும் சொல்லவில்லை. அவள் கையில் இருந்தது கரந்தைச் செடி என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் கரந்தையில் எண்ணற்ற வகையுண்டு. அது எந்த வகைக் கரந்தை என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

அந்தச் சூழலில் அவளிடம் அதனைக் கேட்கவும் முடியாது. கேட்டாலும் பறம்பின் மக்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். எங்களைக் காத்தருளிய அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தந்தை துடித்தார். அவள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களின் உயிரைக்காப்பாற்றிய அவளின் காலடியில் பணிந்து “பறம்புக்கும் பறம்பின் மக்களுக்கும் எதிராக சிறுதீங்கும் நாங்கள் என்றும் செய்யமாட்டோம்” என்றார் தந்தை.

மையூர்கிழார் சொன்ன கதையை அவை மிகக்கவனமாகக் கேட்டது. போருக்கான கருத்தைக் கேட்ட பேரரசரிடம், ‘நான் கருத்தை மட்டுமே வழங்க முடியும். போரிலே பங்கெடுக்க முடியாது’ என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்ல முடிந்தது மையூர்கிழாரால். வயதும் பட்டறிவும்கொண்ட மூத்த மனிதர்கள் இக்கட்டானச் சூழலை எவ்வளவு நுட்பமாகச் செயல்படுகிறார்கள் என்பதை எண்ணி மனதுக்குள் வியந்தார் முசுகுந்தர்.

அவையில் நீடித்த அமைதி கலைய நேரமானது. இவ்வமைதி அவ்வளவு நேரம் வாதிட்ட தளபதி கருங்கைவாணனின் கருத்துக்கு எதிரானதாக உருத்திரண்டிருந்தது. எனவே, அதனை உடைக்கவேண்டிய பொறுப்பும் தளபதியையே சார்ந்தது.

“போரிலே பங்கெடுக்க மாட்டேன் என்பதைச் சொல்லத்தான் இங்கு வந்தீர்களா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83e
கருங்கைவாணனின் வினாவிற்குச் சற்றும் இடைவெளியின்றி மையூர்கிழார் விடை சொன்னார், “இல்லை. அதற்கு இவ்வளவு விரிவான கதையை நான் சொல்லவேண்டியதில்லை. என் தந்தை அளித்த வாக்குறுதியை மட்டும் சென்னாலே போதுமே.”

“வேறென்ன சொல்ல வந்தீர்கள்?”

“நீங்கள் சொன்ன கணக்குத் தவறானது என்று சொல்ல வந்தேன்.”

தளபதிக்குப் புரியவில்லை. மற்றவர்களுக்கும் புரியவில்லை. “விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றனர்.

“ஒரு பேரரசுக்கு, மதங்கொண்ட யானையை அடக்க பலநூறு வீரர்களும் பயிற்சிகொண்ட நான்கு யானைகளும் காலமெல்லாம் யானைப் படையில் பணியாற்றிய கட்டுத்தறியின் பொறுப்பாளனும் தேவைப்பட்டுள்ளனர். ஆனால் பறம்பின் மக்களுக்கு அப்படியல்ல, ஒரு பெண்ணும் கையில் ஒரு செடியும் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. அவள் ஒருத்தி நீங்கள் சொன்ன இத்தனை நூறு வீரர்களுக்குச் சமம் என்றால், பறம்பில் இருக்கும் மக்களையும், செடி கொடிகளையும் கணக்கிட்டு நம் பேரரசில் இருக்கும் நிலைப்படை வீரர்களின் எண்ணிக்கையைச் சொல்லுங்கள் பார்ப்போம்?”

மையூர்கிழார் எழுப்பிய வினாவைக்கேட்டு அவையின் நாவு துடிப்படங்கி ஒடுங்கியது.

“மற்ற நாடுகளின் ஆற்றல் அங்குள்ள வீரர்களைப் பொறுத்தது. ஆனால் பறம்பின் ஆற்றல் மனிதர்களை மட்டும் சார்ந்ததல்ல, எனவே வெறும் மனிதர்களைக்கொண்டு படைநடத்திப் போனால், பறம்பு நாட்டின் சிறுகுன்றினைக்கூட கடந்து உள்நுழைய முடியாது” மையூர்கிழாரின் குரல் கணீரென அரங்கு முழுவதும் ஒலித்தது. சிறுசெடிக்கு ஒடுங்கிய மதயானைபோல் அவரின் குரல்கேட்டு ஒடுங்கியது அவை.

பறம்பின்மீது படைதிரட்டிப் போர்புரிவதில் பேரரசரின் மனம் உடன்பாடு கொள்ளாமல் இருந்தது. போரில் ஒருமுறை தோல்வி ஏற்பட்டால், அது அரசின் அச்சாணியையே அசைத்துப் பார்க்கும் என்பதைக் குலசேகர பாண்டியன் நன்கு அறிவார். அதனால்தான் இவ்வுரையாடலை இவ்வளவு தொலைவு வளரவிட்டு அமைதி காத்தார். அவர் எண்ணிய கருத்தே அவையிலும் நிலைநிறுத்தப்பட்ட கணத்தில் சட்டென எழுந்தார். எல்லோரும் பதறி எழுந்தனர்.

“மலரணியும் சடங்கிற்குப் பொழுதாகிவிட்டது” என்று சொல்லியபடி அவை நீங்கினார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83f
பொதியவெற்பன் அவருக்கு முன்பே போய் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வுரையாடலை இந்தத் தன்மையில் விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், வேறு வழியே இல்லை. மனமின்றிப் புறப்பட்டுப் போனான். பொற்சுவையும் அவ்வாறே அங்குவந்து காத்திருந்தாள்.

டங்கு முடிய இரவானது. பேரரசர் தனது பள்ளியறைக்குத் திரும்பும்பொழுது, “தளபதி உடனடியாகக் காணஅனுமதி கேட்கிறார்” என்று பணியாளன் தெரிவித்தான். வரச்சொல்லி அனுமதி கொடுத்தார் பேரரசர்.
நள்ளிரவு வரை அவர்கள் பேசினர். முற்றிலும் புதியதொரு திட்டத்தைத் தளபதி கொண்டு வந்திருந்தார். அது பேரரசருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அதுபற்றி மிக விரிவாக அவர் வினாக்களை எழுப்பினார். அத்திட்டத்தை முழுமையாகக் கருங்கைவாணன் விளக்கினான். இதுவரை ஏற்படாத நம்பிக்கை இப்பொழுது ஏற்பட்டது. இன்றைய நாள் மிகச்சிறந்த நாள் என்று மனதில் எண்ணம் தோன்றிய கணத்தில் அத்திட்டத்துக்கான அனுமதியை வழங்கினார் பேரரசர்.

தேவாங்கைக் கொண்டுவர வழியின்றிப் போய்விடுமோ என்ற தவிப்பு நீங்கிய மகிழ்வோடு தனது பள்ளியறைக்குள் நுழைந்தார் பேரரசர். அதனைவிட பலமடங்கு மகிழ்வோடு புறப்பட்டுப் போனான் கருங்கைவாணன்.
 
- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:59 pm

கூழையன் எவ்வியூருக்குள் அதிகாலையில் வந்துசேர்ந்தான். வழக்கமாகக் காட்டுப்பாதையில் நடந்து வருபவன் இம்முறை குதிரைப்பாதையில் மூன்று வீரர்களோடு வந்திறங்கினான். அதுவே அவன் வந்துள்ள வேலையின் அவசரத்தைச் சொன்னது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83a
“உதியஞ்சேரல் கீழ்மலையில் புதர்விலக்கிப் பாதை உருவாக்கியிருக்கிறான். அதற்கு அடுத்து பறம்புமலைத் தொடங்குகிறது. நம் பகுதியில் நுழையவில்லை. மிகக் கவனமாகத் திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். கடற்கரைப் பகுதியிலிருந்து மூங்கில் நார்க்கொடிகளை எண்ணற்ற வண்டிகளில் கொண்டுவந்து தொடர்ந்து இறக்குகின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை” என்று தென்திசை நிலைமையை விளக்கினான் கூழையன்.

பாரியோடு தேக்கனும், வேட்டூர் பழையனும், முடியனும் அவையில் வீற்றிருந்தனர். எப்பொழுதும் விழிப்போடு இருப்பது கூழையனின் இயல்பு. “உரிய நேரத்தில்தான் விழிப்போடு இயங்கவேண்டும், மற்ற நேரத்தில் இயல்போடு இயங்க வேண்டும் என்று அவனுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. ஆனாலும், கேட்க மறுக்கிறான்” என்று சலித்துக்கொண்டார் வேட்டூர் பழையன்.

ஆனால், தேக்கனுக்கோ நிலைமையை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது. சேரனின் வன்மம் மிக ஆழமானது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அவன் காத்திருக்கிறான். இப்பொழுது குடநாடு அவனுக்கு வாய்ப்பாக வந்தவுடன் செயலிலே இறங்கிவிட்டான் என்று தோன்றியது.

தேக்கன் என்ன சொல்லப்போகிறார் எனக் கூழையன் கவனித்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான். ``கீழ்மலைப் பாதையில் நமது எல்லைக்குள் வராமல் கவனமாக நிறுத்தியிருக் கிறான் என்றால், வேறு ஏதோ பகுதியில் பாதை ஊடுருவிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அவன் கூழையனை நன்கு புரிந்து வைத்திருக்கிறான்” என்றான் பாரி.

பழையன் சொல்லியதைத்தான் பாரி வேறுவிதத்தில் சொல்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

“உதியஞ்சேரல் இம்முறை குடநாட்டைத்தான் முதலிலே உள்ளிறக்கிவிடுவான். நம் மீது கொண்டுள்ள பகையால் நடக்கும் இப்போரில் அவனது முதல் தந்திரம் சகக் கூட்டாளியைக் காவு கொடுப்பது” என்றான் பாரி. 

உதியஞ்சேரல் எப்படிச் சிந்திப்பான் என்பதை நன்கு உணர்ந்தவன் பாரி. அவனது கருத்து முற்றிலும் சரியென்று எல்லோருக்கும் தெரியும். உரையாடலின் இறுதியில் பறம்பு நாட்டின் வடமேற்கு எல்லைப்பகுதிக்குச் செல்ல முடியனுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. ஆனாலும், அனைவரும் வலியுறுத்தியதென்னவோ தேக்கனின் செயலைத்தான். காடறிய இப்பொழுது போகும் முடிவைப் பற்றி மீண்டும் யோசியுங்கள் என்று சொன்னார்கள். கூழையன் மிகக் கடுமையான கோபத்தைத் தேக்கனின் மீது வெளிப்படுத்தினான்.

இறுதியில் தேக்கன் தனது நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்தான். “முழுநிலவுக்கு இன்னும் மூன்று வாரங்கள்  இருக்கின்றன. அதற்குள் பகரியின் ஈரலைக் கொண்டுவர பறம்பின் மக்களுக்கு நீ உத்தரவிடு. யாராவது கொண்டுவந்துவிட்டால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன்” என்றான்.

தேக்கன் தனது நிலையில் இருந்து இறங்கிவந்தது நல்லது; ஆனால், மூன்று வாரத்துக்குள் பகரியை வேட்டையாடுவதெல்லாம் நடக்காத செயல். ஆனால் வழக்கத்தை மீற முடியாததால், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர்.

மறுநாள் கூழையன் தென்திசைக்கும், முடியன் வடமேற்குத் திசைக்கும் புறப்பட்டனர். பறம்புநாடு முழுவதும் பகரி வேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள் எல்லாம் கபிலருக்குப் பின்னர்தான் தெரியவந்தன. பகரிதான் பறவைகளின் தலைவன். அதன் வேகத்தையும் நுட்பத்தையும் வேறெந்தப் பறவைக்கும் ஈடுசொல்ல முடியாது. அது முட்டை போட்ட அன்றே குஞ்சு பொரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. பிற பறவைகள் பல நாட்கள் அடைகாத்து உடற்சூட்டை முட்டைக்கு இறக்கி குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் பகரி அப்படியன்று, தனது உடலின் வழி பெருவெப்பத்தைக் கடத்தக்கூடியது. பகரியின் ஈரலைச் சாப்பிட்ட மனிதனை எந்த விலங்கு தீண்டினாலும் அதன் நஞ்சு அவனை ஒன்றும் செய்யாது. சில நேரம் தீண்டிய விலங்கு பாதிப்புக்கு உள்ளாகும்.

பகரியைக் கண்ணிற்பார்ப்பதும் அதனை அடித்து வேட்டையாடுவதும் எளிதான செயலல்ல. பகரியின் ஈரல் உண்டவனே எவ்வியூரின் தேக்கனாகிறான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83b
கொடிய பாம்புகளாலும், பூச்சிகளாலும், செடிகொடிகளின் சுணைகளாலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத மனிதனே காடறியும் ஆசானாகச் செயல்பட முடியும். அவனை நம்பியே பறம்பின் பிள்ளைகளைக் காட்டுக்குள் அனுப்ப முடியும். இல்லையென்றால், இவ்வடர் காட்டில் என்ன நடக்குமென அனுமானிக்கவே முடியாது. பகரியைத் தேடி பறம்பின் கண்கள் வானமெங்கும் பறந்துகொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்தன. அடர்மழை கொட்டித் தீர்க்க, பகற்பொழுது மிகக்குறுகியதாகவே இருந்தது. அதில் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83cபகரியைப் போன்றதொரு வீறுகொண்ட பறவையைப் பார்ப்பதே மிகவரிது. பின் எங்கே வேட்டையாடுவது? பறம்பு மலையின் எல்லா முகடுகளிலும் மக்கள் ஏறி இறங்கினர். தன்னியல்பில் எப்பொழுதோ கண்ணிற்படும் ஒரு பறவையை, தனித்து வேட்டையாடி பிடிக்குமளவிற்கு மனிதரின் கைக்குள் இயற்கை சுருங்கி விடவில்லை.

பறம்பின் மக்கள் அச்சிறு பறவையிடம் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் கடைசிப்பகலும் முடிவுக்கு வந்தது. இன்றிரவு முழுநிலவு நாள். வேட்டூர் பழையன், செய்திக்காக முன்னிரவுவரை காத்திருந்தான். எங்கிருந்தும் செய்தி வரவில்லை. பகரி அகப்படவில்லை என்பது முடிவானது. இனித் தேக்கன் காடறியப் புறப்படுதலைத் தடுக்க முடியாது எனத் தெரிந்ததும் பழையன் வேட்டுவன்பாறை நோக்கி புறப்பட ஆயத்தமானான்.

முன்னிரவில் தேக்கனைக் கண்டு பேசினான். “பிள்ளைகளை நல்லபடியாகப் பயிற்றுவித்துக் கொண்டு வா. மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அவனோடு இளம் வீரர்களும் உடன் வந்தனர். அவர்கள் அடர்வனம் நோக்கி நடந்தனர். நள்ளிரவுக்குள் புலிவால் குகைக்குப் போய்விடலாம். அங்கு படுத்தெழுந்து பயணத்தைத் தொடரலாம் என்பது திட்டம்.

பெருகியோடும் வைகையின் இருளகற்றி சூரியக் கதிர்கள் மதுரையை எட்டிப்பார்க்கத் தொடங்கின. இருமாத காலம் விழாக்களில் மூழ்கிக்கிடந்த மதுரை, இன்று அதன் உச்சநிகழ்வைக்  காணத்தயாராகிக்கொண்டிருந்தது. மணமாலை சூடும் இந்நாளுக்காகத் தான் அவ்வளவு பெரும் கொண்டாட்டங்களும் நடந்து முடிந்துள்ளன.

கருங்கைவாணனின் திட்டம் துல்லியமாக நடைமுறையானது. அவனுக்கு வந்துள்ள தகவல்கள் மிக நல்ல செய்தியைச் சொல்லு கின்றன. இன்று பாண்டியப் பேரரசின் திருநாள். இந்நன்னாளில் பேரரசரின் முன் சொல்லப்படும் முதற்செய்தியாக இது இருக்க வேண்டும் என்று அதிகாலையே பேரரசரைக் காண வந்துவிட்டான் தளபதி கருங்கைவாணன்.

பள்ளியறையைவிட்டு எழுந்து வந்த பேரரசரை வணங்கிச் சொன்னான், “நமக்கு வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நம்மால் அனுப்பப்பட்டவர்கள், பச்சைமலைக்குள் வெற்றிகரமாக நுழைந்துவிட்டனர். இலக்கை அடையும் காலம் நெருங்கிவிட்டது.”

அவனைக் கட்டித்தழுவினார் பேரரசர். “மணநாளின் மகிழ்வை விஞ்சும் ஆற்றல்கொண்ட செய்தியை அளித்தாய்” எனப் பாராட்டி மகிழ்ந்தார்.

“பொதியவெற்பனுக்கும் தெரிவித்துவிடு. இந்நாளின் சிறப்பை முன்பே நமக்குச் சொன்ன திசைவேழருக்கும் சொல். சூல்கடல்முதுவனுக்கும் சொல். மணவிழாவின் மகிழ்வு எல்லையற்றதாய்ப் பெருகட்டும்.”

வணங்கி விடைபெற்றான் கருங்கைவாணன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83d
பள்ளியறைத் திரைச்சீலையை விலக்கி வெளியேறி வந்த பொற்சுவை, நீராழி அரங்கிற்குள் நுழைந்தாள்.  நீள்வட்டப் பளிங்கு நீர்க்குடுவை அவளுக்காகக் காத்திருந்தது. அதில் நாற்பத்தி ரெண்டு நறுமணப்பொருட்கள் கலக்கப்பட்ட மணநீர் நிரப்பப்பட்டிருந்தது.

பொற்சுவை அருகில் வந்தாள். சுற்றிலும் சேவைப்பெண்கள் நின்றிருந்தனர். பக்கவாட்டில் அமைந்திருந்த படிமேல் ஏறி வலதுகால் நீட்டி பெருவிரல் கொண்டு நீரினை அசைத்தாள். சிற்றலைகள் விளிம்பிற்போய் முட்டித்திரும்பின. அந்நீரலைகளைப் பார்த்தபடி கால் நுழைத்து கழுத்துவரை உள்ளிறங்கினாள்.

நீர் மெல்லிய சூடு கொண்டிருந்தது. அதிகாலைக் குளிருக்கு இதம் தர இதைவிட வேறென்ன இருக்கிறது. ஆனால், உடல்தொடும் எதுவும் சுகம் தருவதாக மாறிவிடுவதில்லை. சிந்தித்தபடியே மேலாடையைக் கழற்றி இடக்கையில் நீட்டினாள். சேவைப்பெண் அதனைப் பணிந்து பெற்றுக்கொண்டாள்.

மணநீரின் வாசனை எங்கும் பரவி மூச்சடைக்கச் செய்தது. நறுமணக்குளியல் பழகிய ஒன்றுதான். ஆனால், யவன நறுமணங்கள் மூக்கிற்குச் சற்றே கடுமையூட்டக்கூடியவை. அவற்றை அதிகமாக ஊற்றியிருக் கிறார்கள் எனத் தோன்றியது. இந்தக் கலவையை ஆண் உருவாக்கியிருக்க வேண்டும். பெண்ணின் கைப்பக்குவம் இப்படி இருக்காது. 

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83eஆனால், எல்லா ஆண்களும் இதுபோல் கடுமைகொண்ட கலவையை உருவாக்கி விடுவதில்லை. எவ்வித நறுமணப் பொருட்களும் இன்றி அவனோடு சேர்ந்து சுனை நீராடியபொழுது எழுந்த மணமும் இன்பமும் வேறொன்றிலும் ஏற்பட்ட தில்லை. கலவை, நறுமணப் பொருளோடு மட்டும் சம்பந்தப் பட்டதல்ல. ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை. விரல்தான் உடலின் கண்களைத் திறக்க வல்லது. பாலாடையின் மீது ஊர்ந்துபோகும் சிற்றெறும்பின் கால்தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும். வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியேதான் நினைவின் ஊற்று கசிந்துகொண்டே இருக்கும். கண்ணுக்குத் தெரியாமல் நினைவிற் படரும் அந்நறுமணத்துக்கு ஈடுசொல்ல என்ன இருக்கிறது?

`சுனைநீரின் குளுமையை நீ அறிய வேண்டும் என்று சொல்லித்தான் அவன் அழைத்துச் சென்றான். நீர் மேனியெங்கும் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. நீரோடும் பாறை சுடும் என்று சொன்னால், யார் நம்புவார்கள். நீர் தழுவும் எனது மேனியின் சூட்டை நான் உணர்ந்தபொழுதுதான் அந்த உண்மை உரைத்தது. சிறு மணலை அள்ளி எனது கையிற்கொடுத்து ‘பூசிக்கொள்’ என்றான். நான் மேலெல்லாம் பூசினேன். மென்மலர் மேனியில் சிறுவுராய்வுகளையும் கீறலையும் மணற்துகள்கள் ஏற்படுத்தின. மீண்டும் நீரில் மிதந்தேன். சிற்றெறும்பு கடித்ததைப் போன்ற அக்காயங்களை குளிர்நீருக்குள் உணர்ந்துகொண்டிருந்தபோது அவன் நீருள் இறங்கினான்.

மாமரத்து அடிவாரமிருக்கும் செவ்வெறும்பு கடிப்பதைப்போல உணரத் தொடங்கினேன். கடிகாயங்கள் காமத்துக்குள் மறைந்து கொண்டிருந்தபொழுதே புதிதாகத் தோன்றிக்கொண்டும் இருந்தன. சீற்றம்கொண்டு தாக்கப்படுதலின் சுவையைக் காயங்களே கற்றுக்கொடுத்தன.

நீருக்குள் நுழையும் கைகள் எவ்வளவு இழுத்தணைத்தாலும் வலிமை கூடாது. நீர் தன்னுள் விளையாடுபவர்களோடு தானும் சேர்ந்து விளையாடும். அதற்கான இடத்தைத் தந்தே ஆகவேண்டும். நீர்புகும் முழு இடத்திலும் விளையாட மனிதனால் ஒருபோதும் இயலாது.  நீருலகின் நியதி வேறு.  நிலத்தில் காதல்கொள்கையில் காற்று விலகிக்கொடுக்கும். நீரில் காதல்கொள்கையில் அது விலகிக் கொடுப்பதில்லை. நம்முள் நுழையவே பார்க்கும். சக ஆட்டக்காரனைப்போல அதுவும் பங்கெடுக்கும். நமது பொறாமையை மெல்லத் தூண்டும். நமது இயலாமையைக் காட்டிக்கொடுக்கும். 

பஞ்சுப்படுக்கையே காதலுக்கு சிறந்ததென நினைப்பவர்கள் நீர்ப்படுக்கையை அறியாதவர்களே. நீர் மட்டுமே உடலோடு உடல் கிடத்த, சாய்ந்த நிலையைக் கோருவதில்லை. அது இயற்கை மனிதனுக்கு வழங்கிய அதி சிறந்த காதற்களம். காதலில் மூழ்கித்திளைத்த மனம் தன் துணையின்றி நீர் இறங்கும் துணிவைப் பெறுவதில்லை.’

இச்சிந்தனை உருவான கணத்தில் நறுமணத்தொட்டியில் இருந்து மேலேறினாள் பொற்சுவை. தோழிகள் பதறினர். ``ஒரு பொழுதாவது மணநீருக்குள் இருக்க வேண்டும் இளவரசி” என்று வேண்டினர். எச்சொல்லும் உள்நுழைய முடியாத இறுக்கம்கொண்டிருந்தாள் அவள்.

`நாற்பத்திரெண்டு நறுமணங்களையும் விஞ்சிய வாசனை என்னுள் உண்டு. அதை நுகரக்கூடியவனை நுகர்ந்தவள் நான்’ சொற்களை மனம் உச்சரிக்கும்பொழுது உள்ளுக்குள் இருந்து வாசனை மேலெழுந்து வந்தது. மேலேறும் வாசனை நினைவுக்காட்சிகளைக் கொட்டிக்க விழ்த்தது.

ஆடை அலங்காரத்துக்கும் மலர் அலங்காரத்துக்கும் எல்லோரும் தயாராக இருந்தனர். ஈரம் உலராத பொற்சுவை, இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் சேவைப்பெண்கள் அருகில் வந்தனர்.

கைகளில் ஆடைகளை வைத்துக்கொண்டு அவளின் உடல் துடைக்க ஆயத்தமாக இருந்தனர். அவள் நிமிரவேயில்லை. அவளது அனுமதியின்றி யாரும் தொட்டுவிடமுடியாது. சேவைப்பெண்கள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர்.

பொற்சுவையின் எண்ணம் நீர்நிலைவிட்டு அகலாமல் இருந்தது. சுனைநீரிற் குளித்து மேலேறியவள் சொன்னாள். ``ஈரத்தை உடல்வெப்பத்தால் மட்டுமே உலரவைத்து விடுகிறது உனது  நெருக்கம்.”

உடல் உலர்ந்துவிடும். ஆனால், இதழ்கள் அப்படியல்ல; நெருக்கத்தில்தான் சுரக்கத் தொடங்கும்.

இதழ் சுரந்துகொண்டிருந்தபொழுது உடல் உலர்த்துகொண்டிருந்தது. நீருள் மூழ்குதல் மீண்டும் தொடங்கியது. நெடுநேரம் கழித்து அவன் உலர்ந்து வீழ்ந்தான். ஆனால், உடலெங்கும் ஈரம் பூத்திருந்தது.
“உள்ளும் புறமுமாக நீரைச் சுழலவிட்டு விளையாடுதலே நீர்விளையாட்டாகிறது. ஆனால், இது தெரியாத பலரும் நீரில் விளையாடுதலையே நீர்விளையாட்டு என்று நினைத்துக் கொள்கின்றனர்” என்று அவன் சொன்னபொழுது, அவள் சொன்னாள். ``இப்பொழுதாவது நான் ஆடைகொண்டு துடைத்து உடலை உலர வைக்கிறேன். நீ அருகில் வராதே.”

அவள் தலைநிமிர்ந்தபொழுது கண்பார்வையைப் புரிந்து சேவைப்பெண்கள் அருகில் வந்து மேனி துடைத்தனர். கூந்தல் உலர்த்த, நறுமணப் புகை தூவ, மேனி துடைக்கவென ஆளுக்கொன்றாய்ப் பணியாற்றினர். வணிகர்குல அலங்காரம் முடிவுக்கு வந்தது. பாண்டியர்குல வழக்கம் தொடங்கியது.

உச்சந்தலையில் மஞ்சள் மின்னும் சூடிகையை அணிவித்தாள் ஒருத்தி. அதனைத் தொடர்ந்து சூடாமணியும் கோதைச்சரமும் சூட்டப்பட்டன. கழுத்தில் கண்டிகையும், மணியாரமும் அணிவித்தனர். அவற்றின்கீழ் தாழ்வடங்கள் நூலளவுத் தொடங்கி விரல் அளவு வரை கனம்கொண்டு இறங்கின. எவ்வொளியையும் உள்வாங்கி பலவண்ணமாய் வெளி கக்கும் செவிப்பூ சூடினர் காதுகளுக்கு. ஆடகமும், வால்வளையும், மகரவாய்க்கட்டும் முன்கை மணிக்கட்டில் தொடங்கி சுற்றிச்சுற்றி மேலேறிக் கொண்டிருந்தன. விரல்களில் மணியாழியும் இடையில் எண்வகை வடமும் சூட்டினர்.

அவளது கண்கள் சுகமதியைத் தேடின. அலங்காரம் நடக்கட்டும் என்று விலகி நின்ற அவள், பொற்சுவையின் கண்கள் தேடுவதைக் கண்டாள்.

அலங்காரப் பணியாளர்களை விலக்கி அருகில் வந்த சுகமதியின் காதோடு சொன்னாள். “எனது உடல் திருமணத்திற்குத் தயாராகிவிட்டது சுகமதி.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83f
தேக்கன் பதினோரு சிறுவர்களோடு புறப்படத் தயாரானான். சிறுவர்களைக் காடறிய அனுப்பும் நாள் எவ்வியூரின் உணர்ச்சிப் பெருநாள். தன் மகனைக் காட்டுக்குக் கொடுத்தனுப்பும் பெண்களின் ஆவேசம் அடங்கா எழுச்சி கொள்ளும். குலவை யொலியால் காடு கிடுகிடுக்கும். பறம்பின் தலைவன் குருதிப்பலி ஈந்து சிறுவர்களை அனுப்பினான். பாரியின் மனை நீங்கி குலநாகினிகளின் முன்வந்து அமர்ந்தனர் சிறுவர்கள். 

உடல்வலுவிலும் வயதிலும் மூத்தவனாக கீதானி முன்னிருந்தான். அவனை அடுத்து குறுங்கட்டி, முடிநாகன், அவுதி, மடுவன், இளமன் என வரிசையாக இருந்தனர். வயதில் மிகச்சிறியவன் அலவன்தான்.

ஆனாலும், அவனின் வேகம் இணைசொல்ல முடியாது. எல்லோருக்கும் குலநாகினி பச்சிலைச்சாறு கொடுத்தாள். குடித்து முடித்தனர். அதன்பின் கீதானியை உள்தாழ் வாரத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

குலநாகினி சிறுகுடுவை ஒன்றை எடுத்துவந்தாள். அதன் உள்ளே மிகக்கெட்டியான வடிவில் ஏதோ இருந்தது. மலைவேம்பின் இலையைப் பறித்துவைத்திருந்தனர். அந்த இலையைக் குடுவைக்குள் நுழைத்தாள். அதன் சாறு இலையில் படிய அவ்விலையைக் கையில் எடுத்தாள். கீதானியை நாக்கை நீட்டச்சொன்னாள். அவன் `ஆ’ வென வாய் பிளந்து நாக்கை நீட்டினான். “போதாது” என்று சொல்லி தலையை மறுத்து ஆட்டினாள். இன்னும் வாய் பிளந்து நாக்கை நீட்டினான். மீண்டும் மறுத்து தலையை ஆட்டினாள். இன்னும் முயற்சித்தான். வாயோரத்து தசை கிழிந்துவிடும்போல் இருந்தது. அடித்தாடை வலித்தது.
“இன்னும் நாக்கை நீட்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த இலையைச் சாறோடு எடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அடிநாக்கில் வைத்து இருகையாலும் வாயை இழுத்து மூடிப் பிடித்துக்கொண்டாள். மற்ற நாகினிகள் அவனது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் பல்லைக்கடித்து, துடித்துத் துள்ளினான். ஏதேதோ செய்து பார்த்தான். சிறு சத்தங்கூட வெளிவராத அளவிற்கு வாய்த்தாடையை அடைத்து அமுக்கி இருந்தாள் குலநாகினி. தாழ்வாரத்தின் வெளியில் நின்றிருந்த மற்ற சிறுவர்களுக்கு உள்ளே ஒருவன் துடியாய்த் துடிப்பது சிறிதும் தெரியாது.

இலையோடு உள்ளே வைக்கப்பட்ட சாறு என்னவென்று குலநாகினிகள் வெளியே சொல்வதில்லை. செடிகொடிகளில் விளையும் மொத்தக்கசப்பும் கலக்கப்பட்டச் சாறு என்று சிலர் கருதுகின்றனர், பதப்படுத்தப்பட்ட பாம்பின் நஞ்சு என்று சிலர் சொல்லுகின்றனர். நாகப்பச்சை வேலியின் நச்சுக்கொடிகள் கக்கும் பிசின் என்று சொல்லுகின்றனர். எது உண்மை என்று தெரியாது. இந்தச் சாறு கசிந்து, உணவுக்குழல் முழுவதும் இறங்கி முடியும்வரை அவன் கைகளின் பிடி தளர்த்தப்படுவதில்லை.

நாவின் சுவை நரம்புகள் முழுவதும் நஞ்சுக்கசப்பின் சாறு உள்ளிறங்கிய பின்னே அவன் வாய்திறந்து மூச்சுவிட அனுமதிக்கப் படுகிறான். நரம்பில் தேங்கிய கசப்பு நீங்க மாதங்கள் ஆகும். மேல்தோலில் விழும் தழும்பு மறையாததைப்போல அடிநாக்கில் நிலைகொண்ட கசப்பு எளிதில் மறையாது. அவனது நாவு சுவையுணவு தேட இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

அறுபதாங்கோழிக்கறி முதல் அத்திமது வரை அனைத்தின் சுவையும் துளியாவது நாக்கில்பட்டு வளர்த்த இவர்களின் நினைவில் இருந்தே சுவை அகலும். காடறிந்து வீடுவந்த பின்னும் சில ஆண்டுகள் ஆகும் இக்கசப்பு மறைய.

இக்கசப்பின் வாடை காட்டுப்பயணத்துக்கு மிக முக்கியமானது. காட்டின் எல்லா விலங்குகளும் இவ்வாடையை அறியும்.  சிறுவர்கள் பேசியபடி நடந்து செல்ல இவ்வாடையை நுகர்ந்து அவை விலகிச்செல்கின்றன. விலங்குகளை விலக்க இக்கசப்பின் மனமே மொழியாகிறது.

பதினோறு பேரும் மலைவேம்பின் இலையை  விழுங்கி, துடித்து அடங்கினர். அதன்பின் அவர்கள் புறப்பட்டனர். யாரிடமும் பேச அவர்கள் ஆயத்தமாயில்லை. வாய்திறந்து பேசப்பேச கசப்பு உள்ளிறங்கும். இக்கசப்புக்குப் பழகி அவர்கள் இயல்பாய்ப் பேசத்தொடங்க சில வாரங்களோ மாதங்களோ ஆகலாம். அதுவரை மிகமிகக் குறைவாகவே அவர்கள் பேசுவர். பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குடம் வேம்பின் சாற்றைக் குடித்ததற்குச் சமம்.

அடித்தொண்டை முழுவதும் தேங்கிய கசப்பு நிற்க, அதன்பிறகு யாரிடமும் பேசாமல் எவ்வியூர் விட்டு வெளியேறினர். சிலர் வில் அம்பு வைத்திருந்தனர். சிலர் ஈட்டியை ஏந்திப்பிடித்திருந்தனர். சிலரிடம் கவண்கல் இருந்தது. அவரவர்களுக்கான ஆயுதத்தை எடுத்துவந்தனர். ஆனால், இதுவெல்லாம் தொடக்க நிலைக்குத்தான். அவர்கள் பயன்படுத்த வேண்டிய வலிமை மிகுந்த ஆயுதங்களை இனி அவர்களே காட்டில் உருவாக்கிக்கொள்வார்கள். தங்களுக்கான தனித்துவம்மிக்க ஆயுதம் எதுவென்று அவர்கள் கண்டறியும் வரை இவ்வாயுதம் அவர்களின் கையில் இருக்கும்.

தேக்கன் வழக்கம்போல தனக்கான ஆயுதத்தை வீட்டில் இருந்து எடுத்துவந்தான். அது பன்றியின் கடவாய்க்கொம்பு. இக்காட்டில் மிக வலிமை வாய்ந்த பொருள் எதுவெனக்கேட்டால், அது பன்றியின் கடவாக்கொம்புதான். அதனை உடைக்கவோ, நொறுக்கவோ எதனாலும் முடியாது. அதன் அடிப்பகுதிக்கு என்ன வலிமை இருக்கிறதோ, அதே வலிமை கூர்மை மிகுந்த முனைப்பகுதிக்கும் உண்டு. எனவே, முனையின் கூர்மை ஒருபோதும் சிதைவுறாது.

தேக்கன் இருகொம்புகளின் அடிப்பகுதியில் துளையிட்டு அறுந்துபடாத நார்கொண்டு இரண்டு கையின் மணிக்கட்டோடு சேர்த்துக் கட்டியிருந்தான். காடறிதல் பயணக்காலம் முழுமைக்கும் அவன் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அது மட்டுந்தான்.

மணிக்கட்டில் கட்டி உள்ளங்கைக்குள் மடக்கிக்கொண்டால், இப்படி ஓர் ஆயுதம் இருப்பதே வெளியில் தெரியாது. இதுகொண்டு எந்த மரத்தின் அடிப்பகுதியையும் குத்தி இழுத்தால், நரம்புச் செதில்கள் பிய்ந்து நொறுங்கும். இறுகிய மரத்தின் தூரையே பிய்த்து எடுக்குமென்றால், விலங்குகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

காடறிந்து, சிறந்த போர்வீரனாக விளங்கி, தனது திறமையால் பல வலிமை மிகுந்த பணிகளைச் செய்து இறுதியில் பகரியை வேட்டையாடி ஈரலைத் தின்றவன்தான் தேக்கன் ஆகிறான். எனவே அவன் தனது உடலசைவையோ ஆற்றலையோ துளியும் வீணாகச் செலவிட மாட்டான். எந்தவொரு விலங்கின் தாக்குதலையும் சமாளிக்க மிகச் சில அடிகள் போதும். குத்திக்கொன்று வீழ்த்துவதெல்லாம் வீரர்களின் தொடக்ககால வாழ்வில் நிகழ்த்தும் செயல். ஆனால், வாழ்வு முழுவதும் காடு பார்த்து, பட்டறிவின் உச்சத்தில் நிற்கும் தேக்கனுக்குத் தேவை மிகச்சிறிய சில அசைவுகள்தான். எந்த விலங்கின் நரம்பை எங்கு தட்டினால் போதும் என்று தெரியும். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83g
கைப்பிடி அளவு கோரைப்புற்களின் முனையில் முடிச்சிட்டு, அதனைக்கொண்டு அடித்தால், யானை நகரமுடியாமல் உட்காரும். அவன் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மனிதன் எல்லாவற்றையும் நரம்புகள்கொண்டு அறிந்தவனாகிறான். எனவே நரம்புகளின் இயங்குவிசை அவனுக்குப் பிடிபட்டுவிடுகிறது. விலங்குகளின் வலிமை, ஆற்றல் மீதான கருத்தெல்லாம் நினைவில் இருந்தே உதிர்ந்துவிடுகிறது.
காடறியும் நான்காவது பயணத்தை மேற்கொள்ளும் தேக்கனின் முதல்நாள் நினைவில் கடந்தகாலம் எதுவும் வந்து செல்லவில்லை. வழக்கம்போல் இன்றைய நாளின் நிகழ்வு மட்டுமே அவன் மனதில் ஓடியது. சாமப்பூவின் வாசனை வந்துசென்றது.

முன்னால் சென்றவனைத் தொடர்ந்து பதினோறு பேரும் வந்துகொண்டிருந்தனர். யாரும் வாயைத் திறந்து எதுவும் கேட்கவில்லை, வாயைத் திறந்தாலே காற்று உள்ளே போய் ஒருகுடம் நஞ்சை அடிவயிற்றில் கொட்டிக்கவிழ்ப்பதுபோல் இருக்கிறது. எனவே, பேச்சின்றிப் பின்தொடர்ந்தனர் அனைவரும். நீண்டநேரத்துக்குப்பின் சிறியவன் அலவன் கேட்டான், ``எதை நோக்கிப் போகிறோம்?”

நடந்தபடியே தேக்கன் சொன்னான் ``கொற்றவையை வழிபட, கூத்துக்களம் நோக்கிச் செல்கிறோம்.”

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 1:18 pm

சப்பு... கசப்பு... கசப்பு. நாக்கின் கீழ் நஞ்சுக் கசப்பு உமிழ்நீராக ஊறுவதைப்போல் கொடுமை எதுவுமில்லை. எனவே, நாக்கை அசைத்துப் பேச யாரும் ஆயத்தமாக இல்லை. தீராக்கசப்பு அடிநாக்கிலிருந்து ஊறிப்பெருகி தலையுச்சியில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் பிதுங்கின. மூச்சிழுத்து மொத்தக் குடலையும் காறி வெளியே துப்பவேண்டும்போல் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85a
ஒவ்வொருவனும் குரல்வளையை முறுக்கித் திருகிக்கொண்டிருந்தான். உடல் மட்டும், தேக்கனின் பின்னால் சென்றுகொண்டிருந்தது. மற்றபடி எண்ணம் முழுவதும் தொண்டைக்குள் கட்டிநிற்கும் கசப்பில்தான் நிலைகொண்டிருந்தது.

தேக்கனின் மனமோ, கடைசியாக நடந்துவரும் சிறுவன் அலவனிடமிருந்தது. `இவ்வளவு கசப்பையும் மீறி, ‘எங்கு போகிறோம்?’ என்று எப்படி அவன் கேட்டான்? நான் சிறுவனாகக் காடறியப் போகும்போது கொடுத்த கசப்பை விழுங்கி இயல்பாகப் பேச இரு வாரங்கள் ஆகின. ஆனால், இவனால் எப்படி உடனடியாகப் பேச முடிந்தது?’ என எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த வினாவைக் கேட்டான் அலவன். “கொற்றவையை வணங்கிவிட்டுத்தான் காடறியச் செல்ல வேண்டுமா?”

தேக்கன் கடும் அதிர்ச்சிக்குள்ளானான். கை அசைத்து அவனை முன்னால் வரச் சொன்னான். அலவன் முன்னேறி தேக்கன் அருகில் வந்தான். அவன் தோளில் கைபோட்டபடி நடந்தான் தேக்கன். ‘ஏன் விடை சொல்லாமல் வருகிறார்?’ என்று அலவனுக்குத் தோன்றியது. தேக்கனின் மனம் சொல்லுக்காகத் திண்டாடியது. எப்படிக் கேட்பது எனச் சிந்தித்தபடியே கேட்டான், “கசப்பு உனக்குப் போதவில்லையா?”

“பெருங்கசப்பாகத்தான் இருந்தது. அப்பப்பா… இவ்வளவு கசப்பா கொடுப்பார்கள்?” என்றான் சிறுவனுக்கே உரிய வேகத்தோடு.

தேக்கன் உறைந்து நின்றான். எவ்வளவு பெருஞ்சொல்லை மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.

தேக்கன் நின்றவுடன் மற்றவர்களும் அப்படியே நின்றனர். பற்களை நறநறவென இறுகக் கடித்து, எச்சிலைத் துப்ப முடியாமல், துப்பினால் மறுபடியும் ஊறுகிறது. அதன் காட்டம் இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் மற்றவர்கள் எல்லாம் விழித்து நிற்க, அலவன் மட்டும் பேசியபடி இருந்தான்.

தேக்கன், அவனின் முகத்தைப் பார்த்தான். எந்தவிதமான கடுமையும் இன்றி இயல்பாக இருந்தது. “நாக்கை நீட்டு” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85b
அலவன் நாக்கை நீட்டினான். அடிநாக்கில் ஒட்டியிருந்தது மலைவேம்பின் இலை. அதன் பச்சை நிறம் மாறி முழுநீலம் கொண்டிருந்தது. அதன் நுனியைப் பிடித்து வெளியே எடுத்தான். நீண்ட நேரமாக உற்றுப்பார்த்தான். இலையின் கசப்பு அலவனுக்குள் இறங்குவதற்கு மாறாக, அவன் நஞ்சு இலையில் ஏறியிருக்கிறது.

திகைப்பு நீங்கி அவன் கண்களை உற்றுப்பார்த்தான் தேக்கன். நீண்ட நேரம் கழித்து உள்ளுக்குள் இருந்த நீல வளையம் பூத்து அடங்கியது. அவனின் பாட்டன் நாகக்குடியைச் சார்ந்தவன் என்ற நினைவு அப்போதுதான் வந்தது.

தேக்கன், மீண்டும் திரும்பி நடக்கத் தொடங்கினான். இப்போது அவனின் கை அலவனின் தோளில் இல்லாமல், தலையின் மேல் இருந்தது. அவனின் உச்சந்தலையை விரல்கள் கோதியபடி மிக இணக்கமாகப் பிடித்திருந்தன. ‘பகரியின் ஈரல் தின்றே நஞ்சை வெல்லும் ஆற்றல் பெறுகிறோம். ஆனால், பிறப்பிலே அந்த ஆற்றலோடு இருக்கும் வீரர்களைப் பற்றி முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ஆதியில் நாகக்குடியினர் பறம்பில் வந்து கலந்தபோது ஐந்து குடும்பங்களாக மட்டுமே இருந்தனர். ஆனால், இன்று பறம்புநாட்டின் பல ஊர்களில் கலந்து, சிம்புவெடித்துப் பரவியுள்ளனர். அவர்களின் ஆதி ஆற்றலை முழுமையாகக்கொண்டுள்ள மனிதன் பிறப்பது மிக அரிதுதான். அந்த ஆற்றல் கொண்டவனை இப்போது நான் காடறிய அழைத்துச் செல்கிறேன். காடறியப் புறப்படும்போது மனம் ஆசானாகத் தன்னை உணர்ந்து கொள்ளும். அதன்பிறகு, அது மகிழ்வை உணர்வதில்லை. கவனிப்புகளும் கண்டிப்புகளும் மட்டுமே அதன் பணிகளாக இருக்கும். ஆனால், `இம்முறை காடறியும் முதல் நாள் ஆசானாக உணர்ந்த அன்றே மனம் மகிழ்வை உணரத் தொடங்கியுள்ளது’ என்று தேக்கன் நினைத்துக் கொண்டிருக்கையில் அலவன் கேட்டான். “என் கேள்விக்கு இன்னும் விடை சொல்லவில்லை.”
``எந்தக் கேள்விக்கு?’’

“கொற்றவையை வணங்கிவிட்டுத்தான் காடறியப் போக வேண்டுமா?”

“ஆம்.”

“ஏன்?”

“காட்டில் நாம் செல்கையில் விலங்குகள் நம் வாசனையை மோந்து ஒதுங்கிச் சென்றுவிடுகின்றன. சில விலங்குகள் நாம் எழுப்பும் சிற்றோசையில் விலகிவிடுகின்றன. ஆனால், விலகாத இயல்புடைய விலங்குகள் உண்டு.”

“எந்தெந்த விலங்குகள்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85c
``குறிப்பிட்ட விலங்குகள் அல்ல, எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட பருவத்தில் அப்படிச் செய்கின்றன. ஈன்ற  விலங்கு  தம்  இளம்குட்டியோடு போய்க்கொண்டிருக்கையில் அந்த வழியில் நாம் சென்றால், வாசனையைக் கண்டோ, ஓசையைக் கேட்டோ விலகாது. தாய்மையின் ஆவேசம்கொண்டிருக்கும். மிக வேகமாக நம்மைத் தாக்க வரும். இயல்பான காலத்தில் இருக்கும் அதன் ஆற்றல், அந்தக் காலத்தில் பலமடங்கு அதிகரித்திருக்கும். நம்மால் கணிக்கவே முடியாத தாக்குதலாக அது இருக்கும். நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டியது ஈன்ற விலங்கிடம்தான்” என்று சொன்ன தேக்கன், “அதற்காகத்தான் தாய் தெய்வமான கொற்றவையை வணங்குகிறோம்” என்றான்.

பேசியபடியே வந்தனர். எவ்வியூரைவிட்டு மிகத்தள்ளி நடுக்காட்டில் இருக்கும் கொற்றவையின் கூத்துக்களம் நோக்கிப் போனார்கள். அங்கு உள்ள காவல் வீரர்கள் பகரி வேட்டைக்குப் போயிருந்ததால், இன்னும் குடில் திரும்பவில்லை. தேக்கன், மாணவர்களோடு வந்துசேர்ந்தான். கூத்துக்களம், புல் விளைந்து கிடந்தது. பறவைகளின் ஒலி எங்கும் கேட்டது. மெல்லிதாக எதிரொலித்தது தேவவாக்கு விலங்கின் ஒலி.
மர அடிவாரத்தில் இருந்த சிறுமேட்டில் கொண்டுவந்த விலங்குக் கறியையும் உணவு வகைகளையும் இறக்கிவைத்தான்.

“தாய் தெய்வ வழிபாடுதான் எல்லாவற்றிலும் மூத்தது. கொற்றவை ஈன்ற பிள்ளைதானே முருகன். எனவே, ஆதிகாலம் தொட்டு இங்கு வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. வீறுகொண்ட தாய் இவள். நம் மக்களைக் காக்க எந்தவிதப் போரிலும் நமக்கு வெற்றியைத் தருபவள். `போர் தெய்வம்’ எனப் போற்றப்படுபவள்” என்று சொல்லிக்கொண்டே பொருள்களைப் படையலிடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான் தேக்கன்.
மாணவர்கள், கசப்பைப் போக்க வழியில்லாமல் திணறிக்கொண்டிருந்தனர். அலவன் மட்டும் தேக்கன் சொல்லும் வேலைகளை இயல்பாகச் செய்துகொண்டி ருந்தான். பறித்துவந்த பழத்தைப், பெருவிரலால் அமுக்கி, கண் அமைத்தான் தேக்கன். ``நாம் கண் மூடி வழிபடும்போது நமக்காகப் பார்த்துக்கொண்டிருப்பவை அவைதான். எனவே, வழிபடும் முன் பழங்களுக்குக் கண் திறக்க வேண்டும்” என்று சொல்லியபடி கண் திறந்தான்.

``நாம் ஏன் கண் மூடி வழிபட வேண்டும்?” எனக் கேட்டான் அலவன்.

வேலைகளைச் செய்துகொண்டே தேக்கன் சொன்னான், “கண் மூடினால் இருள் வரும். இருளுக்குள்தானே நம் ஆதி அச்சங்கள் நிலைகொண்டுள்ளன. அவற்றை அங்கேயே வெற்றிகொள்ளும் ஆற்றல் நமக்கு வேண்டுமல்லவா? அதனால்தான், தெய்வங்கள் இருளுக்குள் வந்திறங்குகின்றன” எனத் தேக்கன் முடிக்கும்முன் அலவன் கூறினான்.  ``நான் இருளைக் கண்டு எப்போதும் அஞ்சியதில்லையே!”

என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை, “சரி, நீ வேண்டுமென்றால் கண் திறந்தே வழிபடு” என்றார்.

எல்லாவற்றையும் எடுத்துப் பரப்பும் வேலை முடிந்தது. தேக்கன் கைகளைக் குவித்து, கண் மூடி வழிபட்டான். மாணவர்களும் அதேபோல் வழிபட்டனர். அலவன் மட்டும் திறந்த விழிகளோடு கொற்றவையை வணங்கினான். சற்று நேரத்துக்குப் பிறகு, வழிபாடு முடித்த தேக்கன், படையலிட்ட பொருள்களை எடுத்து மாணவர்களுக்குத் தின்னக்கொடுத்தான்.

``கசப்பு மட்டுப்படும்” என்று சொல்லியபடி கொடுத்ததால், ஒரு கடி அளவு மட்டும் வாங்கிக் கடித்துக்கொண்டனர். அதை விழுங்கவே உயிர்போனது.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85d

எல்லா பழங்களும் கண் திறந்தே இருந்தன. ``நீதான் கண் மூடாமல் வழிபட்டவனாயிற்றே... உனக்கு எந்தப் பழம் தருவது?” எனக் கேட்டபடியே கறித்துண்டங்களை எடுத்துக் கொடுத்தான். அலவன் வாங்கிக்கொண்டான். ``கண் மூடி வணங்குகையில் நீங்கள் கண்டதென்ன?” எனக் கேட்டான் தேக்கன்.

எல்லோர் நினைவுக்குள்ளும் இருந்தது குலநாகினியின் முகம்தான். தாடை உடைவதைப் போல அழுத்திப்பிடித்த அந்த முகம் மறைய நாளாகும் எனத் தோன்றியது. யாரும் வாய் திறந்து பேசவில்லை. அலவன் மட்டும் சொன்னான், “நான் இரு கண்களைப் பார்த்தேன்.”

தேக்கன், மீதம் இருந்தவற்றை எடுத்துக் கொடுத்தபடியே கேட்டார், ``எதனுடைய கண்கள்... தேவவாக்கு விலங்கினுடைய கண்களா அல்லது பறவையின் கண்களா?”

“இரண்டும் அல்ல, அவை மனிதக் கண்கள்.”

மாணவர்கள், அந்த இடம்விட்டுப் புறப்பட ஆயத்தமாயினர். “மனிதக் கண்கள் இதற்குள் எப்படி இருக்கும்? யாரும் உள்நுழைய முடியாத பெருமரப்புதர் அல்லவா இது? அதுவும் பறம்பின் உச்சியில்!” என்று சொல்லியபடியே அந்த இடம்விட்டு நடக்கத் தொடங்கினர்.

கூத்துக்களம்விட்டு காட்டின் தென்திசை நோக்கி நுழைந்தனர். “காடறிதல் என்பது, பச்சைமலைத் தொடரின் எல்லா பகுதிகளையும் அறிந்துவருதல். அதன் தொடக்கம் எப்போதும் தென்திசைதான். திசையறிதல் பகலில் எளிது. இரவில் அதைவிட எளிது. விண்மீன்களைப் பார்த்தாலே போதும்” என்றான் தேக்கன்.

இவ்வளவு நேரமும் பேச்சுக்கு ஈடுகொடுத்துப் பேசிவந்த அலவன், எதுவும் கேட்காமல் இருந்தான். மற்ற மாணவர்கள் கசப்புக்கு அஞ்சி இன்னும் வாய் திறக்காமல் இருந்தனர். ‘அலவன் இந்நேரம் கேள்வி கேட்டிருக்க வேண்டுமே, ஏன் கேட்காமல் இருக்கிறான்?’ என்று குழம்பியபடியே அவனைப் பார்த்தான். அவன் குனிந்தபடியே நடந்து வந்தான்.

“ஏன் பேசாமல் வருகிறாய்?”

“நீங்கள் சொன்னதைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டு வந்தேன்.”

“திசையறிதல் பற்றியா?”

“இல்லை.”

“வேறு எதைப்பற்றி?”

“கண் மூடினால் என்ன நிகழும் என நீங்கள் சொன்னதை நான் நம்பினேன். ஆனால், கண் திறந்ததால் தெரிந்தது என்னவென்று நான் சொன்னதை நீங்கள் நம்பவில்லையே, அதைப் பற்றித்தான்.”

தேக்கன் ஒருகணம் பதற்றமானான். “மனிதக் கண்கள் அந்த மரப்புதருக்குள் எப்படி இருக்க முடியும்?” என்றான்.

“எப்படி இருக்க முடியும் என எனக்குத் தெரியாது. ஆனால், இருந்ததை நான் பார்த்தேன்” என்றான் அலவன்.

தேக்கன் சற்றே நிதானம்கொண்டு சிந்தித்தான். நாகக்குடியினரின் பார்வை ஆற்றல் அளவிட முடியாதது என்பது நினைவுக்கு வந்தது. `ஆனாலும், அந்தப் பெரும்புதருக்குள் மனிதர்கள் எப்படி, எங்கிருந்து போக முடியும்?’ சிந்தித்தபடி நின்றான்.

கேள்விகள் உருவாகிவிட்டால், அவை பதிலின்றி உதிராது. இயல்பாக உதிராத கேள்விகளை உடைத்தால், அவை மீண்டும் தழைக்கும். தேக்கன் முடிவுக்கு வந்தான். ஆசானுடன் மாணவனோ, மாணவனுடன் ஆசானோ சொல் மறுத்துப் பயணிக்க முடியாது. ‘அலவன் கருத்தை அவனே உதிர்த்தாக வேண்டும்’ என முடிவுசெய்த கணத்தில் தேக்கனின் கால்கள் திரும்பின.

மீண்டும் மர அடிவாரம் நோக்கி வந்தனர். இலையில் பரப்பி வைக்கப்பட்ட மீதப்பழங்கள் அப்படியே இருந்தன. அவை தேவவாக்கு விலங்குக்கு மிகப்பிடித்த பழங்கள். எனவே, ‘அச்சத்தால் உள் மறைந்திருக்கும் தேவவாக்கு விலங்குகள், நாம் அந்தப் பழங்களை வைத்துவிட்டுப் போனவுடன் வேகவேகமாக வந்து சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று அந்த விலங்கு வந்து பழம் எடுக்கவில்லையே’ எனச் சிந்தித்தபடியே நின்றான் தேக்கன். சிறிது நேரமானது. மழைக்காலமாதலால் உள்ளொடுங்கிக் கிடக்கும் என நினைத்தான்.

`அலவனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வேலைகொடுப்போம். நினைவிலிருந்து கசப்பு மறைய உதவியாக இருக்கும்’ என முடிவுசெய்தான். குறிப்பிட்ட இடைவெளியில் எல்லோரையும் மரப்புதருக்குள் போகச் சொன்னான் தேக்கன். ``உள்ளே போகும்போது கொடிகளையும் சிறுகொப்புகைளையும் வளைத்து ஒன்றோடொன்று முடிச்சிட்டுக்கொண்டே போங்கள். அப்போதுதான் சரியான வழி பார்த்து வெளிவர முடியும். இல்லையென்றால், வெளிவர  திசை  தெரியாமல் மாட்டிக்கொள்வீர்கள். இந்த மரப்புதர் எவ்வியூரின் பாதி அளவு பரப்புகொண்டது. எனவே, கவனமாகப் போய்த் திரும்பவேண்டும்” என்றான். “நான் சீழ்க்கை அடித்ததும் சென்ற வழியிலேயே வெளியேறுங்கள்” என்றான். மாணவர்கள் கவனமாகக் கேட்டனர்.

“ஒருவேளை, வெளிவர முடியாத சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டால் சீழ்க்கையொலி எழுப்புங்கள். நான் உள்ளே வந்துவிடுகிறேன்.”

கசப்பிலிருந்து எண்ணங்கள் மாறி உள்ளே நுழைவதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியைக் காண்பித்தான் தேக்கன். ஆசானின் முதல் பயிற்சி தொடங்கிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டனர். இதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களை இயக்கத் தொடங்கியது.

மரம் விலக்கி உள்நுழைந்தனர். சிலருக்கு எளிதாக உள்நுழையும்படி இடைவெளி இருந்தது. சிலருக்கு உள்நுழைவதே கடினமாக இருந்தது. ஆனாலும், அனைவரும் உள்நுழைந்தனர். அலவன் எந்த இடத்தில் மனிதக் கண்களைப் பார்த்ததாகச் சொன்னானோ, அதை நோக்கி உட்செல்ல அனுப்பப்பட்டான்.

அவர்கள் செடி கொடிகளை விலக்கி உள்நுழையும் ஓசை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளொடுங்கிப் போய்க்கொண்டிருந்தது. கார் காலமாதலால், செடிகொடிகளின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தது. எனவே, நுழைந்த சிறிது நேரத்திலேயே பார்வையிலிருந்து மறைந்தனர். தேக்கன் வெளியில் இருந்தபடி மரக்கூட்டத்தைச் சுற்றிவந்துகொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85f
‘இந்த முறை பயிற்சி ஏன் உன்னுள்ளிருந்து தொடங்குகிறது?’ என, மனம் கொற்றவையிடம் கேட்டுக்கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல, `தான் எடுத்த முடிவு சரிதானா?’ என்ற வினா எழத்தொடங்கியது. `அலவன் பார்த்தது மனிதக்கண்கள் அல்ல என்று அவனை நம்ப வைக்க எல்லோரையும் உள்ளே அனுப்பியிருக்க வேண்டுமா?’ எனத் தோன்றியது. உள்ளிருந்து பறவைகள் கலையும் ஓசை அவ்வப்போது கேட்டது. தேக்கன் வெளியே காத்திருந்தான். ‘காவல்குடி வீரர்கள் இங்கு இருந்திருந்தால், இந்தச் சிக்கலே இல்லை. அவர்கள் பகரி வேட்டைக்குப் போய் இன்னும் ஏன் திரும்பாமல் இருக்கிறார்கள்?’  என வினாக்கள் நிற்காமல் எழுந்துகொண்டே இருந்தன.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85e‘தான் எடுத்த முடிவின்மீது இவ்வளவு மறுசிந்தனை இதுநாள்வரை வந்ததில்லை. இப்போதே வருகிறது? வயதானால் உறுதிப்பாடு அதிகரிக்கத்தானே வேண்டும்’ - எண்ணங்கள் ஓடியபடி இருக்க, பொழுதும் கடந்துகொண்டிருந்தது. `உள்ளே சென்றவர்களை வெளியேறி வரச்சொல்லலாம்’ எனத் தோன்றியது.

குறுங்கட்டிதான் முதலில் உள்ளே போனவன். அவன் போன இடத்திலிருந்து முதல் சீழ்க்கையொலியை எழுப்பினான் தேக்கன். அடுத்து ஒவ்வொரு மாணவரும் உள்ளே நுழைந்த இடத்திலிருந்து சீழ்க்கை அடித்தான். சீழ்க்கையொலி ஈட்டிபோல சல்லெனக் காற்றில் பாய்ந்து செல்லக்கூடியது. அதுவும் தேர்ந்தவனின் அடிநாக்கிலிருந்து கிளம்பும் ஒலி மலைமுகட்டுக்குக்கூட கேட்கும். தேக்கன் மிகவும் கட்டுப்படுத்திக் குறிப்பொலியாக அதைப் பயன் படுத்தினான். சீழ்க்கையொலியைப் பல்வேறு முறையிலும் ஏற்ற இறக்கத்துடனும் பயன்படுத்தப் பழகியவன் அவன்.

மாணவர்கள் திரும்பும் ஓசை எதுவும் கேட்கிறதா எனக் கவனித்தபடி இருந்தான். அவர்கள் அதிகத் தொலைவு உள்நுழைந்துவிடவில்லை. மூன்று பனை தொலைவைக் கடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, வேகமாக வந்து விடுவார்கள் எனக் காத்திருந்தான் தேக்கன்.

பறவைகள் கலையும் ஒலியும் பிற ஓசைகளும் கேட்டபடி இருந்தன. மாணவர்களின் சீழ்க்கையொலி எதுவும் கேட்காததால், ஆபத்து எதுவும் இல்லை என்பது புரிந்தது. தேக்கனின் கண்கள் வழிபார்த்துக் காத்திருந்தன.

குறுங்கட்டிதான் முதலில் வெளிவந்தான். மேலெல்லாம் செடி கொடிகள் சுற்றிக்கிடந்தன. எல்லாவற்றையும் இழுத்துப் பிய்த்துக்கொண்டிருந்தான். அடுத்து சிறிது நேரத்தில் மடுவன் வந்தான். மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கியது. அவனைத் தொடர்ந்து அவுதி வந்தான். ஒருவர் பின் ஒருவராக வெளிவந்தனர். எட்டாவது ஆளாக அலவன் வந்தான். இன்னும் மூன்று பேர் வெளிவரவேண்டியிருந்தது.

அலவன் சொல்ல ஒன்றும் இருக்காது எனத் தேக்கனுக்குத் தெரியும். அதனால், வெளிவரவேண்டிய மூன்று பேரை நோக்கியே அவன் கவனம்கொண்டிருந்தான். ‘அவர் கேட்காததனாலேயே புரிந்துகொண்டார்’ என்பது அலவனுக்கும் தெரிந்தது. அவன் எவ்வளவு முயன்றும், உள்ளுக்குள் யாரும் தட்டுப்படவில்லை. உடலில் அங்குமிங்கும் கிழிபட்டாலும் உள்ளுக்குள் சிக்கிக் கொண்டால், இரவெல்லாம் அங்கேயே கிடக்க வேண்டியதாயிருக்கும். பொழுதுக்குள் வெளியேறி வந்தது, எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

சற்று நேரம் கழித்து இளமன் வந்தான். அவனைத் தொடர்ந்து முடிநாகன் வந்தான். மூத்தவனான கீதானியைத் தவிர எல்லோரும் வந்துவிட்டார்கள். பொழுதாகிக் கொண்டிருந்தது. கீதானி உள்ளே நுழைந்த இடத்தில் நின்று புதருக்குள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். வருவதற்கான ஓசை எதுவும் கேட்கவில்லை. தேக்கன் சற்றே புதர் விலக்கி உள்ளே பார்த்தான். இடைவெளியற்று இருப்பதால், எதுவும் தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை சீழ்க்கை அடித்தான். மாணவர்கள் எல்லோரும் தேக்கனை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

நேரமாகிக்கொண்டிருந்தது. தேக்கனின் முகக்குறிப்பு மாறத் தொடங்கியது. ‘இன்னும் சற்றுநேரத்தில் பொழுது மறைந்துவிடும். அதற்குள் அவன் வெளிவந்தால்தான் உண்டு. வர முடியாவிட்டால் அவன் சீழ்க்கை அடித்திருப்பானே, ஏன் அடிக்காமல் இருக்கிறான்? ஒருவேளை விலங்கால் கடுமையாகத் தாக்கப் பட்டிருப்பானோ! என்ன செய்வது, நாம் உடனே உள்ளே போகலாமா, உள்ளே போனால் எவ்வளவு தொலைவு போவது? இருட்டிவிட்டால், வெளியே புற்களுக்கிடையில் விழுந்து கிடப்பவனைத் தேடுவதே கடினம், இந்த அடர்புதருக்குள் எப்படித் தேட முடியும்?’ தேக்கன், முடிவெடுக்க முடியாமல் திணறினான்.

பறவைகள் அடையும் நேரமாகி விட்டதால், ஓசை அதிகமாகவே இருந்தது. ஆனாலும், தேக்கன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. மாணவர்களிலேயே கீதானிதான் மூத்தவன். உடல் வலுவில் மிகச் சிறந்தவன். அவன் எளிதில் விழுந்துவிட மாட்டான் எனத் தோன்றியது. ஆனாலும், அவன் ஓசை எழுப்பாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மனம் திணறத் தொடங்கியது. எந்த முடிவு என்றாலும் விரைவில் எடுத்தாக வேண்டும். நேரம் கடந்துகொண்டிருக்கிறது. முடிவெடுக்க முடியாத தேக்கனின் தயக்கம் நீண்டு கொண்டி ருந்தது. மரங்களில் அடையும் பறவைகளின் ஓசை அதிகமாகிக்கொண்டே இருந்தது.

‘சரி, இனியும் காலம் தாழ்த்தவேண்டாம்’ என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கும்போது உள்ளுக்குள் ஏதோ ஓசை கேட்பதுபோல் இருந்தது. தேக்கன் கூர்ந்து கவனித்தான். மாணவர் களும் உற்றுக் கவனித்தனர். உள்ளுக்குள்ளிருந்து செடி கொடிகளை விலக்கி நகரும் ஓசை துல்லியமாகக் கேட்கத் தொடங்கியது. அது, ஒருவன் நடந்துவரும் ஓசையல்ல; ஓடிவருபவனின் காலடியோசை என்பது புரியத் தொடங்கியது.

‘கீதானிதான் ஓடிவருகிறான். ஆனால், ஏன் ஓடிவர வேண்டும்? எதுவும் விலங்கு துரத்துகிறதா... அப்படியென்றால் சீழ்க்கை அடிக்கலாமே! நாம் உடனடியாக உள்ளே போய் உதவ  முடியும். ஏன் சீழ்க்கை அடிக்காமல் வருகிறான்? பலவற்றையும் சிந்திக்கும் ஆற்றல்கொண்டவன் தானே அவன். நிதானமாக வராமல், அவசரப் பட்டு ஓடத் தொடங்கினால் செடி கொடிகளை இங்கும் அங்குமாக விலக்கிப் போகும்போது ஏற்படுத்திவிட்டுப்போன முடிச்சுகளைப் பார்க்காமல் விட்டுவிடுவோம். வழி தெரியாமல் உள்ளுக்குள்ளே சுற்றவேண்டியிருக்கும்’ எனச் சிந்தித்தபடி பதற்றத்தோடு தேக்கன் நின்றுகொண்டிருந்தான். ஓசை நெருங்கத் தொடங்கியது. அவன் வேகம் மிகவும் கூடியது. எல்லோரும் உள்ளுக்குளிருந்து கீதானி என்னவாக வெளிவரப்போகிறான் என்ற பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85g

ஒருகணத்தில் மர இடைவெளிகளைப் பிய்த்துக்கொண்டு வெளியே விழுந்தான் கீதானி. அவன்மேல் நூற்றுக்கணக்கான கொடிகள் சுற்றிக்கிடந்தன. ஓடிப்போய்ச் சூழ்ந்தனர் மாணவர்கள். மரத்துக்குள்ளிருந்து அவன் வந்த திசை நோக்கி முழு ஆவேசத்தோடு மறித்து நின்றான் தேக்கன். உள்ளுக்குள்ளிருந்து எந்த விலங்கு வந்தாலும், ஒரே அடியில் வீழ்த்தும் வெறிகொண்டு நின்றான் தேக்கன்.

வெளியில் வந்து விழுந்த வேகத்தில் ஏதோ சொல்ல வந்தான் கீதானி. கசப்பு, தொண்டையில் நஞ்சாய் இறங்கிக்கொண்டிருந்தது. அதையும் மீறி, ``தேக்கனைக் கூப்பிடு” என்று மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனைக் கைகாட்டிச் சொன்னான்.

மாணவர்கள் தேக்கனை உடனே அழைத்தனர். உள்ளுக்குள் இருந்து பார்வையை விலக்காமல் அரை மனத்தோடு கீதானியின் அருகில் வந்தான் தேக்கன். அவரைப் பார்த்து மூச்சிரைக்கச் சொன்னான், ``அவர்கள் வெளியேறுகிறார்கள்.”

தேக்கனுக்கு அவன் சொல்வது புரியவில்லை. கீதானியால் தெளிவாகப் பேச முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ பிரச்னை, அதைப்பற்றிச் சொல்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவன் வெளியேறிய பாதையிலிருந்து ஏதோ ஒன்று வரப்போகிறது எனத் தோன்றியது. கீதானியையும் மரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85h
தான் சொல்லவருவது தேக்கனுக்குப் புரியவில்லை என்பது கீதானிக்குத் தெளிவாக விளங்கியது. மூச்சிரைப்பை முயற்சிகொண்டு கட்டுப்படுத்தியபடி, நஞ்சுக் கசப்பை எவ்வளவு குடித்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்துக் கத்தினான்,  ``கிழவா… அவர்கள் எதிர்திசையில் வெளியேறி ஓடுகிறார்கள்.”

தேக்கன் அதிர்ச்சி அடைந்தான். அலவனுக்குப் புரியத் தொடங்கியது. சொல்லி முடித்த கீதானி, கசப்பின் கொடுமையைத் தாங்க முடியாமல் சுற்றியிருந்த செடி கொடிகளை வாயில் போட்டு அமுக்கிக் கடித்தான். கண்கள் பிதுங்கி நீர் தாரைதாரையாக வழிந்துகொண்டிருந்தது.

தேக்கனின் கைகள் முதன்முறையாக நடுங்கின. அவன் சொல்லவருவதை அறிவு நம்ப மறுத்தது. ஆனால், இனியும் நம்பாமல் இருக்க முடியாது. பன்றியின் கிடைவாய்க்கொம்பை இரு உள்ளங்கைகளிலும் இறுக்கிப் பிடித்தபடி, மரக்கூட்டத்தின் பின்புறம் நோக்கி ஓடத் தொடங்கினான் தேக்கன். வாய் பிளந்து அவன் கத்திய ஓசையில் மரமெங்கும் இருந்த பறவைகள் படபடத்தன.

`நாமும் அவரைப் பின்தொடரலாம்’ என மாணவர்கள் எழுந்தபோது, அவர்களின் பார்வையிலிருந்து தேக்கன் மறைந்து நீண்ட நேரமாகியிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 1:33 pm

கொற்றவைக்கூத்து நடைபெறும் பெரும் மரப்புதரின் பின்புறம் நோக்கி ஓடினான் தேக்கன். எவ்வியூரின் பாதியளவு பரப்பைக்கொண்ட அடர்மரத்தோப்பின் பின்வட்டத்தை வேகமாகக் கடந்துகொண்டிருந்தன அவனுடைய கால்கள். மரத்தோப்பு முடிந்து காட்டின் சரிவுப்பகுதி தொடங்குமிடம் மிகக்குறுகிய அளவினைக் கொண்டது. அதில் ஓடிக்கொண்டிருந்த தேக்கனின் வேகம் யாரும் பார்த்தறியமுடியாத ஒன்று.

தேக்கன் ஓடத்தொடங்கியபொழுது மாணவர்கள் சிலர் உடனெழுந்து பின்னால் ஓடினர். சிலர் மட்டும் கீதானிக்கு உதவிசெய்துகொண்டிருந்தனர். கீதானி சற்றே மூச்சுவாங்கி இளைப்பாறினான். அவனது வாய் முணுமுணுக்க நினைத்தது. ஆனால், கசப்பு அதனை அனுமதிக்கவில்லை. ஆனாலும், சொற்கள் உள்ளுக்குள் உருண்டுகொண்டே இருந்தன. `அவர்கள் நம்மைப்போன்ற மனிதர்கள் அல்ல; பார்க்கவே அச்சந்தரும் உருவத்தினராக இருந்தனர்.’
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83a
இங்குமங்குமாக ஓடிய தேக்கனால், அவர்கள் தோப்பைவிட்டு எப்பக்கம் வெளியேறினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ‘யார் அவர்கள்? எத்தனை பேர்? பறம்புமலையில் இவ்வளவு தொலைவு அவர்களால் எப்படி ஊடுருவ முடிந்தது? ஏன் இங்கு வந்தார்கள்?’ வினாக்கள் மண்டையைத் துளைத்துக் கொண்டிருந்தன. பதற்றம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வெளியேறிய தடம் எதுவும் மண்ணில் தெரியவில்லை. ‘மீண்டும் கீதானியை விசாரிக்கலாமா’ என்று தோன்றியது.

சட்டென பிடிபட்டவனாய் அருகிலிருந்த நாங்கில் மரத்தின் மீது ஏறினான். கொப்புகளைப் பிடித்து வேகவேகமாக உச்சிக்கிளைக்குப் போனான். நார்ச்சத்து அதிகமுள்ள மரமாதலால் தேக்கனை, கிளையின் நுனிவரை அது அனுமதித்தது. மர இலைகளைத்தாண்டி அவன் தலை வெளியில் நீண்டது. கண்ணெதிரே மலைச்சரிவின் பள்ளம் முடியுமிடத்தில் சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடந்தால் ஆதிமலையின் தொடக்கம். நான்கு மடிப்புகளைக்கொண்டது ஆதிமலை. 

மரத்தோப்புக்குள் இருந்து வெளியேறியவர்கள் சிற்றாற்றைக் கடந்திருக்க முடியாது. பொழுது மறைய இன்னும் சிறிதுநேரமே இருந்தது. அவர்கள் சிற்றாற்றைக் கடந்து ஆதிமலைக்கு உள்ளே நுழைவதை இங்கிருந்து துல்லியமாகப் பார்த்துவிடலாம். அவர்கள் எத்தனை பேர் என்பதனை அறிய தேக்கனின் கண்கள் அலைமோதிக்கொண்டிருந்தன. ஆற்றின் ஒருமுனையில் இருந்து மறுமுனை நோக்கி கண்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தான். மெல்லிய காற்றில் மரக்கொப்பு அசைந்தாடியது. மிகக்கவனமாக நுனிக்கொப்பில் நின்று கொண்டிருந்தான். கொப்பின் கவட்டையை விரல்கள் பற்றியிருக்க, உடலின் எடையை காற்றில் ஏற்றி கண்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.

அவர்கள் இங்கிருந்து போனால், ஆற்றின் எவ்விடத்தைக் கடப்பார்கள் என்று அவன் எதிர்பார்த்த இடத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், வேறுதிசையில் சிலர் ஆற்றைக் கடப்பது தெரிந்தது.
தேக்கனின் கண்கள் உற்றுநோக்கின. வந்துள்ளவர்கள் ஐந்து பேர். ஒவ்வொருவரும் முதுகுக்குப் பின்னால், நீள்வடிவில் குழல்போன்ற நரம்புக் கூடையைக் கட்டியிருந்தனர். அதனைச் சுமந்தபடி படுவேகமாக ஆற்றைக்கடந்து ஆதிமலையின் முதற்குன்றுக்குள் நுழைந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83b
மரத்திலிருந்து தாவிக்குதித்து அவர்களைக் கொன்று வீசவேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால், பதற்றப்படாமல் கவனமாகப் பார்த்தான். வேறு யாரும் பின்தொடர்கிறார்களா என்று சிறிதுநேரம் கவனித்தான். யாரும் பின்தொடரவில்லை. வெறும் ஐந்து பேர் இத்தனை மலைகளைக் கடந்து இவ்விடம் வந்து உயிரோடு திரும்பிச்செல்கின்றனர். கண்கள் பார்ப்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனாலும், நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. மரத்திலிருந்து வேகமாக நழுவியபடி கீழிறங்கினான். பொழுது சாய்ந்துகொண்டிருந்தது.

மாணவர்கள் எல்லோரும் மர அடிவாரம் வந்து அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். எல்லோர் கண்களிலும் பெரும்பதற்றம் இருந்தது. ஆசான் சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்திருந்தனர்.

இறங்கிய வேகத்தில் தேக்கன் சொன்னான், ``அவர்கள் ஆதிமலையின் வலப்புறம் நோக்கி ஓடுகிறார்கள். பறம்பு மலையின் தன்மை அவர்களுக்குத் தெரியவில்லை. வலப்புறம் நோக்கி ஓடும் அவர்கள் மச்சக்கடவின் வழியாகத் தான் முதற்குன்றைத் தாண்ட வேண்டும். இங்கிருந்து குறுக்குவழியிற்போனால், அவர்களுக்கு வெகுமுன்னரே நாம் போய்விடலாம். கடவைத் தாண்டும்பொழுது ஒருவனின் உடலிலும் உயிர் மிஞ்சக் கூடாது” என்று சொல்லியபடி வெறிகொண்டு கிளம்பினான் தேக்கன். மாணவர்கள் அவனோடு ஓடத்தொடங்கினர். ஓடிக்கொண்டே தேக்கன் கேட்டான், ``மச்சக்கடவுக்குச் செல்லும் வழி யாருக்குத் தெரியும்?”
``எனக்குத் தெரியும்” என்றான் முடிநாகன். அவசரத்தில் வாய்திறந்ததால், குடம் நஞ்சு உள்ளே கொட்டியது. தாங்கமுடியாமல் ஓடிக்கொண்டே காறித்துப்பினான்.

``கீதானியும் அலவனும் என்னைப் பின்தொடர முயலுங்கள். மற்றவர்கள் முடிநாகனோடு இணைந்து வாருங்கள். நீங்கள் வரும்பொழுது அவர்களை மண்ணோடு மண்ணாகச் சாய்த்து வைத்திருப்போம்” என்று அவன் சொல்லிய பொழுது கால்கள் புரவியின் வேகங்கொண்டன.

காட்டில் ஓடுவது சிறந்த கலை. கொடிகளைத் தாண்டவும், முன்காலை மட்டும் ஊன்றவும், படர்தாவரங்களின் மீது குத்துக்காலை பயன்படுத்தவும், பாதமறியா வேகம்கொண்டு ஓடவும் இணையற்ற பயிற்சி வேண்டும். செத்தைகளும் சருகுகளும் கால்களை எளிதில் ஏமாற்றக்கூடியன. பாறைகளும் பாசிகளும் பாதத்தின் மீதான பகையைக் காலங்காலமாக வளர்த்துவருவன. கோரைகளின் வகைகளையும் புற்களின் குணங்களையும் பகுத்தறிய முடியாதவன், பத்தாவது அடியில் மண்டியிட்டு விழுவான். தண்டிலும்,  இலையிலும், கணுவிலும் நஞ்சை வைக்காமல் உடலெங்கும் இருக்கும் சுனைகளில்  நஞ்சை வைத்துள்ள   செடிகொடிகளை அவற்றின் வாசனை வழியே கண்டறிந்து விலகத்தெரிந்தவன் மட்டுமே காட்டில் ஓடி இலக்கை அடைய முடியும்.

மூக்கின் மோப்ப ஆற்றலும், கண்பார்வையின்  கூரிய கவனிப்பும் கால்களை இறகுகள்போல வீசியெறியும் பயிற்சியும் கொண்ட ஒருவனால்தான் காட்டை ஓடிக் கடக்க முடியும். 

வேட்டை விலங்குகளின் நான்கு கால் பாய்ச்ச லுக்குத் தப்பித்துத்தான் மனிதன் பறம்புநாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். எனவே, அதனுடைய நான்கு கால் வேகத்தையும் மிஞ்சுவதாக  மனிதக்கால்கள்  வளம் பெற்றுள்ளன. தேக்கனின் கால்கள் அதனையும் மிஞ்சி ஓடிக்கொண்டிருந்தது.

பொழுது மறைந்து நிலவின் ஒளி படரத்தொடங்கியது. தேக்கனின் ஓட்டத்தை எப்படியாவது நெருங்கிவிட வேண்டும் என்று ஆத்திரங்கொண்டு பின்தொடர்ந்தான் கீதானி. அவனைவிட வயதிலும் உருவத்திலும் இளைத்தவனான அலவன் பல இடங்களில் கீதானியைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தான்.

நேரம் கூடக்கூட தேக்கனின் வேகம் கூடிக்கொண்டிருந்தது. அவனது மனதில் கேள்விகள் அடுக்கடுக்காக மேலெழுந்து கொண்டிருந்தன. கீதானி மரப்புதருக்குள் இருந்து வந்து, அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று சொன்ன பொழுதுக்கும் அவர்கள் சிற்றாற்றைக் கடக்கும் நேரத்திற்கும் இடையுள்ள நேரத்தைக் கணக்கிட்டபொழுது மனம் முதல் அதிர்ச்சியை அடைந்தது. `இவ்வளவு குறுகிய நேரத்தில் அவ்வளவு தொலைவு எப்படிப் போயிருக்க முடியும்?’ என்று வியந்தான். அவர்களின் வேகம் பிடிபடத் தொடங்கியது. ‘அது  வழக்கமான வேகமல்ல’ என்று மனம் கணித்தது.

ஓடிக்கொண்டே கேட்டான், ``அந்தக் கூடையில் என்ன கொண்டுபோகிறார்கள்?”

மிகத்தொலைவில் வந்துகொண்டிருந்த இருவரின் காதுகளிலும் வினா சரியாக விழவில்லை. ``என்ன கேட்கிறீர்கள்?” எனக் கத்தினான் அலவன்.

தேக்கன் மீண்டும் கத்திச் சொன்னான். கீதானி இன்னொருமுறை வாய்திறந்து சொல்லி நஞ்சுக்கசப்பை  விழுங்க ஆயத்தமாக இல்லை. ‘நான் ஓடியாக வேண்டும். அதுதான் இப்போதைய தேவை’ என எண்ணியபடியே வேகமாக ஓடினான்.

முன்னால் போய்க்கொண்டிருந்த அலவன் அதே வேகத்தில் பின்னால் திரும்பி, தேக்கன் கேட்டதை மீண்டும் கேட்டான். கீதானி கையசைவாற் சொல்ல, அதனைப் புரிந்துகொண்ட அலவன் மீண்டும் முன்புறம் திரும்பி ஓடியபடி கத்திச் சொன்னான், ``அவர்கள் தேவவாக்கு விலங்கைப் பிடித்துக்கொண்டு போகிறார்களாம்.”

அலவன் சொன்ன சொல் பெரும்மரம் சாய்வதைப்போல தேக்கனின் மீது சாய்ந்தது. அதிர்ந்தான் தேக்கன். ‘ஓடுவதா, நிற்பதா?’ மனம் தள்ளாடியது. ‘நம்பமுடியாத சொல். என்ன நடக்கிறது இங்கு? எப்படி நடந்தது?
பறம்பு மலையை வேற்று மனிதர்கள் கடந்துவந்து தேவவாக்கு விலங்குகளை எப்படிப் பிடித்துக்கொண்டு போகமுடியும்?’ சிந்திக்கச் சிந்திக்க விடை கிடைக்காமல் வெறி கூடிக்கொண்டிருந்தது. முன்னிலும் வேகங்கொண்டு ஓடினான் தேக்கன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83c
அவனுக்குப் பின்னால் வெகுதொலைவில் அலவன் வந்துகொண்டிருந்தான். புதர்கடந்து அடர்மரங்களுக்குள் நுழைந்தான் தேக்கன். அவனை இனி கண்ணிற்பார்க்க இயலாது. குறிப்பின் அடிப்படையில்தான் போக முடியும். எனவே, அடுத்ததாக வந்துகொண்டிருந்த அலவன் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்தான். நேரங்கழித்து கீதானி வந்து சேர்ந்தான். இருவரும் இணைந்து அடர்காட்டுக்குள் நுழைந்தனர்.
தேக்கனின் ஓட்டம் அதிவேகமாக இருந்தது. காரணம்,  எதிரிகளின்  ஓட்டத்தைக் கணக்கிட்டதால், மச்சக்கடவிற்குத் தான் போகும் முன், அவர்கள் அதனைக் கடந்துவிடக் கூடாது என்பதால், இன்னும் வேகமாக ஓடினான். 

நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவான குறுக்குவழியில் தேக்கன் ஓடிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில், நான்கு பங்கு அதிகமான சுற்றுவழியை எளிதாகக் கடந்து எதிரிகள்  வந்துகொண்டிருந்தனர்.

நிலவு ஏறியிருந்தது. காடெங்கும் ஒளி படர்ந்தது. மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்க மச்சக்கடவினை அடைந்தான் தேக்கன். வந்த வேகத்தில் சற்றும் இளைப்பாறாமல், பாறையின் மீதேறிக் கண்களை ஓடவிட்டான். இருளில் எதுவும் பிடிபடவில்லை. மூச்சுவாங்கி ஆசுவாசப்பட்டான். மீண்டும் தலைநீட்டி முன்புறம் சரிந்துள்ள காட்டைப் பார்த்தான். வெகுதொலைவில் பறவைகள் கலைந்து பறந்ததைக் கவனித்தான். வருவது அவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். அவர்கள் வந்துகொண்டிருக்கும் இடத்தைக் கணித்தான்.

இக்கடவினை நோக்கித்தான் வருகிறார்கள். அப்படியென்றால், போகும்பொழுதும் இவ்வழியாகத்தான் போயிருப்பார்கள். இக்கடவு அவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. மனம் அவர்களின் திசைவழியையும்
எண்ணவோட்டத்தையும் கணித்துக்கொண்டிருந்தது. மாணவர்கள் இருவரும் கீழ்ப்புறம் இருந்து வரவேண்டும். எதிரிகள் வருவதற்குள் வந்து விடுவார்களா என எண்ணிக்கொண்டிருக்கையில் இருவரும் வந்து சேர்ந்தனர். ஒருவகையில் மாணவர்கள் நிகழ்த்தியது வியப்பிற்குரிய ஓட்டந்தான். தேக்கனின் கண்கள் ஆசானாய் இருந்து பெருமைப்பட நேரமற்று இருந்தன.

தேக்கன் தாக்குதலுக்கான வழிவகைகளைச் சிந்தித்தான். கடவின் விளிம்புப்பகுதியில் இருவரையும் மறைந்து நிற்கச் சொன்னான். ``கடவின் வழியாக முதலில் வருபவனை நான் அடித்துத் தூக்கிய கணத்தில் பின்னால் வருகிறவர்கள் சுதாரித்துவிடுவார்கள். உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். உடனே கடவின் பிளவுக்குள் வராமல் சுற்றிவர முடிவுசெய்வார்கள். அப்பொழுது நீங்கள் விளிம்புப் பகுதியில் ஈட்டிகள் மட்டும் வெளியே தெரிவதுபோல நீட்டிப்பிடியுங்கள். எல்லாபுறமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டபின் அவர்கள் பதற்றத்தில் திசை தடுமாறுவார்கள்.
வேறுவழியில்லாமல் துணிந்து கடவினைக் கடக்க முயல்வார்கள்  அல்லது  திசைக்குழப்பத்தில் பின்வாங்க நினைப்பார்கள். ஒருபோதும் விளிம்பில் தெரியும் ஈட்டி முனைகளை நோக்கி வர மாட்டார்கள்.

அவர்கள் கடவினைத் தாண்ட நினைத்தாலோ, பின்வாங்கி நின்றாலோ நான் பார்த்துக்கொள்வேன். அக்கணம் அவர்களுக்குள் முளைக்கும் அச்சமே அவர்களை  அழித்துவிடும். அவர்கள்  சுதாரிப்பதற்கு முன்பே அழிவின் கொடூரத்தை அவர்களின் கண்களுக்குக் காட்டுவேன்” என்றான் தேக்கன்.

மூக்கு விடைத்து, மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கிய இருவரையும் தேக்கனின்  ஆவேசம் இறுகப்பற்றியது. ஈட்டியை உறுதிகொண்டு பிடித்தனர். கீதானி வலப்புறமும் அலவன் இடப்புறமுமாக விளிம்பு நோக்கிப் போனார்கள். தேக்கன் முதல் ஆளை அடித்துத் தூக்கும்வரை ஈட்டியை வெளிநீட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

கடவின் ஒரு பகுதியில் மெல்ல தலைதூக்கி எட்டிப்பார்த்தான் தேக்கன். அவர்கள் வரும் நேரத்தை மனம் கணித்தபடி காத்திருந்தது. காலடித்தடங்கள் கேட்கின்றனவா என்று கூர்மையாகக் கவனித்தான். முன்புறமிருக்கும் பாறைகளிலிருந்து பறவையொன்று குரல் எழுப்பியது. அவர்கள் நெருங்கிவிட்டார்கள் என்பது தெரிந்தது. ஓடிவரும் அசைவில் தேவவாக்கு விலங்குகள் ஓசை எழும்பியவண்ணம் இருந்தன. தேக்கன் கடவுக்குள் நுழைபவனைத் தோதான திசையிலிருந்து தாக்க, கால்கள் இரண்டையும் பாறையின் செதில்களுக்கு ஏற்ப இறுக அமுக்கிக்கொண்டிருந்தான்.

கீதானியும் அலவனும் தேக்கனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். தேக்கனின் கைகள் இரண்டும் பன்றிக்கொம்பினை உள்ளங்கைக்குக் கொண்டு வந்தன. முதல் ஆள் கடவினை நோக்கி முன்னேறி வரும் ஓசை கேட்டது. தேக்கன் பாறையோடு பாறையாக சாய்ந்து அடித்துத்தூக்க ஆயத்தமாக  இருந்தான். பாறையில் காலடியோசை கேட்ட கணத்தை மனம் கணிக்கும் முன் கடவின் பிளவை ஓர் உருவம் பாய்ந்து கடந்தது. கணிக்க முடியாத வேகத்தில் நிகழ்ந்த இச்செயலை விட்டுவிடாதபடி அவன் முதுகுப்புறத்தை நோக்கி மின்னல்வேகத்திற் பாய்ந்தான் தேக்கன்.
   
கடவின் பிளவுக்குள் கால் நுழைத்த கணத்திலேயே ஆளிருப்பதை ஓடிவருபவன் கவனித்துவிட்டான். தன்னைத் தாக்கப்போகிறான் என அறிந்தவுடன் முழுவேகத்தோடு வலக்கையைத் திருப்பிச் சுழற்றினான். முதுகுத்தண்டை நொறுக்கும் வேகத்தோடு பாய்ந்த தேக்கனை, சுழன்ற அவனது வலக்கை அடித்துத் தூக்கியது. இருளுக்குள் பாறையோடு சரிந்தான் தேக்கன்.

அவன் சரிந்து உருளும் ஓசை கேட்பதற்குள் மற்ற நால்வரும் கடவினைக் கடந்தனர். கீதானிக்கு எதுவும் பிடிபடவில்லை. இருளுக்குள் படுவேகமாக உருவங்கள் மறைவதும் யாரோ தூக்கி வீசப்பட்டதும் தெரிந்தது. ஆனால், யார் என்ன என்று தெரியவில்லை. ‘ஒருவன் விழுந்துவிட்டான். வெளியில் ஈட்டியை நீட்டலாம்’ என அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் இடப்புற விளிம்பில் நின்றிருந்த அலவன் கடவினை நோக்கி ஓடிவந்தான்.

ஈட்டியை வெளிப்புறம் நீட்டாமல் ஏன் கடவினை நோக்கி ஓடிவருகிறான் என்று  கீதானிக்குப் புரியவில்லை. ஆனால், அலவனின் கண்கள் நடந்ததைத் துல்லியமாகப் பார்த்தன. அவர்கள் தாக்கிய வேகத்தில் ஆசான் மேற்பாறையில் மோதிக் கீழே விழுந்ததைப் பார்த்த கணம் உறைந்து நின்ற அலவன், சற்றுநேரம் கழித்துத்தான் ஆசானை நோக்கி ஓடிவந்தான். அதன்பிறகுதான் கீதானி ஓடிவந்தான்.
வந்தவுடன் ஆசானின் தலையை ஏந்திப்பிடிக்க கையைக்கொண்டுபோனான் அலவன். அவன் கைப்படுவதற்குள் ஆசான் தானே தலையைத் தூக்கினான். அந்த வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. வலக்கையை ஊன்றியே நிமிர வேண்டியிருந்தது. பின்மண்டையிற்பட்ட அடி சிறுமயக்கத்தை உருவாக்கியது. கண்களை இறுக மூடித்திறந்தான்.

சற்று ஆசுவாசப்பட்டபின், ``சுனையில் நீரள்ளி வா” என்றான். கீதானி ஓடினான். யானை தாக்கியதைப்போல் உணர்ந்தது தேக்கனின் உடல்.  எழுந்து உட்கார்ந்தான். கீதானி கை நிறைய நீரள்ளி வந்தான். முகத்தில் அறைந்தும் குடித்தும் தெளிச்சி கொண்டான் தேக்கன். கீதானி மீண்டும் மீண்டும் நீரள்ளி வந்தான்.

வலதுகை கொண்டு இடது தோள்பட்டையை இழுத்து அமுக்கிப்பார்த்தான். மாணவர்களிடம் எதுவும் காட்டிக்கொள்ளக் கூடாது என மனம் போராடியது. கண்கள் மேல்சொருக, மூச்சு வாங்கியது.

கால்களை மெல்ல இழுத்து ஊன்றி எழுந்தான். எலும்புகள் எங்கும் உடைந்துவிடவில்லை. தோள்பட்டையில்தான் நல்ல அடிபட்டிருக்கிறது. அது பாறையிற்போய் தாக்கியதால், ஏற்பட்ட அடியல்ல; அவன் கைவீசி தாக்கியதால், ஏற்பட்டது. `ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன் எதிர்பாராத கணத்தில் பின்புறம் திரும்பி, இவ்வளவு ஆற்றலோடு தாக்குகிறான் என்றால், அவனது வலு எவ்வளவு? அவனது உடலுறுதியின் தன்மை என்ன? யார் இவர்கள்?’ தேக்கனின் மனம் பிடி கிடைக்காமல் போராடியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83d
கீதானி மெல்ல வாய்திறந்து சொன்னான், ``அவர்களை நான் நன்றாகப் பார்த்தேன். பார்க்கவே அச்சந்தரும் உடல்வாகு கொண்ட வர்களாக இருந்தனர்” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கசப்பின் சுரப்பைத்  தாங்கமுடியாமல்  பெரும்பாடுபட்டான். தொண்டைக்குழியை அழுத்திய அவனது கை, சொற்களை இடைமறித்து நிறுத்தியது.

மூச்சுவாங்கியபடி தேக்கன் சொன்னான், ``அப்பேர்பட்டவனை வீழ்த்திவிட்டேன்.”

கீதானியும் அலவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தேக்கன் என்ன சொல்கிறான் எனப் புரியவில்லை.

தேக்கன் மீண்டும் சொன்னான், “அவனது ஓட்டத்தின் வேகத்தை நான் தவறாகக் கணித்துவிட்டேன். நான் நினைத்தைவிட இருமடங்கு வேகம்கொண்டிருந்தான். ஆனாலும், தப்பிச்செல்லவிடாமல் பாய்ந்தடித்தேன். துல்லியமாக அவனது பின்கழுத்து நரம்பை அடித்துவிட்டேன். அது அறுந்துவிட்டதை எனது உள்ளங்கை நன்கு உணர்ந்தது. இனி அதிகத்தொலைவு அவனால் ஓட முடியாது. சிறிது தொலைவிற்குள் விழுந்துவிடுவான்.”

மாணவர்கள் வியந்து பார்த்தனர்.

``மீதமுள்ள நால்வரை வீழ்த்தியாகவேண்டும்” என்று சொல்லியபடி எழுந்து கவனமாகப் பாறையின் மீது ஏறினான். குன்றின் சரிவு அடர்காடுகளைக்கொண்டது; அதற்குள் அவர்கள்  நுழைந்து  போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

தேக்கன் பாறையைவிட்டுக் கீழ் இறங்கினான். ``நீங்கள் வந்தவழியே திரும்பிப்போங்கள். முடிநாகன் மற்றவர்களை அழைத்துக்கொண்டு எதிரே வந்துகொண்டிருப்பான். கவனமாக இங்கே அழைத்து வாருங்கள். வேகமாக ஓடுங்கள்” என்றான்.

கீதானியும் அலவனும் மீண்டும் ஓடத் தொடங்கினர். முன்பிருந்த அதே  வேகம் உடலில் இருந்தது. மனம் சற்றே குழம்பி இருந்தது. ‘தேக்கனையே தூக்கியடிக்கும் வலு கொண்டவர்களா அவர்கள்?’ என்று அலவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ‘அவ்வளவு பெரிய மனிதனை தேக்கன் எப்படி துல்லியமாக அடித்து நரம்பை அறுத்தார்!’ என வியந்தபடியே ஓடினான் கீதானி.

அவர்கள் சிற்றோடையைத் தாண்டும்பொழுது தேக்கன் கத்தும் ஓசையைக் கேட்டு நின்றனர் இருவரும். ‘அவரது இடதுகை இறங்கிவிட்டது. நம்மிடம் அதனைக் காட்டிக்கொள்ளாமல் சரிப்படுத்துவதற்காகத்தான் இருவரையும் அனுப்பிவைத்துவிட்டு அவரே தூக்கிவைத்து அதனைச் சரிப்படுத்துகிறார்’ என்பதை இருவராலும் புரிந்துகொள்ள முடிந்தது.

சிற்றோடையைக் கடந்ததும் மாணவர்கள் எதிர்ப்பட்டனர்.  ‘பிடித்துவிட்டீர்களா அவர்களை? எங்கே வைத்திருக்கிறீர்கள்? எல்லோரையும் கொன்றுவிட்டீர்களா? யாராவது உயிரோடு இருக்கிறார்களா?’ என்னும் வினாக்கள் எல்லோர் மனதிலும் மேலெழுந்தபடி இருந்தன. ஆனால், கசப்புக்கு  அஞ்சி யாரும் வாய் திறக்கவில்லை. வினாக்கள் எதற்கும் சொல்ல விடையின்றி இருந்த கீதானிக்கும் அலவனுக்கும் கசப்பே கைகொடுத்தது. அவர்களை அழைத்துக்கொண்டு விரைவாக மச்சக்கடவுக்கு வந்து சேர்ந்தனர்.

இடக்கையின் தோள்பட்டையை ஒடங்கொடிகொண்டு இடைவிடாது சுற்றி இறுகக் கட்டியிருந்தான் தேக்கன். உள்ளுக்குள் பச்சிலையை வைத்திருக்க வேண்டும். தோள்பட்டைக்குக் கவசம் அணிவிக்கப்பட்டது போல் இருந்தது. என்ன ஆனாலும் உடனடியாக அதனைச் சரிசெய்வதற்கான ஆற்றல் அவற்றுக்கு உண்டு.

முடிநாகனும் மற்றவர்களும் வந்தவுடன் வீழ்ந்துகிடப்பவர்கள் எங்கே என்று தேடினர். யாரும் அங்கு இல்லை. மாறாக ஆசானுக்குத்தான் இடதுதோளில் கட்டுப்போடப்பட்டிருந்தது. என்ன நடந்ததென்று தெரியாமல் விழித்தனர்.

அவர்களின் வரவை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தான் தேக்கன். வந்ததும் சொன்னான், ``கீதானி, அலவன், மடுவன், அவுதி, வண்டன், பிட்டன் ஆகிய ஆறுபேரும் என்னுடன் வாருங்கள். மீதி நான்கு பேரும் முடிநாகனோடு சேர்ந்து எவ்வியூருக்குப் புறப்படுங்கள். நம் எதிரிகள் தென்கிழக்குத் திசைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதிமலையின் மிகக்கடினமான அடர்காடு நிறைந்த பகுதிக்குள் அவர்கள் நுழைந்துவிட்டனர். எளிதில் அவர்களால் வெளிவரமுடியாது. நாம் இடப்புறமாக நடந்தால், வெகுவிரைவாக மேலே இருக்கும் எலிவால்முகட்டிற்குப் போய்விடலாம். அவர்கள் அங்கே வரும்பொழுது அவர்களை அழித்தொழிப்போம்.

நீங்கள் எவ்வியூர் சென்று பாரியிடம் கூறி உடனடியாக  ஆதிமலையின் எலிவால்முகட்டிற்கு அழைத்துவாருங்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்லுங்கள்” என்றான்.
தேக்கனின் வேகம் உச்சரிக்கும் சொல் முழுவதும் ஏறியிருந்தது. தன்னால் மட்டும் முடியாது  என்றுணர்ந்த கணத்தின் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், அதே நேரத்தில் மாணவர்களை நம்பிக்கையோடு இயக்க, சொற்களை மனம் தேடியது. உள்ளுக்குள் ஊறிப்பெருகும் வெறி கணநேரத்தையும் வீணாக்கவிடவில்லை.

``எந்த வழி போவீர்கள்?”

``வந்த வழி.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P83e
``இல்லை.  மிகவும் நேரமாகிவிடும். சிற்றோடையின் இடப்புறமாகவே சென்றால், சிறிது தொலைவில் அருவி வரும். அவ்விடத்தில் சிற்றோடையைக் கடந்து மேலே ஏறுங்கள். நேராகச் சென்றால், எவ்வியூர் போய்விடலாம்” என்றான்.

மாணவர்கள் சரியென்று தலையாட்டிச் சொன்னார்கள். அவ்வழி பற்றிய ஐயங்களுக்கு, விளக்கங்கள் தேவைப்பட்டன. ஆனாலும் கசப்பை மீறிப் பேச யாரும் தயாராக இல்லை.

முடிநாகனின் மனதுக்குள் தினவு ஏறியது. தன்னிடம் கொடுக்கப்பட்ட இப்பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டும். ஆபத்து வரும்பொழுது அதனை எதிர்கொள்ளும் இடத்தில் ஒருவன் இருப்பதுதான், வீரம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பு. அதனை வெற்றியாக முடிக்கவே ஒவ்வொருவனும் ஆசைப்படுகிறான்.

வலிமையான ஆயுதங்களை முடிநாகன் குழுவிற்கு வழங்கிய தேக்கன், “ஓடுங்கள்” என்று கத்தினான். பாறைப்பொடவுக்குள் இருந்த பறவையொன்று படபடத்தது. முடிநாகனும் மற்றவர்களும் அடுத்த அடி எடுத்துவைக்கும் முன் தேக்கன் சொன்னான், “ஈன்ற புலி உங்களை விரட்டுகிறது. இருளைக் கிழித்து நகரும் கால்களின் வேகம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தோடு ஓடுங்கள்.”

தேக்கன் சொல்லி முடிக்கும்முன் பாறையின் கீழ்ப்புறம் நோக்கிப் பாய்ந்தனர் ஐவரும்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 1:52 pm

பின்னிரவு கடந்தது. எவ்வியூருக்குள் நுழைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியவில்லை. இரவும் புதிதல்ல, காடும் புதிதல்ல. ஆனால், இரவில் காட்டுக்குள் பெரியவர்களின் துணையின்றிப் பயணித்தல் புதிது. காட்டில் கண்களைக்கட்டி விளையாடும் பேராபத்து நிலத்தில் இருக்கிறது. அந்த நிலத்தின் வாகும் வடிவும் தெரியாமல் நடப்பது, மீள முடியாத ஆபத்தை அடுத்த அடியில் நமக்குத் தந்து முடிக்கும்.

முடிநாகன் அச்சமின்றி வழிநடத்திச் சென்றான். குறுங்கட்டிக்கு, இந்தப் பகுதிக் காட்டைப் பற்றி நன்கு தெரியும். அவன் பெரிய கிழவியோடு சேர்ந்து இரு மாதங்களுக்கு முன் இந்தக் காடு முழுவதும் அலைந்து திரிந்தான். எவ்வியூரில் இரவுகளில் ஏற்றப்படும் கொம்பன் விளக்குக்கு ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஏற்ப நாகக்கழிவும் நச்சுப்பிசினும் மாற்றிப் பூசப்படும். மழைக்காலத்தில் விளக்குகளை நோக்கி எண்ணிலடங்கா பூச்சியினங்கள் வந்து குவியும். அவற்றை விரட்ட புதிய சேர்மானத்தோடு கொம்பன் விளக்கை உருவாக்க வேண்டும்.

அதற்கு மிக அதிகளவு தேவைப்படுவது, செவ்விரியனின் கழிவும் மலைநாகத்தின் கழிவும்தான். அவற்றைக் காடுகளுக்குள் சேகரிக்கும் வேலையை முதுபெண்கள் செய்கின்றனர். குறுங்கட்டி, தன் கிழவியோடு இந்தக் காடு முழுவதும் அலைந்தான். பாறை இடுக்குகளிலும், மரத்தின் ஓரங்களிலும், மக்கிய செத்தைகளுக்குள்ளும் அவற்றைத் தேடினர். மண்புழு அளவு கனம்கொண்ட காய்ந்த குச்சியைப் போன்று கிடக்கும் செவ்விரியனின் கழிவை எடுத்து இச்சிமரப் பிசினைக் கலந்து கொம்பன் விளக்கின் மேல் மெழுக வேண்டும். அந்தச் சேர்மானத்தில் விளக்கின் சுடர்பட்டுக் கருகி மேலெழும் புகையும் வாசனையும் காட்டின் எந்தப் பூச்சியையும் நெருங்கவிடாது. 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p1
இந்த மழைக்காலம் தொடங்கும் முன்பிருந்தே கிழவியோடு சேர்ந்து இந்த மலையெங்கும் அலைந்து திரிந்தான் குறுங்கட்டி. எனவே, அவனுக்கு இந்தக் காடு மிக நன்றாக வசப்பட்டிருந்தது.

சிற்றாற்றைக் கடந்து மேலே ஏறியவுடன் முடிநாகனை முந்திக்கொண்டு பாய்ந்தன குறுங்கட்டியின் கால்கள். சிறு இடறும் இல்லாமல், மிகத்தெளிவாக வளைந்து, நெளிந்து, பாறைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருந்தான் அவன். இளமனும் உளியனும் ஆயுதங்களைக் கவனமாக ஏந்திப் பிடித்தபடி ஓடிவந்துகொண்டிருந்தனர். தங்களுக்குள் ஒரு சொல்கூட பேசிக்கொள்ளாதபோதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் கவனம் செலுத்தினர். எல்லோரையும் ஓடவிட்டு, கடைசி யாக வந்துகொண்டிருந்தான் முடிநாகன். அவனின் கண்கள் விலங்குகள் ஏதேனும் தெரி கின்றனவா எனத் துழாவின. பின்னிரவின் சரிபாதி நேரத்தில் அவர்கள் எவ்வியூருக்குள் நுழைந்தனர்.

பாரியை எழுப்பிய வீரர்கள், “மாணவர்கள், அவசரமாகப் பார்க்க வந்துள்ளனர்” எனச் சொன்னார்கள்.

பாரிக்குக் காரணம் புரியவில்லை. ஆனாலும், அவர்களிடம் விளக்கம் கேட்பதைத் தவிர்த்தபடி எழுந்து வெளிவாசலுக்கு வந்தான். மாணவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் மூச்சிரைத்தபடி கைகால்களை நீட்டிக் கிடந்தனர். பாரி வந்ததும் சட்டென எழுந்திருக்க நினைத்தனர். முடியவில்லை.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p3
ஐவரையும் பார்த்தான் பாரி. முடிநாகன் மெள்ள எழுந்தான். ‘பேசப்போகும் வார்த்தை, தொண்டைக்குழிக்குள் எவ்வளவு கசப்பைக் கொட்டப் போகிறதோ?’ என்ற அச்சம் மேலெழுந்தது. பாரியை எழுப்பும்படி வீரர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கும் முன்பே, இருமுறை வயிறு குமட்டி வாந்தி எடுத்துவிட்டான். உதவி செய்யவந்த இளமனால், ஒற்றைச் சொல்லுக்குமேல் பேச முடியவில்லை. ஓடிவந்த களைப்பும் தாகமும் தொடர்ந்தன; எச்சில் ஊறுவதால், கசப்பு நிற்காமல் சுரந்துகொண்டிருந்தது. அவற்றையும் மீறி சிறு சொல் பேசினாலே, உமட்டலால் குடல் வெளிவருவதைப்போல அடிவயிறு பிரட்டிக்கொண்டு வருவதை மாணவர்களால் தாங்க முடிய வில்லை. “ஏதோ சொல்ல வருகிறார்கள். என்னவென்று புரியவில்லை” என்றுதான் வீரர்கள் பாரியிடம் சொன்னார்கள்.

முடிநாகன் எழுந்து நின்று மீண்டும் கசப்பை விழுங்க முடிவுசெய்தபடி சொன்னான், “தேக்கன் உங்களை அழைத்துவரச் சொன்னார்.”

முடிநாகனின் முகத்தை உற்றுப் பார்த்தான் பாரி. ஊறிப்பெருகும் கசப்பு அவனின் நாக்கைப் பிடுங்கிக் கொண்டிருந்ததை அந்த முகம் வெளிப்படுத்தியது. ‘தேக்கன் ஏன் என்னை அழைத்துவரச் சொல்ல வேண்டும்... இரவோடு இரவாக இவர்களை மட்டும் ஏன் அனுப்பியுள்ளான்?’ எனச் சிந்தித்தபடியே ஒவ்வொருவரையும் பார்த்தான். கைகால்கள் எல்லாம் இழுபட்டு, ஆங்காங்கே குருதி கசிந்தபடி கிடந்தனர்.

‘வழக்கமாகக் காடறிய உள்ளே அழைத்துச் சென்றுதான் பயிற்சி கொடுப்பான் தேக்கன். இம்முறை உள்ளே அழைத்துச் செல்லவே பயிற்சி தேவை என முடிவுசெய்துவிட்டான்போலும்’ எனத் தோன்றியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p21
‘கேள்வி கேட்டு இவர்களை மேலும் கசப்பை விழுங்கவிட வேண்டாம்’ என்று முடிவுசெய்த பாரி, “ஓய்வெடுங்கள். காலையில் போவோம்” என்று சொல்லிவிட்டு, மாளிகை நோக்கித் திரும்பினான். திரும்பிய அவனின் கையை, சற்றும் எதிர்பாராமல் இறுகப் பற்றினான் முடிநாகன்.

உடன் இருந்த வீரர்களுக்கு என்னவெனப் புரியவில்லை. முடிநாகனின் கழுத்து நரம்பெல்லாம் விடைத்து, கண்கள் பிதுங்கின. அவனின் தோள்பட்டைகள் ரத்தவிளாறாக இருந்தன. அவனின் முகம் சொல்லவருவது என்னவெனப் புரியவில்லை. ஆனால், மாணவர்கள் மன்றாடுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.  

‘தேக்கன், முதல் நாளிலேயே பயிற்சியை இவ்வளவு கடுமையாக ஏன் தொடங்கினான்?’ எனச் சிந்தித்தபடியே “சரி, புறப்பட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் பாரி. மாணவர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர்.
சிறிது நேரத்தில் வெளியேறி வந்தான். குளிர் நடுக்கம் குறைவாகத்தான் இருந்தது. இருளின் கடைசி முடிச்சு அவிழ இன்னும் நேரம் இருந்தது.

“தேக்கன் எங்கே வரச்சொன்னார்?” எனக் கேட்டான் பாரி.

``ஆதிமலையின் எலிவால் முகட்டுக்கு” எனப் பதில் சொன்னது உளியன். `எப்படி இவ்வளவு துணிவு அவனுக்கு வந்தது?’ என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, கைகளால் தொண்டைக்குழியைப் பிய்த்து எடுப்பதைப்போல நெரித்தான். அதையும் மீறி குமட்டல் வெளிவந்துகொண்டிருந்தது.

பாரிக்கு வியப்பு அதிகமானது. `பயிற்சியின் முதல்நாளே இரவு முழுவதும் ஓடவிட்டு, மறுபடியும் அவ்வளவு தொலைவு ஏன் வரச்சொல்ல வேண்டும்?’ பாரி குழம்பியபடியே நின்றுகொண்டிருந்தான். பொழுதாகிக் கொண்டிருந்தது. மாணவர்களின் பதற்றம் அதிகமானது. இவ்வளவு நேரமும் பேசுவதைப்பற்றி நினைக்கவே முடியாமல் இருந்த ஆயன், சூழலைப் புரிந்துகொண்டு சொன்னான். “எதிரிகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.”

சின்ன புன்முறுவலோடு அவனைப் பார்த்தான் பாரி.

‘தேக்கன் சொன்ன கதையை உண்மை என நம்பியே இவர்கள் இவ்வளவு தொலைவு வந்துள்ளனர். தேக்கனின் பயிற்சி உடலுக்கும் அறிவுக்கும் சமஅளவு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும். இவர்கள் ஒன்றில் வெற்றிபெற, இன்னொன்றில் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

குதிரைப் பாதைகள் எல்லைப்புற மலைகளுக்குத்தான் இருக்கின்றன. `எலிவால் முகட்டுக்கெல்லாம் மனிதர்கள் நடந்து போவதே கடினம். முதல்நாளே இந்தக் கடினப் பயிற்சியை ஏன் கொடுத்தான் தேக்கன்? அதுவும் ஐந்து பேருக்கு மட்டும். இவர்களை மட்டும் சோதித்துப்பார்க்க சிறப்புக் காரணம் என்னவாக இருக்கும்?’ என எண்ணிய கணத்தில் மறுசிந்தனை வந்தது... ‘மற்ற அறுவரும் எந்தத் திசை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்களோ?’

`தேக்கனின் நோக்கம் எதுவாகவும் இருக்கட்டும். மாணவர்களை மீண்டும் தேக்கனிடம் கொண்டுசேர்க்கும் வரை நாம்தான் அவர்களுக்கு ஆசானாக இருக்க வேண்டும்’ என்று மனதுக்குள் முடிவுசெய்துவிட்டு, மாளிகைவிட்டு வெளியேறி வந்தான் பாரி. உடன் வீரர்களும் வந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p6
“இவர்களே இருள் அப்பிக்கிடக்கும் இந்தக் காட்டுக்குள் தனியாக வந்துள்ளனர். நான் வீரர்களோடு போனால், நன்றாகவா இருக்கும்?” என்றான்.

வீரர்கள் நின்றுகொண்டனர். பின்னால் வந்துகொண்டிருந்த மாணவர்கள் இந்த உரையாடலை அறியவில்லை.

எவ்வியூரின் எல்லை தாண்டிக் காட்டுக்குள் இறங்கும்போது மீண்டும் மாணவர்களின் கால்கள் வேகமெடுத்தன. பாரி, அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்தபடி வந்தான். ‘தேக்கன் நடத்தும் இந்தச் சோதனை ஓட்டம் மாணவர்களுக்கானதாக மட்டும் தெரியவில்லை. சேரர்கள் எந்நேரமும் போர்தொடுக்கும் வாய்ப்புள்ள இந்த வேளையில், எனக்குவரும் செய்திகளை விழிப்போடு கேட்டு நான் எப்படி முடிவெடுக்கிறேன் என என்னையும் சோதிக்கிறாரா? வீரகுடி ஆசானின் மனதில் என்னதான் இருக்கிறது?’ எனப் பாரி குழம்பினான்.

பாரி சிறுவனாக இருந்து காடறியச் செல்லும்போது தேக்கனாக இருந்தது இவரேதான். பகரியை வேட்டையாடி முதன்முறையாக தேக்கனாகி மாணவர்களை அழைத்துச்சென்றது அப்போதுதான். ஒரே காலத்தில் தேக்கன் மூலம் மாணவர்களும், மாணவர்கள் மூலம் ஆசானாகத் தேக்கனும் பயிற்சிபெற்றனர். ஆசானுக்கே முதன்முறையாக இருந்ததால், பயிற்சி இளகுத்தன்மையற்று மிகக் கடுமையாக இருந்தது. அந்த ஆழ்மனப்பதிவே இப்போதும் பாரியை அவ்வாறு  சிந்திக்கவைத்தது.

தேவாங்கு தன் கால்களால் பற்றி நிற்பதற்கு ஏற்ப, கூடை முழுவதும் குறுக்குக்குச்சிகள் செருகப்பட்டிருந்தன. சிற்றுருளைப்போல் நீள்வடிவுகொண்ட ஒரு கூடையில் பத்திலிருந்து இருபது தேவாங்குகள் வரை இருந்தன. ஒன்றின் மேல் ஒன்று அமுக்கி நசுங்கிவிடாதபடி குறுக்குக்குச்சியைக் கொடுத்து அந்தக் கூடை பின்னப்பட்டிருந்தது. எவ்வளவு வேகமாக ஓடினாலும், எந்தப் புதருக்குள் நுழைந்தாலும் தேவாங்குக்கு எந்தச் சேதாரமும் ஆகாதபடி அதை வடிவமைத்திருந்தனர்.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவன் காலம்பன். இவன் பறம்பு மலையைப் பார்த்ததில்லை. ஆனால், பலரும் சொன்ன குறிப்புகளைக்கொண்டு இந்தத் திட்டத்தை வடிவமைத்தான். மொத்தம் முப்பது பேர் வந்துள்ளனர். காரமலையின் முகட்டில் பத்து பேர் நின்றுகொண்டனர். நடுமலையின் முகட்டில் எட்டு பேர் நிற்கின்றனர். ஆதிமலையின் முகட்டில் ஏழு பேர் நின்றுகொண்டனர். ஐவர் மட்டும் கொற்றவைப் புதர் நோக்கி உள்ளே நுழைந்தனர்.

வரும்போது யார் கண்ணிலும் பட்டுவிடாமல் படுவேகமாக வந்துவிட முடியும் என அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், தேவாங்கைப் பிடிக்கும்போது காவல் வீரர்கள் பார்த்துவிட்டால் தப்பிச் செல்லுதல் எளிதல்ல. பறம்புநாட்டு வீரர்களின் ஆற்றல் இணையற்றது. எனவே, ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்களிடம் கூடையைக் கைமாற்றி எப்படியாவது பறம்புமலையை விட்டுக் கீழிறக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

அவர்கள் எதிர்பார்த்ததைப்போலவே, கொற்றவையின் கூத்துக்களத்துக்கு வந்தடைவது வரை யார் கண்ணிலும் படவில்லை. அங்கே காவல் வீரர்கள் இல்லாதது அவர்களின் வேலையை மேலும் எளிதாக்கியது.

தேவாங்கைப் பிடிக்க மூங்கில் குச்சியை வெட்டி, முனையில் தோற்பை போன்ற சுருக்குத் துணியைச் செருகினர். நீள்குச்சிகளைக்கொண்டு மிக விரைவாக அவற்றைப் பிடித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக சிறுவர்களை அழைத்துக்கொண்டு கிழவன் ஒருவன் வந்து நின்றதை அவர்களின் கூட்டத்தில் ஒருவன் பார்த்தான். சிறிது நேரத்தில் அந்தச் சிறுவர்கள் கூட்டம் போய்விட்டது. பிறகு எப்படி மீண்டும் வந்து கடவின் பின்னால் இருந்து தாக்குதல் தொடுத்தார்கள் என்பதுதான் காலம்பனுக்குப் புரியவில்லை.

அவன்தான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். தங்களை எப்படி அவர்கள் கண்டறிந்தார்கள் எனச் சிந்தித்தபடியே அவன் ஓடினான். இருளுக்குள் எளிதில் நுழைய முடியாத அடர்காட்டுக்குள் அவர்கள் நுழைந்துவிட்டதால், விரைவாக முன்னகர முடியவில்லை.

கூடையைச் சுமந்து சென்ற ஒருவன், மெள்ள முனகத் தொடங்கினான். “என்னால் முடியவில்லை” சத்தம் மட்டும் வெளிவந்தது. மற்ற நால்வரும் ஓடுவதை நிறுத்தி அவன் அருகில் வந்தனர். அவன் தளர்ந்தான். “என்ன ஆனது?” என்று மற்றவர்கள் விசாரிக்க, ``கடவின் மறைவிலிருந்து தாக்கியவனின் அடி நரம்புகளை ஏதோ செய்துவிட்டது. என்னால் கால்களை முன்னகர்த்த முடியவில்லை” என்று சொல்லிக்கொண்டே மண்டியிட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p4
காலம்பன் அவனைத் தாங்கிப் பிடித்தான். மற்றவர்கள் அவன் முதுகில் இருந்த கூடையைக் கழற்றினார்கள். ``நாங்கள் தோள்களில் தாங்கலாக உன்னைத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறோம். கவலைப்படாதே” என்றனர்.

இருவர் அவனின் கைகளைத் தங்களின் தோள்களின் மேல் போட்டபடி அவன் நடந்துவர உதவி செய்தனர்.

பொழுது விடிந்துகொண்டிருந்தது. கதிரவன் கண்ணில் படவில்லை. ஆனால், காடு முழுவதும் ஒளி ஊடுருவிக்கொண்டிருந்தது. தேக்கன், அடர்காட்டுக்குள் போகாமல் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துப் போனான். அது  சற்று அதிகத் தொலைவுதான். ஆனால், அந்த அடர்காட்டைக் கடப்பதற்கான நேரத்தில் பாதி நேரமே ஆகும்.

மாணவர்கள் களைத்துப்போயினர். ஆனாலும், `நாம் சென்றுவிடலாம்’ என்ற நம்பிக்கையோடு போய்க்கொண்டிருந்தனர். ‘சரியான நேரத்துக்குள் பாரி வந்து சேர்ந்தால், மீதமுள்ள நால்வரையும் எலிவால் முகட்டிலேயே வெட்டிச்சாய்க்கலாம்’ என்ற வெறி ஏறிக்கொண்டிருந்தது. ‘மாணவர்கள் என்ன சொல்லி பாரியை அழைப்பார்கள்? அங்கு கேட்கப்படும் கேள்விக்கு இவர்கள் கசப்பை விழுங்கிப் பதில் சொல்லியிருப்பார்களா? என்ன சொல்ல வேண்டும் என்பதை நாம் சொல்லி அனுப்பியிருக்கலாமோ?’ எனத் தோன்றியது. இந்த எண்ணங்களோடு ஓடிக்கொண்டிருந்த தேக்கனுக்கு, சிற்றாற்றின் வலதுகரையில் சுண்டாப்பூனை ஒன்று இருப்பதாக இரு நாள்களுக்கு முன் வீரன் ஒருவன் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது. `நாம் அதை இவர்களிடம் சொல்லாமல் அனுப்பி விட்டோமே, தீங்கு ஏதும் நேர்ந்திருக்குமா!’ என்று எண்ணிய கணத்தில் பதற்றம் கூடியது.
மாணவர்கள், பாரியுடன் சிற்றாற்றைக் கடந்தனர். நேற்று மாலை ஓடத்தொடங்கிய அவர்கள், இன்னும் நின்றபாடில்லை. தேக்கன் சொல்லி அனுப்பிய சொல் அவர்களை நிற்கவிடாமல் துரத்தியது.

மாணவர்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்தபடி சற்றே பெருநடை நடந்துவந்தான் பாரி. ஒவ்வொருவனின் நடையையும் வேகத்தையும் கவனித்தான். முடிநாகனின் பாதம் முழுவதும் மண்ணை அப்பி எழுந்தது. இளமனின் கால்விரல்கள் விரிவுகொள்ளாமல் இருந்தன. உளியன் தேவைக்கு அதிகமான உயரத்துக்குக் காலைத் தூக்குகிறான். ஆயனின் நடைதான் ஒப்பீட்டளவில் சரியாக இருந்தது. அதனால், மற்றவர்களைவிட அவனால் வேகமாகப் போக முடிந்தது.

கால்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்னையைச் சொன்ன பாரி, காட்டு விலங்குகள் ஒவ்வொன்றின் நடையைப் பற்றியும், கால் அமைப்பைப் பற்றியும் விளக்கத் தொடங்கினான். அவற்றின் வேகத்துக்கும் பாதத்தை அவை பயன்படுத்தும் உத்திக்கும் உள்ள உறவை அவன் விளக்கிச் சொல்லும்போது மாணவர்கள் சற்றே எரிச்சலோடு அதைக் கேட்டு நடந்தனர்.

எவ்வளவு முறை சொற்களாலும் சைகையாலும் சொல்லியும் பாரியைவிட முன்னால் ஓடிவிட முடியவில்லை. களைத்துப்போன தங்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்தே வருகிறான் என்ற கோபம் எல்லோருக்கும் இருந்தது. என்ன செய்வது எனத் தெரியவில்லை.

இந்நிலையில்தான் பாரியின் கண்களுக்கு அந்தச் சுருள்வால் தெரிந்தது. தலை சாய்த்து உற்றுப்பார்த்தான். புற்களுக்குள்ளே தடித்த செங்காவிநிறச்சுருள் தனித்துத் தெரிந்தது. அவனின் ஐயம் உறுதியானது. அவனை அறியாமலே கால்கள் நின்றன. சின்னதாக ஒலியெழுப்பி மாணவர்களை நிற்கச் சொன்னான். யாரும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தளர்ந்தபடி நடந்தனர். சற்றே சத்தமாகச் சொன்னான், “அங்கே நிற்பது சுண்டாப்பூனை; அப்படியே நில்லுங்கள்.”

சுண்டாப்பூனையின் வால், மேல் நோக்கிச் சுருண்டுதான் இருக்கும்; ஒருபோதும் கீழே தொங்காது. அதன் பற்கள் பன்றியின் பற்களைப் போன்றது. கடவாயில் இருந்து உதடு பிளந்து மேல் நீண்டிருக்கும். மனிதனை அதன் முகம் உரசிப் போனாலே, வாள்கொண்டு சீவிப் போனதைப்போல் ஆகிவிடும். அது நீளத்திலும் உயரத்திலும் புலியைவிட சற்றே குறைவு. ஆனால், வேகமும் தாக்கும் திறனும் புலியைவிட அதிகம். சுண்டாப்பூனையைக் கண்டால் புலி ஒதுங்கிப்போகும் என்பார்கள்.

மனிதர்கள் இதைப் பார்த்துவிட்டால் அப்படியே நின்றுவிட வேண்டும். அது சில நேரம் பக்கத்தில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டுப் போகும். சில நேரம் தொலைவில் இருந்தபடியே போய்விடும். ஆனால், அதைப் பார்த்தபிறகு ஓடத் தொடங்கினால், அவ்வளவுதான். அதன் வேட்டையிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. இந்தக் காட்டில் அதற்கு இணையாக ஓடும் இன்னோர் உயிரினம் கிடையாது.

அதைப் பார்த்த கணம் அப்படியே நின்றான் பாரி. மாணவர்கள் நிற்காமல் நடந்தனர். தொலைவில் செடிகளுக்கு இடையில் தெரியும் சுருள்வாலை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. பாரிக்கு, சின்னதாகப் பதற்றம் வரத் தொடங்கியது. “நில்லுங்கள்” என்று மீண்டும் மெள்ளக் கத்தினான். முடிநாகனுக்கு தேக்கன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, `உன் பின்னால் ஈன்ற புலி துரத்துகிறது என நினைத்துக்கொண்டு ஓடு’ என்ற வார்த்தைகள் எதிரொலித்தபடி இருந்தன. ‘எதையோ விளக்குவதற்காக நிற்கச் சொல்கிறார் பாரி’ என்று நினைத்தபடி எரிச்சலில் சற்றே வேகத்தை அதிகப்படுத்தினான் முடிநாகன்.

“என்ன செய்கிறாய் நீ?” என்று பாரி குரல் உயர்த்திக் கத்தியபோது மற்றவர்களும் முடிநாகனைத் தொடர்ந்து ஓடத் தொடங்கினர். கண நேரத்தில் ஏதேதோ நடப்பதுபோல் ஆனது. ஈட்டியை இறுகப் பிடித்தான் பாரி. ‘அது நமக்கு அருகில் வந்தால் மாய்த்துவிடலாம். முன்னால் போகிறவனை ஓர் அடி அடித்துவிட்டு பாய்ந்து ஓடினால் போதும். முதுகுக்கறி எதுவும் மிஞ்சாது. ஏன் இவர்கள் நாம் சொல்வதைக் கேட்க மறுக்கின்றனர்?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, மாணவர்களின் எண்ணம் வேறொன்றாக இருந்தது. பதறி ஓடவேண்டிய நேரத்தில் நிற்கச் சொல்லிக் கத்தும் பாரியின் சொல்லை மறுப்பதன் மூலம் தங்களின் கோபத்தை வெளிக்காட்டினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p5
அது இவர்களை நோக்கி வரத் தொடங்கியது. `நாம் எவ்வளவு போராடினாலும், அதனுடைய ஓர் அடி எவன்மீதாவது பட்டால் போதும். அவன் சாவதைத் தவிர வேறு வழியில்லை’ எனப் பாரியைப் பதற்றம் சூழ்ந்தது. கண நேரத்தில் பாய்ந்து முன்னால் போன பாரி, முடிநாகனின் கழுத்தைப் பிடித்து இழுத்துவிட்டான். அவன், பின்னால் சாய்ந்த வேகத்தில் நான்கு மாணவர்களும் மிரண்டு நின்றனர். விரல்களை ஓங்கியபடி “அமைதியாய் நில்லுங்கள்” என்றான் பாரி. அவர்கள் அப்படியே நின்றனர்.

சுண்டாப்பூனையும் சிறிது நேரம் தொலைவில் இருந்தபடியே பார்த்தது. பின்னர் வேறு பக்கம் சென்று மறைந்தது. அது போனதை உறுதிப்படுத்திக்கொண்டபிறகு சொல்லத் தொடங்கினான் பாரி. சுண்டாப்பூனையைப் பற்றிக் கேள்விப் பட்டிராத அவர்களுக்கு அதன் தன்மையை விளக்கினான். அவர்கள் அதைக் கவனித்ததுபோல் தெரியவில்லை. அவர்களின் கவனம் முழுவதும் ஆசானிடம் இருந்தது.

பாரியின் மனதில் சின்னதாக வருத்தம் எழுந்தது. `மாணவர்களை இழுத்து நிறுத்த வேண்டியதாகிவிட்டதே!’ என நினைத்துக் கொண்டே அவர்களோடு சேர்ந்து பேசியபடி ஓடினான்.

கண்ணில் படும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தான். “எங்களால் வேகமாக ஓட முடியவில்லை. நீங்களாவது முன்னால் போங்கள்” என்று முடிநாகன் அரைகுறை வார்த்தைகளிலும் கை அசைவிலும் சொல்லிப்பார்த்தான். ஆனால், பாரி அதைப் பொருட்படுத்தவில்லை. மாணவர்களுக்குச் சொல்லித் தருவதிலே கவனமாக இருந்தான். ஏதோ ஒருவகையில் தேக்கன் தனக்கு வைக்கும் சோதனையாக அவன் மனதில் பதிந்தது.

`மலையின் மேற்குப் பக்கக் காட்டுக்குள் கடந்த மாதம் முழுவதும் அலைந்தோம், கீழ்த் திசையின் உள்காடுகளுக்குள் நான் வந்து நீண்டகாலமாகி விட்டது. சேரனோடு போர் தொடங்கிவிட்டால் மேற்குப் பக்கமிருந்து நம் கவனம் திசை திரும்ப நெடுங்காலமாகிவிடும். எனவே, கீழ்த் திசைக் காட்டின் இண்டு இடுக்குகளுக்குள் அலைந்து திரிவது அவசியம் எனத் தேக்கன் கருதியிருக்கலாம். மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பாகவும் இது அமையும் எனக் கருதியிருப்பார்’ என்று நினைத்துக்கொண்டான் பாரி.

ஒரு பாறையின் வளைவில் கடந்ததும் எதிரில் குத்துக்கோரை முளைத்துக்கிடந்தது. “அதில் மிதித்து நடக்கக் கூடாது. அதன் முனைகள் கால்விரல்களின் இடைவெளிகளை எளிதில் அறுத்துவிடும்” என்று சொல்லியபடி சற்று விலகி ஓட வழி காட்டினான். சிறிது தொலைவில் சங்கஞ்செடி பெரும்புதர்போல் கிடந்தது. “அதில் மிதித்து நடந்தால், இலையில் உள்ள பால் நம்மீது பட்டவுடன் அரிக்கத் தொடங்கும். எனவே, மிதிக்காமல் விலகிச் செல்லுங்கள்” என்றான். போகும் வேகம் கூடவில்லை. மேலும் கீழுமாக அலைக்கழிப்பதே அதிகமாகிக்கொண்டிருந்தது.

மாணவர்கள், மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தனர். பின்னால் வந்த பாரி, “நில்லுங்கள்” என்று சத்தம் கொடுத்தான். கோபம் மேலிட நின்றனர். அருகில் மிகப்பெரிய செங்கிளுவை மரம் இருந்தது. அதன் கிளை இடுக்கில் எரிவண்டின் கூடு அப்பியிருந்தது. மாணவர்களுக்கு அதைக் காட்டியபடி பாரி சொன்னான், “மரத்தின் முண்டுபோல பெரியதாக இருக்கிறதே, அதுதான் எரிவண்டுக் கூடு. அந்தக் கூட்டைத் தொந்தரவு செய்தால் அவ்வளவுதான்; நம்மை விரட்டி விரட்டிக் கொத்தும். எவ்வளவு விரைந்து ஓடினாலும் அதனிடமிருந்து தப்பிப்பது எளிதல்ல.”

பாரி சொல்லி முடிக்கும்போது, முடிநாகன் விட்டான் ஒரு கல்லை. அது எரிவண்டின் கூட்டைப் பிய்த்துக்கொண்டு போனது. ``என்ன செய்கிறாய் நீ?” என்று பாரி கேட்டு முடிக்கும் முன், படை திரட்டி வந்தது எரிவண்டுக் கூட்டம். மாணவர்கள் வெறிகொண்டு ஓடினர். செடி, கொடிகளில் முண்டியும் புதருக்குள் நுழைந்தும் ஓடிய அவர்களின் கால்கள் பலமடங்கு வேகம்கொண்டன. எரிவண்டின் சத்தம் கேட்கக் கேட்கக்  கால்கள் காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தன.  

‘என்ன ஆனாலும் பாரி நம்மைக் காப்பாற்றுவான்’ என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்களின் கால்கள் பதற்றமின்றிப் பறக்க முயன்றுகொண்டிருந்தன. முன்னால் ஓடிக்கொண்டிருந்த முடிநாகன் மனதில் எண்ணிக்கொண்டான், `தேக்கனின் சொல்லைக் காப்பாற்றுகிறேன். பாரியையும் சேர்த்து வழிநடத்துகிறேன்.’

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 2:09 pm

நேற்று மாலை ஓடத்தொடங்கியவர்கள் இன்னும் நின்றபாடில்லை. தேக்கன் வழக்கம்போல் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். மாணவர்கள் வரவேண்டும் என்பதற்காகச் சற்றே வேகம் குறைத்து ஓடினான். அவர்கள் விடாப்பிடியோடு ஓடிவந்தனர். அவர்களின் பிரச்னை ஓடுவதில் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பதால், தண்ணீர் தாகமெடுத்தது. நீர் குடித்துக் கசப்பை விழுங்கும் துணிவு யாருக்கும் இல்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85a
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சாமப்பூ, கார்காலத்தில்தான் பூக்கத் தொடங்கும். அதன் பிறகே மாணவர்களை அழைத்துக்கொண்டு காடறியப் புறப்படும் சடங்குகள் தொடங்குகின்றன. குலநாகினி மலைவேம்பின் இலையில் சாறெடுத்து அடித்தொண்டையில் ஊற்றும் நிகழ்வுதான் காடறிதலின் தொடக்கம்.

காட்டின் ஆதிக்கசப்பு அது. நஞ்சினும் மேலான கசப்பு அது. அக்கசப்பினைப்பற்றி எவ்வியூரில் யாரும் எப்போதும் பேசவே மாட்டார்கள். வாரக்கணக்கில் விடாது சுரக்கும் கொடுங்கசப்பை விழுங்கவேண்டியதிருக்கும் எனத்தெரிந்தால் சிறுவர்கள் காடறியப் புறப்படவே தயங்குவார்கள். எனவே, இதுபற்றிப் பேசுவதேயில்லை.

கொற்றவையை வழிபட்டபின் ஆதிமலையின் செங்குகையை அன்றிரவே அடைவார்கள். அதன்பின் சில மாதங்கள் அங்குதான் தங்குவார்கள். மழைக்காலமாதலால், அதிகம் தாகமெடுக்காது. உணவு வழக்கம்போல் உண்ணும் முறையில் இருக்காது. நாள்தோறும் ஒரே ஒரு காய் மட்டுமே தரப்படும். கடித்தும் சுவைத்தும் உண்ணவேண்டியிருப்பதால், விழுங்கும் தேவை மிகமிகக் குறைவே. காயின் துவர்ப்பு, தேங்கி நிற்கும் கசப்பை இறுகப்பிடித்து இறங்கும். கசப்பும் துவர்ப்பும் சுவைநாளங்களின் அடிவேரில் நிலைகொள்ள வைக்கப்படும்.

காயின் அளவும் நாளாக ஆகச் சிறிதாகிக்கொண்டே இருக்கும். இறுதியில் நெல்லிக்காய் அளவேயுள்ள கனி மட்டுமே ஒரு நாளைக்குப் போதுமானதாக மாறிவிடும். பிறந்ததில் இருந்து நன்றாக உண்டு வளர்ந்த  அவர்களின் உடல் இறுகுவதற்கான பயிற்சி அது. தசைகள் எலும்புகளோடு ஒட்டிப் பாறையின் இறுக்கம் உடலுக்கு வாய்க்கும். அதன்பிறகு, செங்குகையிலிருந்து வெளியேறுவார்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85b
குகைவாழ்க்கை முடியும்போது கசப்பு மட்டுமன்று, எல்லா சுவைகளும் நாக்கிலிருந்து வடிகட்டப்பட்டுக் கீழிறக்கப்பட்டிருக்கும். மேல்தாடை மட்டுமே சற்று சுவை உணர்வுகொள்வதால், நடுவில் தாழ்ந்திருக்கும் மனித நாக்கு மேல்நோக்கி உயரவே தொடர்ந்து முயலும்.

தலைகீழாகப் புரண்டிருக்கும் யானை நாக்கினைப் போன்ற வடிவம் அது. இம்மாற்றம் நிகழும்போது, பேச்சுக்குழன்று பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகும். காட்டின் மொழி விதவிதமான ஓசைகளைக்கொண்டது. அந்த ஓசைகளை எழுப்ப மனித நாக்கின் இயல்பான வடிவத்தால் முடியாது. பறவைகளும் விலங்குகளும் எழுப்புமோசைக்கு எதிரோசை கொடுக்க மேல்தாடையைத் தொட்டுக்கிடக்கும் நடுநாக்கே அடிப்படை ஆதாரம்.

ஓசையெழுப்பும் முழுத்திறனும் ஒருவனுக்கு வரும்வரை ஒற்றைக் கனியின்றி வேறு உணவு உண்ண அவனை அனுமதிப்பதில்லை. காடறிதலின் முதற்பயிற்சி காட்டின் மொழியைக் கற்றுக்கொள்ளுதல்தான். அதற்கான தொடக்கத்தைத்தான் குலநாகினி அடிநாக்கில் வைத்து அனுப்புகிறாள். அங்கிருந்து தொடங்கி மரநாயில் வந்து முடிகிறது அது.

காட்டு விலங்குகளின் ஓசையை அறிவதில் மிகக்கடினமானது மரநாய் ஓசைதான். மரமேறி விலங்குகளின் வகையிலும் சேராத, மண்மீது நடக்கும் விலங்கின் வகையிலும் சேராத மரநாய் எழுப்பும் ஓசை, முற்றிலும் மாறுபட்ட  தன்மையைக்கொண்டிருக்கும். அதனைத் துல்லியமாகக் கவனித்து அறிதல் எளிதன்று. அவ்வோசையின் முடிப்பில் இருக்கும் சிறுசுழிவை நுட்பமாகக் கவனித்து அறியவில்லையெனில் எளிதில் ஏமாற்றமடைவோம். ஓசையின் முடிப்பில் இருக்கும் அச்சுழிவை மீண்டும் மீண்டும் எழுப்பிப்பார்த்தே உணரவும் அறியவும் முடியும்.

கீழ்வளைந்திருந்த நடுநாக்கு இப்பயிற்சியினால் மேல்நோக்கி எழுந்து பின் சமதளமடையும். இவை நிகழ்ந்து முடியும்போது, உள்ளுக்குளிருந்து விடாது சுரந்துகொண்டிருந்த கசப்பு எப்போது, எங்கே மறைந்ததென்ற நினைவே இருக்காது. 

இப்பயிற்சிகள் எதுவும் நிகழாமல், அடித்தொண்டையில் வைக்கப்பட்ட கொடுங்கசப்பு உள்ளிறங்கியபடியே இருக்க மாணவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட ஓட தாகமெடுக்கிறது.  நீரை அருந்தவோ, வேறு உணவை உண்ணவோ முடியவில்லை. ஒரு மிடறு எச்சில் உள்ளே போனாலே, கொடுங்கசப்பு உள்ளிறங்கும் என்பதை நினைத்து தேக்கன் மிகவும் கவலைகொண்டிருந்தான். ‘அவர்களின் தொண்டைக்குழி முழுவதும் இந்நேரம் புண்ணாகியிருக்கும்.  இதுவரை காடறியப்போன மாணவர்கள் யாரும்  கண்டிராத கொடிய சோதனையை இவர்கள்  கண்டுகொண்டிருக்கின்றனர். இவர்களின் ஓட்டத்தை நிறுத்தச் சொல்லவும் முடியாது. ஓடியபடியே இருந்தால் இவர்கள் என்ன ஆவார்கள் என்றும் தெரியவில்லை’ எனச் சிந்தித்தபடியே தேக்கன் ஓடினான். ஆனாலும் அவனது கவனம், வேகத்தைக் கூட்டும் செயலோடு தன்னையறியாமலே இணைந்திருந்தது.

அடர்காட்டினுள் புகுதல் எளிதல்ல. செடிகொடிகளை விலக்கியும் அறுத்தும் முன்னகர நினைத்து எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் நகரமுடியாத பெரும்புதரை நோக்கியே நகர்த்திச்செல்லும் ஆபத்துண்டு. இயற்கையின் தன்மைகளைத் துல்லியமாக அறிந்தவர்களாகத் தான் அவர்கள் இருந்தனர்.எனவே, எக்காட்டுக்குள்ளும் நுழைந்து வெளியேறும் திறன் கொண்டிருந்தனர்.  வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85c

காலம்பன், சரிவுகளில் கற்கள் உருளாமல் சரசரவென மேலேறிக்கொண்டிருந்தான். அடிபட்டவனால் வேகமாக நடக்க முடியவில்லை. மற்றவர்கள் உதவிசெய்தாலும் அவனால் ஒத்துழைக்க முடியவில்லை. ஆனாலும், அவனை விட்டுவிடக் கூடாது என்பதில் நால்வரும் உறுதியாக இருந்தனர்.

நன்றாக விடிந்துவிட்டது. பின்னிக்கிடக்கும் மரங்களுக்கிடையில் ஊடுருவிக் கதிரவனின்  ஒளிக்கதிர்கள் கீழிறங்கிக்கொண்டிருந்தன. ‘நம்மை அவர்கள் பார்த்துவிட்டார்கள். எனவே, விரைவாகச் செல்ல வேண்டும். காட்டை அவர்கள் அளவுக்குப் புரிந்தவர்கள் யாருமில்லை. எனவே, அவர்களின் தாக்குதல் எப்படி இருக்குமெனக் கணிக்க முடியாது. எப்படி இருந்தாலும் நம்மைக் காட்டுக்குள் வைத்து ஒன்றும் செய்ய முடியாது’ என்று உள்ளுக்குள் எண்ணங்கள் ஓடியபடி இருக்க, காலம்பன் வேகத்தைக் கூட்டிக்கொண்டேயிருந்தான்.

வழியமைத்தபடி முன்னால் ஓடிக்கொண்டிருந்த காலம்பனுக்கு இக்காட்டில் ஏதோ ஒரு தன்மை வேறுபட்டிருப்பதாகத் தோன்றியது. என்ன என்பது புலப்படவில்லை. பின்னால் வருபவனின் முனங்குதல் சற்றே அதிகமானபடி இருந்தது. நூலாம்படையைக் கிழித்து விலக்குவதைப்போல கைவிரல்களால் எவ்வளவு பெரிய மரக்கொடிகளையும் எளிதில் விலக்கி முன்னேறினான்.

நேரமாகிக்கொண்டிருந்தது. காலம்பனின் கவனம் கூர்மைகொண்டதாக இருந்தது. மேலேறிக்கொண்டிருந்தவன் சட்டென நின்றான். “பொழுது விடிந்ததிலிருந்து பறவைகளின் குரலோசை எதுவும் கேட்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா?”

மற்றவர்களுக்கும் அப்போதுதான் அது பிடிபட்டது. மேலே அண்ணாந்து பார்த்தபடி பார்வையை அங்குமிங்குமாக ஓடவிட்டனர். ‘செடிகொடிகளை விலக்கியும், செத்தைகளை மிதித்தும் வேகவேகமாக வந்துகொண்டிருந்ததால், பிற ஓசைகளைக் கூர்ந்து கவனிக்காமல் இருந்துவிட்டோம்’ என்று தோன்றியது. ‘பறவைகள் ஏன் காட்டின் இப்பகுதியில் இல்லை’ என்று சிந்தித்த கணத்தில் காலம்பன் சொன்னான், “ஒருவேளை, இது இரத்தச்சிலந்திகள் இருக்கும் காடாக இருக்கலாம். அதனால்தான், பறவைகள் தங்கவில்லை.”

ஒருகணம் திகைத்து நின்றனர். “இக்காட்டின் நடுப்பகுதியில் நாம் நிற்கிறோம். எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேற வேண்டும்” என்றான்.

அடிபட்டவன் சொன்னான், “என்னைத் தூக்கிச் செல்வதன் மூலம் எல்லோரின் ஓட்டமும் தடைபடும். நாம் கொண்ட உறுதி நிறைவேறாமற் போய்விடும். எனவே, என்னை விட்டுவிட்டு இக்கூடையைக் கொண்டுசெல்லுங்கள். விரைந்து இக்காட்டைவிட்டு வெளியேறுங்கள்.”

காலம்பனாலும் மற்றவர்களாலும் இப்போது அவன் சொல்வதை மறுக்க முடியவில்லை. கூடையைத் தோள்மாற்றினர். சற்றுக் குறைந்திருந்த தேவாங்கின் சத்தம் மீண்டும் கூடியது. தோள்களில் பற்றியிருந்த அவன் கைகளை விலக்கமுடியவில்லை. அவர்களின் தயக்கத்தை உணர்ந்த அவன் வலியை மீறிய திறன்செலுத்தி கைகளைத்தூக்கி அவர்களிடமிருந்து விலக்கிக்கொண்டான்.

அவர்களைப் பார்த்தபடி அருகிருந்த ஈருவல்லி மரத்தின் ஓரம் சரிந்து உட்கார்ந்தான். அவர்கள் மீண்டும் முழுவேகத்தோடு ஓடத்தொடங்கினர். அவர்களைவிட விரைவாக அவை மரத்தின் மேலிருந்து இறங்கத்தொடங்கின.

திமலையின் இரண்டாம் மடிப்பை அடையும் வரை அவர்கள் ஓட்டம் குறையவே இல்லை. எரிவண்டுகளின் தாக்குதலைப் பாரி எப்படிச் சமாளிக்கப்போகிறானோ என்று நினைத்தபடி முன்னால் ஓடினர். ஒருமுறைகூட திரும்பிப் பார்க்கவில்லை. கொப்புகளைப் போகிறபோக்கிலே உடைத்து, கிட்டநெருங்கும் வண்டுகளை அடித்து விலக்குவது, முன்னால் செல்பவனுக்குப் பாதையின் திசையைச் சொல்வதென்று பாரியெழுப்பிய ஓசைகள் மட்டுமே ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருந்தன.

பாரி சொல்லும் திசை எங்கு போகிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. ஈன்ற புலியல்ல, அதனைவிட வேகமாகப் பறக்கும் எரிவண்டு துரத்துகிறது; தப்பிக்க மட்டுமல்ல, எதிரிகளைத் தாக்கவும் நிகழும் ஓட்டமிது.  உச்சவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தனர் மாணவர்கள். ‘நாள்முழுவதும் ஓடினாலும் எரிவண்டுகள் விரட்டுவதை விடாது. மாணவர்கள் இன்னும் சிறிதுநேரத்தில் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்’ என்று சிந்தித்த பாரி, வழியைச் சற்றே மாற்றி சரிவுப்பாறைகளுக்கு அருகிலிருக்கும் விருகமரத்தை நோக்கி அவர்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85d
முன்னால் ஓடிக்கொண்டிருந்த முடிநாகன் விருகமரத்தைக் கடந்தபோது, பாரி ஓட்டத்தை நிறுத்தாமலேயே குனிந்து கற்களை எடுத்தான். எரிவண்டின் ஓசை காதைவிட்டு அகலாமல் துரத்தியபடியே இருந்தது. முடிநாகன் மரத்தை ஒட்டி இடப்புறம் திரும்பும்போது பாரி, கல்லை எடுப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான்.

‘விரட்டிவரும் இத்தனை வண்டுகளைக் கல்லால் அடித்து வீழ்த்திவிட முடியுமா? அதுவும் பறக்கும் வண்டுகளை ஒவ்வொன்றாய்க் கல்லெறிந்து வீழ்த்துவதென்பது முடிகிற செயலா? அதற்குள் வண்டு எத்தனை பேரைக் கடிக்குமோ? இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இவ்வளவு வேகமாக ஓடமுடியும்? அவசரப்பட்டுக் கூட்டைக் கலைத்துவிட்டோமோ?’ என்று சிந்தித்தபடியும் பாரியின் செயலைப் புரிந்துகொள்ள முடியாமலும் ஓடினான் முடிநாகன்.

எடுத்த கல்லை முழுவிசையோடு குறிபார்த்து எறிந்தான் பாரி. அவனது இலக்கு எரிவண்டல்ல; பாறையின் பொடவு. அப்பொடவுகளுக்குள் என்ன இருக்கிறது எனப் பாரிக்குத் தெரியும். அவன் எறிந்த கல், பொடவின் விளிம்பில்பட்டுத் தெறித்தது. கற்கள் சிதறிச் சரிந்தன.  கல்லோசை கேட்டதும் பொடவுக்குள் இருந்து கருங்கொண்டை வல்லூறுகளின் நீள்கழுத்துகள் எட்டிப்பார்த்தன. பார்த்த கணத்தில் அவை சிறகு விரித்து இறங்கத் தொடங்கின. சிறுபூச்சிகளை விட்டில் வேட்டையாடுவதைப் போல எரிவண்டுகளை வேட்டையாடத் தொடங்கின கருங்கொண்டை வல்லூறுகள்.

சடசடக்கும் வல்லூறுகளின் இறகுகள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. ஓடிக்கொண்டிருந்த கால்களின் வேகத்தைத் தளர்த்துவதற்குள் காற்றில் எரிவண்டுகளின் ஓசை எதுவும் மிச்சமில்லை. இறங்கிய வல்லூறுகள் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மலைப்பொடவை நோக்கி மேலேறின.

வல்லூறு ஒன்றின் அலகிலிருந்து உதிர்ந்த எரிவண்டின் இறகு ஒன்று முன்னால் ஓடிக்கொண்டிருந்த குறுங்கட்டியின் தோளிலே விழுந்தது. ஓடியபடியே அதனை எடுத்தான் உளியன். ‘இன்னும் சிறிதுநேரத்தில் பாரியின் வேட்டையும் இப்படித்தான் நிகழப்போகிறது. காற்றிலிருந்து கணநேரத்தில் எரிவண்டுகள் அகற்றப்பட்டதைப்போல, இக்காட்டிலிருந்து எதிரிகள் அகற்றப்படுவார்கள்’ என எண்ணியபடி ஓடினான். எரிவண்டு விரட்டியபொழுதைவிட கூடுதல் வேகங்கொண்டன மாணவர்களின் கால்கள்.

பின்னால் நடப்பது மட்டுமல்ல, முன்னால் தங்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறான் பாரி என்பதும் மாணவர்கள் அறியாததுதான். ஒரு கல் எறிந்து முடிநாகன் கூட்டைக் கலைத்தான். மறு கல் எறிந்து அந்த ஆபத்தைக் களைந்தான் பாரி. காட்டில் பிற எந்த ஆயுதத்தையும்விட வலிமைமிக்கது காடு பற்றிய அறிவுதான். அதில் பாரிக்கு இணைசொல்ல யாருமில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85e
இடைநில்லாது ஓடிவந்தவர்கள் ஆதிமலையின் இரண்டாம் மடிப்பை அடைந்தனர். கால்களுக்குச் சற்று ஓய்வு தேவைப்பட்டது. இளைப்பாறலாம் என நினைத்து மூச்சிரைக்க நின்றனர். ‘முடிநாகன் ஏன் இவ்வாறு நடந்துகொண்டான், மாணவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்’ என்ற எண்ணம் பாரியின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ‘எதிரிகள், தேக்கன்,  மச்சக்கடவு, எலிவால் முகடு என்று தனித்தனியாக அவர்கள் சொல்ல முயலும் முழுமையற்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன என்று சிந்திக்கும்போதெல்லாம் தேக்கன் கொடுக்கும் பயிற்சியின் எண்ணற்ற உத்திகள் எல்லாவற்றையும் விழுங்கி நிற்கின்றன.’

மாணவர்கள் இளைப்பாறட்டும் என்று நின்றுகொண்டிருந்த பாரி, நாற்புறக் காட்டையும் சுற்றிப் பார்த்தான். ஏதோவொரு திசையிலிருந்து மாறுபட்ட ஓசை  கேட்டது. மூன்றாம் மடிப்பின் இடப்புற மூலையில்தான் அது கேட்கிறது என்பதை அறிய முடிகிறது. என்ன ஓசை என்று கூர்ந்து கவனித்தான். `அது அழுகுரற் பறவையின் ஓசை. குத்துக்கல் பொடவுகளில்தான் அது தங்கும். அதனை யாரோ கலைத்துள்ளனர். இல்லையென்றால் இவ்வளவு ஓசை எழுப்பாது’ என எண்ணிய பாரி, ஓசையைக் கேட்டபடி அந்தத் திசையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். 

‘மூன்றாம் மடிப்பு முழுவதும் இருப்பது இரத்தச்சிலந்திகளின் காடு. எனவே, தேக்கன் இதற்குள் போயிருக்க மாட்டான். இக்காட்டைக் கடக்க வலப்புற ஓரத்தைப் பயன்படுத்த முடியாது. பெருஞ்சரிவுகளையும் பள்ளங்களையும் கொண்டது அவ்வோரம். இடப்புற ஓரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பகுதியை நடந்து கடந்தால், அழுகுரற் பறவை ஏன் இப்படி கலைந்து கத்துகிறது?’ என்ற வினா தோன்றியபோது இன்னோர் எண்ணமும் தோன்றியது. ‘இரவுப் பயணத்தில் மாணவர்களில் யாரேனும் ஒருவன் குத்துக்கல் பொடவில் சரிந்து விழுந்திருப்பானோ? என்னவாயிருக்கும்? பெரும்பெரும் பிளவுகளைக்கொண்ட பள்ளமல்லவா?’ என்று எண்ணியபடி, “நீங்கள் இளைப்பாறிவிட்டு வாருங்கள், நான் முன்னே செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு  ஓடத்தொடங்கினான் பாரி.

பாரியின் கால்களைப் பார்த்தபடி இருந்த முடிநாகனின் முகத்தில் இதுவரை இல்லாத மகிழ்வு  பூக்க ஆரம்பித்தது. குனிந்து கால்முட்டியில் கை வைத்து மூச்சிரைத்தபடியே முணுமுணுத்தான், “தேக்கன் சொன்னதைச் செய்து விட்டேன்.”

தேக்கன் கணிப்பு மிக நிதானமாக இருந்தது. ‘அவர்கள் இரத்தச்சிலந்திகளின் காட்டுக்குள் இருந்து எளிதில் தப்பி வெளிவரமுடியாது. தன்னால் தாக்கப்பட்டவன் செயலற்றுப்போயிருப்பான். மீதமுள்ள நான்குபேரில் குறைந்தது இருவராவது சிலந்திகளால் தாக்குண்டு வீழ்ந்திருப்பர். அதற்குத் தப்பி ஒருவனோ, இருவரோதான் வெளியேற முடியும். அப்படி அவர்கள் வெளியேறும்போது மேற்பகுதியின் முனையில் வைத்து அவர்களை மறித்தடிக் கலாம். ஆனால், அவர்களின் உடல்வாகு பெரும்பலத்தோடு இருக்கிறது. எனது இடதுகை சேதமடைந்து இருக்கிறது. மாணவர்கள் எவ்விதப் பயிற்சியும் அற்றவர்கள். இந்நிலையில் அவர்களை வீழ்த்த வழியென்ன?’ என்று யோசித்துக்கொண்டே ஓடியவனுக்கு கருஞ்சுரைக் காயின் நினைவு வந்தது.

‘மாணவர்கள் வேறு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்து வதைவிட கவண் சுற்றி அடிப்பதைத் திறமையுடன்   செய்பவர்களாக  இருப்பார்கள். சிறுபிள்ளையிலிருந்து கவண் அடித்துப் பழகுவதால், மிக இயல்பாக அதில் தேர்ச்சி இருக்கும். கருஞ்சுரையைக் கவணில் வைத்து அடித்தால் என்ன?’ என்ற சிந்தனை தோன்றிய கணமே தேக்கனின் நம்பிக்கை பெருகத்தொடங்கியது. கருஞ்சுரைக்காய்க்குள் இருக்கும் பால், துளியளவு கண்ணில்பட்டாற்போதும்; கருவிழி உருகி ஓடிவிடும். மாணவர்களை, எதிரிகளின் முகம்நோக்கி அடிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.

குத்துக்கல் பொடவுக்குள் கருஞ்சுரைக்கொடி படர்ந்துகிடப்பதைப் பலமுறை தேக்கன் பார்த்துள்ளான். அதனால்தான், அங்கு வந்து நின்று பிளவுகளை நோக்கி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.

பார்க்கவே அச்சங்கொள்ளவைக்கும் பெரும்பிளவுகள். பார்ப்பவனின் தலைசுற்றி உள்ளிழுக்கும் தன்மைகொண்டவை. ஏற்கெனவே ஓட்டத்தாலும், தாங்கிக்கொள்ள முடியாத கசப்பாலும் சற்றே மயக்க நிலையில்தான் மாணவர்கள் இருந்தனர். சிறிதுநேரம் இளைப்பாறவிட்டு எட்டிப்பார்க்க வைத்தான். காலைக்கதிரவனின் ஒளி பாறைப்பிளவுகளுக்குள் இன்னும் முழுமையாக ஊடுருவவில்லை. ‘ஆசான் ஏன் இதனைப் பார்க்கச் சொல்கிறார்?’ என்று புரியாமல் திகைத்தனர். அவரின் கண்கள் பொடவின் இடுக்குகளை அங்குமிங்குமாக உற்றுப்பார்த்துத் தேடிக்கொண்டிருந்தன. சற்றுநேரத்தில் அது கண்ணுக்குத் தட்டுப்பட்டது.

மாணவர்களை அழைத்துக் காண்பித்தார். “அதோ,அந்தப் பிளவுக்குக் கீழே பாறைவெடிப்புகளில் படர்ந்து கிடக்கிறதே, அதுதான் கருஞ்சுரைக்காய்க் கொடி. யாராவது ஒருவன் கீழே இறங்கி அதில் உள்ள காய்களைப் பறித்து வரவேண்டும்” என்றார்.

எல்லோருக்குள்ளும் தயக்கம் இருந்தது. ஆனாலும், தயக்கத்தை மீறி கீதானி தயாரானான். அருகில் விளைந்துகிடந்த கட்டுக்கொடியின் தூரை அறுத்து அவன் பிடித்து இறங்க வழிசெய்தனர். கீதானி உள்ளிறங்கினான். மேலே இருந்து அனைவரும் கொடியை இறுகப்பிடித்து இருந்தனர். தேக்கன் சற்றுத் தள்ளிநின்று பள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கீதானி, பாறையின் செதில் பார்த்துக் கால்களைக் கவனமாகத் தூக்கிவைத்து இறங்கிக்கொண்டிருந்தான். சட்டென பொடவுக்குள் இருந்த அழுகுரற் பறவை ஒன்று சடசடத்து வெளியேறியது. ஒருகணம் கீதானி திடுக்கிட்டு மீண்டான். எழுந்த வேகத்தில் மேற்சென்ற அதன் அழுகுரல் எங்கும் கேட்டது. எளிதில் அது ஓய்வதாகவும் இல்லை. நடப்பதை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த தேக்கன் ஒரு கட்டத்தில் கீதானியைப் பார்த்துக் கையை மேல்நோக்கி அசைத்தார். மாணவர்கள் புரியாமல் விழித்தனர். ``அவன் மேலேறட்டும்” என்றார்.

‘பறவை எதிர்பாராமல் பறந்தபோது அவன் திடுக்கிட்டு அஞ்சியதால், தேக்கன் இம்முடிவெடுத்துவிட்டாரோ?’ என்று அவர்கள் நினைத்தனர். கீதானி இறங்குவதற்காகக் கால்தொடையில் கொடுத்திருந்த வலுவை  கைப்பிடிக்கு மாற்றி உன்னியபடி மேலேறி வந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85f
அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் தேக்கன். அவர் என்ன சிந்திக்கிறார் என்பது அலவனுக்கு மட்டும் புரிந்தது.

`கீழே கருஞ்சுரைக்காய்க்கொடி படர்ந்து கிடக்கும் இடமெல்லாம் ஈயல் புற்று கிடக்கிறது, தேக்கன் இப்போதுதான் அதனைப் பார்த்துள்ளார். நான் கீதானி இறங்குமுன்பே பார்த்துவிட்டேன்’ என்று மனதில் சொல்லிக்கொண்டான் அலவன்.

ஈயல் என்பது சிறகு முளைத்த மலையெறும்பு. மற்ற எறும்புகள் மண்ணுக்குள் துகள் எடுத்துப் புற்று உருவாக்குவதைப்போல, இது பாறைகளின் மேற்பரப்பை உரித்துப் புற்றமைக்கும். அதன் கொடுக்குகள் அவ்வளவு வலிமைமிக்கவை. அதுவும் ஏழுகண் வைத்துப் புற்றுக்கட்டக்கூடியவை. எந்த உயிரினமாவது அதற்கு ஆபத்து விளைவிக்கப்போகிறது என்று தெரிந்தால், ஒரே நேரத்தில் புற்றின் ஏழுகண்களிலும் இருந்து அவை பீச்சியடித்துக்கொண்டு வெளியில் வரக்கூடியவை. `ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று பாம்பின் சீற்றம்போல இறகடித்து வந்து மொய்க்கத் தொடங்கினால், உயிரினங்கள் எவையும் தப்பித்து வெளியேற முடியாது. பாறைகளையே உரிக்கும் கொடுக்குகளுக்குச் சதைகளைச் சிதைத்தெடுக்க அதிகநேரம் தேவைப்படாது.

கருஞ்சுரைக்காய் இப்போது அவசியத்தேவை. ஆனால், அதனைச்சுற்றி ஈயல் புற்று இருக்கிறது. என்ன செய்யலாம் எனத் தேக்கன் சிந்தித்தபோது கொடியைத் தனது இடுப்பிலே கட்டிக்கொண்டிருந்தான் அலவன்.
 
அவன் நஞ்சுமுறி உள்ளவன். ஈயலின் நஞ்சு அவனை ஒன்றும் செய்யாது. ஆனால், மிகக் கவனமாக எடுத்துவிட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால், அதன் கொடுக்கின் தாக்குதலுக்கு அலவனும் தப்பிக்க முடியாது. அதனால்தான், அலவனைக் கீழே இறக்க தேக்கன் தயங்கினான். ஆனால், வேறுயாரும் நெருங்கக்கூட முடியாத நிலையில், தான் இறங்குவதுதான் பொருத்தம் என முடிவுசெய்து கீழிறங்கினான் அலவன்.

இரத்தச்சிலந்திகளின் கால்கள் மனித உடலில் பட்டால் போதும்; பட்ட இடமெல்லாம் கணநேரத்தில் கொப்புளங்கள் பெருகத் தொடங்கும். அதன் காற்கொடுக்குகள் உள்ளேறி துடிதுடிக்க வைத்துவிடும்.

வேகமாக ஓடுவது முக்கியமல்ல, கவனமாக இதனிடமிருந்து தப்பிப்பதுதான் முக்கியம். காலம்பன், செடிகொடிகளை விலக்குவதை மிகக் கவனமாகச் செய்துகொண்டிருந்தான்.

“அவர்கள் நம்மைப் பார்த்துவிட்டார்கள். இவ்வளவு மெதுவாகச் சென்றால் வெளியேறும்போது சூழ்ந்துவிட மாட்டார்களா?” என்றான் மற்றொருவன்.

அடங்காச் சினத்தோடு இருந்த காலம்பன் சொன்னான், ``தனிமனிதர்கள் நம்மை என்ன செய்துவிடமுடியும்? அதுவும் குருதிநாளங்களில் வெறியேறியிருக்கும் இந்த நிலையில்.”

மிகக் கவனமாகக் கருஞ்சுரையின்  மூன்று காய்களைப் பறித்தான் அலவன். பாறையின் மீதிருந்து கண்ணிமைக்காமல் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

ஈயல்கள் அங்குமிங்குமாக ஒன்றிரண்டு பறந்துகொண்டிருந்தன. சில ஈயல்கள் புற்றுகளுக்கு உள்ளே போவதும் வெளியேறுவதுமாக இருந்தன. பறித்த காயைக் கவனமாக இடுப்புத்துணியிலே கட்டியபடி புற்றின் அப்பக்கம் எட்டிப்பார்த்தான் அலவன். அதன் ஒரு கண்ணுக்குள் பாம்பொன்று நுழைந்துகொண்டிருந்தது. ‘ஈயல் புற்றுக்குள் பாம்பு போகாதே, இது எப்படிப் போகிறது?’ என்று யோசிக்கும்போதுதான் அவனுக்குப் பிடிபட்டது, ஈயல் தனது இரைக்காகப் பாம்பைக் கொன்று உள்ளே இழுத்துச்செல்கிறது என்று. ஒருகணம் மனம் அதிர்ந்தது. அவன் கண்களில் நீல வளையங்கள் பூத்து அடங்கின. ‘விரைவாக மேலேறுவோம்’ என முடிவுசெய்து கையைக் காட்டியவுடன் மேலே இருந்தவர்கள் கொடியை சரசரவென இழுக்கத் தொடங்கினர்.

அவன் மேலேறிய வேகத்தில் இன்னோர் அழுகுரற் பறவை கத்திப் பறக்கத் தொடங்கியது. இதன் குரல் முன்னதைவிட அதிகமாக இருந்தது. அழுகுரற் பறவையின் ஓசையினாலோ, வேறுகாரணத்தினாலோ ஒன்றிரண்டு ஈயல்கள் மேல்நோக்கி வரத்தொடங்கின. அலவன் படுவேகமாக மேலேறி வந்துகொண்டிருந்தான்.

பாரி, குத்துக்கல் பொடவை நோக்கி ஓடிவரும்போது அழுகுரற் பறவையின் ஓசை மீண்டும் கேட்டது. “ஏன் மீண்டும் மீண்டும் இது கத்துகிறது? அங்கு என்னதான் நடக்கிறது” எனக் குழம்பிக்கொண்டிருக்கையில் வலப்புறக்காட்டுக்குளிருந்து உயிர் போக ஒரு மனிதன் கத்தும் ஓசை கேட்டது.

ஓடிவந்துகொண்டிருந்த பாரி இருபுறமுமிருந்து வந்த ஓசைகளைக் கேட்டு திகைத்து நின்றான். அழுகுரற் பறவையின் குரலைவிட கதறும் மனிதக்குரல் அவனது கவனத்தை ஈர்த்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 3:15 pm

லிவால் முகட்டின் செங்குத்தான ஏற்றத்தில் விரைந்துகொண்டிருந்தன பாரியின் கால்கள். வேட்டைவிலங்கின் காலடியைப்போல மண்ணில் கால்பாவாமல் விரைந்துகொண்டிருந்தன.

எவ்வியூரில் புறப்பட்டதிலிருந்து கற்றுத்தருதலிலேயே கவனம்கொண்டிருந்தான் பாரி. மாணவர்கள் எவ்வளவு முயன்றும் அவனை வேகங்கொள்ளச்செய்ய முடியவில்லை. எரிவண்டைக்கொண்டு அவனது ஓட்டத்தை வேகப்படுத்தினான் முடிநாகன். கருங்கொண்டை வல்லூறுகொண்டு அதனை மட்டுப்படுத்தினான் பாரி. அதன்பின் அழுகுரற் பறவையின் குரல் கேட்டு ஏதோ ஆபத்து என உணர்ந்தான். ஆனால், இப்பொழுதோ அந்த ஆபத்து என்னவென்று கண்ணெதிரே பார்த்துவிட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p1
தேக்கன் அடித்துத் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்த கணத்தை இப்பொழுதுவரை நம்பமுடியவில்லை. அவர்களின் தாக்குதல் வேகத்தில் மாணவர்கள் காற்றில் பறந்தார்கள். பெருங்கூடைகளில் தெய்வவாக்கு விலங்கை அள்ளிக்கொண்டு பறம்பின் காடுகளுக்குள் யாரோ ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கண் பார்ப்பதை நம்பமுடியாத கணத்தில் கால்களின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

அடர்காட்டுக்குள் மனிதக்குரல் கேட்டபொழுது பாரியின் அய்யம் தீர்ந்தது. ‘இரத்தச்சிலந்தி இருக்கும் இக்காட்டுக்குள் தேக்கன் மட்டுமல்ல, பறம்பு மக்கள் யாரும் போக மாட்டார்கள். அதற்குள் மனிதக்குரல் கேட்கிறது என்றால் வெளியில் இருந்து எவனோ உள்ளே நுழைந்திருக்கிறான். வந்தவன் ஒருவனாக இருந்தால் தேக்கன் நம்மை அழைத்துவர மாணவர்களை அனுப்பியிருக்க மாட்டான். அவர்கள் பல பேராக இருக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே குத்துக்கல் பொடவை நோக்கி ஓடினான் பாரி.

கருஞ்சுரைக்காயை எடுத்தபின் ஆதிமலையின் முகட்டை அடைந்தான் தேக்கன். அடர்காட்டுக்குள் மாட்டியிருக்கும் எதிரிகள் எப்படியும் இத்திசையில்தான் வெளியேற வேண்டும். வெளியேறிய கணத்தில் மாணவர்கள் அவர்களின் முகம் பார்த்து கவண் எறிய வேண்டும் என்று சொல்லி, ஈட்டியை இறுகப்பிடித்து ஆயத்தமாக இருந்தான். ஆனால், தேக்கனின் அதிர்ச்சி அவர்கள் வெளிவந்த கணத்திலேயே தொடங்கியது. ஒருவனைத் தவிர மற்ற நால்வரும் காட்டைவிட்டு வெளியே வந்தனர். ‘இரத்தச்சிலந்திகள் இருக்கும் காட்டை எப்படி இவர்கள் கடந்தனர்’ என்ற அதிர்ச்சி தேக்கனைச் சற்றே தாமதிக்க வைத்தது.

காட்டைவிட்டு வெளியேறிய கணத்தில் தாக்குதலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு வந்த காலபன், தேக்கன் ஈட்டியெறியும் முன் தனது வளைத்தடியைச் சுழற்றினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அது தேக்கனின் கழுத்துக்கு வந்தது. கவனமாய் அதனைத் தட்டிவிட்டு விலகினான். திசைக்கு ஒன்றாய் நின்ற மாணவர்கள் கவண் வீசத் தொடங்கிய அந்தக் காட்சிதான் தொலைவில் ஓடிவந்துகொண்டிருந்த பாரியின் பார்வையில் முதலில் பட்டது.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p2

அவர்கள் தேக்கனைத் தாக்கிய வேகத்தையும் மாணவர்களைச் சுழற்றி வீசியதையும் பார்த்தபடியே வெறிகொண்டு ஓடிவந்தான் பாரி. மலைச்சரிவில் பாறைகள் உருண்டன. மடுவன் வீசிய கவணிலிருந்து பறந்த கருஞ்சுரைக்காய் ஒருவனின் முகத்தில் அடித்துத்தெறித்த கணத்தில்தான் அந்த இடத்தை அவர்கள் சூறையாடினார்கள். அடிபட்டவன் முகத்தை மூடியபடி கதறிக்கொண்டு பாறையில் மோதி மண்ணில் உருண்டான்.

பறம்புநாட்டின் ஆசான், பகிரியை வேட்டையாடிய பெருவீரன், எத்தனையோ மாணவர்களைக் காடறிய அழைத்துச்சென்று மாவீரர்களாக உருவாக்கியவன், தனியொருவனாக எவ்விலங்கினையும் வீழ்த்தும் ஆற்றல்கொண்ட தேக்கன் தனது முழு ஆற்றலையும் திரட்டி மோதினான். ஆனால், அவனது ஆற்றல் முழுவதும் தற்காத்துக்கொள்ளவே போதுமானதாக இருந்தது. சூழப்பட்ட எதிரிகளின் வலிமை ஒப்பிட முடியாததாக இருந்தது. அவர்களின் தாக்குதலை உள்வாங்கியபடி மனம் அவர்களின் திறனைக் கணித்துக்கொண்டிருந்தது. ஆனால், உடலோ தூக்கிவீசப்பட்டுக்கொண்டிருந்தது.

பாரி இடம் வந்து சேர்ந்தபொழுது எல்லாம் முடிந்திருந்தது. கருவிழி ஒழுகி துடித்துக் கதறிக்கொண்டிருந்த ஒருவனின் முதுகில் இருந்த பெருங்கூடையை அறுத்து எடுத்தனர் மாணவர்கள். தேவவாக்கு விலங்கின் அடங்காத  கத்தலும், தூக்கிவீசப்பட்ட மாணவர்களின் வேதனைக்குரலும், கருவிழி கலங்கியவனின் கதறலும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தன.

ஆதிமலையின் முகட்டைக் கடந்த அவர்கள் சிறிது தொலைவு போவதற்குள், முகட்டின் பின்புறச் சுனையில் பதுங்கியிருந்த ஏழுபேர் அவர்களுடன் இணைந்துகொண்டனர். அவர்களின் ஓட்டம் மர இடுக்குகளுக்குள் மறைந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p3
தாக்குதல் முடிந்ததும் வந்துசேர்ந்த பாரி கணநேரமும் தாமதிக்காமல் துடித்துக் கிளம்பினான். கிளம்பிய வேகத்தில் அவனை இறுகப்பற்றி நிறுத்த முயன்றான் தேக்கன். தேக்கனின் செயலுக்குக் காரணம் புரியாமல் பாரி திகைத்தபொழுது, தேக்கனின் வாய் முணுமுணுத்தது “அவர்கள் பலர், நீ ஒருவனாகப் போகவேண்டாம்.”

தேக்கனின் சொல் பாரியை நிலைகுலையச்செய்தது. “பறம்பின் ஆசானா இப்படிப் பேசுவது? நான் ஒருவனா? இது எனது காடு. மரமும் செடியும் கொடியும் விலங்கும் இருக்கிற இக்காட்டில் நான் எப்படித் தனியனாவேன்?”

பிடித்த கையை உதறித்தள்ளிய பாரியின் ஆவேசம் பார்க்க முடியாத பெருஞ்சினங்கொண்டிருந்தது. ஓடினான் பாரி. காடதிர, காற்றதிர, கண்ணில் வெறிகொண்டு ஓடினான். பறம்பு நாட்டின் தேவவாக்கு விலங்கைத் தூக்கிக்கொண்டு ஆதிமலையை ஒரு கூட்டம் கடந்துவிட்டதென்ற உண்மையைக் கொன்று புதைக்க ஓடினான். எவ்விலங்கின் ஓட்டத்தையும் விஞ்சக்கூடியவன் வேள்பாரி. காட்டின் எத்தரையிலும் முழுவேகத்தோடு ஓடக்கூடிய விலங்கு எதுவுமில்லை. ஒவ்வொரு விலங்குக்கும் ஓட்டம் உச்சங்கொள்ளும் இடமும் உண்டு; ஊனங்கொள்ளும் இடமும் உண்டு.

எவ்வளவு வேகமாக பாய்ந்து வந்தாலும் கமரிப்புல் இருக்கும் காட்டில் வரிப்புலி காலடி எடுத்து வைக்காது. முக்கொற்றிக்கோரை முளைத்துக்கிடக்கும் தரையில் வேங்கைப்புலி கால் பதிக்காது. முசுறுப்புல் காட்டில் பாம்பு நகராது. வாட்கோரைக்குள் மான் ஓடாது. ஒவ்வொரு விலங்கின் ஓட்டத்துக்கும் நகர்வுக்குமான அடிப்படை முளைத்துக்கிடக்கும் செடிகொடிகளிலும் இருக்கிறது. பறம்பின் எந்த நிலத்திலும், எந்தப் புதரிலும் எந்தக் காட்டிலும் வேகங்குறையாமல் ஓடக்கூடியவன் வேள்பாரி. அவனது பாதத்தின் அகலமும் தோள்களின் வலிமையும் இணையற்றவை. பிடரிமயிர் சிலிர்க்க ஓடும் பாரியின் ஓட்டத்தை மறித்து நிற்கும் உயிர் எதுவும் பறம்புக்காட்டுக்குள் இதுவரை இல்லை.

ஓடிக்கொண்டிருந்த எதிரிகள் எதிர்த்திசைக் காட்டை நோக்கி ஓடாமல் வலப்புறச் சரிவை நோக்கி இறங்கத் தொடங்கினர். யாராவது பின்தொடர்ந்துவந்தால் அவர்களைத் திசைமாற்றவே இத்தந்திரத்தைச் செய்தனர். அவர்கள் தங்களின் வழியை மாற்றிவிட்டனர் என்பதைச் சிறிதுநேரத்திலே கண்டறிந்தான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p5
சிவப்புமூக்கு ஆக்காட்டி வலப்புற ஓடையின் பக்கம் நெடுநேரம் குரல்கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் அப்பக்கம் திரும்புவார்கள் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அத்திசை நோக்கி படுவேகமாகப் பாரி இறங்கினான்.

‘எலிவால் முகட்டில் மோதல் நடந்தபொழுது மூன்று பேராக இருந்தவர்கள் இப்பொழுது எப்படி எண்ணற்றவர்களாக மாறினர். முகட்டின் கீழ்த்திசையில் ஏன் மறைந்திருக்க வேண்டும்? அப்படி என்றால் இன்னும் எத்தனை பேர் மறைந்துள்ளனர்?’ மனதில் வினாக்கள் அடுத்தடுத்து எழுந்துகொண்டிருந்தபொழுது அதற்கான விடையைக் கண்டறியும் முன்னே அடுத்த வினா எழுந்து வந்தது.

‘எலிவால் முகட்டைக் கடந்து கீழ்ப்புறம் இறங்கியவர்கள் அதற்குள் எப்படி முகட்டின் அடிவார ஓடையை அடைந்தார்கள்? தேக்கனிடம் சில சொற்களைப் பேச மட்டுமே நான் நேரஞ்செலவிட்டேன். ஆனால், அவர்கள் அதற்குள் ஓடைக்குப் போய்விட்டார்கள் என்றால் அவர்களின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாதபடி இருக்கிறது. தேக்கனும் மாணவர்களும் இணைந்து தாக்குதல் தொடுத்தபின் வேகத்தை இன்னும் கூட்டியுள்ளனர். என்ன கூட்டினாலும் என்ன; அவர்கள் பறம்பின் காட்டுக்குள்தானே ஓடிக்கொண்டிருக்கின்றனர்.’

பாரியின் மனம் எதிரிகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் வேகத்தைக் கணிக்கவும் தனது தாக்குதலுக்கான முறையை உருவாக்கவும் முயன்றுகொண்டிருந்தபொழுது, அவனது கால்கள் ஏறக்குறைய பறந்துகொண்டிருந்தன.

கீழ்த்திசை ஓடையை அவன் அடைந்தான். காட்டோடையில் நீர் பெருகி ஓடியது. ஓட்டத்தின் வேகம் முழுமையாக அறுந்தது. ஓடையை நீந்திக்கடந்தான். அவர்கள் வெகுநேரத்துக்கு முன்னமே ஓடையின் மறுகரைக்குப் போய்விட்டனர். அது அடர் மரங்களற்ற காடு. புல்மேவிய இரு குன்றுகளைக்கொண்டது.  ஓடுவதற்கு ஏற்ற நிலவாகு. பாரி கரையேறும் முன்னே அவர்கள் கண்பார்வையில் இருந்து மறைந்துவிட்டனர்.

`எதிரிகளின் ஆற்றல் ஓட்டத்தில் இருக்கிறது. அடர்ந்த மரங்களுக்கிடையிலே இவ்வளவு வேகமாக ஓடக்கூடியவர்கள், புதர்களற்ற நிலப்பரப்பில் இன்னும் விரைவுகொள்வர். அதுவும் தங்களைப் பறம்பினர் கண்டறிந்துவிட்டனர் என்பதனால் கட்டுக்கடங்காத வேகங்கொள்வர். அதனைத் தடுக்க என்னவழி?’ என்று சிந்தித்தபடியே கரையில் அடர்ந்து கிடக்கும் காட்டு மரங்களுக்கிடையே புகுந்து வெளியேறினான்.

வெளியேறிய இடத்தில் முடிச்சிட்டுக் கிடந்த பெருவேர்களைத் தாவிக்கடந்தபொழுது அவன் கண்ணிற்பட்டதொரு செடி. சட்டென ஓட்டத்தை நிறுத்திப் பெருமுடிச்சுகளை நோக்கித் திரும்பினான்.

மரவேர்களின் கீழ்ப்பக்கம் முளைத்துக் கிடந்ததைப் பார்த்ததும், மனதின் ஆழத்துக்குள் இருந்து சிறு மகிழ்ச்சி மேலேறி வரத் தொடங்கியது. மர வேர்களின் இடப்புறம் அனுவல்லிப்பூண்டு விளைந்து கிடந்தது.

சற்றே நின்று மூச்சுவாங்கினான். அதன் இலைகளை எடுத்து உண்போமா, வேண்டாமா என முடிவெடுக்கச் சிறிது தயங்கினான். அனுவல்லிப்பூண்டின் இலை மனிதனை மூர்க்கம் கொள்ளவைக்கும். இரத்த ஓட்டத்தைக் கூட்டி வெறியேற்றும். உடலுக்குள்ளிருக்கும் ஆற்றலின் விசையை பெருந்தீயெனக் கிளர்த்திவிடும். அவனது சிந்தனை என்னவாக இருக்கிறதோ அதனை நோக்கி பெருவேகத்தில் உடலை ஏவும். எனவே அதனை உட்கொள்வதில் மிகக்கவனம் தேவை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p4
ஏற்கெனவே உடலெங்கும் வெறிகூடிக்கிடந்த பாரி சற்றே சிந்தித்து ஒரு சில இலைகளை வாயில் போட்டுக்கொள்வோம் என நினைத்து அதன் ஒரு தண்டினை இழுத்தான். மொத்தச்செடியும் கையோடு வந்தது. எண்ணத்தின் வேகம் அப்படி இருக்கிறது என்பதை உணரமுடிந்தது. ஓரிரு இலைகளை மட்டும் பறித்து வாயிற்போட முனைந்தான். அப்பொழுது அருகில் இருந்த பாறையின் பின்புறம் மூச்சிரைக்கும் சிற்றோசை கேட்டது. ஏதோவொன்று இளைப்பாறுகிறது என நினைத்தான். ஆனால், ஓசையின் தன்மை சற்று மாறுபட்டிருந்தது. என்னவென பார்க்க பாறையின் பின்புறம் தலையை நீட்டினான்.

அங்கு சுண்டாப்பூனைகள் இரண்டு கலவி கொண்டிருந்தன. உச்சநிலையில் இயங்கிக் கொண்டிருந்த அவற்றின் கண்களைப் பாரியின் கண்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. பன்றிப்பல்லினைப்போல் நீண்டு வளைந்த அவற்றின் பற்கள் வெளித்தெரிய  மூர்க்கமேறிச் சினந்துகொண்டிருந்தன. பார்த்தபடி அனுவல்லிப்பூண்டின் இலைகளை ஒவ்வொன்றாய் மென்றுகொண்டிருந்தான். ஆண்பூனையின் மூக்கின் முனையில் இருந்த துடிப்பும் ஆவேசமும் பாரியின் முகத்திலும் இருந்தன.

அவன் அம்முடிவையெடுப்பது என உறுதி கொண்டபொழுது பறித்த செடியில் இலைகள் எவையும் மிஞ்சவில்லை. அவனது வேகமும் வெறியும் அப்படி இருந்தன. அவை இயங்கி முடிக்கும் கணத்துக்காகக் காத்திருந்தான்.

அவை தமது பணியை முடித்துவிட்டன என்று அவன் முடிவுசெய்த கணம், வலதுகால் அருகிருந்த கல்லை எத்திவிட்டது. அந்தக் கல் கீழிருந்த பெண்பூனையின் முன் நெற்றியில் பட்டுத்தெறித்தது. சற்றே கண் சொருகியிருந்த அது இத்தாக்குதலால் வெகுண்டபொழுது மேலிருந்த ஆண்பூனை நிலைதடுமாறிச் சரிந்தது. இரண்டின் கண்களுக்கும் முன்னால் பாரி.

கலவி முடிந்ததும் உருவாகும் தீராப்பசியோடு சீண்டிவிடப்பட்ட சினமும் சேர்ந்தது. இரண்டும் நின்றுகொண்டிருப்பவனைத் தாக்க பாயத் தொடங்கியபொழுது, அவன் தனது வேலையைக் காட்டத்தொடங்கினான். கால்கள் முன்பாய்ந்து ஓடத்தொடங்கின. சுண்டாப்பூனையின் வெறி கணக்கில்லாத மடங்கு பெருகியது.

சீண்டலின் உச்சத்துக்கு இரு பூனைகளும் உள்ளாயின. சுண்டாப்பூனையின் மூர்க்கமும் அனுவல்லிப்பூண்டின் இலைகள் கிளர்த்திய மூர்க்கமும் காற்றைக் கிழித்து, காட்டை அதிரச்செய்தன. பாரியும் வெறிகொண்ட இருவிலங்குகளும் ஓடிய வேகம் இதுவரை காடு பார்த்திராதது. ஓட்டத்தின் வேகம் கூடக்கூட சுண்டாப்பூனைகளின் வெறி மேலேறியபடியே இருந்தது.  காலைப்பொழுதில் தொடங்கிய கலவி இவ்வுச்சிப்பொழுதில்தான் முடிவுக்கு வந்தது. உடல் மொத்தமும் இடைவிடாது இயங்கி முடித்ததும் அடிவயிறெங்கும் பற்றியெழும் பசிநெருப்பு அவற்றின் மூர்க்கத்தை எண்ணிலடங்காத மடங்கு அதிகப்படுத்தியது. கல்லாலடித்துச் சீண்டிவிட்டு, சீண்டியவனின் கால்கள் நிற்காமல் ஓடும்பொழுது அவை இதுவரை இல்லாத சினமும் சீற்றமும் மிக்கவைகளாயின.

காடறிய அடிநாக்கில் நஞ்சுக்கசப்பை உள்வாங்கிய மாணவர்கள் நேற்றிருந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கொடும் நஞ்சு இடைவிடாமல் அவர்களின் தொண்டைக்குள் சுரந்துகொண்டே இருக்க என்னவொரு வேதனையை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். வீரகுடி ஆசானை அடித்துத் தூக்கிப்போட்டு தேவவாக்கு விலங்கைத் தூக்கிச்செல்லும் வலிமை இவ்வுலகில் யாருக்கோ இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதும் செத்துமடிவதும் ஒன்றுதான். பறம்புநாட்டின் அடையாளத்தை எடுத்துச்செல்லும் இவர்களின் உயிர் இன்னும் பறம்பின் எல்லைக்குள்தான் இருக்கிறது என்பதை சகித்துக்கொள்ள முடியாத கோபமும் வெறியும் பாரியைக் கட்டுக்கடங்காத ஆவேசங் கொள்ளச்செய்தன.

ஓட்டத்தின் வேகத்தைச் சரிந்துகிடக்கும் நிலமும் படர்ந்துகிடக்கும் செடிகொடிகளும் முடிவுசெய்கின்றன. சுண்டாப்பூனைகளின் முதுகெலும்பு வில்லைப்போல வளைந்து நீள நான்குகாற்பாய்ச்சலில் ஓடிவந்து கொண்டிருந்தபொழுதும் அவற்றால் நெருங்க முடியாத வேகங்கொண்டு பாரி ஓடுவதற்குக் காரணம், கண்ணுக்கு முன்னால் ஓடும் எதிரிகளும் கண் தெரியாத வெறியை உருவாக்கிய அனுவல்லிப்பூண்டுமே. விலங்குகள் தங்களின் இரை நழுவிப்போகும் காலம் நீளுகையில் இயல்பிலே பல மடங்கு ஆவேசத்தை அடைகின்றன. சுண்டாப்பூனைகள் இவ்வளவு வேகங்கொள்வதற்கு அதுதான் காரணம். பாரி அவற்றைவிட வேகமெடுத்து ஓடிக்கொண்டிருப்பதற்கும் அதுதான் காரணம். இப்பொழுது அவனது மனமும் செயலும் விலங்கினும் கொடுஞ்சினம் கொண்டிருந்தன.

அதையும் கடந்து ஒருவேளை சுண்டாப்பூனைகள் அவன்மீது பாயுமேயானால் இடுப்பில் இருக்கும் இரு கத்திகளும் அவற்றின் கீழ்த்தொண்டையில் இறங்க ஆயத்தமாகத்தான் இருந்தன. ஆனால், பாரி அதனைச் செய்யப்போவதில்லை. ஏனென்றால் விரட்டிவரும் இரண்டும் அவனுடைய இரையல்ல, ஆயுதங்கள்.

காமத்தில் ஏறிய வேகங்குறையாமல் அவற்றை இழுத்து வந்துகொண்டிருப் பதற்குக் காரணம், அதே வேகத்தோடு வேட்டையில் இறக்குவதற்காகத்தான். சுருள்வால் கொண்ட சுண்டாப்பூனையின் பன்றிப்பற்களும் நீள்வளைவு நகங்களும் பறம்பின் தரப்புக்காகக் களமிறங்கப்போகின்றன. தீராத காமம் தீரும்பொழுது கிடைக்கவேண்டிய உணவுக்கான விருந்துக்கு அழைத்துச்சென்றான் வேள்பாரி.

இதோ... விருந்து மிக அருகில் வந்துவிட்டது. அவன் அழைத்துவரும் விருந்தாளிகள் அதனைவிட அருகில் வந்து விட்டன. முன்னால் ஓடிக்கொண்டிருப்பது வேட்டை உணவு, பின்னால் வந்துகொண்டிருப்பன வேட்டை விலங்குகள். இரண்டுக்கும் இடையில் விட்டுவிலகும் சரியான கணத்தை, முன்வைத்த கால்விரல்கள் தீர்மானித்தன.

பாரி இடப்புறப்பள்ளம் நோக்கி எவ்விப்பாய்ந்து சரிந்த கணத்தினை சுண்டாப்பூனைகளால் நினைவுகொள்ள முடியாமல் இருந்ததற்குக் காரணம், கையளவு தொலைவில் ஓடிக்கொண்டிருந்த எண்ணற்ற மனிதர்களின் ஓட்டம். சரிவில் உருண்டு, வேர்கள் பிடித்து, இங்குமங்குமாக தூக்கிவீசப்பட்டு, அடிப்பள்ளத்தில் பாரி நிலைகொண்டபொழுது மேலே வேட்டை முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. சுண்டாப்பூனைகளின் ஆவேசத்துக்கும் ஆற்றலுக்கும் இரை எதுவும் மிஞ்சாது.

கதறலும் தாக்குதலும் உச்சத்தில் நிகழ்ந்தன. எதிரிகள் என்னவென்றே கணிக்கமுடியாதபொழுது நிகழ்ந்த தாக்குதல் இது.  ஓசைகள் காற்றைக்  கிழித்துக்கொண்டிருந்தன. உயிர்போகும் கதறலும் ஆவேசங்கொண்ட கூக்குரலும் எங்கும் எதிரொலித்தன.

எத்தகைய ஆயுதத்தைக்கொண்டு தாக்கினாலும் இவ்வளவு வலிமைகொண்ட எதிரிகளின் கூட்டத்தை தனியொருவன் அழிப்பது எளிதன்று. பாரி இக்கூட்டத்தை அழிக்க, காட்டின் வலிமை மிகுந்த ஆயுதத்தை ஏவியுள்ளான். எந்தவொரு எதிரியாலும் நினைத்துப்பார்க்க முடியாத தாக்குதலாக இது இருக்கப்போகிறது.

சுண்டாப்பூனையின் முன்வளைந்த பன்றிப்பள்ளும் முனைநீண்ட அதன் கால்நகங்களும் ஓடிக்கொண்டிருப்பவர்களின் மேலே ஒருமுறை பட்டாற்போதும், அதன்பின் அவன் கொட்டும் குருதிக்கு அளவேதும் இருக்காது. 

அதுவும் பழக்கப்படுத்தவே முடியாத காட்டுவிலங்குகளை வைத்து நிகழ்த்தும் தாக்குதலை எதிர்கொண்டு மீள்வது எளிதல்ல. வேட்டை நாயைத் தவிர வேறு எவ்விலங்கையும் மனிதனை நோக்கி ஏவ முடியாது. அதுவும் இப்பயங்கர விலங்கை எப்படி ஏவினார்கள் என்ற திகைப்பு அடங்குமுன் அவர்களின் உயிர்மூச்சு அடங்கியிருக்கும்.

பாறையின் மேற்புரத்தில் கேட்டுக்கொண்டிருந்த பேரோசை கொஞ்சங்கொஞ்சமாகக் குறையத்தொடங்கியது. வேட்டை முடிவுக்கு வந்ததை எழும் ஓசைகள் சொல்லின. பாரி மேலேறிவர முடிவெடுத்தான். குருதி மிதக்கும் குளம்போல இருக்கும் அந்த இடத்தைக் காண திண்டுகளையும், வேர்களையும் பிடித்து மேலேறி வந்தான். ஒரு போர்க்களத்தின் உள்ளங்கையைப்போல் அவ்விடமிருந்தது.

இங்குமங்குமாகப் பலரும் சிதறிக்கிடந்தனர். அருகில் குடல்சரிந்து ஒரு சுண்டாப்பூனை கிடந்தது. இன்னொன்று  தப்பியோடியிருக்க வேண்டும். ஒரு கூடையைக் கடித்து இழுத்துள்ளதால் அதிலிருந்த தேவவாக்கு விலங்குகள் வெளியில் சிதறியிருக்கின்றன. அவற்றைத் தப்பியோடிய பூனை விழுங்கி முடித்திருக்க வேண்டும்.

குருதிக்களம்விட்டு பார்வையை நகர்த்தி அடுத்த குன்றைப் பார்த்தான் பாரி. தப்பித்த மூவர் சற்றுத்தொலைவில் நடுமலையின் விளிம்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். மூவரின் தோள்களிலும் கூடைகள் இருந்தன. ஆவேசங்கொண்ட சுண்டாப்பூனைகளின் தாக்குதலையும் மிஞ்சி ஓடும் மூவரைப் பாரியின் கண்கள் வியப்புற்றுப் பார்த்தன.

ஏழுபேரைப் பலிகொடுத்தாலும் தூக்கிய மூன்று கூடைகளை விட்டுவிடாமல் அவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பாரி மீண்டும் ஓடத் தொடங்கினான். எதிரிகளின் ஆற்றல் நம்பமுடியாதபடி இருந்தது. இவ்வளவு தாக்குதலுக்குப் பின்பும் அவர்களின் வேகம் குறையாமல் இருந்ததை அவனது கண்கள் கணித்துக்கொண்டிருந்தன. உடன் வந்தவர்களில் பெரும்பான்மையோரின் மரணம் அவர்களின் வேகத்தைச் சிறிதும் தளர்த்தவில்லை.

அவர்களின் உடலும் மனமும் எதனையும் பொருட்படுத்தாத வேகங்கொண்டிருக்கின்றன என்று அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவன் ஓடத் தொடங்கினான். நடுமலையின் உச்சிக்கு வந்தான். அவன் கண்ணுக்கு முன்னால் தேவவாக்கு விலங்கை எடுத்துக்கொண்டு மூவர் நடுமலையின் முகட்டைக் கடந்திருந்தனர். அவர்கள் கீழிறங்கிய இடம் மனிதனால் சற்றும் நகரமுடியாத பெரும் மலைப்பள்ளத்தாக்கு. இதில் மிகமிகக் கவனமாகவே கால்களை நகர்த்தமுடியும். வேர்களையும் பாறையிடுக்குகளையும் பிடித்தபடியே இறங்கவேண்டும். இப்பகுதி முழுவதும் இப்படித்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p6
பொழுது மங்கத்தொடங்கிய நேரம் அவர்கள் பாறைகளின் இண்டு இடுக்குகளின் வழியே கவனமாக இறங்கிக்கொண்டிருந்தனர். பொருத்தமான இடத்தில் நின்று அவர்களைக் கவனிக்கத் தொடங்கினான். இப்பொழுது அவர்கள் மூன்று பேராக இல்லை. நிறைய தலைகள் தெரிந்தன. பாறையின் இடுக்குகளில் காத்திருந்தவர்கள் மீண்டும் இணைந்துவிட்டனர் என்பது புரிந்தது.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p7

மூச்சிரைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். கண்களுக்கு முன்னால் வேட்டை தப்பித்துப் போய்க்கொண்டிருந்தது. சுண்டாப்பூனைகளை வீழ்த்திவிட்டுத் தப்பிப்போகும் மனிதர்களை அவனது கண்கள் முதன்முறையாகப் பார்த்தன. தாவிக்குதித்து அவர்களை விரட்டிச்செல்ல உடல் துடித்தபொழுது, மனம் சூழலைப் புரிந்துகொள்ளப் போராடியது. அடங்காத ஆவேசத்தோடு சற்றே பின்னால் திரும்பினான்.

ஆதிமலையின் எலிவால் முகட்டிற்கு நேரே சென்றிப்புகை மேலெழுந்து உச்சிவரை போய்க்கொண்டிருந்தது. பறம்பின் ஆசான் உதவிகேட்டு புகைபோட்டிருக்கிறான் என்பது புரிந்தது. ஆசான் புகைபோட்டு நீண்டநேரம் ஆகியுள்ளது.எதிர்திசையில் ஓடிக் கொண்டிருந்ததால் பாரியின் கண்களுக்கு அது தெரியவில்லை. இப்பொழுதுதான் பார்த்தான்.

பாரி அவர்களை விரட்டத்தொடங்கிய உடனே சென்றிப்புகை போட்டுவிட்டான் தேக்கன். ஆதிமலையின் இரண்டாவது மூன்றாவது குன்றுப் பகுதிகளில் பெரும் பரப்பளவில் ஊர்களே கிடையாது. இரத்தச்சிலந்திக் காடாதலால் மனிதர்களும் வேட்டைக்கோ, மற்றவைகளுக்கோ இப்பக்கம் வரமாட்டார்கள். எனவே புகை பார்த்து வருவதாக இருந்தால் மிகத்தொலைவில் இருந்துதான் வர வேண்டும். ஆனால், மழைக்காலமாதலால் மேகங்கள் கீழிறங்காமல் இருந்தால்தான் புகை உச்சிக்குப் போனாலும் மனிதர்களால் கண்டறிந்து வர முடியும்.

தேக்கன் புகைபோட்டு பாதிநாள் கடக்கப்போகிறது; யாரும் வரவில்லை. கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதால் மாணவர்கள் கொடும் வேதனையில் இருந்தார்கள். பொழுது மறைய சிறிதுநேரமே இருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் புகைபார்த்து வருகிற ஆளை வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டும். இரண்டு, மூன்று திட்டங்களோடு தேக்கன் காத்திருந்தான்.

மடுவன் தொலைவில் கைநீட்டிக் காண்பித்தான். யாரோ வருவது தெரிந்தது. தேக்கன் உற்றுப்பார்த்தான். வந்து நின்றது வேட்டூர் பழையனும் இரு வீரர்களும். ஆதிமலையின் புலிவால் குகையில் தங்கியவன் காலை நேரங்கழித்து புறப்பட்டிருக்கிறான். இரண்டாம் குன்று தாண்டும்பொழுது பார்த்திருக்கிறான். இரத்தச்சிலந்தி காட்டுப்பகுதியில் இருந்து சென்றிப்புகை ஏற்றப்பட்டுள்ளது. மிகத்தொலைவில் புகை எழுந்துள்ளது. ஆனால், இப்பகுதிக் காட்டுக்குள் வேறு யாரும் இருக்கப்போவதில்லை. எனவே உதவிக்கு நாம்தான் இங்கிருந்து போக வேண்டும் என்று நினைத்து வீரர்களோடு நாள்முழுவதும் நடந்து வந்து சேர்ந்தான்.

வேட்டூர் பழையனுக்கு நடந்ததை தேக்கன் விளக்கினான். தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வலியாலும் கசப்பின் கொடுமை தாங்காமலும் துடித்துக்கிடந்தார்கள். கருவிழி உருகி வழிந்தவன், உருண்டு பெரும்பள்ளத்தில் வீழ்ந்ததில் மயக்கநிலையை அடைந்தான். வேட்டூர் பழையனுக்குப் பார்க்கும் காட்சி, கேட்கும் கதை எதையும் நம்ப முடியாமல் இருந்தது.

தேக்கன் விழுந்து உருண்டதில் இடுப்பின் பின்பகுதியில் பெரும் ஈக்கி குத்தி உள்சொருகியிருந்தது. ஈக்கியை எடுத்துவிடச் சொன்னான். பழையன் கவனமாக அதனைப் பிடித்து வெளியே இழுத்தான். “ஆ”வென கத்திய தேக்கனின் குரல்  துண்டிக்கப்பட்டதைப்போல பாதியில் ஒலியற்று நின்றது. அவனது கண்கள் எதிரில் பார்த்த காட்சியே அதற்குக் காரணம். எதிரில் நடுமலையின் உச்சியில் சென்றிப்புகை மேலேறிக்கொண்டிருந்தது. தேக்கனின் கண்கள் அகலத்திறந்தபடி இருந்தன. மேலெழும் புகை பார்த்து வாய் மட்டும் முணுமுணுத்தது “அது...   பாரி.”

ஒரே நாளில் பறம்பின் ஆசானும், பறம்பின் தலைவனும் சென்றிப்புகைபோடும் நாளும் வந்தது.  

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 3:30 pm

முழுநிலவு கழிந்து இரு நாள்கள்தான் ஆகின்றன. நிலவின் ஒளியை, கூடிநிற்கும் கருமேகங்கள் முழுமையாக மறைத்திருந்தன. கடும் இருட்டுக்கு நடுவில் இங்கும் அங்குமாக மின்னல் வெட்டிச் சரிந்துகொண்டிருந்தது. தேக்கனும் வேட்டூர் பழையனும் உடன்வந்த வீரர்களோடு கீதானியையும் அலவனையும் மட்டும் அழைத்துக்கொண்டு நடுமலையில் இருந்த பாரியிடம் வந்தனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களுக்குச் சில மருத்துவங்களைச் செய்து, குகை ஒன்றில் தங்கச்சொல்லிவிட்டு வந்தனர். நடுமலையிலிருந்து சென்றிப்புகை மேலேறியதைப் பார்த்துக் காட்டுக்குள் இருந்த நால்வர் ஏற்கெனவே பாரியிடம் வந்திருந்தனர். அனைவரும் இப்போது ஒன்றிணைந்தனர்.

காயங்கள் அதிகமாக இருந்ததால், தேக்கனை பாரி எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவனோ, வேட்டூர் பழையனையும் சேர்த்து அழைத்து வந்தது வியப்பை ஏற்படுத்தியது. அடர் இருளுக்குள் மழை கொட்டித்தீர்க்கப்போகிறது. இடியோசையும் வெட்டும் மின்னல் ஒளியும் காட்டை மிரட்டிக்கொண்டிருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p4
ஏற்றுக்கொள்ள முடியாத உண்மைகள் கசப்பினும் கொடியவை. அவற்றை விழுங்கவோ, கரைக்கவோ முடியாது. சில கனிகளை வேட்டூர் பழையன் கொடுத்த பிறகு மாணவர்களின் தொண்டைக்குழியில் இருந்த கசப்பு சற்றே மட்டுப்பட்டது. ஆனால், பெரியவர்களின் உடல் முழுவதும் அது ஏறியிருந்தது.  ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் விழுங்க முடியாத கசப்பை இந்தப் பெரியவர்களுக்கு வழங்கிவிட்டுப் போயிருக்கிறான்.  எனவே, இப்போது பெரியவர்கள் பேசப் பேச அவர்களுக்குள் மாணவர்களுக்குச் சுரந்ததைப்போல கசப்பு சுரந்துகொண்டிருந்தது. சகித்துக்கொள்ளவே முடியாத கசப்பு. தேவவாக்கு விலங்கைக் கண்ணெதிரே தூக்கிக்கொண்டு ஓடுவதைப் பற்றிப் பேசுவதைவிட கொடுங்கசப்பு வேறில்லை.

“இந்த மலைத்தொடரின் அமைப்பைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பது கொற்றவையின் கூத்துக்களத்திலிருந்து நடுமலை வரை அவர்கள் ஓடிவந்த வழித்தடத்தின் வழியே அறிய முடிகிறது. அதே நேரத்தில் எவ்வளவு கொடுங்காட்டுக்குள்ளேயும் நுழைந்து வெளியேறக்கூடிய ஆற்றல்கொண்டவர்கள் என்பதும் அவர்கள் வந்த வழித்தடத்திலிருந்து அறிய முடிகிறது” என்றான் பாரி.

“யார் இவர்கள்? எத்தனை பேர் வந்துள்ளார்கள்? இந்தத் திசையை நோக்கிப் போனால் எந்த நாட்டை அடைவார்கள்?” என்று கேட்டான் வேட்டூர் பழையன்.

“அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் திசையை வைத்து அவர்களின் நாட்டை நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் எளிமையானதும் சரியானதுமான திசைவழியைத் தேர்வுசெய்து ஓடவில்லை. எந்த வழியில் ஓடினாலும் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியோடு ஓடுகின்றனர்” என்று சொன்ன பாரி, சற்றே இடைவெளிவிட்டுச் சொன்னான் “எந்தவொரு வேந்தனின் கட்டளைக்காகவும் இவர்கள் இந்தப் பணியைச் செய்யவில்லை. அரசர்களின் போர்வீரர்கள் இவ்வளவு உறுதிப்பாட்டை ஒருபோதும் கொண்டிருக்க  முடியாது. அதையும் தாண்டிய ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இந்த வேலையை இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். பாரியின் கணிப்பு மிகச்சரியானது எனத் தேக்கனுக்குத் தோன்றியது. அவர்கள் கண்களில் இருந்த ஆவேசம் எந்தக் கணத்திலும் குறையவில்லை. எல்லாவற்றையும் தகர்த்தெறியும் வலிமையும் உறுதியும் கொண்டவர்களாக அவர்களை உணர்ந்திருந்தான் தேக்கன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p1
வேட்டூர் பழையனோ பேசப்படும் சொற்களின் வழியே அவர்களின் வேகத்தையும் திறனையும் மனதுக்குள் உருவகித்துக்கொண்டிருந்தான். ‘இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்திவிட்டு எதிரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பாரியும் தேக்கனும் நிதானமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனரே’ என்று புதிதாய் வந்து சேர்ந்த வீரர்கள் பதறியபடி நின்றிருந்தனர்.

நடுமலைக்கும் கடைசி மலையான காரமலைக்கும் இடையில் மூன்றாம் சரிவில் இருக்கும் காட்டாற்றின் நடுவில் அவர்களைத் தாக்கும் புதியதொரு தாக்குதல் முறையை வேட்டூர் பழையன் சொன்னான்.

‘`அவர்கள் உடலின் வடிவத்தையும் வலிமையையும் சிந்தித்தால், தண்ணீர்தான் இயல்பிலேயே அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர ஏதுவான இடம். அவர்களின் பலத்தையே பலவீனமாக மாற்றலாம்” என்று வாதிட்டான்.

“நீரின் வேகம் வலிமையாக இருந்தால் மட்டுமே அது உதவிசெய்யும். இல்லையென்றால், மிக எளிதில் அந்தத் திட்டத்தை அவர்களால் முறியடித்துவிட முடியும்” என்றான் தேக்கன்.

வேறு வழியென்ன எனச் சிந்தித்தபோது பாரி சொன்னான், “நடுமலையிலிருந்து காரமலை வரை அவர்களைக் குறுக்கீடு செய்ய வேண்டாம். ஓடட்டும். அவர்களுடன் வந்துள்ளவர்கள் இன்னும் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த பிறகுதான் நாம் தாக்குதலைத் தொடுக்க வேண்டும்” என்றான்.

தேக்கனும் வேட்டூர் பழையனும் சற்றே அதிர்ந்தனர். காரமலையைத் தாண்டிவிட்டால் சில இடங்களில் ஒன்றிரண்டு குன்றுகள் இருக்கின்றன. சில இடங்களில் அதுவும் இல்லை. மிக எளிதாகச் சமதளக் காடுகளுக்குள் நுழைந்துவிடலாம். எனவே, பாரி சொல்வது ஆபத்தான திட்டமாக அவர்களுக்குத் தோன்றியது.

“இதைத் தவிர வேறு எந்தத் திட்டமிடலைச் செய்தாலும் நம்மால் அவர்களை வளைக்க முடியாது. அடிப்படையில் அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியாமல், எந்தத் திசையை நோக்கி ஓடுகிறார்கள் என்பதும் தெரியாமல் காட்டுக்குள் அவர்களை நம் வீரர்கள் மறித்துத் தாக்குவது கடினம். நீங்கள் சொன்னபடி, ரத்தச்சிலந்திகள் கீழ் இறங்குவதற்குள் புதரை விலக்கி அந்த இடத்தைக் கடந்துள்ளனர் என்றால், அது எளிதான செயல் அல்ல. அதைவிட அடர் கானகம் வேறு எதுவும் இல்லை. அதையே ஊடறுத்து வெளிவந்துள்ளனர். இனி அவர்கள் பச்சைமலைத்தொடரின் எந்த ஒரு காட்டையும் எளிதில் கடந்துவிடுவார்கள்.”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p5

பாரி சொல்வது நம்ப முடியாத, ஆனால் நம்பியே ஆகவேண்டிய ஒன்றாக இருந்தது.

“இன்னும் சற்றுநேரத்தில் மழை இறங்கப் போகிறது. மழை தொடங்கிவிட்டால், அவர்களால் இந்தக் குத்துக்கல் பள்ளத்தாக்கில் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. மண்ணின் சரிவும் இறங்கியோடும் தண்ணீரின் வேகமும் யாரையும் இழுத்துக் கொண்டு போய்விடும். எனவே, இன்று இரவு முழுவதும் அவர்கள் ஏதேனும் ஓர் இடுக்கினில் தங்கித்தான் ஆக வேண்டும்.  மழை நின்ற பிறகு நாளைக் காலையில்தான் அவர்கள் இறங்கத் தொடங்குவார்கள். பகல் முழுவதும் இறங்கினால் மாலை நேரத்தில் அடிவாரத்தை அடையலாம். மண் நன்கு ஈரமாகிவிட்டால், நேரம் இன்னும் அதிகமாகும். அதன் பிறகு எவ்வளவு வேகமாக ஓடினாலும் காரமலையை அடைய அடுத்த நாள் உச்சிப்பொழுது கடந்துவிடும்.

ஆனால், நாம் இப்போது இங்கிருந்து ஓடைச் சரிவின் வழியே நடக்கத் தொடங்கினால் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு பாதிப்பும் ஏற்படாது. நாளை மாலைக்குள் காரமலையின் உச்சியை அடைந்துவிடலாம். ஒரு முழு இரவு நம் கையில் இருக்கிறது. அங்கிருந்து தாக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றான் பாரி.

நீண்டநேரம் அமைதியாகவே இருந்த தேக்கன், இப்போதும் அப்படியே இருந்தான். ஆனால், இவ்வளவு நேரம் உரையாடிக்கொண்டிருந்த வேட்டூர் பழையனோ, மறுமொழி ஏதும் கூறாமல் அமைதியானான். பாரி, பழையனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பழையன் சொன்னான், “எல்லாம் எதிர்திசையில் நடந்து கொண்டிருக்கின்றன.”

பழையன் சொல்லவருவது புரியவில்லை. பாரியின் முகமறிந்து பழையன் விளக்கினான், “மேற்கு திசைக் காடுகளில் பறம்பை நோக்கிப் படைகளை நகர்த்த பாதை அமைத்துக் கொண்டிருந்தான் சேரன். நாமும் மிகத்தீவிரமாக அதைக் கண்காணித்துக்கொண்டிருந்தோம். ஆனால், நேரெதிராகக் கிழக்கு திசையிலிருந்து பறம்புக்குள் நுழைந்து கொற்றவையின் கூத்துக்களம் வரை இவர்கள் வந்துள்ளனர். நமது கவனத்தைத் திருப்பி அதற்கு நேர் எதிர்திசையிலிருந்து உள்நுழைந்துள்ளனர். அதேபோன்ற சூழ்ச்சிதான் ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் செயலின் பின்னணியிலும் இருக்கும் என நினைக்கிறேன்” என்றான் பழையன்.

எவரும் மறுப்பேதும் சொல்லாமல் அவன் சொல்வதை மட்டும் கவனித்தனர்.

“தேவவாக்கு விலங்கை வைத்து என்ன செய்ய முடியும்? அதற்காக ஏன் உயிரைக்கொடுத்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்?”

பழையனின் வினாவைத் தொடர்ந்து அமைதியே நீடித்தது.

பழையன் சொன்னான், “அவர்களின் தேவை அந்த விலங்கு அல்ல. அதைக் கவர்ந்து நம்மை இழுக்கப் பார்க்கின்றனர். அந்த விலங்குக்காகப் பறம்புமலையைவிட்டு சமதளத்தில் இறங்கப் போகும் மனிதனே அவர்களின் இலக்கு” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான் பழையன். அவன் யாரைச் சொல்ல வருகிறான் என்பது புரிந்தது.

இவ்வளவு தொலைவு மலையில் ஓடியவர்களை விட, காரமலையில் மறைந்திருப்பவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பர்.  ‘`நாமும் ஆயத்தமாக அவர்களை அங்கு எதிர்கொள்ளும் போது, நம் கையருகிலிருந்து நழுவி அவர்கள் மலையைவிட்டு இறங்கப் போகிறார்கள். பறம்பின் தேவவாக்கு விலங்கு நழுவிப்போவதை அனுமதிக்க முடியாத நாம், தாக்குதலின் தொடர்ச்சியாக நம்மை அறியாமலேயே மலையைவிட்டு நழுவி சமதளக் காட்டுக்குள் நுழையப்போகிறோம். அங்கே நம்மைச் சூழ அவர்கள் காத்திருப்பார்கள்” என்றான் பழையன்.
அவர் சொல்வதைச் சட்டென மறுத்துவிடும் நிலை இல்லை. உடன் நின்றிருந்த வீரன் சற்றே தயக்கத்தோடு கேட்டான், “ஆனால், பறம்பை இவ்வளவு குறைவாக மதிப்பிட்டு, இவ்வளவு துல்லியமான திட்டமிடலைச் செய்யும் அளவுக்கு யாருக்குத் துணிவிருக்கும்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p2
“யாருக்குத் துணிவிருக்கும் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், யாருக்கோ துணிவிருந்திருக்கிறது என்பதைத்தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”

“உங்களின் கருத்துதான் என்ன?”

“நடுமலைக்கும் காரமலைக்கும் இடையிலேயே அவர்களை அழித்தால்தான் உண்டு. எக்காரணம் கொண்டும் காரமலையின்மீது ஏற அவர்களை அனுமதிக்கக் கூடாது” என்று பாரி உறுதியாகச் சொன்னான். தொடர்ந்து, “அதற்கு வாய்ப்பில்லை. நாம் நின்று திட்டமிட முடியாது; ஓடிக்கொண்டேதான் திட்டமிட முடியும். இருவரின் ஓட்ட வேகத்தில் இருக்கும் இடைவெளிதான் நமக்குக் கிடைக்கும் நேரம். நாம் அவர்களைத் தாக்க ஆயத்தமாவதற்கான குறைந்தளவு நேரம் இந்தக் குறிப்பிட்ட தொலைவை ஓடிக் கடக்க அவர்களை அனுமதிப்பதன் வழியாகவே கிடைக்கும். அவர்கள் நம்மிலும் வேகமாக ஓடக்கூடியவர்கள். ஆனால், தவறான வழியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் சரியான வழியில் ஓடுவதால், அவர்களின் வேகத்தை எளிதாகக் கடந்து முன்னிலையை அடைய முடியும்.”

“சரி, நாம் காரமலையை விரைவில் அடைந்து விட்டால், அவர்கள் வந்துசேர்வதற்குள் நம்மால் எவ்வளவு வீரர்களைத் திரட்டிவிட முடியும்?” எனக் கேட்டான் பழையன்.

“போரிடப் புதிதாக வீரர்கள் தேவையில்லை. இங்கு இருப்பவர்களே போதும்” என்றான் பாரி.

அவனது சொல் தேக்கனையும் பழையனையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘பதற்றத்தில் பாரி நிதானம் தவறுகிறானோ’ எனத் தோன்றியது. தோன்றிய மறுகணமே, ‘இல்லை, பாரி உதிர்க்கும் சொற்கள் பறம்பைப்போல் நிலைகொண்டவை. ஒருபோதும் உதிராது. எந்தச் சூழலிலும் பாரி நிதானம் இழப்பவனல்லன்’ என்றும் தோன்றியது.

‘ஆனால் இப்போது ஏற்பட்டுள்ளது புதிய சூழல். இதை வழக்கமான ஒன்றைப்போல மதிப்பிடவும் முடியாது’ என்றும் தோன்றியது. இருவருக்கும் குழப்பமே மிஞ்சியது. பாரி குழப்பமற்று இருந்தான். அது இவர்கள் இருவரையும் மேலும் குழப்பத்துக்குள்ளாக்கியது.
பாரி தொடர்ந்தான், “எனக்கு வீரர்கள் தேவையில்லை. காட்டுக்குள் எதிரிகளின் நகர்வை உணர்த்தும் அடையாளக்காரர்கள் மட்டுமே தேவை” என்றவன் மேலும் சொன்னான், “அவர்களை வழக்கமான தாக்குதல் முறைகளால் ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களை அழித்து, தேவவாக்கு விலங்கைக் காப்பாற்ற வேறு வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அதைப் பற்றி நான் சிந்தித்துவிட்டேன்” என்றான்.

பாரியின் குரலில் இருந்த உறுதி எதிர் கேள்விக்கான இடம் எதையும்  விட்டுவைக்கவில்லை.  ஆனாலும் பழையன் கேட்டான், “நீ இவ்வளவு உறுதிகொண்டு சொல்வதால் நான் ஏற்கிறேன். ஒருவேளை, அவர்கள் தேவவாக்கு விலங்கைத் தூக்கிக்கொண்டு சமதளக் காட்டுக்குள் நுழையும் சூழல் வந்தால், பறம்பைவிட்டு நீ கீழிறங்கக் கூடாது. நாங்கள் பின்தொடர்ந்து தாக்கி அதைக் கைப்பற்றுகிறோம்.’’

“இந்த உறுதியை அளிப்பதன் மூலம் எனது உறுதியைக் கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை. அவர்களால் ஒருபோதும் பறம்பின் எல்லையைத் தாண்ட முடியாது.” பாரியின் சொல் பாறையென நிலைகொண்டது.

இடியோசையில் திசைகள் நடுங்கின. மழை இறங்கியது. வெட்டும் மின்னலொளியில் காட்டின் மேற்கூரை கழன்றுவிட்டதுபோல் தெரிந்தது. “தேவவாக்கு விலங்கு என்பது, கொற்றவையின் குறிசொல்லும் குழந்தை. அதை எதிரியிடம் பறிகொடுப்பது நமது உயிரைக் கொடுப்பதற்கு நிகர். ஒருபோதும் அது நிகழாது.’’  - முழங்கும் பாரியின் குரலே இடியோசையென காடெங்கும் ஒலித்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p6
எதிரிகளை அழிக்கும் பணி பாரியினுடைய தானது. அவர்கள் எந்த இடத்தில் காரமலையைக் கடக்கப்போகின்றனர் என்பதைக் கண்டடைவதும், அங்கிருந்து அவர்கள் போகும் வழியைத் தெளிவாகத் தெரியப்படுத்துவதும்தான் மற்றவர்களின் வேலை.

இருப்பவர்களை இருகூராகப் பிரித்தனர். பாரி தன்னுடன் கீதானியையும் அலவனையும் வைத்துக்கொண்டான். வந்த வீரர்களில் அம்பு எய்வதில் சிறந்த இருவரை உடன் அழைத்துக் கொண்டான். மற்ற எல்லோரையும் இன்னொரு குழுவாக்கினான். அவர்களுக்கான பணி உறுதியானவுடன் அவர்கள் நடுமலையின் தென்புறம் நோக்கிப் புறப்படத் தொடங்கினர். பாரி, வடதிசையை நோக்கிப் புறப்பட்டான்.

காட்டில் வீறுகொண்டு மழையடிக்கும்போது, நிலம் பார்த்து மிகக்கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், நீரும் நிலமும் மனிதனை விழுங்கிவிடக்கூடும். ஆனால், இப்போது நடப்பது வேறொன்று. மின்னலைக் கைக்கோலாகக்கொண்டு நடக்கும் மனிதர்களை, காடு பார்த்துக்கொண்டிருந்தது. தங்கள் தோளில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளி மண்ணில் விழும் முன் மறுகுன்று கடக்க அவர்கள் முயன்று கொண்டிருந்தனர்.

தேக்கனும் வேட்டூர் பழையனும் உடன் வந்த நான்கு வீரர்களும் தென்திசை நோக்கி விரைந்தனர். அதிகாலைக்குள் குடிமனூரை அடைந்தே ஆகவேண்டும். அங்குதான் கூவல்குடியினர் இருக்கின்றனர்.

 ந்த ஆண்டு நடந்த கொற்றவைக் கூத்தில் எட்டாம் நாள் விழா கூவல்குடியினருடையது. கூவல்குடியினர், இயற்கையின் ஆதிமைந்தர்கள்; தவளையை வழிபடுபவர்கள். தவளையின் குரல்வளையிலிருந்து எழும் ஓசை, பறையின் அதிர்வோசையையும் விஞ்சக்கூடியது. அதனால்தான் தவளையை ‘ஓசையின் அரசி’ என்று அழைக்கின்றனர்.

அளவு சிறுத்த இடியை அடித்தொண்டையில் வைத்து இரவெல்லாம் கக்கிக்கொண்டே இருக்கும் உயிரினம் அது. களைப்பின்றி ஓசையை எழுப்பிக்கொண்டே இருப்பதில் தவளைக்கு நிகரானது எதுவும் இல்லை. கூவல்குடியினரும் அதைப்போல்தான். அவர்களின் குரல்வளை இடியோசைக்கு நிகரானது மட்டுமன்று, இளைப்பாறுதல் அற்றது. எவ்வளவு பெரிய மலைத்தொடரையும் ஒலிக்குறிப்புகளைக்கொண்டு இணைத்துவிடும் ஆற்றல்கொண்டது.

மலையில் ஓசையெழுப்பும் பெருங்கருவி என்றால், அது காரிக்கொம்புதான். எல்லா மலையூர்களிலும் அது இருக்கும். அதை எளிதாக எடுத்து ஊத முடியாது. அதை ஊத மிகச்சிறந்த பயிற்சி வேண்டும். முழுவலிமையோடு ஊதினால் மலை முழுவதும் எதிரொலிக்கும். ஒருமுறை ஊதுவது, இரட்டித்து ஊதுவது என்ற இரண்டு முறைகளால் மலைமக்கள் தங்களின் குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் செய்திகளைப் பரப்புகின்றனர்.

இதிலிருந்து சற்றே மாறுபட்டவர்கள் பறம்பின் மக்கள். அவர்கள் காரிக்கொம்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவர். ஆனால், அதை நிலைகொண்ட ஊர் இருக்கும் இடத்தில்தான் பொதுவாகப் பயன்படுத்த முடிகிறது. காட்டுக்குள் உள்ள ஒரு மனிதன், உதவி தேவைப்பட்டால் என்ன செய்ய முடியும் எனச் சிந்தித்து சென்றிக்கொடியைக் கண்டறிந்தனர்.

காரிக்கொம்பைத் தூக்கி ஊதப் பயிற்சி தேவை. அப்போதுதான் அது தொலைவுக்குக் கேட்கும். ஆனால், சென்றிக்கொடியால் புகைபோடுதல் மிக எளிது. சிறுவர்கூட தனக்கு உதவி தேவை என்று காட்டின் இன்னொரு மூலையில் இருப்பவருக்குத் தெரிவித்துவிட முடியும். அவ்வளவு எளியது மட்டுமன்று, சிறந்ததும்கூட. அதிலும் பிரச்னை இல்லாமல் இல்லை. புகையை, பகலில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் மழைக்காலத்தில் மேகங்கள் திரண்டுவிட்டால் மறைக்கப்பட்டுவிடும்.

மேளதாள ஓசைகள், காரிக்கொம்பு, சென்றிப்புகை என உதவி கேட்கும் வழிமுறைகள் பல இருந்தாலும், ஒவ்வொன்றிலும் நிறைகுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் கருவிகள் எவையும் கூவல்குடியைச் சேர்ந்த ஒரு தனிமனிதனுக்கு இணையாகா. அவர்கள் இடியை விழுங்கி இரவெல்லாம் கக்கிக்கொண்டிருப்பவர்கள். பழுத்த கனியை பாறையில் எறிந்து தெறிக்கவைப்பதைப்போல, ஓசையைக் காற்றுடன் மோதவிட்டுத் தெறிக்கவிடக் கூடியவர்கள். தம் அடிநாக்கை மடித்து எழுப்பும் ஒலியால் காட்டுக்கே ஒலிவேலி கட்டுகிறவர்கள். அவர்களின் இருப்பிடமான குடிமனூரை நோக்கியே தென்புறம் சென்றுகொண்டிருக்கிறது தேக்கனின் தலைமையிலான குழு.

கொட்டும் மழையில், மிக மெதுவாகவே நடந்தான் பாரி. அவனுக்கு நிறையவே நேரம் இருந்தது. கீதானியும் அலவனும் கடந்த இரு நாள்களாக ஓடிய ஓட்டத்தை அவன் அறிவான். அதுமட்டுமல்ல, எதிரிகளின் தக்குதலாலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொண்டைக்கசப்புக்கு வேட்டூர் பழையன் மாற்று கொடுத்துள்ளான். அதனால்தான் இப்போது அவர்களால் சற்றே இயல்பாக இருக்க முடிகிறது. இல்லையென்றால், இந்நேரம் அவர்கள் குரல் நாளங்களைப் பிய்த்தெறிய ஆயத்தமாகியிருப்பார்கள்.

பாரி, இருவரையும் அரவணைத்து அழைத்துச்சென்றான். மற்ற வீரர்கள் இருவரும் ஆவேசத்தோடு முன்னால் ஓடிக்கொண்டிருந்தனர். காட்டோடையில் பெருகும் நீர் பார்த்து இரவெல்லாம் நடந்தனர். இடியும் மின்னலும் பாறையெங்கும் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. மழையோசை கேட்டு விலங்குகள் பம்மிக்கிடந்தன. நீரின் விதவிதமான ஒலிகளால் காடு நிறைந்துகிடந்தது.

ஒளிக்கீற்று மெள்ள பரவத் தொடங்கியபோது நாய்வாய் ஊற்றுக்கு வந்து சேர்ந்தனர். மழை சற்று முன்னர்தான் நின்றது. உடல்மேல் பொழிந்துகிடந்த நீர் உதிர்த்துப் பறவைகள் சிறகசைக்கத் தொடங்கின. காரமலையின் அடிவாரம் செல்ல இன்னும் சிறிதுதொலைவே இருந்தது. கிழக்குதிசை வெளிச்சம் காரமலையின் மேலிருந்து வழியத் தொடங்கியது . பாரியின் கண்களுக்குத் தூர் அகன்ற உடைமரம் ஒன்று கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் நின்றுவிட்டான். உடன் வந்தவர்களும் நின்றனர்.

இந்த மரத்தில் என்ன இருக்கிறது என்று மற்றவர்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். பாரி, வீரர்கள் இருவரையும் பார்த்துச் சொன்னான், “உடைமுற்களைக் கை நிறைய ஒடித்து வாருங்கள்.’’

வீரர்கள் இருவரும் முள் ஒடிக்கப் போனார்கள். அலவனையும் கீதானியையும் அருகில் இருக்கும் பறையின்மீது உட்காரச் சொன்னான். இருவரும் உட்கார்ந்தனர். ‘முள் ஒடித்து என்ன செய்யப்போகிறான் பாரி?’ என்ற எண்ணம் வீரர்கள் இருவருக்கும் இருந்ததைப்போலவே இவர்களுக்கும் இருந்தது.

வீரர்கள் மிகக்கவனமாக ஒவ்வொரு முள்ளாக ஒடிக்கத் தொடங்கினர். பாரி, அலவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அலவனின் கவனம் உடைமரத்தில் இருந்ததால், அவன் பாரியைக் கவனிக்கவில்லை. கீதானி காலால் மெள்ளத் தட்டியபிறகுதான் கவனித்தான்.

“சிறுத்துக் கிடக்கும் உடைமரப் புதருக்குள் கொம்பேறி மூக்கன் கிடக்குமே, உன்னால் பிடித்துவிட முடியுமா?” என்று கேட்டான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p3
“முடியும்” என்றான் அலவன்.

“பிடித்து வா, பார்ப்போம்” என்றான் பாரி.

அலவன், கீதானியைத் துணைக்கு அழைத்துக்கொண்டான். கழி ஒன்றை எடுத்துக் கொண்டு புதரின் ஒரு பக்கத்தை அசைக்கச் சொல்லி, மறுபக்கத்தில் நின்று கவனித்தான். கொம்பேறி மூக்கன், கொப்புகளைவிட்டு மறுகொப்புக்கு மிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. பிடிப்பது எளிதல்ல. பார்த்த கணத்தில் கடந்து செல்லும் வல்லமைகொண்டது. கீதானி ஒவ்வொரு புதராகப் போய் அசைத்தான். அலவனின் கண்கள் கூர்மையாகத் தேடின.

முள் ஒடிக்கும் வீரர்களுக்கும் பாம்பு பிடிக்கும் மாணவர்களுக்கும், இந்தப் பணியைச் செய்யச் சொன்னதன் காரணம் விளங்கவில்லை. ‘எதிரிகளின் வலிமையைப் பற்றி நேற்றிரவு பேசிய பேச்சுக்கும், இப்போது செய்துகொண்டிருக்கும் செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒற்றைக் கையால் தேக்கனை அடித்துத் தூக்கும் அந்த வீரர்களை இந்தச் சிறுமுள்ளையும் பாம்பையும்கொண்டு தாக்கி வீழ்த்திவிட முடியுமா?’ சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பமே மிஞ்சியது. இவற்றை வைத்து பாரி என்ன செய்யப்போகிறான் என்பது புரிந்துகொள்ளவே முடியாததாக இருந்தது.
பாறையில் உட்கார்ந்த பாரி சொன்னான், “முள் ஒடிக்கும் முன் மூக்கனைப் பிடித்து வா அலவா.’’வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p7

முள் ஒடிக்கும் வீரர்களுக்கு அப்போதுதான் தோன்றியது, ‘சிறுவன் பாம்பை உடனே பிடித்து விட்டால், நாம் பின்தங்கிவிடுவோமே’ என்று. மாணவர்களுக்குத் தோன்றியது, ‘அவர்கள் எளிதில் முள் ஒடித்துவிடுவார்கள். அதற்குள் நாம் மூக்கனைப் பிடித்தாக வேண்டும்’ என்று. இருவரும் இப்போதுதான் கவனம்கொள்ளத் தொடங்கினர்.

வேகவேகமாக வேலை நடந்துகொண்டிருந்தது. வீரர்கள் சடசடவென ஒடிக்க நினைத்தனர். கவனமாக இல்லையென்றால், அது விரல்களைக் குத்திக் கிழித்துக்கொண்டே இருக்கும். அதுவும் இரவு முழுவதும் நனைந்ததால் அவர்களின் விரல்கள் ஊறிப்போய் இருந்தன. நகங்களின் முனையை வைத்தே ஒடித்துக்கொண்டிருந்தனர். இருவரும் கை நிறைய ஒடித்துவந்து பாறையில் கொட்டினர்.

சற்றே சாய்ந்து உட்கார்ந்த பாரி, விரல்களால் கிளறி, மிக நீளமாக இருக்கும் முள்களையும் நீளமற்று இருக்கும் முள்களையும் ஒதுக்கிவிட்டு நடுத்தரமான அளவுகொண்ட முள்களை மட்டும் தனியே பிரித்தெடுத்தான்.

பாரி இதை ஏன் செய்கிறான் என்று புரியாமல் வீரர்கள் இருவரும் முழித்துக்கொண்டிருந்தபோது அலவனிடமிருந்து குரல் கேட்டது, “கொம்பேறி மூக்கன் கிடைக்கவில்லை. கொடிமூக்கன்தான் கிடைத்துள்ளான். போதுமா, இல்லை இன்னும் தேடவா?”

“கொண்டு வா, அதன் அளவைப் பார்ப்போம்” என்றான் பாரி.

புதர் விலக்கி அவர்கள் வெளிவந்தபோது அதன் நீளத்தைப் பார்த்து வீரர்கள் இருவரும் விக்கித்துப்போனார்கள். அலவன் அதன் கழுத்தைப் பிடித்திருந்தான். கீதானி அதன் நடுப்பகுதியைப் பிடித்திருந்தான். கை முழுவதும் சுற்றிச் சுருண்டிருந்த அதன் நீளம் பார்க்கவே அச்சமூட்டுவதாக இருந்தது.

‘கொம்பேறி மூக்கன் கிடைக்கவில்லையே’ எனச் சிந்தித்த பாரி, பிடிபட்ட கொடிமூக்கனைக் கொண்டுவரச் சொன்னதற்குக் காரணம் அதன் நீளத்தை அறியத்தான். அவன் எதிர்பார்த்ததைவிட வயது முதிர்ந்ததாக அது இருந்தது.

 “இது போதும், வா” என்றான் பாரி.

இருவரும் பாறை நோக்கி வந்தனர். தனக்கான ஆயுதத்தைப் பாரி தயார் செய்யத் தொடங்கியபோது, காரமலையின் மேல்விளிம்பிலிருந்து எட்டிப்பார்த்தான் கதிரவன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 4:16 pm

கூவல்குடியினர் எட்டுப்பேரை அழைத்துவந்தான் தேக்கன். அதில் மூன்று பேர் வயதானவர்கள். ஐந்து பேர் இளைஞர்கள். வயதானவர்கள் எழுப்பும் ஓசை இணையற்றதாக இருக்கும். மலையின் எந்த எல்லைக்கும் அவர்களால் குறிப்புச் சொல்ல முடியும். ஆற்றுநீரில் சுழி ஏற்படுவதுபோல காற்றில் ஓசைகொண்டு சுழிக்கச்செய்யும் ஆற்றல்கொண்டவர்கள். ஆனால், காட்டை ஊடறுத்து வேகமாக ஓட முடியாது. இளைஞர்களால் அவர்களின் அளவுக்கு ஓசையைக் காடுதாண்டி வீச முடியாது. ஆனால், தங்களின் ஓட்டத்தால் அந்த இடைவெளியை நிரப்பிவிடுவார்கள்.
ஊரிலிருந்த எட்டுப்பேரை அழைத்துக்கொண்டு அதிகாலையிலேயே காரமலையில் ஏறத் தொடங்கிவிட்டான் தேக்கன். மிக விரைவாகவே அவர்கள் மலையுச்சியை அடைந்துவிட்டனர். காரமலையின் ஒவ்வொரு முகட்டுக்கும் ஒவ்வொருவராகப் பிரித்து அனுப்பப்பட்டனர். பொழுதடைவதற்குள் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் நிலைகொண்டனர்.

ஒரு திசையிலிருந்து மறுதிசைக்குக் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை காரமலை, இப்பொழுது ஒலிக்கண்ணிகளால் பின்னப்பட்டுவிட்டது. இந்த எல்லைக்குள் எதிரிகள் எவ்விடத்தில் மலையைக் கடந்தாலும், கண்டறிந்து ஒலியெழுப்பிக் குறிப்புகொடுக்க அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.
மலைமுகட்டுக்கு வந்ததும் வேட்டூர் பழையன் புறப்படத் தயாரானான். எதிரிகளை வீழ்த்த பாரி என்ன உத்தியை வகுத்திருக்கிறான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் மலையடிவாரத்தில் முழு தயாரிப்போடு இருக்க வேண்டியது கட்டாயம் என்று தோன்றியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p1
“இங்கிருந்து காரிக்கொம்பை ஊதினாலே கீழே வேட்டுவன் பறையிலிருக்கும் நீலன் வீரர்களோடு ஆயத்தமாகிவிடுவான். ஆனால், அந்த ஓசை எதிரிகளையும் விழிப்படையச் செய்துவிடும். எனவே, நான் நேரில் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான் வேட்டூர் பழையன்.

பழையனைக் கீழே அனுப்புவது முறையல்ல என்று தேக்கனுக்குத் தோன்றியது. மலையின் மீதிருந்து எதிரிகளை வீழ்த்தப் பாரி போரிடும் போது, நாம் உடனிருப்பது  கட்டாயம் என்று தோன்றிய அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை யாகச் சிலவற்றைச் செய்ய வேண்டியதும் அவசியம் எனத் தோன்றியது. முடிவெடுக்கத் தயங்கினான் தேக்கன்.

வேட்டூர் பழையனால் தேக்கனைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எதிரிகளைக் கூத்துக்களத்திலிருந்து விரட்டிவருகிறான். அவனது எல்லா முயற்சிகளையும் முறியடித்து அவர்கள் முன்னேறிவருகின்றனர். பறம்புநாடு,  தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இப்படியோர் எதிரியைக் கண்டதில்லை. அதே நேரம் பாரி, ‘அவர்களை வீழ்த்தும் வழிமுறையைக் கண்டறிந்துவிட்டேன்’ என்று திடமான சொல்கொண்டு காத்திருக்கிறான்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p3

எதிரிகளின் தாக்குதலைத் தனது உடல் முழுவதும் ஏற்றிருக்கிறான் தேக்கன். அவர்களின் ஆற்றல்பற்றி அவனுக்கு ஆழமான கருத்து உருவாகியிருக்கிறது. அவர்களை வீழ்த்தும் உத்தியைப்பற்றி பாரி எதுவும் சொல்லாததால், தேக்கனின் மனம் நிலைகொள்ளவில்லை. தடுமாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

புரிந்துகொண்ட பழையன், புரியாததைப்போல அவனைவிட்டு விலகி நடக்கத் தொடங்குகிறான். இரண்டு கிழவர்களின் மனநிலையும் இரண்டு விதமாக இருக்கின்றன.

ஆனால், இருவரும் பாரியின் சொல்லை ஏதோ ஒருவகையில் கடந்துகொண்டிருக்கின்றனர். ஒருவேளை, பாரியால் எதிரிகளை வீழ்த்த முடியாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மனதின் ஆழத்தில் உருவாகியிருக்கிறது. அதனை அவர்கள் நம்பாமலிருக்க முயல்கின்றனர். ஆனால், எதிரியின் இணையற்ற ஆற்றல் அவர்களை அடுத்தடுத்து சிந்திக்கச் செய்கிறது. அச்சிந்தனை பாரியின் சொல்லைக் கடந்தும் போய்க்கொண்டிருக்கிறது.

மூன்று மலைகளைக் கடந்து உள்ளே வருவதுதான் எல்லாவகையிலும் கடினமானது. உள்ளே வந்துவிட்டால், வெளியேறுவது அவ்வளவு கடினமல்ல. இயற்கையில் அமைந்துள்ள இந்தச் சாதகமான நிலையை இரு கிழவர்களும் அறிவர். காட்டுக்குள் தப்பியோடும் ஒருவனை விரட்டிச்சென்று மறிப்பது எளிதல்ல. அதுவும் இவர்கள் அபாரமான ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

எண்ணங்கள் ஓடியபடி இருக்க, வேட்டூர் பழையன் புறப்பட்டான். காரமலையின் கீழ்த்திசைச் சரிவில் இருக்கும் ஒவ்வொரு பாறையும், பிளவும், முடிச்சும், மரமும், செடியும், விலங்கும் அவன் சொல் கேட்பன. எதிரிகளைப்பற்றி இவ்வளவு நேரம் கேட்ட செய்திகளிலிருந்து அவன் சில முடிவுகளுக்கு வந்திருந்தான். எதிரிகளை வீழ்த்த எவற்றைச் செய்யக் கூடாது என மனதில் பட்டியலிட்டான். ‘வேட்டுவன் பாறையில் மிகச் சிறந்த வேட்டைநாய்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தாக்குதலில் ஈடுபடுத்தக் கூடாது. சுண்டாப்பூனையையே கொன்று வீசியவர்கள் வேட்டைநாயை எளிதில் வீழ்த்திவிடுவார்கள்.

தேக்கனையே  அடித்துத்தூக்கியவர்கள், எவ்வளவு பெரியவீரனையும் சரித்துவிடுவார்கள். எனவே, அவர்களை நேர்நிலையில் எதிர்கொள்ளக் கூடாது. உடலின் வலிமையும் காட்டுச்செடியைக் கிழித்து முன்னகரும் ஆற்றலும் இணையற்றவையாக இருக்கின்றன. எனவே, அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டித்தாக்க முடியாது. இவற்றையெல்லாம் கடந்த வழியென்ன இருக்கிறது என்று  சிந்தித்தபடியே மலையிறங்கினான் வேட்டூர் பழையன்.
நீண்டநேரம் சிந்தித்தாலும் விடையேதும் கிடைக்கவில்லை. ஆனால், பாரி எதனை யோசித்து அவ்வளவுத் தெளிவாகச் சொன்னான். இவற்றைக் கடந்த தாக்குதல்முறையைப்பற்றி பாரி சிந்தித்திருப்பான். அது என்னவாக இருக்கும்?’ வினாவிற்கான விடையேதும் கிடைக்காமலே கால்கள் நடந்துகொண்டிருந்தன.

வெகுதொலைவு இறங்கியபின் வேறோர் எண்ணம் தோன்றியது. ‘இவ்வழிகள் அல்லாத வேறுவழி பற்றிய திட்டம் இல்லாமல் நாம் கீழே போய் என்ன செய்யப்போகிறோம்?  மாற்றுவழியைக் கண்டுபிடித்திருக்கும் பாரியுடன் இணைந்து தாக்குதல் தொடுப்பதுதானே இப்போதைய தேவை.’
மனம் நிலைகொள்ள மறுத்தது. ‘இதே குழப்பம் தேக்கனுக்கும் இருக்கிறது. ஆனால், பாரி மட்டும் எப்படி குழப்பம் சிறிதுமின்றித் தெளிவான முடிவெடுத்தான்?’ என்று நினைத்த கணம் நடையை நிறுத்தி, ‘மீண்டும் காரமலை ஏறிவிடலாமா?’ என்று தோன்றியது.

வேட்டூர் பழையன் நிலைதடுமாறினான். ஆனாலும் சட்டெனத் தெளிந்தான். ‘வீழ்த்த முடியாத மனிதர் யார் இருக்கிறார்? காக்காவிரிச்சியையே வீழ்த்த முடிந்த  பாரியால் மனிதனை வீழ்த்த முடியாதா? எவ்வளவு பெரும்வீரனாக இருந்தாலும்  திருடிச்செல்பவனின் உள்ளம் அச்சங்கொள்ளத்தானே செய்யும். அதனைத் தடுக்க நினைப்பவன் வெற்றிபெறுவதற்கு வீரத்தைக் கடந்த ஆயுதங்களும் உண்டு. எண்ணங்கள் உருவேறியபடி இருக்க, வேட்டூர் பழையனின் கால்கள் பலமடங்கு வேகத்தோடு வேட்டுவன் பாறையை நோக்கிக் கீழிறங்கிக் கொண்டிருக்கின்றன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p4
கொற்றவைக் கூத்திற்குப் போனதிலிருந்து எவ்வியூரிலே தங்கியிருந்த மயிலா,  சில நாள்களுக்கு முன்புதான் கீழிறங்கி வந்தாள். வந்ததும் வேட்டுவன் பாறையிலிருந்த நீலனைப் பார்க்கப் போனாள்.  நீலனோ பகரி வேட்டைக்குச் செல்பவர்களோடு இணைந்து உள்காட்டுக்குப் போயிருந்தான். மூன்று நாள்களாக அவன் வந்து சேரவில்லை. அதன்பின் இருவரும் சந்தித்துக்கொண்டாலும் முழுப் பொழுதையும் சேர்ந்து கழிக்கும் வாய்ப்பின்றியே இருந்தது.

நேற்று பகலில்தான் இருவரும் சந்தித்தனர். மாதங்கள் கடந்ததால், தவித்தலையும் கண்களோடு மயிலா கேட்டாள், “நான் சொல்லும் இடத்துக்கு என்னை அழைத்துச்செல்.”

“எங்கே?” என்றான் நீலன்.

“சுனைவால் முடுக்கிற்கு.”

நீலன் எதிர்பார்க்கவில்லை. “வழக்கமாக அருகிலிருக்கும் குன்றுக்குத்தானே செல்வோம். இப்பொழுது ஏன் அங்கு அழைத்துச்செல்லச் சொல்கிறாய்?”

“காரணமிருக்கிறது. அழைத்துச்செல்.”

‘அங்கு சிறிய நீர்க்குட்டை மட்டுமே உண்டு. அதைக்காணவா அவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்?’ என நீலன் தயங்கினான்.

“ஏன் தயங்குகிறாய்?” எனக் கேட்டாள் மயிலா.

“சுனைவால் முடுக்கு, காரமலையின் பின்புறச்சரிவில் இருக்கிறது. நாம் போய்ச் சேரவே இரவாகிவிடுமே” என்றான்.

“ஆமாம். அது இருளுக்குள் இருந்து காணவேண்டிய இடம்” என்றாள்.

நீலனுக்குப் புரியவில்லை. “அவ்விடம் சிறிய நீர்க்குட்டை மட்டுமே உண்டு. நீ வேறு இடத்தை நினைத்துக்கொண்டு சுனைவால் முடுக்கைச் சொல்கிறாய் என்று நினைக்கிறேன்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p5
“இல்லை. நான் தெரிந்தேதான் சொல்கிறேன். என்னை அவ்விடம் அழைத்துச்செல்.”

“வானில் கருமேகங்கள் ஏறிவருகின்றன. பொழுது மறைவதற்குள் மழை வந்துவிடும். இரவெல்லாம் கொட்டித்தீர்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது” என்றான் நீலன்.

அவனது அறியாமையை  எண்ணிச் சிரித்தபடி மயிலா சொன்னாள், “அதற்காகத்தான் என்னை அழைத்துச்செல்லச் சொல்கிறேன்.”

இப்பொழுதும் அவனுக்குப் புரியவில்லை. `அது, கண்டுமகிழும் இடமுமில்லை; காதல்கொள்ள ஏற்ற இடமுமில்லை. அங்கு ஏன் அழைத்துச்செல்லச் சொல்லி இவ்வளவு வலியுறுத்துகிறாள்?’ எனச்  சிந்தித்தபடியே அவ்விடம் நோக்கி நடக்கத் தொடங்கினான் நீலன்.

மயிலாவுக்குக் கபிலரோடு இருந்த காலத்தைப்பற்றி நீலனிடம் பகிர்ந்துகொள்ள எண்ணற்ற செய்திகள் இருந்தன. அதேபோலத்தான் நீலனுக்கும். கடந்த வாரம் முழுவதும் உள்காட்டிற்கு வேட்டைக்குப் போனதால் சொல்லத் தவித்துக்கொண்டிருக்கும்  சொற்களோடு காத்திருந்தான்.

பொதுவாக எல்லையில் கவனம் செலுத்துவதால்,  பிற வீரர்களோடு சேர்ந்து உள்காட்டு வேட்டைக்கு நீலன் போவதில்லை. ஆனால், மயிலா இல்லாத வெறுமையைக் கடக்க முடியாததால் மனமாற்றத்திற்காகத் தான் இம்முறை பகரி வேட்டைக்குச் செல்பவர்களோடு இணைந்து போனான்.
 
கார்காலம், உயிரினங்கள் இணை சேரும் காலம். அதுவும் உள்காடுகளில் பெருங்குன்றுகளே ஒன்றினையொன்று கட்டியணைத்துக் கிடப்பதைப் போலத்தான் காட்சிக்குத் தெரியும். தும்பிகளில் தொடங்கி துதிக்கைத் திருகும் யானைகள் வரை இணையும் காலஅளவைப்பற்றியே பார்த்தும் கணித்தும் பேசிச்சென்றனர் அனைவரும்.

வேட்டையாட வேண்டிய விலங்கினைக்கூட எல்லா காலங்களிலும் வேட்டையாடிவிட முடியாது. இணை சேர வழியின்றிக் கூட்டங்களிலிருந்து தப்பிய விலங்குகள் மட்டுமே கார்காலத்து வேட்டைக்கு உகந்தவை. தாவரங்கள் ஒன்றிணையொன்று பின்னுவதுபோல விலங்குகளும் பின்னுகின்றன. விலங்குகள் பிடறிக்கவ்வி முயங்குவதைப்போல தாவரங்களும் முயங்குகின்றன.

பகரி வேட்டையாடச் செல்லும் அனைவருமே வயதில் மூத்த பெரியவர்கள்தான். அவர்களின் உதவிக்காக இளைஞர்கள் சிலர் உடன் சென்றனர். கார்காலத்தில் கனிந்தி ருக்கும் உயிரினங்களின் காதல் வாழ்வைப் பெரியவர்கள் எளிதில் கடந்துபோய்விடுவர். ஆனால், இளைஞர்களால் அப்படிக் கடக்க முடியவில்லை. இணைசேருதல் உயிரினப் பொதுமை. ஆனால், அக்காட்சி காணும் கண்களுக்குள் கடத்தும் உணர்வு பொதுமையானதல்ல. வாழ்வின் எந்நிலையில் அவன் நிற்கிறானோ, அந்நிலையோடு தொடர்புடையது.  இளைஞர்கள் நிற்கும் நிலையில் நிலைகொள்ளாமல் இருந்தனர். காமம் நிலை கொள்ளாமையை அடிப்படையாகக் கொண்டது. அது நடப்பன, ஊர்வன, பறப்பன என எவ்வொன்றிலுமிருந்து பாய்ந்துவந்து மனிதனைக் கவ்விப் பிடித்துக்கொள்ளக் கூடியது.

விளார் விளாராக உடம்பிற் பதிந்த தடம்போல, மண்ணிற்பதிந்து கிடக்கும் தடத்தைப் பார்த்ததும் ஒரு பெரியவர் சொன்னார், “இது புலியின் முதற்கூடுகை. வால்கொண்டு அடித்த தடங்கள் இவை” கடக்கும்பொழுது சொல்லும் செய்திகள் கடக்க முடியாதவைகளாக மாறுவதை இளைஞர்கள் உணர்ந்தபடியே இருந்தனர். மயிலாவின் சடை பின்னிய கூந்தலின் தடம் தனது மார்பில் பதிந்துகிடந்த நினைவு நீலனைத் தாக்கிச்சென்றது.

பெரியவர்கள் தடங்களை மண்ணிற் பார்த்துச் சொன்னபடிக் கடப்பதை, இளைஞர்கள் நினைவிற் பார்த்துக் கடக்க முடியாமல் நின்றனர். 

“மண்ணில் காதல்கொண்டால் அடுத்தவர் கண்ணில் தடம்படும் என்பதால்தான் முருகன் பரண் அமைத்தான். அடுத்து வந்தவர்கள் நான்கு காலூன்றிச் சிறுபரண் அமைத்து, இறுகக்கட்டிக்கொண்டனர். அதனைக் ‘கட்டில்’ என்றும் அழைத்தனர்” என்றார் முன்னால் போன பெரியவர்.
இளைஞர்களின் விழிக்குறிப்பறிந்து அவர் இப்பேச்சைத் தொடங்கினார். பேச்சு எந்தக் கணம் காமத்தின் பக்கம் போகிறதோ, அதன்பின் அதிலிருந்து விலகுதலை அதுதான் முடிவுசெய்யும்; நாம் முடிவுசெய்ய முடியாது.

விலகுதலும் இணைதலும் எப்பொழுது என்பதைக் கணிப்பதில்தான் இருக்கிறது காமத்தைக் கைக்கொள்ளும் வித்தை. அந்தப் பெரியவர் வித்தை தெரிந்த வீரனாக இருந்தார். இந்தவொரு குறிப்புச்சொன்னதும் இளைஞர்கள் மிகக் கவனமாக அவரைச் சூழ்ந்து வந்தனர். தனது சொல்லோடு அவர்களை இணைத்த பெரியவர் அதன்பின் வீடு திரும்பும்வரை அவர்கள் விலகாமல் பார்த்துக்கொண்டார். “தேனின் சுவை சுவைப்பதில் அல்ல, சுவைத்ததில் இருக்கிறது. காமமும் அப்படித்தான்” என்று அவர் சொன்ன சொல்லின் ஆழம்செல்ல அவர்களால் முடியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p6
மயிலா மட்டுமல்ல, அந்தக் கிழவன் சொன்ன சொற்கள் அனைத்தும் நீலனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. அவன் சுனைவால் முடுக்கு நோக்கி மிக வேகமாக அவளை அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். மழை இறங்கும்முன் காரமலையின் முகட்டைத் தாண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நடந்துகொண்டிருந்தான்.

சற்றுத் தொலைவில் சமதளமான இடமொன்றில் மண் பிரண்டு கிடந்தது. இவ்வளவு அகலமாக மண் பிரண்டு கிடக்கிறதே என்று சற்று அருகில் சென்றான். உள்ளுக்குள் இருந்து பிரண்ட மண் எங்கும் சிதறிக்கிடந்தது. அதன் நடுவில் பெரும்பள்ளம் உருவாகியிருந்தது. அவ்விடத்தை நின்று பார்த்தான் நீலன். அருகில் வந்த மயிலா, “இங்கு என்ன நடந்துள்ளது?” எனக் கேட்டாள்.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த நீலன் சொன்னான். “தங்களின் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட காட்டெருமைகள் தனித்து அலைகின்றன. அவ்வகைக் காட்டெருமைகள் மிக ஆபத்தானவை. அவ்வாறு தனித்தலையும் இரு காட்டெருமைகள் எதிர்பட்டால், ஒன்றினையொன்று தாக்கத்துவங்கும். மிகக் கொடூரமாக அத்தாக்குதல் நிகழும். மரணம் வரை இரண்டும் தாக்குவதை நிறுத்தாது. மூன்று அல்லது நான்கு நாள்களுக்குக்கூட அத்தாக்குதல் நீடிக்கும். இறுதியில் அவற்றிலொன்று மடிந்து வீழ்ந்தபின்தான் அம்மோதல் முடிவுக்கு வரும்” என்று சொன்னவன் மேலும் சொன்னான், “இவ்விடத்தில் குறைந்தது மூன்று நாள்கள் இரு காட்டெருமைகள் சண்டையிட்டுள்ளன. இல்லையென்றால், இவ்வளவு பெரும்பரப்பில் மண் பள்ளமாகி இருக்காது” என்றான்.

“தோற்றது என்ன ஆகியிருக்கும்?” என்று மயிலா கேட்டாள்.

“தோற்றது ஓடத் தொடங்கும். ஓடத் தொடங்கிவிட்டாலே அதன் மரணம் அடுத்த சில அடிகளில் நிகழப்போகிறது என்று பொருள். வென்றது, அதனைக் குத்தித்தூக்கிப் பள்ளத்தில்  வீசியிருக்கும்” என்றான்.

பள்ளத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்த மயிலாவை, “சரி. வேகமாகச் செல்ல வேண்டும்” என்று அழைத்தபடி விரைந்தான் நீலன். காரமலை உச்சியைத் தாண்டும்முன் மழை இறங்கத் தொடங்கியது. அங்கங்கு பாறை இடுக்குகளிலும் குகைகளிலும் அண்டியபடி மழை பார்த்து நகர்ந்தனர்.
நள்ளிரவில் பெருமழை கொட்டித்தீர்க்கும் பொழுது அவர்கள் சுனைவால் முடுக்குக்கு வந்துவிட்டனர். சுனையோரமிருக்கும் பாறைமறைப்பில் பதுங்கினர். எதிரிலிருந்த சிறியகுளம், கொட்டும் மழையில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ‘இவ்விடம் வர ஏன் மயிலா விருப்பப்பட்டாள்?’ என்று நீலன் சிந்தித்துக்கொண்டே இருந்தான். மழை நின்றது. பாறைகளின் மேலிருந்து பாய்ந்து கடக்கும் நீரினோட்டம் மட்டுப்படத் தொடங்கியது.

சுனைக்கு முன் பெருகித்தேங்கியிருந்த நீர் முழுவதும் சிறிதுநேரத்தில் வழிந்தோடியது. தேங்கிய நீர் எப்பொழுது வடியும் என்று காத்திருந்த மயிலாவின் கண்கள் இங்குமங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தன. நீர் முழுமையும் வழிந்தோடியபின் அவள் காணவந்த காட்சியைக் கண்டாள். மனம் மகிழ்வில் மலர்ந்தது. பாறையில் சாய்ந்தபடி குகையைப் பார்த்து உட்கார்ந்திருந்த நீலனின் தோள்தொட்டுத் திருப்பினாள்.

‘எதைப் பார்க்கச் சொல்கிறாள்?’ எனக் குழம்பியபடியே அவன் திரும்பிய கணம், அப்படியே சிலிர்த்து அடங்கினான். அந்தச் சிறு நீர்த்தேக்கம் முழுவதும், சின்னஞ்சிறு சுடர்கள் எரிந்துகொண்டிருந்தன.

நீலனுக்கு, தான் காண்பதை நம்ப முடியவில்லை. “என்ன இது... விளக்கேற்றி வைத்ததைப்போல எங்கும் அசையும் சுடர்?”

அவன் வியந்துசொல்லி முடிக்கும்முன் மயிலா சொன்னாள், “இதுதான் தீப்புல்.”

நீலனின் கண்கள் சிற்றொளி கண்டு உறைந்து நின்றன. நீர்பட்டு அடங்கியவுடன் ஒளிரும் தன்மைகொண்டது தீப்புல். மின்மினிப்பூச்சியின் உடல்போல இப்புல்லின் உடல் இன்னும் சிறிதுநேரம் ஒளிர்ந்து அடங்கும். அதனைப்பற்றி நீலன் கேள்விப்பட்டிருக்கிறான். அறுபதாம் கோழியின் கழிவில்தான் இப்புல் முளைக்கிறது என்று சொல்வதும் அவன் அறிந்ததே. ஆனால், இன்றுதான் முதன்முறையாகப் பார்க்கிறான்.

மயக்கம் நீங்க நெடுநேரமானது. இருளுக்குள் நெளியும் ஒளியின் அழகைவிட்டுக் கண்கள் எப்படி விலகும்? விலகாத கண்களைத் தன்னை நோக்கித் திருப்பக் கன்னம்தொட்டு இழுத்தாள் மயிலா.

கருவிழி, தீப்புல்லில் நிலைகுத்தி நிற்க, முகம் மட்டும் திரும்பியது.  “இவ்விடம் தீப்புல் இருக்கிறது என்பதை நீ எப்படி அறிந்தாய்?”

மெல்லிய காற்றுக்குப் புற்கள் ஆட, தீயின் நாவுகள் எங்கும் அசைந்தாடின. பார்க்கக் கிடைக்காத காட்சியை இமை மூடாமல் பார்த்தபடியே சொன்னாள். “இவ்விடம் தீப்புல் இருக்கிறது என்பதை அங்கவை சொன்னாள்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p7
வியப்பு அடுத்த கட்டத்தை அடைந்தது.

“அவள் எப்படி இவ்விடம் அறிந்தாள்?”

“அவளின் காதலன் சொன்னானாம்.”

வியப்பு உறைநிலை அடைந்ததைப் போலானது.

“இது எப்பொழுதிருந்து?” எனக் கேட்டான் நீலன்.

சற்றே சிரித்தபடி சொன்னாள், “நாம் தொடங்கி நீண்டகாலத்துக்குப் பின்தான் அவர்கள் தொடங்கியுள்ளனர்” சொல்லும் பொழுது முகம் முழுவதும் தீப்புல்லாய் ஒளிர்ந்தது.

கைநீட்டி அருகிருந்த தீப்புல் ஒன்றைப் பறித்தாள். அவனை தனது மடியிற்கிடத்தி புல்கொண்டு மார்பில் எழுதினாள்.

சற்றே கூசிச் சிலிர்த்தபடி அவன் கேட்டான், “என்ன செய்கிறாய்?”

“தீப்புல்கொண்டு உன் பெயர் எழுதுகிறேன்.”

அவன் அமைதியானான். தீயின் நாவுகள் அவன் உடலுக்குள் இறங்கிக்கொண்டிருந்தன. மழையில் குளிர்ந்து நடுங்கிய உடலுக்குள்ளிருந்து அனல் மேலேறிவரத் தொடங்கியது. தீயின் நாவுகள்கொண்டு எழுதியவளின் மீது, நாவின் நுனிகொண்டு தீ ஊற்றினான் நீலன். சுடர்விட்டு எரிந்தது தீ. சுனை நீரோடையின் ஈரம்பட்டு நனைந்த பாறைகளின் மீது, அவர்களது மேனியின் இளம்சூடு படர்ந்து மறைந்தது.

மயங்கி, கிறங்கி, உருகி, கரைந்த நீலன் அவளது மடியினில் தலைசாய்த்தான். அவள் அவனது தலையைக் கோதியபடி தீப்புல்லின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். புல்லின் அகலத்துக்கும் உயரத்துக்கும் ஏற்றாற்போல் திரியின் சுடர் அசைந்தாடிக் கொண்டிருந்தது. இருளப்பிக்கிடக்கும் காட்டுக்குள் ஒளிரும் சுடர்களைப் பார்த்தபடியே அவள் மயங்கிக் கண்சொருகினாள்.

கடைசியாய் இருந்த தீப்புல் மீண்டும் நீரில் மூழ்கியது. மயங்கிய நிலையிலிருந்த மயிலா சற்றே கவனம்கொண்டு பார்த்தாள். அங்குமிங்குமாக மீண்டும் தீப்புல்கள் நீரில் மூழ்கின. சுனைநீரின் ஓசையில் வேறு ஓசை கேட்கவில்லை. கண்ணிமைத்து உற்றுப்பார்த்தாள். கால்கள் மிதித்தோடி அவ்விடத்தைக் கடந்து கொண்டிருந்தன. மிருகங்கள் ஓடுகின்றனவோ என நினைத்தாள். ஆனால், அவளின் கண்ணிற்பட்ட உருவங்கள் மனிதவடிவில் இருந்தன. மயக்கம் கலைந்து விழித்துப் பார்ப்பதற்குள் ஓடி மறைந்துவிட்டன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p2
மடியிற்கிடந்த நீலனிடம் சொன்னாள், “மனிதர்கள் ஓடுகிறார்கள்.”

“எங்கு?”

“காட்டுக்குள்.”

சற்றுத் தலைநிமிர்ந்து பார்த்தான். “இந்த இருளுக்குள் விலங்குகள் மட்டுமே மலைப்புதரில் நுழைந்து ஓட முடியும்?”  

‘விலங்குகளைத்தான் நாம் தவறாக நினைத்து விட்டோமோ?’ என்று மயிலாவுக்குத் தோன்றியது. தோன்றிய கணமே இல்லையென்ற முடிவுக்கு வந்தாள். அவளின் கண்கள் உருவங்களைத் தெளிவாகவே பார்த்திருந்தன.

பொழுதுவிடியும்வரை அவள் பதற்றங் கொண்டே இருந்தாள். நன்றாக விடிந்ததும் அவ்விடம் போய்ப் பார்த்தனர். நீர்நிலை கடந்து கிடந்தன மனிதர்களின் காலடித்தடங்கள்.

நீலனுக்குப் பொறி கலங்கியதுபோல இருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. ‘யார் இவர்கள், ஏன் நள்ளிரவில் இப்படி ஓடினர், எதை எடுத்துச் செல்கின்றனர்?’ வினாக்கள் உடலை வெறியேற்றின. “எத்தனை பேர் இருந்தார்கள்?”

“பத்துக்கும் மேல்” என்றாள் மயிலா.

“நீ வழிபார்த்து வா. நான் புறப்படுகிறேன்” எனச் சொல்லி ஈட்டியேந்தியபடி அவர்கள் சென்ற திசையில் காரமலையின் மேல்விளிம்பை நோக்கி ஓடத் தொடங்கினான் நீலன்.

எதிரிகள் காரமலையின் விளிம்பை நரிப்பாறையின் முகட்டோரமாகக் கடந்தனர். சற்றுத் தொலைவிலிருந்தபடி அவர்களைப் பார்த்த கூவல்குடி கிழவன் நீட்டியிழுத்து ஓரோசையைக் குறிப்பிட்ட பாறையை நோக்கி வீசினான். பாறையிடுக்கில் மோதிய ஓசை காரமலையெங்கும் எதிரொலித்தது. நரி ஊளையிடும் ஓசையது. புதிய ஆட்களால் எளிதில் ஐயங்கொள்ள முடியாது. ஆனால், பறம்பின் மக்களுக்குத் தெரியும்.

கிழவன் ஓசைகொடுத்த இடத்தை மலை யெங்கும் நிற்கும் கூவல்குடியினர் கணித்தனர். நரிப்பாறையைக் கடந்தோடும் எதிரிகளைப்  பின்தொடர்ந்து ஓசையெழுப்பியபடி அவர்கள் ஓட வேண்டும். எனவே, தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து அவர்களை நோக்கி குறுக்குவெட்டாக இறங்கிக்கொண்டிருந்தனர். தேக்கனும் அவ்வாறே இறங்கிக்கொண்டிருந்தான்.

காத்திருந்த பாரி ஓசை கேட்டதும் அவர்களின் ஓட்டத்தைக் கணக்கிட்டு, தானிருக்கும் இடத்தி லிருந்து ஊடறுத்து இறங்கினால் எவ்விடம் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்பதைக் கணித்து சரசரவென கீழிறங்கத் தொடங்கினான்.

ஓசை கேட்டதும் கீழ்மலையில் இருந்த வேட்டூர் பழையனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனால் நீலனைக் கண்டறிய முடியவில்லை. நீலனைப்போன்ற சிறந்த வீரனில்லாது இவ்வளவு வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்வது கடினம். ஆனாலும் கூவல்குடியினரின் ஓசை கேட்டதும் எதிரிகள் இறங்கும் திசை நோக்கி வீரர்களோடு ஆயத்தமானான் பழையன்.

ஓசை கேட்ட சிறிதுநேரத்திலே காரமலையின் முகட்டை அடைந்தான் நீலன். இது நரியின் ஊளையல்ல; கூவல்குடியினரின் குரல் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். என்ன நடக்கிறது இவ்விடம் என்ற குழப்பம் அவனைத் தாக்கியது. எதிரிகள் எதையோ செய்துவிட்டுத் தப்பி ஓடுகின்றனர். இந்நேரத்தில் அவர்களை எதிர்கொண்டு வீழ்த்த வேட்டுவன் பாறையில் இல்லாமல், இப்படிப் பின்னால் ஓட வேண்டியதாகி விட்டதே என்று வேதனை உருவானது. வேதனை, கட்டுக்கடங்கா வேகங் கொள்ளச்செய்தது.

அனைத்துத் திசைகளிலிருந்தும் எதிரிகளை நோக்கிப் பறம்புமக்கள் இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது காலம்பனின் முகம் இதுவரை இல்லாத பெருமகிழ்வைக்கொண்டது. காரமலையின் மேல்விளிம்பைக் கடந்ததும் அவன் முடிவு செய்துவிட்டான், ‘பச்சைமலைத் தொடரின் இரண்டு மலைகளைக் கடந்து கடைசி மலையின் விளிம்பையும் கடந்துவிட்டோம். இனி இந்தவொரு சரிவு மட்டுமே. இச்சரிவில் பெரும்படையே எதிர்வந்து நின்றாலும் அடித்துத்தூக்கும் வல்லமை உண்டு. இதுவரை இல்லாத அளவு இருபதுக்கும் மேற்பட்ட வர்களோடு இப்பொழுது ஓடுகிறோம். இப்பெரும் எண்ணிக்கையை எதிர்த்து நிற்க எவராலும் முடியாது. கண்ணுக்கு எதிரில் பறம்பின் எல்லை தெரியத் தொடங்கிவிட்டது. மலையடிவார சமதளக்காடுகள் கரம்விரித்து அழைக்கின்றன.’

விடாமல் ஓடிவந்த அயர்வும் சோர்வும் கணநேரத்தில் மறைந்தன. கால்கள் மேலும் வேகங்கொண்டன. சரிவுப்பாறையில் பெருங்கற்கள் உருள, கால்கள் ககனத்தில் பறந்துகொண்டிருந்தன. காலம்பனின் மனம் இலக்கை அடையப்போகும் நேரத்தைத் துல்லியமாகக் கணித்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக