உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கற்கண்டு வடை!
by ayyasamy ram Today at 6:44 am

» பொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது...!!
by ayyasamy ram Today at 6:32 am

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Today at 6:25 am

» மாறுகிறது, 'கிலோ கிராம்'
by ayyasamy ram Today at 6:18 am

» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
by ayyasamy ram Today at 6:15 am

» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:12 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Today at 4:47 am

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 pm

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:14 pm

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:00 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 pm

» கஜாவை திறமையாக கையாண்ட அரசுக்கு நன்றி.. கமல்ஹாசன் பாராட்டு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:27 pm

» சுத்தி சுத்தி..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:21 pm

» பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» கார்த்திகை பட்சணங்கள் - நெல் பொரி உருண்டை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» உலக சகிப்புத் தன்மை நாள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» உலகின் பிரம்மாண்ட ஏரி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» கரும்பு வயல் - கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» ஆம்னி என் அத்தை !- ஹ்ரித்திகா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:49 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by M.Jagadeesan Yesterday at 1:42 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:59 pm

» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
by krishnaamma Thu Nov 15, 2018 8:58 pm

» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:55 pm

» பட்டத்து யானை -நீதிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:36 pm

» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:32 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:15 pm

» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:13 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by கண்ணன் Thu Nov 15, 2018 6:43 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்!
by krishnaamma Thu Nov 15, 2018 2:09 pm

» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
by krishnaamma Thu Nov 15, 2018 2:03 pm

» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு
by krishnaamma Thu Nov 15, 2018 2:02 pm

» கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் ! - மோர் கூட்டு !
by krishnaamma Thu Nov 15, 2018 1:54 pm

» முருங்கைப்பூ கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 1:39 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by krishnaamma Thu Nov 15, 2018 1:33 pm

» சொள சொள மோர் கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 12:12 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 12:11 pm

» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
by krishnaamma Thu Nov 15, 2018 11:56 am

» நான் கத்தவே இல்லை !
by T.N.Balasubramanian Thu Nov 15, 2018 11:19 am

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by krishnaamma Thu Nov 15, 2018 10:40 am

Admins Online

வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...


"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.


தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4443
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down


வீரயுக நாயகன் வேள் பாரி - 107 - தொடர்ச்சி

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 01, 2018 6:59 am

``நெருப்புப்பூச்சி. உச்சிமலையின் அடர்குகைக்குள் இருக்கும். நெருப்பைப் பார்த்தால் அதைத் தொடர்ந்து அப்படியே வந்துவிடும். அதன் ரீங்கார ஓசை, பல்வேறு நச்சுப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக்கூடியது. அந்த அணலிகள் இருக்கும் குகையில் இருந்து எடுத்துவரப்பட்ட தீப்பந்தங்கள் அவை. அந்தப் பந்தங்களின் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் பூச்சிகள் இந்நேரம் அங்கே வந்திருக்கக்கூடும். எல்லாம் பந்தத்தைச் சுற்றி இருளுக்குள் பறந்துகொண்டிருக்கும். அந்த இடத்தில் உயிரினங்களின் நடமாட்டம் இருப்பதை அவை அறிந்தால், கொடுந்தாக்குதலை நடத்தும். நம் வீரர்கள் பாசறையிலிருந்து வெளிவரத் தொடங்கியதும் அங்கு நடக்கப்போவதை என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.”

``ஏன்... அவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகிறீர்களா?”

``அநேகமாக சோழர் பாசறையிலிருந்து பத்தில் ஒரு வீரன்கூடத் தப்ப முடியாது. அணலிப் பூச்சி கடிக்கவேண்டாம்; மேலே பட்டாலே போதும். மொத்த உடலும் தீப்பிடித்து எரிவதைப்போலத் துடிக்கத் தொடங்கும்” இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெங்கல்நாட்டு திசையிலிருந்து குதிரையில் இருவர் வேகமாக வந்து சேர்ந்தனர். கொட்டும் மழையின் வேகத்தால் வந்திருப்பது யாரெனத் தெரியவில்லை.பரணின் கீழே இருந்த தளபதி உறுமன்கொடி பரண் மேலே பார்த்தபடி ``மையூர்கிழாரைத் தேடி வந்துள்ளனர்” என்று உரத்தகுரலில் கத்தினான்.

``அவர்களில் ஒருவனை மேலே அனுப்பு” என்றார் மையூர்கிழார்.

ஒருவன் மட்டும் மேலேறி வந்தான். அவன் போரில் ஈடுபடாத ஆறு ஊர் ஒற்றர்களில் முக்கியமானவன். மையூர்கிழாரால் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டவன். மேலேறிய வேகத்தில் சொன்னான், ``அவர்கள் அணலியை இறக்கிவிட்டார்கள்.”

``அப்படித்தான் இருக்குமெனக் கணித்தேன்.”

``அனைவரும் உடனடியாக இந்த நிலத்தை விட்டு வெளியேறுவது நல்லது” என்று சொன்னவன், ``அதுமட்டுமல்ல, பாண்டியர் படையின் பாசறையைச் சுற்றி எண்ணற்ற ஈட்டிகளை எறிந்துள்ளனர்.”

பாண்டிய வீரர்களின் பாசறை சோழப்படைக்குக் கீழ்ப்புறமாக இருப்பதால், இங்கிருந்து பார்ப்பது கடினம். எனவே, பரண் மேல் இருந்தவர்களுக்கு அது பற்றித் தெரியவில்லை.

``பந்தத்துடனா?” எனப் பதற்றத்துடன் கேட்டார் மையூர்கிழார்.

``இல்லை. பந்தம் இல்லாமல்தான் ஈட்டிகள் மண்ணில் குத்தி நிற்கின்றன.”

``வெறும் ஈட்டியை ஏன் எறிந்துள்ளனர்?”

``அதை அருகில் சென்று பார்த்தால்தான் தெரியும். ஆனால், அருகில் சென்று பார்க்க நம் வீரர்கள் மிகவும் அஞ்சுகின்றனர். ஆனால், என்னவாக இருக்குமென்று வீரன் ஒருவன் சொன்னான்.”

``என்ன சொன்னான்?”

``இருள்வேல மரத்தின் அடியிலிருந்து உருவாகும் சிவப்புநிறப் பிசின் ஈட்டி முழுவதும் தடவப்பட்டிருக்கலாம். அது மழைக்குக் கரையாது” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.

மையூர்கிழார் உறைந்தார்.

``அந்தப் பிசினால் என்ன ஆபத்து?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.

இரவில் ஆபத்தேதுமில்லை. ஆனால், பொழுது விடியத் தொடங்கியதும் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்கு அங்கு வந்துவிடும். எதிர்ப்படும் மனிதர்கள் யாரும் தப்புவது எளிதல்ல. கொம்புதூக்கி வண்டின் உடலெல்லாம் முள்ளம்பன்றிபோல சின்னஞ்சிறிய கொம்புகள் பல்லாயிரம் உண்டு. ஒரு கொம்பு மனிதனின் மீது பட்டால்போதும் விரல்கள் ஒவ்வொன்றும் கையளவு பருத்துவிடும். ஒரு மாதமானாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பரணின் கீழே ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தான் மையூர்கிழார். வெங்கல்நாட்டு அரண்மனையின் தலைமை ஒற்றன் மேலே அனுமதிக்கச் சொல்லி சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

``அவனை மேலே அனுப்பு” எனக் கத்தினார் மையூர்கிழார். அவரின் ஓசை எதுவும் கீழே கேட்கவில்லை. கை அசைவை வைத்துப் புரிந்துகொண்ட உறுமன்கொடி, அவனை மேலே அனுப்பினான். `காற்றும் மழையும் இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, ஏன் இவரையும் மேலே அனுப்பச் சொல்கிறார்?’ எனக் கோபப்பட்டான் உறுமன்கொடி.

அவன் ஏறும் வேகமே பரணை எதிர் திசையில் ஆட்டுவதைப்போல் இருந்தது. பதற்றத்தின் உச்சத்தை அவனது உடலின் வேகம் சொல்லியது. படியில் ஏறும்போதே சத்தமாகச் சொன்னான், ``பறம்பின் பன்னிரு குடிகளும் கீழிறங்கிவிட்டன.”

``என்ன சொல்கிறாய்?” எனக் கேட்டார் மையூர்கிழார்

``ஆம், நான்கு குடிகளைத் தவிர பறம்பில் அடைக்கலமான பன்னிரு குடிகளும் இறங்கித் தாக்க பாரி அனுமதியளித்துவிட்டான். தலைமுறை தலைமுறையாக மூவேந்தர்களின் மீதிருக்கும் பகைதீர்க்க எல்லோரும் மலையை விட்டுக் கீழிறங்கிவிட்டனர்.”

அப்போது பேரோசையோடு வெட்டி இறங்கிய மின்னல் ஒளியில் மையூர்கிழாரின் முகத்தைப் பார்த்தான் கருங்கைவாணன். அதன் பிறகு அவன் வாய் திறக்கவே இல்லை.

வந்தவன் சொன்னான், `` `வெங்கல் நாட்டினர் எல்லோரும் வெளியேறிவிடுங்கள்’ என ஆறு ஊர்க்காரர்களிடமிருந்து செய்தி வந்துள்ளது. `இனி இந்த மண்ணில் மிஞ்சப்போவது யாரும் இல்லை. உயிர்பிழைத்துக்கொள்ளுங்கள்’ என்று பறம்பின் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.”

காற்றின் வேகத்தால்தான் நாம் ஆடுகிறோமா அல்லது உடலின் நடுக்கமா என்ற ஐயம் எழத் தொடங்கியது. ``முடிவை, காலம் தாழ்த்தாமல் எடுங்கள்” என்று கத்தினான் இரண்டாவதாக வந்தவன்.

காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்புறமாகத் திரும்பி, அந்தப் பக்கம் இருக்கும் கம்பத்தை இறுகப் பற்றினார். எதிரில் வெகுதொலைவில் மூஞ்சல் தெரிந்தது. குலசேகரபாண்டியனின் கூடாரத்தின் முன் கண்ணாடிக்கூடு களால் ஆன பெருவிளக்குகள் ஒளி சிந்திக்கொண்டிருந்தன.

பார்த்த கணத்தில் ஆபத்து புரியத் தொடங்கியது. பெருங்குரலில், ``விளக்கை அணையுங்கள்” என்று கத்தினார். மழையின் ஓசையில் பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட அது கேட்கவில்லை. கடைசியாக மேலேறியவனைவிட இரு மடங்கு வேகத்தில் கீழே இறங்கினார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து அனைவரும் இறங்கினர்.இறங்கிய வேகத்தில் குதிரையின் மேலேறி மூஞ்சலை நோக்கி விரைந்தார். மற்றவர்களும் அவரின் பின்னால் குதிரையை விரட்டிக்கொண்டு வந்தனர். விளக்கொளியின் அபாயத்தால் துடித்தது மையூர்கிழாரின் உடல். குதிரையை விடாது அடித்து விரட்டினார்.

மூஞ்சலை நெருங்கியபோதே பெருங்குரலில் கத்தினார், ``விளக்கை அணையுங்கள்... விளக்கை அணையுங்கள்!”

மூஞ்சலில் குலசேகரபாண்டியனின் கூடாரத்தைச் சுற்றி மூவேந்தர்களின் மெய்க்காவல்படை வீரர்கள் நின்றிருந்தனர். மையூர்கிழாரின் ஓசை கேட்டதும் ஏதோ ஆபத்தென்று புரிந்துகொண்டு விளக்கின் ஒளியைக் குறைத்தனர்.

``முழுமையாக அணையுங்கள்!” என்று கத்தியபடி குதிரையை விட்டுத் தவ்வி இறங்கினார்.

மெய்க்காவல் வீரன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதைக் கேட்கும் நிலையில் மையூர்கிழார் இல்லை. இறங்கிய வேகத்தில் அருகில் இருந்த ஈட்டியை எடுத்து விளக்குகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். விளக்கொளி முழுமுற்றாக விழுந்து அணைந்தது. கணநேரத்தில் என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்வதற்குள் எங்கும் இருள் சூழ்ந்தது. மெய்க்காவல் தளபதி ஏதோ தவறு நடக்கப்போகிறது என மையூர்கிழாரை நோக்கிக் குரல் உயர்த்தி நெருங்கிவரும்போது கருங்கைவாணன் கத்திக்கொண்டே வந்து சேர்ந்தான். அவனது குரல் கேட்டுத்தான் வீரர்கள் அமைதியாயினர்.

கூடாரத்துக்குள் நுழைய அனுமதி கேட்பதற்கெல்லாம் நேரமில்லை. திரையை விலக்கி, சட்டென உள்ளே நுழைந்தார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் உள்ளே நுழைந்தான். அனுமதி ஏதுமின்றி மேலெல்லாம் கொட்டும் மழைநீரோடு அப்படியே உள்ளே நுழைந்துள்ள இருவரையும் பார்த்த கணத்தில் வேந்தர்களின் முகங்கள் இறுகின.

``பேரரசே, உடனடியாக விளக்கை அணைக்க உத்தரவிடுங்கள்” என்றார் மையூர்கிழார்.

``கூடாரத்துக்குள் இருக்கும் விளக்கை ஏன் அணைக்க வேண்டும்?” எனக் கேட்டார் சோழவேழன்.

``விளக்கத்தைப் பிறகு சொல்கிறேன். ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட நாம் பேராபத்தில் சிக்கிக்கொள்வோம்” என்று கத்தினார்.

ஆபத்தை உணர்ந்த குலசேகரபாண்டியன், ``விளக்கை அணையுங்கள்” என்றார்.

உள்ளே வேந்தர் குடும்பத்தைச் சார்ந்த ஐவர் மட்டுமே இருந்தனர். மையூர்கிழாரும் கருங்கைவாணனும் உள்ளே நுழைந்துள்ளனர். இருவரும் பாண்டியநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் விளக்கை முற்றிலுமாக அணைக்கச் சொல்வதில் பாண்டியனின் சதியேதும் இருக்குமோ என்ற ஐயத்தில், ``தளபதி உசந்தனை உள்ளே வரச்சொல்” எனக் கத்தினார் சோழவேழன்.

தேர்ப்படைக்குத் தலைமைதாங்கிய சோழர் தளபதி வெறுகாளன் கொல்லப்பட்ட பிறகு, உசந்தனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோழவேழனின் உரத்த குரல் வெளியில் நிற்கும் உசந்தனுக்கும் கேட்டது. விளக்கை அணைக்கும் கணத்தில் அவன் உள்ளே நுழைந்தான்.

``துடும்பன் எங்கே?” எனக் கத்தினான் உதியஞ்சேரல்.

``உள்ளே வந்துவிட்டேன் பேரரசே” எனக் கூறியபடி உள்ளே நுழைந்தான். ஆனால், யார் எங்கு இருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை. மழையின் பேரோசையும், நம்பிக்கையின்மை உருவாக்கிய அச்சமும் கூடாரம் முழுக்க நிரம்பியிருந்தன.
போரின் நெருக்கடி உருவாக்கியுள்ள நம்பகமின்மையைச் சேரனும் சோழனும் கணநேரத்தில் வெளிப்படுத்தினர். குலசேகர பாண்டியனின் அதிர்ந்த முகத்தைப் பார்க்க, துளியளவும் வெளிச்சமுமில்லை. மூவேந்தர்களும் முழுமையான இருளுக்குள் முகமற்று இருந்தனர்.

எதை நோக்கிக் கேள்வி எழுப்புவது எனத் தயங்கியபடியே கேட்டார் குலசேகரபாண்டியன், ``விளக்கை அணைத்துவிட்டுப் பேசுமளவுக்கு அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டது?”

``எதிரிகள், அணலிப்பூச்சிகளை மலை உச்சிக் குகைக்குள்ளிருந்து தரைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள் பேரரசே.”

சொல்லி முடிக்கும் முன் உதியஞ்சேரலின் குரல் வெடித்து வந்தது. பதற்றத்தின் உச்சத்தில் அவன் கேட்ட கேள்வியும் அதற்கு மையூர்கிழார் சொன்ன பதிலும் அவையை நடுங்கச்செய்தன. அணலியைப் பற்றி நன்கு அறிந்தவன் சேரன். எனவே, அந்தப் பெயர் கேட்டவுடன் துடித்துப்போனான். இறுதியாகக் கேட்டான், ``எந்தத் திசையில் கீழிறக்கியிருக்கிறார்கள்?”

``சோழர் படையின் பாசறையைச் சுற்றி” சொல்லும் வரை இந்த அவையில் அது உருவாக்கப்போகும் விபரீதத்தை மையூர்கிழார் சிந்திக்கவில்லை.

உதியஞ்சேரலும் மையூர்கிழாரும் வெளிப்படுத்திய பதற்றம் இப்போது செங்கனச்சோழனுக்கும் சோழவேழனுக்கும் பரவியது. ``எம் போர்வீரர்களின் பாசறை, ஆபத்தில் மாட்டிக்கொண்டதா?”

செங்கனச்சோழனின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

``எங்கு நிற்கிறீர்கள் மையூர்கிழாரே, பதில் சொல்லுங்கள்?” என இருட்டுக்குள் கத்தினான் செங்கனச்சோழன்.

``பதற்றமடைய வேண்டாம் பேரரசே! இரவில் வீரர்கள் யாரும் வெளிவராமல் கூடாரத்துக்குள்ளே இருக்க வேண்டும். பொழுது நன்றாக விடிந்து கதிரவன் ஒளி காய்ந்து இறங்கும் வரை அணலி ஆற்றலோடு இருக்கும். உச்சிவெயில் ஏறிய பிறகு அதன் வேகம் குறையும். ஆனால், அதுவரை வீரர்கள் யாரும் கூடாரத்தை விட்டு வெளிவரக் கூடாது” என்றான்.

``இரவின் இறுதி ஐந்து நாழிகையிலே பாசறையில் வேலைகள் முழுமையாகத் தொடங்கிவிடுமே, பொழுது விடியத் தொடங்கும்போதே எல்லா வீரர்களும் கூடாரம் விட்டு வெளியில் வந்துவிடுவார்களே!”

``ஆம். அதைத் தடுப்பது எப்படி என்று உடனடியாகச் சிந்திக்க வேண்டும்” என்று சொல்லிய வேகத்தில் மையூர்கிழார் சொன்னார், ``பேரரசே! இதே போன்றதோர் ஆபத்து, பாண்டிப்படையின் பாசறைக்கும் நிகழ்ந்துள்ளது.”

``என்ன சொல்கிறாய் நீ?” என்று அடிக்குரலில் இருந்து வெளிவந்தன குலசேகரபாண்டியனின் சொற்கள்.

``ஆம் பேரரசே! இருள்வேல மரத்தின் சிவப்புநிறப் பிசின் தடவிய ஈட்டியை நம் வீரர்கள் தங்கியுள்ள பாசறையைச் சுற்றி எறிந்துள்ளனர். பொழுது விடிந்தால் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்குக் கீழிறங்கிவிடும். அதன் பிறகு எதிர்ப்படும் மனிதர்கள் கடுந்தாக்குதலில் மாட்டிக்கொள்வார்கள்.”

பதற்றத்தின் உச்சிக்குப்போனான் பொதியவெற்பன். ``என்ன சொல்கிறீர் மையூர்கிழாரே... நம் வீரர்களைக் காக்க என்ன வழி?”

``விடிவதற்குள் வீரர்கள் அனைவரையும் பாசறைக்குள்ளிருந்து வெளியேற்ற வேண்டும்” சொல்லிக்கொண்டே இருக்கும்போதுதான் பேசப்படும் சொற்கள் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கப்போகின்றன என்பதை மையூர்கிழாரால் சிந்திக்க முடிந்தது.

சோழர்களின் பாசறையும் பாண்டியர்களின் பாசறையும் ஒருகாத இடைவெளியில்தான் இருக்கின்றன. இங்கு இரவோடு இரவாக வீரர்கள் வெளியேறினால் அது ஏற்படுத்தும் ஓசை சோழர்களின் பாசறைக்கு நன்கு கேட்கும். அரவங்கேட்டு ஒரு வீரன் பார்த்தால் போதும், `ஏதோ ஆபத்து. அதனால்தான் பாண்டிய வீரர்கள் பாசறையை விட்டு வெளியேறுகிறார்கள்’ என நினைத்து, கணநேரத்தில் மொத்த வீரர்களும் வெளியேறுவார்கள். அந்நிலை ஏற்பட்டால் அணலிப் பூச்சிகளுக்கு மிஞ்சப்போவது யாரும் இல்லை.

பேரரசரின் கூடாரத்தை விட்டு வெளியில் நின்றிருந்தான் உறுமன்கொடி. அவன் அருகில் அடுத்தநிலை தளபதிகளும் மெய்க்காப்பாளர்களும் நின்றிருந்தனர். கொட்டும் மழையின் ஓசையை விஞ்சி வெளியில் கேட்டது கூடாரத்துக்குள் வேந்தர்கள் பேசிக்கொள்ளும் ஓசை.

வெளியில் நிற்கும் மெய்க்காவல்படைத் தளபதிகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்ட இருளுக்குள் வேந்தர்கள் மிகுந்த சினத்தோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என அஞ்சினர். ஆனால், அரச உத்தரவின்றி உள்ளே போக முடியாது, குழப்பத்தில் செய்வதறியாது நின்றனர்.

அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் சொன்னான், ``மூன்று பேரரசுகளின் தலைமை மெய்க்காவலர்களும் ஒன்றாக உள்ளே செல்வோமா?”

சோழப் பேரரசின் மெய்க்காவல்படையான வேளக்காரப்படையின் தலைவன் ``சரி’’யென்று சொன்னான். ஆனால், சேரமன்னனின் மெய்க்காவல்படையான காக்குவீரர்களின் படைத்தலைவனிடமிருந்து மட்டும் பதில் வரவில்லை.

காலம் கடந்துகொண்டிருந்தது.

அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் மீண்டும் கேட்டான் ``ஏன் நீங்கள் மட்டும் பேசாமல் இருக்கிறீர்கள்?”

தட்டியங்காட்டைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்த காக்குவீரர்களின் படைத்தலைவன் சொன்னான், ``தட்டியங்காட்டை நோக்கி உற்றுப்பாருங்கள்.”

அவன் சொன்னதும் அந்தத் திசை நோக்கி அனைவரும் உற்றுப்பார்த்தனர். கொட்டும் மழையில் இரவின் இருளுக்குள் இருந்து எதுவும் புலப்படவில்லை.

``ஒன்றுமில்லையே” என்று சொல்லியபடி இடதுபுறமாகத் திரும்பும்போது நீளமாய்ப் பிளந்து இறங்கிய அடர்மஞ்சள் மின்னல் ஒளியில் தட்டியங்காடு முழுவதும் ஒளிர்ந்தது. அவ்வளவு நேரமும் தங்கள் தளபதிகள் நின்றிருந்த பரணின்மேல் வீரர்கள் சிலர் ஈட்டி ஏந்தி நின்றிருந்தனர். அதன் அடிவாரத்திலிருந்து ஆவேசமிக்க பறம்புவீரர்கள் பாய்ந்து வந்துகொண்டிருந்தனர்.

``எதிரிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று மெய்க்காப்பாளர்கள் பேரோசை எழுப்பிய போதுதான் கூடாரத்துக்குள் இருந்தவர்களுக்கு ஆபத்து புரியத் தொடங்கியது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

| சு.வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ., | நன்றி ஆனந்த விகடன் |
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4443
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by கண்ணன் on Fri Nov 02, 2018 1:30 pm

பாரி களம் இறங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
avatar
கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 192
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Nov 02, 2018 5:53 pm

பாரி களம் இறங்குவதை நினைத்தால் ஒருபக்கம் மகிழ்ச்சி ...விரைவிலே முடிந்து விடுமோ என்று கவலை மறுபக்கம்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4443
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by பிரபாகரன் ஒற்றன் on Sat Nov 03, 2018 4:25 pm

ஆம் நண்பா...
இந்த வருட இறுதிக்குள் முடிந்துவிடும்..
2019தில்  புத்தககம் வெளியீடு...
avatar
பிரபாகரன் ஒற்றன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 31/08/2018
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

வீரயுக நாயகன் வேள்பாரி - 108

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 08, 2018 7:21 am

சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,

இரவின் இறுதிப் பத்து நாழிகையில் வெங்கல் நாடெங்கும் சிந்தப்பட்ட குருதியைக் கழுவ, மழைநீர் போதவில்லை. ஏற்றப்பட்ட தீப்பந்த வெளிச்சத்தில் மழைநீர் அடர்செந்நிறத்தில் ஓடியது. இருளுக்குள் ஓடும்போதும் அதே நிறத்தில் புரண்டோடியது. நீரின் வேகத்தில் மூழ்கி எழுவது கட்டைகளா... மனித உடல்களா என நின்று பார்க்க யாரும் இல்லை. மழையின் பேய்க்கூச்சலுக்கிடையே மனிதக்கதறல்கள் முழுமுற்றாக அமுங்கிப்போயின. பறம்பில் வாழும் பன்னிரு குடிகளும் மலைவிட்டு இறங்கி, காணும் இடமெல்லாம் கணக்கில்லாமல் வெட்டியெறிந்த வேகத்தில் மிஞ்சியது யாரென அறிந்தவர் யாரும் இல்லை.மழையின் வேகத்தால் இரவு கூடுதலாக இருள்கொண்டது. பாசறைக் கூடாரத்தில் படுத்திருந்த வீரர்கள் மழையின் பேரோசையைக் கேட்டபடி ஒடுங்கிப் படுத்தனர். ``போர் நாளில் தூக்கம் வருமா?’’ என்று மற்றவர்கள் கேட்கும்போதெல்லாம் போர் வீரர்கள் சொல்லும் பதில் இதுதான். ``தூக்கம் வராது. ஆனால், மரணம் வரும்.’’ அன்றைய நாளில் களத்தில் எத்தனை முறை மரணத்தின் வாயிலின் அருகே தப்பித்திருப்போம் என்பதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. ஏனெனில், உடலும் மனமும் ஆற்றலை முற்றிலும் இழந்திருக்கும். போர்க்களத்தில் தேரையே தனித்துத் தூக்க முற்படும் வீரன்கூட, இரவினில் தன்னுடலைத் தூக்கி நகரும் வலுவை இழந்து கிடப்பான். போரற்ற நாளில் படுக்கும்போது வரும் உறக்கமன்று போர் நாளின் உறக்கம். துளிகூட நினைவின் தடமின்றி தன்னை மறந்தால் மட்டுமே உறங்க முடியும். ஏறக்குறைய மரணத்துக்கு மிக அருகில்தான் அது நிகழும். பகலில் மரணத்தோடு ஒட்டியே பயணம் செய்வதுபோல, இரவிலும் மரணத்தோடு ஒட்டிய பயணம்தான். உறக்கம், விழிப்பு, ஆயுதம் ஏந்தல், போரிடுதல் எல்லாமே போர்க்களத்தில் மரணத்தின் மறுசெயல்பாடுகள்தாம்.

பகலில் போர்க்களம்விட்டுத் திரும்பியவுடன் தங்களின் பாசறைக்கு வந்து ஆயுதங்களையும் கவசங்களையும் கழட்டிவிட்டு, உடலை நீர்கொண்டு கழுவி, நேராக உணவுச்சாலைக்குச் செல்வர். வேட்டை விலங்குகள் ஒன்றுகூடிக் கடித்து இழுப்பதைப்போலத்தான் அங்கு நடக்கும் செயல்பாடுகள். உணவை முடித்துவிட்டு ஆயுதப் பொறுப்பாளனிடம் சொல்லவேண்டிய குறிப்புகளைச் சொல்லி முடித்து, தேவைப்பட்டால் மருத்துவனைப் பார்த்துவிட்டு பாசறைக் கூடாரத்துக்கு வரும்போது, ஏறக்குறைய தலை அறுபட்டு விழும் உடல்போலத்தான் உணர்வேதுமின்றி விழுவர். நேற்றிரவும் அப்படித்தான் நடந்தது.

நள்ளிரவு கடக்கும்போது பெருமழை தொடங்கியது. மழையின் பேரோசையும் காற்றிலேறிய குளிரும் வீரர்களை ஒடுங்கிப் படுக்க வைத்தன. பாசறைக் காவலர்கள் கூட, போரின் தொடக்கக் காலத்தில் இருப்பதைப்போல தொடர்ந்து விழிப்போடு இருப்பதில்லை. போர் தொடங்கி ஆறாம் நாள் இரவுதான் இது. ஆனால், படைகள் இங்கு பாசறை அமைத்து ஒரு மாதம் கடந்துவிட்டது. தொடக்கத்தில் இரவிலும் பகலிலும் ஓரிரு நாள் மழை பெய்தது. ஆனால், போர் தொடங்கிய பிறகு நேற்றிரவு தான் முதன்முறையாக மழை பெய்துள்ளது. பாசறைக் காவலர்களும் மிகவும் அயர்வுற்று இருந்தனர். காற்றோடு சேர்ந்த பெருமழையாதலால், பறம்பு வீரர்கள் பந்தங்களோடு ஈட்டியைக் கொண்டுவந்து எறிந்துவிட்டுப் போனதைக்கூட யாரும் கவனிக்கவில்லை.

பேய்மழைக்குள் குறிப்பறிந்து செயல்படுதல் எளிதன்று. மூஞ்சலில் வேந்தர்களுக்குள் எழுந்த முரண் இருட்டு என்பதால் அடுத்த கட்டத்தை அடையவில்லை. அதுவே விளக்கொளியில் முகம் பார்த்து சினம்கொண்டு பேசியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். மட்டுமல்ல, இருளில் யார் ஆயுதத்தைக் கைக் கொள்வார்கள் என யாராலும் கணிக்க முடியாது. யாரேனும் ஒருவர் எல்லை மீறிய சொல்லைப் பயன்படுத்தினாலும் நிலைமை பேரிழப்பை ஏற்படுத்துவதாக மாறிவிடும்.

இருளுக்குள் உருவாகும் நம்பகமின்மை, கணநேரத்தில் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும். நேற்றிரவு குலசேகர பாண்டியனின் கூடாரம் எல்லாமுமாக மாற இருந்தது. மிகச்சிறந்த கூர்மதியாளராக குலசேகரபாண்டியன் இருந்ததால் அந்த இக்கட்டிலிருந்து வேந்தர் குலத்தினர் ஐவரும் தப்பினர்.

பாண்டியப் பாசறையில் முரசோசை எழுப்பி வீரர்களை இரவோடு இரவாக வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தை சோழவேழன் எதிர்த்தார். அவ்வாறு செய்தால் அந்த ஓசையைக் கேட்டு சோழப்படையினரும் எழுந்து வெளியேற நினைப்பார்கள். அப்போது அணலிப்பூச்சி தாக்கி பேரழிவு ஏற்படும் என வாதிட்டார். அவ்வாறு செய்யவில்லை என்றால், பாண்டியப்படை அழியும் என்று கருங்கைவாணன் வாதிட்டான். இந்த நிலையில்தான் கூடாரத்துக்கு வெளியில் இருந்த மெய்க்காவலர்கள் ``எதிரிகள் தாக்குவதற்காக வருகின்றனர்’’ என்று கத்தினர்.

துடித்தெழுந்த கருங்கைவாணன், அவர்களை எதிர் கொள்வதற்கான உத்தியைச் சொல்லத் தொடங்கும் முன் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் குலசேகரபாண்டியன், ``இக்கணம் நாம் பாதுகாப்பாக இந்த இடம்விட்டு வெளியேறும் முடிவை எடுக்கவில்லை என்றால், அடுத்து எக்கணமும் ஒன்றாய் முடிவெடுக்கும் சூழல் வராது. எனவே, உடனே வெளியேறுவோம்’’ என்றார்.சோழவேழன் எழுப்பிய கேள்வி, எழுந்துள்ள புதிய ஆபத்தால் தானாகவே காணாமல்போனது. படையைக் காக்கும்முன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிய சூழல் எல்லோருக்கும் உருவானது. அந்த நிலையிலும் மதிநுட்பத்தோடு செயல்பட்டான் குலசேகரபாண்டியன். கூடாரம்விட்டு வெளியேறும்போது மையூர்கிழாரின் காதோடு காதாகச் சொன்னான், ``பாண்டியப் பாசறையில் அபாய ஒலி எழுப்பி, விடியும்முன் வீரர்கள் அனைவரையும் வெளியேற்று.’’

கொட்டும் மழையில் மூஞ்சலின் கூடாரம்விட்டு வெளியேறிய வேந்தர்கள், தங்களின் குதிரைகளை நோக்கி விரைந்து சென்றனர். நூற்றுக்கணக்கில் இருந்த கவசப்படை வீரர்களும் தனிப்படை வீரர்களும் வேந்தர்களைச் சுற்றி அணிவகுத்து நின்றனர். மூவேந்தர்களின் தனித்த முரசங்கள், வேந்தர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் இசைக்கப்படவேண்டும். ஆனால், சிறிய ஓசைகூட வெளியில் கேட்காத அளவுக்குப் பதுங்கிய நிலையில் மூஞ்சலைவிட்டு இரவின் இருப்பத்தி இரண்டாம் நாழிகையில் வேந்தர்கள் வெளியேறினர்.

வெளியேறி, சிறிது தொலைவு போன பிறகுதான் கருங்கைவாணன் சொன்னான், ``நாம் புறப்படும் அவசரத்தில் செய்தி அனுப்ப மறந்துவிட்டோம். அமைச்சர்கள் மூவரும் நீலனின் கூடாரத்துக்குள் இருக்கிறார்கள்.’’

``அப்படியா!’’ என்று சற்று அதிர்ச்சியோடு குலசேகரபாண்டியன் கேட்டு முடிக்கும் முன் சோழவேழன் சொன்னார், ``உறுமன்கொடியை உடனே அனுப்பி மூன்று அமைச்சர்களையும் பாதுகாப்பாக அழைத்துவரச் சொல்லுங்கள்.’’

குதிரைகள் போய்க்கொண்டிருக்கும்போது சோழவேழன் முந்திக்கொண்டு சொன்னதற்குக் காரணமிருந்தது. ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட, `தளபதி உசந்தனை அனுப்பி, அமைச்சர்களை அழைத்துவரச் சொல்’ என்று குலசேகரபாண்டியன் சொல்லிவிடுவார் என நினைத்தார் சோழவேழன். சோழப்படையின் வலிமை மிகுந்த தளபதி என்றால், இப்போது உசந்தனை மட்டும்தான் சொல்ல முடியும். அவனையும் ஆபத்துக்குள் எளிதாகச் சிக்கவைத்துவிடுவார் குலசேகரபாண்டியன். அவர் சொன்ன பிறகு மாற்றிச் சொல்வது கோழைத்தனமாகத் தெரியும். நீலனை பழைய கோட்டைக்குக் கொண்டுசெல்லும் பணிக்கு, பாண்டியத் தளபதி மாகனகனை அனுப்பவேண்டிய தேவையே இல்லை. பாதுகாப்பு வீரர்களே அதைச் சிறப்பாகச் செய்வர். ஆனால், தன் தளபதிகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குலசேகரபாண்டியன் முதலில் இருந்தே கவனத்தோடு இருப்பதாக சோழவேழன் கருதியதால்தான் உறுமன்கொடியின் பெயரை முந்திக்கொண்டு சொன்னார். அதன் பிறகு குலசேகரபாண்டியனால் மாற்றிச் சொல்ல முடியவில்லை. அவ்வாறே உத்தரவிட்டார்.

உறுமன்கொடி, பன்னிரு குதிரைவீரர்களோடு மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து போனான். குலசேகரபாண்டியனின் கூடாரத்திலிருந்து மிகத் தள்ளி நீலனின் கூடாரம் இருந்ததாலும், மழையின் பேரோசையினாலும் வேந்தர்கள் புறப்பட்டதை அமைச்சர்களால் அறிய முடியவில்லை. உறுமன்கொடி, குதிரையைத் தாற்றுக்கோலால் மாறி மாறி அடித்து வேகத்தைக் கூட்டினான். பறம்புவீரர்கள் அதற்குள் மூஞ்சலுக்கு வர வாய்ப்பில்லை என்பதை மனதுக்குள் உறுதிப்படுத்தியபடியும் நீலனின் கூடாரத்தை நோக்கி ஓசையெழுப்பியபடியும் விரைந்தான். ஆனால், எதிரோசை எதுவும் வரவில்லை. கூடாரத்தின் அருகே வந்ததும் அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கத்தினான். கொட்டும் மழையில் தனக்கே கேட்கவில்லை என்று நினைத்தபடி வீரன் ஒருவனை, ``உள்ளே போய்ப் பார்’’ என்றான்.

அவன் சொல்லி முடிக்கும்போது, அவனுக்குப் பின்னால் எந்த வீரனும் உயிருடன் இல்லை. மழை ஓசையை மீறிக்கேட்டது ஒரு குரல்.

அது எதிரியின் குரல் என அறிந்த கணத்தில், வாளை உருவினான். அப்போது கூடாரத்துக்குள் இருந்து வெளிவந்த முடியனின் ஈட்டி உறுமன் கொடியின் கீழ்நாடியில் குத்தி பின்மண்டையில் வெளியேறியது.

குலசேகரபாண்டியன் காதோடு காதாக இட்ட உத்தரவுப்படி பாண்டியப் பாசறையில் நள்ளிரவு முரசின் ஓசை எழுப்பப்பட்டது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த வீரர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ``உடனடியாக ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாசறையை விட்டு வெளியேறுங்கள்’’ என்று உத்தரவிட்டான் பாசறைத் தளபதி. மழை ஓசையால் அவனது குரல் பெரிதாகக் கேட்கவில்லை. எனவே, வீரர்கள் கூடாரம்தோறும் சென்று சொன்னார்கள். முதல் ஐந்தாறு கூடாரங்கள் கலையத் தொடங்கிய பிறகு செய்தி தனதுபோக்கில் பரவத் தொடங்கியது. பேராபத்து வருவதாகக் கருதிய வீரர்கள் பதறியடித்து ஓடத் தொடங்கினர். பெருங்கூச்சல் மேலேறிவந்தது.

மழையின் வேகம் சற்றே குறையத் தொடங்கியபோது, பாண்டியப் பாசறையிலிருந்து பேரோசை மேலேறி வருவது சோழர்களின் பாசறைக்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. அந்தக் கணம் முதலே பேரழிவு தொடங்கியது. சோழப்படை வீரர்கள் அஞ்சி வெளியேறிய கணத்தில் அணலிகளின் தாக்குதல்கள் தொடங்கின.

கண்ணுக்குத் தெரியாமல் இருளுக்குள்ளிருந்து பெரும்படை வருகிறது என எண்ணிய வீரர்கள், சிறு பூச்சிகளை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கையில் சிக்கிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீரர்கள் ஓடத் தொடங்கினர். நாகக்கரடு இருக்கும் மேற்குத்திசைதான் எதிரிகள் இருக்கும் ஆபத்தான திசை என்பதால் கிழக்குத்திசை நோக்கி ஓடத் தொடங்கினர். பாண்டியப் பாசறை, ஒரு காதத்தொலைவில் வடகிழக்குத் திசையில் இருந்தது. அங்கிருந்து மேலேறிவந்த ஓசையும் இங்கிருந்து மேலேறிய ஓசையும் வெகுவிரைவாக இணைந்தன.

அணலிகள் தாக்கத் தொடங்கிய சிறுகணத்திலேயே வீரர்கள் எழுப்பும் ஓசையின் தன்மை மாறத் தொடங்கியது. சோழப்படையின் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதால், கதறலின் பேரோசை இருளை நடுங்கச் செய்தது. தப்பித்து ஓடத் தொடங்கிய சோழப்படை வீரர்கள், பாண்டிய வீரர்களோடு இணைவதற்கு ஆகும் நேரம்கூட அணலிகள் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு முன்பே பாண்டியப் படையின் பந்த வெளிச்சத்தை நோக்கி அணலிகள் வந்து சேர்ந்தன.அந்தத் திசையில் பறம்புவீரர்கள் யாரும் இல்லை. அணலிகள் பற்றியும் மற்ற நஞ்சுப்பூச்சிகள் பற்றியும் பறம்பினர் நன்கு அறிவர். அதுவும் இந்தப் பேய்மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. மழை முடிந்த கணத்தில் காட்டுக்குள்ளிருந்து கிளம்பப்போகும் பூச்சி வகைகளை யாராலும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்போல, அணலியின் வாசம் நோக்கிப் பறக்கும் நஞ்சுயிர்கள் அனைத்தும் வந்துசேரும். இரவின் பூச்சிகளை அணலியும், பகலின் பூச்சிகளை கொம்புதூக்கி வண்டின் ரீங்காரமும் கொண்டுவந்து சேர்த்துவிடும். இப்போது மழையும் இணைந்துகொண்டதால் நிலைமை பன்மடங்கு மோசமாய்விட்டது. எனவே, `பறம்புவீரர்கள் யாரும் அந்தத் திசைப் பக்கமே போகவேண்டாம்’ என்று பாரி கூறியிருந்தான்.

அவனது திட்டம் முழுவதும், வெங்கல்நாட்டின் நடுப்பகுதியில் நிலைகொண்டு தாக்க வேண்டும் என்பதுதான். அங்குதான் சேரப்படையின் பாசறை இருக்கிறது. இந்தப் போரில் மிகக் கவனமாக இருப்பவன் சேரன்தான். அவன் பாசறை அமைக்கும்போதே பாதுகாப்புமிக்க இடத்தைத் தேர்வுசெய்திருந்தான். அவனுடைய வீரர்களைத் தாக்கி அழிப்பதும், மூஞ்சலில் இருந்து தப்பி வெளியேறுபவர்களைத் தாக்கி அழிப்பதும், வேந்தர்களின் சிறப்புப் படையைத் தாக்குவதும், நீலனை கவனத்துடன் மீட்பதுமாக... பல்வேறு முறையில் தாக்குதல் உத்தியை வகுத்திருந்தான் பாரி.
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4443
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 108 - தொடர்ச்சி

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 08, 2018 7:23 am

இரவின் பிடி உதிரும்போது வேந்தர்படையின் ஆற்றல் முற்றிலும் உதிர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் பாரியின் திட்டம். மூன்று பாசறைகளையும் தனித்தனியாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் போதே வேந்தர்களின் சிறப்புப் படைகளின் மீது இடியெனத் தாக்கும் போர் உத்தியை வகுத்திருந்தான் பாரி. குலங்கள்வாரியாகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டன. சோழர் பாசறையிலும் பாண்டியர் பாசறையிலும் இருந்து உயிர்பிழைத்து வருகிறவர்களை எதிர்கொள்ள, வெங்கல்நாட்டின் நடுப்பகுதியில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தது விண்டனின் தலைமையிலான படை.

போர்க்களத்தில் வேந்தர்படை வீரர்கள் கவசப் பாதுகாப்போடு அனைத்துவிதமான ஆயுதங்களையும் கைக்கொண்டு போரிடும்போதே, பறம்பு வீரர்களையும் எதிர்கொள்வது மிகக்கடினம். ஆனால் இப்போதோ, இரவில் பேரச்சத்தோடு கைகளில் ஓரிரு ஆயுதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு ஓடிவருகிறவர்கள், விண்டன் தலைமையிலான பறம்புப்படையை எப்படி எதிர்கொள்ள முடியும்?

பின்னால் துரத்தும் பேராபத்திலிருந்து தப்பிப்பிழைக்கவே வீரர்களின் பெருங்கூட்டம் ஓடிவந்தது. அவர்களாக வந்து ஈட்டிகளில் பாய்ந்து மாய்வதைப் போலத்தான் கணக்கே இல்லாமல் மாய்ந்துகொண்டிருந்தனர். எதிர்நிலையில் நின்ற விண்டன் தாக்கவேயில்லை. ஆனால், அழிக்க மட்டும் செய்தான். அழிவு கணக்கேயில்லாமல் நடந்துகொண்டிருந்தது.

பல்லாயிரம் மணிகள் கோக்கப்பட்ட மாலை ஓர் இடத்தில் அறுந்தவுடன் மொத்தமும் மண்ணில் உருள்வதைப் போலத்தான் படையின் கட்டுக்கோப்பு அறுந்த கணத்தில் பல்லாயிரம் தலைகள் மண்ணில் உருண்டுகொண்டிருந்தன.

விண்டனின் தலைமையில் வந்தவர்கள், ஆறு இடங்களில் தனித்தனியாக நின்றிருந்தனர். வர வர வெட்டிச்சரிக்கும் வெறியோடு நின்றவர்களை நோக்கி அணலிகளால் விரட்டப்பட்டவர்கள் இடைவிடாது வந்துகொண்டிருந்தனர். அச்சத்தோடு பாய்ந்து வருபவர்களுக்கு முன்னால் தனது கூரிய ஆயுதங்களை ஏந்தி நின்றான். பட்டுப்போன இலையை கழுமர முனையால் குத்துவதுபோலத்தான் அந்தப் பேரழிவு நடந்தது. துளியளவு ஆற்றல்கூட இல்லாமல் அஞ்சி ஓடிவரும் கூட்டம் அவன் உருவாக்கியிருந்த பொறிக்குள் கணக்கேயில்லாமல் விடியும் வரை விழுந்துகொண்டேயிருந்தது.

இதே நேரத்தில் சேரனின் பாசறையைத் தாக்க உதிரனின் படைக்கு உத்தரவிட்டிருந்தான் பாரி. சுமார் எட்டாயிரம் வீரர்கள் இருந்த பாசறையை நள்ளிரவு உதிரனின் தலைமையிலான படை சுற்றிவளைத்தது. மழை கொட்டிக்கொண்டிருந்த போதும் கொம்பூதி முழக்கமிடச் சொன்னான் உதிரன். தூங்கிக்கொண்டிருப்பவர்களைத் தாக்கக் கூடாது. எனவே, தக்குதலுக்கு ஆயத்தமாகச்சொல்லி அழைத்தான்.

அந்த நேரத்தில் மூஞ்சலிலிருந்து கிழக்குத்திசை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தனர் வேந்தர்கள். மெய்க்காவல் படையினர் மிகுந்த கவனத்தோடு முன்னும் பின்னுமாக அணிவகுத்துச் சென்றனர். பந்த ஒளி இல்லாததால் அடர் இருட்டில் பயணப்படவேண்டியிருந்தது. மழையும் விடாது பொழிந்துகொண்டிருந்தது. சரியான திசை வழியில் வேந்தர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்பதால், மையூர்கிழார் முன்னால் போய்க்கொண்டிருந்தார்.ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும் ஒவ்வொருவிதமாக இருந்தது. குலசேகரபாண்டியன் தனது பாசறை வீரர்கள் பாதுகாப்போடு வெளியேறியி ருப்பார்காளா என்ற சிந்தனையிலே இருந்தான். செங்கனச்சோழன் தங்கள் படைவீரர்களைக் காப்பாற்ற வழி என்ன என்ற சிந்தனையில் இருந்தான். பறம்பின் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை எழுவனாற்றில் அறிந்தவன் அவன். அவனது உடல் நடுக்கத்தை உள்ளுணரச்செய்துகொண்டிருந்தது. ஆனால், சோழவேழனும் பொதியவெற்பனும் எந்த நிலையிலும் பாரியைக் கொன்றழிக்காமல் இந்த நிலம்விட்டு அகன்றுவிடக் கூடாது என எண்ணியபடி இருந்தனர்.

கருங்கைவாணனின் சிந்தனை முழுவதும் உறுமன்கொடியைப் பற்றியதாக இருந்தது. `இவ்வளவு நேரத்தில் அவன் அமைச்சர்களை அழைத்து வந்திருக்க வேண்டுமே. ஏன் இன்னும் வரவில்லை’ என்று நினைத்தபடியே குதிரையை விரைவுபடுத்தினான். யாரையாவது அனுப்பி நிலைமையை அறிந்துவரச் சொல்லலாமா எனத் தோன்றியது. குதிரையை விரைந்து செலுத்தி முன்னால் போய்க்கொண்டிருந்த மையூர்கிழாரிடம் வந்து கேட்டான், ``உறுமன்கொடி இன்னும் வந்துசேரவில்லை. அமைச்சர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லையே!’’

``இதில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.’’

கருங்கைவாணன் சற்றே அதிர்ச்சிக்குள்ளானான், ``உறுமன்கொடி பெருவீரன். அவனை எளிதில் வீழ்த்திவிட முடியாது.’’

``தளபதிகள் வீரத்தோடு இருந்து என்ன பயன்? வேந்தர்கள் கூர்மதியோடு இருக்க வேண்டுமல்லவா!’’

``ஏன் அப்படிச் சொல்கிறாய்?’’

``நாம் மூஞ்சலைக் கடந்து ஒரு காதத்தொலைவு வந்த பிறகு அமைச்சர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடலாமா? இத்தனை நாள் போருக்குப் பிறகும் எதிரியின் வேகத்தையும் வலிமையையும் இவர்கள் என்னதான் புரிந்துகொண்டார்கள்?’’

``அதற்காக, அமைச்சர்கள் மூவரையும் அப்படியே விட்டுவிட முடியுமா?’’

``ஏன் முடியாது? மறதியும் கவனக்குறைவும் தவிர்க்க முடியாதவை. அதன் விலை அமைச்சர்களாக இருந்தாலும் கலங்காது முடிவெடுக்க வேண்டும். ஒருவரின் தளபதியை இன்னொருவர் சிக்கவைத்துவிடுவார் என்ற பதற்றத்தில் மூவரும் மாறி மாறி மற்றவர்களைச் சிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களோடு நின்றிருக்க வேண்டிய இழப்பில் உறுமன் கொடியையும் சேர்த்து விட்டார்கள். இதே நிலை நீடித்தால் நிலைமை படுமோசமாகி விடும்.’’

``ஏன் நம்பிக்கையிழந்து பேசுகிறாய்?’’ மழையையும் மீறி கேட்டது கருங்கைவாணனின் குரல்.

``போர்க்களத்தில் இரண்டே இரண்டு செயல்கள்தான் உண்டு. ஒன்று, தாக்கி அழிப்பது. இல்லையெனில், தப்பிப் பிழைப்பது. நாம் முதல்கட்டத்தின் இறுதிநிலைக்கு வந்துவிட்டோம். எனவே, இரண்டாம் கட்டம் பற்றிய சிந்தனை தானாகவே மேலெழுகிறது’’ என்று கூறிய மையூர்கிழார் தொடர்ந்து சொன்னார், ``உறுமன்கொடி கொல்லப்பட்டிருந்தால் அடுத்து ஒரு பொழுதுக்குள் நாம் தாக்கப்படுவோம்.’’

``அப்படியா சொல்கிறாய்? எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வர வாய்ப்பிருக்கிறது?’’

``அதுதான் தெரியவில்லை. எனது கணிப்புப்படி இந்நேரம் சோழப்படையும் பாண்டியப் படையும் பேரழிவைக் கண்டிருக்க வேண்டும். உதியஞ்சேரல் தன் தளபதி துடும்பனை அனுப்பி, அவனது பாசறையில் இருக்கும் வீரர்களை வெளியேற்றும்படி கூறியுள்ளான்.’’

``இல்லையே. துடும்பன் நம்முடன்தானே இருந்தான்.’’

``மூஞ்சலிலிருந்து புறப்படும் போது நம்முடன் இருந்தான். இடையில் அவனைப் பாசறைக்கு சேர வேந்தர் அனுப்பிவைத்து விட்டார்.’’

சொல்லும்போது இடியோசை யால் நிலம் நடுங்கியது. மிக அருகில் விழுந்திருக்க வேண்டும். குதிரைகள் மிரண்டு கனைத்தன.

``நாம் இப்போது எந்தத் திசையில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்? எது பாதுகாப்பானது?’’ எனக் கேட்டான் கருங்கைவாணன்.

குதிரையை மழையின் தன்மைக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவு படுத்தியபடியே மையூர்கிழார் சொன்னார், ``உண்மையைச் சொல்வதாக இருந்தால் எனக்கு எதுவும் புரிபடவில்லை. பறம்பில் வாழும் பதினான்கு குடிகளும் கீழிறங்கிவிட்டன என்ற பிறகு, நாம் எந்தத் திசையில் பயணப்படுவது என்றே விளங்கவில்லை.’’

``பாரி எந்தப் பக்கம் இறங்கியிருப்பான் என்பதை சிறிதும் முன்னுணர முடியவில்லையா?’’

``முடியவில்லை. இருளின் எல்லாத் திசைகளிலும் பறம்புவீரர்கள் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல பறம்பின் படையணி எல்லாவற்றுக்குள்ளும் பாரி இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன்’’ சொல்லும்போது உடல் உள்ளுக்குள் நடுங்கி மீண்டது. இருளெங்கும் பாரியால் நிரம்பியிருந்தது.

``அப்படியென்றால், நாம் இப்போது என்ன செய்யவேண்டும்?’’

``இப்போது இடியோடு இறங்கிய மின்னல் ஒளியில் எதிரிகள் நமது கூட்டத்தைத் தெளிவாகப் பார்த்திருப்பார்கள். எனவே, நம்மை நோக்கி அவர்கள் விரைந்து வர வாய்ப்புண்டு.’’

``நாம் ஏதாவது ஒரு மறைவிடத்தில் தங்க முடியாதா? இன்று இரவை மட்டும் கழித்து விட்டால் போதும், காலையில் நிலைமையை வேறுவிதத்தில் எதிர்கொண்டுவிடலாம்.’’

``நானும் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மறைவிடம் என்று ஏதுமில்லை. எனது அரண்மனைக்குப் போவதாக இருந்தால் நாமே ஆபத்தில் போய்ச் சிக்கிக்கொள்கிறோம் என்று பொருள். ஏனெனில், வடதிசையில் காரமலைக்கு மிக அருகில் உள்ளது எனது அரண்மனை. இந்நேரம் பறம்புவீரர்கள் அங்கு இறங்கியிருப்பார்கள்’’ என்று சொன்னவர், குதிரையை விரைவுபடுத்தியபடி, ``எனக்குத் தெரிந்த ஒரே வாய்ப்பு மிக விரைவாகப் பயணப்பட்டு காட்டாற்றைக் கடப்பதுதான்’’ என்றார்.

``அங்கு என்ன வகையான பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறது?’’

``இந்த மழைக்கு, காட்டாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும். மேடான பகுதியின் வழியே நான் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு அழைத்துச் சென்றுவிடுவேன். அக்கரையில் செவ்வரிமேட்டின் பக்கம் போய்விட்டால் போதும், நாம் இரவில் எந்தவித ஆபத்து குறித்தும் அச்சப்படத் தேவையில்லை.’’

``ஏன்... எதிரிகள் அங்கு வர மாட்டார்களா?’’

``மலைமக்கள் அச்சப்படுகிற ஒரே பொருள் நீர் மட்டும்தான். மலைமக்களின் பெரும்பான்மையோருக்கு நீச்சல் தெரியாது. அடர்கானகத்தின் இருள் கண்டு சமவெளி மக்கள் எப்படி பயம்கொள்கிறார்களோ, அதேபோல்தான் நீரைக் கண்டால் சற்று தள்ளியே நிற்பது மலைமக்களின் இயல்பு. எனவே, இரவில் காட்டாற்றுக்குள் இறங்க மாட்டார்கள்’’ என்றான்.

சொல்லி முடிக்கும்போது வேந்தர்படையின் குதிரைகள், இதுவரை இல்லாத வேகத்தில் ஆற்றின் திசைவழி நோக்கிப் பாயத் தொடங்கின.

அதே காலத்தில் சேரனின் பாசறையின் மீது உதிரனின் தாக்குதல் தொடங்கியது. கொம்போசை ஊதி வீரர்களுக்கு தாங்கள் வந்துள்ளதைத் தெரியப்படுத்தியதும் பாசறைத் தளபதி உடனே எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமானான். அப்போதுதான் சேரர் படைத் தலைமைத் தளபதி துடும்பன் வந்து சேர்ந்தான். உதியஞ்சேரலின் கட்டளைபடி பாசறையைவிட்டு உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டான்.

``எதிரிகள் கொம்போசை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் பாசறையைவிட்டு வெளியேற உத்தரவிட்டால் நிலைமை விபரீதமாக மாறும். ஒரு பக்கம் எதிரிகளைத் தடுக்க எதிர் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்போம். இன்னொரு பக்கம் வெளியேறிக்கொண்டிருப்போம். மழை பெய்து கொண்டிருப்பதால் தெளிவான உத்தரவை எல்லோருக்கும் வழங்கிவிட முடியாது. நள்ளிரவில் கூடாரத்துக்குள் தூங்கிக் கொண்டிருக்கிற பலருக்கும் நிலைமையை விளக்குவது எளிதல்ல. எனவே, இரண்டு செயல்களால் பெரும்குழப்பம் உருவாகும். பறம்புவீரர்களை எதிர்த்து முழுக்கவனத்தோடு தாக்குதல் தொடுப்போம். பொழுது விடிந்த பிறகு நாம் பாசறையைவிட்டு வெளியேறுவோம்’’ என்றான் பாசறைத் தளபதி.

அதிக அளவு வீரர்கள் கூடாரங்களைவிட்டு வெளியேறத் தொடங்கியதும் பறம்புவீரர்கள் தாக்குதலைத் தொடங்கினர். பின்னிரவு நேரத்திலும் மழையின் வேகம் குறையவில்லை.

இரவு நேரத்தில் பாசறையின் மீதான எதிரிகளின் தாக்குதலைச் சரியாகக் கையாள வில்லை என்றால் பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை தளபதி நன்கு அறிவார். எனவே தனது நிலையை வலியுறுத்தினார்.

பாசறைத் தளபதிக்கு, இந்தப் பாசறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் மட்டுமே தெரியும். ஆனால், துடும்பனுக்கு மொத்தச் சிக்கலும் தெரியும். வேந்தர்கள், மூஞ்சலைவிட்டு வெளியேறிவி ட்டனர்; பாதுகாப்பான இடத்துக்கு விரைந்துகொண்டிருக்கின்றனர். பாண்டியப் படையும் சோழப்படையும் பேரழிவுக்குள்ளாகின. அந்த நிலையில் சேரர்படை மட்டும் பாசறையில் இருந்தால் அது பேராபத்தாகும். எனவே, ஒரு பகுதி வீரர்களை இழந்தாலும் நாம் இந்த இடத்தைவிட்டு அகல்வதே பாதுகாப்பானது. இதை பாசறைத் தளபதிக்கு விளக்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே, துடும்பன் வேந்தரின் கட்டளை என்று மறுசொல்லுக்கு வழியில்லாதபடி உத்தரவைப் பிறப்பித்தான்.பாசறைத் தளபதியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து வாதிட்டான். ஆனால், நிலைமை கைமீறிக்கொண்டிருந்தது. இறுதியில் பாசறைத் தளபதி சொன்னான், ``சரி, நான் மேற்குப் பகுதியில் நின்று எதிரிகளைத் தாக்கும் படைக்குத் தலைமை ஏற்கிறேன். நீங்கள் வெளியேறும் படையை கவனத்தோடு கொண்டுசெல்லுங்கள்’’ என்றான். தன் பாசறை வீரர்களைக் காக்க அவன் இறுதி வரை எடுத்துக்கொள்ளும் முயற்சியைக் கண்டு மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றான் துடும்பன்.

மேற்குத் திசையில் பறம்பின் தாக்குதல் வலிமையானதாக இருந்தது. பாசறைத் தளபதியின் தலைமையில் சேரப்படையினர் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் எதிரிகளை பின்னுக்கு நகர்த்த முடியவில்லை. அதற்குக் காரணம், பறம்புவீரர்கள் இருளுக்குள் எந்த இடத்தில் நின்று அம்பெய்துகின்றனர் என்பதை, சேர வீரர்களால் மதிப்பிட முடியாததே. இருளின் எல்லா திசைகளில் இருந்தும் அவர்களின் அம்புகள் பாய்ந்துவந்தன. வேந்தர்களின் படைவீரர்கள், பெரும்பாலும் தங்களின் வில்லுக்கு, பட்டுநூல் நாணினைத்தான் பயன்படுத்தினர். அது மழைநீரில் ஈரமானால் போதுமான இழுவை விசையை உருவாக்காது. ஆனால், பறம்பின் வீரர்கள் பயன்படுத்துவதெல்லாம் மான் முடியும் எருமை முடியும் கொண்டு திரிக்கப்பட்ட நாண். எனவே, அது மழைநீரால் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாகாது. பறம்புவீரர்கள் பாசறையின் மீது அலையலையாய் அம்புகளை விடுத்துக் கொண்டிருந்தனர்.

மழைப் பொழிவுக்கு இடையிலும் அம்புகள் கூடாரத்தைத் தொடர்ந்து தாக்கின. பாசறைக்குள், உத்தரவில் ஏற்பட்ட குழப்பத்தால் பெரும் பாலானோர் தாக்குதலை எதிர்கொள்ளாமல் கிழக்குத்திசையில் வெளியேறத் தொடங்கினர்.

உதிரனின் தாக்குதல் திட்டத்தின் கூர்முனைப் பகுதி மேற்குத்திசை அன்று. அதாவது மேற்குத்திசையில் நள்ளிரவில் பேரோசையை எழுப்பியபடி தாக்குதல் தொடுத்தால் அச்சப் பட்டு வெளியேறும் படை கிழக்குத் திசையில்தான் பாய்ந்து செல்லும். எனவே, கிழக்குத் திசையில் பொருத்தமான மூன்று இடங்களில் தங்களின் மூன்று குடிகளை நிறுத்தியிருந்தான் உதிரன். காய்ந்த புளியமரங்கள், வாகைமரங்களின் கொப்புகள் முண்டுகள் எல்லாவற்றின் மீதும் பறம்புக் குடிகள் ஆயத்தநிலையில் காத்திருந்தனர்.

சேரர்படை வீரர்கள் வரத் தொடங்கிய பிறகு, கிழக்குத்திசை மரங்களிலும் மறைவுகளிலும் இருந்து தாக்குதல் தொடங்கியது. வாளும் ஈட்டியும் சவளக்குந்தமும் பெருங்குந்தமும் இடைவிடாது குத்தித் தீர்த்தன. சகதியில் மிதித்துகொண்டே இருப்பதுபோல குத்துவாள்கள் இறங்கிக்கொண்டே இருந்தன. வல்லயக் கம்புகளின் சிறு மணியோசை திரும்பும் திசையெல்லாம் கேட்டது. பேய்மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள், பீறிடும் மனிதக்கதறல் கேட்டு பொடவுக்குள் பதுங்கின.

சேரனால் அழித்தொழிக்கப்பட்ட மூன்று குடிகளின் தாக்குதலால் இப்போது சேரர்படை, பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருந்தது. பாண்டியப்படையும் சோழப்படையும் அணலி தாக்குதலுக்கு அஞ்சி ஓடிவந்ததைப்போல சேரர்படை ஓடிவரவில்லை. எதிரிகள் தாக்குகின்றனர். பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்ற உணர்வோடு ஆயுதங்களை கைக்கொண்டபடிதான் ஓடிவந்தனர். ஆனால், மழையும் இருட்டும் அவர்களை எதிர்த்து நிற்கும் பறம்புவீரர்களை சரியாகக் கண்டுணர முடியாமல் செய்துவிட்டன.

முன்புறம் தனது படை நினைத்துப்பார்க்க முடியாத அழிவை அடைந்துகொண்டிருக்கிற செய்தி துடும்பனுக்கு எட்டியது. `எதிரிகளின் பொறியில் மாட்டிவிட்டோமோ!’ எனத் துடித்துப்போனான் துடும்பன். `பாசறைத் தளபதி சொன்ன எச்சரிக்கை சரியாகிவிட்டதே!’ எனக் கருதி, தாக்குதல் நடக்கும் கிழக்கு முனைக்கு விரைந்தான். அவன் வரும்போது அழிவுற்ற அவன் படைவீரர்கள் மலையெனக் குவிந்து கிடந்தனர். இருட்டில் அவனுக்குக் காட்சிகள் எவையும் புலப்படவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்டவர்களின் மூச்சிரைப்பு, பேய்க்காற்றுபோல மழையையும் விஞ்சி கேட்டது. என்ன இது என்று மிரண்டு நிற்கையில், வெட்டி இறங்கியது ஒரு மின்னல்.

அந்த ஒளியில் தொலைவில் நின்றிருந்த உதிரன், துடும்பனை அறிந்தான். தடியங்காட்டுப் போர் தொடங்கியதிலிருந்து வேந்தர்களின் விற்படைக்குத் தலைமை தாங்குபவன் துடும்பன். எனவே, அவனது முகம் மனதில் ஆழப் பதிந்திருந்தது. வந்து நிற்பது அவன்தான் என அறிந்ததும், உருவிய வாளோடு பாய்ந்தான் உதிரன்.

வீசிய வாளோடு உதிரன் வருவது அறிந்து வாளோடு அவன் மீது பாய்ந்தான் துடும்பன். இரண்டு வாள்களும் முழுத்திறனோடு குறுக்கிட்டு வெட்டின. வெட்டிய கணத்தில் மின்னல் ஒளி முற்றாக மறைந்து இருள் நிலைகொண்டது. வேந்தர்படையினர் பயன்படுத்தும் வாளின் பிடி யானைத் தந்தத்தால் ஆனது. காயத்துக்குள் கங்குபட்ட கணத்தில் உச்சந்தலைக்கு ஏறும் அதிர்சூடுபோல வாளின் கைப்பிடி அதிர்வை உள்ளுக்குள் கடத்தியது. பறம்பினர் பயன்படுத்தும் வாளின் பிடி எருமைக்கொம்பால் ஆனது. அது வாளின் அதிர்வைக் கடத்தாது. உதிரனின் வாள் மோதிய கணத்தில் ஏற்பட்ட அதிர்வை துடும்பனின் கை உச்சந்தலையில் உணர்ந்தது. அப்போது கை தளர்ந்து, பிறகு மீண்டும் இறுகியது. அப்படி இறுகும்போது அவனது தலையைச் சீவிக் கடந்துகொண்டிருந்தது உதிரனின் வாள்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4443
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by kram on Mon Nov 12, 2018 1:45 pm

வணக்கம்
பாரி களம் இறங்க வேண்டும் அனல் தோற்க கூடாது .
அப்படி தோற்றலும் நேருக்கு நேர் தோற்கவேண்டும்
ஆனல் அப்படி நடப்பது போல் தோன்றவில்லை
எப்படியானாலும் இதை எதிர்கொள்ளவேண்டும்
ஒரு நல்ல வீரனை, விவேகி, தமிழனை இழக நேரிடும்
avatar
kram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 15, 2018 9:42 am

சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,

பொழுது விடிந்தது. கதிரவனின் ஒளிக்கீற்று எங்கும் பரவியது. இரலிமேட்டின் பெரும்பாறையின் மீது அடுக்கிவைக்கப்பட்டிருந்த வீரர்களின் உடல்கள் மீது மழைநீர் படாமலிருக்க, கிடுகுகளால் ஆன படல்களைக்கொண்டு மேல்மறைப்புகளை உருவாக்கியிருந்தனர். உடல்களின் தலைமாட்டில் வாரிகையன் உட்கார்ந்திருந்தார். வலதுபக்கக் கீழ்த்திசையில் முறியன் ஆசான் இருந்தார். இடதுகோடியில் ஆயுதப் பொறுப்பாளனான முதுவேலன் இருந்தான். இவர்கள் மூவரைத் தவிர மற்ற எல்லோரும் மலையை விட்டுக் கீழிறங்கிவிட்டார்கள். வயதானவர்கள், இதுநாள் வரை போருக்குத் தேவையான பணிகளை மட்டுமே செய்துகொண்டு இரலிமேட்டிலும் நாகக்கரட்டிலும் இருந்தனர். நேற்று மாலையோடு போர் முடிந்துவிட்டது. அதன் பிறகு நடக்கத் தொடங்கியது அழித்தொழிப்புதான். அறம்பிறழ்ந்தவர்களை அழித்தொழிக்கும் அறச்சீற்றம்தான். அதில் யாவரும் பங்கெடுக்கலாம் என்பதால் வயதானவர்களும் கீழிறங்கினர்.நேற்று தாக்குதலுக்கான சொற்களைப் பாரி அறிவித்த கணத்திலிருந்து பன்மடங்கு பணியாற்றினர் முதுவேலனும் முறியன் ஆசானும். பறம்பில் உள்ள அத்தனை பேரும் ஒரே நேரத்தில் கீழிறங்கித் தாக்கவேண்டுமென்றால், அனைவரிடமும் போதுமான அளவுக்கு ஆயுதங்கள் இருக்க வேண்டும். யார் யார் எந்தப் பக்கம் போகப்போகிறார்கள்; அவர்கள் தாக்கவேண்டிய எதிரிகளின் படை அமைப்பு எப்படி என்று பேசி முடிவெடுத்து ஆயுதங்களைக் கொடுத்தனுப்பவெல்லாம் நேரமும் சூழலுமில்லை. பரப்பப்பட்டுக் கிடந்த சூளூர் வீரர்களின் குருதியை உடலில் பூசியபடி எழுந்து வந்த பறம்பு வீரர்கள், கைகளில் சிக்கியவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். முதுவேலனால் ஒருகட்டத்துக்குமேல் வழிமுறை செய்ய முடியவில்லை. குகைகளின் கடைசி எல்லை வரை அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் ஒன்றுவிடாமல் கொடுக்கப்பட்டுவிட்டன. ஒற்றை அம்புகூட மிச்சம் இல்லாமல் அனைத்தும் பயன்பாட்டுக்குப் போய்விட்டன. ஆனாலும் அவன் மனதில் கவலை இருக்கத்தான் செய்தது.

இறங்கித் தாக்கி எதிரிகளைக் கூண்டோடு அழிக்கும் முடிவைப் பாரி சொன்னவுடன் தயங்கி நின்றவன் முதுவேலன்தான். அழித்தொழிப்புப் போருக்காக மலையை விட்டுக் கீழே இறங்கிவிட்டால் வேலை முடிந்த பிறகுதான் திரும்பி வர முடியும். வேந்தர்களின் படையில் இப்போதைய நிலைமையில் நாற்பதாயிரம் பேர் இருக்கக்கூடும். அவர்களை முழுமையாக அழித்தொழிக்கும் அளவுக்கு நம் வீரர்களின் கையில் போதுமான ஆயுதங்கள் இருக்க வேண்டும். ஆனால், நம்மிடம் வில் - அம்பு மட்டுமே தேவையான அளவு இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதலில் அதிகம் பயன்படுபவை அருகில் இருந்து தாக்கும் ஆயுதங்கள்தான். குறிப்பாக வாள் வகைகள்.

அனைத்து வீரர்களும் ஒன்றுக்கும்மேற்பட்ட வகை ஆயுதங்களை வைத்துக்கொண்டு இறங்குவதுதான் சரியான நடவடிக்கையாகும். ஆனால், ``அவ்வளவு ஆயுதங்கள் கைவசம் இல்லை’’ என்று முதுவேலன் சொன்னான். ஆயுதங்கள் போதுமான அளவு இல்லை என்பதால் எதிரிகளை அழிக்காமல் விடமுடியாது. `மாற்று என்ன?’ எனச் சிந்தித்தபோதுதான் வாரிக்கையன் அணலியை இறக்கும் ஆலோசனையைச் சொன்னார். அவர் அதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முறியன் ஆசான் இருள்வேலமரத்தின் சிவப்புப் பிசினை எடுத்துவர தன் மாணவர்களை அனுப்பிவிட்டார். எதிரிகளின் இரண்டு பாசறைகளில் இருக்கும் எண்ணற்ற வீரர்களின் மீது முதல்கட்டத் தாக்குதலை இந்தப் பூச்சி இனங்கள் நடத்தட்டும். அதிலிருந்து தப்பி வருகிறவர்களை மட்டும் ஆயுதங்களால் தாக்கினால் போதும் என்று முடிவெடுக்கப்பட்டது.அதன்படி பாண்டிய, சோழப் பாசறைகளிலிருந்து தப்பி வருகிறவர்களைத் தாக்கப்போகும் விண்டன் தலைமையிலான வீரர்களுக்கு மிகக் குறைவான ஆயுதங்களே கொடுக்கப்பட்டன. இரண்டு பாசறைகளிலும் சுமார் இருபதாயிரம் வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் பூச்சியினங்களின் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்து இருளுக்குள் ஓடிவருகிறபோது வாளையும் ஈட்டியையும் அவர்களை நோக்கி மடக்கிப் பிடிப்பதே போதுமானது. அதற்கு ஏற்பவே ஆயுதங்கள் கொடுத்தனுப்பப்பட்டன.

அதேபோல சேரனின் படையை நோக்கி உதிரன் தலைமையிலான வீரர்கள் அனுப்பப்பட்டனர். பின்னிரவில் மேற்குத் திசையிலிருந்து தாக்குதல் தொடுத்து அவர்களை வெளியேற்றும் நிலையை உருவாக்கினால் கிழக்குத்திசையில் அழித்தொழிப்பு வேலையைச் செய்ய முடியும் எனக் கணித்து அதற்கு ஏற்ப ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன.

நடுவில் மூஞ்சல் நோக்கிச் சென்ற முடியன் தலைமையிலான குழுவுக்குத்தான் அனைத்து வகையான ஆயுதங்களும் தேவைப்பட்டன. மூவேந்தர்களைச் சுற்றி நிற்கும் சிறப்புப் படைகளையும் நீலனைச் சிறைப்பிடித்து நிற்கும் கவசப்படையையும் எதிர்கொள்வதற்கான முழுமையான அளவு ஆயுதங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. ஆனாலும் அவ்வளவு ஆயுதங்கள் இல்லை. இரவாதனின் வீரமரணம், அந்த இரவில் ஆயுதங்களே இல்லாமல்கூட போரிடும் வலிமையை ஒவ்வொரு பறம்புவீரனுக்கும் வழங்கியிருந்தது. எனவே, முதுவேலன் என்ன கொடுக்கிறானோ அதை வாங்கிக்கொண்டு வீரர்கள் புறப்பட்டனர்.

எதிரிகள் மூஞ்சலில் சேகரித்துவைத்திருந்த நஞ்சின் வகைகளைப் பற்றி அலவன் மூலம் அறிந்திருந்த முறியன் ஆசான், அதற்கான மாற்றை உருவாக்கியிருந்தார். இறுதிக்கட்டத் தாக்குதலில் எதிரிகள் அதைப் பயன்படுத்தக்கூடும் எனக் கருதிய அவர், மூஞ்சலைத் தாக்கப்போகும் முடியனின் படைக்கு மட்டும் அவற்றைக் கொடுத்தார். ஒரு கடலைச்செடியில் எண்ணற்ற கடலைகள் இருப்பதுபோல் கொத்துக்கொத்தாக அந்தக் கிழங்குகள் இருந்தன. ``போகும்போதே அந்தச் சிறுகிழங்கை ஆளுக்கு ஒன்றெடுத்து வாயில் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார்.

இதில் முதுவேலனையே வியக்கவைத்தவர்கள் திரையர்கள்தாம். ``இறங்கித் தாக்க பாரி அனுமதி அளித்ததே போதும்; எங்களுக்கு எந்த ஆயுதமும் தேவையில்லை’’ என்று சொல்லிப் புறப்பட்டான் காலம்பன். ஆனால், முதுவேலன், அவர்களை மறித்து ஒவ்வொரு வீரனுக்கும் கேடயம் ஒன்றும் நடுவகை வாள் ஒன்றும் கொடுத்தனுப்பினான்.

இவை தவிர ஆறுகுடியினர் தட்டியங்காட்டுப் பக்கமும் வெங்கல்நாட்டின் பக்கமும் மலையை விட்டுக் கீழிறங்கினர். வேந்தர்படையின் வீரர்கள் நிலப்பகுதியில் எங்கு குறுக்கிட்டாலும் வெட்டி வீழ்த்தப் புறப்பட்ட படை இது. அவர்கள், காட்டில் கிடைக்கும் அனைத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடியவர்கள்.

இவை நடந்துகொண்டிருக்கும்போதே செய்தி கேள்விப்பட்டு காரமலையின் உச்சியில் இருந்த அரிமான்கள் இரலிமேட்டுக்கு வந்தனர். இதுவரை அவர்களை இரலிமேட்டுக்கே வரக் கூடாது என்று சொல்லியிருந்தான் பாரி. ஆனால், அவசரம் கருதி கூவல்குடியினர் மூலம் உச்சிமலையில் இருந்த அணலிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டான் முடியன். அவர்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு விரைவாக அடர்குகைக்குள் இருக்கும் அணலிகளைப் பிடித்துக் கீழிறங்க முடியாது.

அந்த உத்தரவு மூலமே பேராபத்து உருவாகியுள்ளதை அரிமான்கள் உணர்ந்தனர். உடனடியாக அந்தக் குலத்தலைவனுக்குச் செய்தி சொல்லப்பட்டு, அவன் இரலிமேட்டுக்கு வந்துசேர்ந்தான்.

பறம்புவீரர்கள் எல்லோரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கீழிறங்கிய பிறகு அரிமான்குலத் தலைவன் வந்தான். கிடத்தப்பட்ட வீரர்களின் உடல்களைப் பார்த்துக் கொதிப்பேறிய நிலையில் ``எங்களைப் போர்க்களத்துக்கு அனுமதி’’ என்று பாரியின் கைகளைப் பிடித்து மன்றாடினான்.

``எந்நிலையிலும் நீங்கள் போர்க்களம் புகுவதை ஏற்க முடியாது’’ என்று உறுதியாக மறுத்தான் பாரி.

அரிமான்களோடு சேர்த்து பறம்பில் தஞ்சமடைந்த நான்கு குடிகளுக்கு, பாரி இறுதிவரை அனுமதியளிக்கவில்லை. மிகக் குறைந்த மனிதர்கள் மட்டுமே வாழும் அந்த அரிய குடிகள் இயற்கையின் ஆதிரகசியங்களைக் காத்துவருகிறார்கள். இந்தப் போர், மனிதர்களுக்கு இடையே நடக்கிறது. இதில் நிகழும் எந்தவொரு மரணமும் இயற்கைக்கு பாதிப்பை உருவாக்கிடாது. ஆனால், இந்த நான்கு குடிகளில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் பச்சைமலைத் தொடருக்கும் அதில் உள்ள உயிரினங்களுக்கும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்கிறவர்கள். எனவே, பாரி இறுதி வரை அனுமதி கொடுக்கவில்லை.

``அப்படியென்றால், இந்தப் போரில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா?’’ எனக் கேட்டான் அரிமான்குலத் தலைவன்.``நீங்கள் எடுத்துவந்த அணலிகள்தான் இந்தப் போரில் முக்கியப் பங்காற்றப்போகின்றன. அவற்றை நீங்களே எதிரிகளின் பாசறையைச் சுற்றிக் கீழிறக்கிவிட்டு வாருங்கள். அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கியமான பணியையும் உங்களுக்குக் கொடுக்கப்போகிறேன்’’ என்றான்.

``என்ன?’’ என்று கேட்டான் அரிமான்குலத் தலைவன்.

``நான் கீழிறங்கப்போகிறேன். நான் சென்ற பிறகு என் தோழன் கபிலனை அழைத்துச் சென்று பாதுகாத்துவைத்திருங்கள்’’ சொல்லி முடித்த வேகத்தில் அந்த இடம் விட்டு அகன்றான் பாரி. அரிமான்குலத் தலைவனோ, இந்த உரையாடலைச் சற்றுத் தொலைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கபிலரோ, பதிலேதும் சொல்வதற்கு எந்த இடமும் தரவில்லை பாரி.

குகை விட்டுக் கீழிறங்கிய வேகத்தில் அவனோடு சிறுபடை இணைந்தது. பாரிக்கான ஆறு வகை ஆயுதங்களையும் அந்தப் படை வீரர்கள் கைகளில் வைத்திருந்தனர். மூவேந்தர்களின் பாசறைத் தாக்குதலையும் மூஞ்சலில் நடக்கும் தாக்குதலையும் ஒருங்கிணைத்துச் செய்தியைப் பரிமாற, கூவல்குடி வீரர்கள் உடன் இருந்தனர். பாரி மலையை விட்டுக் கீழிறங்கும்போது, மற்ற அனைவரும் தங்களுக்கான இடத்தை அடைந்துவிட்டனர். முடியனின் ஈட்டி, உறுமன் கொடியைக் குத்தித் தூக்கிக்கொண்டிருந்தபோது பாரி நாகக்கரட்டிலிருந்து சமவெளியை வந்தடைந்தான்.

பாரி முற்றிலும் எதிர்பாராதது, கொட்டித் தீர்க்கும் பெருமழையை. மழையின் வேகம், நிலத்தை நடுக்கமுறச் செய்தது. மழை பறம்புவீரர்களின் வேகத்தைச் சற்று மட்டுப்படுத்தும் அதேநேரம், தாக்குதலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும், எதிரிகளுக்கு அச்சமூட்டும் இன்னோர் ஆயுதமாக அது மாறும் எனக் கணித்தபடியே முன்னகர்ந்தான். மணல்வெளியில் செவ்வெறும்புகள் சாரைசாரையாக ஊடறுப்பதுபோல இருள்வெளியில் பறம்பு வீரர்கள் கூட்டம் கூட்டமாய் முன்னேறிக் கொண்டிருந்தனர். பாரி முன்னகர்ந்து உள்ளே வந்துகொண்டிருந்தபோது விண்டனின் தாக்குதல் தொடங்கிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது. பாண்டியப்படையும் சோழப்படையும் நிலைகுலையத் தொடங்கிவிட்டதை உறுதிப் படுத்தினான். கூட்டைக் கலைத்தால் போதும் பாதி அழிவை அது தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும். வேந்தர்படை தன் அழிவைத் தானே நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அதற்கு உதவி செய்துகொண்டிருந்தான் விண்டன். உதிரன் சேரப்பாசறையைச் சுற்றி நிலைகொண்ட செய்தியும் வந்தது.

ஆனால் பாரி முற்றிலும் எதிர்பாராதது, மூஞ்சலை வேந்தர்கள் கைவிடுவதற்கு வெகுநேரம் முன்னரே நீலனை இடம் மாற்றிவிட்டார்கள் என்பது. முடியன் அனுப்பிய செய்தி பாரியை வந்தடைந்ததும் உடனடியாக மூஞ்சலை நோக்கி விரைந்தான். தப்பி வெளியேறிக்கொண்டிருக்கும் மூவேந்தர்களையும் தாக்கி அழிக்கப் பாய்ந்து சென்றுகொண்டிருந்தான் முடியன். அவன் அவ்வாறு செய்துவிடக் கூடாது என்பதற்குத்தான் விரைந்து வந்தான் பாரி. உறுமன்கொடியைக் கொன்றழித்த வேகத்தில் வேந்தர்களைக் கொன்றழிக்க விரைந்துகொண்டிருந்த முடியனைத் தடுத்து நிறுத்தினான் பாரி. ``நீலனை எந்த இடத்துக்குக் கொண்டுபோயுள்ளனர் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதன்பிறகு வேந்தர்களைத் தாக்கி அழிப்போம்’’ என்றான்.

பாரியின் சொல்லை ஏற்க முடியாமல் திணறியது முடியனின் மனம். ஆனாலும் நீலன் குறித்த சிந்தனை மனதை மாற்றியது. `மழை கொட்டும் இந்த இரவில் நீலனை எங்கு கொண்டுபோயிருப்பர்; எங்கே போய் அறிய முடியும்?’ எனச் சிந்தித்தபடி திகைத்து நின்றான் முடியன்.

சட்டென வேட்டூர்பழையனின் நினைவு வந்தது. அந்தக் கிழவன் இந்நேரம் இருந்திருந்தால் இந்த மண்ணின் ஒவ்வோர் அசைவையும் சொல்லிவிடுவார். மையூர்கிழாரைப் பற்றியும் வெங்கல்நாட்டைப் பற்றியும் அவரளவுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை. அவருக்கு அடுத்து இந்த நிலத்தை நன்கு அறிந்தவன் நீலன். அவனும் இல்லை என நினைத்தபோது, ஆறு ஊர்க்காரர்களின் நினைவுவந்தது. உடனே வீரர்கள் சிலரை அழைத்துக்கொண்டு அவ்விடம் விரைந்தான்.

முடியனுடன் இருந்த பெரும்பகுதி வீரர்களோடு பாரி மூவேந்தர்களைப் பின்தொடர்ந்தான். ``பறம்பின் அனைத்து குடிகளும் கீழிறங்கிவிட்டன. பாதுகாப்புக்கு எங்கே போவது என்று எனக்குப் புரியவில்லை’’ என்று கருங்கைவாணனிடம் மையூர்கிழார் புலம்பிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னால்தான் பாரி வந்துகொண்டிருந்தான். வெட்டி இறங்கும் மின்னல் ஒளியில் முன்னால் போகிறவர்களைப் பார்த்தபடி தாக்குதல் எதுவும் தொடுக்காமல் நிதானமாக வந்துகொண்டிருந்தான் பாரி.
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4443
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 109 - தொடர்ச்சி

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 15, 2018 9:46 am

தன்னுடன் இருக்கும் படைவீரர்களுக்கு உத்தரவு கொடுத்தால் போதும், அடுத்த மின்னல் ஒளிபாய்ச்சும்போது முன்னால் போகிற எவனும் உயிரோடு மிஞ்ச மாட்டான். ஆனாலும் நீலனைப் பற்றிய உறுதியான செய்தியைத் தெரிந்து கொள்ளாமல், `இவர்களைத் தாக்கினால் விளைவு கைமீறிப் போய்விட வாய்ப்புள்ளது’ என நினைத்தான். அந்தக் கணத்தில் அவனது மனம் தேக்கனை நினைத்தது. தனது கைக்கெட்டும் தொலைவில் மூவேந்தர்களும் அஞ்சி ஒடுங்கியபடி சென்றுகொண்டிருக்கிறார்கள். தாக்க முடிவெடுத்தால் ஒருவன்கூட தப்ப முடியாது. ஆனால், நீலன் என்ன ஆவான்; வேந்தர்கள் கொல்லப்பட்ட பிறகு நீலனை உயிரோடு மீட்க முடியுமா என்ற குழப்பத்தில் தாக்கும் முடிவைத் தள்ளிப்போட்டபடி நகர்ந்தான் பாரி. தான் எடுக்கும் இந்த முடிவு சரியானதா என்ற ஐயம், போர்க்களத்தில் முதன்முறையாகப் பாரிக்கு ஏற்பட்டது. பறம்பு தோன்றியதிலிருந்து இதுவரை நடந்திராத ஒன்று, இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பாரி உட்பட பறம்புவீரர்கள் அனைவரும் பறம்பின் எல்லையை விட்டு வெளியேறியுள்ளனர். புதிய நிலத்தில் கைக்கெட்டிய எதிரியை விட்டுப்பிடித்துக் கொண்டிருந்தனர்.

பாரியின் மனம் தேக்கனைத் தேடியது. தேக்கனால் எதிரியின் வலிமையைத் துல்லியமாகக் கணிக்க முடியும். அப்படிக் கணிக்க முடியாத நிலையில் எதிரிகளின் வலிமையின்மையைக் கண்டறிந்துவிடுவான். வலைக்குச் சிக்காதது வாய்க்குச் சிக்கும் என்பதில் அவன் எப்போதும் தெளிவாக இருப்பான். எந்த நிலையிலும் தேக்கனின் ஒற்றைச்சொல் குழப்பத்தைப் போக்கித் தெளிவை உருவாக்கும். அந்தக் கணம் தேக்கனின் குரலுக்காகப் பாரியின் மனம் ஏங்கி அடங்கியது.ஏக்கத்தினூடே தேக்கனின் சொல் என்னவாக இருந்திருக்கும் எனச் சிந்தித்தான். ``வேந்தர்களை அழிப்பதல்ல; நீலனை மீட்பதே முதற்பணி’’ என்றது ஆழ்மனதுக்குள் எதிரொலித்த தேக்கனின் சொல். எடுத்த முடிவில் துணிந்து நடந்தான் பாரி.

பாரி எந்தப் பக்கம் இறங்கியிருப்பான் என்பது தெரியாத குழப்பத்தில் மையூர்கிழார் திணறிக்கொண்டிருக்கும்போது, வேந்தர்களின் பிடரியில் மூச்சுக்காற்று படும் தொலைவில்தான் பின்தொடர்ந்துகொண்டிருந்தான் பாரி. மழையின் வேகம் சற்றே குறையத் தொடங்கியது. பாரி தனது பின்தொடர்தலில் இடைவெளியை அதிகப்படுத்திக்கொண்டான். நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் மேலும் குறைந்தது. இருள்நீங்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் செல்லும் வேந்தர்படையின் வேகமும் அதிகமானது. வேறு முடிவெடுக்க முடியாத நிலையில் பின்தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தான் பாரி.

மழை முழுமுற்றாக நின்றது. இருளின் அடர்த்தி மேலும் குறையத் தொடங்கியது. பின்னால், தொடர்ந்து வருவதை வேந்தர் படையினர் அறிய நேர்ந்தால் அச்சத்தில் உடனடியாகத் தாக்குதலில் ஈடுபடுவார்கள். தாக்குதல் தொடங்கிவிட்டால் எதிரிகளின் படை முற்றாக அழியும். ஆனால், நீலனை மீட்கும் முயற்சியில் ஆபத்து உருவாகும். எனவே, இடைவெளியை மேலும் அதிகப்படுத்தியபடி வந்தான் பாரி. முடியனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. மழை நின்று இருள் குறையத் தொடங்கியது.

இடைவெளியை நன்கு அதிகப்படுத்திய பாரி வேந்தர்படையினர் முன்னகர்ந்த திசையில் வந்து சேர்ந்தபோது, காட்டாறு ஒன்று குறிக்கிட்டு ஓடிக்கொண்டிருந்தது. எதிரிகள் காட்டாற்றைக் கடந்து அக்கரையில் ஏறிக்கொண்டிருந்தனர். அதிர்ந்தான் பாரி. இந்த இடத்தில் இப்படியோர் ஆறு ஓடுவது அவனுக்குத் தெரியாது. மலை விட்டு இறங்கும் ஆறுகள் சமவெளியில் இவ்வளவு உள்வாங்கிய நிலத்தில் எவ்விடம் ஓடுகின்றன என்பது பறம்புவீரர்கள் யாருக்கும் தெரியாது. எதிர்த்திசையைப் பார்த்தபடி அதிர்ச்சியுற்று நின்றான் பாரி. இடைவெளியை அதிகப்படுத்தியது, வேந்தர்படை முழுமுற்றாக ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வசதியாகிவிட்டது.

கைநழுவிவிட்டதோ என்று மனம் பதைத்தது. வானில் ஒளி கசிந்து பரவிக்கொண்டிருந்தது. அப்போதுதான் முடியன் வந்து சேர்ந்தான். ``நேற்றிரவு மழை தொடங்குவதற்குச் சற்று முன்பே கொட்டடியில் நின்றிருந்த யானைகளைக் காட்டாற்றுக்கு அப்பால் இருக்கும் கோட்டைக் காவலுக்கு அனுப்ப உத்தரவு வந்ததாம். எனவே, ஆற்றுக்கு அப்பால் இருக்கும் கோட்டையில்தான் நீலனை வைத்திருப்பார்கள் என்று காராளி சொன்னான்’’ என்றான் முடியன்.

அடுத்து என்ன செய்யலாம் என்று பாரி சிந்திக்கத் தொடங்கும்முன் முடியன் சொன்னான், ``தந்தமுத்தத்துக்காரர்களுக்குச் செய்தி அனுப்பிவிட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள்.’’

``சரியான முடிவு’’ என்றான் பாரி.

எதிரிகள் ஆற்றைக் கடந்துவிட்டனர் என்பது முடியனுக்கும் அதிர்ச்சியை உருவாக்கியது. ஆனால், பாரியைவிட சரியான முடிவை யாரும் எடுக்க முடியாது என அவனுக்குத் தெரியும். எனவே, பாரியின் அடுத்த உத்தரவை எதிர்பார்த்தான்.

``கொஞ்சம் பொறு. பொழுது நன்கு விடியட்டும்’’ என்றான் பாரி.

பாசறைகளிலிருந்து அணலிகளின் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்தவர்கள், விண்டன், உதிரன் ஆகியோரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அவற்றிலிருந்தும் தப்பிப்பிழைத்தவர்கள் நிலமெங்கும் சுற்றித்திரியும் பறம்பின் இதர குடிகளிடம் சிக்கி மாண்டனர். அதிலும் தப்பியவர்கள் வெகுசிலரே. அவர்கள் கிழக்குப்புறமாக நகர்ந்து ஆற்றைக் கடந்து அக்கரை ஏறினர். வேந்தர்படையினர், தங்களின் மூன்று பாசறைகளிலிருந்தும் தப்பிவருகிறவர்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், மழை நின்றதும் நிலமெங்குமிருந்து மேலெழுந்தது கதறல்களின் பேரோசை.

பகலின் நான்காம் நாழிகை முடியும்போது ஒளியால் நிரம்பியிருந்தது நிலம். செவ்வரிமேட்டில் இருந்த வேந்தர்கள், எதிர்ப்புறத்தில் காட்டாற்றுக்கு அப்பால் ஆற்றைக் கடக்க முடியாமல் திணறியபடி நிற்கும் பறம்புப்படையை முழுமையாகப் பார்த்தனர். இரவு முழுவதும் நடந்த தாக்குதலால் அச்சம் உறைந்திருந்தது. ஆனால் பகலின் ஒளி, அச்சத்தை நீக்கத் தொடங்கியது.

மூன்று பாசறைகளில் இருந்த பல்லாயிரம் பேர், கொன்றழிகப்பட்டுவிட்டனர். மிஞ்சி இக்கரைக்கு வந்து சேர்ந்துள்ளவர்கள் சில ஆயிரம் பேர் மட்டும்தான். ஆனால், பறம்புவீரர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் நின்றது நம்பிக்கையை உருவாக்கியது.மலைமக்கள் ஆற்றினுள் கால் வைக்க அஞ்சுவார்கள் என்பதைக் கண்ணுக்கு முன்னால் பார்த்தபடி இருந்த கருங்கைவாணன், மையூர் கிழாரைப் பாராட்டினான். பேரழிவிலிருந்து தளபதிகள் மீண்டுள்ளனர். செவ்வரிமேட்டில் இருக்கும் வேந்தர்படை வீரர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தைத் தாண்டாது. ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட படை, இறுதியில் இவ்வளவுதான் மிஞ்சியுள்ளது. ஆனாலும் மையூர்கிழாரும் கருங்கைவாணனும் நம்பிக்கையோடு போய் வேந்தர்களிடம் சொன்னார்கள்.

``எதிரிகள் ஆற்றைக் கடக்க வழியின்றி அக்கரையில் நிற்கிறார்கள். அது முக்கியமல்ல; அக்கரையில் நிற்பவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். சில நூறு பேர்தான் இருப்பார்கள். எனவே, இதற்குமேல் நாம் பின்வாங்க வேண்டியதில்லை. நாம் நல்ல மேட்டுநிலத்தில் இருக்கிறோம். அவர்கள் ஆற்றைக் கடக்கும்போது இங்கிருந்து தாக்கினால் ஒருவனும் உயிர்தப்ப முடியாது’’ என்றனர்.

இரவெல்லாம் பிழைத்தோடிவந்த அச்சம் எளிதில் மனம் விட்டு அகலவில்லை. ஆனாலும் ஆற்றைத் தாண்ட முடியாமல் தேங்கி நிற்கும் சிறு கூட்டத்தைப் பார்த்ததும் இயல்பாக மனதுக்குள் நம்பிக்கை உருவானது. முதன்முறையாகப் பறம்புப்படை நிலப்பரப்பின் கீழ்நிலையிலும், வேந்தர்படை நிலப்பரப்பில் மேல்நிலையிலும் இருந்தனர்.

`எப்படியும் அவர்கள் நீலனைக் காப்பாற்ற ஆற்றைக் கடக்க முயல்வர். அது அவர்களை முழுமுற்றாக அழிக்கும் வாய்ப்பை நமக்கு வழங்கும். எனவே, இதைத் தவறவிடக் கூடாது’ என குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது. ``நம் படையணிகளை ஒழுங்குபடுத்திக்கொள்’’ என்றார்.

முதல் நாள் இரவு நடந்த பேரழிவிலிருந்து மறுநாள் காலை மீண்டு மேலேறியது வேந்தர்படை. பறம்பின் படை இவ்வளவு சிறியது என்பதை வேந்தர்படையின் ஒவ்வொரு வீரனும் முழுமையாகப் பார்த்தான். பலிவாங்கும் உணர்வும், சிறுத்திருக்கும் எதிரிகளின் கூட்டமும் அவர்களின் நம்பிக்கையை மேலெழுப்பின. இரவெல்லாம் தாக்கி அழிக்கப்பட்டதனால் உருவான வெறி அவர்களை மூர்க்கம் கொள்ளவைத்தது. கருங்கைவாணன், உத்திகளை வகுத்தான்.

ஆற்றின் மேற்குத்திசையில் அப்படியே நின்றிருந்தான் பாரி. நிலமெங்கும் இருந்த பறம்புவீரர்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு வந்துசேர்ந்தனர். இருள்வேட்டை முடிவுற்றது. பகலின் பாய்ச்சலுக்காகப் பாரியின் உத்தரவை எதிர்பார்த்து நின்றிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு, ``நெட்டீட்டிகளை வீசச் சொல்’’ என்றான் பாரி.

சொல்லி முடிக்கும்போது பறம்பின் ஈட்டிகள் ஆற்றுநீருக்குள் எதிர்க்கரை வரை சரசரவெனக் குத்தி இறங்கின. வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று வரிசைகளாக போதிய இடைவெளியோடு ஈட்டிகள் எறியப்பட்டன. ஈட்டிகள் குத்தி நிற்பதை வைத்து நீரின் ஆழத்தைக் கணித்தனர். எந்த இடத்தில் பள்ளம் அதிகம் என்பதை அறிந்து, அதற்கு முன்னும் பின்னுமாக சில ஈட்டிகளை எறிந்து ஆழமற்ற பகுதியையும் கண்டுகொண்டனர். ஈட்டிகள் இழுபடும் தன்மைகொண்டு நீரின் வேகம் அறிந்தனர்.

அடுத்து உள்ளிறங்குவதற்குப் பாரி உத்தரவிடுவான் என எதிர்பார்த்து ஆற்றின் அருகில் போய் நின்றான் உதிரன். ஆனால், பாரி அதற்கு ஆயத்தமாக இல்லை. நீரில் இறங்கி அக்கரையை அடைந்துவிடலாம். ஆனால், எதிரிகள் மேட்டின்மீது நிற்கிறார்கள். உயரத்திலிருந்து அவர்கள் தாக்குதல் தொடுத்தால் பறம்பின் பக்கம் இழப்புகள் அதிகமாகும். எனவே, மாற்றுவழியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய கணமே, `நேரம் அதிகமானால் நீலனை மீட்கும் வாய்ப்பு குறைந்துவிடுமோ!’ என்றும் தோன்றியது. வீரர்கள் அனைவரும், பாரி வந்துவிட்டதால் மீட்டே தீருவான் என்ற நம்பிக்கையோடு நின்றனர். அவர்களுக்கு எதிரில் ஓடும் ஆறோ, உயர்ந்து நிற்கும் மேடோ ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனால், பாரிக்கு எல்லாம் பொருட்டாக இருந்தன. எந்த வீரனையும் இழந்துவிடக் கூடாது என்ற கவனமும் நீலன் மீதான சிந்தனையுமாக மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டிருந்தான்.

அப்போது இடதுபுறம் வெகுதொலைவிலிருந்து கூவல்குடியின் ஓசை கேட்டது. என்னவென்று பார்த்தனர். தந்தமுத்தத்துக்காரர்கள் நான்கு யானைகளோடு ஆற்றங்கரைக்கு வந்து நின்றனர். உள்ளே இறங்குவதற்கான அனுமதியைக் கேட்டது அந்த ஓசை. ``ஆற்றுக்குள் இறங்கு. ஆனால், அக்கரையில் ஏறாதே’’ என்றது பாரியின் பதில். குறிப்போசையாக இங்கிருந்து எழுப்பப் பட்டது.

இது நடந்துகொண்டிருந்தபோது ஆற்றின் வலதுபுறத்தைக் கைகாட்டி ``அங்கே பாருங்கள்’’ என்றான் முடியன்.

ஒரு காதத் தொலைவில் ஒரு கூட்டம் ஆற்றுக்குள் இறங்கி அக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கியது. உற்றுப்பார்த்துவிட்டு முடியன் சொன்னான், ``திரையர்கள் இறங்கிவிட்டார்கள்.’’

முடியன், உதிரன், விண்டன் மூவரும் பாரியிடம் சொன்னார்கள், ``இனியும் நாம் காலம் தாழ்த்த வேண்டாம். ஆற்றைக் கடந்து மேலேறும்போது நம்மில் சிலர் சாகவேண்டியிருக்கும். ஆனால், எதிரிகளால் வலுவான தாக்குதலை நடத்திவிட முடியாது. நம்முடைய வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது. எனவே, ஆற்றைக் கடக்க உத்தரவு தாருங்கள்’’ என்றனர்.

பாரியிடமிருந்து பதிலேதுமில்லை. `மிகச்சில வீரர்களிடம் மட்டுமே குதிரை இருக்கிறது. மேட்டின் மீதிருந்து வீசப்படும் ஆயுதத்தின் வேகம் வலிமையானது. எதிரிகள், நாம் ஆற்றில் இறங்கியவுடன் தாக்குதலைத் தொடங்கிவிடுவர். சில இடங்களில் கழுத்து வரை ஆழம் இருக்கும் பகுதியை நாம் கடந்தாக வேண்டும். அப்போது நம்மீது நடக்கும் தாக்குதலால் இழப்பு மிக அதிகமாகும்’ என்று சிந்தித்தபடி வேறு வழி பற்றி எண்ணங்களைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

வேந்தர்படையில் செவ்வரிமேட்டின்மேல் நின்றிருந்த தளபதி உசந்தன் இடதுபுறமாக ஆற்றை நோக்கிக் கைகாட்டி ``சிலர் ஆற்றைக் கடக்கிறார்கள்’’ என்றான்.

எல்லோரின் பார்வையும் அங்கே போனது. ஐம்பது, அறுபது பேர்கொண்ட சிறு படை ஒன்று ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. ``ஒருவன்கூட நமது கரையில் கால் வைக்கக் கூடாது. வெட்டி வீசுங்கள்’’ என்றான் மையூர்கிழார்.

வீரர்களை அழைத்துக்கொண்டு உசந்தன் செல்ல ஆயத்தமானபோது, ``நானே போகிறேன்’’ எனச் சொல்லி, தனது படையோடு கருங்கைவாணன் விரைந்தான்.

எதிரிப்படைகளில் இருநூறு பேர்கொண்ட படைப்பிரிவு திரையர்களை நோக்கிப் போவதைப் பாரி உள்ளிட்ட அனைவரும் மேற்குக் கரையிலிருந்து பார்த்தபடி நின்றிருந்தனர். முடியன் மீண்டும் சொன்னான், ``காலம் தாழ்த்த வேண்டாம். உள்ளிறங்குவோம்.’’

பாரியின் கண்கள் ஆற்றுநீரையே பார்த்துக்கொண்டிருந்தன. கரையோரத்தில் நீரின் எதிர்த்திசையில் சிற்றலைகள் எழும்பி அமுங்கின. என்ன இது என்று கவனித்தபோது காற்று, நீரின் மேல்தளத்தை சீவியபடி வீசியது.

அதன் திசையையும் தன்மையையும் உணர்ந்த பாரி `இது காற்றல்ல; காற்றி. இந்நேரம் நம்மில் யாராவது குளவன்திட்டில் இருந்திருக்க வேண்டும்’ என்று எண்ணிய கணத்தில் தலைக்குமேல் எண்ணிலடங்காத சுருளம்புகள் பறந்துகொண்டிருந்தன. எதிர்த்திசையில் செவ்வரிமேட்டின் உச்சியில் நின்றிருந்த வேந்தர்படையின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான சுருளம்புகள் குத்தி இறங்கின.

அதிர்ந்து திரும்பினான் பாரி. வெகுதொலைவில் சின்னதாய்த் தெரிந்தது குளவன்திட்டு. இகுளிக்கிழவன் உச்சியில் நின்று சிரிப்பதுபோல அவன் மனக்கண்ணில் தோன்றியது.

``எப்படி இவ்வளவு தொலைவில்?’’ என்று உதிரன் கேட்டபோது முடியன் சொன்னான், ``அவர்கள் ஐந்து வயதிலேயே குறி தவறும் அம்புகளை எய்து முடித்துவிடுவர். இது காற்றி. குளவன்திட்டில் எவ்விடமிருந்து வீசினாலும் அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்’’ என்று சொல்லி முடிக்கும் முன் பாரியின் உறுமல் காற்றையும் உலுக்கியது.

இந்தச் சொல்லுக்காகக் காத்திருந்த பறம்புப் படை, காட்டாற்றுக்குள் பாய்ந்து இறங்கியது. வேந்தர்படையினர் சுருளம்புகளால் தாக்கப்பட்டு பின்னோக்கி ஓடத் தொடங்கியபோது, பறம்புப்படை ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. இடதுமுனையில் நான்கு யானைகளின் மீது அமர்ந்தபடி தந்தமுத்தத்துக்காரர்கள் அக்கரையில் ஏறியபோது வலதுகோடியில் மேலேறிய திரையர்களைக் கருங்கைவாணன் படை தாக்கத் தொடங்கியது.

பல்லாயிரம் சுருளம்புகள் இப்படி வந்து இறங்கும் என யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. தட்டியங்காட்டில் பறம்புவீரர்கள் யானைப்போர் நடத்தாததற்குக் கானவர் செய்த கைம்மாறு இது. சுருளம்புகள் காற்றியால் தூக்கிவரப்பட்டதால் அவற்றின் வேகம் பல மடங்கு இருந்தது. செவ்வரிமேட்டின் முன்பகுதிச் சரிவில் நிறுத்தப்பட்டிருந்த வேந்தர்படை வீரர்கள் சுருளம்புகளுக்காகவே அணிவகுத்து நிறுத்தப்பட்டதுபோல் நின்றிருந்தனர். நினைத்துப்பார்க்க முடியாத இந்தத் தாக்குதலால் வேந்தர்படை சிதறியது.

காற்றியின் தாக்குதலுக்குச் சற்று முன்னதாகக் கருங்கைவாணன், இடதுபுறம் ஆற்றில் இறங்கிய எதிரிகளைக் கொன்றழிக்கப் போய்ச்சேர்ந்தான். கரையேறும் மனிதர்களின் உருவ அமைப்பைப் பார்த்ததும் முன்னால் விரைந்து சென்ற வீரர்களின் குதிரைகள் தேங்கத் தொடங்கின. இந்நிலையில்தான் சுருளம்புகள் படையின் மீது இறங்கின. தாக்கப்பட்ட வீரர்களின் பெருங்கூச்சல் காதத்தொலைவுக்கு அப்பால் இருக்கும் கருங்கைவாணனைத் திகைக்கவைத்தது. காற்றில் பறந்துவந்த அம்புகளை அவன் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் கண்களின் முன்னால் அவனுடைய படைவீரர்கள் தூக்கி வீசப்பட்டுக்கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் இருக்கும் வரை பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. மேலேறிய ஒவ்வொருவனும் மூன்று ஆள் உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். அவர்களின் அடியில் குதிரைகள் மடங்கி விழுந்தன. முட்டைகளின் மீது பாறை விழுவதைப்போல அவர்களின் மீது திரையர்களின் தாக்குதல் இருந்தது. இருநூறு பேர்கொண்ட வேந்தர்படை கண நேரத்துக்குள் உருக்குலைந்தது. என்ன நடக்கிறது என்று கருங்கைவாணன் நிதானிப்பதற்குள் அவனது குதிரையை அடித்து வீழ்த்தினான் ஒருவன். அவனது முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என எண்ணிக்கொண்டிருக்கும்போது மண்ணில் உருண்டுகொண்டிருந்தான் கருங்கைவாணன்.

விழுந்த வேகத்தில் விரைந்து எழுந்தவன், இடுப்பில் இருந்த வாளை எடுக்கப்போகும்போது ஓடிவந்தவன் இடது தோள்பட்டையோடு முட்டித் தூக்கி எறிந்தான். அவன் முட்டிய வேகத்தில் தோள்பட்டை எலும்பு நொறுங்கியது. முட்டியவன் திரையர் குலத்தலைவன் காலம்பன் என்று கருங்கைவாணனின் மனம் உணர்ந்தபோது, அவனை நெஞ்செலும்போடு அடித்து வீழ்த்தினான் காலம்பன். யானையின் தாக்குதலுக்கு இணையானதாக இருந்தது அந்த அடி. கீழே விழுந்தவனின் மூக்கிலிருந்து குருதி கொப்புளித்தது. காலம்பன், விழுந்து கிடந்தவனின் அருகில் வந்தான். தன் குலம் அழித்தவனைக் காணும்போது உருவாகும் வெறி கட்டுக் கடங்காததாக இருந்தது. அப்போது காலம்பன் எழுப்பிய உக்கிரமேறிய ஓசை செவ்வரிமேட்டில் இருந்த பாரிக்குக் கேட்டது.

ஆற்றிலிருந்து மேடேறிக்கொண்டிருந்த பாரி, என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்தான். வேந்தர்படையினரிடமிருந்து திரையர்கள் எதையோ பிடுங்கி எறிவது தெரிந்தது. எதிரிகளின் ஆயுதங்களைப் பிடுங்கி எறிகிறார்களோ என்று ஒரு கணம் தோன்றியது. அவை ஆயுதங்கள் அல்ல; பிய்த்து எறியப்படும் மனித உறுப்புகள்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்


வேள்பாரி வாசகர்களை ஒன்றிணைக்கவும், இத்தொடர் பற்றி உரையாடவும் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தாண்டி வேள்பாரியின் சுவாரஸ்யங்களை அதன் மூலம் நீட்டிக்க வேண்டுமென்பதே நம் எண்ணம். வாசகர்கள் கீழ்க்காணும் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைவதன் மூலமும் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் மூலமும் வேள்பாரியுடன் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்.

www.facebook.com/groups/500337410392609/

www.twitter.com/Vikatanvelpari
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4443
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1024

View user profile

Back to top Go down

Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by கண்ணன் on Thu Nov 15, 2018 6:43 pm

முடிவு நெருங்க நெருங்க மனம் படபடக்கிறது
avatar
கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 192
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை