புதிய பதிவுகள்
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 14:41

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 14:34

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 14:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:14

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 14:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:00

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 13:50

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 13:41

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 13:39

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:28

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 0:19

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 23:48

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 23:43

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 23:28

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 23:24

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 23:22

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 23:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:07

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:31

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 13:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 0:53

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 23:01

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:24

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:23

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:22

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:21

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:06

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:05

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:03

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 21:55

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 17 Mar 2024 - 20:05

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:41

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:19

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:18

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
37 Posts - 57%
heezulia
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
286 Posts - 36%
ayyasamy ram
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
263 Posts - 33%
Dr.S.Soundarapandian
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
3 Posts - 0%
prajai
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
3 Posts - 0%
M. Priya
சி[ரி]த்ராலயா Poll_c10சி[ரி]த்ராலயா Poll_m10சி[ரி]த்ராலயா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி[ரி]த்ராலயா


   
   

Page 1 of 2 1, 2  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu 12 Apr 2018 - 14:27

12.04.2018

சித்ராலயா

1960, 1970களில் அட்டகாசமான சினிமாக்களை நமக்கு கொடுத்து அசத்திய நிறுவனங்கள்ல ஒண்ணு சித்ராலயா. அதை அவ்வளவு ஈஸியா மறந்துற முடியுமா? குடும்ப கதைகள்தான் அப்போல்லாம் ஜனங்களுக்கு புடிச்சுட்டு இருந்துச்சு. அதை மாத்தி, காதல் கதைகளும் எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி செஞ்சவர் ஸ்ரீதர்.

சித்ராலயான்னா என்னன்னு தெரியுமா, தெரியுமா?


ஸ்ரீதரின் முக்கோண காதல் கதைகள்

கெக்கே.......................பிக்கேன்னு சிரிக்க வைக்கும்      சித்ராயலா கோபுவின் சிரிப்பு சிரிப்பான வசனங்கள்

வின்சென்ட்டின் கேமரா எடுத்த குளுகுளு காட்சிகள்

ஆனாரூனா என்ற திருச்சி அருணாசலமாமே, இவரோட கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள்

CV ராஜேந்திரனின் துடிப்பான காட்சிகள்

இவங்க அஞ்சு பேரும் ஒண்...............ணா சேர்ந்து, அவங்கவங்க திறமைகளை திரட்டி உருவாக்கினதுதான் இந்த சித்ராலயா நிறுவனம்.

திடகாத்திரமான ஒரு வாலிபன் படகில் துடுப்புடன் நிற்கிறான். அவன் படகை ஓட்டுவதை ரசிக்கிற ஒரு பெண் அந்த படகில் உக்காந்திருக்கா. இதுதான் சித்ராலயா நிறுவனத்தின் அழகான சின்னம். வாழ்க்கை ரசித்து வாழக்கூடிய பயணம் என்பதை காட்டுதுபோல அந்த படகு. படத்தை பார்க்க போகும் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட்னு எல்லா இடங்களிலேயும் கொடி கட்டி பறந்து, வெற்றி கண்ட நிறுவனம் சித்ராலயா.

சித்ராலயா நிறுவனத்தின் பேரையே தன் பெயருடன் தாங்கி கொண்டிருக்கார் கோபு. கேமராவுக்கு முன்னாலயும், பின்னாலயும் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவர் சொல்ல கேட்க ஜா..................லியா இருக்குமாம். சிரிப்பு நடிகர்களுக்கு எழுதின வசனங்களை எழுதின அனுபவங்களை பற்றியும் அவர் சொன்னா, நேரம் போறதே தெரியாதாம்.

“அவர் திரைப்பட நகைச்சுவை கொஞ்சம்தான். அவர்ட்ட நேர பேசினாத்தான், அவருடைய காமெடியை நல்லா அனுபவிச்சு சிரிக்கலாம்”னு கமல் சொன்னார்.

இனிமே பாருங்க, அவருடைய அனுபவங்களை தொடர்ந்து எழுதுறேன். விழுந்து விழுந்து சிரிக்க ரெடியா இருங்க. சிரிப்பு வரலேன்னா நான் பொறுப்பில்ல, ஆ...................மா, சொல்லுபுட்டேன்.


- தொடரும்

- தி இந்து

Heezulia 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 12 Apr 2018 - 14:33

வரவேற்கிறோம் புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu 26 Apr 2018 - 13:47

26.04.2018

சி[ரி]த்ராலயா 2

கோபு 1932ல பொறந்தது, வளந்தது, படிச்சது எல்லாமே செங்கல்பட்டுல. சொந்த பேர் சடகோபன். சின்ன வயசில அவரை வீட்ல கூப்ட்ட பேர் ‘குட்டி சட’. 

‘கோபன்’ னா குட்டின்னு அர்த்தமோ? அதனாலதான் ‘குட்டி சட’ ன்னு கூப்ட்டாங்களோ?
காஞ்சிபுரத்தில ஒரு நாள் காலை நேரம். வரதராஜ பெருமாள் கோயில் யானை ஜா...............லியா நடந்து வந்துட்டு இருந்துச்சு. டக்குன்னு ஒரு வீட்டு முன்னால போய் நின்னுச்சு. அந்த வீட்ல இருந்து, 18 வயசுள்ள இளைஞன் வந்து யானை மேல ஏறி உக்காந்தான். பீப்பீ, டும்டும்ல்லாம் ஊத, கொட்ட, யானை காஞ்சிபுரத்தின் முக்கிய தெருக்களை சுத்தி ஊர்வலமா போச்சு. ஆனா யானை மேல உக்காந்திருந்த இளைஞன் முகத்ல சந்தோஷத்தையே காணோம். 

என்ன காரணம்? 

அஞ்சாப்பு வரைக்கும் ஒண்.............................ணா படிச்ச ஃப்ரெண்டையும், பிடிச்ச ஊரு செங்கல்பட்டு, அதையும் பிரிஞ்சு வந்துட்டோமேங்க்ற வருத்தம். அவன் எதுக்கு செங்கல்பட்டையும், ஃப்ரெண்டையும் பிரிஞ்சு காஞ்சிபுரத்துக்கு வந்தா........................ன்? செங்கல்பட்டில இருந்த இளைஞனோட அம்மா அப்பா, காஞ்சிபுரத்ல இருந்த அவனோட அத்தைக்கு அவனை தத்து குடுத்துட்டாங்களாம். அந்த அத்தை இளைஞனை தத்து எடுத்த சம்பவத்தைதான் அப்படி யானை மேல கொண்டாடியிருக்காங்க. 

இப்ப தெரிஞ்சிருக்குமே, அந்த இளைஞன் கோபு, செங்கல்பட்டு ஃப்ரெண்டு ஸ்ரீதர். 

கோபுவோட சொந்த பேர் சடகோபன்னு சொன்னேன்ல. சரோஜாதேவி அவரை செல்லமா, கொஞ்சி கொஞ்சி ‘ஜடை கோபால்’னு கூப்டுவாராம். கோபு, வீனஸ் திரைப்பட நிறுவனத்ல KS கோபாலகிருஷ்ணன் வேல செஞ்சுட்டு இருந்தார். அவர் கோபுவை “ஆச்சாரி”னு கூப்டுவார். இந்த பேரையே சினிமா யூனிட்ல கூப்ட ஆரம்பிச்சுட்டாங்க. 

ஸ்ரீதர், சடகோபன்னுக்கு ‘கோபு’ னு ஒரு பேர் கொடுத்து, காதலிக்க நேரமில்லை படத்ல முதல் முதலா வசனகர்த்தாவாக்கினார். தாம்பேர் கூடவே அவர் பேரையும் சேர்த்து, ‘கதை – வசனம் ஸ்ரீதர் – கோபு’ ன்னு படத்தோட டைட்டில்ல போட்டார். ஸ்ரீதரின் சித்ராலயாவுக்கு எல்லாமே கோபுதான். வலதுகைன்னு வச்சுக்கோங்களேன். அதனால பிற்காலத்தில கோபுவை ‘சித்ராலயா கோபு’ ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 

சித்ராலயா நிறுவனத்தை ஸ்ரீதர், கோபு, வின்சென்ட், அருணாசலம், CV ராஜேந்திரன் இவங்கல்லாம் சேந்து உருவாக்கினாங்கன்னு போன தடவை சொன்னேன்ல. ஆனா கோபுகூட மட்டும்தான் ‘சித்ராலயா’ங்கற பேர் ஒட்டிகிச்சு. காமெடி இவர் வாயிலேயிருந்து சர்.................ரளமா வருமாம். அதனாலதான் இவர் நிறைய பேருக்கு ‘சிரித்ராலயா கோபு’. 

ஒம்பதாப்பு படிக்கிற வரைக்கும் கோபுவுக்கு அழகான ஹேர்ஸ்டைல். என்னான்னு கேக்குறீங்களா? கு...................டு.......................மி, குடுமி. க்ராப் வச்சுகிறதா வீட்ல சொல்லி பாத்தாரு. கூடாதுன்னுட்டாங்க. கொஞ்ச வருஷம் கழிச்சு, க்ராப் வச்சுகிட்டார்னு சொல்லுங்க. போகப்போக நிறைய  சாதனைகள் செஞ்சார்.  

க்ராப் வச்சுகிட்டது சாதனையான்னு கேக்காதீங்க. சினிமாவில சாதனைகள் செஞ்சார்னு சொல்ல வந்தேன். 

ஓஹோ......................... அப்படியா? சரி சொல்லு. 

அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியுமோ? ஒரு சூழ்நிலையில மறுபடியும் குடுமி வைக்க வேண்டிய நெலம. 

சரி, எதுக்கு, ஏன், வொய்யி, எந்துக்கு? 

வாஷிங்டனில் திருமணம். சாவி எழுதின கதை. கோபு திரைக்கதை, வசனம் எழுதி, டைரடக் செஞ்சது மட்டுமில்லாம, அதுல நடிக்கவும் செஞ்சார். என்ன ரோல்லங்க்றீங்க? அம்மாஞ்சி சாஸ்த்திரி வேஷத்தில. அப்போ குடுமி வச்சுதானே ஆகணும். 

‘வாஷிங்கடனில் திருமணம்’ கதை அப்போ ஆனந்த விகடன்ல 11 வாரம் வந்த பிரபல காமெடி சீரியல். TVலயும் போட்டாங்களாமே. 

உங்களுக்கு தெரியுமா? எனக்கு தெரியாது. 

கதையில அமெரிக்கா ஒயிட் ஹவுஸ் முன்னால ஷூட்டிங். அங்க ஷூட்டிங்க்கு வந்தவங்க நின்னு பேசிகிட்டு இருக்காங்க. அப்போ அங்க உள்ள வெள்ளைக்கார பொம்பளைங்க, கோபுவோட குடுமியை தொட்டு தொட்டு பாத்துட்டு போனாங்களாம். குடுமியை பார்த்து அவங்களுக்கு ஆச்சரியமாத்தானே இருக்கும். 

“ஒய் ஆர் யூ வேரிங் திஸ்” ன்னு ஒரு வெள்ளைக்கார பொம்பள கேட்டாளாம். 

“திஸ் இஸ் அவர் நேச்சுரல் ஹெல்மெட்”னு கோபு சொன்னார். ஷூட்டிங்ல  இருந்தவங்க சிரிச்சாங்க. 

கோபுவின் அம்மா செல்லம்மாவுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்த்தியாம். இந்த உணர்வைத்தான் கோபுவுக்கு ஊட்டி......................... ஊட்டி வளர்த்தார். 

அப்போ சாப்பாடு போடலியா? 

அட நீங்க ஒண்ணு. அது இல்லாமயா. ரெண்டையும்தான் ஊட்டினார். அதனாலதான் கோபுவுக்கும் அம்மாவோட காமெடி சென்ஸ் அவர்கூட ஒட்டிகிச்சு. கோபுவோட இன்சஸ்ப்பிரேஷனே அவங்க அம்மாவும், என்.எஸ்.கே.யும் தான். சகுந்தலை படத்ல மீன் பிடிக்கிறவங்களா என்.எஸ்.கே.வும் துரைராஜும் நடிப்பாங்களே, அந்த காமெடி வசனங்களை அப்படியே........................ கோபு சொல்லுவாராம். 

கோபுவின் அம்மா இருக்கிற இடம் சிரிப்பும் கும்மாளமுமா இருக்குமாம். அம்மா ஏதாவது ஒரு காமெடி சொல்லுவாங்க. எல்லாரும் ‘கொல்’லுன்னு  சிரிப்பாங்க. ஆனா அங்க உக்காந்திருந்தவங்கள்ல ஒருத்தர பத்திதான் அம்மா சொன்னாங்கன்னு அந்த நபருக்கே தெரியாதாம். அவங்களும் சேந்து சிரிப்பாங்களாம். என்ன வேடிக்கை பாருங்க. 

அம்மா செல்லாம்மாவின் அதிரடி ஜோக்ஸ் இப்படி செங்கல்பட்டுல பிரபலம். அங்க தஸரா வரும்போது, வாத்திய இசை கச்சேரி நடக்கும். 1945ல நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் கச்சேரி நடந்துச்சு. அதை பாத்துட்டு வந்தாங்க அம்மா. அப்பா துரைசாமி மனைவிட்ட கேட்டாராம்,

“செல்லம்மா, நேத்து ராஜரத்தினம் நாதஸ்வரம் கேட்டியோ?”

அதுக்கு செல்லம்மா கூ...................லா சொன்ன பதில் என்ன தெரியுமோ?

“நாதஸ்வரத்த கேக்கல. அதுல அவர் தொங்க விட்டிருந்தாரே தங்க காசுகள், அதுல ஒண்ணத்தான் கேட்டேன். குடுக்க மாட்டேன்னுட்டார்.”

அப்பா மூஞ்சில அசடு வழிஞ்சது அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சுது. 

இத வச்சு சாந்தி நிலையம் படத்தில நாகேஷ் காமெடி ஸீன்ல கோபு ஒரு வசனத்தை எழுதினார். 

எத வச்சு எழுதினார், அசடு வழிஞ்சத வச்சா?

அதில்லீங்க, அம்மா செல்லம்மா சொன்னத வச்சு. 

சாந்தி நிலையம் படத்ல நாகேஷின் நண்பர் கேப்பார், “நேத்து ராத்திரி ரேடியோல மாலி ஃப்ளூட் கேட்டியா?”

நாகேஷ் : கேட்டேன், தர மாட்டேன்னு சொல்லிட்டார்.

இதை கேட்டு தியேட்டர்ல ஒரே சிரிப்பு சத்தம்தான். 

- தி இந்து

- தொடரும்

Heezulia  மீண்டும் சந்திப்போம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Apr 2018 - 13:50

சி[ரி]த்ராலயா 103459460 சி[ரி]த்ராலயா 3838410834

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu 26 Apr 2018 - 14:07

26.04.2018 

நன்றி அய்யாசாமி சார். மூணு நிமிஷத்ல படிச்சிட்டீங்களா? என்ன சார் இது? ஆச்சரியமா இருக்கே.

Heezulila

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 26 Apr 2018 - 14:14

அருமை 

சி[ரி]த்ராலயா 103459460 சி[ரி]த்ராலயா 103459460

நானும் படிச்சிட்டேன்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon 13 Aug 2018 - 17:23

13.08.2018 

சி(ரி)த்ராலயா 2 

சித்ராலயா கோபுவின் அம்மா செல்லம்மா, சிரிக்க சிரிக்க ஜா......................லியா பேசுவார்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். அதுமட்டுமில்லீங்க, அவங்களுக்கு துணிச்சலும் ஜாஸ்த்தி.

யாருக்கா...................ச்சும் ஒரு இக்கட்டா..................ன சூழ்நிலை வந்துச்சுன்னு வச்சுக்கோங்க. அந்த எடத்துக்கு செல்லம்மா போவார். அந்த சூழ்நிலைக்கு சம்பந்தப்பட்டவர் திடுக்கிடும்படியா, நெத்திப்பொட்ல அடிச்சமாதிரி பேசிட்டு வந்துருவார். திடுக்கிட்றது மட்டுமில்லீங்க, அந்த சம்பந்தப்பட்டவர், அந்த இக்கட்டான சூழ்நிலைல இருந்து வெளிவர காரணமாவும் இருக்குமாம்.

இப்டித்தான் ஒரு சமாச்சாரம் நடந்துச்சு. செல்லம்மாவுக்கு ரொம்..............ப தெரிஞ்ச ஒரு பெண். அவங்க வீட்டு முற்றத்தில, அவளோட கணவன் வழுக்கி விழுந்துட்டார். விழுந்தபோ முற்றத்தில இருந்த துணி தொவக்கிற கல்ல விழுந்துட்டார். மண்டையில சர்ர்ர்ரியான அடி போல. மனுஷன் ஸ்பாட்லயே அவுட்.

எல்லாரும் துக்கம் விசாரிக்க போனாங்க.

“ஒவ்வாழ்க்க இப்டி ஆயிருச்சே. ஒவ்விதி இப்டியா அமையணும்?” இப்டி அப்டீன்னு என்னவெல்லாமோ சொல்லிட்டு போனாங்களாம்.

ஆறுதல் சொல்லாங்காட்டியும் பரவாயில்ல. இப்டியா பேசுவாங்க!!! ஏற்கனவே வேதனையில இருக்கிற அந்த பெண்ணோட மனசு என்...............ன பாடு பட்டிருக்கும்? கொஞ்சமாவது யோசிச்சு பாத்தாங்களா?

கோபுவின் அம்மா செல்லம்மா, அவரும் போனார், துக்கம் விசாரிக்க. இவரை பாத்த அந்த பெண், ஓ..........................ன்னு அழ ஆரம்பிச்சுட்டா. உடனே செல்லம்மா அவள அதட்டி,

“இப்ப எதுக்குடி அழறே? பாதியில வந்தவன் பாதியிலேயே போய்ட்டான். அழுறத நிப்பாட்டு. வேலைக்கு போயி, குடும்பத்த கவனிக்க பாரு. பொறந்ததுலே இருந்து வச்சுகிட்ட குங்குமத்த, நடுவுல வந்தவனுக்காக எதுக்கு அழிச்சுக்கிற?”

அங்க இருந்தவங்க இதை கேட்டுட்டு ஆ.............................டி போய்ட்டாங்க. அந்த காலத்தில எம்புட்டு ஆச்சாரமா இருப்பாங்க. அந்த சமயத்தில இப்டி பேசுறதுக்கு, எவ்ளோ............................ தில்லு வேணும், துணிச்சல் வேணும்?

அட, தில்லும் துணிச்சலும் ஒண்ணுதானோ?

இப்டித்தான், கோபு தன் அம்மாவ பத்தி சொன்ன இன்னொரு சமாச்சாரம்.

கோபுவின் மாமியார் இறந்த சமயம். சொந்தக்காரங்கல்லாம் வந்திருக்காங்க. கோபுவின் அம்மா, மருமகள்கிட்ட வந்து,

“உங்கம்மாட்ட எழுதி வாங்கிட்டியா?”

இப்டி மொட்......................டயா கேட்டா, அங்க இருக்கிறவங்க என்னான்னு நெனப்பாங்க?

“என்ன இது, இவங்க இப்டி கேக்குறாங்க? சொத்து விஷயமா ஏதாவது இருக்குமோ? இந்த சமயத்லயா இப்டி கேப்பாங்க?”ன்னு குழம்.............பி போய்ட்டாங்க.

செல்லம்மா கூ......................லா,

“உங்கம்மா ஆவக்கா ஊறுகா சூ................ப்பரா போடுவாளே. ரெஸிப்பி எழுதி வாங்க்னியா?”

இதாங்க மேட்டர். அதுக்காகத்தான், அப்டி மொட்டையா கேட்டிருக்காங்க. துக்கத்தையும் மறந்து, அங்கிருந்தவங்க சிரிச்சுட்டாங்களாம்.

கோபுவுக்கு காமெடி சென்ஸ் வர்றதுக்கு காரணம் ரெண்டு பேர். ஒண்ணு அவங்க அம்மா செல்லம்மா. இன்னொருத்தர் யார்னு தெரிமோ? என்.எஸ்.கே.தான். கோபு, அவரை தனது ரெண்டாவது காமெடி குருவாக எண்ணினாராம்.

1942ல ‘கிருஷ்ண பிடாரன்’னு ஒரு படம். இந்த படத்ல, NSK ஒரு சங்கீத வித்வானாக நடிச்சிருந்தார். படத்தை பாத்தவங்க, NSK நடிச்ச காமெடி ஸீனை எல்லாம் சொல்லி........................... சொல்லி சிரிச்சிட்டு இருந்தாங்க.

இதை கோபு கேட்டார். அவருக்கும் அந்த படத்தை பாக்க, ஆஹா வந்திருச்சு, ஆசையாய் படத்தை பாக்க போனார். அப்போ NSK க்கு வயசு பத்து.

படத்ல ஒரு ஸீன்.

NSK சங்கீத வித்வான். அன்னிக்கி சாய்ங்காலம் 6 மணிக்கி ஒரு சங்கீத கச்சேரிக்கு போகணும். திடீர்னு என்னான்னா, மிருதங்க வித்வான் அன்னிக்கி பா......................த்து கச்சேரிக்கு வரல. அவருக்கு ஏதோ பிரச்னயாம். வர முடியல. 

இதுல காமெடி என்னான்னா, அவர் வராம, தன்னோட மிருதங்கத்த மட்டும் குடுத்து அனுப்பியிருக்கார்.

“இன்னிக்கி மட்டும் யாரையாவது வச்சு, மிருதங்கத்தை அடிச்சு சமாளிச்சுக்கோங்க.”ன்னு சொல்லி அனுப்பிட்டார். 

ஆனா, மிருதங்கம் இல்லாம, சங்கீத கச்சேரி எப்டி நடத்த முடியும்?
NSK டென்................ஷன் ஆயிட்டார்.

“மிருதங்கத்தை அடிக்க யாரையாச்சும் கூட்டிட்டு வாங்க”ன்னு ஆளை அனுப்பினார். அந்த சமயத்ல, பறை அடிச்சுகிட்டே ஒருத்தர் வருவார். அரசாங்க உத்தரவு எதையோ பறையடிச்சு சொல்லிட்டு, ஜனங்களுக்கு, தெரிவிக்கிறவர்.

மிருதங்கம் அடிக்கிறவரை தேடி போனவங்க, பறையடிக்கிறவரை புடிச்சு இழுத்து, NSK முன்னால கொண்டு வந்து விட்றாங்க.

NSK : தண்டோராகாரரே, இன்னிக்கி எங்க கச்சேரில, மிருதங்கம் அடிக்கணும்.

பறையடிப்பவர் [திருதிருன்னு முழிச்சுகிட்டு] : மிருதங்கமா? அப்டீன்னா என்னங்கய்யா?

NSK : அதுவா? ஒண்ணுமில்லப்பா. நீ குச்சியால பறை அடிக்கிறல. ஆனா விரல்கள வச்சு மிருதங்கத்தை ரெண்டு பக்கமும் அடிக்கணும். வாத்தியம்தாம்ப்பா வேற வேற.

பறையடிக்கிறவர் சரீன்னுட்டார்.

அடுத்த ஸீன்.

கச்சேரி ஆரம்பமாச்சு. வித்துவான் NSK பாட ஆரம்பிக்கிறார்.

“ராம நீ சமானமெவரு”

பறையடிக்கிறவர், முழி முழின்னு முழிச்சுட்டு உக்காந்துட்டு இருக்கார். அப்புறமா ஒரு முடிவுக்கு வந்து, பறையடிக்கிற பாஷயிலேயே

“டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா” ன்னு மிருதங்கத்தை அடிக்க துவங்கிட்டார். அவருக்கு தெரிஞ்ச ஸ்டைல் இந்த டண்டணக்காதானே. அந்த  ஸ்டைல்ல அடிச்சார். அவருக்கு பறையடிக்கிறதை தவிர வேற மாதிரி அடிக்க தெரியாதுல்ல. அவரை குத்தம் சொல்ல முடியுமா?

NSKக்கு ஷாக். பின்ன என்ன, பறைய அடிக்கிறவரை கூட்டியாந்து  மிருதங்கத்தை அடிக்க வச்சா, இதுதான் நடக்கும்.
என்னங்க சர்தானே?

NSK : தண்டோராகாரரே, கொஞ்சம் கிட்......................ட வாங்க.

பறையடிக்கிறவர், மிருதங்கத்தை தூ..................க்க முடியாம தூக்கிகிட்டு, NSK பக்கத்ல வந்து உக்காந்துட்டாரு. தன் பக்கத்ல பறையடிக்கிறவர் உக்காந்தது, NSKக்கு திகைப்பு. எதுக்கு? NSK சொன்னது ஒண்ணு, இவர் செஞ்சது வேற.

என்னான்னு புரியலியா? எனக்கும் அப்டித்தான் இருந்துச்சு. பறையடிக்கிறவருக்கும் புரியல போல.

NSK : நான் சொன்னது இந்த பக்கத்ல இல்லப்பா. ஏம்பக்கத்ல வரசொல்லல. கொஞ்சம் சங்கீதத்துக்கு பக்கத்லல்ல நான் வரசொன்னேன்.

சொல்லிட்டு “ராம நீ சமானமெவரு” ன்னு பாட ஆரம்பிச்சுட்டாரு.
பறையடிக்கிரவருக்கோ “டண்டணக்கா” அடிய தவிர, மிருதங்கம் அடிக்க வர்ல, தெரீல. NSK வேற மாதிரி யோசிச்சு, ஒரு முடிவுக்கு வந்தார்.

NSK : ஊ......................ஹும், இது சரிபட்டு வராது..............., ஒன்னால ஏவ்வழிக்கு வர முடியாது. நாந்தான் ஓவ்வழிக்கு வரணும்.

NSK இப்டி சொல்லிட்டு அந்த டண்டணக்காக்கு ஏத்த மாதிரி
“ராமநீச........... மானமேவரூ” ன்னு அந்த கர்நாடக கீர்த்தனையை, குத்…………………………..துப்பாட்டு லெவலுக்கு பாடினார். வேற வழி?

இத பாத்த அந்த தியேட்டர்ல உள்ளவங்க, தியேட்டரே அதிர்ர அளவுக்கு, விழுந்து................... விழுந்து சிரிச்சாங்களாம்.

ஹிந்து பத்திரிகைல, நான் படிக்கும்போதே சிரிச்சுகிட்டுதான் படிச்சேன். பின்னே பாக்குறவங்க சும்மாவா இருப்பாங்க? 
 
கோபுவோட ரெண்டாவது குரு NSK யின் இந்த காமெடி ஸீன், கோபுவை ரொம்பவே பாதிச்சுது. இப்டீல்லாம் ஒருத்தரால ஜனங்களை சிரிக்க வைக்க முடியுமான்னு ஆச்...................சரியப்பட்டு போனார் போங்க. இந்த ஒரு ஸீனுக்காகவே கோபு அந்த படத்தை திரும்ப........................ திரும்ப பார்த்தார்.

ஆனா அத்தன தடவ அந்த சினிமாவ பாக்க துட்டு? வீட்ல பணத்தை திருடித்தான். அந்த அளவுக்கு NSK யோட காமெடி அவருக்கு புடிச்சு போச்சு.

கோபு நல்ல ஒரு மிமிக்ரி கலைஞர். இது அவரோட நெருக்கமானவங்களுக்கு நல்லாவே தெரியும். பத்.....................து வயசில பாத்த கிருஷ்ண பிடாரன் படத்தின் காமெடி ஸீனை, இப்பவும் சொல்லி சிரிப்பாராம். NSK மாதிரி பேசி, நடிச்சு காட்டுவாராம்.

பின்னால் சினிமாவுக்கு அவர் காமெடி ஸீன் எழுதியதுக்கு பின்னால எது உதவியா இருந்துச்சு? 

அம்மா செல்லாம்மாவின் காமெடி சென்ஸ், துணிச்சல், NSK வின் நாகரீக, கோமாளித்தனமான நகைச்சுவை, இவைதான். அதனாலதான் அவர் சினிமாவுக்கு எழுதிய காமெடீல்லாம் நல்லரசிக்கும்படியா இருந்துச்சு.

ஒரு ப்ரபல வார இதழ், கோபுவின் காமெடியை பத்தி பாராட்டி என்ன எழுதுச்சுன்னு தெரியுமா?

“NS கிருஷ்ணனுக்கு பிறகு, தரமான, சிறந்த நகைச்சுவை எழுதினது, சித்ராயலா கோபுதான்.”

ஆனா ஒண்ணு. மத்தவங்க எம்புட்டு பாராட்டினாலும், ஸ்ரீதர்ட்ட இருந்து பாராட்டு? ஊ........................ஹும், இல்லவே................. இல்லியாம். முடியவே................... முடியாதாம்.

- Hindu 

- தொடரும்

Heezulia மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 13 Aug 2018 - 17:32

NSK 

இந்த நகைச்சுவை உணர்வு பெயருக்கான சொத்து 



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon 13 Aug 2018 - 21:04

13.08.2018

சி[ரி]த்ராலயா 1571444738 சி[ரி]த்ராலயா 1571444738 சி[ரி]த்ராலயா 1571444738

Heezulia 

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon 13 Aug 2018 - 23:34

நன்னாத்தான் இருக்கு. தமிழ் பெயர் பதிவுசெய்தால்
சிறப்பாய் இருக்கும் பெயர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக