ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காடும் காடர்களும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Sat Apr 07, 2018 12:59 am

First topic message reminder :

தோழமைக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் எழுத்தைப் பதிவிட  வந்துள்ளேன். பணி மாறுதல்  மற்றும் அதுசார்ந்த பல்வேறு பணிகளில் என் கட்டுரையைத் தொடர முடியவில்லை. தற்பொழுது என் எழுத்தைத் தொடரும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்ல புதிய தொடர் ஒன்றையும் எழுதும் சூழல் வாய்த்திருக்கின்றது.

நான் ௨௦௦௭ இல் வால்பாறைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியேற்றபோது அங்கு வாழும் பழங்குடியின மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு மாணவியின் உதவியோடு முதலில் வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வாழும் காடர்களை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித்தேன். சென்ற பாதையின் தன்மை என்னைப் பயப்படுத்தினாலும் ஆர்வத்தில் சென்றது தான். அம்மக்கள் முதலில் என்னைச் சந்திக்க மறுத்தாலும் என்னை அழைத்துச் சென்ற பெண் அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால் முதலில் மூப்பரைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தந்தார். மூப்பரிடம் என்னால் அவர்களுக்கு எவ்விதத்திலும் துன்பமில்லை என்பதை உணர்த்தி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் என் பெயர் நான் பணியாற்றும் கல்லூரி முதற்கொண்டு என்விவரங்களைத் தெரிவித்த பிறகே என்னிடம் அன்பாகப் பேசினர். அதன்பிறகு மூப்பர் அங்குள்ள மக்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் எனக்கு  மாங்காயும் தேனும் கொடுத்து உபசரித்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின்னர் அடர்ந்த காட்டிற்குள் தனியே வருவது பாதுகாப்பல்ல என்று கூறி எச்சரித்து நாங்கள் திரும்பும்போது எங்களோடு துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிற்கு வந்த பிறகு அம்மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர அதை எப்படி செயற்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிபடாத போது அவ்வனத்தில் இருந்த ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள் எனக்கு அறிமுகமானார்.

அம்மக்களைப் பார்த்துவிட்டு வந்த சில நாட்களில் அம்மக்கள் என்னைப் பற்றி அவரிடம் தெரிவிக்க, வால்பாறை நகராட்சி சிறுபகுதி என்பதாலும் நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்ததாலும் என்னைக் கண்டறிந்து அறிமுகமாவது அண்ணாவிற்கு  எளிமையாக இருந்தது. அவரிடம்  அம்மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் ஆர்வத்தை வெளியிட்டபோது அவ்வளவு எளிதாக யாரிடமும் அவர்கள் தங்களைப்பற்றி வெளியிடுவதில்லை. தனியே சென்று அவர்களைப்  பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல. ஏனென்றால் அடர்ந்த காடு என்பதால் இடைவழியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி அங்குள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் நான் பணியாற்றுகிறேன் என்றும் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய இயலுமா? என்றும் கேட்டார்.  

ஏற்கனவே அக்காடர் இன மக்களும் அன்பாய் என்னிடத்து தனியே வரவேண்டாம் என்று கூறியது போலவே இந்த ஆசிரியரும் கூறுகின்றாரே  என்று முதலில் நினைத்தாலும் அவர்கள் சொல்வதும் உண்மைதானே என்றிருந்தது. என்றாலும் அம்மக்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குச் செய்யும் இவ்வுதவிகள் எனக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதி சரி என்று கூறி அங்குள்ள குழந்தைகளுக்குச் சீருடை  வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் இளங்கோ அவர்கள் சீருடைகளை நான் தான் அக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் என்பதை அம்மக்களிடம் தெரிவிக்க அம்மக்களுக்கு என்மீது நல்ல மதிப்பு ஏற்பட அதுவே காரணமாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து அக்குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், எழுதுகோல்கள் என வாங்கிக் கொடுத்தேன். பள்ளி ஆண்டுவிழாவிற்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து அம்மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை இளங்கோ அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு என்னை என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்களுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி முடிந்தவரை அங்குச் சென்றபோதெல்லாம். அறிந்து கொண்டேன். அறிந்ததை எழுதியும் வைத்தேன். ஆனால் எதுவும் முழுமை அடையவில்லை.

திருமணம் ஆனபிறகு என்னால் இப்படி  சென்று தகவல்களைப் பெறமுடியவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் குறைந்து போனது. வார நாட்களில் சந்தையின் போது காடர் இனமக்களைப் பார்க்கும் போது அவர்களை நலம் விசாரிப்பதோடு சரி. அவர்கள் பார்த்தாலும் மறவாது என்னை நலம் விசாரித்துச் செல்வர்.

இடையில் குழந்தைப்பேறு மற்றும் பணிமாறுதல் எனப் பலவிஷயங்களுக்கிடையில் மீண்டும் நான் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பெயர் து. சரண்யா.

அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண்.அவரைப்பார்த்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்ட அனுபவமே என்முன் நின்றது.  குடும்பம், பணிமாறுதல் எனப் பல்வேறு  காரணங்களுக்காக தொய்வுற்ற என் ஆர்வம் தற்பொழுது மீண்டும் எழுந்துள்ளது. எனக்குள்ள ஆர்வத்தை வகுப்பறையில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் குடியிருப்புப் பள்ளிக்கு நான் சென்று உதவியபோது உதவிபெற்றவர் என்பதும் அவள்பேச்சில் அறிந்து கொண்டேன். அன்றைய நாட்களின் புகைப்படங்களைக் காட்டியபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. புகைப்படங்களில் இருப்பவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றபோது அவள் முகத்தில் ஒரு ஆதங்கம். அன்றைக்கு எனக்குத் தகவல் வழங்கியதில் சரண்யாவின் அம்மாவும் ஒருவர். தன் அம்மாவை இளம்வயது தோற்றத்தில் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சி. இப்படி எங்களுக்குள் ஒரு  புரிதல் வந்தவுடன் பணியேற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறது. சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.

தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். அவர் தரும் தகவலில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தன் குடில் பெரியவர்களிடம் கேட்டறிந்து  போக்குவதும் அவள்தான். ஆதலின் அவள் பெயரும் இத்தொடரில் இடம்பெறும். நாங்கள் இருவராக இணைந்து இத்தொடரை எழுத விரும்புகிறோம். அதற்கு அனுமதி வழங்கும்படி தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன். என் பழைய தொடரும் இனி தொடரும்..

நன்றி. வணக்கம்.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down


Re: காடும் காடர்களும்

Post by Dr.S.Soundarapandian on Sat Jul 07, 2018 6:33 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Tue Jul 10, 2018 1:44 pm

கதையின் தொடர்ச்சி..

குழந்தை, சிறுமியை அழைத்து அவளுடைய கையில் கொடுத்துவிட்டு வேகமாக தான் வந்த பாதையில் கையில் ஒரு கத்தியையும் எடுத்துக் கொண்டு நடந்தான். இதைக் கண்ட அந்தச் சிறுமி அவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான் போலும் மனைவி கழுகாக மாறிப் போன காரணத்தால் எங்களைத் தனியே இந்தக் காட்டில் விட்டுச் சென்றுவிடுவானோ என்று எண்ணி அழுதாள். அவளுக்கு ஆறுதல் உரைத்த பின்னர் தான் அந்த இரு மரங்களையும் தேடிப் புறப்பட்டான். அந்த இரண்டு மரங்களையும் கண்டுபிடித்து அவற்றின் பட்டைகளை எடுத்து அரைத்து ஆண்மரத்தின் பட்டையை ஒரு கிண்ணத்திலும் பெண்மரத்தின் பட்டையை வேறொரு கிண்ணத்திலும் அரைத்து கலக்கி வைத்தான்.

இளைஞனின் மனைவி கழுகினுடைய உருவம் கொண்டு பறந்து வந்து வீட்டின் மேற்கூரையில் வந்து அமர்ந்தாள். அந்த வேளையில் இளைஞன் முதலில் ஆண்மரத்தின் பட்டையிலிருந்து எடுத்து அரைத்திருந்த அந்த நீரை தெளித்தான். உடனே அவள் உடல் வலுவிழந்து பறக்கமுடியாமல் படபடவென அடித்து தரையில் விழுந்தாள்.

அவள் தரையில் விழுந்தவுடன் பெண்மரத்தின் பட்டையிலிருந்து அரைத்தெடுத்த நீரை அவள்மீது தெளித்தான். அவள்மேல் இருந்த சிறகுகள் எல்லாம் உதிர்ந்து போய் பிறந்த மேனியாய்க் கிடந்தாள். உடனே இளைஞன் அந்தச் சிறுமியை அழைத்து அவளுக்கு ஒரு ஆடையை அணிவிக்குமாறு கூறினான். சிறுமி வேகமாக ஆடைகளை எடுத்து வந்து அணிவித்தாள். சிறிது நேரம் கடந்தவுடன் இளைஞனின் மனைவி வாந்தியெடுக்கத் தொடங்கினாள்.

கழுகின் உருவிலிருந்த போது அவள் உண்ட பாம்பு, தேள், பூரான் போன்ற பூச்சிகளை எல்லாம் வாந்தியெடுத்தாள். வாந்தி, மயக்கம் தெளிந்தவுடன் தான் அந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை என்று கூறினாள். உடனே இளைஞன் வேகமாக வேறொரு குடிலை அமைத்தான். அங்குத் தன் மனைவியையும் குழந்தையையும் அந்தச் சிறுமியையும் குடி அமர்த்தினான்.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Tue Jul 10, 2018 1:56 pm

கதையின் தொடர்ச்சி..

       
பின்னர் தன்னுடைய தாய் தந்தையரைத் தேடிச்சென்றான். கிழவன் சென்ற பாதையில் ஒரு பெரிய மானை செந்நாய்கள் கொன்று கிடத்தியது. அதைக் கண்ட கிழவன் மான் இறைச்சியை எடுத்துச் சுட்டுத் தின்று உயிர் வாழ்ந்தான். அவ்விறைச்சியைக் கிழவிக்கும் கொடுத்தான். ஆனால் கிழவி காட்டில் தனியாக விட்டுவந்த சிறுமியையும் குழந்தையையும் நினைத்து கவலையுற்றிருந்தமையால் உணவு, நீர் எதுவும் வேண்டாமெனச் சினந்தாள். ஒருவாறாக தன் தாய் தந்தையரை இளைஞன் கண்டுபிடித்துவிட்டான்.

            இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். தன் மனைவியை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்காக அவர்கள் இருவர்மீதும் கடுங்கோபத்துடன் இருந்தான். தன்னுடைய மனைவி இளைஞனின் தாய் தந்தையுடன் இருப்பது அவளுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணிணான் . ஆகையினால் அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிடலாம் என எண்ணினான். இறுதியாக இளைஞன் தன் மனைவியைக் குணமடையச் செய்தவுடன் அனைவரும் இளைஞனின் மனைவியின் பெற்றோரிடம் அழைத்துச் சென்றான். அங்குச் சென்ற பின்னர் சிறுமி காட்டில் நடந்தவற்றை எல்லாம் தன் பெற்றோரிடம் கூறினாள்.  தலி (சகோதரி) கழுகாக மாறியதையும் அவளைக் குணமாக்கிய கதையையும் அவள் கூறினாள். அதற்காக இளைஞன் தலி மனைவியைப் பெற்றோரிடம் விட்டுச் செல்லத்தான் வந்திருக்கிறான் என்று அனைவரும் உணர்ந்தனர்.

பின்னர் மனைவியின் பெற்றோர் இளைஞனிடம் வந்து தங்கள் மனைவி கழுகாக மாறினாலும் அவளை மீண்டும் மனிதனாகவே மாற்றி உயிருடன் அழைத்து வந்த உங்களிடம் எங்கள் மகள் இருப்பதைவிடவும் வேறு பாதுகாப்பு அவளுக்கு இல்லை என்று கூறிய அவர்கள் இளைஞனுடனே அவன் மனைவியையும் குழந்தையையும் சந்தோஷமாகச் சேர்த்து வைத்தனர். மேலும் அனைவரும் கூட்டுக்குடும்பமாகவே வாழ்வோம் நீங்கள் இருவரும் தனியே எங்கும் செல்லவேண்டாம் என்று கூறி அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
இரண்டாம் கதை முற்றும்.

மூன்றாம் கதை - குட்டாங் குடுங்கல் தொடரும்
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Jul 11, 2018 11:53 am

தொடருங்கள் தொடருங்கள் ...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Jul 11, 2018 12:04 pm

மூன்றாம் கதை

குட்டாங் குடுங்கல்
(குட்டாங் - குற்றுதல் , குடுங்கல் - அம்மிக்குழவி)

ஒரு காட்டில் மூதாட்டி ஓருவர் தனியே ஒரு குடில் அமைத்து வசித்து வந்தார். அம்மூதாட்டி வறுமையில் வாடினாள். சொந்தமெனக் கூறிக் கொள்ள அந்த மூதாட்டிக்கு எவரும் இல்லை. ஒருநாள் மூதாட்டி மண்பாண்டங்களை எடுத்துச் சென்று ஒரு ஓடையில் நீர் எடுத்து வந்தாள். அந்த நேரத்தில் அவள் காலின் மேல் குட்டாங் குடுங்கல் உருண்டு போய் சாய்ந்தது. மூதாட்டி அந்தக் கல்லைத் தள்ளிவிட்டு பானையில் நீர் முகந்து தன் தலையில் சுமத்திக் கொள்ள முயன்றாள். மீண்டும் அந்தக் கல் அவள் காலின்மேல் வந்து உருண்டு சாய்ந்தது. மூதாட்டிக்கு கல்லைக் கண்டு கோபம் எழுந்தது.ஆகையினால் அவள் அந்த குட்டாங்குடுங்கலைப் பார்த்து என்ன திமிர் உனக்கு என்றாள்.அத்துடன் அந்தக் கல்லைக் கொண்டு சென்றால் தேங்காய் அரைக்கவும் மிளகாய் அரைக்கவும் அம்மிக்குழவியாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்து அதை தன் முந்தானைச் சீலையில் போட்டபடியே பானையில் நீர் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

குடுங்கலைக் கொண்டு போய் அந்த மூதாட்டி ஒரு பெரிய பானையில் போட்டுவிட்டு அதனை மூடி வைத்தாள். பின்பு வெளியே சென்ற அவள் வீட்டுவாசலைப் பெருக்கினாள்.அப்போது திடீரென ஒரு ஆண்குரல் அவள் வீட்டில் இருந்து ஒலித்தது. அது

பாட்டி குடி குடி!
பாட்டி குடி குடி! (குடி - மனைவி)

பாட்டி எனக்கு மனைவி வேண்டும் என்னும் ஒலி கேட்டது. இதைக் கேட்ட அந்த மூதாட்டி வேகமாக வந்து அந்தப் பானையைப் பார்த்தாள். அந்தப் பானையில் போட்ட குடுங்கல் அழகிய ஆண்மகனாக உருபெற்று இருந்ததைக் கண்ட மூதாட்டி மனம் மகிழ்ந்தாள். காரணம் தனக்குப் புதிதாக ஒரு பேரன் கிடைத்துவிட்டான் என்று.

தொடர்ச்சி......


avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by Dr.S.Soundarapandian on Thu Jul 12, 2018 6:38 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Mon Jul 16, 2018 3:51 pm

கதையின் தொடர்ச்சி..

குட்டாங் குடுங்கல் மனிதனாக உருப் பெற்ற நேரம் முதல் மூதாட்டியின் வீட்டில் குடிகொண்டிருந்த வறுமை மறைந்து போயின. அந்தக் குட்டாங் குடுங்கல் தனக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொடுக்குமாறு அந்த மூதாட்டியிடம் முறையிட்டான். கிழவியும் அதற்கு இசைந்தாள். மறுநாள் காலையில் மூதாட்டி குட்டாங் குடுங்கல்லுக்குப் பெண்பார்க்க கிளம்பினாள். நெடுந்தூரம் காட்டுப் பாதையில் பயணித்தாள். அவள் ஒரு கிராமத்தை அடைந்தாள். அந்தக் கிராமத்தில் தலைவலி தீராத ஒரு பெண்ணும் மற்றொரு அழகியும் இருந்தனர்.
கிராமத் தலைவரின் மகள்தான் அந்த அழகி அவள் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றால் வானும் மண்ணும் நீர், மரம், செடி, கொடி என அனைத்தும் அவள் மேனி வண்ணத்தைக் கண்டு சிவந்துபோய்விடுமாம். அப்படிப்பட்ட மேனியை உடையவளாக அந்தப் பெண் இருந்தாள். மூதாட்டி கிராமத்தில் இருந்த எல்லா வீடுகளுக்கும்போய்
நான் குட்டாங் குடுங்கல்க்கு குடியும்
படையும் தேடி  வர்ற

                (வர்ற - வருகிறேன்)

நான் குட்டாங் குடுங்கலுக்கு மனைவியைத் தேடி வருகிறேன் என்றாள். ஆனால் அந்தக் கிராமத்தில் ஒருவரும் பெண் கொடுக்கவில்லை. கடைசியாக ஊர்த் தலைவரின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே அந்த அழகியை ஓலாம்போயை என்னும் ஒரு பெரிய புறையினுள் அமரவைத்து இருந்தனர். மூதாட்டி அவள் வீட்டிற்குச் சென்றபோது அந்த அழகி மூதாட்டியைப் பார்க்க வேண்டுமென அடம்பிடித்தாள். அழகியின் தந்தையோ தன் நண்பர்களுடன் தேன் எடுக்கப் போய் இருந்தார்.
தொடரும்...
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Mon Jul 16, 2018 3:58 pm

கதையின் தொடர்ச்சி...

அன்று இரவு மூதாட்டி அழகியின் வீட்டிலேயே தங்கினாள். தான் அந்தக் கிராமத்திற்கு வந்த காரணத்தையும் அவர்களிடம் கூறினாள். மறுநாள் காலையில் மூதாட்டி தன் வீட்டுக்குப் புறப்பட்டாள். உடனே அழகியும் மூதாட்டியுடன் செல்ல வேண்டும் என்றாள். அழகியின் தாய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அழகியின் தந்தை வந்து தன் மகளைக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் என்று மூதாட்டியிடம் கூறினாள். ஆனால் அழகியோ மூதாட்டியுடன் போய் தான் ஆகவேண்டும் என்றாள். வேறு வழியில்லாமல் அழகியை மூதாட்டியுடன் அனுப்பினாள் அழகியின் தாய்.

நடக்கும் வழியில் காலில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்க இலைகளைப் பறித்துப் போடுமாறு அழகியின் தாய் கூறினாள் .மேலும் சேறும் சகதியும் உள்ள இடங்களில் கற்களைப் பதிக்குமாறு கூறினாள். அழகியின் தாய் சொன்னபடியே மூதாட்டியும் அவளை அழைத்துச் சென்றாள். மூதாட்டியின் வீட்டிற்குப் போனவுடன் தன் பேரனை அழைத்தாள். உடனே அவன் கீழே இறங்கி வந்து நின்றான். அவனுடைய அழகு முகத்தைக் கண்ட அந்தப் பெண் மயங்கி கீழே விழுந்தாள். உடனே அவன் ஓடி வந்து அவளைத் தாங்கி முகத்தில் நீர் தெளித்து எழுப்பி விட்டான். இருவரும் அந்த நாளில் இருந்து கணவன் மனைவியாக சிலகாலம் அந்தக் காட்டில் வாழ்ந்தனர்.
தொடரும்....
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி Today at 12:18 am

கதையின் தொடர்ச்சி...

ஒரு நாள் அந்த வாலிபன் தன் மனைவியின் பெற்றோரைக் காணவேண்டுமென விரும்பினான். தன் பாட்டியையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்தக் கிராமத்திற்குச் சென்றான்.தன் மனைவியின் குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் ஒரு புறையில் போட்டுக் கொண்டு அதைத் தன் சுண்டுவிரலினால் தூக்கிக் கொண்டு நடந்தான். அந்தக் கிராமத்தை நெருங்கியவுடன் ஒரு மரத்தின் அடியில் அந்தப் புறையை வைத்தான். பின்பு வெறும் கையுடன் தன் மனைவியின் பெற்றோரை நோக்கி நடந்தான். போகும் வழியில் அந்தத் தீராத தலைவலியை உடைய பெண்ணின் வீட்டைக் கடந்தபோது அவன் ஒரு மரத்தின் வேரில் கால் இடறினான்.

(தங்களைக் காண வந்திருக்கும் ) மருமகனைக் கண்டு அந்த அழகியின் வீட்டில் அனைவரும் வியந்தனர். வீட்டில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது குட்டாங் குடுங்கல் தான் கொண்டு வந்து வைத்த புறையை யாரேனும் எடுத்து வருமாறு பணித்தான். முதலில் அழகியின் மூத்த சகோதரன் போய் அந்தப் புறையைத் தூக்கினான். ஆனால் அவனால் தூக்க இயலவில்லை. முடிந்த அளவு முயன்றான். ஆனாலும் முடியவில்லை. அவன் வீட்டிற்கு வெறுங்கையுடனே திரும்பினான். பின்னர் இரண்டாவது சகோதரன் சென்றான். அவனுக்கும் எடுத்துவர இயலவில்லை. இறுதியாக அழகியின் தந்தையே சென்று முயன்றார். ஆனாலும் அந்தப் புறையை எவராலும் எடுத்துவர முடியவில்லை. எனவே குட்டாங் குடுங்கலே தன்னுடைய புறையைப்போய் எடுத்து வந்தான். அந்தப் புறையிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க புதிதாய் ஒரு கூரையை வேயும்படி கூறினான்.

அழகியின் சகோதரர்கள் வேகவேகமாக ஒரு கூரையை வேய்ந்தனர்.  புறையிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அந்தக் கூரையில் குவித்து வைத்தனர். அந்தக் கிராமத்தில் இருந்த அனைவருக்கும் தேவையான அளவு பொருட்களைக் குட்டாங் குடுங்கலின் புறையிலிருந்து எடுத்தனர். பின் அந்தத் தலைவலி தீராத பெண்ணின் தாய் குட்டாங் குடுங்கலிடம் வந்து ஏதாவது மருந்து தெரிந்தால் கூறு என்றாள். உடனே குட்டாங் குடுங்கலின் பாட்டி அவனிடம்  குட்டாங் குடுங்கல் வந்த வழியில் அவன் காலை இடறிவிட்ட மரத்தின் பட்டையை அவளுடைய நெற்றியில் அரைத்துத் தேய்க்குமாறு கூறினாள். அப்பெண்ணின் தாய் அவ்வாறே செய்தாள். உடனே அவளுடைய தலைவலி தீர்ந்து போய்விட்டது. குட்டாங்குடுங்கலை அந்தக் கிராமத்து மக்கள் இறைவனை மதிப்பது போல போற்றினர். பின்னர் அனைவரும் அந்தக் கிராமத்தில் குட்டாங் குடுங்கலுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
மூன்றாம் கதை குட்டாங் குடுங்கல்  முற்றும்..

நான்காம் கதை ஆரியமலா (ஆரியமலை) அடுத்த பகுதியில் தொடரும்....
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by சிவனாசான் Today at 10:19 am

சகோதரிஅவர்களே உங்கள் எழுத்தை அல்ல
உங்கள் கருத்தை பதிவிடுங்கள் அருமை>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2990
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by முனைவர் ப.குணசுந்தரி Today at 11:24 am

ஐயா வணக்கம்.

இக்கதைகள் இதுவரை பதிவுசெய்யப்படாதவை. முதன்முறையாக நம் பகுதியில் பதிவிடுகிறேன். ஆதலின் முதலில் கதைகளைப் பதிவிட்டுவிட்டு பின்னர். அது குறித்த என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். நன்றி.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 97

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by சிவனாசான் Today at 7:55 pm

கதை என்று ஏன் பெயர் வைத்தனர்.
என்ன கதை அளக்கிரயா? என்றுகூட
கூறுகிறார்கள். எதனால் >>>>>>>>>>

avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2990
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: காடும் காடர்களும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum