ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!

View previous topic View next topic Go down

தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 04, 2018 7:09 am


பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தரமணி பகுதியில் அதிகரிக்கும் கட்டடங்களால் அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநரின் மத்தியப் பகுதியில் 270 ஹெக்டேர் பரப்பளவில் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நாட்டிலேயே நகரின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது தேசிய பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.
தாவரங்கள், வன விலங்குகள்: இந்த தேசிய பூங்கா உலர், வறண்ட பசுமை காடுகள், புதர்காடுகளைக் கொண்டதாகும். இதனால் இங்கு புள்ளிமான்கள் கூட்டமாக வசிக்கின்றன. கலைமான், நரி, கீரி போன்ற 14 வகை பாலூட்டி இனங்களும், 100 -க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், பாம்பு, தவளை உள்ளிட்ட ஊர்வன இனங்களும் இந்த இடத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளன.
குறைந்த வனப்பரப்பு: ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கியதை அடுத்து உணவு, தண்ணீர் போன்றவற்றுக்காக அவை வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தொடரும் சோகம்: அவ்வாறு உணவு தேடி செல்லும்போது, வாகனங்களில் அடிபடுவதும், நாய்களால் கடிப்பட்டு இறப்பதும், பிளாஸ்டிக் பொருள்கள், கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் உயிரிழப்பைச் சந்திக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2013 முதல் 2016 வரையில் மட்டும் 220 புள்ளி மான்கள் உயிரிழந்தன. இதேபோல் 8 கலைமான்களும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நன்றி
தினமணி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 04, 2018 7:10 am

உணவை தேடும் புள்ளிமான்கள்: ஐஐடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதால், அங்கிருந்து வெளியேறிய மான்கள், கிண்டி தேசிய பூங்காவுக்குத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோட்டூர்புரம், காந்தி நகர், இந்திரா நகர், தரமணி, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான புதர்மண்டிய பகுதிகளில் அவை வசிக்கத் தொடங்கின. இதில், தரமணியில் 30 -க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வாழ்ந்து வந்த தனியாருக்குச் சொந்தமான சுமார் 27 ஏக்கர் நிலப் பகுதி கட்டடம் கட்டுவதற்காக அண்மையில் அகற்றப்பட்டது. இதனால், அங்கு வசித்த புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
தரமணி பகுதியில் சுற்றித் திரியும் மான்களுக்கு சிலர் இட்லி உள்ளிட்ட உணவுகளைத் தருகின்றனர். மேலும், அப்பகுதியில் இயங்கும் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் உணவுகளை பிளாஸ்டிக் தாளுடன் சேர்த்து மான்கள் உண்கின்றன. இதனால், அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த மான்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை அதிகாரிகள் இப்போதாவது ஈடுபட வேண்டும் என்றனர்.
புள்ளிமான்களைப் பிடிக்க நடவடிக்கை: இதுகுறித்து வனச்சரகர் முருகேசன் கூறும்போது, 'தரமணி பகுதியில் தனியார் நிலப்பகுதியில் புள்ளிமான்கள் வசித்து வந்த இடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்த 30 -க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உணவு, தண்ணீருக்காக சாலைக்கு வரத் தொடங்கின.

மான்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதைத் தடுப்பதற்காக வனத் துறை சார்பில் அவற்றுக்கு தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மான்கள் அனைத்தும் விரைவில் பிடிக்கப்பட்டு கிண்டி தேசிய பூங்கா அல்லது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விடப்படும்' என்றார் அவர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!

Post by SK on Wed Apr 04, 2018 10:45 am

ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

505-172=333

அனால் செய்தியில் கூறி இருப்பது 270

63 ஹெக்டேர் நிலம் என்ன ஆனது

தினமணி உண்மையின் உரைகள் கண்ணகில் தவறு இருக்கிறது

ஐஐடி வளாகத்தை பொறுத்தவரை மான்களை தொடுவது கூட அபாரதத்திற்கு உரிய குற்றம் இதுபோல வெளியே சுற்றி திரியும் மான்களை  வனத்துறையினர் பிடித்து ஐஐடி வளாகத்தில் விடலாம்

மேலே குறிப்பிட்டுள்ள இடம் அரசு நிலம் என்ற பதாகையை பல ஆண்டுகளாக நானே பார்த்திருக்கிறேன் இது எப்படி தனியார் நிலம் ஆனது என்பது தெரியவில்லை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 04, 2018 4:50 pm

@SK wrote:
ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

505-172=333

அனால் செய்தியில் கூறி இருப்பது 270

63 ஹெக்டேர் நிலம் என்ன ஆனது

தினமணி உண்மையின் உரைகள் கண்ணகில் தவறு இருக்கிறது

ஐஐடி வளாகத்தை பொறுத்தவரை மான்களை தொடுவது கூட அபாரதத்திற்கு உரிய குற்றம் இதுபோல வெளியே சுற்றி திரியும் மான்களை  வனத்துறையினர் பிடித்து ஐஐடி வளாகத்தில் விடலாம்

மேலே குறிப்பிட்டுள்ள இடம் அரசு நிலம் என்ற பதாகையை பல ஆண்டுகளாக நானே பார்த்திருக்கிறேன் இது எப்படி தனியார் நிலம் ஆனது என்பது தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1265028
நான் மூன்று வருடங்கள் தரமணியில்
தங்கி தான் படித்தேன் அப்போது பாலிடெக்னிக் கேம்பஸ் தனியாக இருக்கும்
இருட்டி விட்டால் ஹாஸ்டல் தனியாக போக பயமாக இருக்கும் இப்போது அந்த தரமணியை காணவில்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum