உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

குறட்பாவில் நாட்டு நடப்பு "

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by M.Jagadeesan on Sat Mar 10, 2018 9:51 pm

First topic message reminder :

ரமணியன் ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க , " குறட்பாவில் நாட்டு நடப்பு " என்ற இந்தத் திரியைத் தொடங்குகிறேன் . நாட்டிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் குறட்பாவில் வடிப்பதே இந்தத் திரியின் நோக்கமாகும் . அதே சமயத்தில் குறட்பாவை எவ்வாறு எழுதுவது என்றும் தெரிந்து கொள்ளலாம் .

குறட்பா , வெண்பாவின் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த ஈரடிச் செய்யுளாகும் . இதைக் கற்றுக்கொண்டால் வெண்பா எழுதுவது மிகவும் எளிது . அனைவரும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் அவா ! தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளலாம் !

தற்காலத்தில் , கவிதைகள் என்ற பெயரில் ,வருவன எல்லாம் கவிதைகள் அல்ல ! அவையெல்லாம் வார்த்தை ஜாலங்களே தவிர வேறல்ல ! சினிமாக் கவிதைகள் போன்று அவையெல்லாம் , காலப்போக்கில் மறைந்துவிடும் .மரபுக் கவிதைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் ; நிலையான இன்பத்தைத் தரும் .

சரி , இப்போது ஒரு குறட்பாவைப் பார்ப்போமா !

நாட்டிலுள்ள வெற்றிடத்தை நானே நிரப்பிடவே
ஓட்டளிப்பீர் என்றும் எனக்கு .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down


 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by M.Jagadeesan on Tue Mar 13, 2018 8:38 pm

குரங்கணி தீயில் கொழுந்துகள் மாய்ந்தார்
இரக்கம் மறந்தான் இறை .

பொருள் : குரங்கணிக் காட்டுத் தீயில் , வாழவேண்டிய இளம் கொழுந்துகள் , வெந்து மாய்ந்தனர் . உயிர்களிடத்தில் காட்டவேண்டிய இரக்கத்தை இறைவன் மறந்தானோ ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by M.Jagadeesan on Tue Mar 13, 2018 8:49 pm

காவிரி நீர்நமக்கு கானல்நீ ரானதே
காவியால் வந்த வினை .

பொருள் : காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு கிடைக்காது என்று நினைக்கத்தக்க வகையில் , அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . எல்லாவற்றிற்கும் BJP அரசே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by krishnanramadurai on Tue Mar 13, 2018 10:32 pm

@M.Jagadeesan wrote:காவிரி நீர்நமக்கு கானல்நீ ரானதே
காவியால் வந்த வினை .

பொருள் : காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு கிடைக்காது என்று நினைக்கத்தக்க வகையில் , அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . எல்லாவற்றிற்கும் BJP அரசே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1262225
இந்த பிரச்சனை தொடங்கி குறைய குறைய 40  ஆண்டுகள்.
இந்த 4 ஆண்டுகளே அது கை நழுவ காரணம் என்று நாம் நினைக்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் பழைய சொல் தொடர்
" தினம் போடாத சீதேவி போடல நல்லது,
தினம் போடற மூதேவி நீ ஏண்டி போடல "
- நமது மனது என்ற பிச்சைகாரி
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by krishnanramadurai on Tue Mar 13, 2018 11:17 pm

@M.Jagadeesan wrote:" இட்டார் பெரியோர் : இடாதோர் இழிகுலத்தோர் " என்று சொன்னது ஒளவைப் பாட்டி ; வள்ளுவர் அல்ல !

நான்கு வருணங்களை வள்ளுவர் ஏற்றாரா ? ஆதாரம் காட்டுங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1262197
மன்னிக்கவும், நான் ஒளவையை மறந்த பாவத்திற்கு. (என் பாட்டியும் மன்னிப்பாள் என நம்புகிறேன்.)
குறள் 30 , 543 , 120 , 1033 பரிமேல் அழகர் எனக்கு புரிந்தவரையில்.
இவை கொஞ்சம் சான்றுகள் நான் நம்புவதற்கு. அதில் அவன் அந்தணரை நான்காம் இடத்தில் வைத்தான் என்பதை ஜெயகாந்தன் மூலமாக நானும் நம்புகிறேன்.
இந்த youtube ஒலிப்பேழையை கேட்கவும்.
https://www.youtube.com/watch?v=-RrScrM6coo
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by M.Jagadeesan on Wed Mar 14, 2018 11:50 am

அந்தணர் , பார்ப்பான் ஆகிய சொற்கள் வெவ்வேறு பொருளைக் கொண்டவை .

அந்தணன் என்னும் சொல் திருக்குறளில் மூன்று இடங்களில் வருகிறது . எல்லா உயிர்களையும் நேசித்து அறவழி நிற்போர் எல்லாம் அந்தணர்களே !

" அந்தணர் என்போர் அறவோர் "

என்பார் ஐயன் வள்ளுவர். அவர் கூற்றுப்படி புத்தர் , இயேசு , காந்தி , இராமலிங்க அடிகளார் எல்லாம் அந்தணர்களே !

" மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் " என்பார் வள்ளுவர் . அதாவது வேதம் ஓதுபவர்களை பார்ப்பான் என்று அழைத்தனர் .

" தீயினைக் கும்பிடும் பார்ப்பார் " என்பார் பாரதியார் .

" மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட " கோவலன் கண்ணகி திருமணம் நடந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் .

அந்தணன் = அம் + தண் + அர்

என்று பிரிக்கலாம் . அதாவது தூய , தண்மையான குணம் கொண்டவர் அந்தணர் ஆகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by krishnanramadurai on Wed Mar 14, 2018 6:06 pm

வர்ணங்கள் தொழில், மன அடிப்படையிலான பிரிவு என்று நான் நம்புவதால் தங்கள் கூற்று எனக்கும் ஏற்புடையதே.
பார்ப்பானும் அந்தணரும் வேறு என்று தாங்கள் பிரித்து காட்டுவதும் எனக்கு ஏற்புடையதே.
அறவழி நிற்போர் எல்லாம் அந்தணர்களே. இதை தாங்கள் கூறும் பொது பார்ப்பானும் அந்தணன் ஆகவேண்டும், சிலராவது இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.
நான்கு வர்ணத்தை வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார் என்ற என் எண்ணம் இன்னும் மாறவில்லை.
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by M.Jagadeesan on Thu Mar 15, 2018 9:44 am

நாட்டு நடப்பு குறட்பா :
*************************************

மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
ஆடி அடங்கினார் இன்று .

சமீபத்தில் நடந்த MP இடைத்தேர்தலில் , மூன்றிலும் BJP படுதோல்வி அடைந்தது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by T.N.Balasubramanian on Thu Mar 15, 2018 11:17 am

@M.Jagadeesan wrote:நாட்டு நடப்பு குறட்பா :
*************************************

மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
ஆடி அடங்கினார் இன்று .

சமீபத்தில் நடந்த MP இடைத்தேர்தலில் , மூன்றிலும் BJP படுதோல்வி அடைந்தது .
மேற்கோள் செய்த பதிவு: 1262368

மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
தேடியலை தவறு யாதென்று ?

இப்பிடி இருந்தால் எப்பிடி இருக்கும் அய்யா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by M.Jagadeesan on Thu Mar 15, 2018 11:56 am

மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
தேடியலை யார்தவ ரென்று .

என்றிருக்கவேண்டும் ஐயா !

கொஞ்சம் சிரமப்பட்டால் , தாங்களும் குறட்பா எழுதமுடியும் ஐயா ! என்னுடைய " புள்ளி இல்லாத வெண்பா " மற்றும் பழமுரா அவர்களின் " திருக்குறளின் இலக்கணம் அறிவோம் " ஆகிய திரிகளைப் பார்த்தாலே போதும் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by M.Jagadeesan on Thu Mar 15, 2018 12:02 pm

மாறன் சகோதரர்கள் BSNL முறைகேடு வழக்கிலிருந்து விடுதலை ;
******************************************************************************************************
நாட்டு நடப்பு குறட்பா :
+++++++++++++++++++++++

மாறன் சகோதரர்கள் மாசில்லா தங்கமென
கூறியதே நீதிதரும் மன்று .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Empty Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை