உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down


புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Mon Feb 26, 2018 1:48 pm

நன்றி > நன் / றி > நேர் நேர்
மறப்பது . மறப் / பது > நிரை நிரை
நன்றன்று > நன் / றன் / று > நேர் நேர் நேர்
நன்றல்ல > நன் / றல் / ல > நேர் நேர் நேர்
தன்றே > தன் / றே > நேர் நேர்
மறப்பது > மறப் / பது > நிரை நிரை
நன்று > காசு

வெண்பாவின் இறுதிச்சீரை ஓரசையில் கொள்ளவேண்டும் என்பதால் அது நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .

இறுதிச்சீர் " கால் " என்று முடிந்தால் நாள் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " விடும் " என்று முடிந்தால் மலர் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " வித்து " என்று முடிந்தால் காசு என்னும் வாய்ப்பாடு
இறுதிச்சீர் " உலகு " என்று முடிந்தால் பிறப்பு என்னும் வாய்ப்பாடு .

வெண்பாவுக்கு மட்டுமே இறுதிச்சீர் இவ்வாறுதான் முடியவேண்டும் என்று விதி உள்ளது . பிற பாக்களுக்கு இல்லை . முதலில் யாப்பிலக்கணம் கடினமாக இருப்பதுபோல் தோன்றினாலும் , முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் எளிதாகிவிடும் . நானும் முதலில் கற்றுக்கொள்ளும்போது இடர்ப்பட்டேன் . பிறகு பல குறட்பாக்களை எடுத்துக்கொண்டு , பயிற்சி மேற்கொண்டதில் , வெண்பா இலக்கணம் தெளிவாயிற்று . ஆகவே மனம் தளர வேண்டாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by மூர்த்தி on Mon Feb 26, 2018 1:56 pm

நள்ளிரவு இருந்தாலும் ஒரு கேள்வி.
பா+லும் ,அதுபோல் ம+றப்+பது என ஏன் பிரிக்கக் கூடாது.

நன்றி.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Mon Feb 26, 2018 5:06 pm

ஒரு சொல்லில் முதலில் நெடில் வந்தால் , அது நேரசையாகிவிடும் .

எனவே பா - நேரசை  " லும் " என்ற சொல்லில் குறில் ஒற்றடுத்து வருவதால் அதுவும் நேரசையாகும் .

குறில் இணைந்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் , அதை அப்படியே ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்..

மறப்பது என்ற சொல்லில் முதலில் உள்ள இரண்டு குற்றெழுத்துக்களை ஒற்றுடன் சேர்த்து ஒரு அசையாகக் கொள்ளவேண்டும் .. எனவே

மறப்பது > மறப் / பது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . அதை மூன்று அசையாகப் பிரித்தல் கூடாது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by மூர்த்தி on Mon Feb 26, 2018 8:37 pm

நன்றி ஐயா.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பார்க்குத்> துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
துப்பாக்கித்>துப்+பாக்+கித் -நேர் நேர் நேர்
துப்பார்க்குத்>துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
தூஉம்>தூ+உம் -நேர் நிரை
மழை> நிரை

மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Mon Feb 26, 2018 10:25 pm

துப்பாய > துப் / பா / ய > நேர் நேர் நேர்

தூஉம் > தூ / உம் > நேர் நேர்

என்று வரும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Fri Mar 02, 2018 6:06 am

இனி வெண்பாவில் பயின்று வரும் சீர்களைப்பற்றிப் பார்ப்போம் .

வெண்பாவில் மாச்சீர் , விளச்சீர் , காய்சசீர் ஆகிய சீர்கள் பயின்று வரும் . அதாவது தேமா, புளிமா , கருவிளம் , கூவிளம் ஆகிய ஈரசைச் சீர்களும் , தேமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் , புளிமாங்காய் ஆகிய மூவசைச் சீர்களும் பயின்று வரும் .

நேர் நேர் > தேமா
நிரை நேர் > புளிமா
நிரை நிரை > கருவிளம்
நேர் நிரை > கூவிளம்

நேர் நேர் நேர் > தேமாங்காய்
நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நேர் நிரை நிரை > கூவிளங்காய்
நிரை நேர் நேர் > புளிமாங்காய்

வெண்பாவில் கனிச்சீர் வராது . இனி ஒரு குறள் வெண்பாவை எப்படி இயற்றுவது என்று பார்ப்போம் .


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Fri Mar 02, 2018 1:02 pm

ஈரசைச்சீர் , இயற்சீர் என்றும் , ஆசிரியச்சீர் என்றும் அழைப்பார்கள் . ஆசிரியப்பாவில் ஈரசைச்சீர் அதிகம் வருவதால் , ஈரசைச்சீரை ஆசிரியச்சீர் என்று அழைப்பார்கள் .

ஒரு குறட்பாவில் ஏழு சீர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும் . நின்றசீர் இறுதியில் நேரசை இருந்தால் , வரும் சீரின் முதலில் நிரையசை வரவேண்டும் . நின்றசீரின் இறுதியில் நிரை வந்தால் , வரும் சீரின் முதலில் நேர் வரவேண்டும் . நின்றசீர் காய்ச்சீராக இருந்தால் , வரும்சீரின் முதலில் நேர் வரவேண்டும் .

சுருக்கமாக

மா முன் நிரை
விள முன் நேர்

வரவேண்டும் . இதை இயற்சீர் வெண்டளை என்பார்கள் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .

எல்லோரும் வெண்பா எளிதில் எழுதலாம்
நில்லாமல் இன்றே தொடங்கு .


இந்தக் குறட்பாவில்

எல்லோரும் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
வெண்பா > நேர் நேர் > தேமா

காய் முன் நேர் வருவது காண்க .

வெண்பா > நேர் நேர் > தேமா
எளிதில் > நிரை நேர் > புளிமா

மா முன் நிரை வருவது காண்க .

எளிதில் > நிரை நேர் > புளிமா
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்

மா முன் நிரை வருவது காண்க

எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்

விள முன் நேர் வருவது காண்க .

நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
இன்றே > நேர் நேர் > தேமா

காய் முன் நேர் வருவது காண்க .

இன்றே > நேர் நேர் > தேமா
தொடங்கு .> பிறப்பு என்னும் வாய்ப்பாடு

மா முன் நிரை வந்தது .

இவ்வாறு பல குறட்பாக்களை எழுதிப் பழகினால் முழு வெண்பா எழுதுவது எளிதாகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by மூர்த்தி on Fri Mar 02, 2018 9:40 pm

முத்துராமலிங்கம் ஐயாவின் பதிவில் வாய்பாடு பற்றி பார்த்தேன்.ஒன்றும் புரியவில்லை. இப்போது விளக்கம் சற்றே புரிகிறது.

முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.

அசை பிரித்தல்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் 
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பண்பிலான்>பண்+பிலான் - நேர் நிரை
பெற்ற>பெற்+ற – நேர் நேர்
பெருஞ்செல்வம்>பெருஞ்+செல்+வம் - நேர் நேர் நேர்
நன்பால்>நன்+பால் - நேர் நேர்
கலந்தீமை>கலந்+தீ+மை -நேர் நேர் நேர்
யாற்றிரிந்>யாற்+றிரிந் - நேர் நேர்
தற்று>தற்+று - நேர் நேர் - காசு


களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .

களித்தானைக்>களித்+தா+னைக் -நிரை நேர் நேர்
காரணம்>கா+ரணம் -நேர் நிரை
காட்டுதல்>காட்+டுதல் -நேர் நிரை
கீழ்நீர்க்>கீழ்+நீர்க் - நேர் நேர்
குளித்தானைத்>குளித்+தா+னைத் -நிரை நேர் நேர்
தீத்துரீஇ>தீத்+துரீ+இ -நேர் நேர் நேர்
யற்று>யற்று - காசு

நன்றி.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Sat Mar 03, 2018 6:16 am

பெருஞ்செல்வம் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கலந்தீமை > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
யாற்றிரிந் > நேர் நிரை > கூவிளம்
தற்று > காசு

காரணம் > நேர் நிரை > கூவிளம்
தீத்துரீஇ > நேர் நிரை நேர் > கூவிளங்காய்

தாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் . இரண்டு குறில்கள் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை . குறில் நெடில் இணைந்து வந்தாலும் நிரையசையாகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by மூர்த்தி on Sat Mar 03, 2018 1:27 pm

நன்றி ஐயா.
தனிக் குறில் (க-ப….) சீரின் தொடக்கத்தில்,நடுவில்,இறுதியில் எங்கே தனியாக வரலாம்?

ஐ எழுத்து (கை,நை….னை..) எங்கே தனியாக வரலாம்?
புதிதாக தேமாங்காய்…...என்றெல்லாம் சொல்கிறீர்களே.அவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அசை பிரித்தால் போதாதா?
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Sun Mar 04, 2018 7:09 am

தனிக்குறில் ஒரு சீரின் கடைசியில்தான் வரும் ; மற்ற இடங்களில் ஒற்றடுத்து வரும் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .

என்ற குறட்பாவில்

அக / ர > தனிக்குறில் இறுதியில் வந்தது .
முத / ல > தனிக்குறில் இறுதியில் வந்தது .
எழுத் / தெல் / லாம் > தனிக்குறில் இடையில் ஒற்றடுத்து வந்தது .
ஆ / தி > தனிக்குறில் இறுதியில் வந்தது .
பக / வன் . தனிக்குறில் இறுதியில் ஒற்றடுத்து வந்தது .

கைநாட்டு > கை / நாட் / டு - சொல்லின் முதலில் கை வந்தது .

( க் + ஐ = கை )

வாழ்க்கை > வாழ்க் / கை - சொல்லின் இறுதியில் கை வந்தது .

சீர்களை இனம் கண்டு கொள்வதற்காகப் பெயர் வைக்கப்படுகிறது .

உதாரணமாக

நேர் நேர் > தேமா எனப்படும் . " தேமா " என்ற சொல்லை அசை பிரித்தாலே நேர் நேர் என்று வரும்
இதுபோல இரண்டு சீர் மற்றும் மூன்று சீர்களுக்குக் காரண காரியத்தோடு பெயரிட்டுள்ளனர் என்பதை அறியவேண்டும் .

தேமாங்காய் என்ற சொல் நேர் நேர் நேர் என்று வருகின்ற சொல்லைக் குறிக்கும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Sun Mar 04, 2018 7:25 am

@மூர்த்தி wrote:

முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.

.
மேற்கோள் செய்த பதிவு: 1261068

நீச்சல் தெரிந்தபின் நீந்துவோம் என்னாது
மூச்சடக்கி ஆற்றில் குதி .

பொருள் : நீச்சல் தெரிந்துகொண்டு நீந்துகிறேன் என்று சொன்னால் , நீச்சலைக் கற்றுக்கொள்ளவே முடியாது . ஆற்றிலே குதித்துதான் நீச்சலைக் கற்றுக்கொள்ள வேண்டும் .

அதுபோல தமிழிலக்கணம் கற்றுக்கொண்ட பிறகு யாப்பிலக்கணம் கற்றுக்கொள்கிறேன் என்றால் , செய்யுள் இலக்கணம் கற்றுக்கொள்ள முடியாது .

யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளும்போதே , தமிழிலக்கணமும் கற்றுக் கொள்ளலாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Sat Mar 10, 2018 8:09 am

பட்டப் பகலில் பருவப்பெண் கத்தியால்
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .

இந்தக் குறட்பாவில்

பட் / டப் > நேர் நேர் > தேமா
பக / லில் > நிரை நேர் > புளிமா
பரு / வப் / பெண் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கத் / தியால் > நேர் நிரை > கூவிளம்
வெட் / டிக் > நேர் நேர் > தேமா
கொலை / யுண் / டாள் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
நேற்று > நேர்பு என்னும் வாய்ப்பாடு .

முதல் சீரும் மூன்றாம் சீரும் மோனை நயம் பெற்றும் , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றும் வந்துள்ளது .

என்று வெண்பா இலக்கணம் பயின்று வந்துள்ளது .
மா முன் நிரை
விள முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by T.N.Balasubramanian on Sat Mar 10, 2018 12:13 pm

இதற்கு பெயர் "நடப்பு குறட்பாவோ" ??

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Sat Mar 10, 2018 12:43 pm

ஆம் ஐயா !

இப்படியும் குறட்பா மீது மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை