ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

MGR நடிச்ச பாசமலர்

View previous topic View next topic Go down

best MGR நடிச்ச பாசமலர்

Post by heezulia on Sun Feb 18, 2018 2:53 pm

16.02.2018

ஆனந்த விகடனில் வேடிக்கையான ஒரு ஆர்ட்டிக்ள் படிச்சேன். ரசிச்சேன், சிரிச்சேன். நீங்களும் படிங்க, ரசிங்க, சிரிங்க.

சிவாஜி நடிச்ச பாசமலர் படம் இருக்கே, அதுல சிவாஜிக்கு பதிலா MGR நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்னு எழுதியிருந்துச்சு. 

MGR – ராஜசேகரன் 
சாவித்திரி – ராதா 
ஜெமினி கணேசன் – ஆனந்த் 
அசோகன் – ஃபேக்ட்ரி மொதலாளி 
RS மனோகர், OAK தேவர், தங்கவேலு – ராஜசேகரை கொல்ல மொதலாளியால ஏற்பாடு செய்யப்பட்டவங்க. 
MN ராஜம் – ராஜசேகரனின் உதவியாளர். அவனை ஒருதலையாய் லவ்வுறா.
பத்மினி – அசோகனின் மகள் 

ராதாவும், ராஜசேகரனும் அம்மா அப்பா இல்லாத குட்டிப் பிள்ளைங்க. ஒரே…………………………… பாட்ல வளந்துர்றாங்க. 

சினிமா இலக்கணம் ஒண்ணு. 

ராதா மேல அதிகமான பாசம் வச்சிருந்ததால, ராஜசேகரன் வம்புதும்புக்கு போறதில்ல. ஒரு ஃபேக்ட்ரீல வேலை செய்றான். அங்க முதலாளி அசோகன். சம்பளம் சரியா கொடுக்காததால, ஃபேக்ட்ரில வச்சே முதலாளிய மொத்………………..து மொத்தூன்னு மொத்த, அண்ணனுக்கு வேல போச்சு. 

சோ..............கமா வீட்டுக்கு வர்றான். ராதா பேசுறா, “அண்ணா, தாய்க்குலத்துக்கு ஒண்ணுன்னா நீங்க தா..............ங்க மாட்டீங்க. உங்க மொதலாளிய என்னிக்காவது வெளுப்பீங்கன்னு எனக்கு தெரியும். உங்களுக்கு வேல போயிரும்னும் எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால உங்க பாக்கெட்ல இருந்து தென…………….மும் பத்து ரூபாய் எடுத்து ஆ..........யிரம் ரூபா சேத்து வச்சிருக்கேன்”ன்னு சொல்லி அதை ராஜசேகரன்ட்ட கொடுக்கிறாள். அவன் சோகத்லயும், சந்தோஷத்லயும் அழுறான். 

MGRக்கு இப்படி அழ தெரீமா?

“இந்த ஆ..........யிரம் ரூபாய வச்சுட்டு, நான் உலகத்திலேயே................ பெரீ............ய வ்யாபாரியாகி காட்றேன்” ன்னு சபதமே எடுக்கிறான். 

சினிமா இலக்கணம் ரெண்டு. 

எந்த வேலைன்னு இல்லாம கெடச்ச வேலை எல்லா.................த்தயும் செய்றான். ஒரே...................... பாட்டுல பணக்காரனாறான். 

சினிமா இலக்கணம் மூணு. 

பழைய ஃபேக்ட்ரில வேல செஞ்சுட்டு இருக்கும்போது, ராஜசேகரனுக்கு ஆனந்த்னு ஒரு friend. அவனுக்கும் வேல போச்சு போல. அவன் வேல தேடி அலஞ்சுட்டு இருக்கான். அவன் ராஜசேகரன்ட்ட வேலை கேட்டு வாரான். அவனும், friend ஆச்சேன்னு வேலை போட்டு தாரான். ராதாவும், ஆனந்தும் லவ்வுறாங்க. 

இந்தக் கதையில ஒரு பெரிய change. ஆனந்துக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்துச்சாம். அதுவும் ரெண்.............டு பொண்டாட்டீங்க. அதோடு மட்டுமா. நா............லு புள்ளைங்க வேறயாம். இது யா............ருக்குமே தெராதாமே. இது வேற. 

MGR நடிச்சா இப்டீல்லாமா ட்விஸ்ட் வைப்பாங்க? 

ராதா லவ்வு வெவகாரம் ராஜசேகரனுக்கு தெரியுது. தன் ஃபேக்ட்ரிக்கு போறான். ஆனந்தை பின்................னி எடுக்கிறான். இந்த விஷயம் ராதாவுக்கு எப்படிதான் தெரியுமோ, அவள் ஃபேக்ட்ரீல போய் நிக்கிறா. ஆனந்தனை ராஜசேகரன் அடிக்கிறதை தடுக்கிறா. “இந்த அண்ணனை மன்னிச்சிடுமா”ன்னு ராஜசேகரன் கெஞ்சுறார். 

ஆனா ஆனந்த் என்ன செஞ்சான்னு நினைக்கிறீங்க. ராஜசேகரன் அடிச்ச கோவத்தில, மொதல்ல வேல செஞ்ச ஃபேக்ட்ரி ஓனர் இருக்கானே, அவன் கூட போய் சேந்துட்டான். எதிரிக்கு எதிரி நண்பனாமே. அந்த மொதலாளி, தன் ஃபேக்டரில ஆனந்தை சேத்துக்கிறான். ரெண்..............டு பேரும் சே.................ர்ந்து ராஜசேகரனை ஒழிக்க சதி செய்றாங்க. அதுவும் யாரோடு சேர்ந்து? RS மனோகராம், OAK தேவராம். 

கூட்டணி போதாதோ? MGR ஆச்சே. 

அவங்க ரெண்டு பேரும், ராஜசேகரனை கொல்ல ட்ரை பண்றாங்க. ராஜசேகரன் என்னமோ ரெண்டு அடி வாங்கிக்கிறான். அப்புறம் பாருங்க, அந்த ரெண்.....டு பேரையும் உட்...............டு, உடுன்னு உட்றான். முப்பத்தொம்போ.............து அடி அடிச்சுட்டான். நாப்பதா.............வது அடீல ரெண்டு பேரும் விழுந்துர்றாங்க. 

ராஜசேகர் தப்பிச்சுட்டான். அதனால வேற வழீலதான் ராஜசேகரை கொல்லணும்னு சொல்லி, தங்கவேலுவை கூப்ட்றான், மொதலாளி. ராஜசேகரின் சாப்பாட்ல விஷத்த கலக்க சொல்றான். தங்கவேலு விஷத்தை கலக்குறான். ராஜசேகரை விஷமும் ஒண்........................ணும் பண்ணலியே. எதுக்குன்னு தெரியுமா? வேடிக்கை. ராஜசேகர் தங்க பஸ்பம் நிறை......................ய சாப்ட்ருக்கானாம். அதனால அவன் ஒடம்புல, விஷம் வேல செய்யலியாம். 

என்னமாத்தான் கற்பனை பண்றாங்களோ. 

ராதா கர்ப்பமாகிறா. இது ராஜசேகருக்கு தெரியுது. வருத்தப்பட்டு, ஆனந்த்ட்ட போயி மன்னிப்பு கேக்குறான். 

மூணாந்தாரமானாகூட பரவாயில்ல, ஆனந்துக்கே ராதாவை கட்டு குடுத்துறலாம்னு ராஜசேகர் நெனச்சுட்டான் போலியோ? 

ராஜசேகர் மன்னிப்பை சாதாரணமா ஆனந்த் ஏத்துக்கல. அவன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்க சொல்றான் ஆனந்த். “அண்ணாவைத் தவிர வேற யாருக்காகவும் என் தலை குனியாது”னு ராஜசேகர் பஞ்ச் வசனம் பேசுறான். ஆனந்த்ட்ட இப்படி பேசிட்டு இருக்கும்போது, பின்னால அசோகன் வர்றான், கைல கத்தியோடு. ராதாவுக்கு எப்படி தெரியுமோ, அவள் அங்க வந்து சேர்றா. அசோகன் ராஜசேகரை கத்தியால குத்தப் போறான். ராதா நடுவுல புகுந்துர்றா. கத்தி குத்து வாங்கிட்டு உயிரை விட்றா. 

இந்த ராதா என்னான்னா, ஆ ஊன்னா அண்ணனை பார்க்க ஃபேக்டரிக்கு வந்துற்ரா.

உயிரை விட்டது தங்கச்சியாச்சே, வந்துச்சே கோவம் ராஜசேகருக்கு. அசோகனையும், ஆனந்தையும் பக்கத்ல இருந்த புதைகுழில தள்ளி விட்டுர்றான். அவங்க கதை க்ளோ...........ஸ். 

அதுக்கப்புறமா, தங்கச்சி ராதாவின் உடம்பை தூக்கிட்டு, ராஜசேகர் ஃபேக்டரிக்கு வெளியே வர்றானாம். 

ஆமா ஃபேக்ட்ரிக்குள்ள புதைகுழி எங்கேயிருந்து வந்துச்சு?

ராஜசேகர் ராதாவின் உடம்பை தூக்கிட்டு ஃபேக்ட்ரீக்கு வெளியே வரும்போது, அவன் பின்னாலயே ரெண்டு பொம்பளைங்க வாராங்க.. ஒருத்தி, ஃபேக்ட்ரீல ராஜசேகரனின் உதவியாளர். அவனை one side லவ். இன்னொருத்தி, அசோகனின் மகள். 

அவங்க ரெண்டு பேர்ட்டயும் ராஜசேகர் சொல்றான், “அனாவசியமா என் பின்னால வராதீங்க. என் தங்கச்சி நெனப்புதான் எனக்கு உலகம். நான் ஒரு ஆசிரமத்தை உருவாக்கி, உலகத்தில [உலகத்திலயாம்] அண்ணன் இல்லாத தங்கச்சிகளையெல்லா.....ம் வச்சு, அவங்களை கவனிச்சுக்க போறேன். நான் ஒரு பாசமலர்னு வாழ்ந்து காட்டப்போறேன்” ன்னு சொல்லிட்டு, வந்த கண்ணீரை ஒரு சுண்டு சுண்டிட்டு, தங்கச்சியின் உடம்பை அடக்கம் பண்ண போனானாம். சுபமாம். 

நல்ல வேள, MN ராஜத்திட்டயும், பத்மினிட்டயும் “உங்களுக்கு அண்ணன் இல்லாட்டி, இந்த ஆசிரமத்தில சேர்ந்து, போணி பண்ணுங்க”ன்னு சொல்லாம போனான் ராஜசேகர். 

விகடன்ல வந்த இந்த கற்பனை கதை எனக்கு புடிச்சிருந்துச்சு. அங்கங்க கொஞ்சம் கச்சாமுச்சான்னாலும் படிக்க நல்லாத்தான் இருந்துச்சு. 

உங்களுக்கு? 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 4:38 pm

இது மாதிரி சினிமாவை
கிண்டல் பண்ணி பிராண்டுவது
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து
விட்டது
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by heezulia on Sun Feb 18, 2018 7:22 pm

18.02.2018 

எங்க சார் கிண்டல் பண்ணியிருக்கு? MGR நடிச்சிருந்தா எப்படி படம் இருந்திருக்கும்னு, ஒரு கற்பனையாத்தானே சார் சொல்லியிருக்காங்க. இதுல பிராண்டுவதுன்னு வேற சொல்லியிருக்கீங்க. 

நீங்க இப்படி சொல்றீங்க. என் நண்பர் ஒருத்தருக்கு இதையே அனுப்பினேன்.  அவர் என்ன சொன்னார் தெரியுமா? 

"MN ராஜத்துக்கு ஒரு கனவு டூயட்டும், பத்மினிக்கு ஒரு காதல் டூயட்டும் இருக்க வேண்டாமா? ஜெமினி, சாவித்திரிக்கு சரியில்ல. ஜெமினிக்கு பதிலாக நம்பியாரை போட்டுக்கலாம். நம்பியாருக்கு ஜோடியாக விஜயகுமாரியோ, எல்.விஜயலட்சுமியோ இருக்கலாம்" னு சொல்லியிருந்தார். இன்னொருத்தர் "நல்ல நகைச்சுவை" ன்னு எழுதியிருந்தார். 

அவங்க எப்படி யோசிச்சிருக்காங்க பாருங்க. வேடிக்கையாக, விளையாட்டாக, காமெடியாக எதையும் எழுத தயக்கமால இருக்கு. சரி என்ன செய்றது அவங்கவங்களுக்கு ஒரு தொலைநோக்கு பார்வை இருக்குல்ல. ஜாலியா எடுத்துக்கிறவங்க ஜாலியா எடுத்துக்குவாங்க. ஆனா இதுவரை 99.5% காமெடியா பாக்கிறவங்கதான் இருக்காங்க. உங்க கருத்தை நீங்க எழுதியிருக்கீங்க. 

அதுக்கு அப்படி சொன்னீங்க. இதுக்கு என்ன சொல்லப்போறீங்க. இது ஹிந்து பேப்பரில் வந்துச்சு. 

வங்கித் திருவிளையாடல்.

கஸ்ட்டமர் : இந்த ஆள் கொண்டுவந்த ச்செக்கிற்கு பணம் இல்லேன்னு  சொன்னவன் எவன்?


மேனேஜர் : அவன் இவன்னு  ஏகவசனம் வேணாம். அடக்கதுடன் கேட்டா, அதுக்கு  தக்க பதில் சொல்வாங்க.

கஸ்ட்டமர் : அப்படீன்னா மேனேஜரை விட மத்தவங்களுக்கு இங்க அதிகாரமோ?

மேனேஜர் : இது நார்மல் பேங்கிங் நாள் இல்ல. ஸ்பெஷல் வர்கிங் டே. இன்னிக்கி  எல்லாருக்கும் சம உரிமை உண்டு.

கஸ்ட்டமர் : அதனால்தான் இவன் கொண்டு வந்த ச்செக்கிற்கு பணம் தரமாட்டேன்னீங்களோ?

கேஷியர் : ஆம். ச்செக் சரியில்லாததால பணம் வாங்க அருகதையில்லன்னு சொன்னவன்  நான்தான்.

கஸ்ட்டமர் : யார் இந்தப் பரட்டை?

மேனேஜர் : இந்தக் கிளைல தலைமை கேஷியர் மிஸ்டர் பரட்டையார்.

கஸ்ட்டமர் : ஆ! பரட்டை! கிளையின் காசாளர் என்ற அகம்பாவத்திலதான் ச்செக்ல குறை கண்டீரோ? என்ன குற்றம் கண்டீர்?

கேஷியர் : முதல்ல ச்செக்ல கையெழுத்து போட்டது யார்? அதுக்கு பதில் தேவை.

கஸ்ட்டமர் : யாம்! யாம்! கையெழுத்திட்டோம்.

கேஷியர் : கையெழுத்திட்ட நீர் வராமல் அதை இன்னொருத்தர்ட்ட கொடுத்து அனுப்பியதுக்கு  காரணம்?

கஸ்ட்டமர் : அது நடந்து முடிஞ்ச கத. தொடங்கிய பிரச்னக்கு வாரும்.

கேஷியர் : கஸ்ட்டமருக்கு முதல்ல பொய் சொல்றது தேவயில்ல. அதை நீங்கள் புரிஞ்சுக்கணும். 

கஸ்ட்டமர் : புரிஞ்சது  புரியாதது தெரிஞ்சது  தெரியாதது எல்லாத்தயும்  யாம் அறிவோம். அதுபற்றி உமது அட்வைஸ் நாட் நெஸஸரி. ஐ நோ எவ்ரிதிங்.

கேஷியர் : எல்லாம் தெரிஞ்சுகிட்டா செக்கில் பிழை இருக்காதுன்னு அர்த்தமா? அதுபற்றி நாம் குற்றம் சொல்லாகூடாதா?

கஸ்ட்டமர் : பரட்டை! என் ச்செக்கில் குற்றம் சொல்றாராம்! சொல்லும், சொல்லும், சொல்லி  பாரும்.

மேனேஜர் : சார்! சாந்தமா பேசுங்க. ச்செக் பற்றிய டிஸ்கஷன் தேவைதான். ஆனா அது சண்டையாக மாறிடக்கூடாது.

கஸ்ட்டமர் : சண்டையும் சச்சரவும் பேங்க்கர்  கஸ்ட்டமர்களின் பரம்பரைச் சொத்து. அத மாத்த  யாராலும் முடியாது. கொஞ்சம் பொறுத்திருந்து பாரும்! பரட்டையாரே, எமது ச்செக்ல எங்க குறை கண்டீர்? கையெழுத்திலா? இல்ல  அமௌண்ட்   இன் வர்ட்ஸிலா? [Amount in words]

கேஷியர் : கையெழுத்ல குற்றமில்ல. இருந்தாலும் மேனேஜ் பண்ணிக்கலாம். எழுதிய அமௌண்ட்டில் தான் குற்றம் இருக்கு. எங்க, நீர் எழுதிய அமௌண்ட்டை  இன்னொரு தடவ  சொல்லும்.

கஸ்ட்டமர் : ஹா! இரண்டு, நான்கு, ஸைபர், ஸைபர், ஸைபர்... இருபத்து நாலாயிரம்.

கேஷியர் : இதனால நீர் சொல்ல வந்தது?

கஸ்ட்டமர் : இதுகூடத் தெரியலியா தலைமை கேஷியருக்கு? இட் மீன்ஸ் ஐ நீட் ட்வென்டி ஃபோர் தௌசண்ட் ருப்பீஸ்..

கேஷியர் : ஆனா உங்க அக்கௌண்ட்ல  இருந்து நீங்க ஏற்கனேவே ATM மூலம் 2500  ரூபாய்  எடுத்திருப்பதால, இப்போ 24,000  ரூபாய்கள் தர முடியாது. இதுதான் எமது தீர்ப்பு.

கஸ்ட்டமர் : குழந்தையோட ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டணும்னு  வர்றவனுக்கும் இதே தீர்ப்புதானோ?

கேஷியர் : ஆமா, இதே... தீர்ப்புதான்.

கஸ்ட்டமர் : உங்க சொந்தக்காரர், நண்பர்களுக்கும் இதே தீர்ப்புத்தானோ?

கேஷியர் : ஆ.....மா.

கஸ்ட்டமர் : உங்க ப்ராஞ்ச் மேனேஜருக்கு?

கேஷியர் : அவரென்ன, எங்கள் சென்னை மண்டலத்தை நிர்வகிக்கும் ஜெனெரல் மேனஜருக்கும் இதே..... பதில்தான்.

கஸ்ட்டமர் : மிஸ்டர் பரட்டை! நன்றாகப் பாரும்! இந்த ID கார்டை பாரும்! இப்போதும் அதே பதில்தானோ?

கேஷியர் : நீரே இந்த வங்கியின் புதிய ச்சேர்மன் ஆகுக. IDயைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by மூர்த்தி on Sun Feb 18, 2018 8:04 pm

பாசமலர் ,திருவிளையாடல் படங்களின் வசனங்களை வைத்து நகைச்சுவையாக எழுதப்பட்டது நன்றாகவே இருந்தது. தந்த உங்களுக்கும் எழுதியவர்களுக்கும் நன்றி.

திருவிளையாடலை கிண்டலடித்திருந்தாலும் நல்லதுதான்.திருவிளையாடலில் வரலாற்றையே மாற்றி கேலிக்கூத்தாக்கியது சினிமா. திருவிளையாடலைப் பார்க்காதே என்று தாத்தா சொல்வார். தருமியின் பாத்திரத்தை கேலிக்கூத்தாகியது சினிமா. வரலாற்றில் அப்படி இல்லை. சமீபத்தில் நெல்லை கண்ணனின் பேச்சொன்றில் திருவிளையாடலை அவர் கடுமையாக விமரிசித்திருந்தார். தருமியின் பாத்திரத்தை கேலிக்கூத்தாக்கி வரலாற்றையே மாற்றிவிட்ட சினிமாவை கடுமையாக கண்டித்திருந்தார்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by heezulia on Sun Feb 18, 2018 10:25 pm

18.02.2018 

நாம சினிமாவுக்கு எதுக்கு போறோம் மூர்த்தி?  

சினிமா ஒரு entertainment.  பொழுதுபோக்குக்காக, மனசை ரிலாக்ஸ் செய்றதுக்காக போறோம். ஜனங்களை சந்தோஷப்படுத்துறதுக்காக, படம் எடுக்கிறவங்க வ்யாபார ரீதியாக அப்படி எடுக்கத்தான் செய்வாங்க. நம்ம ஜா.........லியா போனோமா, ஜா...........லியா பாத்தோமா, ஜா.........லியா எஞ்சா............ய் பண்ணினோமா, ஜா.........லியா வந்தோமான்னு இருக்கோம்.  விமர்சனம் செஞ்சாலும், அப்படிப்பட்ட படங்களுக்கு கூட்டம் கூட்டமாக ஜனங்கள் போய் அந்த படத்தை பார்க்கத்தானே செய்றாங்க. சினிமாக்காரங்களும்  ஜனங்களின் மனசு தெரிஞ்சு, அதுக்கேத்த மாதிரிதான் படம் எடுக்கிறாங்க.  ஜனங்களும் ஜாலியா பொழுது போக்கிட்டு வர்றாங்க. அவ்ளோதான். 

கொஞ்சம் சீரியஸான படங்கள்ல, அந்த இறுக்கத்தை தளர்த்த, என்ன செய்றாங்க? கொஞ்சம் காமெடியை போட்டு, ஜனங்களின் மனசை திசை திருப்புறாங்க. இப்படி எத்தனையோ. சினிமா சந்தோ............ஷமாக பொழுது போக்க மட்டுமே. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by மூர்த்தி on Sun Feb 18, 2018 11:13 pm

பொழுதுபோக்கு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நகைச்சுவை யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும். உண்மையை மாற்றிச் சொன்னாலும்,வரலாற்றை மாற்றிச் சொன்னாலும் அவற்றை பொழுபோக்காக நகைச்சுவையாக மட்டும் ஏற்க முடியாது. உண்ணும் உணவு ருசிக்காக மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்காகவும் இருக்க வேண்டும்.

அதேபோல் சினிமாவும் பொழுதுபோக்காகவும் அதேசமயம் கருத்தையும் சொல்ல வேண்டும். அப்படி பொழுதுபோக்கு என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டதால்தான் தமிழ் நாடு இவ்வளவு மோசமாக சினிமா பைத்தியமாக மாறி இருக்கிறது. பால் அபிசேகம்,கடவுட் கலாச்சாரம்,நடிகர்களுக்காக தீக்குளிப்பு,நடிகைகளுக்கு கோயில் என மாறி பைத்தியம் பிடித்து ஆடும் கூட்டமாக மாறி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை. பொழுதுபோக்காக பார்ப்பார்கள்,கொண்டாடுவார்கள். அப்புபுறம் தங்கள் வேலை உண்டு போய் விடுகிறார்கள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by SK on Mon Feb 19, 2018 12:12 pm

MGR பாசமலர் மாதிரி என் அன்னான் படத்துல சிவாஜி நடிச்சிருந்த எப்படி இருக்கும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by heezulia on Mon Feb 19, 2018 3:34 pm

19.02.2018

நீங்க ஒண்ணு சொன்னது சரிதான் மூர்த்தி. பைத்தியக்காரத்தனமாதான் நடந்துக்கிறாங்க. குடும்பத்துக்காக கூட எதுவும் செய்யமாட்டாங்கபோல. அதை விட மேலா, ரசிகர் மன்றம்ங்கிற பேர்ல லூஸுத்தனமா நடந்துக்கிறாங்க.  

சரி, இவங்கள சினிமாக்காரங்களா இப்படீல்லாம் செய்ய சொன்னாங்க? சினிமாக்காரங்க என்ன செய்வாங்க. அவங்க பொழப்புக்காக, அவங்க சினிமா எடுக்கிறாங்க. அதை இந்த ஜனங்கள் பாத்துட்டு சும்மா வராம, இப்படி மிஸ்யூஸ் செஞ்சுக்கிறாங்க. சினிமாக்காரங்கள தப்பு சொல்லி என்ன பிரயோஜனம்? 

சரி உடுங்க. யாரும் என்னமும் செஞ்சுட்டு போவட்டும் நமக்கென்ன வந்துச்சு?

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by heezulia on Mon Feb 19, 2018 3:40 pm

19.02.2018

பாசமலர் எடுத்த பீம்சிங் மாதிரி ஒருத்தர் வரட்டும், ஒரு வார்த்த கேட்கலாம் SK . 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by SK on Mon Feb 19, 2018 3:46 pm

@heezulia wrote:19.02.2018

பாசமலர் எடுத்த பீம்சிங் மாதிரி ஒருத்தர் வரட்டும், ஒரு வார்த்த கேட்கலாம் SK . 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1260025

வரட்டும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: MGR நடிச்ச பாசமலர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum