உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ்

முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Empty முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ்

Post by ayyasamy ram on Wed Feb 07, 2018 7:19 am

மின்வாரிய தொழிலாளர்களின் ஊதியத்தை இறுதி செய்வதை விட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்திற்கு இருமுறை டெல்லிக்கு தூது சென்று வருவது தான் முக்கியப் பணியா? என்பதை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெளிவுபடுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 90,000 பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், 4 மாதங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.10,000 உடனடியாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மேலோட்டமாக பார்ப்பதற்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகத் தோன்றினாலும் இது மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை சில ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் முயற்சியாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்து, அவர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 26 மாதங்களாகியும் இன்றுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16, 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அப்போது ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று, மின்வாரியத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்வதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தமிழக அரசு ஆர்வம் காட்டாததால், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த மாதம் தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்களின் போது, வரும் 12ஆம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று மின்சாரவாரிய அதிகாரிகளும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

அதன்படி, இன்னும் 10 நாட்களில் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது மின்வாரிய பணியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்னும் இறுதி செய்யாததற்கு அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பணிச்சுமை காரணமாகவே புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியிருக்கிறார். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 26 மாதங்களுக்கு முன்பு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை இறுதி செய்வதைவிட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு வேறு என்ன பணிச்சுமை இருக்கிறது? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்திற்கு இருமுறை டெல்லிக்கு தூது சென்று வருவது தான் தமது முக்கியப் பணியா? என்பதை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெளிவுபடுத்தவேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதற்காக பல கட்டங்களாக பேச்சு நடத்தவும் தேவையில்லை. தமிழகஅரசு பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது? என்பதை தீர்மானிப்பதுதான் மிகவும் சிக்கலானது ஆகும்.

ஆனால், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்டதைப் போலவே, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப் படும் என்று அறிவித்ததன் மூலம், இந்தச் சிக்கலுக்கு மிக எளிதாக தீர்வு காணப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களும் அதே அடிப்படையில் ஊதிய உயர்வு கோரிய நிலையில், அவர்களுக்கு 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதை போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய உயர்வு விகிதம் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கும், அதேபோல் 2.57 காரணி
மடங்கு ஊதிய உயர்வு வழங்குவது தான் இயற்கை நீதி
ஆகும்.
இதுதொடர்பாக, மீண்டும் மீண்டும் பேச்சு நடத்தவேண்டிய
தேவையில்லை.


வரும் 12ஆம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், 16ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாகவும், அதை காலவரையற்ற போராட்டமாக மாற்றப்போவதாகவும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்வாரியத் தொழிலாளர்களை போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளக்கூடாது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கு 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கி, புதிய ஊதிய ஒப்பந்தத்தை வரும் 12-ஆம் தேதிக்குள் கையெழுத்திட தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Empty Re: முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ்

Post by SK on Wed Feb 07, 2018 11:11 am

அடுத்தது மின் கட்டண உயர்வா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை