ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கவர்ந்த நடிகர்களுடன் கத்ரீனா கைப்

View previous topic View next topic Go down

கவர்ந்த நடிகர்களுடன் கத்ரீனா கைப்

Post by ayyasamy ram on Mon Feb 05, 2018 7:46 am



மகிழ்வும் நிறைவுமாக இருக்கிறார், பிரபல இந்தி நடிகை
கத்ரீனா கைப். சல்மான்கானுடன் இவர் இணைந்து
நடித்திருக்கும் ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் பெரும்வெற்றி
பெற்றிருக்கும் நிலையில், அமீர்கானுடன்
‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’, ஷாருக்கானுடன் ‘ஜீரோ’ போன்ற
படங்களிலும் வரிசையாக நடித்திருப்பது, கத்ரீனாவின்
மகிழ்ச்சிக்குக் காரணம். அவரது பேட்டி:
---
‘டைகர் ஜிந்தா ஹை’ படத்தின் வெற்றி, உங்களுக்கு பெரும்
மகிழ்ச்சியை தந்திருக்கிறது அல்லவா?


ஆமாம். ஒரு நடிகையாக, நான் நடிக்கும் எல்லாப் படங்களும்
வெற்றி பெற ஆசைதான். அதிலும் கடும் உழைப்பில் உருவான
படங்கள் வெற்றி பெறுவதில் ரொம்பவே மகிழ்ச்சி. சிறந்த
படம் என்ற வகையில், ‘டைகர்...’ முழு வெற்றிக்குத் தகுதியானது.

எல்லா நடிகைகளுக்கும் அவர்களது படத்தின் வெற்றி
முக்கியமானது. ஆக, இந்த வெற்றியில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக
இருக்கிறேன்.

அடுத்தடுத்து உங்கள் நடிப்பில் வெளியாகப்போகும் படங்களும்
வித்தியாசமானதாக இருக்கிறதே?

நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று
வித்தியாசமானவைகளாக இருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சி
தருகிறது. அவை எல்லாமே சுவாரசியமான வேடங்கள்.
இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் நான் இன்ப
அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

உங்களின் மிகப் பெரிய விசிறி என்று நடிகர் அக்ஷய்குமார்
சமீபத்தில் கூறியிருக்கிறாரே?


நாங்கள் இருவரும் நட்பில் இருந்தாலும், அடிக்கடி சந்தித்துக்
கொண்டதில்லை. என் வாழ்வில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில்
ஒருவர், அக்ஷய். கடந்த சில ஆண்டுகளாக நான் அவருடன்
சேர்ந்து நடிக்கவில்லை.

எனக்கு மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்
கிடைக்கும் என்று எண்ணுகிறேன். விரைவாக அந்த வாய்ப்பு
கிடைத்தால் மகிழ்வேன். அக்ஷய் மிகவும் நேர்மையானவர்
என்பதால், அவருடன் இணைந்து நடிக்க அதிக ஆசைப்படுகிறேன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கவர்ந்த நடிகர்களுடன் கத்ரீனா கைப்

Post by ayyasamy ram on Mon Feb 05, 2018 7:53 am


சல்மான்கானுடன் நீங்கள் மீண்டும் இணைந்து நடித்ததையும்
ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் அல்லவா?

ஆமாம். முதல் படத்தைப் போல இப்படத்திலும் எனக்கும்
சல்மானுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக
இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மக்கள் இப்படத்தை
ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டதை பெரிய விஷயமாகக்
கருதுகிறேன்.

உங்களின் லேட்டஸ்ட் படங்களின் மூன்று கதாபாத்திரங்களும்
ஒன்றுக்கொன்று முற்றிலும் வித்தியாசமானவை அல்லவா?

‘ஜீரோ’ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மிகுந்த
சுதந்திரம் கொடுப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
டைகர் ஜிந்தா ஹை படத்தின் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவும்
எனது அபிமான இயக்குனர்.

அமீருடன் நடிப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன். திரையுலகின்
அறிவுஜீவிகளில் அவரும் ஒருவர். ‘டைகர்...’ எனது சிறந்த
படங்களில் ஒன்று. அதில் நான் மிகவும் நேசிக்கும் அப்பாஸ் அலி,
சல்மானுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.

நான் கூறிய இவர்கள் எல்லோருமே தங்கள் வேலைகளில் மிகவும்
தீவிரமாக இருப்பவர்கள் என்பதால், இவர்களுடன் இணைந்து
பணிபுரிய எனக்குப் பிடிக்கும்.

நிறைய புகழ், பாராட்டைச் சம்பாதித்துவிட்ட பெரிய நட்சத்திரமான
நீங்கள் இப்போது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்?

நான் இயற்கையாகவே ஒரு போராளி. எனக்கு எப்போதுமே
இலக்குகள் வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும்.
நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன்.

தவிர, இப்போதைக்கு எனக்குத் திருமணமாகவில்லை, எனக்கு
என்று ஒரு குடும்பம் இல்லை. வாழ்க்கையில் உறவு, குடும்பம்,
குழந்தைகள் எல்லாம் முக்கியம்தான். அவை ஒரு சமநிலையைத்
தரும். ஆனால் அவை எல்லாம் இல்லாவிட்டால் நாம் நமது சக்தியை
எல்லாம் நம் வேலையில் செலுத்தலாம்.

நாம் காலையில் எழும்போது நமக்கு என்று ஒரு லட்சியம்,
அதற்கான ஒரு திட்டம் இருக்க வேண்டும். நாம் நகராமல்
தேங்கிக்கிடந்தோம் என்றால், செத்துவிட்டோம் என்று அர்த்தம்.
-
---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கவர்ந்த நடிகர்களுடன் கத்ரீனா கைப்

Post by ayyasamy ram on Mon Feb 05, 2018 7:54 am


புதிய நடிகைகள் உங்களுக்கு போட்டியைத் தருகிறார்களா?

அவர்கள் வருகையை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
புது நடிகைகளுடன் போட்டிபோட வேண்டும் என்பதற்காக
நான் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

திரையுலகில் நாம் ஒரே ஒருவர் இருந்தாலும் சரி, பத்து நடிகைகள்
இருந்தாலும் சரி, நாம் கஷ்டப்பட்டு உழைத்துத்தான்
ஆக வேண்டும். கடின உழைப்பு என்பது நமது மரபணுவிலேயே
இருக்க வேண்டும்.

புதிய நடிகைகளில் நீங்கள் ஆலியா பட்டுடன்தான்
அதிக நெருக்கமாக இருப்பது போலத் தோன்றுகிறதே?

ஆலியாவின் நடிப்பு பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
மற்ற நடிகைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக்
கிடைக்காத சில வாய்ப்புகள் ஆலியாவுக்குக் கிடைக்கின்றன
என்பது உண்மை.

அவருக்கு 22 வயது, நான் அவரைவிட மூத்தவள். வாழ்க்கை
தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்ற உண் மையை
நாம் உணர வேண்டும். தினந்தோறும் நாம் முன்னால் போய்க்
கொண்டே இருக்கிறோம்.

இது வாழ்க்கையின் ஓட்டம், இதில் வரும் மாற்றங்களை நாம்
தழுவிக்கொள்ளத்தான் வேண்டும். இன்று எனக்குப் புதிய,
உற்சாகமூட்டும் பல விஷயங்கள் இருக்கின்றன.

நான் இன்றிருக்கும் நிலையில், எனக்கு ஏற்ற படங்களை
இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தருவார்கள் என்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கத்ரீனாவின் குரலில் தெளிவும் தீர்க்கமும் தெரிகின்றன.
-
----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கவர்ந்த நடிகர்களுடன் கத்ரீனா கைப்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum