ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்

View previous topic View next topic Go down

எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்

Post by ayyasamy ram on Thu Jan 25, 2018 7:23 am

எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2009-ம் ஆண்டு கடலுக்குச் சென்றனர். அப்போது தமிழக மீனவர்கள் எல்லையைக் கடந்து வந்து தங்களின் கடல் வளங்களையும், வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கும் நடுக்கடலில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இதனால் இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 3 கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகள் டெல்லி, கொழும்பு, சென்னை ஆகிய நகரங்களில் மத்திய-மாநில அமைச்சகர்கள், மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றன.

இதில் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டுகள் அவகாசம் தேவை எனவும், இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்குப் பதிலாக 90 நாட்கள் குறைத்துக் கொள்கிறோம். பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடல் பகுதியில் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

2010-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே மீன்பிடி முறைகளை மூன்று ஆண்டுகளில் மாற்றிக் கொள்கிறோம் என தமிழக விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்தும் நடைமுறைப்படுத்தாமல் தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியதால் இதுவரையிலும் நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு எட்ட முடியவில்லை.

தமிழக விசைப்படகு மீனவர்கள் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை இலங்கையின் வட மாகாண கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்திவிட்டுச் செல்வது, மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிச் செல்வது, மீனவப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும், கடலின் சூழலியலையும் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதன் விளைவாக, இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத் துறையின் சார்பில் யோசனை வழங்கப்பட்டு சட்டத்திருத்தத்தை தயாரிப்பதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டது.

இதனடிப்படையில் இலங்கை மீன்வளத்துறையின் 59/1979 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர சமர்பித்தார்.

இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் 15 மீட்டர் நீளமுடைய
படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும் ,
15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு ரூ.2 கோடியும்,
24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு
ரூ.10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள முள்ள படகிற்கு
ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகிற்கு
ரூ.17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டுப்
படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
வழக்கினை ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் எனத்
தெரிகிறது.
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 25, 2018 8:06 am

@ayyasamy ram wrote:எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் 15 மீட்டர் நீளமுடைய
படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும் ,
15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு ரூ.2 கோடியும்,
24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு
ரூ.10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள முள்ள படகிற்கு
ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகிற்கு
ரூ.17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டுப்
படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
வழக்கினை ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் எனத்
தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1257831
இந்த பிரச்சனை தீர வழியே இல்லை போல் தெரிகிறது.
இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழ் நாட்டு மீனவர்கள் நிறைய தவறு செய்வதாக
குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் யார் தவறு செய்வது?
தற்போதய தண்டனை கட்டணத்தை பாரக்கும் போது ஒன்றுக்கு ஒன்று இலவசமாக
தரவேண்டும் போல் தோன்றுகிறது. இது நல்லதல்ல.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8592
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்

Post by SK on Thu Jan 25, 2018 9:36 am

இந்த அபராதம் எல்லாம் கட்டும் அளவுக்கும் வசதி இருந்தால் அவர்கள் ஏன் மீன் பிடிக்க செல்கிறார்கள்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்

Post by T.N.Balasubramanian on Fri Jan 26, 2018 5:21 pm

இது சார்பாக தட்ஸ் தமிழ் ஊடகத்தில் வந்த செய்திக்கு
நான் அளித்துள்ள பதில்

தட்ஸ் தமிழ்
Good news! Your comment has been approved on tamil.oneindia.com in எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.17.5 கோடி அபராதம் - இலங்கை மசோதாவிற்கு தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

பக்கத்துக்கு வீட்டு காய்கறியை திருடினாலே கத்தியை எடுப்பான் பக்கத்துக்கு வீட்டுக்காரன்.நான் அப்பிடித்தான் எடுப்பேன் கத்தியை தூக்கக்கூடாது என்றால் சரிப்படுமா.
உங்களுக்கு சொந்தமான இடத்தில புகுந்து விளையாடுங்கள்.GPS உபயோகியுங்கள்.
எதையும் பயன்படுத்தமாட்டேன் மீன் மட்டும் செஷல்ஸ் தீவு வரை சென்று பிடிப்பேன் என்று அடம் பிடிக்கக்கூடாது.இலங்கை என்று இல்லை ஆந்திரா பிரதேச கடலில் பிடிக்கும் போது பிடிபடும் தமிழக மீனவர்கள் உண்டு.சொந்த நாட்டிலேயே இப்பிடி என்றால் அயல் நாட்டுக்காரன் சும்மா விடுவானா?
அழுகுணி ஆட்டம் பிடிக்காமல் மீன் பிடியுங்கள்.
ரமணியன்


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22155
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum