ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீர்மூழ்கி மீதான ஒரு பார்வை

View previous topic View next topic Go down

நீர்மூழ்கி மீதான ஒரு பார்வை

Post by ரிபாஸ் on Sat Dec 12, 2009 10:37 am

நீர்மூழ்கி மீதான ஒரு பார்வை

நீர்மூழ்கிக்
கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு
விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின்
மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை.அவன்
தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின்
அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு
அந்தத் தேவையை உருவாக்கியது. போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று
தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய
தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள்.
1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால்
பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின்
வரலாறு இக்கலத்திலிருந்தே தொடங்குகின்றது. இரண்டாம் உலகப்போர்
காலகட்டத்தில் நீர்மூழ்கிகள் பரந்துபட்டளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தற்காலக் கடற்படைகளின் பயன்பாட்டில் நீர்மூழ்கிகள் தாக்குதல்,
விமானந்தாங்கிகளின் பாதுகாப்பு, ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் வேவு போன்ற
தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடற்கலங்களின் வடிவமைப்பே அவை நீரில் மிதப்பதற்குக் காரணமாகின்றது.
அதாவது கப்பல் ஒன்று அதன் மொத்தக் கனவளவிலும் அதிகமான நீரினை
இடம்பெயர்க்கும்போது அக்கப்பல் நீரில் மிதக்கின்றது. நீர்மூழ்கிகளும்
நீரின் மேற்பரப்பில் இருக்கும்போது இதே தத்துவத்தின் அடிப்படையிலேயே
நீரில் மிதக்கின்றன. எனவே நீர்மூழ்கிகள் நீருக்கு அடியிற் செல்ல
வேண்டுமாயின், ஒன்றில் அவற்றின் நிறையினை அதிகரிக்க வேண்டும். இல்லாது
போனால் அவற்றினால் இடம்பெயர்க்கப்படும் நீரின் கனவளவைக் குறைக்க வேண்டும்.
எனவே, நீர்மூழ்கிகளில் அவற்றின் நிறையினைக் கட்டுப்படுத்துவதற்காக,
அவற்றிக் கீழ்ப்பகுதியில், புறச்சுவரின் உட்புறமாக Ballast Tanks
என்றழைக்கப்படும் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நீரினாலோ அல்லது
வளியினாலோ நிரப்பப்படுவதன் மூலம் நீர்மூழ்கிகளின் நிறையில் மாற்றம்
ஏற்படுத்தப்படுகின்றது.
இத்தாங்கிகள் Main Ballast Tanks என்றழைக்கப்படுகின்றன. இத்தாங்கிகளில்
நீரினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீருக்கடியிற் கொண்டு செல்லவோ
இல்லது நீரினை வெளியேற்றி வளியினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீரின்
மேற்பரப்புக்குக் கொண்டுவரவோ முடியும். பொதுவாக நீருக்குள் இருக்கும்போது
இந்தத் தாங்கிகள் நீர் நிரப்பப்பட்ட நிலையில் காணப்படுவதுடன்
இத்தாங்கியில் நிரப்பப்பட்ட நீரின் காரணமாக நீர்மூழ்கியானது நீர்
மேற்பரப்பிலிருந்து குறிப்பிட்டதோர் ஆழத்திலேயே பேணப்படும்.
இக்குறிப்பிட்ட ஆழத்திலிருந்து மேலதிக ஆழத்தைக் கூட்டிக்குறைப்பதற்காக
ஆழக் கட்டுப்பாட்டுத் தாங்கி (Depth Control Tank) என்றழைக்கப்படும்
மேலுமோர் சிறிய தாங்கி பயன்படுத்தப்படுகின்றது. இத்தாங்கி உயர்
அழுத்தத்தைத் தாங்கவல்லது. இத்தாங்கியின் நீர்க்கொள்ளளவைக்
கட்டுப்படுத்துவதன்மூலம் ஆழத்தைக் கூட்டிக்குறைக்க முடியும்.
இத்தாங்கியானது நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப் பகுதியிலோ அல்லது
நீர்மூழ்கியின் சமநிலையைப் பேணக்கூடியவாறு அதன் அடிப்பரப்பில் சமச்சீராகப்
பரந்தோ காணப்படும்.
நீர்மூழ்கிகள் நீரினுள் செல்லும் போது, நீரில் காணப்படும் உப்பின்
தன்மை, ஆழத்தின் காரணமாக நீரினால் ஏற்படுத்தப்படும் அழுத்தம்
போன்றவற்றினால் இத்தாங்கிகளின் அழுத்தம் உயர்கின்றது. இவ்வுயர்
அழுத்தத்தைத் தாங்கவல்லதாக நீர்மூழ்கிகளின் இத்தாங்கிகள்
உருக்கிரும்பினாலோ அல்லது ரைற்றானியம் உலோகத்தாலோ ஆக்கப்படுகின்றன.
நீர்மூழ்கியின் சமநிலைக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அதன் சுழலியின்
அருகில் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும் சமநிலைக் கட்டுப்பாட்டுச்
செட்டையும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று நீர்மூழ்கியின்
புவியீர்ப்பு மையப்புள்ளியை அண்மித்துக் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும்
பிரதான கட்டுப்பாட்டுச் செட்டைகள் நீர்மூழ்கியின் ஆழக்கட்டுப்பாட்டுச்
செயற்பாட்டில் பங்காற்றுகின்றன. அவசர நேரத்தில் நீர்மூழ்கியை
நீர்மேற்பரப்புக்குக் கொண்டுவருவதற்கு நீர்மூழ்கியிலிருக்கும்
இரண்டுவகையான ஆழ மற்றும் சமநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதிகளும்
பயன்படுத்தப்படுகின்றன. இதன்போது நீர்மூழ்கி மிக வேகமாக நீர்
மேற்பரப்புக்குக் கொண்டுவரப்படுகின்றது.
தற்போது பயன்பாட்டில் காணப்படும் அநேகமாக அனைத்து நீர்மூழ்கிகளும் அணு
சக்தியினால் இயங்குபவையாகவே காணப்படுகின்றன. ஆனால், ஆரம்பத்தில்
நீர்மூழ்கிகள் மனிதவலுவால் இயக்கப்படுபவையாகவே காணப்பட்டன. 1863 இல்
முதலாவது இயந்திரவலுவால் இயக்கப்படும் நீர்மூழ்கி பிரான்சில்
உருவாக்கப்பட்டது. இது அழுத்தப்பட்ட வளியின்மூலம் வலுவூட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து 1864 இல் முதலாவது நீராவி இயந்திரத்தால் இயங்கும்
நீர்மூழ்கி ஸ்பெயினில் உருவாக்கப்பட்டது. நீர்மூழ்கியில் அணுசக்திப்
பயன்பாடு அறிமுகப்படுத்தப்படும்வரை 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான
நீர்மூழ்கிகள் நீருக்கடியில் பயணிக்கும்போது மின்கலத்தின் மூலமும்
நீர்மேற்பரப்பில் பயணிக்கும்போது டீசல் இயந்திரத்தின் மூலமும் இயங்கிக்
கொண்டிருந்தன. இவ்வாறு இயந்திரத்தின்மூலம் இயங்கும்போது அவற்றின்
மின்கலங்கள் மீள்மின்னேற்றம் செய்யப்பட்டன.
இரண்டாம் உலகப்போர்க் காலப்பகுதியில் ஜேர்மனியப் பொறியாளர்கள் ஐதரசன்
எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் நீர்மூழ்கியை உருவாக்கினர். போரின்
பின்னரான காலப்பகுதியில் ரஸ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள்
நீர்மூழ்கிக்கான ஐதரசன் எரிபொருள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோதிலும் அதன்
முடிவு திருப்திகரமாக அமையவில்லை.
சாதாரணமாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கியில் 80 இற்கும் அதிகமான
பணியாளர்களும் சாதாரண நீர்மூழ்கிகளில் அரைவாசியளவு பணியாளர்களும்
பணியாற்றுவர். 1985 இல் நோர்வஜியக் கடற்படை தமது நீர்மூழ்கிகளில்
முதலாவதாகப் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது. அதைத்தொடர்ந்து டென்மார்க்,
சுவீடன், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் தமது கடற்படை
நீர்மூழ்கிகளில் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது.
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum