ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள்

View previous topic View next topic Go down

திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள்

Post by ayyasamy ram on Mon Jan 01, 2018 6:58 am



கோவையில் டாக்ஸி ஓட்டும் பிரபுதேவா, விபத்தில் சிக்கும்
பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்.
மனிதாபிமானத்துடன் தன் உயிரைக் காப்பாற்றியவரைப்
பார்க்க விரும்புகிறார்

விபத்தில் இருந்து மீண்ட பிரகாஷ்ராஜ். இதற்காக தன் மனைவி
பூமிகாவை, பிரபுதேவாவின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்து
வருமாறு அனுப்புகிறார். ஆனால், பூமிகாவை பார்க்க
மறுத்ததோடு, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தையும்
திருப்பி அனுப்புகிறார் பிரபுதேவா.

அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவருக்கும், பிரகாஷ்ராஜ்
குடும்பத்துக்குமான உறவு என்ன? இவர்கள் மூவரும் நேரில்
சந்தித்தார்களா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு உணர்வு
பூர்வமான காட்சிகள் மூலம் விடையை விரித்திருக்கிறார்
இயக்குநர் தங்கர் பச்சான்.

காதலின் உன்னதம் அதன் நேர்மையிலும், கண்ணியத்திலும்
அடங்கியிருக்கிறது என்ற உண்மையை, நம் நினைவுகளைக்
கிளறிச் சொல்கிறது இப்படம். திசைமாறிப்போன காதலர்களை
வாழ்க்கை திரும்பவும் சந்திக்க வைக்கிறது.

அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்ற எதிர்
பார்ப்பையும், அதில் ஒளிந்திருக்கும் திருப்பங்களையும்
இயல்பும் நேர்மையுமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்
திரைக்கதை – உரையாடலை இணைந்து எழுதியிருக்கும்
தங்கர் பச்சான், ஆர்.டி.தமிழ்செல்வி ஆகிய இருவரும்.

‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்று அம்பாசிடர்
காரில் எழுதி வைத்திருக்கும் ஓட்டுநர் பிரபுதேவா. முன்பின்
தெரியாத ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும்போது
வேடிக்கை பார்க்காமல், தன்னிடம் இருக்கும் சொற்ப பணத்தைக்
கட்டி அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, உயிருக்கு
ஆபத்து இல்லை என்று தெரிந்தபிறகு நிம்மதி அடைகிற சகமனித
பேரன்பில் தொடங்குகிறது பிரபுதேவா கதாபாத்திரத்தின்
அறிமுகம்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, தன் காதலுக்கு கைநிறைய விலை
கிடைத்தும், அதை விற்றுவிடாமல் தன் முன்னாள் காதலியை
நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்து, காதலியின்
கண்களைத் தவிர்க்கும்போதெல்லாம் செழியனாக
வாழ்ந்திருக்கிறார் பிரபுதேவா.

‘‘நீங்க அழுதா எங்களால தாங்கமுடியாது. நீங்க எதுவும் சொல்ல
வேண்டாம்’’ என்று கூறும் மனைவியின் மடியில் கவிழ்ந்து
குமுறும் காட்சியில் பிரபுதேவா மட்டுமல்ல, பார்வையாளர்களின்
கண்களும் குளமாகின்றன.

பிரபுதேவா கதாபாத்திரம், காதலின் காயத்துக்கு தன் உதவிகளால்
மருந்திட முடியாதா என ஏங்கும் பூமிகாவின் கதாபாத்திரம்,
உதவிகளை மறுக்கும் ஒருவனை தன் அருகில் வைத்துக்கொள்ளத்
துடிக்கும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் என மூன்று முதன்மைக்
கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்துக்கு நடுவே,
காதலின் கண்ணியத்துக்கு அரியணை அளித்திருக்கிறார்
தங்கர் பச்சான்.

அவர்கள் மூவருமே கதாபாத்திரங்களுக்கான நடிப்பைத்
தந்திருக்கிறார்கள். ‘‘அப்பா, நாம மறுபடியும் ஏழையாகிட்டோமா?
நான் திரும்பவும் அந்த ஓட்டப் பள்ளிக்கூடத்துக்குத்தான்
போகணுமா?’’ என்று கேட்கும் குழந்தை நட்சத்திரம் ஜோஷிகாவும்
கவனிக்க வைக்கிறாள்.

பரத்வாஜின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு
முதுகெலும்பாக தாங்கிப் பிடிக்கின்றன. ‘அழகழகே’,
‘சேரன் எங்கே’ ஆகிய 2 பாடல்களின் இசையும், வரிகளும்
திரையரங்குக்கு வெளியே வந்தபிறகும் செவிகளுக்குள் ஒலிக்கின்றன.

தங்கர் பச்சானின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒளிப்பதிவும், கே.கதிரின்
கலை இயக்கமும் படத்துக்கு கூடுதல் பலம்.

தேர்தலும், அரசியலும் வருமானத்துக்குரிய ஒரு நிகழ்வாக மாறிப்
போனதை, காதல் கதைக்கு இடையே சாடியிருக்கிறார் இயக்குநர்.
பொழுதுபோக்கு என்ற பெயரில் தமிழ் சினிமாவும், தொலைக்
காட்சியும் ஆபாசக் கிடங்காக ஆகிவிட்டதையும் கடிந்து
கூறியிருக்கிறார்.

பெரியாரும் ஜீவாவும் உயிருடன் வந்து தமிழர்களைக் கடிந்து
கொள்வது போன்ற பாடல் காட்சி, படத்தில் ஒட்டவைத்த ஒன்றாக
இருக்கிறது.

காதலை முன்புபோல, முக்கிய உள்ளடக்கமாக தற்கால தமிழ்
சினிமா கையாள்வதில்லை. முன்னணி கதாநாயகர்களின்
படங்களிலும்கூட, ஒரு வெளிநாட்டுப் பாடல் காட்சி என்பதோடு
முடிந்துவிடுகிறது காதல்.

அது கண்மூடித்தனமான பொழுதுபோக்கு, விடலைகளின் பருவ
கால பாலின்ப விளையாட்டு என்று காட்டிக் காட்டி, அதன்
நேர்மையை முடிந்த அளவுக்கு நீர்த்துப்போகச் செய்துவிட்டு
ஓய்ந்திருக்கிறது நம் திரையுலகம்.

இந்த சூழலில், காதலின் மென்மையை, அது கற்றுத்தரும்
நேர்மையை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடத்துகிறது இந்தப்
படம். காதலைக் கடந்து வந்தவர்கள், காதலில் வாழ்பவர்கள்,
காதலை தன்வசமாக்க விரும்புகிறவர்கள் ஆகிய
அனைவரையும் இந்தப் படம் களவாடும்!
-
------------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum