உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Today at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 26, 2020 2:16 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -277

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புறங்குன்றி கண்டனைய ரேனும்  அகங்குன்றி
மூக்கில்  கரியார்  உடைத்து


தெளிவுரை
குன்றிமணி புறத்தே செந்நிறம்  உடையதாயினும் அதன்  மூக்கு கரியது. அதுபோல வேடதாரிகள் வெளியே தூயவராகத் தோன்றினும் மனத்தால் தீயவரேயாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புறங்/குன்/றி--------- கண்/டனை/ய------- ரே/னும்------------  அகங்/குன்/றி
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் -  ------------ இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---------- வெண்டளை----- வெண்டளை


மூக்/கில்-----------  கரி/யார்---------உடைத்/து
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை/பு
தேமா-----------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்  -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2 .காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ங்குன்றி- மூக்கில்
மோனை-ண்டனைய- ரியார்  

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 26, 2020 7:07 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -278

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மனத்தது மாசாக மாண்டார்நீர் ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்


தெளிவுரை
அகத்தே அழுக்கும் புறத்தே மாண்பும் தோன்றுமாறு நாள்தோறும் நீராடிப் பொருந்தாவொழுக்கம் புரியும் மக்கள் இவ்வுலகில் பலராவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனத்/தது-------- மா/சா/க-------------- மாண்/டார்/நீ----- ரா/டி
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்---------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் - ---------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


மறைந்/தொழு/கு----மாந்/தர்------பலர்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----நிரை
கருவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- னத்தது –மாசாக- மாண்டார்நீ --றைந்தொழுகு- மாந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 26, 2020 7:14 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -279

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்


தெளிவுரை
அம்பு வடிவத்தில் நேரானது ; செயலில் கொடியது .யாழ் வடிவத்தால் வளைந்தது , செயலால் இனிமையானது . அதுபோல் தவம் செய்வாரையும் வடிவத்தால் மதிக்காது அவர்தம் ஒழுக்கத்தால் மதிப்பிடல் வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கணை/கொடி/து----யாழ்/கோ/டு----------- செவ்/விதாங்/கு-----அன்/ன
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்------நேர்/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்------------கூவிளங்காய்--------தேமா
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---------- வெண்டளை--------- வெண்டளை


வினை/படு--------- பா/லால்----- கொளல்
நிரை/நிரை---------நேர்/நேர்-----நிரை
கருவிளம்------------தேமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்ன- வினைபடு
மோனை- ன்ன- யாழ்கோடு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 26, 2020 7:31 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -280

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்


தெளிவுரை
தலையை மொட்டையடித்தலும் சடை வளர்த்தலும் புறக்கோலம் ; பயனற்ற செயல் .உலகம் நிந்திக்காத வகையில் நடந்துகொள்வதே மேல்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மழித்/தலும்------ நீட்/டலும்---------- வேண்/டா ------உல/கம்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------தேமா-------------புளிமா
இயற்சீர் ------------இயற்சீர் - ----------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை---வெண்டளை

பழித்/த--------------- தொழித்/து-------விடின்
நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை
புளிமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழித்தலும் -பழித்த- தொழித்து
மோனை-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 26, 2020 7:40 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எள்ளாமை வேண்டுவோன் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு


தெளிவுரை
பிறரால் தான் இகழப்படக் கூடாது என்று நினைப்பவன் தனது அல்லாத எப்பொருளையும் வஞ்சித்துக் கவர நினைத்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எள்/ளா/மை ---------வேண்/டு/வோன்----என்/பான்---------எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்------------தேமா--------------கருவிளங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை---வெண்டளை


கள்/ளா/மை--------- காக்/கதன்-----நெஞ்/சு
நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை----நேர்/பு
தேமாங்காய்-----------கூவிளம்-------காசு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நெஞ்சு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ள்ளாமை- கள்ளாமை
மோனை- ள்ளாமை - ன்பான் - னைத்தொன்றும்
ள்ளாமை - காக்கதன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 27, 2020 11:41 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -282

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்


தெளிவுரை
குற்றங்களை மனத்தினால் நினைத்தாலும் பாவம் ஆகையால் , பிறன் பொருளை அவன் அறியாதபடி திருடிக் கொள்வோம் என்று நினைத்தலுங்கூட தவறாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளத்/தால்-----உள்/ளலும்------- தீ/தே---------------- பிறன்/பொரு/ளைக்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ---------- இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


கள்/ளத்/தால்--------- கள்/வேம் ------எனல்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்ளத்தால்- உள்ளலும் - கள்ளத்தால்- கள்வேம்
மோனை- ள்ளத்தால்-ள்ளலும் , ள்ளத்தால்- ள்வேம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 27, 2020 11:48 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -283

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்


தெளிவுரை
பிறரை வஞ்சித்தலால் கிடைக்கும் செல்வம் வளர்வது போல்
தோன்றினாலும் , பின்னர் அழிந்து விடும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வினால்------ஆ/கிய------------ ஆக்/கம்---------- அள/விறந்/து
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளம்---------கூவிளம்------------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை----வெண்டளை


ஆ/வது--------------- போ/லக்----- கெடும்
நேர்/நிரை-----------நேர்/நேர்-----நிரை
கூவிளம்--------------தேமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினால்- அவிறந்து
மோனை- கிய –க்கம்- ளவிறந்து-வதுபழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 27, 2020 11:54 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -284

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்


தெளிவுரை
பிறர் பொருளைக் கவர நினைப்பதில் ஒருவனுக்கு ஏற்படும்
விருப்பம் , பின்னர் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வின்/கண்-------- கன்/றிய--------- கா/தல்-------- விளை/வின்/கண்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளம்---------தேமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் - --------- இயற்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


வீ/யா-----------விழு/மம்--------- தரும்
நேர்/நேர்-------நிரை/நேர்--------நிரை
தேமா----------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-வின்கண் -விளைவின்கண்
மோனை- ளவின்கண் – ன்றிய- காதல் , விளைவின்கண்-வீயா- விழுமம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 27, 2020 12:00 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -285

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்


தெளிவுரை
பிறர் பொருளைக் கவர நினைத்து அவர் அயர்ந்திருக்கும் நிலையை எதிர்பார்த்திருப்பவர்களிடத்தில் அருளின் சிறப்பு காணப்படாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருள்/கரு/தி---------- அன்/புடை/யர்------- ஆ/தல்-------- பொருள்/கரு/திப்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை/நேர்---------நேர்/நேர்------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளங்காய்-----------தேமா----------கருவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் - --------- இயற்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


பொச்/சாப்/புப்--------- பார்ப்/பார்/கண்------ இல்
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்/நேர்--------நேர்
தேமாங்காய்-----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- ருள்கருதி –பொருள்கருதிப்
மோனை- ருள்கருதி -ன்புடையர் -தல் ,பொருள்கருதிப்-பொச்சாப்புப்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 28, 2020 8:04 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -286

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்


தெளிவுரை
களவில் அதிக ஆசையுள்ளவர் , தம் நிலைக்கேற்ற
அளவில் நின்று அதற்கேற்ப நடக்க மாட்டார் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வின்/கண்-----நின்/றொழு/கல்-----ஆற்/றார்-------- கள/வின்/கண்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்----------தேமா----------------புளிமாங்கய்
வெண்சீர் ------------வெண்சீர் - ------------ இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை----வெண்டளை


கன்/றிய----------- கா/த----------- லவர்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வின்கண் -கவின்கண் , நின்றொழுகல்- கன்றிய
மோனை- ளவின்கண் -ற்றார் , ளவின்கண்-ன்றிய- கா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 28, 2020 8:11 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -287

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்


தெளிவுரை
தன்குரிய அளவில் நிற்போம் என்ற பெருமையை விரும்புகிறவனிடத்தில் ,
களவு என்னும் இருண்ட மயக்கம் இருக்காது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வென்/னும்-----கா/ரறி-------------- வாண்/மை-------அள/வென்/னும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை


ஆற்/றல்------------ புரிந்/தார்/கண்--------இல்
நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்------நேர்
தேமா------------------புளிமாங்காய்----------நாள்
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-வென்னும் –அவென்னும்
மோனை- ளவென்னும் -காரறி , ளவென்னும்-ற்றல்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 28, 2020 8:18 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -288

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு


தெளிவுரை
பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்தவரது நெஞ்சில் அறம் நிலைபெற்றிருப்பதுபோல் களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலைபெற்றிருக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வறிந்/தார்-------நெஞ்/சத்------- தறம்/போ/ல------- நிற்/கும்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்-------தேமா----------------கருவிளங்காய்-----தேமா
வெண்சீர் --------------இயற்சீர் - ---------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை

கள/வறிந்/தார்--------நெஞ்/சில்----கர/வு
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை/பு
கருவிளங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கரவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வறிந்தார் -கவறிந்தார் ,நெஞ்சில் - நெஞ்சத்
மோனை- ளவறிந்தார் -ரவு , நெஞ்சில் - நெஞ்சத்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 28, 2020 8:33 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -289

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவல்ல செய்தாங்கே வீலர்  களவல்ல
மற்றைய  தேற்றா தவர்


தெளிவுரை
களவைத் தவிர வேறு எதையும் அறியாதவர் , அளவு கடந்த
தீமைகளைச் செய்து அதனால் கெடுவர்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வல்/ல------------ செய்/தாங்/கே------வீ/லர்-------------  கள/வல்/ல
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் -  ---------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


மற்/றைய--------  தேற்/றா ---------தவர்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வல்ல –கவல்ல , மற்றைய  தேற்றா
மோனை-செய்தாங்கே-தேற்றா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 28, 2020 8:42 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -290

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு


தெளிவுரை
களவிலே பழகியவர்க்கு வாழ்வே தவறிப் போகும் . அதில் பழகாதவர்க்குத்
தேவருலகம் தவறாது கிடைக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள்/வார்க்/குத்-------தள்/ளும்----------- உயிர்/நிலை------- கள்/ளார்க்/குத்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை


தள்/ளா/து-------- புத்/தே-------- ளுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ளுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்வார்க்குத் -தள்ளும் – கள்ளார்க்குத்-தள்ளாது
மோனை- ள்வார்க்குத் –ள்ளார்க்குத் ,ள்ளும் -ள்ளாது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

வாய்மை எனப்படுவ யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்


தெளிவுரை
உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிர்க்கும்
யாதொரு தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்லுதலேயாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வாய்/மை--------- எனப்/படு/வ----------- யா/தெனின்-------யா/தொன்/றும்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
தேமா----------------கருவிளங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை----- வெண்டளை

தீ/மை--------------- இலா/த------ சொலல்
நேர்/நேர்-----------நிரை/நேர்--நிரை
தேமா----------------புளிமா--------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-லாத –சொல்
மோனை- யாதெனின் -யாதொன்றும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை