உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by T.N.Balasubramanian Today at 8:38 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by T.N.Balasubramanian Today at 8:24 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Today at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 22, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -269

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு


தெளிவுரை
தவம் செய்து வலிமை பெற்ற ஞானிகளுக்கு
எமனை விலக்கி வாழும் நிலையும் கைகூடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கூற்/றம்--------- குதித்/தலும்------கை/கூ/டும்------- நோற்/றலின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - --------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை


ஆற்/றல்------- தலைப்/பட்----- டவர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/பு
தேமா---------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>டவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கூற்றம்- நோற்றலின்- ஆற்றல்
மோனை- கூற்றம் - குதித்தலும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 11:25 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -270

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்


தெளிவரை
பெய்ஞ்ஞானம் அடைந்தோர் சிலராகவும் அது அடையாதோர் பலராகவும்
இருப்பதற்குக் காரணம் தவம் செய்வோர் மிகச் சிலர் ஆதலேயாம்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இலர்/பல------- ரா/கிய--------- கா/ரணம்------- நோற்/பார்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை


சிலர்/பலர்----- நோ/லா---- தவர்
நிரை/நிரை------நேர்/நேர்----நிரை
கருவிளம்---------தேமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ர்பல- சிர்பலர் - நோலா
மோனை- நோற்பார்- நோலா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்


தெளிவுரை
வேடத்தால் தனது கெட்டவொழுக்கத்தை மறைத்துப் போலியாக நடிக்கும் ஒருவனது நிலையைக் கண்டு பூதங்கள் ஐந்தும் அவன் அறியாதவகையில் ஏளனம் செய்யும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வஞ்/ச----------- மனத்/தான்------- படிற்/றொழுக்/கம்----- பூ/தங்/கள்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்
தேமா---------------புளிமா-----------------கருவிளங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------- வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை

ஐந்/தும்-------- -அகத்/தே-------நகும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நகும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வஞ்ச - ஐந்தும்
மோனை- ந்தும் - கத்தே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 11:40 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -272

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்


தெளிவுரை
அறிந்தே குற்றம் புரியும் ஒருவனை அவனது வேடம் எவ்வாறு காப்பாற்ற முடியும் ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வா/னுயர்------ -தோற்/றம்------ எவன்/செய்/யும்---- தன்/னெஞ்/சம்
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை---------வெண்டளை


தா/னறி--------- குற்/றப்----- படின்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தோற்றம்- குற்றப் , தன்னெஞ்சம்- தாறி
மோனை- ன்னெஞ்சம்-தானறி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 11:46 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -273

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

தெளிவுரை
மனவலிமை இல்லாதவன் தவவேடம் புனைந்து ஒழுகுவது பசுவானது
புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்வதை ஒக்கும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யில்------ -நிலை/மையான்----வல்/லுரு/வம் ----பெற்/றம்
நிரை/நேர்--------நிரை/நிரை-----------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------ வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை


புலி/யின்/தோல்----போர்த்/துமேய்ந்----தற்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை-------------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்----------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-லியில் - புலியின்தோல் , பெற்றம் - தற்று
மோனை- புலியின்தோல் - போர்த்துமேய்ந் , லியில் - ல்லுருவம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 11:54 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -274

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

தெளிவுரை
ஒருவன் தவவேடத்திற்குள் ஒளிந்துகொண்டு அத்தவத்திற்க்கு ஒவ்வாதவாறு நடப்பது , வேடன் ஒருவன் புதருக்குள் மறைந்து கொண்டு பறவைகளைப் பிடிப்பதை ஒக்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவ/மறைந்/து-------அல்/லவை------ செய்/தல்----- புதல்/மறைந்/து
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை---------நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்------------தேமா--------------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - --------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை--வெண்டளை


வேட்/டுவன்---- புள்/சிமிழ்த்-----தற்/று
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/பு
கூவிளம்-----------கூவிளம்----------காசு
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. விளம் முன் நேர்

எதுகை-
மோனை=வமறைந்து ,ற்று
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -275

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பற்றற்றே மேன்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்


தெளிவுரை
ஆசைகளை எல்லாம் ஒழித்தவர்போல் நடிப்பரது தீய ஒழுக்கம் , ‘’ஐயோ என்ன செய்து விட்டோம் ‘’ என்று அவனே பின்னர் வருந்துமாறு துன்பத்தைத் தரும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றற்/றே-------- மேன்/பார்----- படிற்/றொழுக்/க----- மெற்/றெற்/றென்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------கருவிளங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


றே/தம்-----------பல/வுந்----------- தரும்
நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை
தேமா-----------புளிமா----------மலர்
இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ற்றற்றே - மெற்றெற்றென்
மோனை- ற்றற்றே -டிற்றொழுக்க – லவுந் , மெற்றெற்றென் - மேன்பார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by சக்தி18 on Sun Jan 05, 2020 12:29 pm

நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1195
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan on Sun Jan 05, 2020 8:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
[You must be registered and logged in to see this link.]

என்ன இது ?

நேர் - Low
நிரை - High

இப்படியெல்லாம் யாப்பிலக்கணத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் . இதை எவ்வாறு Binary System உடன் ஒப்பிடுவீர்கள் ? தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வதே முறை .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian on Mon Jan 06, 2020 5:27 pmதிரு M ஜெகதீசன் மூதறிஞர்,எந்தன் சிறந்த நண்பர் . தமிழ்/கணிதம் வல்லுநர்.யாப்பிலக்கணம், திருக்குறள் விளக்கம் இவருக்கு தலைகீழ் பாடம்.
சிறு கதைகள் தனக்கே உரியமுறையில் எழுதி கடைசியில் ஒரு எதிர்பாரா திருப்பம் தரக்கூடியவர்.
பள்ளி நாட்களில் சம்ஸ்க்ருதம் எடுத்துக்கொண்டதால் தமிழில் நான் பெரிய ஸீரோ.
யாப்பிலக்கண நெறிமுறையில் கவிதைகள் எழுதமுடிவதில்லை என்பதில் சொல்லொணா வருத்தம் எனக்கு உண்டு. MJ அவர்கள் யாப்பிலக்கண விதிமுறைகள் கூறும் போது "ங்கே" முழித்ததுண்டு.

திரு சக்தி 18 சமீபத்திய வரவு. கணினிப்பொறி வல்லுநர். ஆர்வத்துடன் ஈகரையில் இணைந்து பல பயனுள்ள தகவல்களை பகிர்பவர்.

நானோ யாப்பிலக்கணமும் அறியேன்
கணினி மொழியும் அறியேன்.

நவீன உலகம் கணினி மொழிக்கொண்டு 0 /1 பைனரி சிஸ்டம் உலகையே ஆண்டுகொண்டு இருக்கிறது.

திரு சக்தி அவர்கள் யாப்பிலக்கணத்திற்கு நேர் /நிரை எப்பிடி அவசியமோ அது போல் கணினி மொழிக்கு பைனரி 0 /1 அவசியம் எனக் கூறவருகிறார் என்றே எண்ணுகிறேன். ஹை /லோ என்பதோ 0 /1 என்பதோ ஒரு உதாரணத்திற்கு கொடுத்து இருப்பர் எனவே எண்ணுகிறேன். 0 /1 கொடுத்து மதிப்பை கொடுத்து ஒன்றன் மதிப்பை உயர்த்தியோ /மற்றதை தாழ்த்தியோ கூறி இருக்கமாட்டார். Hi /Lo ..0 /1 ON /OFF போட்டதால் குழப்பமென எண்ணுகிறேன்.

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள். உபமான உபமேயங்கள் சரியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் என் கருத்தில் கொள்ளவில்லை.

திரு சக்தி அவர்களுக்கு : The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FU XI ), and India. இதை தமிழில் மொழிபெயர்த்து இருக்கலாம். என்னை போல் ஆங்கிலம் அறியாதவர் ஈகரையில் பலருண்டு.

கருத்துக்கள், மறுமொழிகள் வரவேற்கப்படுகின்றன.

ரமணியன்.

[You must be registered and logged in to see this link.].Jagadeesan

@சக்தி18* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by சக்தி18 on Mon Jan 06, 2020 11:30 pm

நன்றி ஐயா. நானும் யாப்பிலக்கணம் அறியேன். அது என் கருத்தும் அல்ல.

ஒருவர் பைனரி பற்றி நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். படித்தேன். பைனரி தமிழில் இருந்து வந்திருக்கலாம் என்றும்,பழம் தமிழ் கல்வெட்டுகளில் அதைக் காண முடிகிறது என்றும் ,வெளி நாட்டவர்கள் சிலருடைய ஆய்வுகளில் பைனரிக்கு ஆரம்பம் தமிழாக இருக்கலாம் ….இப்படி சில தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.
அதில் இருந்து ஒரு சிறு குறிப்பை பதிவிட்டு அப்படி இருக்கலாமா என விளக்கம் கேட்டிருந்தேன்.
(உங்கள் விளக்கம்? என கேள்வியாக கேட்டிருந்தேன்) அவ்வளவுதான்.

ஆதாரமாக குறிப்பிட்டதால் மொழியாக்கம் செய்யாது பதிவிட்டிருந்தேன்.

டொரென்டொ பல்கலைக்கழக பேராசிரியர் Pak L. Huide , இந்திய வரலாறு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதா? என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை எழுதி இருந்தார்.அங்கேயும் பலவற்றை கல்வெட்டு ஆதாரங்களுடன் எழுதி இருந்தார்.

பல பழைய வானியல்,அறிவியல்,மருத்துவம் போன்றவை அர்த்தம் தெரியாமலேயே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அவை உண்மை என புதிய அறிவியல் பெயர் சூட்டி அழைப்பதை நாம் காணுகிறோம். அப்படி இருக்கலாமா என்ற சந்தேகமே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1195
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian on Tue Jan 07, 2020 7:01 pm

பைனரி முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு சம்ஸ்க்ருதம் என்று கேள்விப் பட்டுளேன்.

டொரெண்டோ ---Torento என்பதை "டோரெனோ" என்று அழைப்பதுதான்
சரியான பிரயோகம் என்று அறிகிறேன் . உங்களுக்கு அதுபற்றி ஏதாவது தெரியுமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by சக்தி18 on Tue Jan 07, 2020 9:07 pm

டொரொன்டொ வாங்கப்படுவதற்கு முன்னர் ,டக்காரன்டோ- tkaronto (கனடா பழங்குடியினரின் ஈராகுவோயன் மொழிச்சொல் ) என அழைக்கப்பட்டதாம். அதற்குப் பின் பிரென்சுக்காரர்கள் lac de Taranteau என அழைத்தனர். கனடா -Canada- kanata என அவர்கள் மொழியில் அழைக்கப்பட்டது,கிராமம் எனப் பொருள்.

(ஜஸ்டின் ட்ரூடோ,இந்தியா வந்து திரும்பிய சமயத்தில் சொன்னது.)

டொரெனொ பற்றி தெரியாது.

பிங்கலவின் சூத்திரங்களை ஆதாரம் காட்டி பைனரி ஆரம்பம் இந்தியா என சொல்கிறார்கள்.பெயர் வைக்கப்படாமலேயே இந்தியாவில் பைனரி பாவிக்கப்பட்டதாக சொல்கிறது இந்தப் புத்தகம். (Mathematics in India -Kim Plofker,Princeton University )
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1195
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை