உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:11 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Today at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Today at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:26 am

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by prajai Yesterday at 11:17 pm

» விமோசனம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா
by T.N.Balasubramanian Yesterday at 6:37 pm

» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:54 pm

» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» ஒழுக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:54 am

» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» வலை பாயுதே- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 4:25 am

» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}
by ayyasamy ram Sun Oct 13, 2019 10:24 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Aug 12, 2019 12:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -230

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
ஈதல் இயையாக் கடை


தெளிவுரை
சாவைப் போலக் கொடுமையானது வேறொன்றும் இல்லை ;
ஆனால் இல்லாதவனுக்குக் கொடுக்க மனமில்லாத ஒருவன் சாதலே மேல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சா/தலின்------- இன்/னா/த------- தில்/லை------- இனித்/தூ/உம்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ஈ/தல்------------ இயை/யாக்---கடை
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சாலின்- ஈல்
மோனை- ன்னாத - னித்தூஉம் –தல்- யையாக்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Aug 13, 2019 11:31 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு

தெளிவுரை
கொடையால் வருவதே உயர்ந்த புகழாகும் ; அதனைப் போல்
புகழ் தருவது வேறொன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஈ/தல்-------------- இசை/பட------- வாழ்/தல்------- அது/வல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


தூ/தியம்-------- இல்/லை ---உயிர்க்/கு
நேர் நிரை--------நேர்/நேர்----நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- தல் -சைபட - ல்லை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Aug 13, 2019 11:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -232

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்


தெளிவுரை
வறியார்க்குக் கொடுப்போரிடமே புகழ் நிலைத்து நிற்கும் ;
அப்புகழையே அறிஞர் பாராட்டி மகிழ்வர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உரைப்/பார்-------உரைப்/பவை-----எல்/லாம்------ இரப்/பார்க்/கொன்
நிரை/நேர்--------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமா-------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


றீ/வார்/மேல்-------- நிற்/கும்------புகழ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புகழ்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ரைப்பார் - உரைப்பவை - இப்பார்க்கொன்
மோனை-- ரைப்பார் – ரைப்பவை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Aug 13, 2019 11:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -233

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒன்றா  உலகத்   துயர்ந்த  புகழல்லால்
பொன்றாது  நிற்பதொன்று இல்


தெளிவுரை
நிலையற்ற இவ்வுலகத்தில் நிலையாக நிற்பது ஓங்கிய
புகழைத் தவிரப் பிறிதொன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/றா----------  உல/கத்------------   துயர்ந்/த--------  புக/ழல்/லால்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -  --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

பொன்/றா/து--------நிற்/பதொன்/று-------- இல்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்---------நேர்
தேமாங்காய்---------கூவிளங்காய்------------நாள்
வெண்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- ன்றா- பொன்றாது
மோனை- ன்றா - லகத்  , புகழல்லால்- பொன்றாது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Aug 13, 2019 12:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -234

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நிலவரை  நீள்புகழ்   ஆற்றின்   புலவரைப்
போற்றாது  புத்தேன்   உலகு


தெளிவுரை
இவ்வுலகில் ஈகையால் நிலையான புகழை நிறுவின பெரியோரையே
உலகம் பாராட்டும் ; அவரையன்றித் தேவரும் பாராட்டப்படார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நில/வரை-------  நீள்/புகழ்--------  ஆற்/றின்------   புல/வரைப்
நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -  -------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


போற்/றா/து-------  புத்/தேன்----- உல/கு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா-----------பிறப்பு
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நிவரை- புவரைப்- உகு , ஆற்றின்- போற்றாது
மோனை- நிலவரை - நீள்புகழ்  ,  புலவரைப்-போற்றாது - புத்தேன்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 10:44 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -235

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

தெளிவுரை
நிற்கும் புகழுக்கு நில்லாத செல்வத்தை இழப்பதும் ; புகழை நிலை நிறுத்த பூத உடலை இழப்பதும் ஆகிய அரிய செயல்கள் திறமைசாலிகளிடமே அமையும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நத்/தம்/போல்------கே/டும்--------- உள/தா/கும்-------- -சாக்/கா/டும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை------ வெண்டளை


வித்/தகர்க்------ கல்/லால்------ அரி/து
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/பு
கூவிளம்------------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்தம்போல்- வித்தகர்க்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -236

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தோன்றில் புகழொடு தோன்றுக  அஃதிலார்
தோன்றலின்  தோன்றாமை  நன்று


தெளிவுரை
இவ்வுலகில் பிறந்துவிட்டால் புகழுடன் விளங்க வேண்டும் ,
அவ்வாறு இல்லாவிட்டால் மக்களாய்ப் பிறந்தும் என்ன பயன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தோன்/றில்---புக/ழொடு-------- தோன்/றுக----- அஃ/திலார்
நேர்/நேர்--------நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை
தேமா-----------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -  ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


தோன்/றலின்----தோன்/றா/மை-----நன்/று
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளம்-----------தேமாங்காய்---------காசு
இயற்சீர்  ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- தோன்றில் - தோன்றுக -தோன்றலின்  -தோன்றாமை  
மோனை- தோன்றில் - தோன்றுக -தோன்றலின்  -தோன்றாமை  பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -237

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்


தெளிவுரை
புகழுடன் வாழத்தெரியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல்
தம்மை குறைகூறுவோரை நோவதால் என்ன பயன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புகழ்/பட--------- வா/ழா/தார்----- தம்/நோ/வார்-----தம்/மை
நிரைநிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்-------தேமாங்காய்-----தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - --------வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


இகழ்/வா/ரை-------நோ/வ----- தெவன்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- புழ்பட- இழ்வாரை , தம்நோவார் – தம்மை , நோ தென்
மோனை- ம்நோவார் ம்மை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 11:10 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -238

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்


தெளிவுரை
தாம் இறந்த பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெற்று
வாழாதார் இவ்வுலகத்தில் பழிக்கப்படுவது உறுதி.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யென்/ப-----வை/யத்/தார்க்----கெல்/லாம்------ இசை/யென்/னும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


எச்/சம்------------- பெறா/அ------ விடின்
நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-சையென்ப- இசையென்னும் - எச்சம்
மோனை- சையென்ப - வையத்தார்க் , சையென்னும்-ச்சம்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 11:18 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -239

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்


தெளிவுரை
புகழின்றி வாழ்வோரது உடம்பைச் சுமந்த நிலம் நல்ல விளைச்சலைத் தராது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யிலா----- வண்/பயன்------- குன்/றும்------- இசை/யிலா
நிரை/நிரை------நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


யாக்/கை-------- பொறுத்/த----நிலம்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நிலம்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சையிலா- இசையிலா
மோனை- சையிலா ண்பயன் , சையிலா-யாக்கை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 11:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -240

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையொழிய வாழ்வாரே வாழ்வர் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்


தெளிவுரை
எவராலும் பழிக்கப்படாத புகழுடன் வாழ்வாரே உயிருடன் வாழ்வார் ஆவர் ;
மற்றையோர் நடை பிணமாக்க கருதப்படுவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யொழி/ய-----வாழ்/வா/ரே------ வாழ்/வர்------ இசை/யொழி/ய
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்-------தேமா--------------கருவிளங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - -------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை-- வெண்டளை


வாழ்/வா/ரே------ வா/ழா------ தவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
தேமாங்காய்------தேமா--------மலர்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-சையொழிய- இசையொழிய , வாழ்வாரே - வாழ்வர்
வாழ்வாரே - வாழா
மோனை- சையொழிய -வாழ்வாரே - வாழ்வர் -வாழ்வாரே - வாழா

குறிப்பு
ஏழாம் சீரை தவிர மற்ற அனைத்து சீர்களிலும் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 11:47 am
அறத்துப்பால்
பாயிரவியல்- 4-அதிகாரங்கள்
இல்லறவியல்-20 அதிகாரங்கள்
முற்றிற்று
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Aug 17, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -241

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள


தெளிவுரை
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டும் அருளே செல்வங்களுள்
எல்லாம் உயர்ந்த்து. பொருட்செல்வமோ இழிந்தோரிடத்தும் அமையும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருட்/செல்/வம்------ செல்/வத்/துள்------ செல்/வம்-------- பொருட்/செல்/வம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பூ/ரியார்--------- கண்/ணும்-------- உள
நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ருட்செல்வம்- பொருட்செல்வம் , செல்வத்துள் - செல்வம்
மோனை- செல்வத்துள் - செல்வம்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Aug 17, 2019 12:34 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -242

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை


தெளிவுரை
நல்ல நெறி யாது என்று ஆராயந்தால் எல்லா உயிர்களிடத்தும் காட்டும்
அருளேயாம் .எல்லாச் சமயங்களும் இதனை ஏற்றுக் கொள்ளும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லாற்/றால்---- நா/டி---------------- அரு/ளாள்/க------ -பல்/லாற்/றால்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை


தே/ரினும்----- அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்லாற்றால்- பல்லாற்றால்
மோனை- ல்லாற்றால் – நாடி , ருளாள்க- ஃதே

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Aug 17, 2019 12:43 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -243

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்


தெளிவுரை
துன்பமாகிய இருள் செறிந்த நரகம் என்பது எல்லா
உயிர்களிடத்தும் அருளுடைய பண்பாளர்களுக்கு இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருள்/சேர்ந்/த----நெஞ்/சினார்க்---கில்/லை------ இருள்/சேர்ந்/த
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


இன்/னா--------- உல/கம்------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புகல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ருள்சேர்ந்த- இருள்சேர்ந்த , கில்லை- உகம்
மோனை- ருள்சேர்ந்த-ன்னா

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை