உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 02, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -217

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்


தெளிவுரை
அருள் உள்ளம் படைத்த ஒருவனது செல்வம் எல்லா
உறுப்புக்களாலும் பயன்படத்தக்க மருந்து மரம் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மருந்/தா/கித்--------தப்/பா ------------மரத்/தற்/றால்------செல்/வம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--நேர்/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை


பெருந்/தகை-----யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ருந்தாகித்- பெருந்தகை
மோனை- ருந்தாகித் –ரத்தற்றால்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 02, 2019 11:08 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -218

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்


தெளிவுரை
உதவுவதைக் கடமையாகக் கொண்ட ஒருவர் தமது வளம்
சுருங்கிய காலத்தும் உதவி செய்தலில் மனம் தளரார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இட/னில்--------- பரு/வத்/தும்-------- ஒப்/புர/விற்-------- ஒல்/கார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


கட/னறி------------ காட்/சி-------- யவர்
நிரை/நிரை-------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னில்- கனறி- காட்சி
மோனை- டனறி- காட்சி , ப்புரவிற்கு ல்கார்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 02, 2019 11:14 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -219

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு


தெளிவுரை
தவறாமல் செய்யத்தக்க உதவிகளைச் செய்ய முடியாது வருந்துகின்ற
நிலையே தொண்டுள்ளம் படைத்த ஒருவனுக்கு வறுமையாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நய/னுடை/யான்---நல்/கூர்ந்/தா-------னா/தல்--------- செயும்/நீ/ர
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ வெண்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


செய்/யா/து--------- அமை/கலா----- வா/று
நேர்/நேர்/நேர்------நிரை/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கருவிளம்---------காசு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-நனுடை- செய்யாது
மோனை- யனுடை-ல்கூர்ந்தா , செயும்நீர- செய்யாதுபழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 02, 2019 11:21 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -220

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

தெளிவுரை
உதவி செய்வதால் ஒருவனுக்குப் பொருள் இழப்பு நேரின்
அதனைத் தன்னை விற்றாயினும் பெறுவது நன்று


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒப்/புர/வி----------- னால்/வருங்---- கே/டெனி ------- னஃ/தொரு/வன்
நேர்/நிரை/நேர்---நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------கூவிளம்-------------கூவிளம்-----------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

விற்/றுக்/கோள்-----தக்/க-------- துடைத்/து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்---------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-இல்லை
மோனை- னால்வருங் - ஃதொருவன்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian on Fri Aug 02, 2019 5:22 pm

யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.

ரமணியன்

[You must be registered and logged in to see this link.]


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Aug 05, 2019 10:55 am

[You must be registered and logged in to see this link.] wrote:யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.

ரமணியன்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உங்கள் ஊக்கமே என்னை எழுத தூண்டுகிறது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 08, 2019 11:19 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

தெளிவுரை
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை ; மற்றவை எல்லாம்
வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பதைப் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வறி/யார்க்/கொன்--- றீ/வ/தே------------- ஈ/கைமற்------- றெல்/லாம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------கூவிளம்----------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை


குறி/யெதிர்ப்/பை----நீ/ர------------ துடைத்/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றியார்க்கொன்- குறியெதிர்ப்பை
மோனை- றீவதே- றெல்லாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 08, 2019 11:26 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -222

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று


தெளிவுரை
இவர் கையால் வாங்கினால் புண்ணியம் என்று கூறினாலும் வாங்காதே ;
இவருக்குக் கொடுத்தால் பாவம் வரும் என்றாலும் கொடுக்கவும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லா/று---------- எனி/னும்---------- கொளல்/தீ/து------மேலு/லகம்
நேர்/நேர்/நேர்-----நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நிரை/நிரை
தேமாங்காய்-------புளிமா---------------புளிமாங்காய்-------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை


இல்/லெனி/னும்---ஈ/த/லே-------------- நன்/று
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5. காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்லாறு- இல்லெனினும்
மோனை- நல்லாறு- ன்று , ல்லெனினும் –தலேபழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 08, 2019 12:21 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -223

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இல்னென்னும் எவ்வம்  உரையாமை ஈதல்
குலனுடையான்  கண்ணே  உள

தெளிவுரை
ஒருவனுக்கு இல்லை என்று கூறாது தன்னிடம் உள்ளதைக் கொடுத்துதவும்
பண்பு நல்ல குடும்பத்தில்  பிறந்தவனுக்கே அமையும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இல்/னென்/னும்----எவ்/வம்----------உரை/யா/மை------- ஈ/தல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


குல/னுடை/யான்------- கண்/ணே------- உள
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்----------நிரை
கருவிளங்காய்-----தேமா----------மலர்
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்னென்னும்- குனுடையான்
மோனை- ல்னென்னும் –தல் , ரையாமை-

Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 08, 2019 12:37 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 08, 2019 12:29 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -224

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

தெளிவுரை
யாசித்தல் போல யாசிக்கப்படுதலும் கொடுமையானதே ;
எதுவரையென்றால் உதவி பெற்றவனது முகமலர்ச்சியைக் கானும்வரை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/னா/து--------- இரக்/கப்----------- படு/தல்---------- இரந்/தவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமா----------------புளிமா------------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


இன்/முகம்--------- கா/ணும்----- அள/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அளவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னாது- இன்முகம் , இக்கப் – இந்தவர்
மோனை- ன்னாது -ரக்கப் – ரந்தவர்-ன்முகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 08, 2019 12:48 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -225

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின்  பின்


தெளிவுரை
கடும்பசியையும் அடக்கிக் கொள்வது ஒருவனது பேராற்றலைக் காட்டும் .
அப்பேராற்றலும் பசியைப் போக்குவோரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றுவார்------ஆற்/றல்----------- பசி/ஆற்/றல்--------- அப்/பசி/யை
நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -  ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--------- வெண்டளை


மாற்/றுவார்------- ஆற்/றலின்---பின்
நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்
கூவிளம்-----------கூவிளம்---------நாள்
இயற்சீர்  ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ற்றுவார் -ஆற்றல் - மாற்றுவார் -ஆற்றலின்  
மோனை- ற்றுவார் -ற்றல் - ற்றலின்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 09, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -226

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி


தெளிவுரை
பட்டினி கிடக்கும் ஒருவனது பசியைத் தீர்த்தல் வேண்டும் ;
அதுவே தன்பொருளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் ஆகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றார்--------- அழி/பசி------------ தீர்த்/தல்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்---------நேர்/நிரை/நேர்
தேமா---------------கருவிளம்-----------தேமா--------------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


பெற்/றான்------பொருள்/வைப்----- புழி
நேர்/நேர்---------நிரை/நேர்-------------நிரை
தேமா---------------புளிமா------------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புழி>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ற்றார்- பெற்றான் , அழிபசி-- புழி
மோனை- ற்றார் –ழிபசி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 09, 2019 11:07 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -227

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது


தெளிவுரை
தன்னிடம் உள்ள உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்துத்
தானும் உண்பவனைப் பசிப்பிணி என்றும் தீண்டாது


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பாத்/தூண்--------மரீ/இ--------------- யவ/னைப்-------பசி/யென்/னும்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


தீப்/பிணி--------- தீண்/டல்----- அரி/து
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்-----------தேமா------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரீஇ- அரிது
மோனை- பாத்தூண்- சியென்னும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 09, 2019 11:15 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -228

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்


தெளிவுரை
பொருளைத் தேடிவைத்துத் தாமும் அனுபவியாது இழந்து விடுவோர்
பிறர்க்குக் கொடுத்து மகிழும் சிறப்பினை அறியார் போலும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஈத்/துவக்/கும்----- இன்/பம்-------- அறி/யார்/கொல்----தா/முடை/மை
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை


வைத்/திழக்/கும்----வன்/க------ ணவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ணவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்பம் - வன்க , ஈத்துவக்கும்- வைத்திழக்கும்
மோனை- த்துவக்கும் - ன்பம் , வைத்திழக்கும்- ன்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Aug 12, 2019 12:46 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -229

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இரத்திலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்


தெளிவுரை
தமது செல்வம் முழுமையும் தாமே அனுபவிக்க நினைப்பது
ஒருவனிடம் சென்று இரப்பதை விடக் கொடுமையானது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இரத்/திலின்-----இன்/னா/து------- மன்/ற--------- நிரப்/பிய
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தா/மே----------- தமி/யர்--------- உணல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உணல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்னாது - மன்ற , இத்திலின் - நிப்பிய
மோனை- ரத்திலின் - ன்னாது , தாமே மியர்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை