உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கழுதையின் மரணம்!
by krishnaamma Today at 7:21 pm

» கரியமாணிக்கப் பெருமாள்
by krishnaamma Today at 7:18 pm

» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by krishnaamma Today at 7:17 pm

» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
by ayyasamy ram Today at 7:00 pm

» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm

» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm

» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm

» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm

» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm

» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm

» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm

» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm

» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm

» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm

» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm

» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am

» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am

» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am

» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am

» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am

» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am

» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am

» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am

» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am

» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am

» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm

» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm

» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jul 29, 2019 5:04 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -202

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்


தெளிவுரை
தீச்செயல்கள் தீங்கினை விளைவித்தலால் , அவற்றைத்
தீயினும் கொடியவை என்று நீக்குக.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/யவை------------ தீ/ய---------------- பயத்/தலால்---- தீ/யவை
நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா---------------கருவிளம்--------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

தீ/யினும்----------- அஞ்/சப்----- படும்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- தீவை -தீ -பத்தலால்- தீவை-தீயினும்
மோனை- தீயவை -தீய - தீயவை-தீயினும் , யத்தலால்- டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jul 30, 2019 10:44 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -203

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறிவினுள் எல்லாத் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்ய விடல்


தெளிவுரை
தன் கொடிய பகைவர்க்கும் தீமை செய்யாமை அறிவோடு
செய்யும் செயல்களுள் எல்லாம் தலைசிறந்ததாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வினுள்------எல்/லாத்-------- தலை/யென்/ப-----தீ/ய
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----- வெண்டளை


செறு/வார்க்/கும்----செய்/ய------- விடல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்--------தேமா-----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தீ- செய்
மோனை- செறுவார்க்கும் செய்ய

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jul 30, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -204

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.


தெளிவுரை
மறந்தும் கூடப் பிறர்க்கு கேடு நினைக்க வேண்டா; நினைத்தால்
நினைத்தவனுக்கே நீதிதேவன் கேட்டினை உண்டாக்குவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மறந்/தும்--------- பிறன்/கே/டு-------- சூ/ழற்/க------------ சூ/ழின்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


அறஞ்/சூ/ழும்----- சூழ்ந்/தவன்----- கே/டு.
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- ந்தும் –பின்கேடு- அஞ்சூழும் , சூற்க- சூழ்ந்தவன்
மோனை- சூழற்க- சூழின்- சூழ்ந்தவன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jul 30, 2019 10:58 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -205

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலனென்று தீயவை செய்யற்றக செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து


தெளிவுரை
வறுமை காரணமாகத் தீய செயல்களைச் செய்யாதீர் ;
செய்தால் மேலும் வறுமையே தொடரும்..


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இல/னென்/று----- தீ/யவை--------- செய்/யற்/றக----- செய்/யின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நிரை--நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்------------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை----- வெண்டளை

இல/னா/கும்------ மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்--நேர்/நேர்-----நிரை/நேர்
புளிமாங்காய்-----தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னென்று- இனாகும் , தீவை –செய்யற்றக- செய்யின்- பெர்த்து
மோனை- லனென்று- லனாகும் , செய்யற்றக- செய்யின்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jul 30, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -206

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்


தெளிவுரை
தான் ஒருபோதும் துன்பத்தால் வருந்தக்கூடாது என்று நினைப்பவன்
தானும் பிறர்க்குத் தீமை செய்ய நினைத்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீப்/பா/ல---------- தான்/பிறர்/கட்---- செய்/யற்/க-------நோய்ப்/பா/ல
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்------தேமாங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------வெண்சீர் - ---------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தன்/னை --------யடல்/வேண்/டா ---தான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்
தேமா---------------புளிமாங்காய்--------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தான்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- தான்பிறர்கட்- தன்னை – தான்
மோனை- தான்பிறர்கட்- ன்னை – தான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 31, 2019 10:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -207

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்


தெளிவுரை
எத்தகைய எதிரிகள் தோன்றினும் தப்பித்துவிடலாம்; தீயசெயலாகிய
பகை செய்தவனைத் தவறாமல் தொடர்ந்து சென்று அழிக்கும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனைப்/பகை-----உற்/றா/ரும்------- உய்/வர்----------- வினைப்/பகை
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------ வெண்சீர் ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


வீ/யா/து------------ பின்/சென்/று------அடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமாங்காய்--------மலர்
வெண்சீர் ---------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-னைப்பகை- வினைப்பகை , உய்வர்- வீயாது
மோனை- ற்றாரும் –ய்வர் , வினைப்பகை- வீயாது

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் எதுகை வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 31, 2019 10:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -208

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று


தெளிவுரை
தனது நிழல் தன்னை நீங்காது தொடர்வது போல் ,
தான் செய்யும் தீவினை நன்னை விட்டு நீங்காது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/யவை---------- செய்/தார்-------- கெடு/தல்--------- நிழல்/தன்/னை
நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


வீ/யா ---------------தடி/யுறைத்----- தற்/று
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/பு
தேமா---------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>தேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- தீவை- வீயா
மோனை- டியுறைத் -தற்று
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 31, 2019 10:46 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -209

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்


தெளிவுரை
தனது மேம்பாட்டில் அக்கறை உள்ள ஒருவன் பிறர்க்கு
எள்ளளவும் தீமை செய்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னைத்/தான்---கா/தல----------- னா/யின்------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

துன்/னற்/க------- தீ/வினைப்----பால்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----நேர்
தேமாங்காய்------கூவிளம்-------நாள்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பால்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ன்னைத்தான்- துன்னற்க- எனைத்தொன்றும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 31, 2019 10:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -210

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்


தெளிவுரை
நெறிதவறிப் பிறர்க்குத் தீமை செய்யாத ஒருவனுக்கு எக்கேடும் வராது.


குறள்------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருங்/கே/டன்----என்/பது---------- அறி/க----------- மருங்/கோ/டித்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--- வெண்டளைதீ/வினை--------- செய்/யான்----எனின்
நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை
கூவிளம்-----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>எனின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருங்கேடன்- மருங்கோடித்
மோனை- ருங்கேடன் - றிக ,ன்பது- னின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 01, 2019 12:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு


தெளிவுரை
கைமாறு கருதாது மழையைப் பொழியும் மேகத்திற்கு மக்கள் என்ன கைமாறு செய்கின்றனர் ? அம்மேகம் போன்றோர் செய்யும் உதவியும் அத்தகையதே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கை/மா/று----------- வேண்/டா------ கடப்/பா/டு----------- மா/ரிமாட்/டு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை-------- வெண்டளை


என்/னாற்/றுங்---கொல்/லோ--- உல/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொல்லோ- உகு
மோனை- கைமாறு- டப்பாடு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 01, 2019 12:15 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -212

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தானாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு


தெளிவுரை
ஒருவன் தான் முயன்று பொருள் தேடுவதெல்லாம் பிறர்க்கு உதவி செய்வதற்கேயாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தா/னாற்/றித்------தந்/த--------------- பொரு/ளெல்/லாம்---தக்/கார்க்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமாங்காய்-----------தேமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ----------வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை---------- வெண்டளை


வே/ளாண்/மை -----செய்/தற்-----பொருட்/டு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளெல்லாம்- பொருட்டு
மோனை- தானாற்றித்-ந்த- க்கார்க்கு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 01, 2019 12:22 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -213

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற


தெளிவுரை
தகுதி உடையவர்க்கு உதவி செய்வது போன்ற வேறு
தொண்டு விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புத்/தேன்--------- உல/கத்/தும்-------- ஈண்/டும்--------- பெற/லரி/தே
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - -------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ஒப்/புர/வின்--------- நல்/ல------ பிற
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---நிரை
கூவிளங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கத்தும்- நல்
மோனை- பிற- பெறலரிதே , லகத்தும்-ப்புரவின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 01, 2019 12:28 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -214

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்


தெளிவுரை
உலகறிந்து சமுதாயத்திற்குத் தொண்டு செய்து வாழ்பவனே வாழ்வான். ;
மற்றையோன் செத்தவனாகவே கருதப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒத்/த--------------- தறி/வான்------- உயிர்/வாழ்/வான்---மற்/றையான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை


செத்/தா/ருள்------ வைக்/கப்-- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்--------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்த- செத்தாருள்
மோனை- த்த- யிர்வாழ்வான்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 02, 2019 10:48 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -215

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு


தெளிவுரை
சிறந்த அறிவினை உடைய ஒருவனது செல்வம் ஊரார்
அனைவருக்கும் பயன்படும் ஊருணி நீர் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஊ/ருணி---------- நீர்/நிறைந் -------- தற்/றே----------- உல/கவாம்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்--------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பே/ரறி-------------- வா/ளன்----- திரு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நீர்நிறைந்- பேறி
மோனை- லகவாம்-ருணி

குறிப்பு
ஏழு சீரும் இயற்சீர் வெண்டளையாக வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 02, 2019 10:55 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -216

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்


தெளிவுரை
தொண்டுள்ளம் படைத்தவனிடம் உள்ள செல்வம் ஊர் நடுவே
அமைந்த இனிய பழமரம் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பயன்/மரம்-------- உள்/ளுர்ப்------ பழுத்/தற்/றால்-----செல்/வம்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை


நய/னுடை-------- யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்மரம்- நனுடை
மோனை- யன்மரம் – ழுத்தற்றால்- டின்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை